- Messages
- 300
- Reaction score
- 215
- Points
- 63
அத்தியாயம் - 28
எப்போதும் சிரித்த முகம் மாறாமல் எதையாவது ஒன்றை பேசிக் கொண்டே துடுக்குத்தனமாக இருக்கும் மகள், ஊருக்கு வந்து இரண்டு நாட்கள் ஆனபின்னும் சரியாக உண்ணாமல் தூங்காமல் முகம் கொடுத்து பேசாமல் எதையோ பறிகொடுத்ததை போல் ஒரு மூலையில் சுருண்டு கிடப்பது வெள்ளைசாமியின் மனதில் ஏதோ தவறாகவே தோன்றி நெஞ்சை அழுத்தியது.
இருந்தும் இப்போதைக்கு மகளிடம் எதுவும் கேட்டு அவளை தொல்லை செய்ய வேண்டாம் என்று நினைத்தவர், வேலைக்கு செல்ல வேண்டி காலை உணவோடு சேர்த்து மதியத்துக்கும் சமைத்து வைத்தவராக வெளியே செல்ல எத்தனிக்கையில் எதிரே வந்தது கலவரம்.
யோவ் மாமா வெளிய வாய்யா.. கரை படிந்த பொத்தல் போட்ட லுங்கியை மடித்துக் கட்டிக் கொண்டு வெளியே நின்று ஆவேசமாக கத்திக் கொண்டிருந்தான் மோகியின் தாய் மாமன் நாற்பது வயதை எட்டப் போகும் கருங்காளி.
அவன் குரல் காதில் கேட்டாலும் இருக்கும் இடம் விட்டு அசையாமல் மோகி படுத்திருக்க, என்ன காளி அடிக்கடி என் வூட்டு முன்னாடி வந்து நின்னு கத்துறதையே பொழப்பா வச்சிக்கிட்டியா. வெள்ளைச்சாமி கோவமாக கேட்டபடி வந்தவரை அலட்சியமாக நோக்கினான்.
எங்க என் அக்கா மவ. படிப்ப முடிச்சிட்டு வந்துட்டாளாமே, கூப்புடு அவகிட்ட நான் கல்யாணத்த பத்தி பேசணும். எகத்தாளமாக காதை குடைந்தான் கருங்காளி.
அதெல்லாம் என் மவள கூப்பிட முடியாது மரியாதையா எடத்தை காலி பண்ணு. இல்லாட்டி நடக்குறதே வேற சொல்லிப்புட்டேன். ஆத்திரத்தில் பொங்கினார் சாமி.
நீ யாருயா நான் கட்டிக்க போறவள பாக்க கூடாதுன்னு சொல்றதுக்கு. இது என் அக்காவ கட்டிக் குடுத்த வூடு நான் இங்கனதா இருப்பேன். இப்ப நீயா என் செல்லத்த கூப்புடுறியா இல்ல நானே போயி கூப்புடட்டுமா. வழி மறித்து நின்றவரை நெருங்கிட அப்போதும் அசையவில்லை அவர். உன் அக்காவே ஒன்னைய சல்லி பைசாவுக்கு மதிக்க மாட்டா நீ என்னடா என் பொஞ்சாதி பேர பயன்படுத்தி உரிமை கொண்டாடிட்டு வர. உயிரோட இருக்கும் போதும் சாக கிடந்த போதும் தூக்கி வச்சி கொண்டாடத அக்காவ அவ செத்து இருபது வருசத்துக்கு பொறவு அவ புள்ளைய பாத்து கொண்டாட வந்துட்டியா. வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு அள்ளும் பகலும் இது போன்ற கயவர்களிடமிருந்து பெற்ற மகளை அரனாக பாதுக்கக்கும் நியாயமான தந்தையின் கொந்தளிக்கும் ஆதங்கம் அவரிடம்.
அவரின் அவமதிப்பு வார்த்தையில் ஆத்திரம் மேலோங்கி, என்னய்யா என்னையே பகைச்சிக்கிற அளவுக்கு அம்புட்டு தில்லு வந்து போச்சா ஒனக்கு. நீ ஒரு ஆளுனு உன்னைய எதிர்த்துட்டு அவ கழுத்துல தாலிய கட்டி குடும்பம் நடத்த முடியாதுனு அதப்போ. பாக்குறியா ஓம்முன்னாடியே இப்பவே அவளை நான் தூக்கிட்டு போறேன். நாலு பேர் சேர்ந்து வந்து எகிறினால் போதும் பயந்து பம்பும் அவன் வயதானவரிடம் அவன் வீரத்தைக் காட்டிக் கொண்டிருந்தான்.
வேணாம் காளி ரொம்ப தப்பு பண்ற. வேலவெட்டிக்கு போவ துப்பிலாம குடிச்சிட்டு உதாரிதனம் பண்ணிக்கிட்டு இருக்குறதும் இல்லாம, எனக்கடுத்து அப்பா ஸ்தானத்துல பாத்துக்க வேண்டிய புள்ள மேல ஆசை பட்டு அவ வாழ்க்கைய கெடுக்க நினைக்கிற நீ. ஏற்கனவே பஞ்சாயத்துல நிறுத்தி அம்புட்டு பேருக்கு முன்னால என் புள்ள ஒன்னைய புடிக்கலனு சொல்லிப்புட்டால்ல அப்பவும் ஒனக்கு புத்தி வரலையா. இங்க பாரு என் புள்ளைக்கு அவ மனசுக்கு புடிச்ச போல மாப்பிளை பாத்தாச்சி, படிப்பு முடிஞ்சதும் கல்யாணம் பண்ணலாம்னு பேசி வச்சிருக்கேன். இப்ப படிப்பு முடிஞ்சி போச்சி இன்னும் கொஞ்ச நாளுல ராஜகுமாரன் போல எனக்கு மாப்பிளை வர போறான் என் பொண்ண கண் கலங்காம பாத்துக்க போறான். இதுக்கு மேல ஒனக்கு விபரம் சொல்ல தேவை இல்ல இனிமே என் வூட்டுப் பக்கம் வந்துடாத கெளம்பு. அத்தனை உறுதியாக கோவத்தில் திளைத்து அவனை அடித்து விரட்டாத குறையாக அவர் சொல்லவும் ஆத்திரத்தில் பற்களை கடித்தவனாக, என் செல்லத்த என்னைய மீறி அப்டி எப்பேர்ப்பட்ட ராஜகுமாரன் வந்து கொத்திட்டு போவ போறான்னு நானும் பாக்குறேன் மாமோய். உன் பொண்ணு வயசுக்கு வந்ததுல இருந்து அவ மேல பித்து புடிச்சி போயி இருக்கேன். என்னைக்கா இருந்தாலும் விடமாட்டேன் அவளை. நாலு திசைக்கும் எக்காலமிட்டு கத்தியபடி அங்கிருந்து சென்றான் மோகியின் மீது தீராத ஆசைவெறி கொண்டு.
உள்ளே இருந்தபடியே இவை அனைத்தும் கேட்டுக் கொண்டிருந்த மோகியின் கண்களில் நிற்காமல் வழிந்த கண்ணீரில் ஆத்திரம் கோவம் ஏமாற்றம் துரோகம் என்று அணைத்தும் ஒன்று சேர்ந்து தாங்கிக் கொள்ள முடியாத வலியில், 'இவனுக்கும் அவனுக்கும் பெருசா என்ன வித்தியாசம் இருக்கு பொண்ணுங்கள வெறும் மோக சதையா பார்க்குற கீழ்த்தரமான அற்ப பிராணிகள். அன்று அவளை கெடுக்க வந்த கயவர்களை விட மிக மிக ஆபத்தான கொடிய மிருகமாக இப்போது அவளுக்கு அவன்' என்று நினைத்தவளுக்கு அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் முகம் நடுங்கிட இருதயம் வீங்கி வீங்கி துடித்து மரண வலி கண்டது.
விஷ்வரூபனின் மீது வைத்திருந்த தந்தையின் நம்பிக்கையை கண்டு மேலும் உடைந்தவளாக, அவனை அடியோடு வெறுத்த மனம் செத்தாலும் அவன் முகத்தில் முழித்து விடக் கூடாது என்று தீர்மானம் கொண்டு, தனக்காக இல்லை என்றாலும் தன் தந்தையின் பரிசுத்தமான அன்பிற்காக மனதை தேற்றி இப்படி ஒரு கொடுமையான சூழ்நிலையில் இருந்து மீண்டு நல்ல வேலையில் சேர்ந்து முன்பு நினைத்ததை போலவே தந்தையை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற பல யோசனைகளோடு விரிந்து கிடந்த கூந்தலை அள்ளி முடிந்தபடி எழுந்து அமர்ந்தவள் அதற்கான வேலைகளில் தொடங்கலானாள்.
ஆனால் விதியோ, மொத்தமாக அவள் வாழ்க்கையை சீர்குலைக்க வழி வகுத்து காத்திருந்ததே!!
சோசியல் மீடியாவில் அசுர வேகமெடுத்து காட்டுத்தீயாக பரவிக்கொண்டிருந்தது மோகியின் நீலப்படம்.
இனி மோகித்தாவின் நிலை???
ஆறு ஆண்டுகளுக்கு பிறகு:
படுக்கையை சுற்றிலும் அங்குமிங்கும் மது பொத்தில்கள் சிதறிக் கிடக்க புகைத்த சிகரெட் துண்டுகள் அதற்கு இணையாக போட்டி போட்டு, மங்களான ஒளியில் மின்னிடும் பெண்ணிலவின் சிரித்த முகம் மட்டும் பிரகாசமாக புகைப்படத்தில் அழகோவியவமாக காட்சியளித்துக் கொண்டிருந்தது.
வெட்டப்படாத மீசையும் தாடியும் தலைமுடியும் அவனின் வசீகர முகத்தை முற்றிலுமாக மறைத்து போதையில் சிவந்து பழுத்து போன இரண்டு பெரிய பெரிய கண்களும் நுனி மூக்கும் மட்டுமே வெளி தெரிய கிட்டத்தட்ட காட்டுவாசியின் மறு உருவமாக இருந்தவன், நேராக நிமிர்ந்து அமர கூட நிதானமில்லாத போதிலும் உடல் நடுங்க அவளது படத்தை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தான்
ஆறு வருடங்களாக பார்க்கிறான்.. பார்க்கிறான்.. பார்க்கிறான்.. பார்த்துக் கொண்டே தான் இருக்கிறான் கொஞ்சமும் சலிப்பு தட்டாமல். அவளை தவிர வேறு நினைவுகள் இல்லை. கிடைக்கத்தகாத பொக்கிஷத்தை இனி எப்போதும் கைக்கு எட்டாத தூரத்தில் தொலைத்து விட்டபின் கஸ்டப்பட்டு உழைத்து முன்னுக்கு கொண்டு வந்த தொழிலை கூட மறந்து போனான், அவனது வீட்டை மறந்து போனான், உலகம் மறந்து போனான், பழி வெறி மறந்து போனான், மொத்தத்தில் அவனையே அவன் வெறுக்கும் அளவிற்கு குடித்து குடித்தே அவனை அழித்துக் கொள்ள வேண்டி நிறைய நிறைய குடிக்கிறான், அவள் நினைவில் அனுதினமும் சித்ரவதையை அனுபவித்து தன்னைத் தானே தண்டித்துக் கொள்கிறான்.
மோகி தங்கி இருந்த அதே வாடகை வீடு. இன்றோ விஷ்வரூபனின் காதல் மனைவி.. அவனுக்கு அவள் என்றும் மனைவி தான். ஆனால் அவன் தான் அவளின் காதல் கணவன் என்ற புனிதத்தை இழந்து அதற்கு தகுதியற்றவனாக மாறி விட்டான். இப்போது அவ்வீடு மோகித்தாவின் பெயரில் உள்ளது அவனது காதல் மனைவியின் நினைவு சின்னமாக மட்டுமே. அவளோடு தனிமையில் ஒன்றாக கழித்த அழகிய தருணங்கள், அவளின் சிரிப்பொலி, கண்ணீர், காதல், வேதனை, மகிழ்ச்சி, கோவம், அணைத்தும் பார்த்து அவளின் பூபாத கொலுசின் அழகிய சிணுங்கல்களும் அவளோடு மகிழ்ந்த சகலவித இன்பங்களும் போட்டி போட்டு நிறைந்திருந்த அந்த வீடு வெறும் நினைவுகளாக மட்டுமே தாங்கி இருந்தன இப்போது.
ஒரு காலத்தில் அவள் முகத்தை பார்த்து அலட்சியம் செய்தவன், இவளா என்று எல்லாக நகைத்தவன், அருகில் இருந்த போது அவளின் உணர்வுகளை மதிக்காமல் அகம்பாவம் கொண்டு திரிந்தவன், அவள் மானத்தை பறிக்க சினம் கொண்டு அலைந்தவன், அவள் ஆசையோடு செய்து கொடுத்த உணவுகளை குப்பையில் தூக்கி வீசியவன், இன்று.. அவனே நினைத்தாலும் பார்க்க முடியாத தூரத்தில் கைக்கு எட்டாத கறுகிய பூவின் சாம்பல் அவன் கண் முன்னே சிறிய பித்தளை சொம்பில் சிகப்பு துணி போட்டு மூடி இருந்தது. படத்தை விடுத்து தானாக பார்வை அதில் இறங்கியதில் தானாக கண்கள் கரித்து கண்ணீர் கண்ணை விட்டு இறங்கி புதர் போல் மண்டிக் கிடந்த தாடியில் தஞ்சம் புகுந்து கன்னம் தாண்ட விடாமல் கண்ணீரை சேமித்து வைத்து, உன் கண்ணீர் கூட பூமியை தீண்டுவது பெருத்த பாவம் டா மோசக்காரா என்று சொல்லாமல் உணர்த்தியது போலும்.
மங்கிய அறையில் படாரென கதவை திறந்ததில் வெளியில் இருந்த வெளிச்சம் அறை முழுக்க வீசியதில் கண்கள் கூசி ஐவிரல் விரித்து முகத்தை மறைத்துக் கொண்டவன் விரல் இடுக்கில் லேசாக இமைகளை இமைத்து பார்வையை தெளிவாக்கிக் கொண்டு கரத்தை மெல்ல இறக்க அவன் முன்பு இறுகிய முகத் தோற்றத்துடன் அவனை முறைத்த படி உயர்ந்து நின்றிருந்தான் விதுரன்.
"இன்னும் எத்தனை வருஷத்துக்கு இந்த அறைக்குள்ளேயே இந்த வீட்டையே கட்டிக்கிட்டு அடைஞ்சி கிடக்கப் போற விஷ்வா" தொடர்ந்து ஆறு வருடங்களாக தினமும் கேட்கும் ஒரே கேள்வி தான். ஒருநாள் வேதனையாக, ஒருநாள் எரிச்சலாக, ஒருநாள் கோவமாக, ஒருநாள் ஆதங்கமாக, ஒருநாள் கடுமையாக, ஒருநாள் அடித்து திட்டுவதுமாக என்று ஒவ்வொரு நாளும் கேட்கும் தொனி மட்டுமே மாறுபடும். ஆனால் பதில் அளிக்க வேண்டியவனிடம் இருந்து எந்த ஒரு மாற்றமும் தோன்றாதே!!
விஷ்வாஆஆ.. நான் உன்கிட்ட தான் பேசுறேன் கேக்குதா இல்லையா? அதிகபடியான கோவத்தில் அவன் சட்டையைப் பற்றி உளுக்கி இருந்தான் விதுரன்.
அப்போதும் மரம் போல் இறுகி மோகியின் படத்தில் கவனத்தை செலுத்திட அவன் பார்வை போன திசையை கண்டு மேலும் ஆத்திரமுற்றவனாக 'இங்க நான் பைத்தியக்காரன் போல கத்திட்டு இருக்கேன் உனக்கு என்ன டா அவ்வளவு திமிரு இதுக்கு இன்னைக்கே ஒரு முடிவு கட்றேன்' நரநரவென பற்களை கடித்தவன் கண்ணாடி பிரேமில் மின்னிய அவளின் ஆறடி புகைப்படத்தை சுவற்றில் இருந்து வெறியாக பிடுங்கி தூக்கி வீசியதில் சில்லை சில்லையாக கண்ணாடிகள் அவவீடெங்கும் சிதறி உடைந்ததை கண்டதும், பிணத்துக்கு உயிர் வந்ததை போல் டேய்ய்ய்.. என்று சிவந்த கண்ணில் நீர் கலங்க வெறித்தனமாக பாய்ந்து விதுரனின் சட்டையை பற்றி கன்னத்தில் மாறி மாறி அடித்தும் அமைதியாக வாங்கிக் கொண்டவனை 'ஏன்டா என் மோகிய தூக்கி போட்டு உடைச்ச அவ உனக்கு என்ன டா பண்ணா' வெறி பிடித்தவனாக மீண்டும் மீண்டும் அடித்தவன் அவனை விடுத்து உடைந்த அவசரமாக கீழே குனிந்து கண்ணாடிகளை கைகளில் கீற தட்டி விட்டு அவள் படத்தை எடுக்க பைத்தியம் பிடித்தவன் போல் முயற்சி கொண்டிருந்தவனை கண்டு கண்கள் கலங்கினான் தோழன்.
உன் தாத்தா கடைசி கட்டத்துல இருக்காரு விஷ்வா. விதுரன் உரைத்தது அவன் செவியை எட்டவில்லையா அல்லது எட்டியும் எதிர்வினை காட்டவில்லையா அவனுக்கே வெளிச்சம்.
உன்ன கடைசியா ஒருமுறை பாக்கணும்னு கூப்பிடுறாரு. அப்போதும் காதில் வாங்காமல் கைகளில் ரத்தம் சொட்ட அவள் படத்தை மீட்டெடுப்பதில் மட்டுமே கவனமாக இருந்தான் அவன்.
விஷ்வா.. உனக்கு என்ன பைத்தியம் ஏதாவது பிடிச்சிருக்கா, ஏன்டா நீ இப்டி இருக்க. முதல்ல உன் அண்ணன் செத்துட்டானு அவளை பழி வாங்க போன. இப்ப அவ செத்துட்டானு, செத்து போனவளையே நினைச்சி உன்னையும் அழிச்சிகிறது இல்லாம உன்னை சுத்தி இருக்கவங்களையும் ஏன் டா அழிக்கப் பாக்குற. ஆதங்கமாக கேட்ட வார்த்தையில் விலுக்கென நிமிர்ந்த விஷ்வரூபன் கண்களில் தான் எத்தனை எத்தனை வேதனைகள் அதையும் தாண்டிய குற்றவுணர்ச்சிகள் நிறைந்து காணப்பட்டது.
என்னால யாருமே நிம்மதியா இல்ல டா விதுரா. பெத்தவங்களும் குப்பையா எங்கள தூக்கி போட்டு அவங்கவங்க சந்தோஷத்தை தேடி போய்ட்டாங்க, நான் உயிரையே வச்சிருந்த அண்ணனும் எவ்ளோ ஒருத்திக்காக என்னை விட்டு தற்கொலை பண்ணிகிட்டான், என் மோகி.. என்றவனுக்கு குரல் கரகறத்து நடுங்கி முகத்தை மூடி குலுங்கி அழுதவன், என் மோகிய நானே கொன்னுட்டேன் டா. முதல்ல அவ மனச, அடுத்து அவளே அவ முடிவை தேடிக்கிற அளவுக்கு கொடுமைய செஞ்சிருக்கேன் டா. எப்டி அதையெல்லாம் தாங்க முடியாம அவ துடிச்சி இருப்பா. வேதனையில் பொத்தென தரையில் அமர்ந்து படத்தில் இருந்த அவள் மதிமுகத்தை கையில் குருதி சொட்ட வருடியவனாக, இப்ப என் தாத்தாவும் என்னை விட்டு போக போறாரு போகட்டும் நானும் கூடிய சீக்கிரம் இவங்க எல்லாரோடயும் போய் சேந்துருவேன். போய் சேரனும் என் மோகிகிட்ட மன்னிப்பு கேக்கணும். அவளை பாக்கணும். பாத்ததும் அவளை கட்டி பிடிச்சி கதறி அழணும். எப்டி டி நான் இல்லாம என்னை மட்டும் விட்டுட்டு தனியா போவேன்னு கேக்கணும். நான் தப்பு பண்ணா கூட இருந்து தண்டனை கொடுத்து அவ கையாலே என்னை சாகடிக்காம, பைத்தியம்.. பைத்தியம்.. எனக்கு முன்னாடி அவ நிம்மதியா போய் சேந்துட்டா என்று தாடை இறுக பற்களை கடித்தவன், இதுக்கும் சேத்து வச்சி அவளை பழி வாங்கணும்.
பைத்தியம் போல் பிதற்றிக் கொண்டிருந்தவனின் நிலை கண்டு தாங்க முடியாமல், டேய்.. விஷ்வா என குனிந்து தோளை தொட, இத்தனை நேரமும் வெறிப்பிடித்தவன் போல் இருந்தவன் சட்டென நண்பனைக் கட்டிக் கொண்டு கதறி தேம்பி அழுதவனாக, "பொய் சொன்னேன் டா என் தேவதைய இனி ஒருகாலம் என் மனசால கூட கஸ்டப்படுத்த நினைக்க மாட்டேன். எனக்கு அவ வேணும் டா. அவ இல்லாம வாழ முடியல மச்சா. கடைசி வரைக்கும் அப்பாவித்தனமா என்னை நம்பினவளுக்கு எவ்வளவு பெரிய துரோகம் பண்ணிருக்கேன் டா, நானெல்லாம் வாழவே தகுதி இல்லாதவன் டா ப்ளீஸ் என்னை எப்படியாவது கொன்னுடு டா" சத்தம் போட்டு கதறி அழுத நண்பனைக் கண்டு உயிர்வரை துடித்துப் போனான் விதுரன்.
தொடரும்.

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 28
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.