Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
Administrator
Staff member
Messages
283
Reaction score
302
Points
63
அத்தியாயம் - 32

"மாமா மிது நல்லபடியா நம்மகிட்ட வந்திடுவால்ல.." என்னதான் வீர் பக்கத்துணையாக ஆறுதல் சொன்னாலும், மது வாய் ஓயாமல் ஒரே கேள்வியை கேட்டிட, வீர் உர் உர்ரென முறைத்து வைத்தான்.

"இதுக்கு மேல உனக்கு பதில் சொல்ல, உன் மருமகளே நேர்ல வந்தாதேன் உண்டு.. வாய மூடிட்டு போடி, மனுசன் நெலம புரியாம சும்மா நையி நையின்ட்டு.." கடுகடுத்த வீர் துண்டை உதறி தோளில் போட்டபடி எந்திரிக்க, மது முகம் வாடியபோதும் பதட்டம் மட்டும் நீங்கவில்லை.

"மாமா.. தனியாவா போறீங்க.." காலில் செருப்பை மாட்டியவனின் கை பிடித்தாள் இறுக்கி.

"இல்ல ஊரையே திரட்டிட்டு போறேன், அடி ஏன் டி நீ வேற உசுர வாங்குற.. போயி புள்ளைங்கள கவனி, ந்நா போய்ட்டு வர்றேன்" என செல்லப் போன வீரை மீண்டும் அழைத்தாள் அவளே!

"எதுக்கும் ரகு வந்திடட்டுமே மாமா, உங்கள தனியா அனுப்ப பயமா இருக்கு" தயக்கமாக சொன்ன மனைவியை மீசையை திருகியபடி பிரிகாசமாய் பார்த்த வீர்,

"ஓஹ்.. அப்டி.. ந்நா பெத்து வளத்தவன் இன்னைக்கு எனக்கு காவல், சரிதேன்.. புள்ளைய நம்புவ, புருசன நம்ப மாட்டஅ.." சால்ட் பெப்பர் லுக்கில் கட்டிக்கோப்பான உடல்வாகுடன் இப்போதும் இளமையாக மிளிர்ந்த கணவனை சங்கடத்துடன் நோக்கிய மது,

"உங்கள நம்பாம எப்டி மாமா.. இருந்தாலும் வயசும் ஆகிடுச்சே, அந்த பயம் இருக்க தானே செய்யிது.. ஏதாவது ஒரு இடத்துல உங்கள அறியாம தடுமாறிட்டா என்னால தாங்க முடியுமா சொல்லுங்க.." கவலையாக ராகம் இழுத்த மதுவை, இடை வளைத்து தன்னோடு இழுத்து நிறுத்திய வீர்,

"மனுசனா பொறந்த எவனும் ஏதோ ஒரு எடத்துல தடுமாறதேன் செய்வான் டி.. ராவுக்கு ஏதோ கொஞ்சமா தடுமாறுனத வச்சி என்னைய எதுக்கும் லாயக்கு இல்லைனு முடிவே பண்ணிட்டயா.. இதுதேன் சாக்குனு வயசாச்சினு குத்தி பேசுற" மனைவி நெற்றி முட்டி கன்னத்தோடு கன்னம் வைத்து இழைத்தபடி காட்டுக்குரலால் அவளை அச்சுறுத்த, பயம் கொள்ள வேண்டியவள் ஐம்பத்திலும் சிவந்து போனாள்.

"இந்த குசும்புதேன் ஆகாது, இந்த நிலைமையிலும் புத்தி எங்க போது பாரு.." லேசாக அவன் நெஞ்சை தட்டி சிணுங்கலாக அதட்டிய மதுவை கண்டு புன்னகைத்த வீர்,

"எனக்கு என் புள்ள காவலா நிக்கிறது பெருமதேன், அதுக்காக அவன தனியா அலைமோதவுட்டு சும்மா வேடிக்க பாக்க என்னால முடியாது டி.. அவன் அவன் வேலைய பாக்கட்டும், ந்நா என் கணக்க தீர்த்துட்டு வர்றேன்.. தகிரியமா இரு மதூ"

சன்னமாக சொன்ன வீர், மனைவி நெற்றியில் முத்தம் பதித்துவிட்டு தனிக்காட்டு ராஜாவின் நடையில், தோரணையாக இருசக்கர வாகனத்தை கிளப்பிக்கொண்டு சென்றதோ, அம்மையாரை தேடி.

** ** **

அலைகடல் ஓசை அடங்கி, சூரிய ஒளி ஊடுருவும் ஆழ்கடலின் அமைதியான அதிசயத்தை காணவே கோடி கண்கள் போதாது.

வான் மேகம் போர்த்திய பளபளக்கும் கண்ணாடி கடலின் சலம்பும் சன்னமான ஒலியே, இயற்கையின் எழிலிசையோ!

துள்ளி விளையாடும் வண்ண மீன்களும், அதனை ஆவலாக விழுங்க பின்னால் சுற்றும் கத்தி சுறாக்களும் ஓர் அழகேன்றால், மீன்களை வேட்டையாடவே சிறகு விரித்து காற்றில் பறந்து, குசாலமாக தண்ணீரை தட்டி தட்டி வட்டமடிக்கும் கடற்பறவைகள் ஓர் அழகு.

உணவு மற்றும் இணப்பெருக்கத்திற்காக கண்டம் விட்டு கண்டத்திற்கு கடலை கடந்து, நாட்கள் கடந்து, பல்லாயிற கணக்கான மைல்கள் கடந்து, தன் இலக்கை அடைய பறந்து செல்லும் பறவைகளும், காற்றின் அழுத்தத்தில் லேசான சீற்றத்துடன் அவ்வப்போது பொங்கி எழும் ஆழ்கடலின் இயற்கை காட்சிகள் ஒவொன்றும் ஒவ்வொரு அழகோடு, எண்ணிலடங்கா வியக்கத்தக்க அதிசயங்கள் நிகழ்ந்து கொண்டிருந்த நீலநிற நடுக்கடலின் மேல்பரப்பில், ஆர்ப்பாட்டமாக ஊர்ந்து சென்றது அந்த சொகுசு கப்பல்.

உஸ்.. உஸ்.. என சுழட்டி அடிக்கும் குளுமையான உவர் காற்றே, நீளக்கடலை வர்ணித்து ஓயாமல் சங்கீதம் இசைத்திட, அதற்கு இசைந்து கொடுத்த ஜலம், ஜதி பிடித்து சலசலக்க நடனமாடி கண்கவர் அதிசத்தை நிகழ்த்தும் இயற்கையின் அழகை சொல்லிக்கொண்டே செல்லலாம்.

அத்தனை பெரிய அமைதியான பேரழகுக்குள்ளும் எண்ணிலடங்கா பேராபத்துக்கள் இருக்க தானே செய்யும்!

ஆழ்கடலின் ஆழத்தை விட ஆபத்தானது, சுயநலமிக்க ஒவ்வொரு மனிதனின் எண்ணங்களும். உணர்வுகள் கொண்ட ஆறரிவு ஜீவி மனித இனமே தவறு செய்து பொங்கும் போது, அழகையும் ஆபத்தையும் ஒருங்கே கொண்ட இயற்க்கை சீற்றத்தின் முன்னால், மனித உயிர்கள் எல்லாம் எம்மாத்திரம்!

உணர்வுகளால் பேதலித்து போன நங்கையின் கோலம் அளங்கோலமான நிலையிலும் அவள் ஆழ்மனம் என்னவோ, மன்னவன் ஒருவனைத்தான் எதிர்நோக்கி தேடி அலைந்தது.

"ஆஆஆஆஆஆ..." உணர்வு பெருகி பத்து விரல் நகங்களாலும் முகத்தை கிழித்துக்கொண்டு கத்தும் கத்தலை கேட்டால், வான் பறக்கும் பறவைகளும் இறக்கை படபடத்து அதிர்ந்து போகும்.

இத்தனை தூரம் அவன் மனைவி இங்கு போதை வீரியத்தில் துடித்து தவிக்க, அவளுக்கு மேல் சில அப்பாவி பருவப்பெண்களும், அச்சத்தில் நடுநடுங்கி அலறிக்கொண்டிருந்தனர் அதே கப்பலின் கீழ் தளத்தில்.

மிதக்கும் வாகன வழி பயணம் பம்பாய் நோக்கி. அங்கிருந்து சிவப்பு விளக்கு பகுதியில் உள்ள விடுதிக்கு தான் இந்த பெண்களை அனுப்ப இருப்பது. பொதுமகளாக வேலை பார்க்க பலரும் விரும்பியே வந்தாலும், அதில் ஒருசிலர் கட்டாயத்தின் காரணமாகவும், வற்புறுத்தலோடும் இருக்கவே தான் செய்கின்றனர்.

வாடிக்கையாளர் பலரும், தமிழ் பெண்களையே விரும்பி கேட்பதனால், ஏஜென்ட் மூலம் பல பெண்களை ஏமாற்றி இங்கு அழைத்து வர்ற படுகிறார்கள்.

எளிதாக ஏமாறும் விடயம் காதல், அந்த யுக்தி கொண்டு தான் பல பெண்களும் ஏமாந்து போவதும், ஏமாற்றப்படுவதுவும்.

அதில் பொய் காதலர்கள் மூலம் ஏமாற்றப்பட்டு, அவர்களை நம்பி வீட்டை பகைத்துக்கொண்டு ஓடி வந்த வந்த பெண்களும், பொய் காதலன் என தெரியாமல் திருமணம் வரை செய்துகொண்ட பெண்களும் தான், கண்ணீரில் மூழ்கி தப்பிக்க வழியறியாது மாட்டிக்கொண்டு இருப்பது.

அம்மையாரின் தொழிலே இதுதான். ஒரு காலத்தில் அம்மையாரும் இப்படி ஒரு சூழ்நிலையில் இங்கு வந்து சிக்கி சின்னாபின்னமாகி, பின் விரும்பியே ஏஜென்சியாக மாறியது எல்லாம் பெரிய கதை. பல இளைஞர்களை கைக்குள் போட்டு இத்தொழிலை அமோகமாக செய்து வருகிறாள்.

இடையில் நிரஞ்சனால் இடையூறு வந்தபோது சற்று அமைதி காத்து, மீண்டும் சிறப்பாக தொடங்கினாள் ஆள் பலத்துடன்.

அடிதளத்தில் உள்ள கிடங்கின் ஒரு பக்கத்தில் உணர்ச்சி போதையில் மிதுவும், மறுபக்கத்தில் வீட்டை எதிர்த்து ஓடி வந்து தானாக சிக்கிய பெண்களும் திக்கு தெரியாமல் தவித்து போக, அந்த கப்பலின் சில அடி தூரத்தில் வந்த சிறிய கப்பலின் பிடியை பிடித்தபடி, இறுகிய முகத்துடன் நின்றிருந்தான் ரகுபதி.

மனைவி போகும் பெரிய கப்பலை தொலைநோக்கி மூலம் கூர்ந்து நோட்டம் விட்டான். சொகுசு கப்பலின் அடிப்பகுதிக்குள் செல்ல பொதுவாகவே யாருக்கும் அனுமதி கிடையாது. அது கப்பல் ஊழியர்களுக்கும் டைவர்ஸ்க்கும் (divers) மட்டுமே ஒதுக்கப்பட்ட பகுதி.

எனவே வேலை பார்க்கும் ஆட்கள் மட்டும் அங்கு போவதுவும் வருவதுவுமாக இருக்க, அதிலும் சிலர் பார்வை அடிக்கடி ஒன்றிணைந்து சந்தேகிக்கும் வகையில் உள்ளதை தெளிவாக கண்டுகொண்ட ரகு,

அவர்களுக்கு மறுபக்கத்தில் தான் வந்த போட்டை கொண்டு போக சொன்னவனாக, முன்கூட்டியே தயாராக வைத்திருந்த கையிற்றின் முனையினை, அந்த கப்பலின் மீது வீசி பொறுத்தியவன்,

"பாஸே இதுக்கு மேல ந்நா பாத்துக்குறேன், சொன்னது நியாபகம் இருக்கட்டும்.. சரியான நேரம் பாத்து சிக்னல் தர்றேன் வந்து சேருங்க" அங்கிருந்தவனிடம் கூறியபடி, சொய்ங்கென கையிற்றில் தொங்கி கடினப்பட்டு கப்பல் விட்டு கப்பல் தாவி உள்ளே குதித்தவனை அங்கிருந்தவன் பார்த்த மாத்திரம், ரகுவை அடிக்க ஓடி வர்ற, அசால்ட்டாக அவன் கழுத்தை திருப்பி கடலில் தூக்கி வீசிய ரகு, சுற்றும் முற்றும் பார்த்தபடி கவனமாக உள்ளே சென்றான்.

இத்தனை முறை கடத்தியபோது கூட இவ்வளவு பாதுகாப்பு இல்லை. வீரின் மருமகளை கடத்தியதால் சற்றே பாதுகாப்பு பலப்படுத்தி இருந்தாள் அம்மையார். ஆனபோதும் ஒரு ஏளனம் இல்லாமல் இல்லை. சாதாரண விவசாயியான வீர், நடுக்கடலில் மிதக்கும் இத்தனை பெரிய கப்பலுக்குள் இருக்கும் மிதுவை கண்டு பிடித்திடவா முடியும் என்று.

சாதாரண வீரால் நிச்சயம் தன் மருமகளை கண்டுபிடிக்க முடியாது தான். ஆனால் அவன் பெற்ற சிங்கத்தை குறைவாக எடை போட்டது தான் அம்மையாரின் அழிவுக்கு காரணமாக அமையப்போகிறது. இதோ அத்தனை பெரிய காப்பலுக்குள் ஒற்றை ஆணாக உள்நுழைந்து விட்டானே!

அது தெரியாத அம்மையாரும் அவள் மகனும், அடுத்த சுற்று பெண் வேட்டைக்கு இளைஞர்களை தாயார் படுத்தும் வேலையினை இறுதி தொடக்கமாக ஆரமித்து இருக்க, தோள் துண்டை உதறியபடி உருமும் புலியாக வந்து நின்ற வீரை கண்டு திகைத்து போயினர்.

"வீரா நீயா.." அம்மையார் முதலில் திகைத்தாலும் பின் ஏளனம் வழிந்தது கண்ணில்.

"என்னைய எதிர்பாக்கலைல சுப்புலட்சுமி" அவளுக்கு மேல் ஏளனம் வழிந்த பார்வையோடு, சீற்றமாக கை காப்பை மேலிழுத்து விட்ட வீரை, பீடாவை மென்றபடி பார்த்த சுப்பு, ஒன்றை காலை இருக்கையில் குத்த வைத்து தெனாவட்டாக அமர்ந்தாள்.

(முதல் பாகம் படிச்சவங்களுக்கு இந்த சுப்பு யார்னு தெரியும்)

** ** **

"வ்..வீராஆ.. டேய்ய்.. ம்.மாமா.. எங்க டா இருக்க.. சீக்கிரம் வந்து என்ன அள்ளி எடுத்துக்கோ மாமாஆஆ.. முடியலடா.." அணிந்திருந்த மேலாடையினை ஒரே கிழியாக கிழித்து, உணர்ச்சி தாங்காது ஏதேதோ புலம்பியாவளின் ஒலி மன்னவன் செவியினை எட்டியதோ!

ஒவ்வொரு அறை கதவாக கவனமாக திறந்து பார்த்தபடி வந்தவன், கடைசியாக திறந்த அறைக்குள் இருந்த மனைவியின் கோலம் கண்டு ஒரு ஷணம் துடித்து போனது மெய்.

"மிதூஉஉஉ.." பட்டை உதடு மட்டும் அவள் பெயரை பரிதவித்து முணுமுணுக்க, கதவை சாற்றி விட்டு மனைவி நோக்கி ஓடியவன் இடையில் அவளே பாய்ந்து அமர்ந்து, கால்களை அவன் பின்னோடு சுற்றி பின்னிக்கொண்டவளாக, ரகுவின் முகம் முழுக்க ஆவேச முத்தத்தை பதிக்க தொடங்கி இருந்தாள்.

"மாமா.. வந்துட்டியா டா.. இங்க பாரு டா உன் பொண்டாட்டி நீ இல்லாம எப்டி தவிச்சு போயிருக்கேன்னு, வா மாமா.. வந்து என்ன கண்டபடி கட்டிப்புடி.. இச்சா குடு.. இங்க இங்க ஏதாச்சி பண்ணு மாமா.. ரொம்ப முடியல.. ஆசைல அடி வயிறு நடுங்குதுடா.."

தன் வசம் மறந்தவளாய், கழுத்தில் கோர்த்த மென்கரங்கள் அவன் பின்சிகையினை இறுக பற்றி கண்டம் செய்திட, நீண்ட ஆண் கழுத்தில் முகத்தால் முட்டி ஏதேதோ செய்து, பச்சையாக உடல் இச்சை கேட்டு உளறி, முழு ஆணாக நின்றிருந்தவன் மனதையே கலங்கடித்தாள் மிதுஷா.

"மிதூ.. ஷ்ஸ்ஸ்.. அமைதியா இரு டி.." அவள் முதுகை வருடி தந்து சீராக்க முயல,

"நோ.. இப்பவே நீ வேணும் வா.." ஆவேசமாக அவன் சட்டையை கிழிக்க முற்பட்டவளின் கரத்தை இறுக்கிப் பிடித்தான் ரகு.

"அன்னைக்கும் இப்டித்தேன் போதைல என்னைய கண்டம் பண்ண பாத்தா, இன்னைக்கும் அதையே பண்றா குட்டிகடுகு.. இதுவே ந்நா ஆசையா தொட்டா கெடுத்துபுட்டான்னு அலற வேண்டியது.." சத்தமாகவே சலித்துக்கொண்ட ரகுவின் நினைவில், மிதுவை பார்த்த அன்றிய நாளின் நிகழ்வு தோன்றி மறைந்தது.

"டேய் டுபுக்கு.. பொண்ணு எனக்கே இவ்வளவு ஆசை இருக்கும் போது, நீ என்னடா மலைமாடு கணக்கா வேடிக்கை பாத்துட்டு நிக்கிற.. ஆம்பள தானே நீயி.. ஒழுங்கா வா.." பேசிக்கொண்டு இருக்கும் போதே உடும்பை பிடித்து அட்டகாசமாய் நசுக்கிட,

"அடிப்பாவி அரபோதநாய.. போதை மட்டும் தெளியட்டும் டி, என் ஆம்பளத்தனத்த காட்டியே உன்னைய கதற வச்சிப்புடுறேன்.." பற்களை கடித்த ரகு, மிதுவை சாந்தி படுத்த கையோடு கொண்டு வந்த மயக்க மருந்தினை அவளுள் செலுத்தி இருந்தான்.

உணர்ச்சியின் வேகம் குறைந்து, மெல்ல மயக்கத்திற்கு சென்ற மனைவியை கையில் ஏந்திய ரகு, ஓரிரு நிமிடம் வரை நககீறல் பட்டு வாடிய முகத்தை கண்டு, குனிந்து அவள் பிளந்த உதட்டினில் முத்தம் பதித்தவனாக, அந்த மெத்தையில் அலுங்காமல் படுக்க வைத்து, தன் சட்டையினை அவளுக்கு மாட்டி விட்டவன் கதவை திறக்க, மிதுக்கு அடுத்த போதையினை செலுத்த வந்திருந்த இருவரும், ரகுவை கண்டு திகைத்து விழித்தனர்.

"டேய் யார்ரா நீ.. இங்க எப்டி வந்த.." விரல் நடுங்க தூக்கி, சுட்டிக்காட்டி கத்தியவன் நெஞ்சில் முதல் குண்டு சத்தமின்றி பாய, அடுத்த குண்டு மற்றொருவன் நெற்றிப்பொட்டில் பொட்டென பாய்ந்து குருதி தெறித்து தரையில் சாய்ந்தான்.

கண்ணிமைக்கும் நொடிதனினில் இருவரையும் பிணமாக்கி, கடலில் கோரபசியில் சுற்றி வந்த சுறாக்களுக்கு இறையாக வீசிய ரகு, அடுத்ததாக கடத்திய பெண்கள் இருக்கும் கிடங்கில் நுழைந்திருந்தான்.

முண்டா பனியனுடன் புதர் தாடி மீசையோடு ரவுடி போல் உள்ளே வந்தவனை கண்டதும் பெண்கள் யாவும் மிரண்டு அலற, இடையில் கை வைத்து விரைப்பாக நின்றவனின் தோற்றம் மேலும் அச்சம்கொள்ள வைத்தது.

"இன்னும் நல்லா கத்தி அழுங்க.. இந்த சத்தம் போதலையே.. சரி உங்கள இன்னும் அலற வைக்க ஒரு விசயம் சொல்லட்டா, இன்னும் கொஞ்ச நேரத்துல பாம்பேக்கு ஷிப்ட் ஆக போறீங்க.. சும்மா இல்ல சுகத்தை கொடுக்குற பொதுமகளா, ஒவ்வொரு நாளும் நாஸ்திதேன்.. எம்புட்டு பேத்து வருவானுங்க போவானுங்க அதெல்லாம் கணக்கே இல்ல..

ஐய்யோ அம்மானு கத்தினாலும் கதறினாலும் ஒன்னும் வேலைக்கு ஆவாது.. கந்த கோலமாக்காம விடமாட்டானுங்க கண்ணுங்களா.." அரக்கனாக சொல்லி சிரித்தவனை கண்டு பீதி அடைந்தனர் அனைவரும்.

"என்ன பயமா இருக்கா.. ஹா..ஹா.. பயம் இருக்கணும்ல.. நெஞ்சி பதறி துடிக்கணும்ல.. இல்லைனா இத்தனை தூரம் கடத்திட்டு வந்ததுக்கு என்ன மரியாதை சொல்லுங்க.." கர்ஜிக்கும் குரலால் பெண்களை பதற வைக்க, ஒவ்வொரு பெண்ணின் முகத்திலும் அப்பட்டமான திகில் பரவிக்கிடந்தது.

"ப்ளீஸ் எங்கள ஒன்னும் பண்ணிடாதீங்க அண்ணா.. நாங்களே காதல் துரோகத்துல மனசளவுல செத்து நொந்த அதிர்ச்சியே இன்னும் தீரல, அதுக்குள்ள இங்க வந்து மாட்டிட்டு இருக்கோம்.. உங்கள எங்க அண்ணனா நினைச்சி கெஞ்சி கேக்குறோம், தயவுசெய்து எங்கள காப்பாத்துங்க அண்ணா, எங்க அப்பா அம்மா காலுல விழுந்தாவது அவங்களோட போயி சேந்திடுறோம்.."

பெண்களின் பரிதாப அழுகையில் ரகு ஒவ்வொரு பெண்ணையும் கூர்ந்து பார்த்தான். அதில் ஏழு எட்டுக்கும் மேற்பட்ட பெண்களின் கழுத்தில் மஞ்சள் கிழங்கு கோர்த்த புதிய தாலி தொங்கியதை கண்டு, வெறியாக கை முஷ்டி இறுக்கினான் ரகு.

"வருச கணக்குல காதலிக்கிறவனே ஏமாத்திபுட்டு போற காலகட்டத்தில, ரெண்டு வாரம் மூணு வாரம் பழகின ஊர் பேர் தெரியாதவனை நம்பி, பெத்தவைங்கள தூக்கி எறிஞ்சிட்டு வந்ததும் இல்லாம, திருட்டு தாலி கட்டிட்டு இப்டி வெக்கமே இல்லாம தொங்கவுட்டு இருக்கீங்களே, கேவலமா இல்ல உங்களுக்கு எல்லாம்.." கீழ் உதட்டை கடித்தபடி எஃது குரலால் முழங்கியவனை கண்ணீரோடு நோக்கினர்.

"இப்படித்தானே உங்கள பெத்தவைங்களும் அவமானத்துல கதறி துடிச்சி இருப்பாங்க.. உங்கள மாதிரி சுயநலம் புடிச்ச மொகரைங்களுக்கு இதுவும் வேணும் இன்னுமும் வேணும்..

தனக்கு ஒரு ஆபத்து வர்ற வரைக்கும், காதால கேக்குற, கண்ணால பாக்குற ஒவ்வொரு செய்தியும் வெறும் தலைப்புசெய்தி மட்டுந்தேன்.. அனுபச்சி பாக்கும் போதுதேன், அதோட வலியும் வேதனையும் புரியும்..

இன்னைக்கு நீங்களும் அந்த எடத்துலதேன் இருக்கீங்க.. இனியாவது திருந்தி பெத்தவங்களுக்கு உண்மையா இருக்க கத்துக்கோங்க.." ரகு கடுமையாக சொன்னாலும், அதில் உள்ள உண்மை தன்மையினை உணர்ந்த பெண்கள் அவமானத்தில் உறைந்து, கண்ணீரில் கரைந்து போயினர்.

"முதல்ல அந்த மஞ்ச கையித்த அத்து வீசிப்புட்டு எல்லாரும் கண்ண தொடைங்க.." அதட்டல் பலமாக வரவும், அனைவரும் ஒருவர் முகத்தை மற்றொருவர் பார்த்துக்கொண்டவர்களாக, குனிந்து தங்கள் மார்பில் உரசிய அர்த்தமற்ற கையிற்றை கண்டு, மறு கணமே யோசிக்காமல் அறுத்து ஆவேசமாக தூக்கி எறிந்திருக்க, பெருமூச்சு விட்டான் ரகு.

இதற்கு மேலும் சிறு பெண்களை அச்சுறுத்தி அழ வைக்க நினைக்காதவனாக,
"எல்லாரும் தகிரியமா இருங்க, இங்கிருந்து உங்க எல்லாரையும் பத்திரமா அவங்கவங்க வீட்ல கொண்டு போயி சேக்கதேன் வந்திருக்கேன்..

நீங்க சொன்னது போல என்னைய உங்க அண்ணனா நினைச்சீங்கன்னா, சத்தமில்லாம என்கூட வாங்க" ஆர்ப்பாட்டமின்றி சொன்னவனை நம்புவதா வேண்டாமா என்ற குழப்பத்தில் புரியாமல் விழித்தனர் அச்சிறு பெண்கள்.

"என்ன இந்த ரவுடி பயல நம்பி எப்டி போறதுன்னு யோசனையோ!" கேலியாக காட்டுக்குரல் ஒலிக்கவும், ஒவ்வொருத்தியின் தலையும், ம்ம்.. ம்ஹும் என ஒருசேர ஆடியதில், புருவம் நெலித்தான் அலட்சியமாய்.

"சரி இதுக்கு மேல உங்க இஸ்டம், ந்நா என் பொண்டாட்டியோட எஸ்ஸாக போறேன், நீங்க பத்திரமா பாம்பே ரீச் ஆகிட்டு நல்லபடியா பொது சேவைய தொடங்குங்க.." அவர்களை ஆசீர்வதிப்பதை போல் நக்கலாக உரைத்த ரகு, வந்த வழியே செல்லப்போக,

"போகாதீங்க அண்ணா, நாங்களும் வர்றோம்.." அவசரமாக ஒலித்த ஒவ்வொரு பெண்ணின் நளிந்த குரலை கேட்டதும், திரும்பாமளே இதழ் மொட்டை விரித்தான் கர்வமாய்.

"ஹெலோ பாஸே ரெடியா" பட்டன் போனில் தான் அழைத்து பேசியது.

"ரெடி சார், நம்ம ஆட்களை அனுப்பட்டுமா.." என்றான் மறுபக்கம்.

"பாத்து பத்திரமா" என்ற ரகு, குறுக்கே மறுக்கே ஓடி வந்த சுப்புவின் ஆட்களை சுட்டும், உயிரோடவும் பிடித்தபடியே, ஒவ்வொரு பெண்ணையும் அழைத்து சென்று தான் வந்த கப்பலில் ஆட்களின் உதவியோடு பாதுகாப்பாக ஏற்றியதும் பெருமூச்சு விட்டவனாக, மனைவி நோக்கி ஓட போனவனின் பின்தலையில் பலமாக கட்டையால் அடித்து வீழ்த்தி இருந்தான் ஒருவன்.

தொடரும்.
 

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 32
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top