Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖
Administrator
Staff member
Messages
300
Reaction score
215
Points
63
அத்தியாயம் - 70

தலையணையில் தலை வைத்து விட்டதைப் பார்த்தபடி படுத்திருந்த கவி, 'எப்போதடா உன் அலம்பல் முடியும்..' என்ற அவஸ்தையில் பாம்பு போல் நெளிந்துக் கொண்டிருக்க, ஆத்வி எங்கே அவளை பார்த்தான்.

மனைவியின் மேல்சட்டையை விளக்கி, அந்த தட்டையான வழுவழு வயிற்றினில் நிறைய நிறைய முத்தங்கள் வைத்து, அங்கேயே மிகமிக மென்மையாக வருடி விட்டு, அலைபோல் ஏறி இறங்கும் பஞ்சி வயிற்றினில் இரண்டு காதுகளையும் மாறி மாறி வைத்துக் கேட்க, உள்ளிருந்து வயிறு இறையும் சத்தத்தை தவிர்த்து அவன் எதிர்பார்த்த எந்த சத்தமும் கேட்கவில்லையே!

"டேய் குட்டி டாடி வந்திருக்கேன்டா, நீ உள்ள என்ன பண்ணிட்டு இருக்க.. எப்டி இருக்க.. டாடி இத்தனை நாளும் வரலைன்னு கோவமா இருக்கியா என்ன..
சாரி செல்லோ, எனக்கு நீ வந்திருக்குற விஷயம் தெரியாம போச்சே.. உன் மம்மி என்கிட்ட சொல்லாம மறச்சி உன்னையும் சேத்து தூக்கிட்டு வீட்டை விட்டு ஓடிட்டா..

நீ மட்டும் வந்திருக்கேன்னு தெரிஞ்சிருந்தா, அடுத்த நொடியே உன்ன தேடி டாடி ஓடி வந்திருப்பேன்.. தினமும் உன்ன கொஞ்சி இப்டி நிறைய முத்தம் குடுத்து பத்திரமா பாத்துகிட்டு இருந்துருப்பேன்.. அதான் இந்த மோசக்காரி எல்லாத்தையும் மறச்சி கெடுத்துட்டாளே, உன்னையும் என்னையும் பிரிச்சிட்டாளே குட்டி..

இனி நான் அவகிட்ட பேசுற மாதிரி இல்ல, நீயும் பேசாதே.. நம்ம ரெண்டு பேர் மட்டும் தினமும் பேசி நிறைய முத்தா குடுத்து ஜாலியா இருக்கலாம், நீ என்ன சொல்ற குட்டி.." மீண்டும் அவன் பிள்ளைக்கு முத்தம் வைக்க, பிள்ளையை சுமப்பவளுக்கு பொறாமை கொண்ட செல்லக் கோவத்தில் மூக்கு சிவந்தது.

தன் காலடியில் மடங்கி விழுந்து அழுதுக் கொண்டிருந்தவளை எத்தனை நேரம் வெறித்தானோ! ஒரு கட்டத்திற்கு மேல் தன்னவளின் அழுகையை பார்க்க முடியாமல், முகத்தை அழுத்தமாக துடைத்துக்கொண்டவனாக, அவள் அருகில் அமர்ந்த ஆத்வி, அவளை சமாதானம் செய்து கொஞ்சுவான் என்று பார்த்தால்,

வெம்பலோடு அவன் முகம் பார்த்தவளை தலையணையில் சரித்து விட்டு, இன்னும் கால் கைகள் முளைக்காது வயிற்றில் ஜனித்திருக்கும் தனது பிள்ளையை கொஞ்சி, சமாதானம் செய்துக் கொண்டு இருக்கிறான்.

அவன் கொஞ்சலும் மிஞ்சலும் முடியும் முடியும் என்று அவள் எதிர்பார்த்து காத்திருக்க, குடிகாரனுக்கே டஃப் கொடுக்கும் விதமாக மீண்டும் தொடங்கியவன் தலைமுடியை கொத்தாகப் பற்றி ஒரே இழுப்பாக தன்னருகில் போட்ட கவி, தலைமுடியை மட்டும் விடாமல் இறுக்கமாகப் பற்றியபடியே சுழண்டு எழவும்,

"ஏய்.. ஏய்.. என்ன டி பண்ற தலைமுடிய விடு டி.." ஆத்வி கத்தும் போதே இருபக்கமும் கால் போட்டு அவன் வைற்றில் அமர்ந்த கவி, மூச்சி வாங்க முறைத்த கவியை, அவனும் முறைத்த ஆத்வி,

"லூசு.. வயித்துல பாப்பா இருக்கு இப்டியா கண்டமேனிக்கு உடம்ப வளைச்சி ஸ்ட்ரெஸ் பண்ணுவ.. வயிறு மடங்குது கீழ இறங்கு டிஇ.." பதற்றத்தில் பற்களை கடிக்க,

"முடியாது, இவ்ளோ நேரம் நீங்க பண்ணத நான் பொறுத்துக்கிட்டு இருந்தேன்ல, இப்போ நீங்க அமைதியா இல்ல.. இப்டி தான் குதிப்பேன்.." என்று அவன் வயிற்றில் அமர்ந்தபடியே குதித்துக் காட்ட,

"அய்யோ.. பைத்தியமே பேபி இருக்கு டி ஏதாவது ஆகிட போகுது.." பதட்டமாகி விட்டான் அவள் செய்யும் சேட்டையில்.

"ஓஹோ.. அப்போ உங்களுக்கு உங்க பேபி தான் முக்கியம், நான் இல்ல அப்டி தானே.." அவள் கரத்தில் மாட்டிய ஆடவனின் மென்மையான முடிகள் கையோடு பிடுங்கிக் கொண்டு வந்தது.

"ஹாஆ.. ஏய்.. முடிய விடு டி பதில் சொல்றேன்.."

"முடியாது இப்பவே பதில் வரல அப்புறம் நான் மனுஷியா இருக்க மாட்டேன்..."

"இப்ப மட்டும் என்ன குறைச்சல், ராட்சசி மாறி என்னையும் என் பேபியையும் இப்டி கொடுமை படுத்துறியே.. பாவம் நான் இல்லாம இத்தனை நாளா என் பேபிய என்னென்ன கொடுமை பண்ணியோ.."

மனைவியின் பொறாமை கலந்த சேட்டையான கோபத்தை வெகுவே ரசித்தவன், சண்டைக்கு தயாராக இருந்தவளை பட்டும் படாமலும் இடையில் கை விட்டு மென்மையாக தூக்கி, தனக்கு அருகில் போட்டு அவளின் இரு கைகளையும் அணைக்கட்டியபடி பிடித்த ஆத்வி, அவள் மேல் படராமல் பாவையின் முகத்திற்கு நேராக மூச்சி வாங்கும் தனது முகத்தை கொண்டு வந்தவன்,

அதிர்ந்து விழிக்கும் மயக்கும் விழியாலை கூர் பார்வையால் துளைத்தபடியே, துடிக்கும் அவள் அதரத்தில் நாவால் சீண்டி விட, எச்சிலில் மூழ்கிய தன்னவன் நா தொட்டதும் பனிசாரல் தீண்டிய உணர்வில், எச்சில் விழுங்கி தேகம் சிலிர்த்தாள் பெண்ணவள்.

"கொஞ்ச நேரம் என் குழந்தைகிட்ட பேசினா அவ்ளோ கோவம் வருது மேடம்க்கு, அப்போ இத்தனை நாளா என்கிட்ட இருந்து பிள்ள உண்டான விஷயத்தையே மறச்சி வச்சிருந்தியே எனக்கு எப்டி இருந்திருக்கும்.." குரலில் சற்று கடுமையும், அவள் கன்னத்தில் மென்மையான முத்ததையும் வைக்க, கண்மூடி கன்னம் சாய்த்து கணவனுக்கு வாகாக காட்டிய கவி,

"எனக்கு மட்டும் ஆசையா மாமா குழந்தை விஷயத்தை உங்ககிட்ட சொல்லாம மறைக்க, இந்த சந்தோஷமான விஷயத்தை உங்ககிட்ட சொல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்ட இந்த கொடுமைய நினைச்சி, ஒவ்வொரு நாளும் நான் எப்டி துடிச்சேன்னு ஒன்னு ரெண்டு வார்த்தைகளால சொல்ல முடியாது மாமா..

கொஞ்ச நேரம் முன்னாடி வரை, எவ்ளோ ஆசையா வயித்துல முத்தமிட்டு குழந்தைய கொஞ்சிட்டு இருந்தீங்க, இதை எல்லாம் இத்தனை நாளா தவற விட்டுட்டேனேன்னு நினைக்கும் போதே அழுகையா வருது.." என்றவளின் கண்ணில் இருந்து வரி வரியாக கண்ணீர் துளிகள் உருண்டோட, இதழ் கொண்டு துடைத்த மன்னவனுக்கும் அவள் வேதனை புரியாமல் இல்லை.

இனியும் நடந்து முடிந்த விடயத்தை பற்றி பேசி தன்னவளை வருத்தம் கொள்ள வைக்க விரும்பாதவன்,
"செக்கப் எல்லாம் சரியா போனியா பேபிஇ.. டாக்டர் என்ன சொன்னாங்க, உன் உடம்பு எல்லாம் ஓகேவா இருக்கா.. நீ ஆரோக்கியமா இருக்கேன்னு சொன்னாங்ளா.. என்னென்ன சத்து பத்தல..? எதுக்கும் நாளைக்கு நம்ம ஹாஸ்பிடல் போயிட்டு ஃபுல்பாடி செக் பண்ணிட்டு வந்திடலாம், நீ என்ன சொல்ற.."

ஒரு வார்த்தையும் வயிற்றில் உள்ள குழந்தையை பற்றி கேளாமல், மனைவியின் உடல் நலத்தை மட்டுமே முன்நிறுத்தி அவன் கேட்ட விதத்தில், உள்ளம் பூரித்துப் போனாலும் தாய்மையின் ஏக்கம் அப்பட்டமான அவள் முகத்தில் தெரிந்தது.

"என்ன மாமா.. எல்லா கேள்வியும் என்னைப்பத்தியே கேக்குறீங்க, நம்ம பாப்பாவ மறந்துடீங்களா என்ன.. குழந்தை எப்டி இருக்குனு ஒரு வார்த்தை கேக்கலயே.." பாவமாக கேட்டளை அள்ளி எடுத்து நெஞ்சில் போட்டு இறுக்கமாக அணைத்துக் கொண்டவன்,

"என் பேபி உள்ள ரொம்ப நல்லா இருக்கும் டி, ஏன்னா அவன் என்ன மாறி ரொம்ப ரொம்ப ஸ்ட்ராங்.. ஆனா என் பெரிய பேபி அப்டியே இல்லையே.." என்று கண்ணடிக்கவும், செல்லமாக முறைத்து தன்னவன் நெஞ்சில் மேலும் ஒன்றிப் போனாள் கவி.

வெகு நாட்களுக்கு பிறகு இருவரும் இறுக்கமாக அணைத்தபடி சுகமான நித்திரையை தழுவ, கதவு தட்டும் சத்தத்தில் உறக்கம் கலைந்த கவி ஆடையை சரி செய்தபடி கதவை திறக்க,

"கவி.. சாப்பாடு தயாராகிடுச்சு தம்பிய கூட்டிட்டு வா சாப்ட்டு உறங்கலாம்.." விஷாலின் அன்னை அழைத்துவிட்டு செல்ல, கணவன் மனைவி இருவரும் உணவருந்த அமர, விஷாலும் அவர்களோடு அமர்ந்து கொண்டான்.

பார்த்து பார்த்து உபசரிக்கும் அவரையே பார்த்திருந்த ஆத்வியின் தோளை இடித்து, "சாப்பிடாம என்ன வேடிக்கை சாப்பிடுங்க.." என்ற கவியோ திருப்தியோடு உண்ண, ஒரு வாய் உணவை சுவைத்த ஆத்விக்கு பல குழப்பம் இழையோடியது.

"என்னப்பா மெதுவா சாப்பிடுற, சாப்பாடு நல்லா இல்லையா என்ன.." என்றதும் குழப்பத்தில் இருந்து வெளிவந்தவன்,

"அப்டிலாம் இல்ல ம்மா.. சாப்பாடு டேஸ்ட்டா இருக்கு, அப்டியே எங்க மாம் செஞ்சத போல இருக்கு.." ஆத்வி சொன்னதும் தான், மித்ராவின் சமையலும், இத்தனை நாளும் விஷாலின் அன்னை செய்த சமையலும் சுவை மாறாமல் ஒன்றன் போல் இப்பதை கவியும் உணர்ந்தாள்.

"ஆமா ஆண்டி, அடிக்கடி உங்க சாப்பாடு சாப்பிடும் போது, இந்த டேஸ்ட் நம்ம எங்கேயோ சாப்ட்டு இருக்கோமேன்னு தோணும், ஆனா சட்டுனு நியாபகத்துல வராது..

இப்ப மாமா சொன்னதும் தான் நானே உணருறேன், நீங்க செய்ற ஒவ்வொரு சாப்பாடும் அப்டியே சுவை மாறாம எங்க அத்தை கை பக்குவம் மாறியே இருக்கு.." கவி சொல்ல, அப்டியா என்றார் புன்னகையாக.

"அட ஆமா ஆண்டி, அது மட்டும் இல்ல உங்க குரல் கூட அப்டியே என் அத்தை மித்ரா குரல் மாதிரியே இருக்கு.." என்றவள் உணவை அள்ளி வாயில் வைக்க, இப்போது விஷாலின் அன்னை முகமும் யோசனையாக சுருங்கி மீண்டதை, ஆத்வி சரியாக உள்வாங்கிக் கொண்டான்.

"அப்போ என் அம்மா முகம் மட்டும் தான் உங்க அத்தை போல இல்லைனு சொல்லு கவி.. கொஞ்சம் விட்டா இவங்க தான் உன் மித்ரா அத்தைனு சொல்லிடுவ போலயே.." விளையாட்டாக சொன்ன விஷால் உணவை ருசிக்க,

"டேய் லூசு.. ஆண்டியோட நிறைய ஆக்டிவிட்டீஸ் என் அத்தையோட ஒத்து போகுது.. அவங்க பாடி ஸ்ட்ரக்சர், நடை, குரல், இன்னும் நிறைய, சரியா சொல்லத் தெரியல.. ஆனா நான் சின்னப் பிள்ளைல என் குடும்பத்தை பிரிஞ்சி வந்தது பிறகு, ஸ்வாதி ஒருத்திய தவிர வேறயார் கூடவும் அவ்ளோ அட்டாச் ஆக மாட்டேன்..

ஆனா ஆண்டிகிட்ட மட்டும் எப்டி அவ்ளோ க்ளோசா பழகினேன்னு எனக்கே தெரியல.. ஸ்வாதி கூட இந்த விஷயத்தை ஏதோ அதிசயம் நடந்தது போல பேசுவான்னா பாரேன், அந்த அளவுக்கு எனக்கு ஆண்டிகும் ஏதோ ஒரு நல்ல பாண்டிங் இருக்கு.." கவி என்னவோ சாதாரணமாக சொல்லி விட்டாள், ஆனால் ஆத்விக்கும் விஷாலின் அன்னைக்கும் தான் நிறைய நிறைய குழப்பங்கள் அலைஅலையாக எழும்பியது.

குழப்பத்தை நீடிக்க ஆத்விக்கு விருப்பம் இல்லாமல் உடனடியாக அனைத்தும் பேசி முடித்து விடும் நோக்கில், "ஆமா ம்மா உங்க நேட்டிவ் மார்த்தாண்டம் தானா?" தன் முதல் கேள்வியை ஆவலாக தொடங்கினான் ஆத்வி.

"திடீர்னு ஏன் மாமா இப்டி கேக்குறீங்க, ஆண்டி அதே ஊரா தான் இருப்பாங்க அப்டித்தானே ஆண்டி.."
கவி கேட்கவும், தலையை அவர் இடவலமாக இல்லை என ஆட்டும் போதே அதுவரை இயல்பாக இருந்த விஷால்,

"நானும் அம்மாவ பத்தின விபரங்கள தான் தேடிட்டு இருக்கேன், இதுவரை ஒன்னும் கிடைக்கல கவி.. என் அம்மா மார்த்தாண்டம் இல்ல.." என்றதும் கவி அதிர்ந்து பார்க்க, ஆத்விக்கு ஏதோ ஒரு நிம்மதி.

"என்ன சொல்ற விஷால், நீ எதுக்கு ஆண்டிய பத்தின விபரத்தை தேடணும்.. அவங்க உன் அம்மா தானே அப்புறம் என்ன.."

"அவங்க இப்பவும் எப்பவும் எனக்கு அம்மா தான் கவி, ஆனா என்ன பெத்தவங்க இல்ல.." என்றான் வருத்தம் தோய்ந்த குரலில்.

அதை கேட்டது கவி திகைப்போடு அவன் அன்னையைக் காண, அவரோ கவலை தொய்ந்த முகத்துடன் கண்கள் கலங்கி போனார்.

"கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி என் அம்மாக்கு திதி குடுத்துட்டு வர வழில தான் நானும் என் அப்பாவும் இவங்கள பாத்தோம்.. மலை சருகுல தலை எல்லாம் அடிப்பட்டு முகம் சிதஞ்சி ரத்தவெல்லத்துல உயிர்க்கு போராடிட்டு இருந்தவங்கள, அப்பா உடனே ஹாஸ்பிடல் கொண்டு போய் அட்மிட் பண்ணாரு..

அதுல அம்மா பழைய நியாபகம் எல்லாம் இழந்து, முகத்தையும் பிளாஸ்டிக் சர்ஜரி பண்ற நிலைமை ஆகிடுச்சு.. அப்புறம் இவங்கள வீட்டுக்கு கூட்டிட்டு போய் நானும் அப்பாவும் பத்திரமா பாத்துக்கிட்டோம்.. அம்மாக்கு அவங்க பழைய நியாபகம் எதுவும் இல்லாம, தான் யாருனும் தெரியாம தவிச்சு போவாங்க..

யாருகிட்ட கேட்டும் அம்மாவோட சொந்த ஊர் பேர், சொந்தபந்தம் யாரையும் கண்டு பிடிக்க முடியல.. அப்புறம் ரெண்டு வருஷத்துல அப்பாவும் மாரடைப்பால இறந்து போன பிறகு, எனக்காக அம்மா அவங்க சொந்தத்தை தேடுறத விட்டு, என்னையும் அப்பா விட்டுட்டு போன பிசினஸையும் நல்லபடியா பாத்துக்க ஆரமிச்சாங்க.

அப்ப தான் அப்பா இறந்த நாளுக்கு நானும் அம்மாவும் ஆசிரமம் வரும் போது எங்களுக்கு கவி ஸ்வாதி ரெண்டு பேரும் அறிமுகமாங்க.. ஆனா எனக்கு தான் இதுவரைக்கும் மனசு கேக்கல, அவங்க கழுத்துல இருக்க தாலிய பாக்கும் போதெல்லாம் கஷ்டமா இருக்கு..

அப்போ அவங்களுக்கும் கல்யாணம் ஆகி பசங்க இருக்க வாய்ப்பு இருக்குல்ல, அம்மா மாதிரியே அவங்களும் இவங்களுக்காக காத்திருந்தா என்ன பண்றது.. அதான் எப்படியாவது அம்மாவோட சொந்தம் யாராவது கிடைச்சிட மாட்டாங்களான்னு தேடிட்டு இருக்கேன்.. " விஷால் சொல்லி முடிக்க, கவியும் ஆத்வியும் சொல்ல முடியாத உணர்வுகளோடு பார்த்துக் கொண்டனர்.

"டேய் விஷால் என்ன பேச்சி பேசுற நீ, அதான் இதுவரைக்கும் தேடியும் யாரும் கிடைக்கலையே, அப்புறம் ஏன் டா வீணா கிடைக்காத சொந்தத்தை தேடி அலையிற.. இல்லாத ஒரு சொந்ததுக்காக ஒரே சொந்தமா இருக்க உன்னை எப்டி நான் விட்டுக் கொடுக்க முடியும்.. இதுவரை வராத சொந்தம் இனிமேலும் வரும்னு எனக்கு நம்பிக்கை இல்ல..

என்னவோ இந்த தாலிய பாக்கும் போது தான் மனசு உறுத்துது, யாரோ எனக்காக காத்திருக்க மாதிரி மனசெல்லாம் படபடன்னு அடிச்சிக்குது.. கொடுமைய பாரு, இந்த தாலிக்கு சொந்தக்காரர் யார்னு கூட தெரியாத கொடுமையான வாழ்க்கை, என் எதிரிக்கு கூட வரக் கூடாது.." நெஞ்சோடு தாலி சங்கிலியை இறுக்கிப் பிடித்து அவர் கண்கலங்க,

கவி அவரை கவலையாக பார்த்தாள் என்றால், ஆத்விக்கு தன் சந்தேகம் உறுதியான மகிழ்ச்சியில் புன்னகைத்தவன்,
"இனிமே அந்த கொடுமைய நீங்க அனுபவிக்க வேண்டிய அவசியம் இல்ல அம்மா.." என்றனின் உறுதியான குரலில் விஷாலும் அவன் அன்னையும் ஆத்வியை புரியாமல் பார்த்தனர். இருந்தும் அவன் அழுத்தி சொன்ன அம்மா என்ற வார்த்தையில் உள்ளம் உருகிப் போனார்.

கவிக்கு கூட நடப்பது எதுவும் சரியாக புரிந்து கொள்ள முடியாத நிலை தான்.

"தம்பி நீ என்ன சொல்ற, எனக்கு ஒன்னும் புரியல.." என்றவருக்கு பெரும் குழப்பம் ஏற்ப்பட்டது.

"புரியலனா என்ன ம்மா, தெளிவா புரிய வச்சிட்டா போச்சி..
'நீங்க தான் என் சித்தி சுபத்ரா என் அம்மா மித்ரா கூட பிறந்தவங்க.." என்றதும் அவர் அதிர்ந்து பார்க்க,

"இதுக்கே ஷாக் ஆனா எப்டி..?
இதுவரைக்கும் நீங்க இறந்துட்டதா நினைச்சி தான் உங்கள தேடாம இருந்தோம், ஆனா கொஞ்ச மாசத்துக்கு முன்னாடி கோமால இருந்த சித்தப்பா கண் விழிச்சி உங்கள காணோம்னு தேடின பிறகு தான் தெரியும், நீங்களும் அந்த பாம் ப்ளாஸ்ட்ல தப்பிச்சி இருக்கீங்கன்னு.." என்று நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் சுருக்கமாகக் கூறிய ஆத்வி,

"நான் உங்க அக்கா மித்ராவோட மகன், இதோ கவி இவ உங்க அண்ணன் பொண்ணு.. உங்க தாலிக்கு சொந்தக்காரர் விக்ரம் சித்தப்பா, உங்களுக்கே உங்களுக்காக செத்து பிழைச்சி காத்துட்டு இருக்கார்..

நீங்க பெத்த மகன் யாதவ் எனக்கும் என் மாம்க்கும் நடுவுல வந்து ரொம்ப டிஸ்டர்ப் பண்ணான், அதான் அவன் லவ் பண்ண பொண்ணு ஸ்வாதிய கல்யாணம் பண்ணி வச்சிட்டேன்.. தொலஞ்சி போன எல்லா சொந்தமும் ஒன்னு சேந்து ரொம்ப சந்தோஷமா இருக்கோம், நீங்களும் வந்துட்டா இன்னும் சாந்தோஷம் ஓவர்லோடட் ஆகிடும்..

அப்டியே இந்த வீங்கிப்போன வாயனையும் கூட இழுத்துட்டு போலாம்.. யாதவ் கூட சண்டை போட்டு போர் அடிக்குது.." சாதாரணமாக சொல்லி முடித்து உணவை ரசித்து உண்டவனை, கவியும் விஷாலும் வியப்பாக பார்த்த போது, அதிர்ச்சி தாலாமல் பொத்தென பாத்திரங்கள் மீதி மயங்கி சரிந்த சுபியை கண்டு மூவரும் பதறி விட்டனர்.

சுபி முகத்தில் தண்ணீர் தெளித்துப் பார்த்தும் பயனில்லாமல் போக, அவசரமாக மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். கையோடு சுபியின் பழைய ரிப்போர்ட்களையும் எடுத்துக் கொண்டான் விஷால்.

அவசர பிரிவில் சேர்த்து விட்டு மூவரும் பதட்டம் குறையாமல் வெளியே காத்திருக்க, நேரங்கள் கடந்தோடியதே தவிர சுபி கண் விழித்திருக்கவில்லை.

"மாமா.. அத்தைக்கு என்னாச்சி ஏன் அவங்க இன்னும் கண் விழிக்கல, அவங்களுக்கு இப்டி ஆகும்னு முன்னாடியே தெரிஞ்சிருந்தா அவங்ககிட்ட மெதுவா எல்லா உண்மையும் சொல்லி இருக்கலாம், பாவம் விஷால் அவன் எப்டி உடைஞ்சி போய் உக்காந்து இருக்கான் பாருங்க..

அத்தைக்கு ஒன்னும் ஆகாதுல்ல மாமா, டாக்டர் ஏன் இன்னும் எதுவும் சொல்லல.." கவி விடாமல் புலம்ப,

"கவிஇ.. காம் டவுன், அவங்களுக்கு ஒன்னும் ஆகாது, கொஞ்ச நேரம் நீ டென்ஷன் ஆகம இரு எல்லாம் நல்லதாவே நடக்கும்.." ஆத்வி சமாதானம் செய்தும் வாய் மூடவில்லை.

"சார் பேஷண்ட்க்கு ஒரு பிரச்சனையும் இல்ல.." என்றபடி வந்த மருத்துவர்,
"அவங்க பழைய ரிப்போர்ட்ஸ் பாத்தேன், அவங்களுக்கு ஏற்கனவே தலைல சிவியர் இஞ்சூரியாகி பழசை எல்லாம் மறந்து போய் இருந்திருக்காங்க.. இதுவரைக்கும் அவங்களா என்ன யோசிச்சும் வராத பழைய நினைவுகள் எல்லாம்,

அவங்களோட பழைய வாழ்க்கைய பத்தி பேசி, அவங்க ஆழ்மனசுல உள்ள நினைவுகளை தூண்டி விட்டதுல அதிர்ச்சியாகி மயங்கி இருக்காங்க.. மே பி இதனால அவங்களுக்கு பழைய நியாபங்கள் வரவும் சான்ஸ் இருக்கு, வராமலும் போகலாம்.. எதுக்கும் இன்னும் கொஞ்ச நேரம் வெயிட் பண்ணி பாக்கலாம், அவங்க கண் விழிக்கட்டும்.."

விபரம் கூறிவிட்டு மருத்துவர் சென்றிருக்க, பழைய நியாபங்கள் மீண்டும் வந்தால் அதை விட வேறு என்ன மகிழ்ச்சி இருக்கப் போகிறது.

சொன்னது போலவே சில மணி நேரங்களில் கண் விழித்த சுபிக்கு அனைத்து நியாபங்களும் வந்திருக்க, முதலில் தன் குடும்பம் பிள்ளை கணவன் என்று அனைவரையும் நினைத்து அழுதுத் துடித்தவர், எதிரில் இருக்கும் மூன்று பிள்ளைகளையும் கட்டி அணைத்து முத்தமிட்டு பாச மழை பொழிந்து, தன் முக மாற்றத்தை கண்டு உடைந்து போனவரை தேற்றி வீட்ற்க்கு அழைத்து சென்றனர்.

சுபிக்கு தன் கணவனையும் மகனையும் குடும்பத்தையும் பார்க்க போகிறோம் என்ற மகிழ்ச்சியில் மூவரையும் உறங்க விடாமல், அவர்கள் சிறிய வயதில் செய்த சேட்டைகளை எல்லாம் இப்போது நடத்ததை போல் சொல்லி சிலாக்கித்துக் கொண்டிருக்க, அவர்களும் எத்தனை நேரம் தான் பொறுமையாக கேட்டுக் கொண்டிருப்பது!

"அம்மா.. போதும்மா தூங்குங்க காலைல உக்காந்து கதை சொல்லுங்க நாள் முழுக்க உக்காந்து கேக்குறோம். இப்ப தூக்கம் தூங்கமா வருது.." விஷால் ஒரு பக்கம் சரிய,

கொட்டாவி விட்டபடி மண்டையை சொரிந்த கவி, "இந்த ஒரு விஷயத்துல மட்டும் நீங்க மித்ரா அத்தை கூட ஒத்து போகவே இல்ல.." என்றதும் ஏன் என்பது போல் சுபி பார்க்க,

"மித்ரா அத்தை அதிகம் பேசவே மாட்டாங்க, நீங்க அதிகமா பேசுறீங்க.." என்றவள் எழுந்து ஒரே ஓட்டமாக ஓடி விடவும்,

"அடி வாலு இன்னும் இவ சேட்டை குறைஞ்ச பாடு இல்ல, எப்டி டா இவள வச்சி சமாளிக்கிற.." ஆத்வியை விடாமல் பிடித்துக் கொண்டாள் சுபி.

மனைவியின் சேட்டையில் புன்னகைத்தவன், "அதெல்லாம் பழகிடுச்சு ம்மா.. இதோ உங்கள சகிச்சிட்டு 2 மணி வரைக்கும் கதை கேக்குறேனே அதுமாதிரி.." என்றதும்,

"ஓஹோ.." என தலையாட்டி "அட திருட்டு பயலே.. உன்ன..." என்று அடிக்க கை ஓங்க அவனும் எஸ்ஸாகி விட்டான்.

தொலைந்த நியாபகமும், மறந்த சொந்தங்களும் மீண்டும் கிட்டி விட்ட மகிழ்ச்சியில், தன் கணவனை எப்போது பார்ப்போம் என்ற ஆவலில் உறக்கமே வரவில்லை சுபிக்கு.

விடியல் பொழுது புத்தம் புதிய இனிமைகளோடு விடிந்திட, நால்வரும் தங்களின் உறவுகளைக் காண சென்றனர் மகிழ்ச்சியாக.

°°°°°°°

பெரிய சமையல் கட்டில் மித்ரா ஸ்வாதி ஆரு மூவரும் பம்பரமாக சுழன்று பரபரப்பாக சமையல் வேலையை செய்துக் கொண்டிருக்க, ஆண்கள் நல்லவரும் ஹாலில் அமர்ந்து இவர்களின் அலப்பறையை பார்த்துக்கொண்டு தான் இருந்தனர்.

"ஏன் மாமா இப்ப இவங்க மூணு பேரும் யாருக்காக இவ்ளோ சாப்பாடு வெரைட்டி வெரைட்டியா ரெடி பண்றாங்க.." சந்தேகமாக கேட்டான் அஜய்.

"அட மாமா உங்களுக்கு தான் தெரியுமே, அண்ணா போன் பண்ணி கவி கிடைச்சிட்டா, அவள வீட்டுக்கு கூட்டிட்டு வரேன்னு சொன்னாரே மறந்துடீங்களா.." என்றான் யாதவ்.

"அது எனக்கு தெரியாதா டா, கவி என்ன ஒத்த ஆளா இவ்ளோத்தையுமா சாப்பிடப் போறா.. அவளுக்கு பிடிச்சது என்னவோ அதை செஞ்சா போதாதா.."

"மாப்ள, ஆத்வி தான் சொன்னானாம் வகை வகையா சமைக்க சொல்லி.. அதோட ஏதோ ரெண்டு சர்ப்ரைஸ் வச்சிருக்கானாம், என்னனு கேட்டேன், நேர்ல வந்ததும் நீங்களே பாத்து தெரிஞ்சிக்கோங்கனு சொல்லிட்டான்.." விக்ரம் சொல்லிட, ஆதி அமைதியாக வேடிக்கைக் பார்த்தபடி இருந்தான்.

"அது என்ன அவ்ளோ பெரிய சர்ப்ரைஸு, அதுவும் ரெண்டு.. வரட்டும் வரட்டும் அப்டி என்ன பெரிய சர்ப்ரைஸ்னு நேர்லே பாத்து தெரிஞ்சிப்போம்.." என்ற அஜய் நைசாக கிட்சன் சென்று சுட சுட இருந்த மெதுவடையை சுட்டு, ஏழுமாத கருவோடு மட்டன் கிரேவிக்கு ரெடி செய்துக் கொண்டிருந்த மனைவிக்கு வடையை ஊட்டிட.

"அச்சோ அஜய் அம்மா ஸ்வாதி எல்லாம் இருக்காங்க.." கண்ணால் சமிக்கைக் காட்டவும்,

"அவங்க யாரும் கண்டுக்க மாட்டாங்க நீ சாப்பிடு ஆருமா.. பாக்கவே ரொம்ப களைப்பா இருக்க.." என்றது எல்லாம் ஆருவை தாண்டி மற்ற இருவருக்கும் கேட்டிட,

"கேட்டீங்களா அத்தை அண்ணி களைப்பா இருக்காங்களாம், அதுக்கு இவர் மெதுவடை ஊட்டி விடுறாராம்.. ஏன் நம்ம விதவிதமா ஜூஸ் போட்டு அண்ணிக்கு கொடுத்ததை எல்லாம் இவர் பாக்கவே இல்லையாமா?.." மாமியின் காதில் ஸ்வாதி கிசுகிசுக்க,

"நீங்க என்னதான் கொடுத்தாலும் நான் வந்து பாசத்தோட கொடுக்குற மாதிரி ஆகாது ஸ்வாதிமா.." மற்றொரு வடையை வேண்டாம் வேண்டாம் என்று அலறி அடித்து தப்பிக்கப் பார்த்த மனைவி வாயில் திணித்தபடி சொன்ன அஜய்க்கு, ஸ்வாதி பேசியது கேட்டு விட்டது.

"ஆனாலும் இந்த லொள்ளு இருக்கே.. பாவம் அண்ணா அண்ணி, விடுங்க அவங்கள.. களைப்பா இருக்கவங்களுக்கு உங்க ஊர்ல மெதுவட தான் கொடுப்பாங்களாக்கும்.." சிரிப்பாக சொன்ன ஸ்வாதி, ஆருவை தன்னோடு இழுத்து நிறுத்தி வைத்து குடிக்க தண்ணீர்க் கொடுக்க, வேக வேகமாக தண்ணீர் குடித்த பிறகு தான் அவளுக்கு மூச்சே வந்தது.

இவர்களின் லூட்டியை கண்டு சிரித்தபடியே மித்ரா வேலைகளை முடிக்கவும், ஆத்வி தன் மனைவியோடு வீட்டுக்கு வரவும் சரியாக இருந்தது.

கவிஇ..என்று மொத்த பெண்களும் அவளை சூழ்ந்து,
"எங்க டி சொல்லாமக் கொள்ளாம ஓடிப் போன.." என்று ஸ்வாதியும்,

"என்ன பிரச்சனையா இருந்தாலும் எங்கிட்ட சொல்லி இருக்கலாமே கவிமா.." என்று மித்ராவும்,

"இனிமே வீட்ட விட்டு ஓடிப் போற வேலை வச்சுக்கிட்ட, ஓடுற கால ஒட்ட நறுக்கி விட்டுடுவேன்.." ஆருவும் அவளை கடிந்துகொள்ள,

ஆண்கள் எல்லாம் கவியை கண்டு விட்டு அவளுக்கு பின்னால் வந்தவர்களை, யார் இவர்கள் எனும் விதமாக பார்த்து வைத்தனர்.

சுபியோ தன் கணவனை கண்ட மகிழ்ச்சியிலும், 'இத்தனை அருகில் இருந்தும் தன்னை அவர் யாரோ போல் பார்க்க வேண்டிய சூழ்நிலை வந்துவிட்டதே' என்ற சோகத்திலும், முந்தானையால் வாய் பொத்தி அழ, அம்மா என ஆளுக்கு ஒருபக்கம் அவளை தாங்கி இருந்தனர், ஆத்வியும் விஷாலும்.
 

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 70
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top