• வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
Administrator
Staff member
Messages
169
Reaction score
145
Points
43
அத்தியாயம் - 32

வெங்கட்டும் காவேரியும் பாட்டியிடம் சொல்லிக்கொண்டு வீட்டின் அருகே இருந்த காலியான இடத்தில் பாதியளவில் கட்டிவிட்டு சென்றிருந்த காம்பவுண்ட் பின்னே நின்றிருந்தனர் தனிமையில்.

"என்ன மச்சா வந்ததுல இருந்து அமைதியாவே நிக்கிற. ஏதாச்சி சொன்னா தானே மேற்கொண்டு என்ன பண்றதுனு யோசனை பண்ண முடியும்"

அண்ணாந்து அவன் முகம் பார்த்து மென்மையாக வினவினாள் காவேரி.

"அதான் நான் வரறதுக்கு முன்னாடியே உன்னோட புது பாட்டிகிட்ட எல்லாத்தையும் பேசி முடிவெடுத்து வச்சுட்டியே. இதுக்கு மேல நான் என்ன பேசணும்னு எதிர்பாக்குற"

சற்றே சிடுசிடுப்பாக வெளிவந்த குரலுடன் அவன் முகத்தை திருப்பிக்கொண்டதை பார்த்து பரிதவித்து போனாள் பாவை.

"ஐயோ மச்சா.. எதுக்கு இப்டி தப்பா புரிஞ்சிக்கிற. ந்நா எதுவும் பாட்டிகிட்ட சொல்லல. அவையாளாதே எம்மேல உள்ள அக்கறைல அப்டி பேசிப்புட்டாவ. நீயி கோச்சிக்காத வேணும்னா வா ந்நா இப்பவே பாட்டிக்கிட்டக்க சொல்லிட்டு உங்கூட வரேன்"

அவசரமாக அவன் கைப்பற்ற, பட்டேன் உதறி விட்டான் அவளை.

"என்ன மச்சா.." புரியாமல் விழித்தாள் காவேரி.

"என்ன டி நான் உம்மேல ஆரம்பத்துல இருந்து அக்கறை காட்டலைன்னு சொல்லி காட்றியா.. நான் கூட உன்ன என்னமோனு நினைச்சேன் டி. ஆனா நீ நேக்கா காய் நகர்த்தி, ஆரம்பத்துல உன்ன நான் கூட சேர்த்துக்காம விட்டதை எல்லாம் யாரோ ஒருத்தன் பாட்டிகிட்ட சொல்லி என்ன அவமானப்படுத்திட்டேல்ல.."

வா என்றதும் எதைப்பற்றியும் யோசிக்காமல் தன் கரத்தை பிடித்துக்கொண்டு பூனைக்குட்டி போல் உடனடியாக ஓடி வராமல், தன்னை நம்பாது யாரோ ஒரு மூன்றாம் மனுஷி சொல்வது தான் சரி என்று நின்றவள் மீது கோபமோ!
அல்லது ஆரம்பத்தில் தான் அவளை அம்போவென விட்டு தவறு செய்ததில் தன்மீதே உண்டான கோபமோ!

ஆகமொத்ததில் அவன் சூழ்நிலை எதுவுமே சரிஇல்லை. தொலைந்த தங்கையும் இன்னும் கிட்டவில்லை, குடும்பத்தில் மகிழ்ச்சியும் இல்லை. கொலைகாரனை கண்டுபிடிப்பதில் டென்ஷன் என அந்த கோபம் எல்லாம் ஒன்றுசேர வார்த்தை மெல்ல மெல்ல தடித்தன உரியவளிடம்.

"என்ன மச்சா பேசுற ந்நா போயி ஒன்னைய அப்டிலாம் நெனைப்பேனா. இத்தனை நாளும் எனக்கு ஆதரவு குடுத்து என்னைய அவங்க சொந்த பேத்தி போல அன்பா பாத்துக்கிட்டாய்ங்க. அந்த எண்ணத்துலதே அவையகிட்ட ஒன்னையபத்தி சொன்னேன் அதுவும் தப்பா எதுவும் சொல்லல மச்சா.

ஒன்னைய அவமானப்படுத்த நெனச்சேன்னு சொல்றது எல்லாம் பெரிய வார்த்தை. எனக்கு கஸ்டமா இருக்கு"

வருத்தமாக அவனுக்கு புரிய வைக்க நினைக்க, அதை அவன் காதில் வாங்கினான் இல்லை.

"சும்மா நடிக்காத டி. அந்த பாட்டி சொல்றத பாத்தா என்னவோ நான் உன்ன தனியா கூட்டிட்டு போயி கெடுத்து சீரழிச்சி நடுரோட்டில நிறுத்திட்டு போய்டுவேன்ற மாதிரி பேசுது. நீயும் என்னவோ அதுதான் உண்மைன்ற மாறி அவங்கல பேசவிட்டு வேடிக்கை பாக்குற. அந்த அளவுக்கு நம்பிக்கை இல்லாதவ என்ன இதுக்கு என்னை காதலிச்சி ஆந்திரா வரைக்கும் தேடி ஓடி வந்த.

உன் ஊர்லே உன் தாத்தா சொல்றவனை கட்டிக்கிட்டு வாழ வேண்டியது தானே"

சிடுசிடுவென சீற்றத்துடன் அவளை நோகடிக்கும் பழைய வெங்கட்டாக யோசிக்காமல் வார்த்தை சிதறவிட்டு வெறுப்பைக்கொட்ட, அவன் பேச்சில் ஸ்தம்பித்து நின்றுவிட்டாள் காவேரி.

"யோவ்வ்.. போதும் இதுக்கு மேல வார்த்தைய விடாத. ந்.நீயி பேசுற பேச்சிக்கு எனக்கு எப்டி என்ன பதில் பேசணும்னு கூட புரியல அந்த அளவுக்கு மனசு வலிக்குய்யா.. சொன்னா புரிஞ்சிக்கோ.."

கண்களின் திரை மறைக்க கண்ணீர் முட்டி குரல் நடுங்கியவளின் மனதை அவன் இருந்த டென்ஷனில் உணரவே முயற்சிக்கவில்லை.

"ஆமா எல்லா வலியும் உனக்கு மட்டுந்தா இல்ல. என் குடும்பத்துல ஆயிரம் பிரச்சனை இருந்தாலும் அதையெல்லாம் ஓரம் கட்டி வச்சிட்டு உன்ன போய் தேடி வந்தேன் பாரு என்னை சொல்லணும் டி.

அதானே என்னதான் நாய குளிப்பாட்டி நடு வீட்ல வச்சாலும் அது புத்திய தானே காட்டும்.
நீ எதுக்காக எங்கூட வராம இந்த நாடகமாடுறனு நேக்கு நன்னாவே புரிஞ்சி போச்சி. எல்லாம் அவனுக்காக தானே, நீ இங்க வந்த நாளுல இருந்து அவன் தானே தங்க தூங்க திங்க உனக்கு பாத்து பாத்து எல்லாம் பண்றான்.

என்ன இருந்தாலும் நான் உன்ன எக்கேடோ கெட்டுப்போன்னு விட்டவன் தானே, அதான் அவனை பிரிஞ்சி எங்கூட வர நோக்கு விருப்பம் இல்ல.

உனக்கு நல்ல தோதான இடமா இங்க அமஞ்சி போச்சி, பாட்டி துணையோட என்ன வேணாலும் பண்ணலாம்"

அவனையும் அறியாமல் பேசிய சில தடிமனான வார்த்தைகள், மதனை நடுவில் வைத்து இருப்பொருள் பட பேச்சாக மாறியநொடி அவன் காக்கி சட்டையை ஆவேசமாக பற்றி இருந்தாள் காவேரி.

"யாரை பாத்து என்ன வார்த்தை பேசுற.." கண்கள் இரண்டும் கோவைப்பழமாக கோபத்தில் சிவந்து உருல, அவன் உதிர்த்த வார்த்தைகள் கத்தியின்றி ரத்தம் சிந்திய இதயம் மீண்டுமொருமுறை காதலில் தோற்றுப்போனது.

"நீயி விரட்டி விட்டதும் விலகி வந்துட்டேன்னேய்யா.. திரும்பவும் நீயே தானே வந்து ஏதேதோ பேசி என் மனசை கலைச்ச. இப்ப மறுபடியும் உன் கேடுகெட்ட புத்திய காட்டிட்டெல்ல..

இதுக்கு முன்னாடி நீயி எப்டி பேசி இருந்தாலும், என்னைய தேடிவந்து ஒத்த மன்னிப்பு கேட்டதும் மனசு உருகி இதோ இப்ப திரும்பவும் மனசு ரணப்பட்டு உம்முன்னால அழுது வடிஞ்சிட்டு நிக்கிறேன் பாரு, என் புத்தியதே செருப்பால அடிச்சிக்கிடணும்.

நீயி ஒரு புத்திகெட்ட மனுசன்யா, என்னைய மாறி இன்னும் எத்தனை பொண்ணுங்களை தரைகுறைவா நடத்தினியோ, அந்த பாவந்தே உன் வீட்டு பொண்ண எவனோ தூக்கிட்டு போய்ட்டான்"

அவள் ஆவேசமாக சொன்னளை மீறி வெளிவந்த கண்ணீர் கரைந்து கன்னத்தை தாண்டி உதடு நடுங்கியதில், பைத்தியம் தெளிந்தான் வெங்கட். தன் மீது தவறு உள்ள காரணத்தால் கைமுஷ்டி இறுகிய நிலையில் உணர்வுகள் துடிக்க அவளையே வெறித்தான் அவன்.

"க்.கட்டச்சிஇஇ.. ந்.நான்.. வ்..வேணும்னு பேசல டிஇஇ.." பேசிய வார்த்தையின் வீரியம் உணர்ந்து அடுத்த வார்த்தை பேச முடியாமல் உள்ளூர மருகிப் போனான்.

"ச்சீ.. ஒனக்கு வெக்கமா இல்ல. உன் குடும்பத்துல ஒரு பிரச்சனைனா அடுத்த குடும்பத்து பொண்ண இப்டிதே கேவலமா பேசுவியா.." கோபத்தோடு சேர்ந்து கண்ணீரும் கரைபுரண்டன.

"இல்ல டி.. வேற ஏதோ கோபம் அதை உன்கிட்ட அப்டி பேசிட்டேன். ப்ளீஸ் மன்னிச்சுடு காவேரி.." தவிப்பாக அவன் சட்டை பற்றி உளுக்கிக் கொண்டிருந்த கரத்தைப் பற்றி கெஞ்ச. இம்முறை அவள் அவனது கரத்தை தட்டிவிட்டு பின்னால் நகரவும் நெஞ்சில் பெருத்த அடி அவனுக்கு.

"அம்முஊ.." ஆண் உதடு நடுங்கியது.

"போதும்யா.. இதுக்கு மேல எதுவும் பேசாத பேசுன வரைக்கும் உன்ன நேசிச்ச என் மனச ரொம்பவே குளிரவச்சிட்ட.

என்ன இருந்தாலும் இவ அனாதை கழுத தானே, நாம எப்டி என்ன பேசுனாலும் இவளுக்கு உரைக்காது, நம்மகிட்டக்கதே நாக்க தொங்க போட்டு ஓடி வருவான்ற எண்ணத்துல தானே ஒவ்வொரு முறையும் என்னைய வார்த்தையால கூரு போடுற"

கண்ணீரை புறங்கையால் துடைத்தவளை தவிப்பாக அவன் நெருங்க ஈரடி பின் சென்றாள் அவள்.

"என்ன சொன்ன ஊர்லே இருந்து உன் தாத்தா சொல்றவனையே கட்டிக்கிட்டு வாழ வேண்டியதுதானேவா..
என் தாத்தா உயிரோட இருந்திருந்தா ந்நா ஏய்யா ஒன்னைய தேடி இம்புட்டு தூரம் ஓடி வரப் போறேன்.

அவள் விரக்தியின் உச்சத்தில் வேதனையாக சொல்ல, அதிர்ந்து போனான் வெங்கட்.

"நீயி போன மூணு மாசத்துல தாத்தா செத்து போச்சி. மீதி மூணு மாசமும் வக்கிரவாதிங்ககிட்ட இருந்து என்னைய காப்பாத்திக்கவே நாக்கு தள்ளி போச்சி. இனியும் எப்டி என் உசுரையும் மானத்தையும் காக்கனு தெரியாமதே எனக்காக நீயி இருப்பேன்னு எதை பத்தியும் யோசிக்காம இங்கன ஓடி வந்தேன்.

ஆனா இங்கன வந்ததுக்கு பொறவுதே புரிஞ்சிது, இம்புட்டு அவமானப்பட்டு எதுக்கு இந்த உசுர தக்க வச்சுக்கணும்னு"

அவளின் சோகம் இழையோடிய சொல்லில் அளவுக்கு அதிகமாக உயிர்வரை பதறி துடித்து விட்டான் வெங்கட்.

"அம்முஉஉஉ.. ஏன் டி இப்டிலாம் பேசுற. சத்தியமா நான் வேணும்னு பேசல டி. தப்பு தப்பு தப்பு.. நான் தான் தப்பு பண்ணிட்டேன். நீ எப்பேர்ப்பட்ட சூழ்நிலைல என்ன தேடி வந்திருக்கேன்னு தெரிஞ்சிக்காம விட்டு இந்த முட்டாள் பெரிய தப்பு பண்ணிட்டேன்.

என்னோட பக்கம் இருந்து என் கஷ்டங்களை மட்டும் பாத்தவன் உன் பக்கம் இருந்து எதையும் யோசிக்காம விட்டேன் டி..
உன் தாத்தா இறந்த விஷயத்தை வந்த நாளே சொல்லி இருந்தா உன்ன இவ்வளவு தூரம் தனிமைல தவிக்க விட்டு இருக்க மாட்டேனே டி"

வேதனையாக அவளை மீண்டும் நெருங்க, சுதாரித்து நகர்ந்துகொண்டவளின் இதழில் மெல்லிய கேலிப் புன்னகை.

"சொல்லி இருந்தா வாழ்க்கைப் பிச்சை போட்டு இருப்பியா..?"

"நானும் உன்ன உசுருக்கு உசுரா நேசிக்கும் போது, நான் எதுக்கு டி உனக்கு வாழ்க்கைப் பிச்சை தரணும்"

"போய்யா காமெடி பண்ணாம.. நீயி பேசுன அத்தனை வார்த்தைக்கும் சரிக்கு சரியா பேச எனக்கும் தெரியும். அப்டி பேசுனா ஒனக்கும் எனக்கும் வித்தியாசம் இல்லாம போவும். அது எனக்குதே கேவலம்.

இப்ப கூட என் தாத்தா செத்து போன விசயத்த உன்கிட்ட சொல்லி பரிதாபத்தை வாங்க நினைக்கல. என் இக்கட்டான சூழ்நிலை போக நாதி இல்லாம இங்கன கிடந்து யார்யார்கிட்டயோ அவமானப்பட்டுகிட்டு கெடக்கேன்.

வெக்கத்தை விட்டு சொல்லப்போனா செத்துப்போவ கூட தைரியம் இல்லைய்யா.. எங்கே எப்டி என் பொணத்தை தூக்கிப் போடகூட ஆளுங்க இல்லாம நாத்தம் புடிச்சி காரிமூஞ்ச கட்டையா கெடக்குமோனு பயமா இருக்கு"

என்றவள் முகத்தை மூடி அழுதவளை காவேரிஇஇஇ.. என பாய்ந்து வந்து இறுக்கி அணைத்துக்கொண்டு உடல் குலுங்கி சத்தம் வராமல் கதறிவிட்டான் விட்டான்.

"மச்.. விடுய்யா.. என்னைய தொட்டு ஒன்னைய நீயே கலங்கப்படுத்திக்காத"

அவள் சொல்லி முடிக்கும் முன் இதழை மொத்தமாக மூடி இருந்தான். அவளின் உயிர் போகும் வார்த்தைகளை தாங்கும் சக்தி இல்லாமல்.

சில நிமிடங்களில் முத்தக்கண்ணீர் ஒரு எல்லைக்கு வர, இதற்குமேலும் காவேரியை அங்கேயே தவிக்கவிட்டு செல்வானா? பாட்டியிடம் சொல்லிக்கொண்டு காவேரியை பைக்கிள் தன் வீட்டிற்கு கடத்தி இருக்க, அவளின் முரண்டு எல்லாம் அவனிடம் தோற்றுப் போனது.

ஒருமுறை எளிதாக அவனை மன்னித்த மங்கை இம்முறையும் மன்னிப்பாளா என்பதில் பெரும் சந்தேகமே!

அவனை விட்டு தப்பிக்க வழி இல்லை என்றால், பேசிய அனைத்து வார்த்தைகளுக்கும் உடன் இருந்தே தக்க தண்டனையும் கொடுப்பாள் காவேரி.

தொடரும்.
 

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 32
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
New member
Messages
7
Reaction score
6
Points
3
Nalla indha police karana vechu senju vidu kaveri....lesula vitratha avana...vaai irukunu ena venalum pesuvana ivan...
 
Messages
46
Reaction score
36
Points
18
Vitratha ma kaveri... Ivana nalla vachu seiyanum.... Naakubirundha enna vena pesa solluma...mmmm ithellam too much... Eanga writer ji ivanga pinnala lam enna suspence pls reveal pannunga ji ..mudiala....
 
Top