• வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
Administrator
Staff member
Messages
170
Reaction score
146
Points
43
அத்தியாயம் - 6

அதிகாலை மொட்டை மாடியில் தொடங்கி, சமத்து பெண்ணாக தயாராகி அவள் தந்தையின் கை பிடித்து, ஏதேதோ பேசி சிரித்துக் கொண்டு பெருமாள் கோவிலுக்கு நடந்து செல்லும் வரையிலும், குயில் பெண்ணை நிதானமாக பார்த்துக் கொண்டே இருந்தான் ருத்ரங்கன்.

இத்தனைக்கும் அவள் வெளியே வருவது சொர்ப நேரம் தான். ஆனபோதிலும் அந்த தேன்மதுரக் குரல் மட்டும் எட்டுதிக்கும் எதிரொலித்து அவனது துருப் பிடித்த இரும்பு இதயத்தையும் மூளையையும் செயலிழக்க வைப்பதை போன்ற விந்தை உருவாகி அந்த குரலில் அவனையும் அறியாமல் அடிமையாகிப் போன மாயை என்னவோ!

"அண்ணையா.. ஒரு முக்கியமான விசயம்." மன்மதன் சரக்குசுரபியோடு வந்தான். காலையில் அவன் அருந்தும் மிக சிறந்த சத்துபானம் அது.

என்ன டா.. என்பது போல் ஒரு பார்வை பார்த்தவன் பானத்தை வாங்கி ஒரே வாயில் முழிங்கி விட்டான்.

"அது ஒன்னும் இல்ல அண்ணையா இத்தன நாளா ப்ரோகிதர் இல்லாம கிடந்த தெற்க்கு வாசல் பெருமாள் கோவிலுக்கு புதுசா ஒரு ஐயர் வந்திருக்கானாம்."

"எவன் டா அது அவ்ளோ தில்லா வந்திருக்குறது" என்றபடி அரைகை வைத்த கருப்பு சட்டையை அணிய, தனியாக புடைத்து இரும்பை போல் திரண்டு நின்ற ஒவ்வொரு புஜத்தையும் காணவே, தொண்டைகுழி அடைத்துப் போனது மதனுக்கு.

"நம்ம ஆளுங்கள விட்டு யாரு அந்த ஆளுனு விசாரிக்க சொன்னதுல, நம்ம எதிர்த்த வீட்டு குடுமினு தெரிஞ்சிது. இத்தனை வருசமா அவனுங்களா பயத்துல தெறிச்சி ஓடினாங்க, ஆனா இந்த ஆள என்ன அண்ணையா பண்றது"

தலையை தட்டி யோசனை செய்தவனாக. 'குயிலோட அப்பனா அவன் ம்ம்..' "அந்தாள இப்போதைக்கு எதுவும் செய்ய வேணாம், சம்பவம் இல்லாம போர் அடிக்கும் போது பாத்துக்கலாம். ஆமா இன்னைக்கு எந்தெந்த ஏரியால சம்பவம்," என்றபடி அவன் முன்னால் நடக்க. "மணல் மேட்டுல ஒரு சம்பவம், மார்க்கெட்ல கை கால் சீவல் மட்டும், கடைசியா கடத்தல்" என்னவோ மளிகை சாமான் லிஸ்ட் போல மன்மதன் சம்பவங்களை அடுக்கிக் கொண்டே பின்னால் சென்றான்.

காலை எட்டு முப்பது மணியளவில் காக்கி சட்டை விகிதமாக காவல் நிலையம் செல்ல கட்சிதமாக தயாராகி கம்பீரமான நடையில் வெளியே வந்து பைக்கை ஸ்டார்ட் செய்த வெங்கட்ராமனை காரில் இருந்தபடி எதார்த்தமாக பார்த்து விட்ட ருத்ரங்கன் இதழில் கேலி சிரிப்பு.

"வாரேவா.. குயிலு அண்ணன் தான் இந்த புது போலீஸா. ருத்ரங்கனோட பேரைக் கேட்டாலே எவ்ளோ பெரிய பிஸ்தாவா இருந்தாலும் ஒருத்தன் விடாம தெறிச்சி ஓடுவன். இந்த பிஸ்கோத்து பய என்னடானா என் வீட்டு எதிர்லே குடும்பம் வேற நடத்த வந்திக்கான். ஹ்ம்.. உன் போலீஸ் மோப்பம் மட்டும் என் பக்கம் திரும்பட்டும், குடும்பத்தோட வெட்டி சாய்ச்சிட்றேன்" மனதுக்குள் எல்லளாக பொறுமையவன் புயல் வேகத்தில் காரில் சீற, அவன் அருகில் அமர்ந்திருந்த மன்மதனின் உயிர் ஊசல் ஆடியது.

காவல் நிலையத்தில் வெங்கட் நுழையும் போதே அணைத்து காவலர்களும் மரியாதை மிகுதியாக சல்யூட் அடிக்க, சிறு தலையசைப்போடு உள்ளே வந்தவன் தனது கேபினில் சென்று அமர்ந்ததும் மண்டையை பிய்த்துக் கொள்ளக் கூடிய பலவிதமான வினோத கேஸ் ஃபைல்கள் குவிந்து கிடப்பதை கண்டு அனைத்தையும் ஒன்று விடாமல் எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தவனிடம் சப் இன்ஸ்பெக்டர் வந்து நின்றார்.

"என்ன இன்ஸ்பெக்டர் எந்த ஒரு கொலைக் கேசையும் முடிக்காம அப்டியே வச்சிருக்கீங்க, இதுக்கு முன்னாடி இருந்த இன்ஸ்பெக்டர் இதை எல்லாம் கவனிக்காம என்ன செஞ்சிட்டு இருந்தாரு." குடும்பத்தினரிடம் காட்டும் சாதுவான முகம் வேலை என்று வந்துவிட்டதும் கஞ்சி போட்டதை போல் விரைப்பாக மாறி விடும்.

"உங்களுக்கு முன்னாடி இருந்த இன்ஸ்பெக்டர் மட்டும் இல்ல சார் அவருக்கு முன்னாடி மூணு இன்ஸ்பெக்டர் இருந்தாங்க அவங்க யாராலும் இந்த கேஸ முடிக்க முடியல. இந்த கேஸுக்கு எல்லாம் சம்மந்தப் பட்ட குற்றவாளிய நெருங்குறது ரொம்பவே ஆபத்து சார். அவனுக்கு பயந்தே வேற ஊருக்கு மாற்றல் வாங்கிட்டு போய்ட்டாங்க. ஆந்திராவையே கதிகலங்க வைக்கிற ரவுடி ரொம்ப ரொம்ப மோசமானவன் சார்." என்றார் அவரே பயந்து கொண்டு.

"ஒரு கொலை குற்றவாளிக்கு இந்த பில்டப் எல்லாம் நல்லா இருக்கு mr. ஆனா என்கிட்ட இதெல்லாம் வேணாம். உயிருக்கு பயப்படறவன் என்னை பொறுத்த வரைக்கும் காக்கி சட்டை போடவே தகுதி இல்லாதவன். அந்த அக்யூஸ்ட் பத்தின A டூ Z எல்லா டீடெய்ல்ஸையும் கலெக்ட் செஞ்சி கொண்டு வாங்க" அதிகாரமாக சொன்ன வெங்கட்டிடம் தயக்காம ஏதோ சொல்ல வர.

"ஜஸ்ட் டூ வாட் ஐ சே.. Mr. சிவராஜ். டூ நாட் கிவ் எனி அதர் எஸ்பிளானேஷன்" குரல் உயர்த்திட ஒரே ஓட்டமாக அங்கிருந்து சென்றார் அவர்.

வெள்ளிக்கிழமை பத்தரை பன்னிரண்டு இராகுகலாம் என்பதால் அதற்கு முன்னவே பக்தர்கள் கூட்டம் பெருமாளை வழிபட ஜேஜேவென கூடி விட்டனர். முன்பெல்லாம் ப்ரோகிதர் இல்லாமல் வரவே பயந்த பலரும், 'புதிதாக வந்திருக்கும் ப்ரோகிதர் நன்றாக தெய்வத்தை பூஜிக்கிறார், மன நிம்மதி கிட்டும் படி நன்மாதிரியாக வாக்கு கொடுக்கிறார், குடும்ப விரிச்சம் பெற எளிதான தெய்வ பரிகாரங்கள் வழங்கிறார்' இப்படி பலவாறான புகழார பேச்சுகள் பார்த்தசாரதியை பற்றி பரவியதால், அக்கோவவிலைப் பற்றிய பல சர்ச்சைகள் உள்ளத்தில் பயத்தை ஏற்படுத்திநாலும் பக்தர்கள் பலரும் தெய்வத்தை வழிப்பட வந்து வந்து விட்டனர்.

"அப்பா நாழி ஆயிடுத்து நடைய சாத்துங்கோ ஆத்துக்கு போலாம்" என்றபடி கையில் பிரசாதக் கூடையோடு வந்தாள் குழலி.

"இதோ வரேமா.. நீ வெளிய போய் நில்லு நடைய பூட்டிண்டு வரேன்" என்றவர் பூஜை பொருட்களை எல்லாம் நியாபமாக எடுத்து வைத்துக் கொண்டிருக்க, வெளியே பூக்கடைகள் வைத்திருக்கும் இடத்திற்கு வந்து நிழல் இருக்கும் இடமாக பார்த்து நின்றாள்.

மதியம் ஆகி விட்டதால் எங்கோ ஓரிரு இடத்தில் தான் நிழல் குடைகளுக்கு அடியில் பூக்கடைகள் திறந்து வைத்திருந்தனர். அதை எல்லாம் சுற்றிலும் வேடிக்கைப் பார்த்தபடி இருந்தவளுக்கு லேசாக பசி எடுத்து விட்டது போலும். அதிலும் கூடையில் உள்ள பிரசாங்கள் எல்லாம் தேவாமிர்தமாயிற்றே!

புளியோதரை, தயிர் சாதம், எலுமிச்சை சாதம், பஞ்சாமிர்தம், கருப்புக் கடலை என்று எச்சில் ஊரும் பிரசாதங்கள் கையில் இருக்க, குட்டி வாலி எடுத்து திறந்தவள், தேனூறும் பஞ்சாமிர்தத்தை விரலில் தொட்டெடுத்து நாவினுள் வைத்து ருசித்து உறிஞ்சும் அழகினை, சொட்டு விடாது பார்த்திருந்தான் ருத்ரங்கன்.

மன்மதன் சொன்ன லிஸ்ட் அணைத்தும் சரியாக முடித்து விட்டு, வரும் வழியில் காரில் டீசலை நிரப்பிக் கொண்டு வீடு நோக்கி சென்று கொண்டிருகையில், அலைபேசி அலறியதில், ஆலையத்தின் முன் காரை நிறுத்தி விட்டு போனை அட்டன் செய்தான்.

"ரங்கா ஒரு உனக்கு வேலை இருக்கு, அடுத்த மாசம் பதிமூணாம் தேதி. கண்டிப்பா உன்ன தான் எதிர்பார்ப்பேன், சொன்னது போலவே வேலைய முடிச்சிக் கொடுத்திடு" ஒரு மாதத்திற்கு பிறகு சம்பவம் செய்யக் கோரி முன் பதிவு செய்தார் பெரிய தொழிலதிபர் ஒருவர்.

"அந்த தேதிக்கு நான் கமிட்டட் பையா. ஒண்ணு தேதிய மாத்தி சொல்லு, இல்லாட்டி வேற ஆளப் பாரு" தெனாவட்டாக காதைக் குடைந்துக் கொண்டு வேடிக்கை பார்க்கும் போது தான் குயில் பெண்ணைக் கண்டான் அவன்.

தேனே தேனை ரசித்து உண்ணும் அறியக்கிடைக்காத அற்புதக் காட்சி அது. அந்த குட்டி வாலியில் விரலை விட்டு வழித்து எடுத்து மீண்டும் மீண்டும் அவள் பாட்டுக்கு சுற்றம் பாராமல் ஒவ்வொரு விரலாக நாவால் சுத்தம் செய்துக் கொண்டிருந்தவளைக் கண்டு உதட்டை ஈரப் படுத்திக் கொண்டு கண்ணில் இருந்த கூலிங் கிளாஸை கீழே இறக்கினான்.

"ஹெலோ.. ஹெலோ.. ரங்கா லைன்ல இருக்கியா.." அந்த பக்கம் பதட்டமாக அழைத்தார் தொழிலதிபர்.

"மச்.. இருக்கேன் சொல்லித் தொலை" குயிலை பார்த்தபடியே சிடுசிடுத்தான் அவன்.

"உனக்கு எப்போ டேட் பிரீயா இருக்கோ அன்னைக்கே முடிச்சிடு ரங்கா. வேற யாருக்கும் உன் தைரியம் இல்ல. போலீஸ்ல மாட்டிக்கிட்டா ஈஸியா எம்பேர கோர்த்து விட்டு எஸ்ஸாகிவானுங்க" கடைசியில் அவன் வழிக்கே வந்து விட்டார்.

"இதை முதல்லே சொல்லி தொலைக்க வேண்டியது தானே, போனை வை.. டேட் பிக்ஸ் பண்ணிட்டு சொல்றேன், அட்வான்ஸ அனுப்பி விடு." எதுக்கு சம்பாதிக்கிறோம்னு தெரியாம அட்வான்ஸா வாங்கி லாக்கர்ல பூட்டி வச்சி அப்டி என்னத்த செய்ய போறானோ! இந்த ரவுடிப் பயல்.

"குழலி போலாமா," சாவியை இடுப்பில் சொருகிக் கொண்டு வந்தார் பார்த்தசாரதி.

"போலாம் ப்பா.. போறச்ச அந்த கேக் கடைல ஒரு கோலிசோடா வாங்கி குடிச்சிட்டு போலாம்" என்றவள் ஒரு சோடா தொடங்கி எக்லெஸ் கேக், ரசமலாய், வெஜ் கட்லெட் என்று பார்க்கும் அனைத்தையும் கூச்சமின்றி ஒரு பிடி பிடித்து விட்டு பெரிய ஏப்பம் ஒன்றையும் விட்டுவிட்டு, பார்த்தசாரதியின் முறைப்பையும் பரிசாக பெற்றுக் கொண்டு உண்டது செரிக்க வேகமாக நடந்தவளை கண்டு ருத்ரங்கன் தலையை உளுக்கிக் கொண்டான்.

"என்ன டா பண்ற ருத்ரா.. எதுக்கு அந்த பொண்ண அப்டி பாக்குற. என்னவோ ஊர்ல இல்லாத உலகழகி மாதிரி ஓவரா பண்றா. ஆளு கூட சப்ப பீசு பெருசா ஒன்னும் இல்ல டா. ஆனா அந்த உதடு ரெண்டும் ஜீரால முக்கி எடுத்தது போல பளபளன்னு மின்னுதே எப்டி? ஒருவேள விளம்பரத்து காட்ற அந்த விரல் சைஸ்ல உள்ள பெயிண்ட்ட உதட்டு மேல பூசிட்டு வந்திருப்பாளோ? இருக்கும் இருக்கும்.. இல்லனா எப்டி செகப்பு கலர்ல அந்த மினு மினுக்கப் போவுது." காருக்குள் தனியாக பேசிக் கொண்டிருந்த ருத்ரங்கனின் மனசாட்சியே அவனை வினோதமாக பார்த்து வைத்தது.

"ஏண்ணா, என்ன இந்த உச்சி வெயில்ல நடந்து வரேள். வெங்கட்டுக்கு போன போட்டு அவனோட வண்டில வர வேண்டியது தானே.இல்லனா ஒரு ஆட்டோ பிடுச்சுண்டு வந்திருக்கலாமே. பாருங்கோ முகமெல்லாம் வியர்வை வடிச்சி சோந்துடுத்து." முத்தானையால் அவர் முகத்தை துடைத்து விட்டு தண்ணீரைக் கொடுத்தார் பரிமளம்.

"இதோ இருக்குற இடத்துக்கு பாவம் பிள்ளைய எதுக்கு தொல்லை பண்ணிண்டு இருக்கனும். அப்டியே பொடி நடையா வந்தாச்சு பரிமளோ. அதான் குழலியும் கூட இருக்காளே பிறகென்ன. சரி சரி நாழியாச்சி சாப்பாடு எடுத்து வை கை அலம்பிண்டு வரேன்" என்றவர் உள்ளே சென்றிட, பெருமூச்சு விட்டுக் கொண்டு உணவை எடுத்து வைத்து அடுத்தடுத்த வேலையை கவனிக்க சென்றார்.

உண்ட மயக்கம் போக எப்போதும் போல் சன்னலின் திட்டில் அமர்ந்து வெறிச்சோடி இருந்த தெருவை ஆராய்ச்சியாக பார்த்திருந்த குழலி, பேச்சி சத்தம் கேட்கவே குனிந்து கீழே பார்த்தாள். வேறு யாரு பரிமளம் தான் ருத்ரங்கனை விடாமல் பிடித்து வைத்துக் கொண்டு ஜாதகம் கேட்டு நச்சரித்துக் கொண்டிருந்தது.

"என்ன அம்பி ஜாதகம் கேட்டேனே மறந்துட்டியா. கண்ணாலமெல்லாம் அந்தந்த காலகட்டத்துக்குள்ள நடந்துடனும். இல்லைனா அம்பது வயசானாலும் ஒன்னும் நடக்காது. உன்னால எனக்கும் பேச்சி வார்த்தை ஆள் கிடைக்காது போல. சரி சரி நீ இப்பவே போயி ஜாதகத்த எடுத்துண்டு வா. என் ஆத்துக்காரர் வரும் போது காட்றேன்." மாமி அவனை விடுவதாய் இல்லை போலும்.

அவனும் எத்தனை முறை இந்த இம்சையைப் பொறுத்து பொறுத்து போவான். இந்த முறை இந்த மாமியின் வாயை ஒரே குத்தில் குழப்பி விட வேண்டும் என்று கை விரல்களை இறுக்கி மூடி நரம்பு புடைக்க ஒரு சுழட்டு சுழட்டி கையை தூக்கப் போக, "அம்மா இங்க நின்னு என்ன பண்ணிட்ருக்கேள்" தேன்க் குரல் மிக மிக கிட்டத்தில்.

ஓங்கிய கை தன்னால் தளர்ந்து போக, மினுமினு உதட்டுக்காரி அவனுக்கு எதிரில் இரண்டடி இடைவெளியில் நின்றாள்.

"வா குழலிமா. இதோ இந்த அம்பி நம்ம எதிர் ஆத்துல தான் இருக்கா. பாவம் இன்னும் கண்ணாலம் ஆகலை. அதான் ஜாதகம் வாங்கி உன் தோப்பனார்ட்ட காட்டலாம்னு கேட்டுடுண்டு இருக்கேன்." என்ற அன்னையை முறைத்து வைத்தாள் அவள்.

"ஏம்மா நோக்கு ஏன் இந்த தேவை இல்லாத வேலை. அவாள பாத்தா வெளிய போய்ட்டு வர மாதிரி தெரியுது, உள்ள போக விடாம அவாளோட பேசிய்ட்ருக்கேள்." பரிமளத்தின் காதில் மெல்லமாக தான் கிசுகிசுத்தாள் ஆனாலும் அவன் செவியில் சொட்டு விடாமல் தேன் பாய்ந்து விட்டதே!!

தொடரும்.
 

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 6
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top