- Messages
- 298
- Reaction score
- 272
- Points
- 63
அத்தியாயம் - 3
பஞ்சாயத்து தலைவர் கண்ணாய்தபாணியின் பிறந்தநாளை முன்னிட்டு, ஊர் முழுக்க மூலை முடுகெங்கும் அவருடைய பிளக்ஸ் பேனர்கள் தான் விதவிதமாக வைக்கப்பட்டிருந்தது.
மதியம் சிறப்பான அன்னதானம் வழங்க இருக்க, ஊர் மக்கள் மொத்தமும் அமரதேவன் வீட்டில் தான் குழுமி இருந்தனர்.
வீட்டின் பின்னே ஏக்கர் கணக்கில் காலியாக இருந்த இடத்தில், பரபரப்பாக சமையல் வேலைகள் நடந்து கொண்டிருக்க, நாயகியின் நிலையோ செக்கு மாட்டை விட மிக மோசமாக இருந்தது.
ஊருக்கே அன்னதான விருந்து என்றால் சும்மாவா?
எட்டுக்கும் மேற்பட்ட விறகு அடுப்புகளில், சாம்பார், ரசம், கூட்டு, பொரியல், அப்பளம், வடை, பாயாசம், உருளை மசாலா, சப்பாத்தி, குருமா, மோர், மோர் மிளகாய், ஊறுகாய், அல்வா, கேசரி என அடுப்பில் இருந்து இறக்க இறக்க அடுத்தடுத்த பதார்த்தங்களை சமையல்காரர்கள் சமைக்க, அவர்களுக்கு தேவையானவற்றை பம்பரம் போல் சுழன்று ஓடி ஓடி எடுத்துத் தருவதிலேயே குருத்தெலும்பு முறிந்து போனது.
"அப்பாவிற்கு பிறந்தநாள், கோவிலுக்கு சென்று அபிஷேக ஆராதனை பார்த்ததும் அர்ச்சனை செய்துவிட்டு வருவோம்" என்று அதிகாலையிலேயே நாயகியை கையோடு இழுத்து சென்ற தேவன், பின் வீட்டிற்கு வந்தும் அவளை உக்கார விடவில்லை.
மாத சம்பளத்திற்கு வேலைக்கு சென்றால் கூட உடல் நலம் குன்றினால் விடுமுறை எடுத்துக்கொள்ளலாம். ஆனால் நாயகி வாக்கப்பட்ட வீட்டில் அரைமணி நேர ஓய்வுக்கு கூட, கணவன், மாமனார், கொழுந்தன் என்று ஒவ்வொருவரிடமும் அனுமதி பெற்று, அவர்கள் சரி என்றால் மட்டும் தான் ஓய்வு சாய்வு எல்லாம்.
இவர்களிடம் கெஞ்சி கேட்பதற்கு பதில், தன் வேதனை மறைத்து வேலையினையே செய்து விடலாம் என்ற எண்ணத்தில், மாங்கு மாங்கென வேலை செய்தும், அவளை தலையில் தூக்கி வைத்தா ஆட போகிறார்கள்!? பெண்தானே என்ற ஒற்றை அலட்சியம் போதுமே அவள் மனதை சோர்வடையச் செய்ய.
"நாயகி, அந்தா அந்த பெரியவருக்கு என்ன வேணும்னு கேட்டு இலைல வையி. அப்டியே பக்கத்துல பெரியசாமி இருக்காரு பாரு அவரையும் கவனி.
கொஞ்ச நேரத்துல பஞ்சாயத்து பெரிசிடென்ட்டு வருவாப்புல, கவனமா இருந்து மரியாதையா அவரை உள்ள அழைச்சி சாப்பாடு போடு"
அடுத்தடுத்து வந்து கொண்டே இருந்த ஊராட்களுக்கு குனிந்து குனிந்து பரிமாறுவதே கடினமாக இருக்க, இதில் வேறு கணவனும் மாமனாரும் சேர்ந்து, அங்கே ஓடு.. இங்கே கவனி.. என படுத்தும் பாட்டில், அனைத்திற்கும் மண்டையை மண்டையை ஆட்டிக் கொண்டு, வீடெங்கும் "நாயகி.. நாயாகி.." என்றவளின் பெயரே எதிரொலிக்க, காலில் சக்கரம் கட்டிக்கொண்டு ஓடினாள்.
மதியம் தொடங்கி இரவானது வரை, எச்சி இலையை மாட்டுத் தொழுவத்தில் எடுத்துப் போட்டு, சோறு சமைத்த பெரிய பெரிய அண்டான் குண்டான் அனைத்தையும் சுத்தமாக கழுவி கவிழ்த்து, வீட்டை மொத்தமும் மாப் போட்டு, ஆயிந்து ஓய்ந்த நிலையில் அறைக்கு வந்தால், அங்கு அவளுக்காகவே காத்திருந்தான் அமரதேவன்.
"எம்புட்டு நேரமா டி ஒனக்காக காத்திருக்குறது, சட்டுபுட்டுனு வேலைய முடிச்சிட்டு வரத்தெரியாது" உள்ளே வந்ததும் தேவனின் கடுமையான குரலே அவளை வரவேற்க, வேர்த்து விருவிருத்து நின்றாள் வேதநாயகி.
"இல்லைங்க, இன்னைக்கு வேல ஜாஸ்தி. அதையெல்லாம் முடிச்சிட்டு வர தாமதமாகி போச்சி" மொத்த களைப்பும் அவளின் முகத்தில் பிரவேசிக்க, சோர்ந்து உரைத்தவளின் பேச்சை எல்லாம் என்றைக்கு காது கொடுத்து கேட்டிருக்கிறான்.
"ஏன் லேட்டுனு கேட்டா காரணமா சொல்ற, ஒன்னைய மாறி ஒரு வக்கத்த சோம்பேறிய கட்டினதுக்கு, என் தம்பி மாதிரி ஒண்டிக்கட்டையாவே இருந்திருக்கலாம், வெரசா வா.. காத்தால ஒரு போடு மீட்டிங் இருக்கு" சிடுசிடுப்பாக சொன்ன கணவனை ஆயாசமாக கண்டாள் நாயகி.
"ஏய்.. இன்னும் என்ன டி மசமசன்னு நின்னுட்டு இருக்க, வான்னு சொன்னேன்" மெத்தையை தட்டி அவன் அழைப்பது எதற்கு என்று நன்றாக அறிவாளே அவள்.
"இ.இன்னைக்கு வேணாமேங்க, ஒடம்பெல்லாம் ஒரே களைப்பா இருக்கு" தயக்கமாக வார்த்தை திக்கக் கேட்டவளை சட்டென இழுத்து, தன்னோடு நிறுத்திக் கொண்ட தேவனை, பார்க்க முடியாமல் தவித்துப் போனாள்.
"24 மணி நேரமும் வீட்ல தானே சொகுசா இருக்க. இன்னைக்கு ஒரு நாளைக்கு, இப்டி அப்டி ஓடி நாலு பேத்துக்கு பரிமாறினது ஒனக்கு களைப்பு வந்திருச்சோ.. சும்மா வளவளன்னு பேசாம சொன்னதை மட்டும் செய் டி.." பற்களை நரைத்த தேவன், அவள் சேலையை உருவி மெத்தையோடு அவளை புரட்டி இருந்தான்.
கண்களை இறுக மூடிய நிலையில், எப்போதும் போல் அடங்கிக் கிடந்தாள் அவனுக்கடியில்.
நாயகி அவனிடம் அடங்கி வாழ்ந்தே பழகிவிட்டாள். அமரதேவனும் மனைவியை அடக்கி ஆண்டே வாழ்ந்து விட்டான்.
உடல் வலி, தலை வலி என்று காரணம் சொல்லி தட்டிக் கழிக்காமல், அவன் அழைக்கும் நேரம் எந்நேரமாயினும், மெத்தையில் கணவனோடு இணங்க வேண்டும் என்றது அவ்வீட்டின் பெண்களுக்கு எழுதப்படாத விதி.
முடியாதென்று கண்டிப்பாக மறுக்கும் நிலையில் நாயகியும் இல்லை. சரியான வாய் செத்த பூச்சி, சிறு வயதில் இருந்து அப்படியே வளர்ந்து விட்டாள். கணவன் என்றால் ஆரம்பத்தில் இருந்தே அத்தனை பயம், மரியாதை.
தேவனிடம் கோவித்துக் கொண்டு பிறந்த வீட்டிற்கு செல்லும் பாக்கியம் கூட இல்லாத அபலையின் நிலை அவளுக்கு. அப்டியே சென்றாலும் அங்காவது நிம்மதி காண முடியுமா?
வயது முதிர்ந்த தாய் தந்தையின் கண்ணீரும், புலம்பலுமே அவளை வதைத்துக் கொன்று விடும்.
இவை அனைத்தையும் விட மிகப் பெரிய கவலை, ஏக்கம், ஆசை அத்தனையும்
பிள்ளை வரம் ஒன்று மட்டும் தான்.
15 ஆண்டுகளாக கடவுளை நாள் தவறாது வழிபடுபவளின் வேண்டுதலை எல்லாம், செவி சாய்த்து கடவுள் கேட்கிறாரா? என்பதில் தானே பெரிய கேள்விக்குறியே உள்ளது.
** ** **
இங்கோ, உள்ளங்கையில் இறுக மூடி வைத்திருந்த நாயகியின் காதணியை கலங்கிய நிலையில் பார்த்திருந்தாள் பூங்கோதை.
அரிசி, பருப்பு, காய்கறிகளை மட்டுமே இதுநாள் வரை வாங்கிப் பழகியவளுக்கு, தங்கத்தை எப்படி யாரிடம் சென்று விற்பது வைப்பது, என்ன சொல்லி பணம் கேட்பது என்று ஒன்றுமே புரியாத நிலை ஒருபுறம் இருக்க,
உயிரினும் மேலான கற்பை தெரிந்தே பறிகொடுத்த அசிங்கத்தை எங்கே சென்று சலவை செய்வது? என்ற மனவேதனையில் நெருப்பின் மீது அமர்ந்திருப்பதை போல, உடலும் உள்ளமும் அருவருப்பில் எரிந்து கலங்கிப் போனாள் கோதை.
"ஏட்டி.. நாபாட்டுக்கு கேட்டுட்டு இருக்கேன், நீப்பாட்டுக்கு பேசாம படுத்துட்டு இருந்தா என்ன டி அர்த்தம். வெரசா ரெண்டாயிரம் குடு, ராத்திரி திரும்ப வரும் போது நாலாயிரமாக்கி கொண்டாரேன்" செல்வியின் கணவர் செந்தில் காலையிலேயே பஞ்சாயத்தை துவங்கிவிட்டார்.
"ரெண்டாயிரமா.. என்னைய்யா விளையாடுறியா. இங்கன நான் ஒடம்புக்கு முடியாம படுத்து கெடக்கேன். கைல காசு இல்லாம புள்ளைங்க எல்லாம் பசியும் பட்டினியுமா வாடுதுங்க, அத்தப்பத்தி எதுவும் கவலப்படாம, சூது விளையாட கூச்சமே இல்லாம ரெண்டாயிரம் கேட்டு நிக்கிற.
மரியாதையா சொல்றேன் வெளிய போய்டு. இல்ல கைல கிடைக்கிறத பூராத்தையும் தூக்கி அடிச்சிப்புடுவே.."
செல்வியின் ஆக்ரோஷ சீறலில், போதையில் புலம்பிக் கொண்டே அங்கிருந்த, பித்தலை அண்டாவை லபட்டிக்கொண்டு சென்று விட்டார் செந்தில்.
பிள்ளைகளை பெற்றுவிட்டு எந்த ஒரு பொறுப்பும் இல்லாது, போதை சூது என வீட்டில் உள்ள பொருட்களை எல்லாம் விற்று நாசமாக்கி, ஊதாரியாக சுற்றி வரும் கணவனை எண்ணி மனம் கலங்கிய செல்விக்கு, கோதையின் எதிர்காலத்தைப் பற்றிய கவலை தான் இருக்க இருக்க அதிகரித்து போனது.
"ஏம்மா அவர இப்டி திட்டின, பாரு தண்ணி புடிக்கிற அண்டாவ தூக்கிட்டு போய்ட்டாரு" கவலையான கோதையின் குரலில், அவள் பக்கம் திரும்பினாள் செல்வி.
"எல்லாம் நான் வாங்கிட்டு வந்த வரம் அப்டி. ஒரு காலத்துல பொறுப்பா அமைதியா வாழ்ந்த மனுசன், இப்ப குடி சூதுனு என் உசுர வாங்கிட்டு திரியிறான்.
இவன மாதிரி பொறுப்பில்லாத மனுசன வச்சிக்கிட்டு, எப்டி ஒன்னைய ஒரு நல்ல இடத்துல கரை சேக்க போறேன்னு நினைச்சாலே, மனசெல்லாம் திக்குதிக்குனு அடிச்சிக்குது கோத"
கண்ணீருடன் வருத்தம் கொண்ட செல்விக்கு, தொண்டை வறண்டு முரட்டு இருமல் வந்து விட்டது. அதில் பதறிய கோதை, செல்வியின் தலையில் மெதுவாக தட்டி, நெஞ்சை நீவிவிட்டு, தண்ணீர் பருக வைக்க, சற்றே ஆசுவாசமாகி உடல் சோர்ந்து இருந்த தாயை, கலக்கமாக பார்த்தாள் கோதை.
"அ. அம்மா.. சரி விடு. இனிமே அதை பத்தி பேசவேணாம். நான் கஞ்சி வச்சிருக்கேன் குடிச்சிட்டு மருந்து போட்டு கொஞ்ச நேரம் தூங்கு. அப்பதே சீக்கிரம் ஒடம்பு சரியாவும்" என்ற கோதையின் கரத்தை பற்றிக் கொண்டாள் செல்வி.
"என்ன ம்மா.. தண்ணி ஏதாவது வேணுமா?"
"இல்ல கோத, நானும் கேக்கணும்னு நினச்சேன், பெரிய வீட்டுக்கு வேலைக்கு போயி ரெண்டு நாளாவுதே, ஏம்மா வேல ரொம்ப கஸ்டமா இருக்கா?" இதுநாள் வரை வெளியுலகம் அறியாமல் வளர்ந்தவளுக்கு, எங்கே வீட்டு வேலை கடினமாக கொடுத்து விட்டார்களோ என்ற கவலையில் தாயுள்ளம் மருகியது.
பெரிய வீடு என்றதும் ஆனந்தபாலனால் தனக்கு நிகழ்ந்த அவச்செயலை எண்ணி கலங்கித் துடித்தவள், செல்வியிடம் எதையும் காட்டிக்கொள்ளாமல் இயல்பாக பேசுவதற்கு மிகவும் கடினப்பட்டாள்.
"அ.ப்.. அப்டிலாம் இ..ல்லம்மா.. ஒன்னைய பாத்துக்க வேண்டிதே நாயகி அக்காட்ட ரெண்டு நாளுக்கு லீவு கேட்டு வந்தேன். நாளைக்கு வேலைக்கு போய்டுவேம்மா" திணறலாக சொல்லி முடிக்க,
"சரிம்மா, பாவம் அங்க அந்த நாயகி பொண்ணு மட்டும் தனியா கெடந்து அல்லோல்படும். அதுவும் இல்லாம விருந்து அன்னதானம்னு நிக்க கூட நேரம் இருந்திருக்காது. நான் நல்லா இருந்திருந்தாலாவது கூடமாட ஒத்தாச பண்ணிருப்பேன்.
அப்பகூட செய்ற வேலைக்கு சம்பளம் வாங்குறவ தானே, இருக்க வேலையெல்லாம் இவகிட்டயே வாங்கிட்டு தொரத்தி விடுவோம்னு நினைக்காம, பாத்து பாத்து நோகாத வேலைய எனக்கு குடுத்துபுட்டு, அதுவே எல்லா வேலையும் இழுத்து போட்டு செஞ்சிடும்.
தலைக்கனம் இல்லாத தங்கமான பொண்ணு, நாளைக்கு போனின்னா கொஞ்சம் என்ன ஏதுனு விசாரிச்சிட்டு வா கோத" அவள் தாடை பிடித்து மென்மையாக செல்வி சொல்ல,
"ஸ். சரி.. ம்மா" என்றவளுக்கு 'நாளைக்கே மீண்டும் அங்கு செல்ல வேண்டுமா?' என்ற எண்ணமே அச்சத்தில் கால்கள் பின்னி, மனம் தளர வைத்தது.
மறுநாள் காலையில் விரைவாக எழுந்தவள், வீட்டில் உள்ள அனைவருக்கும் சமைத்து வைத்து, தங்கை தம்பியை பள்ளியில் விட்டுவிட்டு, சந்தை வீதியில் சுற்றும் முற்றும் பார்த்தபடியே ஒருவித பதட்டத்துடன் நடந்தாள் கோதை.
இரண்டு மூன்று சேட்டுக் கடைகளை பதைபதைப்புடன் கடந்து சென்றவள், கடைசியாக ஒரு கடையின் முன்னால் நின்று, அச்சத்தில் ஆறாக பெருகும் வியர்வையினை முந்தானை கொண்டு கரம் நடுங்க துடைத்துக் கொண்ட கோதை, சிறிய மணிபரிசில் பத்திரமாக வைத்திருந்த காதணியை திறந்து பார்த்து, ஒருவாரு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு உள்ளே சென்றாள்.
"வாங்கமா.. நகை எடுக்க வந்துருக்கீங்களா?" இன்முகத்துடன் வரவேற்றார் கடை ஊழியர்.
"ம்ஹும்.." என வேகமாக தலையாட்டி "அ.அது.. வ். ஒரு நகைய விக்கணும்" தயக்கமாக சொல்லிட,
"ஓ.. தாராளமா.. நகைய கொடுங்கமா" என்றதும் மனதில் சூழ்ந்த பெரும் புயலோடு நகையை கொடுத்து, அதற்கு ஈடான பணத்தையும் பெற்று கொண்டாள்.
இதுவரை கண்ணால் கண்டிடாத கட்டுப்பணத்தினை பயத்துடன் பையில் முடிந்துகொண்டு, ஆனந்தபாலன் தற்போது எங்கு இருப்பான்? என்ன செய்து கொண்டிருப்பான்? என்று அவனை பற்றி ஒன்றும் தெரியாத நிலையில், பேந்த பேந்த விழித்தபடி, அவன் வீடிருக்கும் பக்கத்து தெருவில் நடந்து கொண்டிருக்கையில், இருவரின் பேச்சிக் குரலை உன்னிப்பாக காதில் வாங்கி கொண்டாள்.
"ஆமா தம்பி, இன்னைக்கு அந்த ஆனந்து பயலுக்கு பயங்கரமான வேட்டதே. தோப்பு வீட்டுக்குள்ள ஒரு குட்டி போறத இப்பதே என் ரெண்டு கண்ணால பாத்துட்டு வரேன்" ஒருவன் பேசியபடி வர,
"அப்டியா, யாருண்ணே அந்த குட்டி, சுட்டதா? சுடாததா?" என்ற மற்றொருவனுக்கு அந்த குட்டியை அறிய ஆவல்.
"எல்லாம் சுட்டது தான்டா.. ஊருக்குள்ள பல பேரும் பதம் பாத்தாச்சி. கொஞ்ச நாளைக்கு முன்னாடி அவ புருசனுக்கு ஏதோ கவர்மண்ட்டு வேலை வாங்குறதுகோசரோம் ஆனந்துகிட்ட கடன் வாங்கி இருக்கா. அதே இன்னைக்கு வட்டிக்கு பதிலா இவ"
தங்களுக்குள் கிசுகிசுத்து சிரித்தபடி இருவரும் நடந்து செல்ல, அவர்கள் பேசியதை காதால் கேட்டமுடியாமல் அருவருத்தவளாய், இன்றே அவன் கடனை வட்டியோடு கொடுத்து அவனை தலை முழுகிட வேண்டும் என்ற உறுதியோடு, ஆனந்தபாலனை தேடி தோப்பு வீட்டிற்கு விரைந்தாள் பூங்கோதை.
தொடரும்.