• வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
Administrator
Staff member
Messages
169
Reaction score
145
Points
43
அத்தியாயம் -36

வெங்கட் வீட்டில் ஒரு மூலையில் ஒடுங்கி இருந்தாள் காவேரி.

இங்கு அழைத்து வந்து மூன்று நாட்கள் கடந்து விட்டது. இரண்டு மூன்று முறை இறங்கி வந்து பரிதாபமாக மன்னிப்பு கேட்டனை கிஞ்சியும் திரும்பிப் பார்க்கவில்லை அவள்.

ஒருமுறை தெரியாமல் பேசிவிட்டான் சரி தன் மனதை கொண்ட காதலன் தானே மன்னித்தால் என்ன குறைந்து போவோம் என நினைத்து அன்று காலில் விழுந்ததும் நொடிபொழுதில் இளகிய பெண்மனம், மீண்டும் அதே தவறினை செய்தவனை மன்னிக்கும் அளவிற்கு எண்ணமின்றி ரணமாய் காந்தியது இதயம்.

இங்கிருந்து போகிறேன் என பிடிவாதமாக கூறிவிட்டாள். அதற்கு அவன் வழி விட்டான் இல்லையே!!

குழலியை தன்னோடு தக்க வைத்துக்கொள்ள ருத்ரனுக்காகவது அவள் குடும்பம் இருந்தது. ஆனால் காவேரியை தன்னோடு தக்க வைத்துக்கொள்ள வெங்கட் தன் மூளையில் துப்பாக்கி வைத்து கொண்டு மிரட்டியக்கூத்து பெரும்கூத்தாக நடைபெற்றது அன்று.

"நீ வீட்டை தாண்டினால் அடுத்த நொடியே என் மூளை சிதறி விடும்" என்று தீர்க்கமாக ட்ரிகரை அழுத்த முற்பட்டவனை எரிக்கும் பார்வையால் சுட்டுவிட்டு அமைதியாக ஒரு மூலையில் சுருண்டுக்கொண்டவள் தான்.

வேலைவேளைக்கு எங்கிருந்தாலும் அவன் வாங்கி வரும் உணவு பொட்டலங்கள் சில நேரத்தில் குப்பையில் போகும், எப்போதாவது அவள் வயிற்றுக்குள்ளும் போகும்.

ஏதாவது பேசினால் சுருக்கென அவன் நெஞ்சை வலிப்பது போல் பதிலடி கொடுப்பதை பார்த்து, அவளிடம் பேசவே அஞ்சியது ஆண் இதயம்.

காவேரியின் இத்தகைய செயல் மிகுந்த மனஅழுத்தத்தை உண்டாக்கிட, வீட்டிற்கு வரும் சொற்ப நேரங்களில் அவளின் உயிர்பற்ற முகத்தை பார்த்து நொந்து போவான் வெங்கட்.

பார்த்தசாரதிக்கும் ஓரளவுக்கு உடலில் முன்னேற்றம் கூடி இருக்க, தந்தையை அழைத்துக்கொண்டு ஆந்திராக்கு வருகிறேன் என்ற தாயை, காவேரிக்காக வரவிடாமல் செய்து, அவனே நேரில் சென்றும் ஒரு எட்டு பார்த்துவிட்டு வந்தாயிற்று.

இதற்கிடையில் குழலியை தேடும் படலம். மொத்த ஆந்திராவின் கண்ணில் விரலை விட்டு ஆட்டும் முக்கியக் குற்றவாளியான ருத்ரனை கண்டுபிடிக்கும் படலம், போதாகுறைக்கு வெட்டு குத்து கொலை கொல்லை கற்பழிப்பு என அடுகடுக்காக அவன் தலையில் விழும் பிரச்சனைகள்.

உறக்கமின்றி கண்கள் சிவந்து, தேகம் லேசாக மெலிந்து, பால்முகம் பொலிவற்று போனான்.

இத்தகைய பிரச்சனைகளால் தொடர்ந்து வெளிசாப்பாடு, அதுவும் ஆந்திர உணவின் காரம் ஒற்றுக்கொள்ளமல் வயிற்றை என்னவோ செய்வதை உணர்ந்தவன், தினமும் காலை மதியம் மாலை என சாலைக்காமல் தாலிச்ச தயிர் சாதத்தை செய்து விட்டு செல்பவனை கண்டு எரிச்சல் கொண்டாள் காவேரி.

அவனுக்காக வக்கனையாக சமைக்கோ, போர் போல் குவிந்து கிடக்கும் அவனது அழுக்குத் துணிகளை துவைக்கவோ, வீட்டை சுத்தம் செய்யவோ எதுவும் தோன்றவில்லை அவளுக்கு.

தான் ஏதாவது செய்ய முனைந்தால் ஆச்சாரம் கொண்ட வீடு தன்னால் தான் தூய்மை கெட்டுவிட்டது என்று கூட வாய் கூசாமல் சொல்வான், எதற்கு வம்பு. சும்மா இருக்க முடியாமல் வேண்டா வெறுப்பாக டிவியை ஓட விட்டு எதையாவது வைத்து பார்ப்பதும், தூங்குவதும், வீட்டிற்குள் நடப்பதும் என வேலை செய்தே பழக்கப்பட்டவளுக்கு பரபரக்கும் கையைக் கட்டிக்கொண்டு பொழுதுபோகாமல் பொழுதை கழிப்பது, மிகவும் கடினமாக இருந்தது.

காலையில் வந்த ஃபோன் காலை அட்டன் செய்து பேசியதில் இருந்தே மிகவும் பரபரப்பாக தெரிந்தவனை, பார்த்தும் பார்க்காததை போல் அமர்ந்திருந்த காவேரியிடம், பெல்ட்டை கட்டிக்
கொண்டே வந்து நின்றான் வெங்கட்.

"கட்டச்சி.." என்றவனை முறைத்த முறைப்பில் பெருமூச்சி விட்டான்.

"சர்ர்ர்ரி காவேரிஇஇ.. போதுமா.. நான் அவசரமாக ஒரு கேஸ் விஷயமா வெளிய போறேன். ஆத்துக்கு எப்போ வருவேன்லாம் தெரியாது. சாப்பாடு செஞ்சி வச்சிட்டேன். நைட் வரை உனக்கு இருக்கும் வீணாக்கம சாப்ட்ரு. கதவை நன்னா பூட்டிக்கோ ஏதாவதுன்னா இதுதான் என் நம்பர் லேண்ட்லைன்ல இருந்து எனக்கு ஃபோன் பண்ணு சரியா"

படபடவென சொல்லிக்கொண்டே சென்றவனை வெறியாக முறைத்தாள் அவள்.

"ஆமா பெரிய சாப்பாடு.. இவன் செய்ற அந்த தயிர் சோத்தை சாப்ட்டு ரத்த ஓட்டம் குறைஞ்சி சோவை வந்ததுதே மிச்சம். இதுல இவனும் அதையே சாப்ட்டு பெரிய வீரசூரன் போல கொலைகாரனை கண்டுபிடிக்க போறானாக்கும்"

மனதில் எண்ணியவள் எதுவும் வாய் திறக்காமல் டிவியில் கண் பதித்து இருக்க, விட்டால் அந்த டிவியை அடித்து நொறுக்கி விடும் கோபம் அவனுள் எழுந்தது.

"ச்சைக்.. இதுக்கு தான் இந்த காதல் கன்றாவில எல்லாம் மாட்டாம இருந்தேன். இப்ப ரொம்ப வேதனை படறேன் டி.. என் பொறுமைய ரொம்பவே சோதிக்கிற. போய்ட்டு வந்து பேசுக்கிறேன்"

பற்களை கடித்து அழுந்த முகத்தை தேய்த்துக்கொண்டவன், அவசர அவசரமாக வெளியேறி சென்றதை மௌனமாக பார்த்திருந்தாள் காவேரி.

அப்படி அவன் பைக்கை எடுத்துக்கொண்டு வேகமாக சென்ற போதுதான், சரியாக அவனை பார்த்துவிட்டு அண்ணா என்று கத்தியிருந்தாள் குழலி.

வெங்கட்டை பார்த்தும் அவனிடம் பேச முடியாமல் செய்துவிட்டானே என்ற கோபத்தில், கணவனிடம் பேசாமல் முகத்தை தூக்கி வைத்திருந்தாள் குழலி.

ருத்ரனும் அவளை பெரிதாக கண்டுகொள்ளாமல் மருத்துவரிடம் அழைத்து சென்றான்.

அவளை பரிசோதித்த மருத்துவர் காய்ச்சலுக்கு மருத்து மாத்திரைகளை எல்லாம் எழுதிக்கொடுத்ததும் அனைத்தும் கவனமாக வாங்கிக்கொண்டு மீண்டும் ஜீப்பில் அமர சொல்ல, நின்ற இடத்தில் இருந்து அசையாமல் அழுத்தமாக இருந்தவளை வினோதமாக பார்த்தான் ருத்ரன்.

"இப்டியே நின்னா என்ன அர்த்தம் வீட்டுக்கு போக வேண்டாமா வா வந்து ஜீப்ல ஏறு" ருத்ரனின் கட்டளைக்கு மசியும் மனைவியா அவள்.

"ஏய்.. உன்கிட்ட தான் சொல்றேன். இப்ப வந்து ஏறுறிய என்ன..?"

"இல்லனா என்ன பண்ணுவேள்? காலையில என் அண்ணனை பாக்க விடாம குண்டுகட்டா தூக்கிப் போட்டு வந்த மாதிரி இப்பவும் என்னை தூக்கிப் போட்டு போவேள். போங்கோ நான் உங்களோட வரலை என் அண்ணனை பாக்கணும்"

பிடிவாதம் செய்து மூக்கை உறிஞ்சிய மனைவியை அனல் விழிகளால் கூருப் போட்டான் ருத்ரன்.

"அவனை எல்லாம் இப்போதைக்கு பாக்க முடியாது. மீறி அடம் பண்ண ஸ்டேஷனோட அவனை தூக்க வச்சிடுவேன்"

மீண்டும் ருத்ரனின் கோரமுகம் கண்ட குழலியின் முகம் ரத்தப்பசை இழந்து வெளிறிப் போனது.

"இதெல்லாம் நல்லதுக்கே இல்லை சொல்லிட்டேன். நீங்க ரொம்ப ரொம்ப கெட்டவர்.. இப்ப என்ன ஆத்துக்கு தானே வரணும், வரேன். ஆனா அதுக்கு முன்னாடி என்னை எங்கேயாவது அமைதியான இடத்துக்கு அழசிண்டு போங்கோ.. என்னால கூண்டுக்கிளியா ஒரே இடத்துல அடஞ்சிகிடக்க முடியலை. ஒரே டிப்ரஷனா இருக்கு"

தலைவலியில் தலையை பிடித்துக்கொண்டவளை அழுத்தமாக பார்த்த ருத்ரன், கடற்கரையை நோக்கி ஜீப்பை செலுத்தினான்.

"ஜுரம் இன்னும் குறையல அதுக்குள்ள பீச்சிக்கு தான் வரணுமா? இன்னொரு நாள் வந்திருந்தா குறைஞ்சி போய்டுவியா.."

அலைஅலையாக சலசலக்கும் கடலை வெறித்து நின்றவளை இடைவிடாமல் கடிந்து கொண்டே இருப்பவனை உடன் வைத்துக்கொண்டு நிம்மதியாக ஒரு இயற்கையை கூட ரசிக்கமுடியவில்லையே என்ற கடுப்பில் அவனை முறைத்தாள் அவள்.

"நேக்கு இங்க தான் வரணும்னு தோணுச்சு. இப்ப என்ன உங்களுக்கு நிம்மதியா ஒரு கடலை கூட பாக்க விடமாட்டேளா. அதான் காய்ச்சலுக்கு மருந்து வாங்கியாச்சுல்ல அதிகமான போட்டு சரி பண்ணிக்கிறேன். சத்த நாழி காதை குடையாம அமைதியா இருங்கோ"

தானும் கடுப்பாக கூறிவிட்டு கடலை இலக்கின்றி வெறித்தவளை, ருத்ரன் இடைவிடாது வெறித்தான்.

"குயிலுஊ.. நேரமாச்சு போவோமா?" கைகடிகாரத்தை திருப்பிப் பார்த்தான்.

"இப்ப அவசரமா அதே ஆத்துக்கு போய் என்ன பண்ண போறேள்?" சலிப்பாக கேட்டாள் குழலி.

"உன்ன வீட்ல விட்டுட்டு நேனு சம்பவத்துக்கு போகணும்" என்றவனை உயிர்ப்பற்ற பார்வை பார்த்தாள் அவள்.

"இன்னைக்கு எங்கேயும் உங்கள விட்றதா இல்லை"

"மச்.. டென்ஷன் பண்ணாத. பீசு தப்பிச்சிடும் ஒழுங்கா வா" கடுமையாக சொன்னதோடு இல்லாமல் விருவிருவென அவளை இழுத்து செல்ல, ரிமோட் பொம்மையாக கால்கள் பின்னி நடந்தன அவன் பின்னால்.

** ** **

அவசரமாக ஸ்டேஷன் வந்த வெங்கட், மற்ற காவலாளிகள் சல்யூட் அடிப்பதை கூட கருத்தில் கொள்ளாமல் விருவிருவென தன் மேஜையில் வந்து அமர்ந்தவன் முன்னால், அவசரமாக ஒரு பைல்களை கொண்டு வந்து நீட்டினார் சிவராஜ்.

"சார் ரொம்ப நாளா நீங்க தேடிட்டு இருந்த குற்றவாளியோட சில முக்கிய ஆதாரங்கள் இதுல இருக்கு" என்ற சிவராஜ் வெங்கட் கண்ணசைவில் வெளியேறி இருந்தார்.

ஏற்கனவே ஒருமுறை திறட்டிய ஆதாரங்கள் அனைத்தும் கரியாகி போன நிலையில் இம்முறையும் அது போன்று எதுவும் நடந்துவிடக் கூடாது என்ற எண்ணத்துடன், பைலின் முதல் பக்கத்தை திறந்த வெங்கட்டின் கண்கள் அதிர்ச்சியில் அகல விரிந்தன, உள்ளிரிந்தவனின் புகைப்படத்தை கண்டு.

"இவனா..? " என்ற யோசனையோடு அப்படத்தை கையில் எடுத்தான் அவன்.

இராணுவ உடை அணிந்து கண்ணிலும் கட்டுமேனியிலும் நிமிர்வை கொண்டு பார்க்கும் யாவரும், மரியாதை செலுத்தும் வகையில், நீண்ட துப்பாக்கியை தோளில் சாய்த்து, மீசையை நீவிவிட்டு திமிர் பார்வை பார்க்கும் அந்த இராணுவ அதிகாரியின் தோற்றத்தை காண்பவர்களுக்கும் கண்ணில் கர்வம் பிறக்கும்.

ஏழு ஆண்டுகள் முன்பு வரை நாட்டின் எல்லையில், நாட்டு மக்களின் நலனிற்காக துரோகிகளை எதிர்த்துப் போர் புரிந்த நேர்மையான இராணுவ வீரனாக இருந்த ஒருவன், தற்போது ஏன் இப்படி சட்டத்திற்கு புரம்பான கொலைகளை செய்து குற்றவாளியாக மாறினான் புரியாமல் குழம்பிய வெங்கட், அடுத்தப் பக்கத்தை திருப்ப மேலும் அதிர்ச்சியில் நெஞ்சை நீவிக்கொண்டான்.

அந்த புகைப்படத்திற்கு சொந்தக்காரனோ, நாலுவழி நெடுஞ்சாலையில் பட்டப்பகலில் ஓட ஓட ஒருவனை சராமாறியாக வெட்டி சாய்த்து, முகத்தில் குருதி தெறிக்க வெறியோடு நின்றான்.

அவன் மன்மதன்.

தொடரும்.

 

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 36
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Messages
46
Reaction score
36
Points
18
Ithu Yarupa manmadhan? I thk ruthran oh? Dei ruthran enathanda un flashback ? Aana etho perusa pandran athu matum theriuuthu.... Thalai valukuthuda thalai valikudhu...
 
Top