• வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
Administrator
Staff member
Messages
169
Reaction score
145
Points
43
அத்தியாயம் - 38

அவனுக்கு முதுகாட்டியபடி ஒருக்களித்து படுத்திருந்தவளின் உடல் குலுங்குவதை வைத்தே அவள் அழுகிறாள் என புரிந்துக்கொண்ட ருத்ரன்,

'குயிலுஉஉஉ..' மெல்ல அழைத்து அவள் முதுகோடு ஒட்டிப் படுக்க,

"மச்.. எங்கிட்ட வராதீங்கோ.." தீராத கோபத்தில் கத்தி வெடுக்கென எழுந்து அமர்ந்தவளின் வயிற்றில் கரம் வைத்து அழுத்தி மீண்டும் படுக்கையில் சரியபோட, "என்ன தொடாதீங்கோனு சொன்னேன் விடுங்கோ.." கத்தலுடன் துள்ளித் திமிறினாள் குழலி.

"உங்கிட்ட வராம உன்ன தொடம நேனு எக்கடிக்கி வெல்த்துன்னானு செப்பு (நான் எங்கே போறது சொல்லு)" அழுகையில் சிவந்த கன்னத்தில் மீசைகுத்தும் முத்தம் வைத்தான் மென்மையாக.

"எங்கேயாவது போங்கோ என்னை விட்டுடுங்கோ.. ஒவ்வொரு நாளும் உங்க மனசு மாறும்னு ஏங்கி ஏங்கி காத்திருந்து ஏமாந்து போறது தான் மிச்சம். நீங்க வெளிய போகும்போதெல்லாம் வயித்துல நெருப்பைக் கட்டிட்டு உக்காந்திருக்க வேதனைய உங்களால புரிஞ்சிக்கவே முடியாது"

சுவற்றின் பக்கம் முகத்தை திருப்பிக்கொண்டு அவன் பிடியில் இருந்து எழ முடியாமல் தன்நிலை எண்ணி கண்ணீரில் கலங்கினாள்.

"ஆரம்பத்துல இருந்து உன்ன விட்டுட சொல்லி நீயும் பலமுறைக்கு சொல்லிட்ட. நானும் உன்ன விட்றதா இல்ல. அப்புறமும் ஏன் டி சும்மா சொன்னதையே சொல்லி கத்திட்டு இருக்க" காதில் மீசை முடியை உரசிக்கொண்டே, நெளிய வைத்தான் அவளை.

"உங்களுக்காக ஆசையா நான்வெஜ் சமைச்சி வச்சேன். அதை நானே உங்களுக்கு பரிமாற காத்தும் இருந்தேன். ஆனா நீங்க கொஞ்சம் கூட என் நினைப்பே இல்லாம சாவகாசமா ஆத்துக்கு வரேள். அதுவும் கொலையை செஞ்சிட்டு" வெம்பலுடன் வந்தது வார்த்தை.

"யார் சொன்னா உன் நினைப்பு இல்லாம இருக்கேன்னு. முன்னாடி எப்டியோ ஆனா இப்ப என் ரத்தம் மூளை நாடி நரம்பு மனசு முழுக்க உன் நினைப்பு மட்டும் தான் என் ஒட்டுமொத்த உடம்பையுமே ஆட்டி படச்சிட்டு இருக்கு.

நான் பண்ற தொழில் எந்த விதத்திலயும் உன்ன பலியாக்கிட கூடாதுனு ஒவ்வொரு நாளும் செத்துப் பிழைக்க வேண்டிய நிலைல திண்டாடிட்டு இருக்கேன்.

அப்டி கஷ்டப்பட்டு ஏன் இந்த தொழிலை செய்றேன்னு நீ கேக்கலாம். உன் கேள்விக்கு இப்போதைக்கு நேனு பதில் சொல்ற நிலையில இல்ல. நேரம் வரும் போது நானே சொல்றேன் அதுவரைக்கும் கொலை கொலைனு கூவாம இரு டி குயிலுஊ.."

ஆழ்ந்து சுவாசித்த ருத்ரன், வியப்பாக ஏதோ பேச வாயெடுத்தவளை பேச விடாது தடுக்கும் விதமாக இதழை சட்டென கடித்து இழுத்தவனாய்,

"அப்புறம் ரொம்ப நாள் பிறகு வயிறுமுட்ட சாப்டேன். உன் கை பக்குவம் ரொம்ப ருசியா இருச்சி குயிலுஊ.. உன் கைல என்னவோ மேஜிக் இருக்கு. நான் தான் லேட்டா வந்து உன்ன அழ வச்சிட்டேன்" பிழைக்கத் தெரிந்த மனிதன் பெண் கரத்தில் முத்தமிட்டான்.

"பொய் சொல்றேள். நான் செஞ்சதுன்னு சாப்ட்டு இருப்பேள். மத்தபடி டேஸ்ட் எல்லாம் நல்லா இருந்திருக்காதுனு நேக்கு நன்னாவே தெரியும். எப்பவும் அளவா சாப்பிடறவா பிடிச்ச சாப்பாடா இருந்தா இன்னும் கொஞ்சம் எக்ஸ்ட்ராவா சாப்பிடுவேளேன்னு ஒரு ஆர்வத்துல மட்டன் வாங்கிட்டு வர சொல்லிட்டேனே தவிர, நேக்கு அதை சகிச்சு செய்யவே வரலை"

வருத்தமாக ஏறி இறங்கும் மெல்லியத் தொண்டைக்குழியில் இச் இச் நச் முத்தங்கள்.

"உன்ன கஷ்டப்படுத்தக் கூடாதுன்னு தான் அதையெல்லாம் விட்டேன், அப்புறம் எதுக்கு தேவை இல்லாம செஞ்சி நீயே உன்ன கஷ்டப்படுத்திகிற. எனக்கு பிடிச்ச சாப்பாடு ஐட்டமாவே இருந்தாலும் அளவுக்கு மீறி எடுத்துக்குற பழக்கம் இல்ல.

அதேமாதிரி உன்னைத்தவிர வேற யார்கிட்டயும் இவ்வளவு நீள விளக்கத்தை கொடுத்து, கேக்குற கேள்விக்கெல்லாம் பதில் பேசியும் பழக்கம் இல்ல"

"ஏன் மத்தவாகிட்ட பேசினா வாயில இருந்து முத்துக் கொட்டிட்டுமாக்கு.." கண்களை உருட்டி உதடு சுழித்தாள் மாமி.

"அப்டித்தான் வச்சிக்கோயேன். வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுன்னே செஞ்சி பழகிட்டேன் அதுனால வாஇ பேச்சிக்கு எல்லாம் இங்க இடமே இல்ல. இப்பக்கூட பாரு இதுக்கு மேல உங்கிட்ட என்ன பேசுறதுன்னு தெரியாம என் கை என்ன பண்ணுதுன்னு"

மீசை ஒளிந்த சிரிப்புடன் கைகள் சேலையை கட்டவிழித்து நூலாடையில் சுற்றி இருந்த பெண்மேனியின் பொன்னேனியை தனியாக பிரித்து வெளிகொண்டு வந்தது.

"இதுக்கு மட்டும் தான் நான் தேவையா..?" கோபுரமாய் திரண்ட அங்கத்தில் உறுஞ்சும் வேகத்தில், கோபத்தையும் தாண்டி உணர்ச்சிக் குவியலாக விம்மிப் புடைத்தன மென்தேகம்.

"நேனு ஒரு இலக்கோடு உன்ன நெருங்காம நல்லப் பையனா தான் இருந்தேன். நீதான் இதையெல்லாம் மூச்சிமுட்டக் கொடுத்து பழக்கம் காட்டி என்னை கெடுத்துவிட்டது. இப்போ இதுவே ஒரு போதையா மாறிடுச்சி டி, முன்னாடி மாதிரி மனசையும் உடம்பையும் கண்ட்ரோல் பண்ணவே முடியல. இதுக்கெல்லாம் நீதான் காரணம் குயிலுஊ.." தாபம் தலைக்கு மேல் ஏறி நறுக்கென கடிக்க, கணவனின் பேச்சில் வெட்கம் பிடிங்கியது குயிலுக்கு.

"ம்க்கும்.. ரொம்பத்தான்.. இல்லனா மட்டும் நீங்க ரொம்ப ரொம்ப நல்லவரா இருந்திருப்பேள் பாரு. கல்யாணத்துக்கு முன்னாடியே என்னை காருக்குள்ள வச்சி கண்டம் பண்ண பாத்தவா தானே நீங்க" உதட்டை சுழித்தாள்.

"ஒருத்தன் முத்தம் கொடுத்தது கூட கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு மேடம் கனவுஉலகத்துல மிதந்துட்டு தானே இருந்தீங்க. அதுவும் நடுராத்திரி ரூம்குள்ள யார் வரா, என்ன பண்றான், பக்கத்துல படுத்தானா, கட்டிப்புடிச்சி முத்தம் கொடுத்தானா, வெறும் முத்தத்தோட நிறுத்தினானா, இல்ல இங்க விளக்கி அங்க விளக்கி பாத்து ரசிச்சானா, ரசிச்சதோட மட்டும் நிறுத்தினானா ஒன்னும் தெரியல.

அந்த அளவுக்கு கும்பகரணிக்கு தூக்கம் வந்தா வேறொரு உலகத்துக்கு போய்டுற. இதுல என்னை குறை சொல்றியா"

நக்கலாக கேட்டவனை விழிகள் விரிய வியப்புடன் பார்த்தாள் அவள்.

"ச்சீ.. பிராடு இவ்வளவு வேலைய திருட்டுத்தனமா பாத்திருக்கேள், அதுவும் வேற ஒருத்தருக்கு நிச்சயம் பண்ணி கல்யாணம் ஆக போற பொண்ணை. ஏண்ணா உங்களுக்கு கொஞ்சம் கூட விவஸ்தையே இல்லையா" மூக்கில் காத்தடித்து அவன் புஜத்தை குத்தி கோபத்தில் பொங்கினாள்.

"உன்ன பார்த்த அன்னைக்கே முடிவு பண்ணிட்டேன், நீ எனக்கு மட்டும் தான்னு. அப்புறம் ஏன் விலகி போகணும், தோணும் போதெல்லாம் உன்னை பாத்தா தான் அடுத்த வேலையே ஓடும்.

எம்முன்னாடியே அந்த நாய்கிட்ட நீ போன் பேசி உருகும் போது, அப்பவே போய் அந்த கிருஷ்ணாவ கொன்னு போட கோபம் வெடிக்கும். ஆனா அவனை கொன்னா மட்டும் போதுமா..? அதுக்கான நேரமும் அது இல்ல குயிலுஊ.."

நரம்பு புடைக்க கண்ணில் ஒருவித வெறியோடு சொன்னவனின் முகத்தை அந்த மங்கிய வெளிச்சத்தில் பார்ப்பதற்கு, உருமும் சிங்கத்தின் முகத்தை முக அருகில் பார்த்து உயிர் பயத்தில் வயிற்றை கலக்குவதை போன்ற உணர்வில், அடுத்து பேச வாய் திறக்கவில்லை குழலி.

அவளும் ஆரம்பம் முதல் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறாள். தன் குடும்பத்தை பற்றி பேசினால் கூட ஓரளவுக்கு அமைதியை கடைப்பிடிப்பவன், கிருஷ்ணாவைப் பற்றின பேச்சை எடுத்தாலே அசுர அவதாரம் எடுக்கும் ருத்ரனை கண்டு நா வறண்டு போகிறது.

சிறிது நேரம் இருவரிடமும் அமைதி, தோல் உரித்தப் பழமாய் தன் கண்ணெதிரில் இருக்கும் அழகு மனைவியை அப்படியே விட்ட ருத்ரன், தனது கோபத்தை கட்டுபடுத்த நிமிர்ந்து படுத்துக் கண்களை அழுத்தமாக மூடிக்கொண்டான்.

கணவனின் விலகளில், அவன் தொடுக்கைக்கு ஏங்கிய மனதோடு அவனைப் பார்த்துக் கொண்டே போர்வையை இழுத்து போர்த்திய குழலியின் மனதில் ஏகப்பட்ட விகல்பம்.

ஆனால் தன் மனதில் உள்ள சந்தேகங்களை இப்போது அவனிடம் கேட்டால் காரியமே கெட்டுவிடும் என்று எண்ணியவள், அவனை நெருங்க பயந்து உறங்கியும் போனாள் தேன்குழலி.

** ** **

இரவு பத்தரை மணிபோல் வீட்டிற்கு வந்த வெங்கட், பைக்கை சைட் ஸ்டாண்ட் போட்டு, ஒற்றை கால் தரையில் ஊன்றி மறுகால் தொங்கப் போட்டு சீட்டில் அமர்த்தவன், இதுவரை இங்கு வந்த நாளில் இருந்து நிமிர்ந்துப் பார்க்கத் தோன்றாத ருத்ரனின் வீட்டை, இன்று வெகுநேரமாக குறுகுறுவென பார்த்து பார்வையாலே ஸ்கேன் செய்தான்.

அளவான வீடுதான் என்றாலும் மிகவும் பாதுகாப்புத் தன்மையுடன் சவுண்ட் ப்ரூப் செட்டிங்ஸ் எல்லாம் செய்து, உள்ளிருந்து சின்ன சத்தம் கூட வெளிவர முடியாத அளவிற்கு வைத்திருந்தான் வீட்டை.

எப்போதாவது பார்க்கும் போது அவன் வீட்டிற்கு இரண்டு மூன்று அதற்கும் மேற்பட்ட நபர்கள் வாட்டசாட்டமாக வருவதும் போவதும் பார்த்ததுண்டு. ஆனால் உன்னிப்பாக எதையும் கவனித்திடாமல் மேலோட்டமாக பார்த்தபடி நிறையமுறை கடந்து சென்றருக்கிறான்.

போதாக்குறைக்கு அந்த தெருவில் பெரிதாக யாரும் வசிக்கவில்லை. அப்படியே வசித்தாலும் யாரும் வெளியே அதிகம் வராமல் வீட்டிற்குள்ளே இருந்து விடுவர்.

அப்போதெல்லாம் அவன் போலீஸ் மூளை இங்கு ஏதோ சரியில்லை என்று எச்சரிக்கை மணி அடித்தாலும், அவனது வேலையே தலைக்கு மேல் குவிந்து கிடக்க ஓய்வில்லாமல் ஓடிக் கொண்டிருப்பவன் நினைவில் அக்கணமே அவ்வெண்ணமெல்லாம் மறைந்து போகும்.

ஆனால் இப்போது மதனைப் பற்றிய உண்மை தெரிந்ததும், அதை தொடர்ந்து பல உண்மைகள் தெரிய வந்து விட்டது.

ரங்கன் போர்வையில் ஏழு வருடங்களாக ஆந்திராவை ஆட்டிப்படைத்த தாதா ருத்ரன் தான் என்பது வரை.

கூலிக்கு கொலை செய்யும் கூட்டம். விசாரித்தவரை காவல் அதிகாரியில் இருந்து தொழிலதிபர்கள், பெரிய பெரிய அரசியல்வாதிகள் வரை அனைவரும் அவன் கட்டுப்பாட்டில் தான் இருந்து வருகின்றனர். அவனை எதிர்க்கும் எவராகினும் கொன்று புதைத்தாலும் அவனை கேள்வி கேட்கக் கூடிய தைரியம் ஒருவருக்கும் இல்லை. அவனை காட்டிக் கொடுக்கவும் அத்தனை எளிதாக யாரும் முன்வரவில்லை.

இத்தனை இடைஞ்சலுக்கு மத்தியிலும் எப்படியோ நாயாய் பேயாய் அலைந்து ருத்ரன் தான் முக்கியக் குற்றவாளி, பலஉயிர்களை இரக்கமின்றி கொன்று சூரையாடிய கொலையாளி என கண்டுப்பிடித்து விட்டான்.

கண்டுபிடித்த கையோடு சற்றும் யோசிக்காமல் அவனை கைது செய்து, சிறைக்குள் தள்ளி அவனை பிரித்து மேய்ந்து விட வேண்டும் என்ற வெறியோடு புறப்பட்டபோது தான், பரிமளத்திடம் இருந்து வந்த அழைப்பை ஏற்று பேசியவனுக்கு மற்றுமொரு சந்தேகம் மூளையை குடைந்தது.

"ஹெலோ சொல்லும்மா.."

"மதியம் ஆச்சே தம்பி சாப்டியானு கேக்க தான் போன் போட்டேன்" சுரத்தே இல்லாமல் ஒலித்தது அன்னையின் குரல்.

"இல்லம்மா.. ரொம்ப நாளா கண்டுபிடிக்க முடியாம மூளையைக் குடைஞ்சிட்டு இருந்த முக்கியக் கொலைக் குற்றவாளிய இன்னைக்கு தான் கண்டுபிடிச்சேன். அவனை கையோட அரெஸ்ட் பண்ணி உள்ள தள்ளிட்டு தான் சாப்பாடு தண்ணிய பற்றியெல்லாம் யோசிக்கணும்"

இத்தனை மாதங்களாக சுற்றளில் விட்ட ருத்ரனை எண்ணி பற்களை கடித்துக்கொண்டான் வெங்கட்.

"அச்சோ .. என்ன பா சொல்ற. கொலை குற்றவாளிய பிடிக்கப் போறியா..? ரொம்பவே மோசமானவன்னு சொல்ற தனியாவா போறே. ஏற்கனவே உன் தோப்பனார்க்கும் உடம்பு சரியில்லை, குழலியும் என்னான்னு இதுவரைக்கும் தெரியலை.

இந்த நிலைமைல கொலைகாரனை போய் நீ தனியா பிடிக்க போறேன்னு சொல்றியே வெங்கட்டா, நேக்கு மெஞ்சல்லாம் படபடப்பா வருது.."

எங்கே மகனுக்கும் ஏதாவது அசம்பாவிதம் நடந்து விடுமோ என்ற அச்சத்தில், மூச்சிவிடாமல் பேசிய பரிமளத்தை சமாளிப்பதற்குள் நொந்து போனான் வெங்கட்.

முதல் முதலில் போலீஸ் வேலையில் சேர்ந்த புதிதில் இப்படித்தான் எதற்கெடுத்தாலும் பரிமளம் பயந்து போவாள். ஆனால் போக போக மகனின் வேலை இதுதான் என புரிந்துகொண்டு இத்தனை வருடத்தை சாதாரணமாக கடந்து வந்தவளால், அடுத்தடுத்து குடும்பத்தில் நடந்த பிரச்சனைகளில் மொத்த தைரியமும் வடிந்து, உடலும் மனமும் பலவீனமடைந்து விட்டது.

தொலைந்த மகள் எப்படியாவது தன்னிடம் வந்துசேர வேண்டும் என்ற அனுதினமும் கடவுளை பிராத்திக்கும் மனம், கையில் இருக்கும் மகனுக்கு எவ்வித ஆபத்தும் நெருங்கிவிடக்கூடாது என்றும் நீண்ட வேண்டுதலை செய்கிறது.

"அம்மா அம்மா.. காம்டவுன் நேக்கு ஒன்னும் ஆகாது. என்னை சுத்தி பாதுகாப்போட தான் குற்றவாளிய கைது பண்ண போவேன். நீங்களும் பயந்து அப்பாவையும் பயம்புறுத்தி வச்சிடாதேள். நான் போய்ட்டு வந்து போன் பேசுறேன்"

நிதானமாக பேசி வைக்கப் போக,

"வெங்கட்டா நான் அப்பா பேசுறேன் டா" பார்த்தசாரதியின் குரலில் மீண்டும் காதில் வைத்தான் போனை.

தொடரும்.
 

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 38
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Messages
46
Reaction score
36
Points
18
Aha venkatu ellathaiyum kandupudichutana? Illa ruthran kamdupidakatum nu vittutana? Kandipa rutharan ah meeri onnum panni Iruka mudiathu so ruthran oda game final vandhuduchu... Ean pannan ethuku pannan? Avan yaru ithellam inime tha therium.... Pls ji next ud sekiram kudunga... Suspence thangala....😇😇
 
Top