• வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
Administrator
Staff member
Messages
170
Reaction score
146
Points
43
அத்தியாயம் - 5

தந்தையைக் கழட்டி விட்டு அண்ணனும் தங்கையும் நேராக ஐஸ்க்கிரீம் பார்லருக்கு சென்று விட்டனர். அதுவும் குழலியின் வேலை தான், புதிய ஊருக்கு வந்ததில் இருந்து வெளியே எங்கும் செல்லாமல் இருந்ததை சோகமாக அண்ணனிடம் சொல்ல, தாங்குமா அண்ணன் மனம். தங்கை கேட்ட அணைத்து வகை பனிக்கூழ்களையும் இன்முகத்தோடு வாங்கிக் கொடுத்தான் வெங்கட்.

ஆனால் அங்கு தான் ஒரு தவறு நடந்து போனது. அவள் ஆர்வமாக ஐஸ்க்கிரீமை ருசித்து உண்டு கொண்டிருந்த போது காவல் நிலையத்தில் இருந்து அழைப்பு வந்து விட்டது அவனுக்கு, அதை ஏற்று காதில் வைத்தவன் தான் முக்கிய கேஸ் விடயமாக மணிக்கணக்கில் பேசிக் கொண்டே போக, அதில் ஆத்திரம் கொண்ட குழலி பைக்கை பஞ்சராக்கி விட்டு ரெடி ஜூட் விட்டுவிட, காக்கி சட்டை மச்சானும் துரத்திக் கொண்டு ஓடி வர, கையில் சிக்காமல் போக்குக் காட்டியது சில்வண்டு.

"அம்மாஆஆ.. காப்பாத்துங்கோ.." தெரு முக்கில் இருந்து தொண்டை கிழிய கத்திக் கொண்டு ஓடி வரும் குழலியைக் கண்டு தலையில் அடித்துக் கொண்டாள் பரிமளம்.

"அட பகவானே, அங்க தான் இதுங்க சேட்டை தாங்காது இங்கேயும் தொடங்கிடுத்துங்களா. ஏய்.. ஏய்.. எதுக்கு டி இப்டி தலை தெறிக்க ஓடி வர்ற. யாராச்சி பாத்தாக்கா என்ன நினைப்பா." அதட்டலாக பரிமளம் கத்துவதை எதையும் காதில் வாங்காதவளாக, "அண்ணா ப்ளீஸ் அடிக்காதேள், என்ன நீ தனியா விட்டுட்டு போன் பேசிண்டு இருந்தது தப்பு. அதுனால தானே டையர பஞ்சர் செஞ்சேன். திரும்ப அடிச்ச அப்புறம் உன் போனை தூக்கி போட்டு உடைச்சிடுவேன் பாத்துக்கோ" பரிமளத்தின் பின்னால் சேஃப்டியாக நின்று அவர் தோளைப் பற்றிக் கொண்டு கபடி ஆடினாள் அண்ணனிடம்.

"ஓஹ்.. என் போனை வேற உடைப்பியா நீ. அம்மா நடுவுல நின்னு அவளை காப்பாத்த முயற்சி பண்ணாம நகருங்கோ, இன்னைக்கு அவளை சும்மா விட்றதா இல்ல." நடுவில் அப்பாவியாக மாட்டிய பரிமளத்தின் தலை கிறுகிறுத்துக் கொண்டு வந்தது.

"ஐயோ.. பெருமாளே.. இதென்ன நடு ரோட்டுல நின்னு கூத்து. ஏண்ணா.. உள்ள என்ன பண்றேள் இங்க வந்து இதுங்கள அடக்கி உள்ள கூப்ட்டு போங்கோ." ஒரு கையால் தலையைப் பிடித்துக் கொண்டும் மறுக்கையால் கோலப்பொடி கொட்டிடாமல் கெட்டியாக பிடித்துக் கொண்டும் மம்மிக் கத்த, பார்த்தசாரதி ஸ்லோமோவில் உள்ளிருந்து வர என்று ஒரே ரகளையாக செய்து கொண்டிருந்த குடும்பத்தை வினோதமாக பார்த்து கொண்டிருந்த ருத்ரங்கனின் பார்வை, நிலைத்து நின்றதோ தேன்குழலியின் சொக்க வைக்கும் வதனத்தில்.

அதிலும் அந்த கானக்குரல், தித்திப்பு கரைசயாய் இதமாக அவன் செவியை நனைந்து, இரும்பு மனிதனின் இதயத்தில் மரகததேன்ப் பாய்ந்ததே!!
துள்ளி துள்ளி குதிக்கும் அழகான மான்குட்டி அவளை பார்க்கப் பார்க்க ஜிவ்வென தாக்கும் மின்சாரத்தில் சிக்கி மீள முடியாத மாயை உருவாகிப் போனதோ!!

பால் பற்கள் தெரிய அங்கும் இங்கும் ஆட்டம் காட்டி சலங்கை முத்துக்கள் சிதறும் சிரிப்பொலியை காலம் முழுக்க சிரிக்க வைத்தே கேட்டு கொண்டு இருக்கலாம். வட்டமான முகத்தில் தக்காளிப் பழம் போல் பொலிவோடு தளத்தளவென இரண்டு கன்னங்கள், மீன் விழிகள் உருண்டு, ஜீராவில் ஊர வைத்த இதழ்கள் கண்டபடி அசைந்து புத்தனையும் மோகம் கொள்ள வைக்கும். வளைவு நெளிவுகளை கட்சிதமாக இறுக்கிப் பிடித்திருந்த மரூன் நிற சுடி அவளின் ரோஜா நிறத்தை மேலும் அழகு சேர்த்து அவனது சொரணையற்ற மனதை கூட கொல்லையிட வைத்ததோ!!

"டேய்.. வெங்கட்டா.. என்ன இது ரோட்ல நின்னுட்டு அலம்பல் பண்ணிட்ருக்க. இவ்ளோ நாழி குழந்தைய கூட்டிட்டு போய் பொறுப்பில்லாம ஊர் சுத்திட்டு வரலாமா?" பார்த்தசாரதி கேட்டிட, "என்ன இந்த அராத்து ஆனந்தி குழந்தையா! ரொம்ப நன்னா பேசுறீங்கோ ப்பா.. எனக்கா பொறுப்பில்லை.. கொந்தலித்தவன், ஐஜி கிட்ட போன் பேசிட்டு வறதுகுள்ள பைக் டையர பஞ்சராக்கிவுட்டு ஓடி வந்துட்டா உங்க குழந்தை." காவலனே தந்தையிடம் சிறுவனாக புகராளிக்க, நாக்கை துருத்திப் பழிப்பு காட்டிய குழலி பார்த்தசாரதியின் பார்வை அவள் பக்கம் திரும்புவதை உணர்ந்து அப்பாவி பிள்ளையாய் மாற்றிக் கொண்டாள்.

"என்னமா.. அண்ணாவோட பைக்க பஞ்சர் பண்ணியா? இதெல்லாம் தப்பிலையோனோ!" மெல்ல அவள் தலை வருடி விட்டு அவர் அதட்டிட, ம்க்கும்.. இப்டி கொஞ்சினா எப்டி அடங்குவா உள்ளுக்குள் பொறுமினான்.
"தப்பு தான் ப்பா. இனிமே அப்டி செய்ய மாட்டேன்" பாவமாக சொல்லி தந்தையோடு பேசிக் கொண்டே எதையும் கண்டுகொள்ளாமல் நைசாக எஸ்கேப் ஆன குழலியை சலிப்பாக கண்டான் வெங்கட்.

"டேய்.. என்ன அங்க பார்வை அதான் அவ போய்ட்டால்ல நீயும் போயி கொஞ்ச நாழி ரெஸ்ட் எடுத்துட்டு, பைக்க பஞ்சர் ஒட்டி எடுத்துட்டுவா. புது வண்டி வேற எவனாவது நைசா தள்ளிண்டு போய்ட போறான்" பரிமளம் சொல்ல, 'எல்லாம் அவளால வந்தது, செல்லம் கொடுத்து கொடுத்து தான் ஓவரா ஆட்டம் போட தொடங்கிட்டா இனியாவது கண்டிப்பா நடந்துக்கணும்' அவனுக்குள்ளே பேசிக் கொண்டதை வினோதமாக பார்த்தவருக்கு சட்டென ருத்ரங்கன் நினைவு வரவே அவன் நின்ற புறம் திரும்ப, குயில் பறந்த நொடி அவனும் பறந்து விட்டிருந்தானே.

"இதுங்க சத்தம் கேக்க முடியாம அந்த அம்பி ஓடிட்டா போல. அடடா ஜாதகத்தை நியாபகப் படுத்த மறந்துட்டேனே!. சரி திரும்ப பாக்கும் போது கேட்டுக்கலாம்" மனதில் எண்ணிக்கொண்டு உள்ளே சென்றார். பாவம் மாமிக்கு அவர் கவலை.

இரவு வேளை சில்லென்ற காற்று சன்னலை தாண்டி வந்து நன்றாக உறங்கிக் கொண்டிருந்தவன் இறுகிய முகத்தை வருடிட, கண்மூடியபடியே புருவம் சுருக்கி முரட்டு உறக்கத்தை தொடர்ந்தவன் மனகண்ணில் மிட்டாய்க் குயிலின் ராககானம்.

ஈர இதழ்கள் விரிந்து சிற்பிகள் குலுங்கும் சிரிப்பொலியில் சிரிக்கத்தெரியாத அவனது உணர்வுகள் மறுத்த தடுத்த அதரம் கூட சிரிக்க முயற்சி செய்தது போலும், மீசை முடி துடிக்க புறங்கையால் உதட்டை துடைத்துக் கொண்டு புரண்டு படுத்தான்.

பொழுது விடிந்தது பெருமாளின் சுப்ரபாதம் செவியில் தேன் சொட்டியது. ஆனால் ருத்ரங்னும் அப்படி உணர வேண்டுமே! ஆத்திரம் மூண்டது. எரிச்சலைக் கிளப்பியது தூக்கதிற்கு இடையூராக பாடல் ஒலிப்பதில்.

மதனுஊ.. எப்போதும் போல் வாங்கிக் கட்டிக் கொள்ள அப்பாவியாய் மன்மதன் ஓடி வந்து நின்றான் ஒரே குரலில்.

அண்ணனையா.. என்றது தான் தாமதம் கன்னம் கொய்ங் என்றது. ஏன் அடி வாங்கினோம் என்ற காரணம் அறியும் ஆனாலும் பேச பயம், குருவிக் குஞ்சாக வாய் திறப்பதும் மூடுவதுமாய் கன்னத்தை தேய்த்துக் கொண்டு பாவமாக நின்றவனை என்ன.. என்பது போல் கூர்ந்து பார்த்தான் ருத்ரங்கன்.

"நான் அன்னைக்கே அந்த ஐயர் வீட்ல பாட்டு போட வேண்டாம்னு சொல்லப் போனேனே அண்ணையா, நீதானே எதுவும் சொல்ல வேண்டாம்னு தடுத்து நிறுத்தின" என்றான் பரிதாபமாக விழித்தபடி.

"அது அன்னைக்கு. இன்னைக்கு எனக்கு தூக்கம் டிஸ்டர்ப் ஆகுதா இல்லையா.." தூக்கம் கலைந்தால் மட்டும் எப்படி தான் கோவம் அதிகரிக்குமோ தெரியாது.

"அப்போ இப்ப போயிட்டு சொல்லிட்டு வரவா அண்ணையா.." யார் பெற்ற பிள்ளையோ அடுத்த கன்னத்திலும் ஜிவ்க்கென இடி இறங்கியது.

"என் தூக்கம் கலையிரதுக்கு முன்னாடி அந்த வேலைய நீ பாத்து இருக்கனும். இப்ப போய்ட்டு சொன்னா திரும்பவும் நிம்மதியான தூக்கம் வருமா டா" கீழ் உதட்டை மடித்துக் கடித்து உரும. இல்லை என இடவலமாக தலையாட்டிவனுக்கு 'இப்ப என்னைய என்ன தான் டா செய்ய சொல்ற' என்ற ரீதியில் மன்மதன்.

என்னடா மனசுக்குள்ளேயே என்ன திட்டிட்டு இருக்கியா. சரியாக கண்டு பிடித்து விடவும், இல்ல அண்ணையா.. என பதறி அவன் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து விட்டவனை. காலால் நகட்டி விட்டு பாத்ரூம் நோக்கி சென்றவன் செவியில் தேன் வந்து பாய சடன் பிரேக் போட்டு நடை நின்றிட, 'ஐயோ இப்ப எதுக்கு அண்ணையா நிக்குது சொச்சம் வச்சத திரும்ப வந்து ரெண்டு செவில்ல வைக்க போகுதா' என்ற திகிலோடு பார்த்தான் மதன்.

பச்சை நிற கரைவைத்த பாவாடையும் அதன் மேல் வெங்கட்டின் கட்டம் போட்ட மஞ்சள் நிற சட்டையை அணிந்து, ஈர தலையில் துண்டால் இறுகக் கட்டி காதில் ஜிமிக்கி ஆட, ஜீரா இதழ்கள் மினுமினுக்க, கையில் மோர் தம்பளாரோடு பாவாடையை தூக்கிப் பிடித்தபடி பாதம் நோகாமல் மெல்ல அடி வைத்து, அண்ணா.. அண்ணா.. என்ற கூக்குரலோடு படிஏறிக் கொண்டிருந்த குழலியை பால்கனியில் நின்று பார்த்திருந்த ருத்ரங்கள், மொட்டை மாடியை அவள் அடைவதற்குள் அவன் வீட்டு மொட்டை மாடியில் கார்லாக்கட்டையை சுற்றிக் கொண்டு மூச்சி வாங்க நின்று மாமி வீட்டு மொட்டை மாடியை நோட்டம் விட்டான்.

(ஏன் டா எவ்ளோ பெரிய ரவுடியா உன்னைய போட்ரைட் பண்ணேன், கடைசில நீயும் ஒரு பெண்ணுக்காக இவ்ளோ மேல ஏறி மொட்டை மாடி தாவிட்டியே நியாயமா?)

தயிர் சாதம் உண்டே புஜத்தை வளர்த்தான் போலும், பரந்த முதுகு கழுகு போல் விரிந்து வளைய, கட் பனியனில் புஜங்கள் திமிர வியர்வை துளிகள் சொட்ட தண்டால் எடுத்துக் கொண்டு இருந்த வெங்கட்டை கண்ட ருத்ரங்கனின் விழிகள் அவள் எங்கே என்று தேடிய நேரம், வெங்கட் முதுகில் சத்தமில்லாமல் ஏறி சம்மமிட்டு அமர்ந்துக் கொண்ட தேன்குழலியை கண்கள் சுருக்கக் கண்டான்.

"ஏய்.. புளிமூட்ட, எத்தனை முறை சொல்றது எக்சசைஸ் செய்யும் போது டிஸ்டர்ப் பண்ணாதேனு. கீழ இறங்கு தேனு." வாய் வார்த்தை சொன்னாலும், எப்போதும் போல் செல்லத் தங்கையை முதுகில் சுமந்துக் கொண்டே தண்டால் எடுப்பதில் முனைப்பாக இருந்தான்.

"நானும் நீ சாப்பிடற அதே தயிர் சாதமும் மோரும் தானே சாப்பிடுறேன், ஆனா நோக்கு மட்டும் எப்டி ண்ணா இவ்ளோ பெரிய ஆம்ஸும் பாடியும் கட் அண்ட் ஃபிட்டா இருக்கு." தினமும் கேட்கும் அதே கேள்வி தான் ஆச்சிரியம் சிறிதும் குறையாமல் கேட்டாள், அண்ணன் முதுகில் ஒய்யாரமாக அமர்ந்து.

"தயிரும் மோரும் சாப்டா மட்டும் போதாது தேனு. கூட எக்சசைஸ் பண்ணனும்." அலுக்காமல் ஒரே பதிலை அவனும் கொடுத்துக் கொண்டே தான் இருக்கிறான்.

"ஆத்துல இருக்க வேலையே தலைக்கு மேல இருக்கு. இதுல எங்க எக்சசைஸ் செய்ய. நேக்கு பதிலா நீதான் செஞ்சிண்டு இருக்கியே அதுவே போதும்." பெருந்தன்மையாக விட்டுக் கொடுத்தவளை தலையை மட்டும் திருப்பி பார்த்து வேலையை தொடர, அண்ணனவன் முதுகில் சீசாவிளையாடி வாய் ஓயாது சிரித்துப் பேசிக் கொண்டிருந்த அழகு பதுமையை முறைத்தானோ! ரசித்தானோ! மொட்டை மாடியின் திட்டில் கை ஊன்றி விரைப்பாக நின்றிருதவன் பார்வை மட்டும் இன்ச் விடாமல் அங்குலம் அங்குலமாக விழுங்கிக் கொண்டிருந்தன மிட்டாய் குயிலை.

தொடரும்.
 

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 5
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top