• வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
Administrator
Staff member
Messages
323
Reaction score
243
Points
63
அத்தியாயம் - 3

ராஜ்மோகன் தனது சொந்த உழைப்பில் நான்கு ஜவுளிக்கடைகளை உருவாக்கி, அமோகமாக நடத்தி வருகிறார். சொந்த அத்தை மகளான சத்தியாவை வீட்டை எதிர்த்து காதல் திருமணம் செய்து கொண்டு, மனைவி குழந்தைகள் என்று சீராக சென்ற குடும்பத்தில், மகள் மூலம் கடும் புயல் வீச தொடங்கி விட்டதே!

மிதுஷாஸ்ரீ பெங்களூரில் தங்கி அங்குள்ள பிரபல கல்லூரியில் பொறியியல் மூன்றாம் ஆண்டு படிக்கும் பருவசிட்டு. துருதுரு அல்லி விழிகள், சிவந்த அதரம், வெண்ணை கட்டி போன்ற பேபி பிங்க் சருமம். அவளின் மாசு படியாத பிஞ்சி பாதம் கண்டே கண்டறிந்து விடலாம், அவள் வீட்டில் செல்லமாக வளரும் குட்டி தேவதை என்று.

மிதுவின் பெற்றோர் காதல் திருமணம் செய்த கோவத்தில் பல ஆண்டுகளாக பிரிந்து இருந்த சொந்தங்கள் எல்லாம், கடந்த இரண்டு ஆண்டுகளாக தான் மனம் மாறி ஒருவருக்கொருவர் புரிந்து அன்பாக பேச தொடங்கி இருந்தனர்.

ராஜ்மோகன் தந்தையும், அவர் மனைவி சத்தியாவின் அன்னையும் ஒரு தாய் வயிற்றில் பிறந்த அண்ணன் தங்கை. அவர்களின் வயதான தாய் தேவிகா, பாலைகொடி கிராமத்தில் உள்ள பூர்வீக வீட்டில் வசிக்க, அங்கு நடைபெறும் திருவிழாவிற்கு தான் பல வருடங்களுக்கு பிறகு அனைவரும் குடும்பமாக வந்திருந்தனர்.

அன்று, தங்கள் சொந்தங்கள் அனைவரோடும் சேர்ந்து கோவில் விஷேசத்தில் கலந்துகொண்ட மிது, கிராமத்து தாவணியில் தேவதை போல் ஜொலிக்க, தலையில் சூடிய மல்லிகை உதிர துள்ளி குதித்து கடைதெருவை சிற்றி வளம் வருவதை கண்ட இளவட்டங்களின் பார்வையெல்லாம், அவளை சுற்றி தான் கொள்ளை இட்டது.

ரகுவின் கழுகு விழிகள் மிதுவின் குடும்பத்தில் உள்ளவர்களை கருவருக்க தேடி அலைந்து, இந்த திருவிழாவோடு அவர்கள் மொத்த பேரையும் கொன்று குவிக்க கண்கொத்தி பாம்பாக காத்திருக்க, விதியோ அவன் கண்களில் மிதுஷாவை காட்டி, மிருகமாக ரத்தம் குடிக்க வந்தவன் எண்ணத்தை, அதை விட கொடூரமாக மாற்றி விட்டிருந்தது.

வில்லங்கமாக உதடு வளைத்துக்கொண்டவன் பார்வை மிதுவை வஞ்சக்கத்துடன் சுற்றி வர்ற, அவன் பார்வையின் அபாய வீரியம் தன்னை பின் தொடர்வது அறியாத சிட்டுகுருவி, ஒன்னு விட்டு அண்ணன் அக்கா சித்தி குழந்தைகளோடு இணைந்து,
ஐஸ்கிரீம், பானிபூரி, கோலிசோடா, நவல்பழம், காலிஃளார் பகோடா என கண்ணில் பார்வையெல்லாம் வாங்கி உண்டு, அலங்கார பொருட்களை வேடிக்கை பார்த்து, வண்ண வண்ண வளையல் மணி தோடுகளை குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுத்து கலகலப்பாக பேசி சுற்றி வந்தது.

திருவிழா என்றால் ஆடலும் பாடலும் இல்லாமல் இருக்குமா! ஆறு மணியை போல் தொடங்கிய நிகழ்ச்சியில் வண்ண விளக்குறள் மின்ன, ஸ்பீகரில் சத்தமாக ஒலித்த குத்து பாடலுக்கு ஆட்டம் பாட்டம் என்று ஒரே கூத்து தான்.

அதை தொடர்ந்து அவளோடு வந்த நண்டு சிண்டுகள் எல்லாம் பெரிய ராட்டினத்தில் ஏறிக்கொண்டு,

"அக்கா நீயும் வா.. ஜாலியா இருக்கும்" மிதுவையும் அழைக்க, உயரம் என்றால் அஞ்சி நடுங்கும் பாவை,

"நான் இங்கேயே நின்னு வேடிக்கை பாக்குறேன். நீங்க எல்லாரும் என்ஜாய் பண்ணுங்க" என்றிட, பிள்ளைகள் விடுவதாய் இல்லை.

"நீயும் வந்தா தான் நாங்களும் சுத்துவோம். இல்லைனா வேணாம். இறங்கி வர்றோம்" என அடம் செய்ய, வேறு வழி இல்லாமல் அவர்களோடு ஏறி அமர்ந்து இடையில் பெல்ட்டை மாட்டிக் கொண்டவளுக்கு, அப்போதே கண்கள் இருட்டி தலை கிறுகிறுத்து வந்தது.

"ஏய் ஏய்.. ப்ளீஸ் குட்டீஸ்.. நீங்க மட்டும் சுத்துங்களேன். நான் இறங்கிக்கிறேன்.. எனக்கு பயமா இருக்கு.." அஞ்சன விழிகள் மிரள பாவமாக கெஞ்சினாள் மிது.

"கூட நாங்க எல்லாரும் இருக்கோம் பயப்படாத க்கா.. ஜாலியா எங்க கூட சேர்ந்து கத்து.." என்ற நண்டுகள் ஆஆஆ.. ஆஆஆ.. என கத்தி உற்சாகம் கொண்டதை கண்டு பீதி ஆனது பருவக்குட்டிக்கு.

ராட்டினம் முழுக்க ஆட்கள் ஏறியதும், அவர்கள் அமர்ந்திருந்த பெரிய கூடை மெல்ல மெல்ல மேல் உயர்வதை உணர்ந்த மிதுவின் இதயதுடிப்பு அதிகரித்து, "முருகாஆஆ..காப்பாத்துஉஉஉஉ.." என பயத்தில் அலறிய பாவை, இரு கைகளால் நெஞ்சை அணைத்து பிடித்து ஓட்டைக் கண் போட்டு பார்த்த நேரம், ராட்டினம் அதிவேகமெடுத்து சுற்ற தொடங்கிட, அவ்வளவு தான்..

அருகில் யார் அமர்ந்திருப்பது என்றெல்லாம் பார்க்கவில்லை, புசுபுசு ரோமங்கள் நிறைந்த கரடுமுரடான இரும்பு நெஞ்சத்தில் அழுத்தமாக முகம் புதைத்து, தசைகள் இறுகிய இடையில் உடும்பாக கட்டிக்கொண்டு, இறுக கண்மூடிக் கொண்ட மிதுவின் தேகம் அப்பட்டமான நடுங்கிட, இருதயத்தில் அடுகடுக்காக பெரிய குண்டுகள் பாய்ந்த உணர்வில், மூன்று சுற்று கூட தாங்காமல் மயக்க நிலைக்கு சென்றிருந்தாள்.

மெல்லிய பூஞ்சை பெண், தானாக சென்று ராட்சத மலை மீது திமில்கள் புதைய மோதி கிடக்க, கண்களில் ரத்தவெறி குறுகுறுத்து கண்டவன் வேறு யாராக இருக்க முடியும்!?

வீரேந்திர ரகுபதி..

மிதுவின் குடும்பத்தை பல வருடமாக வேரறுக்க காத்திருந்தவனுக்கு, சடுதியில் தோன்றிய எண்ணத்தில் செங்குருத்து பெண்ணை வைத்து சதுரங்க ஆட்டம் ஆட வில்லங்க கணக்கு போட்டு விட்டான்.

அதே எண்ணத்துடன் தன் மார்பின் மீது மயங்கி கிடந்த வெண்கடுகை, எப்படி எங்கு வைத்து சூரையாடலாம் என்ற தீவிர யோசனையில் உடல் விறைத்தவன்,

"ஆஆஆ.. நிறுத்துங்க நிறுத்துங்க எங்க அக்கா மயக்கம் போட்டுட்டா.." கத்தி கூச்சலிட்ட சிண்டுகளை பார்க்க, ராட்டினத்தை நிறுத்தியவர்கள், மிதுவின் மயக்கத்தை தெளிய வைக்க முயற்சிக்கும் போதே, அவளது குடும்பம் பதட்டமாக வந்து, மிதுவை அழைத்து சென்று விட்டனர்.

மிது மயங்கியதில் இருந்து, அவள் குடும்பம் வந்து மிது முகத்தில் தண்ணீர் தெளித்து மயக்கம் தெளிய வைக்கும் வரையில் கூட, ரகு நெஞ்சத்தில் தான் ரோஜா மொட்டாக சுருண்டு கிடந்ததாள். மயக்கம் தெளிந்த கடுகும் அவனை பார்க்கவில்லை. அவளது குடும்பமும், பழுப்பு விழிகள் காவு வாங்க வெறிகொண்டு அமர்ந்திருந்தவனை பதட்டத்தில் கவனிக்கவில்லை.

அன்றிலிருந்து அடுத்த இரண்டு நாட்களுக்கு, மிது எப்போது வெளிவருவாள் என அவள் வீட்டை சுற்றி சுற்றி வர்ற, வீட்டு படியை தாண்டினாள் இல்லை அவன் பத்தினி.

மறுநாள் விடிந்ததும் குடும்பமாக சென்னைக்கு பேக்கப் செய்ய போவதை அறிந்துகொண்ட ரகு, சிவப்பு ஓடுகள் அடுக்கிய பாரம்பரிய பெரிய வீட்டில் நடுநிசி ராக்கோழி கூவிய நேரம், மிதுவின் அறைக்குள் மேலிருந்து குதித்திருந்தான், பெண்ணை வதைக்கும் அசுரனாக.

வந்தான்.. அவள் கதறல் சத்தம் அறை அதிர ஓலமிடுவதை தடுக்க, தன் அதரத்தால் அவள் ஜீவன் பருகிய ரகு, குட்டி பெண்ணை மெத்தையோடு மெத்தையாக அழுத்தி, தன் வஞ்சத்தை முழுக்க அவளிடம் தீர்த்தான். விடிந்ததும் அவள் குடும்பமே திகைத்து பார்க்க, கோணல் புன்னகை சிந்தி எழும்பி சென்று விட்டான்.

தனக்கு நடந்த முறைகேடான செயலை எண்ணி உள்ளம் மருகி தவித்த மிது, இன்னும் சற்று நேரத்தில் தனக்கு திருமணமாக போகும் எந்த ஒரு மகிழ்ச்சி இல்லாமல், மணப்பெண் அலங்காரத்தில் பொம்மையாக அமர்ந்திருந்தாள்

மதுரையில் பெரிய மண்டபமான NT ஹாலில், எம் எல் ஏ. M. சிவகுரு வெட்ஸ் R. மிதுஷாஸ்ரீ என்ற பெயருடன் அவர்கள் படமும் ஜோடியாக இருக்கும் பேனர்கள் ஆங்காங்கே இருக்க, மணமகன் அறைக்குள் ராஜ்மோகன் நுழைந்தார்.

"மாப்பிளை.." என்றழைக்க, குளியலறையில் இருந்து முகத்தை துடைத்தபடி வெளியே வந்த சிவகுரு, அரசியல்வாதிக்கு உண்டான மிடுக்குடன் முப்பது வயதை எட்டி, வேஷ்டி சட்டை அணிந்த காளையாக,

"சொல்லுங்க மாமா.." என்றான் கம்பீர குரலில்.

"அது நான் ஏற்கனவே உங்ககிட்ட சொன்னது தான் மாப்பிளை. என் பொண்ண பத்தி உங்களுக்கு தெரியாதது இல்ல. அவ வாழ்க்கைய கெடுத்து சீரழிக்க நினைச்ச பாவி முன்னாடி மிது உங்ககூட சந்தோசமா வாழ்ந்து காட்டணும். திரும்பவும் என் பொண்ணு முகத்துல பழைய சந்தோஷத்தையும் சிரிப்பையும் கொண்டு வந்து, அந்த ராஸ்கல உள்ள தூக்கி வச்சி, நினைச்சு பாக்க முடியாத அளவுக்கு தண்டனைய தரணும்.

இது எல்லாமே உங்களால தான் முடியும் மாப்பிளை. பூ போல இருந்த பொண்ண கசக்கி போட்டுட்டாய்யா.. புள்ள முகத்தையே பாக்க முடியல. நான் சொன்னேன்னு உங்கள கட்டிக்க சம்மதிச்சி இருக்கு. அது மனசு கோணமா பாத்துக்கங்க மாப்பிளை"

மகளை நினைத்து கண் கலங்கி குருவின் கரத்தை பிடித்துக்கொண்டவரின் தவிப்பு எல்லாம், எந்த ஒரு சூழ்நிலையிலும், என் மகளை களங்கமானவள் என மட்டம் தட்டி பேசி விடாதே என்ற கெஞ்சலின் பரிதவிப்பு உள்ளதை உணர்ந்த சிவகுரு,

"என்ன மாமா, மகள நினைச்சி கவலையா.. குழந்தைல இருந்து மிதுவ தூக்கி வளத்தி இருக்கேன், அந்த பாசம் என்னைக்கும் மாறாது மாமா. நானும் ஏற்கனவே உங்கள்ட்ட சொன்னதுதா, மிது இனிமே என் பொறுப்பு அவளை பத்திரமா பாத்துக்குறேன். கவலைய விடுங்க" அழுத்தமாக சொன்னவன், ஐயர் அழைக்கவும் கழுத்தில் மாலையை மாட்டிக் கொண்டு மனமேடையில் சென்று அமர்ந்திட, ராஜ்மோகன் மனம் நிறைந்து நிம்மதி மூச்சி விட்டார்.

"மிதுமா.. ஐயர் பொண்ண கூட்டிட்டு வர்ற சொன்னார். வாடா" சிவகுருவின் அக்காமார்கள் அவளை அழைக்க, கூரைப்பட்டில் அலங்கரித்த பொம்மையாக அவர்களோடு மெல்ல நடந்து வந்து சிவகுரு பக்கத்தில் அமர, அவளை அழுத்தமாக பார்த்தான் பட்டுவேட்டிகாரன்.

"மிது.." ஐயர் சொல்லும் மந்திரங்கள் சொன்னபடியே மெல்லமாக அழைத்தான் சிவகுரு.

"மாமா.." என்றவளின் கண்கள் கலங்கி போனது.

"பயப்படாத அம்மு.. மாமா இருக்கேன்" அவள் கரத்தை பற்றி அழுத்தமாக பற்றி கண்மூடி திறக்க, மெல்லிய புன்னகை உதட்டில் தவழவிட்டு, சரி என தலையாட்டிய மிது, மீண்டும் தலை குனிந்து கொண்டாள்.

சற்று நேரத்தில் சிவகுருவின் சரிபாதியாக போகிறாள் மிதுஷா. அதற்கான சடங்கு சம்பிரதாயங்கள் அனைத்தும் முறையாக செய்துகொண்டிருக்க, சரியாக தாலி கட்டும் நேரத்தில் எங்கிருந்து வந்தானோ கழுகு கண்ணன்.

பரட்டை தலையில் அப்பனை போலவே எண்ணை வைக்காது, அகண்ட நெஞ்சம் தெரிய சட்டை பொத்தானை கழட்டி விட்டு, பாயும் சிறுத்தையின் உருவம் போட்ட டாலர் செயின் நடு நெஞ்சில் விரைப்பாக ஆட, நீல நிற கட்டம் போட்ட கைலி தொடை தெரிய கட்டியபடி மனமேடைக்கு கீழ் நின்றவன் கண்களில், செந்தனல் வீசியது மணமகள் மிதுவை கண்டு.

மண்டபத்தில் விதவிதமான ஆடை அணிந்து வளம் வரும் மனிதர்களுக்கு அப்பாற்பட்ட தோற்றத்தில், நெடுமரமாய் நின்றிருந்த ரகுபதியை கண்டதும் பலரும் சலசலக்க தொடங்கிட, அந்த சத்தத்தில் நிமிர்ந்து பார்த்த மிது, நயனங்கள் விரிய அதிர்ந்து போனாள்.

தாலியை கையில் வாங்கிய சிவகுரு மிதுவின் கழுத்தில் கட்ட போக, மக்களின் சலசலப்பும் அவளின் அசைவற்ற தோற்றமும் கண்டு புருவம் இடுங்கியவன், மிதுவின் பார்வை போன திசையை நோக்க, போக்கிரி ராஜா போல தோரணையாக நின்றிருந்தவனை யோசனையாக பார்க்க,

"டேய்ய்ய்.. ராஸ்கல் உன்ன யாருடா உள்ள விட்டது நாயே.." ராஜ்மோகனின் கோவத்தில், குருவின் யூகம் சரியாக போனது ரகுவை பற்றி.

"வாய் நீண்டுது மேல வந்து நாக்க அறுத்து வீசிபுடுவேன்.. மரியாதையா ஒதுங்கி நில்லு இல்ல அசிங்கப்பட்டு போவ.." ரகுபதியின் ஆக்ரோஷத்தில், ஏற்கனவே அவனிடம் அடிப்பட்டவருக்கு சற்று நடுக்கமாக தான் இருந்தது. ஆனாலும் மகளை விடவும் அவர் பயம் பெரிதல்லவே!

"என்னடா, விஷேசம் நடக்குற இடத்துல புகுந்து அழிச்சாட்டியம் பண்றியா.." மீண்டும் அவர் பேச தொடங்கும் போதே, நாலு கால் பைய்ச்சலில் மணமேடைக்கு தாவி இருந்த ரகு, ஓங்கி அவர் வாயில் ஒரு குத்து விட்டு, சிவகுரு கையில் இருந்த தாலியை பிடுங்கி எரியும் நெருப்பில் வீசியவன், தனது சட்டைப்பையில் இருந்த தாலியை எடுத்து கண்ணிமைக்கும் நொடியில் மிது கழுத்தில் கட்டிய ரகுவை, அதே வேகத்தில் எட்டிவிட்டு குப்புற விழுந்தவன் சட்டையை பாய்ந்து பிடித்து வெறியாக நின்ற சிவகுரு, நிச்சயம் ரகுபதிக்கு சலைத்தவன் இல்லை தான்.

"என் மாமா சொன்ன போதே உன்ன கூரு கூரா கண்டம் பண்ணி இருக்கணும் டா.. எம்புட்டு தைரியம் இருந்தா என் மிது மேல கைய வச்சதும் இல்லாம, நான் இருக்க இடத்துக்கே வந்து அவ கழுத்துல தாலி கட்டி இருப்ப.."

ஆத்திரம் தீராது மீண்டும் மீண்டும் ரகு முகத்தில் காப்பு கை முறுக்கி குத்து விட, சிகை அலைமோதி கன்னத்து தசை அதிர அவனது அடியை வாங்கிய ரகு, அதே வேகத்தில் சிவகுருவின் கரத்தை தட்டி விட்டு பட்டு சட்டையை அழுத்தமாக பிடித்து, அவன் கொடுத்த அடியை இரண்டு மடங்காக திருப்பிக்கொடுத்து, இருவர் முகமும் ஒருவருக்கொருவர் மிகமிக கிட்டத்தில் பார்ப்பது, சிங்கமும் சிறுத்தையும் ஒன்றுகொன்று வெறித்தனமாக மோதிக்கொள்ளும் சீற்றத்தை காட்டியது.

இவர்கள் இருவரும் ஒருபக்கம் தள்ளுமுள்ளு செய்து பிராண்டி கொள்ள, கழுத்தில் தாலி வாங்கிய மிதுவோ அதிர்ச்சியில் மனமேடை விட்டு எந்திரிக்க கூட செய்யாது, கண்ணீரோடு திகைத்து அமர்ந்திருந்தவளை அவள் தாயும் மற்ற பெண்களும் கட்டிக்கொண்டு குலுங்கி அழ, ராஜ்மோகன் நிலைகுத்திய பார்வையால் செய்வதறியாது மகளை வெறித்தார்.

"ரவுடி பயலே, தாலி கட்டிட்டா பெரிய புடுங்கியா நீ.. இப்பவே என் பதவி பவுச வச்சி உன்ன உண்டு இல்லாம ஆக்குறேன் டா.."

"உன் பதவி பவுசு வச்சி என் கூந்தல கூட ஆட்ட முடியாது டா.. இந்த ரவுடி பைய தொட்டு தாலி கட்டின என் பொண்டாட்டிய உன் கண்ணு முன்னாடியே தூக்கிட்டு போறேன். முடிஞ்சா உன் பதவிய வச்சி என்னைய தடுத்து காட்டு.." நக்கலாக சவாலிட்டு மீசையை முறுக்கி விட்ட ரகுபதி, நொடிக்கும் பொழுதில் அனைவரின் கண்ணையும் மறைத்துவிட்டு, மிரண்டு விழித்த வெண்கல சிலையை தோளில் தூக்கப் போட்டு இடத்தை காலி செய்திருந்தான்.

தொடரும்.

சாரி drs லேட் ud க்கு. திடீர்னு மூளை ஸ்லோ ஆகிடுச்சு, போன் எடுக்குறேன் வைக்கிறேன், வெளி வேலை பாக்குறேன், ரெஸ்ட் எடுக்குறேன் இதுதான் ஒரு வாரமா நடக்குது. இனிமே கொஞ்சம் சுறுசுறுப்பாகி வர்றேன். இந்த ud படிச்சிட்டு எப்டி இருக்குனு சொல்லுங்க 😊
 

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 3
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top