- Messages
- 343
- Reaction score
- 258
- Points
- 63
அத்தியாயம் - 31
அறைக்கதவை திறந்து உள்ளே வந்த ராமின் கண்கள் சில வினாடிகள் மட்டுமே வியப்பை பிரதிபலித்தன. உடனே தலையை உளுக்கி சகஜமாக மாறியவன், சோபாவில் சென்று அசதியாக கண்மூடி அமர, அழகு சிலையென அவன் மடியில் வந்து லாவகமாக அமர்ந்து விட்டாள் நேத்ரா.
“ஏய்.. என்ன பண்ற பைத்தியமே மேல இருந்து எழும்பு டி..” சட்டென கணம் கூடி விழித்த அதிர்வோடு அவன் கத்துவதை அசட்டை செய்தவளாக, “நீங்க வருவீங்கனு தான் இத்தனை நேரமும் உங்களுக்காக காத்திருந்தேன் தெரியுமா.. நான் எப்டி இருக்கேன் ராம்ம்..” தனக்கு சம்மந்தமே இல்லாத நாணத்தை கடினப்பட்டு வரவழைத்து ஒற்றை விரல் கொண்டு அவன் கன்னம் எழுதினாள்.
“உன்ன யாரு காத்திருக்க சொன்னது மச்.. கைய எடுத்துட்டு தள்ளி போடி” எரிச்சலாக அவள் கரம் தட்டி விட்டவனை விடுவாளா மின்னல் பெண். “எதுக்கு இவ்ளோ டென்ஷன் ஆகுறீங்க ராம், உங்க மனசு மாற நானும் என்னென்னவோ பண்ணி பாத்துட்டேன், ஆனா பிடிவாதமா என்னை திரும்பி கூட பாக்க மாட்டேன்றீங்க. இப்ப கூட உங்களுக்கு பிடிக்குமேனு தான் எனக்கு பிடிக்காத இந்த புடவைய கட்டிக்கிட்டு என்னை அலங்கரிச்சிகிட்டு நிக்கிறேன். என் குணத்தை கூட உங்களுக்காக கொஞ்சம் கொஞ்சமா மாத்திகிட்டு என் இயல்பையே தொலைச்சிட்டு இருக்கேன். ஏன் ராம் என்னை பாத்தா ஒரு ஓரத்துல கூடவா உங்களுக்கு ஆசை வரல”. கருமம் சென்டிமெண்ட்டாக கூட பேச வரவில்லை அவளுக்கு, அவளையும் மீறிய கோவம் வார்த்தையில் எட்டிப்பார்த்தனவே. ஆனாலும் அவன் மடியை விட்டு எழவில்லை அவள்.
மணமகளை போன்ற அழகுடன் புதுமையாக லைட் வெயிட் நீல நிற பட்டை கட்டி, கலரிங் செய்த ஜான் அளவு தலைமுடியில் மல்லி சரமும் அழகுக்கு அழகு சேர்க்க ஆடம்பரமற்ற ஆபரணங்களும் அவளை பேரழகியாய் காட்ட, பார்க்க வேண்டிய மடையனோ கண்களுக்கும் மனதுக்கும் கடிவாளமிட்டு அமர்ந்திருக்கிறானே.
“நேத்ராஆ.. என் பொறுமைய நீ ரொம்ப சோதிக்கிற, அடிவாங்கி கட்டிக்காம ஒழுங்கா எழும்பு எனக்கு டையார்ட்டா இருக்கு” எரிந்து விழுந்தவனை அஞ்சனை விழிகள் விரிய கண்டாள். “நீங்க என் பேரை சொல்லிட்டிங்க ராம்” உற்சாகம் பொங்க அவன் கழுத்தை கட்டிக் கொண்டவளை வினோதமாக பார்த்தான்.
“என்ன டி.. சும்மா எதையாவது உளறிட்டு இருக்க”. மீண்டும் எரிச்சல் அவள் நெருக்கத்தில் இம்முறை விளக்கவில்லை அவன், எப்படியும் இம்சை விலகாதே.
“அடிக்கடி நீங்க என்னை டி.. சொல்றதுகூட ரொம்ப அழகா இருக்கு ராம். எனக்கும் பிடிச்சிருக்கு”. அத்துனை ரசனை அவள் பார்வையிலும் சொல்லிலும் பெருமூச்சு விட்டு சலித்தான். ஹ்ம்.. மூக்கோடு மூக்குரசி சிணுங்கினாள் அவள். இருவருமே அறியாமல் ஏதோ ஒரு ஈர்ப்புவிசை ஈர்க்க வைக்கப்பட ஒருவரை ஒருவர் நெருங்கிக் கொண்டு இருப்பதை அவள் அறிவாள், ஆனால் அவன் அறியவில்லையே. இப்போதெல்லாம் ஏதோ ஒரு மறைமுக ஈர்ப்பு அவள் மீது. அவள் நெருங்கினால் தடுமாறி ஓடிஒளிந்து ஆட்டம் போடும் இத்தகைய விளையாட்டு கூட பிடித்தனவே.
“ஏன் ராம் உங்க கை நடுங்குது” ஹஸ்கியாக இன்னும் அவனை நெருங்கிட அவனது சந்தனநிறத்தில் பளபளத்த வலிய கரத்தின் நடுக்கத்தை மறைக்கவே அழுத்தமாக பதுங்கியது அவள் இடையினில். ஸ்ஸ்.. என்ற மெல்லிய முணுகள் அவளையும் அறியாது வெளிவந்து மேலும் வாகாக ஆணவன் மடியினில் ஒருவித மோனநிலையில் மென்புன்னகை இதழில் பூக்க அமர்ந்துக் கொண்டாள்.
“வர வர உங்கள எனக்கு ரொம்ப பிடிச்சி இருக்கு ராம். ஐ திங்க் பொய்யா நடிக்க வந்து உண்மையா உங்கள நேசிக்க தொடங்கிட்டேன் போல” நிஜத்தை தான் சொல்கிறாள் என தெரியும் ஆனபின்னும் அவனிடம் அமைதி. ஆரம்ப கட்டத்தில் அவள் அவனிடம் பழகுவதும் தனக்கு தானே கட்டாயம் விதித்து அவனை நெருங்குவது எதிலும் அவளுக்கே விருப்பமின்மையை அவனால் தெளிவாக காணமுடிந்தது. அவ்வளவு ஏன், மங்கலனான் அவள் கழுத்தில் சூடும் போது கூட இவ்வளவு தானா தன் வாழ்க்கை என அவள் மனதிலும், அவனுக்கான சிறுதுளி காதலின்றி பரிதவித்து எச்சிலை விழுங்கிக் கொண்டது அவள் மட்டும் தானே அறிவாள்.
அழகு வைரமாய் ஜொலிக்கும் பணக்கார வீட்டு பெண்கிளியே தன்னை முழுதாக தருகிறேன் எடுத்துக்கொள் என வெட்கத்தை விட்டு கெஞ்சிப்பார்த்தும் எந்த ஒரு சூழ்நிலையிலும், இறந்தே போனாலும் கட்டிய மனைவியை தவிர வேறு எவளையும் திரும்பி கூட பார்க்க மாட்டேன் என்று அவன் உறுதியாக இருக்கும் அந்த உன்னதமான காதல் தான் அவளையும் அறியாமல் அவனிடம் காந்தமாக கவரப்பட முக்கிய ஒன்று.
அவள் கழுத்தில் தாலி கட்டுவதற்கு முன்பு அவள் அணியும் உடைகள் பலரின் கண்களையும் கூச வைக்கும், ஏன் ராம் கூட அவளையும் அவளின் அரைகுறையான பஞ்சத்தில் அடிப்பட்ட உடையையும் கண்டு பலமுறைக்கு மேல் முகம் சுழித்து சென்றதுண்டு. ஆனால் திருமணம் ஆன பிறகு, அவள் அடிப்பட்டு படுக்கையில் இருந்த போது ஆட்களின்றிய பல சமயங்களில் அவளின் அப்பழுகற்ற அரைகுறையான உடலை துடைத்து சுத்தம் செய்து உடை அணிவிக்க உதவியதுண்டு, அவன் கடைப்பிடிக்கும் கண்ணியம் காக்கும் சலனமற்ற பார்வையும் செயலுமே போதாதா வெகுவாக பெண் மனதை சூறையாட. ஆயிரம் இருந்தாலும் நேத்ராவும் அவன் தாலி கட்டிய மனைவி தானே. அதிலும் அவள் கழுத்தில் இருக்கும் தாலியை கண்டால் போதும் மகுடிக்கும் மயங்கும் பாம்பாக மாறி விடுவான் ராம். இப்போதும் அவன் எதை கண்டால் அடங்கி மயங்குவான் என நன்கு அறிந்தவள் அவன் வரும் போதே தாலிக்கொடியை எடுத்து கவசமாக வெளியே தெரிய நெஞ்சில் போட்டுக் கொண்டாளே.
“ராம்ம்.. ராம்ம்.. நான் உங்ககிட்ட தான் பேசிட்டு இருக்கேன்”.
“என் காது செவிடு இல்ல”.
“ஓஹோ.. நான் உங்கள விரும்புறேனு சொன்னேன்”.
“அது உன் கஷ்டம். எனக்கு அப்டி எந்த எண்ணமும் இல்ல”. விட்டேதியாக பதில் வந்தது.
“உங்க மனசு மாற நான் என்ன செய்யனும்”.
“ஒன்னும் செய்ய வேணா”.
“ஏன் நான் எதுவும் செய்யாமலே தன்னால நீங்க என்னை விரும்புவேன்னு சொல்ல வரீங்களா”. குறுநகை உதட்டில் தோன்ற அவன் கழுத்தோடு முகம் உரசி இழைந்தாள்.
“ஒரு மண்ணும் இல்ல, முதல்ல இப்டி என்னை நெருங்கி தொட்டு பேசுறத நிறுத்திட்டு தள்ளி போடி. மனுஷன டார்ச்சர் பண்ணிக்கிட்டு”. எரிந்து விழுந்தான் அப்போதும் அவன் கரம் அவள் இடையினில் அழுத்தி நடுக்கம் தெளியாது இருந்தனவே.
அவனோடு இத்தகைய நெருக்கம் உள்ளுக்குள் அவளுக்கு ஒருவித சிலிர்ப்பை ஏற்படுத்த, உள்ளங்கை வேர்த்து ஈரத்தோடு சேர்த்து அவள் இடையினில் அவனது சூடு பரவியதில் அவளது தேகமும் சூடேறி விரும்பியே அவன் கையில் குழைந்தன. வெளியே சொன்னால் வேதாளம் முருங்கை மரம் ஏறி விடுமோ என்ற நினைப்பில் ஒன்றும் அறியாத போலவே அவன் மடிதனில் அவள்.
முன் நெற்றியில் கலைந்து விழுந்த முடி வியர்வையில் நனைந்து ஈரம் சொட்ட கண்ணை மறைத்து தவழ்ந்ததில் நுனிமூக்கில் வியர்வையின் ஈரம் வழிய, கண்கள் ஒருமாதிரி சிவந்து சோர்விலும் அவனது சிவந்த முகம் அழகாக காட்சி படுத்தியதை வெகுவாக ரசித்து, “க்யூட்டான மில்கி பாய்” உதடு புன்னகைத்து கரம் உயர்த்தி மீண்டும் கேசம் கலைத்து மேல்ஏற்றி கோதி விளையாடியவளை தலையை சிலுப்பி விலக்கிக் கொண்டு முடிந்து மட்டும் முறைத்தான் ராம்.
“பேருக்கு தான் நான் ஆன்ட்டி ஹீரோயினா இருக்கேன், ஆனா அதுக்கான எந்த வேலையும் இதுவரைக்கும் பாக்கல. நீங்க தான் கான்செப்ட் மாத்தி ஆன்ட்டி ஹீரோவா பிஹேவ் பண்ணி என்னையே உங்ககிட்ட இறங்கி வர வைக்கிறீங்க. இனிமேலாம் என்னால பொறுத்துப் போக முடியாது ராம், நானும் டெரர் தான்னு இந்த ஊர் உலகத்துக்கு நிரூபிக்கனும்”. சீரியஸான முகபாவனையோடு லூசு போல் படபடத்தவளை கேவலமாக லுக் விட்டான்.
“என்ன அப்டி பாக்குறீங்க. விபரம் தெரிஞ்சதுல இருந்து நான் ஆசை பட்டது எதுவும் என் கைக்கு எட்டாம போனதில்ல. ஆனா நீங்க மட்டும் மிஸ்ஸாகிட்டே போறீங்க அதனால உங்கள ரேப் பண்ணி நானும் ஆன்ட்டி ஹீரோயின் தான்னு ரீடர்ஸ் மத்தியில இன்னைக்கு நிரூபிக்க போறேன்” என வில்லங்கமாக உள்ளங்கையும் உள்ளங்கையும் நம்பியார் போல் தேய்த்துக் கொண்டு மேலும் அவனை நெருங்கியும் ரியாக்க்ஷன் மாறவில்லை அவனிடம்.
“கடுப்ப கிளப்பாம தள்ளி போய்ட்டு, எதையாவது லூசு மாதிரி உளறிக்கிட்டு. நீ பண்றத எல்லாம் பாத்தா ஆன்ட்டி ஹீரோயின் மாதிரி இல்ல காமெடி பீஸ் மாதிரி தான் இருக்கு. நானே வர சிரிப்பை கட்டுப்படுத்திக்கிட்டு இந்த ரைட்டர் புள்ள எனக்கு கொடுத்த முறைக்கிற கேரக்டரை கஷ்டப்பட்டு கடைப்பிடிச்சிட்டு இருக்கேன், இதுல நீ வேற ரேப் பண்ண போறேனு காமெடி பண்ணிக்கிட்டு சிரிச்சிட போறேன் தள்ளி போடி”. விரைப்பாக கூறி அவன் மடிமீதிருந்த ஐம்பது கிலோ தாஜ்மஹாலை அசந்த நேரம் பார்த்து அல்லேக்காக தூக்கி நிறுத்தி விட்டவன், "ராம்..ராம்.. நில்லுங்க இன்னைக்கு நான் உங்கள ரேப் பண்ணி என்னை நிரூபிச்சே ஆகணும்” அவன் முதுகின் பின்னே கிளி கீச்சிட்டதை எதையும் காதில் வாங்காமல் விறுவிறுவென குளியலறையில் புகுந்து கொண்டான் ராம்.
** ** **
“இந்தாமா.. இதுல இன்விடேஷன் இருக்கு. உன் பிரண்ட்ஸ் கொலிக்ஸ் யார் யாருக்கு எல்லாம் கொடுக்கணுமோ கொடுத்து இன்வைட் பண்ணிடு”. ஆடம்பரமான பத்திரிக்கைகளை ஸ்ருதி முன்பு வைத்தாள் சுகன்யா.
அழகிய சிவப்பு நிற ஃபாண்ட்டில் “சத்தியசீலன் வெட்ஸ் ஸ்ருதி” என அச்சடிக்கப் பட்டு இருந்த கார்டுகளில் சிறிது நேரம் கண்களை நிலைக்க விட்டவளாக, சரிம்மா என்றவள் தயாராகி வெளியே வர அவளின் வருங்கால கணவன் சிரித்தமுகமாக அவளுக்காக காத்திருந்தான்.
“சத்தியா இதோ ஸ்ருதி வந்துட்டா, அவளோட டைம் ஸ்பென்ட் பண்ணனும்னு சொன்னியே, வெட்டிங் கார்ட் கொடுக்க நீயும் அவளோட போய்ட்டு வா” என்றாள் சுகன்யா.
“ஓகே ஆண்டி” என்றபடி இருவரும் ஸ்ருதிக்கு தெரிந்த நபர்களுக்கு எல்லாம் பத்திரிக்கை வைத்துக் கொண்டே பொதுவான விடயங்களை பற்றி பேசி ஒருவரை ஒருவர் அறிமுகப்படுத்திக் கொண்டனர்.
“அடுத்து எந்த பிரண்ட் வீட்டுக்கு போகணும் ஸ்ருதி”.
“என் பெஸ்ட் பிரண்ட் நேத்ரா வீடு” என்றாள் நீண்ட நாட்கள் கழித்து தோழியை பார்க்க போகும் உற்சாகத்தில்.
“ஓஹ்.. சரி சரி” என்றவனுக்கு வழி சொல்ல கார் ராம் வீட்டு வாசல் முன்னால் நிற்க, இருவரும் கைக் கோர்த்து எதையோ சிரித்துப் பேசியபடி வந்தவர்களை பனிதான் மரியாதையாக அழைத்து அமரவைத்தாள்.
“அக்கா.. நீங்க எனக்கு அக்கா தானே” சிறு புன்னகையோடு ஸ்ருதி கேட்டிட. “அட இரு ஸ்ருதி நீதான் அவங்களுக்கு அக்கா மாதிரி இருக்க. அவங்க பாக்க சிக்குனு சின்ன பொண்ணு மாதிரி க்யூட்டா இருக்காங்க” சத்தியசீலன் பனியை பார்த்து கூறியதும், அப்டியாஆஆ.. என நாணம் பூத்து தரை நோக்கியவளின் தோளை அமுக்கிப் பிடித்தான் வர்மன்.
“அதானே பாத்தேன் இன்னும் நம்ம ஆளுக்கு மூக்கு வேர்கலையேனு இந்தா வேர்த்துடுச்சில்ல” நமட்டு சிரிப்போடு கணவனை பார்க்க, “மவளே அவன் சின்ன பொண்ணுனு சொன்னா பல்லையா காட்டுற, பேசி அனுப்பிட்டு உள்ள வா நான் யாருனு காட்டுறேன்”. அவளுக்கு மட்டும் கேட்கும் படி பற்களை கடித்ததும் ‘ஆத்திஇ.. நைட் தான் ஓவர் டோஸ்ல அந்த காட்டு காட்டினான் திரும்பவுமா’ என அலண்டு ஓடி விட்டாள் கிட்சனை நோக்கி.
“வணக்கம் சார், நான் நேத்ராவோட பிரண்ட் ஸ்ருதி, இவர் நான் மேரேஜ் பண்ணிக்க போறவர்” என தங்களை அறிமுகம் படுத்திக் கொள்ளும் போதே ராமும் அங்கு சேர்ந்திட. “அண்ணா எப்டி இருக்கீங்க” என்றாள் சங்கட்டமாக. நேத்ரா செய்த குளறுபடியால் அவன் தானே அதிகம் பாதிக்கப்பட்டது அதனால் வந்த சங்கடம் அது.
“நல்லா இருக்கேன் மா.. நீ எப்டி இருக்க” என்றான் மரியாதையாக. எப்போதும் திமிராக நடந்துக் கொள்ளும் நேத்ரா மீது தான் கோவமே தவிர, நிதாணித்து மரியாதையாக நடந்துக் கொள்ளும் ஸ்ருதி மீது பார்த்த முதல் நாளில் இருந்தே நன்மதிப்பு ராமிற்கு இருக்கவே செய்தது.
“நல்லா இருக்கேண்ணா. வீட்ல கல்யாணம் முடிவு பண்ணிருக்காங்க, அதான் நேத்ராவையும் உங்களையும் இன்வைட் பண்ணலாம்னு வந்தேன். எங்கே அவ”.
“வேற எங்கே உள்ள தான் இருக்கா” சலிப்பாக ராம் சொல்ல.
“ஏன் பிரண்டு கிட்ட மட்டும் தான் பேசுவியா எங்களை எல்லாம் பாத்தா பேய் பிசாசு மாதிரியா இருக்கு”. கிட்சன் பக்கமே பரபரப்பாக நோட்டம் விட்டுக் கொண்டிருந்த சத்தியசீலனின் தொடையில் கை போட்டு கேட்ட வர்மன் மனதிலோ 'மவனே அங்க என்ன டா பார்வை இங்க பேசிட்டு இருக்கும் போது' என்று பொறுமிட, வலியில் சத்தியசீலனின் கண்முழி பிதுங்கிப் போனது வர்மாவின் இரும்பு கை செய்யும் ஜாலத்தில்.
“அச்சோ அதெல்லாம் இல்ல அண்ணா. அந்த சிடுமூஞ்சிய பாக்குறத விட போன கதை ஆன்ட்டி ஹீரோ உங்க மூஞ்சியையே பாத்துட்டு போய்டலாம்” நமட்டு சிரிப்போடு சொன்னவளை கோவம் இல்லாது முறைத்தான் வர்மன்.
“யார பாத்து சிடுமூஞ்சினு சொன்ன” இரட்டை குரல் கோவமாக வெளிவந்தன, ஒன்று நேத்ரா மற்றொன்று வாசலில் நின்றிருந்த அவள் பாசமிகு அண்ணன் நரேனுடையது. அண்ணன் தங்கையின் ஒரேமாதிரியாக கோவ முகத்தை அனைவரும் மாறி மாறி பார்க்க, அவன் ஆண் இவள் பெண் என்ற ஒற்றை வித்தியாசம் மட்டும் தான் இருவருக்குள்ளும் வேறுபட்டது.
“ஏய் என் தங்கச்சிய பாத்தா சிடுமூஞ்சி மாதிரி இருக்கா உனக்கு” வெளியில் இருந்து எகிறிக் கொண்டு வந்தவனை கண்டு, “நீயும் உன் தங்கையை விட மோசம் தான்” என்று சொல்ல ஆசை தான் ஆனால் அவனை பார்க்க கூட பிடிக்காமல் சட்டென முகத்தை திருப்பிக் கொண்டு எழுந்தவள்,
“இந்தா நேத்து, எனக்கு கல்யாணம் முடிவாகி இருக்கு நீயும் அண்ணாவும் கூடவே, இந்த வீட்ல எல்லாரையும் அழைச்சிட்டு கண்டிப்பா வந்திடு”. குறிப்பாக ‘இந்த வீடு’ என்பதனை அழுத்தி கூறி ஒருவனுக்கு ரத்த அழுத்தத்தை ஏகத்துக்கும் கூட்டினாள் ஸ்ருதி.
“எவ்ளோ திமிரு நான் இங்க பேசிட்டு இருக்கேன் மதிக்காமலா போற பாத்துக்குறேன் டி” என கை முஷ்டியை மடக்கியவன், ஸ்ருதியை ரசனையாக பார்க்கும் சத்தியனை கொலைவெறியில் முறைத்து வைத்தான்.
அதற்குள் அனைவருக்கும் டீயும் பலகாரமும் கொண்டு வந்த பனி. உங்க ஜோடி பொருத்தம் ரொம்ப நல்லா இருக்கு ஸ்ருதி, உங்க கல்யாணம் நல்லபடியா நடக்கும் இன்முகத்தோடு சொல்லியவள், ‘இந்தாங்க அண்ணா காப்பி எடுத்துக்கோங்க’ என நரேனிடம் ஒரு கப்பைக் கொடுக்க அந்த காப்பியின் சூட்டை விட அவன் வயிறு திபுதிபுவென சூடாக கொதித்தது.
“என்ன திடிர்னு கல்யாணம்” புரியாமல் கேட்டாள் நேத்ரா.
“அம்மா முடிவு பண்ணினாங்க, எனக்கும் இவரை பிடிச்சிது ஓகே சொல்லிட்டேன். இதுல என்ன டி திடிர்னு கல்யாணம் பண்ணிக்க இருக்கு”, அலட்சியமாக கேட்ட தோழியின் உயிர்ப்பற்ற பார்வையை கூர்ந்து உள்வாங்கிக் கொண்டாள் நேத்ரா.
'அப்ப உன் விருப்பம்' என்று தோளைக் குலுக்கியவளிடம் சிறிது நேரம் கதைத்து விட்டு நரேனோடு வந்த குணவதியிடம் நன்றாக சிரித்து பேசியவள், “எதுக்கும் கவலை படாதீங்க ஆண்டி கூடிய சீக்கிரம் நேத்ரா உங்கள புரிஞ்சிகிட்டு வாய் நிறைய அம்மா அம்மானு கூப்பிடுவா” என்று தைரியம் சொன்னவள் அனைவரிடமும் விடைபெறுகிறேன் என்றவள் நரேனின் முகத்தை கூட பாராது வெறுப்பாக முகத்தை திருப்பிக் கொண்டு சென்றதும், அவளையும் அவன் உடன் இருக்கும் சத்தியனையும் கொலை பார்வை பார்க்கும் நரேனையும் அர்த்தமாக பார்த்து வைத்தனர் அங்கிருந்தோர்.
“நேத்ரா நான் கிளம்புறேன்”. ஏன் வந்தான் எதற்கு வந்தான் என்று எதையும் சொல்லாது வந்த வேகத்தில் குணவதியையும் இழுத்துக் கொண்டு திரும்பி சென்றவனை பைத்தியமா இவன் என்ற ரேஞ்சிக்கு பார்த்து வைத்தனர் இப்போது.
** ** **
பரமானந்தம் முன்னால் விரைப்பாக நின்றிருந்தான் நரேன். (ஏன் பின்னாடி நிக்க வேண்டியது தானேனு கேக்க கூடாது வயசான பார்ட்டி கண்ணு தெரியாது பாவமுல)
“உனக்கும் நேத்ராக்கும் அடுத்த மாசம் கடைசில சிஎம் பொண்ணு பையன் கூட கல்யாணம்”. தகவலாக சொன்னவரை உள்ளுக்குள் ஏற்பட்ட அதிர்ச்சியை வெளிகட்டாது ஏறிட்டவனாக, “திடீர்னு சொன்னா எப்டி ப்பா.. எனக்கு இப்போ கல்யாணம் வேண்டா”. முகசுழிப்பாக சொன்ன மகனை ஊடுருவும் பார்வை பார்த்தார்.
“ஓஹோ.. என்னையே எதிர்த்து பேசுற அளவுக்கு போயாச்சா. என் சொல்லை மீறி உன்னால இந்த கல்யாணத்தை தடுக்க முடியுமா நரேன்”. அதட்டல் பேச்சில் எரிச்சல் பட்டான் அவன்.
“கேள்வி பட்டேன் இப்போல்லாம் நான் இல்லாத நேரம் அடிக்கடி அந்த நாயை இழுத்துக்கிட்டு காரில் ஏத்திட்டு சுத்துறியாமே. என்ன புதுசா பழக்கம் இது”. இடுப்பு வேஷ்டியில் கட்டி இருந்த பட்டையான பச்சை பெல்ட்டை கழட்டியவரை நிலைத்த விழிகளால் கண்டான்.
“அப்பப்போ என் பேச்சை மீறி எதிர்த்து பேசின, சரி இளமை துள்ளும் வயசு நம்ம புள்ள தானே தெரியாம பேசுறானு உன் வழிக்கே விட்டு நீ கேக்குற ஒவ்வொரு விசயத்துக்கும் சம்மதம் சொல்லி உன்ன பிரீயா விட்டதுக்கு பெரிய பெரிய வேலைகளை பாக்குறதும் இல்லாம அந்த நாயோட உறவு கொண்டாடிட்டு அலையிறியா டா ராஸ்கல். இன்னைக்கு எல்லாத்துக்கும் சேர்த்து வச்சி என் பாணில தெளிய வைக்கிறேன்”. ஒவ்வொரு வார்த்தையும் அழுத்தமாக வெளிவந்து பெல்ட்டை சுழற்றியவாறு அவனை நெருங்கியவரை கண்டு நெஞ்சை நிமிர்த்தி நின்றவனாக,
“பெத்த புள்ளையே ஆனாலும் ஓரளவுக்கு மேல உங்களால உங்க கட்டுப்பாட்டுல வைக்க முடியாதுனு தெரிஞ்சும், ஒவ்வொரு முறையும் நீங்க சொல்றதை தான் கேக்கணும்னு இப்டி விதண்டாவாதமா நீங்க நடந்துக்குறது முரண் பாடானதுனு என்னைக்கு நீங்க புரிஞ்சிக்கப் போறீங்களோ. அரசியல்ல மிரட்டி உருட்டி பயம்புறுத்தி உங்க காரியத்தை சாதிக்கிற மாதிரி எங்ககிட்டயும் சாதிக்கலாம்னு நினைச்சி பகல் கனவு காணாதீங்க”. நரேன் சொல்லி முடிக்கவில்லை தாறுமாறாக விழுந்த பெல்ட் அடியில் சத்தம் கேட்டு ஓடி வந்த குணவதி, “ஐயோ.. என் புள்ள.. தயவுசெய்து அவனை விடுங்க எதுக்கு இப்டி தோளுக்கு மேல வளர்ந்த பிள்ளைய மாட்ட அடிக்கிற மாறி அடிக்கிறீங்க. ஐயோ பிள்ளைக்கு வலிக்குமே.. விடுங்க அவனை..” அழுகையோடு பதறி தடுக்க வந்தவரை, “வாடி வா.. போடற சோத்த தின்னுட்டு அடங்கி ஒடுங்கி மூலைல உக்காந்து இருக்காம, ஆளில்லாத போது என் பையன்கிட்ட கண்டதையும் பேசி மயக்கி, என் கட்டுப்பாட்டுல இருந்தவனை உன் பக்கம் இழுக்கலாம் நெனச்சிட்டியா. பிச்சக்கார நாயே என் பேச்சை மீற ஒனக்கு எவ்ளோ தைரியம் இருக்கனும்”. அவருக்கும் சேர்த்து சாராமாறியாக விழப் போன அடியை, அதுவரை அவர் அடிக்கும் போது மருத்துப்போன மரமாக நின்றவன், சட்டென இடையில் புகுந்து அவ்வடிகளை வாங்கிக் கொண்டான் நரேன்.
“இப்ப எதுக்கு ப்பா.. அவங்கள அடிக்க போறீங்க. அவங்க என்கூட வரமாட்டேனு தான் சொன்னாங்க, நான் தான் நேத்ராக்கு கொஞ்சம் உடம்புக்கு முடியாம போச்சேனு அவளுக்கு உதவி பண்ண அவங்கள வற்புறுத்தி அழைச்சிட்டு போனேன். தப்பு எம்மேல தான் என்னை அடிங்க” என்றவனை தீயாக முறைத்தவர், “என்ன டா புதுசா அவளுக்கு வக்காலத்து எல்லாம் வாங்குற, அந்த அளவுக்கு போயாச்சா”. எகத்தாலமாக கேட்டிட.
“உங்க பேச்சை மீற என்னைக்கும் நான் நினைச்சது இல்ல, தேவை இல்லாம நினைக்க வச்சிடாதீங்க”, இரும்பாக மொழிந்தவனாக அங்கிருந்து செல்லும் முன், பரமானந்தம் கண்ணெதிரே குணவதியின் அறையில் அவரை பாதுகாப்பாக விட்ட பிறகே வீட்டை விட்டு வெளியேறியவன், இரவு நடுநேரத்தில் குடித்து விட்டு முழு போதையில் தள்ளாட்டமாக சென்றதோ ஸ்ருதியின் வீட்டுக்கு.
கதவை திறந்தவள் அதிர்ந்து போக, "ஏ..ஏய்.. உன் மூஞ்சிக்கெல்லாம் கல்யாணம் ஒரு கேடா டி.. அதுவும் அந்த காண்டாமிருகம் கூட" போதையில் குளரலாக பேசியவன் நிற்க கூட நிதானமின்றி அவள் மீதே மட்டமல்லாக்க விழுந்தவனை இன்னும் வியப்பு குறையாமல் கண்டவளின் பஞ்சி உடல் அவனது திடமான ஜிம் பாடியை தாங்க மாட்டாமல் வெடவெடவென அவனுக்கடியில் நடுங்கிக் கொண்டு இருந்தது.
தொடரும்.

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 31
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.