- Messages
- 313
- Reaction score
- 260
- Points
- 63
அத்தியாயம் - 46
காவேரி அப்படிக் கேட்டது தான் தாமதம் கொதித்துப் போய் கத்திய குழலியை அஞ்சாமல் ஏறிட்டாள் அவள்.
"இப்ப ந்நா என்ன அப்படி கேட்டுப்புட்டேன்னு இந்த கத்து கத்துறவ. ஒனக்கும் உன் அண்ணனுக்கும் கோவம் வந்தா யாரு என்னனு எதுவும் பாக்காம வாயில வந்த வார்த்தைகள வெசமா கக்கலைன்னா கண்ணு ஒறங்காதே.." என்று அலுப்பாக நொடித்த காவேரியை இயலாமையுடன் கண்டாள் குழலி.
"ந்நா சும்மா ஒரு பேச்சிக்கு கேட்டதுக்கே ஒன்னால தாங்கிக்க முடியலையே. அன்னைக்கு அந்த மனுசன அம்புட்டு பேத்துக்கு எதிர்க்க நிக்க வச்சி வேற ஒரு ஆம்பளைய நினைச்சிதே உங்கூட வாழ்ந்தேன்னு சொல்லும் போது இப்படித் தானே அவையலுக்கும் இருந்திருக்கும்.
இத்தனைக்கு அவையளுக்கு அடக்க முடியாத கோபம் வரும். நானே கூட இருந்து பாத்திருக்கேன். ஆனா அந்த கோபத்தை எல்லாம் உங்கிட்ட அவைய காட்டி இருக்க மாட்டாவன்னு தோணுது.
அப்படி கோவப்பட்டு ஒன்னைய அடக்க வேண்டிய விதத்துல அடக்கி வச்சிருந்தா, இந்நேரம் அவைய அப்படி ஒரு அவமானத்தை சந்திச்சி உயிரை விட்டுருக்க மாட்டாவலோ என்னவோ..!” காவேரி சொன்னது நூறு சதவிகிதம் உண்மை தான்.
ஆனால் இப்போது அதை பற்றிப் பேசி எந்த பயணும் இல்லையே!
ஆரம்பத்தில் ருத்ரன் அவளிடம் நடந்துகொண்ட அனைத்து செயல்களும் நீங்காத ரணமாக நெஞ்சில் குடிகொண்டு, தன் குடும்பத்தை பார்க்க அவன் போட்ட தடாக்கள் மட்டும் இல்லாமல், காரணமே இன்றி நல்ல மனிதன் கிருஷ்ணாவை சுட்டு அவன் குடும்பத்தை தவிக்க விட்டது.
போதாக்குறைக்கு அவன் செய்யும் கொலைகள் என அனைத்தும் அவளை அச்சுறுத்தி, அவன் மீது கோபத்தை தானே அதிகம் உண்டு பண்ணியது.
தாலி கட்டியவனை முடிந்து மட்டும் தன் வசம் இழுக்கவே அவனை திருத்த நினைத்தது. ஆனால் இருவருக்குள்ளும் உண்டான தாம்பத்தியம் அவளே எதிர்பார்க்காத ஒன்று. மிகுந்த அதிர்ச்சிதான் ஆனாலும் மனம் அவனோடு வாழ உந்தியது. அதன்படி இணக்கமாக வாழ்ந்து விட்டாள். அவனை மட்டுமே எண்ணி வாழ்ந்தாள்.
கணவனுக்கான காதல், அவள் மனதில் மலர்ந்தனவா என்று கேட்டால், காதல் இல்லாமல் அவளாக அவன் சுண்டு விரல் தீண்டவும் நெருங்கி இருக்க மாட்டாளே!
சூரியகாந்தி மலர் போல் பிரகாசமாக அவள் இதயத்தில் மலர்ந்த காதல், கோபம் எனும் கடினமான திரையின் மறைவில் முற்றிலுமாக மறைந்து போனதன் விளைவு தான், அன்று கணவனின் மனநிலைப் பற்றியும் அவன் மானத்தைப் பற்றியும் கொஞ்சமும் யோசனை செய்யாமல் அத்தனை பேர் முன்னிலையிலும், எந்த ஆணும் கேட்கக் கூடாத கொடிய வார்த்தைகள் கொண்டு அவனது இரும்பு இருதயத்தையே சில்லுசில்லாக உடைத்து அவன் மனதை கொன்றது.
பிள்ளை உண்டான மகிழ்ச்சியை கூட தன்னவனிடம் சொல்லி ஆனந்தம் கொள்ள முடியவில்லை. நிலை இல்லாமல் இதே போல் வாழ்க்கை போனால், குழந்தையின் எதிர்காலம் என்னாவது என்ற கொடிய பயம் அவள் இதயத்தைப் பிழிய, தன் கணவன் சிறைக்கு சென்றாலாவது துப்பாக்கியை கையில் எடுக்காமல் இருப்பான் என்று எண்ணி தான், அண்ணனை சந்தித்து அவனது பாதுகாப்பில் கைது செய்ய சொன்னது.
ஆனால் ஒட்டுமொத்தமாக தன் உறவையே முறித்துக்கொண்டு, கடைசியாக அவன் முகத்தினை பார்க்கும் கொடுப்பினைக் கூட கொடுக்காது, உடல் சிதறி வானுலகம் சேர்வான் என்று கனவிலும் நினைக்கவில்லையே அவள்.
எந்த குழந்தையின் எதிர்காலம் எண்ணி பயந்து, கணவனை அவச்சொல் சொன்னாளோ அதுவும் அவளை விட்டு பிரிந்து கொடுமையான நரகத்தை காட்டிவிட்டது. அவள் கோபத்தில் உதிர்த்த சொல் பின்னாளில் பலிக்கும் என்று தெரிந்திருந்தால், தனது மூச்சிக் காற்றினைக் கூட அவன் பக்கம் கடினமாக வீசி இருக்க மாட்டாளோ என்னவோ!
தற்போது அனைத்தும் கைமீறி விட்டதே! அவனிடம் மன்னிப்பு கேட்கக்கூட தகுதியற்றுப் போனாள் பாவை.
முகத்தினை மூடி தேம்பி அழுத குழலியை காணவே காவேரிக்கும் மனது வலித்தது தான். ஆனால் கோபத்தினால் அவள் செய்த பிழையில் இன்று அவளே தானே அதில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறாள்.
"ஒன்னைய கஸ்டப்படுத்த வேண்டி இதெல்லாம் சொல்லல குழலி. ஒன்னையவிட ந்நா ஒரு வயசுதே மூத்தவ. அப்படி இருக்க என் வயசு புள்ள, சந்தோசமா வாழ வேண்டிய வயசுல, இப்படி அநியாயமா அவ கோவத்தால இன்னைக்கு வாழ்க்கைய இழந்துட்டு ஒக்காந்து இருக்குறத பாத்து வேதனையாக இருக்கு குழலி.." என்று தானும் கண்ணீரைத் துடைத்துக்கொள்ள, அவளையே கட்டிக்கொண்டு கதறி விட்டாள் தேன்குழலி.
"என்னால முடியல அண்ணி.. அவா இல்லாத ஒவ்வொரு நிமிஷமும் நரகமா இருக்கு. குயிலு குயிலுன்னு என் பின்னாடியே ஆசையா சுத்தி வந்தவா இன்னைக்கு என்னை மொத்தமா தவிக்க விட்டு வெறுத்துட்டு போய்ட்டா..
நான் என்ன தப்பு பண்ணிருந்தாலும், ஏன் டி அப்படி பண்ணேன்னு கம்பீரமா நெஞ்ச நிமித்திக்கிட்டு வந்து, என் கன்னத்துல நாலு அறை விட்டாவது, கூட இருந்தே எனக்கு தண்டனை கொடுத்து இருக்கலாம். ஆனா நான் பண்ண தப்புக்கு தண்டனையா, அவா பிள்ளையை மட்டும் துணைக்கு அழைச்சிண்டு என்னை மட்டும் தனியா அனாதையா தவிக்க விட்டு போய்ட்டாளே நான் என்ன பண்ணுவேன்.."
தலையில் அடித்துக்கொண்டு ஓவென கதறி அழுதவளை சமாதானம் செய்ய முடியாமல் திணறி விட்டாள் காவேரி.
"அழாத குழலி, ஒரு கருவை ஆசையா வயித்துல சுமந்து, அது திடீர்னு இல்லைன்னு ஆனா அதோட வலி எப்படி இருக்கும்னு எனக்கும் தெரியும். நானும் அந்த கொடுமைய அனுபவச்சிருக்கேன் குழலி.." காவேரி கண்ணீரோடு உதடு துடிக்க சொல்ல, குழலி வெடுக்கென அவளை நிமிர்ந்து பார்த்தாள்.
அதேநேரம் இரவு ரோந்துக்கு சென்று விட்டு அப்போதே வீட்டிற்கு வந்த வெங்கட், தங்கையைப் பார்த்து விட்டு தனதறைக்கு போகலாம் என வந்தவன், குழலி காவேரி இருவரின் கோபக்குரலில் உள்ளே போகாமல் வேறூன்றி நின்று, இருவரும் பேசுவதை கேட்ட வெங்கட், காவேரியின் பேச்சில் கால்கள் தரையில் இருந்து நழுவி தலையை சுற்றியது அவனுக்கு.
"இல்ல சும்மா தேனு மனச மாத்த ஏதோ வாய்க்கு வந்ததை சொல்றாளா? இருக்கும். நாங்க தான் இன்னும் எங்க வாழ்க்கைய தொடங்கலயே அப்புறம் எப்படி குழந்தை..?"
அவள் சொன்னதை சாதாரணம எடுத்துக்கொள்ள எண்ணி தலையை உளுக்கிக் கொண்டவனுக்கு, அத்தனை எளிதில் அவள் பேச்சின் தாக்கம் நெஞ்சை விட்டு அகலாமல் ஒருமாதிரி படபடப்பை ஏற்படுத்தியது என்னவோ மெய்.
"என்ன அண்ணி சொன்னீங்க உங்களுக்கும் க்... குழந்தை அபார்ட் ஆச்சுதா.." குழலிக்கும் மனம் கனத்துப் போனது.
"மச்.. அது ஒன்னும் இல்ல. ந்நா ஒரு கிறுக்கி தேவை இல்லாம பேசி ஒன்னைய வேற குழப்பி விடுறேன். நீ கவலைப்படாதே குழலி, காரணம் இல்லாம அணுவும் அசையாது. போன உசுரு திரும்ப வராதுதே. அதுக்காக இப்படியே இருக்கறதும் சரி இல்லையே.." பேச்சை மாற்றினாள் உள்ளதை மறைத்து.
"எந்த பொண்ணுக்கு தான் தன் கணவன் ஒரு கொலைகாரன்னு சொல்லிக்க மனசு வரும் சொல்லுங்கோ. ஏன் அத்தனை பேரையும் கொன்னு குவிக்கிறா, எதுக்காக இந்த ரத்தவெறின்னு ஒன்னும் புரியல. வலிய போய் கேட்டாலும் சொல்லல.
என்னை உண்மையா நேசிச்சி, பிடிச்சி கட்டிக்கிட்டேன்னு மூச்சிக்கு முந்நூறு முறை சொன்னவா, ஏன் கைல கத்திய பிடிச்சேன்னு மனசு திறந்து ஒருமுறையாவது எங்கிட்ட சொல்லி இருக்கலாமே அண்ணி.
நியாயம் அவா பக்கம்னா, அதர்மத்துக்கு எதிரா நானும் அவாக்கூட துணிஞ்சி கைகோர்த்து இருப்பேனே! ஆனா ஒன்னுமே தெரியாம எப்படி அவா பண்ற கொலைகளை நான் மனசார ஏத்துக்க முடியும். அவாக்கூட எப்படி நிம்மதியா வாழ முடியும்.."
முகம் வீங்கி சிவந்த நிலையில், பூவும் பொட்டும் இழந்து கண்ணிலும் மூக்கிலும் நிற்காமல் வடிந்த நீரினை தனது முந்தானை கொண்டு மென்மையாக ஒற்றி எடுத்தாள் காவேரி.
"பாரு குழலி, முடிஞ்சி போனத நினைச்சி இப்டி வருத்தப்பட்டு ஒக்காந்து இருந்தா எல்லாம் பழையது போல சரியாகிபுடுமா சொல்லு. இப்படி ஒரே எடத்துல அடஞ்சி கிடந்தா மனசு கிடந்து அடிச்சிக்கதே செய்யும். உன் ஒடம்பும் வீணா போவும்.
இந்த அறைய தாண்டி வெளிய எழுந்து வா, எல்லார் கூடவும் சகஜமா பேசு. சிரிக்க முயற்சி பண்ணு. நீயி இப்படி அழு மூஞ்சியாவே ஒக்காந்திருந்தா உன் புருசனுக்கு புடிக்குமா சொல்லு. எங்கன இருந்தாலும் அவைய உசுரு ஒன்னைய சுத்தி மட்டுந்தே வரும்.."
"எங்கூட வா..." என கையோடு அழைத்து சென்று ஏதேதோ பேசி அவள் மனதை மாற்றி, கொஞ்சமே கொஞ்சம் குழலியை பேச வைத்தாள் சிரிக்க வைத்தாள்.
ஆனால் நினைத்த அளவிற்கு அவள் மனதினை முழுமையாக முடியவில்லை என்றாலும் துளி வெற்றி கண்டாள் காவேரி.
நேற்று நடந்த சம்பாஷனைகளைப் பற்றி நினைத்தபடியே மனைவியை பீச் பார்க் மால் என்று அழைத்து சென்றான் வெங்கட்.
பூலோகம் காணாத மங்கை போல், அனைத்தையும் அதிசயமாக பார்த்து சிறுமி போல் துள்ளி மகிழ்ந்த காவேரிப் பெண்ணை அள்ளி அணைத்து முத்தாட கொள்ளை ஆசை கொண்டது ஆண்மனம்.
"மச்சா மச்சா எனக்கு இந்த கரடி பொம்ம ரொம்ப புடிச்சி இருக்கு. வாங்கி குடேன்.."
அவள் இடுப்பளவு உள்ள நீல வண்ண டெடி பியரை கட்டி கன்னம் வைத்து இழைத்துக் கொஞ்சியவளைக் கண்டு, ஆண் நெஞ்சில் பொறாமையோடு கோபமும் பொத்துக்கொண்டு வந்தது.
"இப்ப எதுக்கு டி இந்த பொம்மை மேல ஆசை படர. இதை வாங்கி என்ன பண்ண போற..?" கடுப்பாக அவன் முகம் மாறியதை கவனிக்கத் தவறினாள் காவேரி.
"புசுபுசுனு அழகா இருக்கு மச்சா. இதை கட்டிக்கிட்டு தூங்கினா நல்லா தூக்கம் வருமாமே. நிறைய படத்துல கூட பாத்திருக்கேன். ப்ளீஜ் வாங்கி குடு மச்சா.." ஆசையாக கேட்டவளை முறைத்துப் பார்த்தான் அவன்.
"ஏன் டி இவ்வளோ பெரிய உருவமா உன்ன என் நெஞ்சில கட்டிக்கிட்டு தாங்க எப்போ எப்போன்னு இருக்கேன். என்னை வந்து கட்டிப் பிடிச்சி கொஞ்சாம, எம்மேல விழுந்து உருளாம, அந்த பொம்மைய கட்டிக்கிட்டு தூங்க போறேன்னு எங்கிட்டயே சொல்ற.
என் இடத்துக்கு இந்த கரடிக்காரனை வரவே விட மாட்டேன்டி.." பொம்மைக்கு வில்லனாக மாறிய வெங்கட், அவள் ஏக்கமாக அந்த பொம்மையை பார்ப்பதையும் பொருட்படுத்தாமல் இழுத்து சென்று விட்டான்.
"என்ன டி உம்முனு வர ஏதாவது பேசேன்.." அவள் நையநையப் பேச்சை எப்போதும் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் அவனுக்கு.
"அதே அந்த பொம்மைய வாங்கி குடுக்க முடியாதுன்னு சொல்லிட்டேல்ல பொறவு என்ன பேச..?" ஆசையாக கேட்டதை வாங்கிக் கொடுக்காத கணவன் மீது ஊடல் அவளுக்கு.
"மச்.. கரடி வச்சி விளையாடுற வயசா டி இது..?" தன்னை கண்டுகொள்ளாத மனைவி மீது நாளுக்கு நாள் அவன் கொள்ளும் ஏக்கமே எக்கசக்கமாய் கிடக்க, இவள் வேறு அவன் தவிப்பு புரியாமல் பொம்மைமேல் ஆசைப்பட்டு ஏக்கத்தை அதிகரித்து விட்டாள்.
"நீதானே சொன்ன, ஒனக்கு புடிச்சத வாங்கிக்கோடி கட்டச்சின்னு. ஆனா ந்நா கேட்டத நீயி வாங்கிக் குடுக்காம இழுத்துட்டு வந்துட்ட. எனக்கு அந்த கரடி பொம்மதே புடிச்சிது.." உதட்டைப் பிதுக்கிய மனைவி கொல்லை அழகு.
"அட ராமா இவவேற நேரம் காலம் இல்லாம உதட்டை பிதுக்கி டெம்ட பண்ணிட்டு இருக்காளே.." சைட் மிர்ரர் வழியாக பின்னால் அமர்ந்திருந்த மனைவியைக் கண்டு கண்களில் நிரப்பினான் வெங்கட்.
அவள் கரத்தை எடுத்து தன் வயிற்றில் அழுத்தி சுற்றிக் கொண்டவனின் செயல், பெண்ணுக்கும் வெட்கம் கொள்ள வைத்தது.
"மச்சா, அந்த கரடி பொம்மைய வாங்கி குடுடேன்.." அவன் முதுகோடு நெருங்கி, செவிதனில் மூச்சுரச கேட்டவளின் நெருக்கத்தில் கிளர்ந்து போனான் ஆணவன்.
"அமைதியா வா டி. அப்புறம் ரோடுன்னு கூட பாக்க மாட்டேன் அடிச்சிடுவேன் பாத்துக்கோ.."
அவன் சொன்னதன் அர்த்தம், கிஸ் அடிப்பதைப் பற்றி. அவள் புரிந்து கொண்டதோ கோபத்தில் கை நீட்டுவதை பற்றி. அதில் உதட்டை சுழித்து மீண்டும் முகத்தை தூக்கி வைத்துக் கொண்ட காவேரியை மெல்லியச் சிரிப்போடு பார்த்து வீட்டிற்கு அழைத்து வந்தான்.
இன்று எப்படியாவது தன்னவளின் மனதில் உள்ள ரகசியங்களை அறிந்துக்கொள்ளும் நோக்கத்தில் முழுமூச்சுடன் இறங்கி இருந்தான் வெங்கட். இதுநாள் வரை தான் மட்டுமே அறிந்து அனுபவித்த வலி நிறைந்த ரகசியத்தை கணவனிடம் மனம் திறப்பாளா காவேரி?

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 46
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.