- Messages
- 304
- Reaction score
- 217
- Points
- 63
அத்தியாயம் - 4
"சார் இந்தியா கன்ஸ்ட்டரக்ஷன்ஸ் வர்க்க நடக்க விடாம பண்ணது, உங்க அப்பா சிவராமன் சார் தான். அந்த மைக்கேல புடிச்சி நாலு தட்டு தட்டினதுல எல்லா உண்மையும் கக்கிட்டான்." ஸ்டீஃபன் தான் அறிந்த செய்தியை தயங்கியவாறு சொல்ல எதிர் பக்கம் எந்த ரியாக்ஷனும் இல்லை.
"சார்ர்.."
"கேட்டுச்சி.." ஒற்றை பதில் கண்மூடியபடி திடமாக வெளிவந்தன.
"அடுத்து என்ன ஸ்டெப் வைக்கணும்னு சொன்னீங்கன்னா அப்படியே செஞ்சிடுவேன் சார்"
"அந்த ஆள் கதைய ஒரேடியா முடிச்சுடு" என்றவனின் பதிலில், "சார்ர்ர்.." என அரண்டு நின்றான் ஸ்டீஃபன்.
இதழ் கோணலுடன் நீல விழிகளை திறந்தவன், "முடியாதுல்ல மூடிட்டு போ அனாவசியமா பேசி என் டையத்த வேஸ்ட் பண்ணாத"
எரிச்சல் மண்டி கணீரென காது கிழிய கத்தியவனுக்கு தனக்கு சுத்தி சுத்தி பிரச்சனையை உருவாக்கும் அவன் தந்தையை கொல்லுவது எல்லாம் பெரிய வேலையே இல்லை. சிவராமனை விட மிக அதிக விஷமுள்ள கொடிய பாம்பு ஆன்ரோ தான். அவள் மீது கடுங்கோபத்தில் இருப்பவன் எப்போது சீறி வெடித்தாலும் இருவரின் உயிருக்குமே உத்திரவாதம் இல்லை. அப்படி இருக்க தற்போது அவர்களை விட்டுவைத்து இருப்பது எல்லாம் ஏதோ ஒரு காரணத்திற்காக கூட இருக்கலாம்.
விட்டால் போதுமென வெளியே ஓடி வந்த ஸ்டீஃபன் வேக மூச்சை இழுத்து விட்டவனாக அங்கிருந்து சென்றான்.
கணினியில் பரபரப்பாக தடித்த விரல்கள் வேலை செய்து கொண்டிருந்தாலும், யுகனின் நினைவலையில் மின்னல் வெட்டுவதை போல் அவ்வபோது வந்து போன அந்த அழகிய வெண்ணிலவு வட்ட முகத்தை எண்ணி உடல் விரைக்க நீலதாண்டவ விழிகள் சொக்கிப் போனான்.
"கூடிய சீக்கிரம் திரும்பவும் உன்னை பாப்பேன் பேபி. பாத்ததும் தூக்கிடுவேன் எவன் தடுத்தாலும் சரி ஏன் உனக்கே விருப்பம் இல்லனாலும் சரி நீ எங்கூட தான் இருந்தாகணும்" வில்லங்கமாக நினைத்தவனின் ஆழ்மனதில் பதிந்து போன பெண்ணவளின் பிரகாச முகத்தை கணினி திரையில் அச்சு அசலாக அப்படியே வரைந்து வைத்திருந்தான் யுகன் ஷிவேஷ்.
** ** **
"இதழ் இன்னுமா குளிச்சிட்டு இருக்க சீக்கிரம் வெளிய வாடி நானும் குளிச்சி ரெடியாகணும்" பாத்ரூம் கதவை தட்டியபடி கத்திய சரித்ராவை விடுமுறையில் ஊருக்கு சென்று வந்த மற்ற ரெண்டு பெண்களும் ஒரு மார்க்கமாக பார்த்து வைத்தனர்.
"இதழ்.. இதழ்.." மீண்டும் மீண்டும் கதவை தட்ட, "ஏய் சரித் இப்ப எதுக்கு சும்மா அவளை ஏலம் விட்டுட்டு இருக்க." ஒருத்தி தொடங்கிட,
"இதழ் என்ன சின்னக் குழந்தையா கொஞ்ச நேரம் கூட அவளை தனியாவே விட மாட்ற. நாங்களும் வந்த நாள்ல இருந்து பாத்துட்டு இருக்கோம், அவளும் ஏதோ பித்து பிடிச்சவ மாதிரியே சுத்திட்டு இருக்கா. சரியா பேச மாட்டேங்கிறா. நீயும் அவ பாத்ரூம் போனாலும் பின்னாடியே போய் நிமிஷத்துக்கு நிமிஷம் அவளை கூப்பிடற, தூங்கினாலும் கூடவே இருக்க, நாங்க வந்ததும் எங்கூட இருந்த உன் டியூட்டிய மாத்தி அவகூட போக கேட்டு வாங்கிகிட்ட. என்னடி நடக்குது இங்க" இன்னொருத்தி புலம்பி வைத்தாள்.
"நீங்க நினைக்கிற மாதிரி ஒன்னும் இல்ல டி. அவ லவ்வர பாக்காம மேடம்க்கு ஒரே ஏக்கம், அவர் எப்போ வருவார்னு. அதான் அவளை சமாதானம் செஞ்சி கூட இருக்கேன்" தடுமாற்றத்தை மறைத்துக் கொண்டு இயல்பாக பேசிட, "அதுசரி.." என இருவரும் மெதுவாக தலையாட்டிக் கொண்டனர்.
பத்து நிமிடங்கள் கழித்து குளித்து முடித்து வெளியே வந்தவளை பார்த்து விட்டு தானும் குளித்து முடித்து தயாராகியவுடன் யமுனாவை அழைத்துக் கொண்டு வெளியே சென்றாள் சரித்ரா.
"எல்லாத்தையும் மறந்துட்டு திரும்பவும் பழைய இதழா நீ கண்டிப்பா மாறனும் இதழ். பாரு ஸ்வப்னாக்கும் லூசிக்கும் சந்தேகம் வருது. எத்தனை நாளைக்கு டி நானும் வாய்க்கு வந்ததை சொல்லி சமாளிக்க முடியும். முடிஞ்ச அளவுக்கு உன்னை நீயே தைரியப்படுத்திகிட்டு மூவ் ஆன் பண்ற வழியப் பாரு இதழ்" நடந்துக் கொண்டே யமுனாவின் காதில் கிசுகிசுத்தாள்.
"நானும் அதைதான் நினைக்கிறேன் சரித், ஆனா போனது என்னோட பரிசுத்தமான கற்பு. இதுவரைக்கும் திலீப்ப கூட என்கிட்ட க்ளோசா நெருங்க விட்டதில்ல அப்படி இருக்கும் போது யாருன்னே தெரியாத ஒருத்தங்கிட்ட என்னோட பெண்மைய இழந்ததை நினைச்சா செத்திடலாம் போல இருக்கு டி, ஐ குடின்ட் ஃபர்கெட் இட். லெட் மீ டூ வாட். (I couldn't forget it. Let me do what)"
கன்னம் தாண்டும் கண்ணீரை புறங்கை கொண்டு சிறுபிள்ளை போல் துடைத்தபடி பரிதாபமாக கேவியவளை பார்க்க பாவமாகி போனது அவளுக்கும்.
"இதழ்.. சரி விடு. அவளுங்க ஊருக்கு போயிட்டு வந்துட்டாளுங்க இப்போ நம்ம டர்ன். இங்க நீ வேலைக்கு ஜாயின் பண்ணதுல இருந்து இந்த ஹட் விட்டு நீ எங்கேயும் போனதே இல்ல. நாங்க யார் கூப்பிட்டாலும் வரவும் மாட்ட, இந்த முறை உன் மனசு ரிலாக்ஸ் ஆக எங்கூட பெங்களூர் வரியா எங்க வீட்டுக்கு போய் ஸ்டே பண்ணிட்டு வரலாம்" எப்படியாவது அவளை பழைய யமுனாவாக மாற்றிட முயற்சி செய்ய எதற்கும் பிடி கொடுத்தாள் இல்லை அவள்.
சலிப்பாக தலையை தொங்க போட்டவள், "உன்னை இந்த நிலைமைல தனியா விட்டுட்டு எனக்கும் ஊருக்கு போக பிடிக்கல டி. எங்க மம்மி போன் பண்ணா நான் வரலைன்னு சொல்லிடறேன்" இப்படி சொன்னாலாவது யமுனா வருவாள் என்று பார்த்தால் அதற்கும் வேட்டு வைத்தாள்.
"நீ என்ன பத்தி கவலை படாம ஊருக்கு போயிட்டு வா சரித், ஆண்டி நீ வருவேன்னு ரொம்ப எதிர்பாத்துட்டு இருப்பாங்க. நானும் நீ நினைக்கிற மாதிரி வேற எந்த தப்பான முடிவுக்கும் போக மாட்டேன்" வேதனை மறைத்து வலிய புன்னகைத்து சொல்லிட, சரித்ராக்கும் வீட்டில் கெடிபுடி மாதம் ஒருமுறையாவது வீட்டிற்கு சென்றாக வேண்டும் என்று.
வேறு வழியின்றி மனமே இல்லாமல் நான்கு நாட்கள் ஊருக்கு சென்றவளின் நினைவெல்லாம் யமுனாவை பற்றி தான்.
இங்கு யமுனாவோ, திலீப் அழைப்பு விடுத்த போதெல்லாம் ஏதோ போல் பேசுவது அவனுக்கும் நெருடலை ஏற்படுத்தி இருந்தது.
"என்ன இதழி, நான் எப்ப போன் பண்ணாலும் அவ்வளோ ஆர்வமா பேசுவ, இப்போ கொஞ்ச நாளாவே கவனிக்கிறேன் நீ சரியாவே என்கிட்ட பேச மாட்டேங்கிறியே! ஏன் டி உடம்பு ஏதாவது சரி இல்லையா இல்ல நான் வந்து உன்னை பாக்கலைனு எம்மேல கோவமா இருக்கியா!"
காதலியின் சோர்ந்த குரலில் அவனுக்குள் உண்டான பதட்டமும் குழப்பமும் சேர்ந்து மனதை பிசைந்தது போலும்.
"நத்திங் திலீப். இங்க தொடர்ந்து வேலை அதான் லேசா தலைவலி. நீ சொல்லு எனக்கு ஏதோ சர்ப்ரைஸ் வச்சிருக்கேன்னு சொன்னியே என்ன அது" வலுக்கட்டாயமாக பேச்சில் ஆர்வம் கூட்டினாள் யமுனா.
"ம்ம்.. இப்பவே அதை சொன்னா எப்படி அது சர்ப்ரைஸ் ஆகும். நேர்ல வந்து தான் சொல்லுவேன். அப்புறம் இதழி சும்மா வேலை வேலைனு ஓடி உன்னை ரொம்ப வருத்திக்கிட்டு எந்த வேலையும் இழுத்துப் போட்டு செய்யாதே, நல்லா ரெஸ்ட் எடு சரியா" காதலன் அக்கறையாக சொல்ல பெண்மனம் குற்றவுணர்ச்சியில் நடுங்கத் தொடங்கியது.
நாட்கள் மாதங்களாக கடக்கத் தொடங்கிட ஓரளவுக்கு யமுனாவின் மனம் லேசாக தொடங்கினாலும், ஒவ்வொரு முறையும் திலீப்பிடம் பேசுகையில் அவள் மனம் படும் பாடு அவள் மட்டுமே அறிவாள். சில நேரங்களில் துணிந்து அவனிடம் உண்மையை சொல்லி விடலாமா என்று கூட நினைத்திருக்கிறாள் ஆனால் உண்மையை சொல்ல சரித்ரா விட வேண்டுமே!
"ப்ளீஸ் இதழ். அவசரப்பட்டு உன் வாழ்க்கைய நீயே கெடுத்துகாத. திலீப் முதல்ல ஊருக்கு வரட்டும் மெதுவா நேரம் பாத்து நடந்ததை சொல்லி புரிய வைக்கலாம் புரிஞ்சிதா" ஒவ்வொரு முறையும் அவளை அடக்குவதற்குள் நாக்கு தள்ளியது சரித்ராக்கு.
காலையில் லூசி மற்றும் ஸ்வப்னாக்கு பகல் டியூட்டி முடிந்திட இரவு யமுனா சரித்ரா இருவருக்கும் வேலை துவங்கியது, சரித்ரா உணவு வகைகளை எடுக்க வந்திருக்க, யமுனா குடிலை சீரமைத்து அழகு படுத்தும் வேலையில் மும்முரமாக இருந்தவளின் பின்னிருந்து யாரோ இறுகி அணைக்கவும் இதயம் திடுக்கிட்டு சத்தமாக அலறியபடி திரும்ப கண்கள் அகல விரிந்து அதிர்ச்சியில் உறைந்து போனாள்.
"ந்.ந்..நீ.." வார்த்தை திக்கி கரங்கள் நடுங்க உயர்த்தி கண்கள் இரண்டையும் விழிநீர் மறைக்க நின்றவளைக் கண்டு சத்தமாக சிரித்து விட்டான் திலீப்.
"என்ன பேபி.. நான் வருவேன்னு நீ எதிர்பாக்கல்ல, பாத்தியா எப்படி ஸ்ட்டன் ஆகி நின்னேன்னு. எப்படி நம்ம சர்ப்ரைஸ்" கண்ணடித்து அவள் இடை இழுத்து நெற்றியில் முத்தம் வைக்க, அவ்வளவு தான் இதுவரை தேக்கி வைத்திருந்த கண்ணீர் மொத்தத்தையும் அவன் நெஞ்சில் தலை சாய்த்து, "தி.திலீப்ப்ப்ப்.." என கதறி அழுது விட்டாள் யமுனா.
"ஏய் இதழி.. என்னாச்சி எதுக்கு இப்படி அழற." அவளின் உயிரை உதற வைக்கும் கதறல் ஏன் என்று புரியாமல் ஓர் நொடி திகைத்துப் போனான்.
உணவு ட்ரேவை தள்ளிக் கொண்டு உள்ளே வந்த சரித்ராக்கும் அவளின் அழுகை சத்தம் கேட்டிட அவளும் பதறிக் கொண்டு உள்ளே வந்தவள், உள்ளே நின்றிருந்த திலீபையும் அவனைக் கட்டிக்கொண்டு அழுது கொண்டிருந்த யமுனாவையும் மாறி மாறி பார்த்து கலக்கமாக அவளிடம் வந்தாள்.
"ஏங்க நீங்க இவ பிரண்ட் தானே எதுக்கு திடீர்னு இவ்வளோ எமோஷனலாகி இதழ் அழறா. எனக்கு தெரிஞ்ச வரைக்கும் என் இதழி எதுக்காகவும் இவ்வளோ பீல் பண்ண மாட்டாளே என்னாச்சி இவளுக்கு" அவள் அழுகை கண்டு நெஞ்சம் தவித்தான் திலீப்.
"அ..அதூ.. இத்தனை வருஷம் கழிச்சி திடீர்னு உங்கள நேர்ல பாக்குறால்ல அதான் எமோஷனல் ஆகிட்டா போல" சமாளிப்பாக சொல்லி யமுனாவிடம் கண்ணை கட்டினாள் அமைதியாக இருக்கும்படி.
"அதுக்காக இப்படியா உயிர் போற மாதிரி அழுவாங்க. நான்தான் தினமும் போன்ல பேசுறேனே அப்போல்லாம் நார்மலா பேசிட்டு, இவ்வளோ லவ்வ மனசுல பதுக்கி வச்சிருந்திருக்கா பாருங்களேன். நான் கூட என்னவோ ஏதோனு பயந்தே போய்ட்டேன்" பெருமூச்சுவிட்டு அவள் தலையில் செல்லமாக கொட்டு வைக்க, அழுது சிவந்த முகத்தை உயர்த்தி நீர் வடிந்த மூக்கை துடைத்தபடி புன்னகைத்தாள் யமுனா.
"எப்பாடா சிரிச்சிட்டா என் இதழி. அவ்வளோ தூரத்துல இருந்து உனக்கு சர்ப்ரைஸ் கொடுக்கணும்னு இந்த ஹட்ட சீக்ரெட் புக்கிங் செஞ்சி, ஆசை ஆசையா உன்னை பாக்க ஓடோடி வந்தவன இப்படியா பயம்புருத்துவ ம்.." அவள் கன்னம் பற்றி நெற்றி முட்டி கொஞ்சத் தொடங்கியதும், சரித்ரா சிறு புன்னகையோடு இருவருக்கும் தனிமை வழங்கி அங்கிருந்து சென்றிருந்தாள்.
"தி.திலீப்.. ந்..ந்நா.. உன்கிட்ட.. உன்கிட்ட.. ஒரு விஷயம் ஸ்.சொல்லணும்" திக்கித்திணறியவளின் உதட்டில் ஒற்றை விரல் கொண்டு மூடியவனாக,
"நீ எதுவும் இப்போதைக்கு பேச வேண்டா, முதல்ல இப்படி உக்காரு இந்தா இந்த தண்ணிய குடி" அவளை குஷனில் அமர வைத்து தண்ணீரை எடுத்து அவனே குடிக்க வைக்க, தொண்டைக் குழியில் வீக்கம் உள்ளதை போன்ற வலி ஏற்பட்டு தண்ணீர் உள்ளே இறங்க மறுத்த உணர்வு அவளுள்.
தொடரும்.

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 4
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.