Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖
Administrator
Staff member
Messages
300
Reaction score
215
Points
63
அத்தியாயம் - 71

"ஆத்வி இவங்க யாரு புதுசா இருக்காங்க.." புதிதாக வந்திருந்த தாய் மகன் இருவரையும் கண்டு அஜய் கேட்டிட,

"இன்னும் கொஞ்ச நேரத்துல தானா தெரியும் மாமா..

சித்தப்பா இவங்க யாருனு உங்களுக்கு தெரியிதா.." என்றான் வாய் பொத்தி அழுதுக் கொண்டிருந்த சுபியை தன் தோளோடு அணைத்துக் கொண்டு.

"தெரியலயே ஆத்வி, யாரு இவங்க.." என்ற விக்ரமின் பார்வை அழுத்தமாக சுபி மீது ஊடுருவியது. ஆனாலும் முகம் மாறிப் போனதால் தன் மனைவி தான் என்பதை கண்டறிய முடியாத இக்கட்டான நிலை அவனுக்கு.

கணவனின் வார்த்தையில் நெஞ்சி வெடிப்பது போலாகிட மேலும் குலுங்கி அழுதவளை ஆத்வி சமாதானம் செய்வதை கண்டு மொத்த குடும்பமும் புரியாமல் விழித்து நிற்க,

"ஆண்டி.. விஷால்.. நீங்களா.." ஆசையோடு ஓடி வந்த ஸ்வாதி சுபியை அணைத்து விடுத்தவளாக,
"என்னாச்சி ஆண்டி ஏன் அழறீங்க, விஷு ஏன் ஆண்டி அழறாங்க என்னாச்சி இவங்களுக்கு.. அத்தான் நீங்களாவது சொல்லுங்க ப்ளீஸ்.." நிறுத்தாமல் அழும் மாமியை கண்டு பதறிப் போனாள்.

யாதவ்க்கோ அழுதுக் கொண்டிருந்த தாயை கண்டு இதயம் வேகமாக துடிக்கத் தொடங்க, "டேய்.. உனக்கும் இவங்க யாருனு தெரியலையா.." என்றான் முழித்து நின்றவனிடம்.

"இல்லண்ணே தெரியல யார் இவங்க?" அவனும் அதே கேள்வியை தான் கேட்டான் தடுமாற்றமாக.

"ஆத்வி.. இவங்க யாருன்னே சொல்லாம எல்லார் கிட்டயும் யாரு யாருன்னு கேட்டா எப்டிடா தெரியும்.. பாவம் ஏன் அழறாங்கன்னு கூட தெரியல, யாரு டா இது.." மித்ராவின் நெஞ்சமும் படபடத்து விட்டது, உடன்பிறந்த தங்கையின் அழுகையில்.

"உங்களுக்கு கூட தெரியலயா மாம்..?" மீண்டும் அதே கேள்வியை கேட்டு முடிக்கவில்லை,

"ஐயோ.. அக்காஆஆ.. உனக்கு கூடவா இந்த பாவிய அடையாளம் தெரியல.." பாய்ந்து ஓடி தமக்கையைக் கட்டிக் கொண்டு உடல் குலுங்க கதறவும், இதயம் படபடத்து உடல் சிலிர்த்து போக தங்கையை தானாக அணைத்துக் கொண்டவளுக்கும் கண்கள் தானாக கலங்கிட,

"அ.ஆ.த்வி.. ய்.யாரு டா இது.." என்றவளின் குரல் நடுங்கி விட்டது.

"என்ன மாம் கேள்வி இது, உங்க தங்கச்சி சுபத்ராவ உங்களுக்கு தெரியலயா?" என்றதும் மித்ரா கண்ணீரோடு அதிர்ந்து போக,

"ஏன் சித்தப்பா உங்க வைஃப் சுபிய மறந்து போய்ட்டீங்களா என்ன.. ஏன்டா உனக்கும் அம்மாவ தெரியலயா.." என்றான் புன்னகையோடு.

"என்ன.." என்ற அதிர்ச்சியோடு விக்ரம் ஒருபக்கம் உறைந்து நிற்க, யாதவ்க்கும் அதே நிலை தான். மற்ற அனைவரும் அதிர்ச்சியும் மகிழ்ச்சியும் ஒருசேர நின்றனர்.

"சுபிஇ.. நீயா இது, எப்டி டி இருக்க.. இத்தனை நாளா எங்க எல்லாரையும் விட்டு எங்க இருந்த, இது என்ன டி முகமெல்லாம் மாறி ஐயோ.. என்ன நடந்துச்சு உனக்கு.." மித்ராக்கு வார்த்தைகளே வரவில்லை. தங்கையை இத்தனை வருடம் கழித்து பார்த்த மகிழ்ச்சியிலும், அவள் முகம் மாறி இருப்பதை தாங்க முடியாத துக்கத்திலும்.

"எல்லாம் விதிக்கா.. இத்தனை வருஷமா உங்க எல்லாரையும் மறந்துட்டு வாழணும்னு விதி.. இப்ப வந்த நினைவுகள் அப்பவே எனக்கு வந்திருந்தா ஒரு நிமிஷம் கூட காத்திருக்காம, உங்க எல்லாரையும் தேடி ஓடோடி வந்திருப்பேன்..

ஆனா கடவுள் எது செஞ்சாலும் அதுல ஒரு அர்த்தம் இருக்கும்.. நான் இல்லைனா என் இடத்துல இருந்து நான் பெத்த பிள்ளைய பாத்துக்க நீ இருந்த, ஆனா என் பையன் விஷால்க்கு யாருமே இருந்திருக்க மாட்டாங்க க்கா.." என்று அழ, ஆதரவாக அவள் முதுகை வருடிக் கொடுத்த மித்ராக்கும் அழுகை நிற்கவில்லை.

"அழாதே சுபி.. நீ சொன்ன மாறி எல்லாம் கடவுள் சித்தம் தான்.. எது எது எப்போப்போ நடக்கனுமோ அது அது அப்போப்போ தான் நடக்கும்.. எது எப்டியோ இத்தனை நாளும் இறந்து போய்ட்டதா நினைச்சிட்டு இருந்தவ திரும்ப உயிரோட வந்ததே போதும்..

இதுக்கப்றம் இருக்க வாழ்க்கையாவது நிம்மதியா சந்தோஷமா எல்லாரும் ஒன்னா வாழ்ந்தா போதும்.." அக்கா தங்கை இருவரும் மாறி மாறி ஆறுதல் கூறியபடியே கண்ணீர் விடுவதில் சுற்றம் மறந்துப் போயிருக்க, ஆத்வி அனைவருக்கும் புரியும்படி சுபியின் கடந்து வந்த பாதையை சொல்லி முடிக்க, கணவனின் நெஞ்சம் தான் கனத்துப் போனது.

"ஸ்.சுபி.." என்ற விக்ரமின் அழைப்பில் இதயம் நடுங்க கணவன் புறம் திரும்பியவள், வா என கை விரித்து கண்ணீர் அரும்ப நின்றவனிடம்,
"மாமாஆ.." அழுகையோடு ஓடி சென்று அணைத்துக் கொண்டவளை தானும் அணைத்து உச்சியில் முத்தமிட்டு கண்ணீர் விட்டவன்,

"முகம் மாறினா என்ன சுபிமா, நான் காதலிச்சி கல்யாணம் பண்ணிக்கிட்டது உன் மனசதேன்.. நான் கண் முழிச்சதுல இருந்து, நீ எங்கயாவது உயிரோட இருப்பேன்னு மனசு சொல்லிகிட்டே இருந்துச்சி.. அது இப்ப நெசமாகிடுச்சி.. இத்தனை நாளும் உயிர் பிழைச்சியும் நடைபிணமா வாழ்ந்துட்டு இருந்த எனக்கு பெரிய பலம் வந்துடுச்சி சுபி..

இந்த உலகத்துல புருஷன் இல்லாம கூட மன தைரியத்தோட வாழ்ந்து, நிறைய சாதிச்ச பெண்கள் இருக்காங்க, ஆனா ஒரு ஆணுக்கு அவன் மனைவி இல்லனா ஒரு அணுவும் இயங்காது சுபி.. ஏன்னா அவன் பலம் பலவீனம் எல்லாமே அவன் மனைவி ஒருத்தி மட்டும் தான்.. உடம்பளவுல ஆண்கள தைரியமா படைச்ச கடவுள் மனதளவுல தைரியம் இல்லாத கோழையா படச்சிட்டான்..

எது எப்டியோ பாதி உயிரா இருந்த எனக்கு நீ திரும்ப வந்து முழு உயிராக்கிட்ட.." சுற்றம் மறந்து மனைவியை கட்டி அணைத்து சிறுவன் போல் கதறியவனை கண்டு, அங்கு இருப்போருக்கும் கண்கள் கலங்கிட, தம் தமனது இணைகளை பார்வையால் அழுத்தமாக வருடிக் கொண்டனர்.

யாதவிடம் வந்த சுபி, தான் பத்து மாதம் ஈன்றெடுத்த மகனை ஆசையோடு தொட்டு உணர்ந்து. அழுகையோடே புன்னகைத்தவளாக, "யாதவ் கண்ணா.." என கட்டிக் கொள்ள, "அம்மா.." என தானும் அவன் அன்னையைக் கட்டிக்கொண்டு வார்த்தைகளின்றி பாசத்தை வெளிப்படுத்திக் கொண்டனர்.

அனைவருமாக ஒன்று கூடி அமர்ந்து மனநிறைவோடு சிரித்துப் பேச, விஷாலையும் அந்நியமாக கருதாமல் தங்கள் வீட்டு பிள்ளை போலவே நடத்தினர்.

தன்யாவை அருகில் அமர்த்திக் கொண்டு திவ்யாவை பற்றிக் கேட்டவளிடம், 'மூன்று மாதம் முடிந்ததும் அவள் புகுந்த வீட்டில் இருந்து வந்து, குழந்தையோடு கனடா அழைத்து சென்று விட்டனர்' என்றதும் வருத்தமான சுபி,

"அச்சோ கொஞ்சம் முன்னாடி நான் வந்திருக்கக் கூடாதா, எல்லாரையும் பாத்துட்டேன் அவ ஒருத்திய தவிர.." வருத்தமாக கூறியவளை உற்று நோக்கியபடி, அமைதியாக ஆதி அமர்ந்திருக்க,

எதார்த்தமாக அவன் புறம் திரும்பிய சுபி, உடல் நடுங்கிப் போனவளாக, "அக்காஆ.." என மித்ராவின் கரத்தை இறுக்கமாக பிடித்துக் கொண்டு, அவள் தோளில் முகம் புதைத்துக் கொள்ளவும், திடீரென்ற சுபியின் மாற்றத்தால் அனைவரும் புரியாமல் விழித்தனர்.

"என்னாச்சி சுபி ஏன் இப்டி கத்துற.."

"அங்க.. அங்க பாருக்கா. மாமா என்ன முறைக்கிறாரு.." ஆதியின் புறம் கை நீட்டியதில், மித்ரா மட்டும் இல்லாமல் அனைவரும் சிரித்து விட்டனர்.

"இன்னுமா ஆதிக்கு பயந்து சாகுற, அவன் பார்வையே அப்டிதா பயப்படாத சுபி.." விக்ரம் சொல்லவும், லேசாக நிமிர்ந்து ஆதியை பார்க்க, அவன் அப்போதும் போஸ் மாறாமல் தான் விரைப்பாக அமர்ந்திருந்தான்.

அவர்கள் திருமணத்தின் போது ஆதி, நிலனை சுட்டதிலிருந்தே ஆதியை கண்டால் தானாக பயம் ஒட்டிக் கொள்ளும். முடிந்தளவுக்கு அவன் கண்ணில் சிக்கவே மாட்டாள். மீறி சிக்கினால் இப்படி தான் டெரரர் முகத்தை வைத்தே அவளை பயம்புறுத்தி விடுவான். இவள் பயம் கண்டு இப்போது போல் அப்போதும் அனைவரும் சிரித்து விடுவர். வயதாகியும் இவர்கள் அலம்பல் குறையவில்லை போலும்.

"அடேய்.. ஏதோ ரெண்டு சர்ப்ரைஸ் இருக்குதுன்னு சொன்னியாம், நீ என்ன ஒன்னு தான் ரிலீவ் பண்ண இன்னொன்னு எங்க.." அஜய் தான் ஆத்வி தோளை தட்டி கேட்டான்.

"அட போங்க மாமா எனக்கு வெக்கமா இருக்கு.." மாமனின் தோள் சட்டையை வெட்கம் கொண்டு கிள்ளி எடுக்க,

"அய்யய்ய.. அட வெக்கம் கெட்டவனே இந்த அளவுக்கு நீ வெக்கப்படுற அளவுக்கு என்னத்தடா பண்ண, சட்டைய பிச்சிடாம கைய எடுத்துட்டு சொல்லு.." ஆத்வி கையை தட்டி விட்டான் அஜய்.

"மாம்ஸ் நீங்க மாமாவாக போறீங்க" என்றதும் அவனை மேலும் கீழும் முறைத்தவன்,

"அதான் உனக்கும் உன் தொம்பிக்கும் மாமாவாகி நான் படாத பாடு படுறேனே, இன்னும் வேற யாருக்கு டா நான் மாமாவாகனும்.. அதோ அந்த விஷு பயலுக்கும் இப்போ மாமாவாகிட்டேன் இது போதாதா?" என்றான் சலிப்பாக.

"அட மாமா.. என் பிள்ளைக்கு நீங்க மாமாவாக போறீங்கனு சொன்னேன்.." என்றதும் மூளையில் பல்ப் எரிய அவனை கண்டவன்,

"ஒஹோய்.. சூப்பர் டா ஆத்வி கலக்கிட்ட போ.." உற்சாகமாக அணைத்து விடுக்க, வீட்டில் உள்ள அனைவருக்கும் கூடுதல் மகிழ்ச்சியோடு கவியை கொண்டாடி விட்டனர்.

தாத்தாவாகப் போகும் மகிழ்ச்சியில் மகனை அணைத்துக் கொண்ட ஆதி, அப்படியே நசைசாக அவனை கார்டன் ஏரியாக்கு அழைத்து வந்து சில கணங்கள் வரை அமைதி காத்து,

"கவி திரும்ப வந்துட்டா, இப்ப அப்பாவாக போறே, பொறுப்புகள் கூடி போச்சி, இனிமே என்ன செய்ய போறே ஆத்வி.." தந்தையின் அழுத்தமான கேள்வி எதற்கென்று புரிந்து கொண்ட ஆத்வி,

"என் பொறுப்புகள் கூடினாலும் ஆசைய மறுக்க முடியாது இல்ல டாட், எனக்கு ரேஸ் பிடிக்கும், அதே அளவுக்கு என் குடும்பம் மனைவி பிறக்கப் போற குழந்தை எல்லாரையும் ரொம்ப ரொம்ப பிடிக்கும்.. குடும்பத்துக்காக என் பேஷன நான் விடணும்னு அவசியம் இல்லையே டாட்..

எனக்கு பிடிச்ச விஷயத்தை நான் செய்றதுல என்ன தப்பு இருக்கு, இதுக்காக நீங்க ஏன் டாட் இவ்ளோ வொரி பண்றீங்க..
'அடுத்த மாசம் உத்தர்பிரதேஷ்ல நடக்கப் போற ரேஸ்ல நான் கலந்துக்கக் கூடாதுன்னு சொல்ல தானே இவ்வளவு பேச்சும்.." தீர்க்கமாக கேட்ட மகனை மௌனமாக கண்ட ஆதி,

"நீ உருவான நாளுல இருந்து, இந்த உலகத்துக்கு நீ வர வரைக்கும் உன் அம்மா என்னென்ன கஷ்ட்டத்தை எல்லாம் அனுபச்சி இருப்பா, அவளை பாத்து ஒவ்வொரு நாளும் நான் எப்டி துடிச்சி இருப்பேன்.. நீ பிறந்ததும் நாங்க அனுபவிச்ச கஷ்டமெல்லாம் ஒரு நொடில பறந்து போய், உன்ன கைல தூக்கி கொஞ்சின அந்த நொடி நாங்க கொண்ட சந்தோஷத்துக்கு அளவே இல்ல..

அப்டி உன்ன பாத்து பாத்து வளத்து உனக்கு ஒரு சின்ன அடிப்பட்டாலும் துடிச்சி, பெத்துட்டோமேன்னு கடைமைக்கு வளக்காம, எங்க உயிரா நினைச்சி தான் இதுவரை உன்ன பாத்துட்டு இருக்கோம்.. உனக்கு ஒன்னுன்னா எங்களால தாங்கிக்க முடியாது ஆத்வி, அதை உன்னால இப்போ உணர முடியாது.. ஏன்னா இது தான் உன் வாழ்க்கையோட முதல் கட்டத்துவக்கம்..

நமக்கு உயிரானவங்களுக்கு ஒன்னுன்னா நம்ம எப்டி துடிச்சி போவோம்னு, உனக்கு பிறக்கப் போற என் பேரப்புள்ள உணர்த்தும்னு நான் நம்புற.. தன்னையே நம்பி காலம் முழுக்க நமக்கு துணையா வர போறவளுக்காக, நாமும் ஒரு படி இறங்கிப் போறதுல குறைஞ்சிட மாட்டோம் ஆத்வி..

ஒரு நிமிஷ சாவு கொடுமை இல்லடா, ஒவ்வொரு நிமிஷமும் நமக்கு பிடிச்சவங்களுக்கு என்னாகுமோனு பதறி துடிச்சிட்டு இருக்க வாழ்க்கை இருக்கே அதுதான் கொடுமையிலும் கொடுமை..

நான் என் வாழ்க்கையில இந்த மாதிரி கொடுமைய நிறைய அனுபவிச்சுட்டேன், ஆத்வி அனுபவிச்சிட்டே இருக்கேன்.." அவனை பார்த்து அழுத்தமாக சொல்லி விட்டு செல்ல, தந்தையின் வார்த்தைகள் ஒவொன்றும் செவியில் ரீங்காரமிட்டு மூளையை குடைய, தலையில் கை வைத்தபடி புல் தரையில் அமர்ந்துக் கொண்டான், குழம்பிய நிலையில்.

இரவு உணவை முடித்து விட்டு தம் தமது அறைகளில் தஞ்சம் புகுந்த ஒவ்வொரு ஜோடியும், மனநிறைவோடு தங்களின் இணைகளிடம் மனம் விட்டு பேசி மகிழ்ந்து போயினர்.

"இத்தனை நாளும் இல்லாம் இப்ப என்ன மேடம் முகம் பளிச்சின்னு பிரகாசிக்குது.." ஸ்வாதியின் அருகில் இடித்தபடி அமர்ந்தான் யாதவ்.

"பின்னே பிரகாசிக்காதா நான் பெரியம்மா ஆக போறேன், நீங்க சித்தப்பா ஆக போறீங்க, அதான் கையும் ஓடல காலும் ஓடல.." குதூகளித்த மனைவியை மேலும் நெருங்கி அமர்ந்து, அவள் இடைவளைத்து தன்னோடு இழுத்துக் கொண்டவன்,

"எனக்கும் சந்தோஷம் ஸ்வாதிமா அதென்ன நீ மட்டும் பெரியம்மா.." என்றான் யோசனையாக.

அதில் புன்னகைத்தவள், "கவிய விட நான் ஒரு வயசு பெரியவளாக்கும் அப்போ பெரியம்மா தானே வரும்.. இதுக் கூட தெரியலயா உங்களுக்கு" களுக்கென்று சிரித்தவளை பொய்யாக முறைத்த யாதவ்,

"என்கிட்ட உன் வயசு சொல்லியா டி லவ் பண்ண, இப்ப வந்து தெரியலைன்னா நான் என்ன பண்றதாம்.. இதுல ஹ.ஹஹான்னு.. சிரிப்பு வேற.." அவள் கன்னம் இடிக்க,

"ஏன் நான் உங்க ஆபிஸ்ல சேரும் போது என் டீடைல்ஸ் எல்லாம் கொடுத்து தானே ஜாயின் பண்ணேன், அதுல பர்த் டேட் பாத்து இருக்கலாமே.." என்றாள் வலிக்காத கன்னத்தை தேய்த்தபடி.

"அப்ப இருந்த சுச்சுவேஷன்ல அந்த நியாபகம் எல்லாம் வரல ஸ்வாதிமா, இப்ப அதுவா டி முக்கியம், நமக்கு நிறைய வேலைகள் இருக்கு, சீக்கிரம் என் அண்ணன பெரிப்பாவாக்கி நானும் அவன் முன்னாடி மீசைய முறுக்கி விட்டு கெத்தா நிக்கணும்..

வாவா.. டைம் வேஸ்ட் பண்ணக் கூடாது.." படபடத்தவனை கண்டு பிளந்த மனைவி வாயை அத்தனை அவசரமாக பற்றியயோடு, அவளை அள்ளி எடுத்துக் கொண்டாட, கணவனுக்கு வளைந்து போனவளோ, மேலும் சிரித்து சிணுங்கி அவனுள் அடங்கிப் போனாள்.

°°°°°°°

"மாமா நான் ரெடி போலாமா.." பட்டு சேலையில் தலை நிறைய மல்லிகையோடு வந்து நின்ற மனைவியை, கண் கொட்டாமல் கணவனை, கவியும் ரசித்து நின்றாளே!
பட்டு வேஷ்டி சட்டையில் நெற்றியில் சிறு கீற்றாக சந்தனமிட்டு, கழுத்தை ஒட்டிய தங்க சங்கிலி பளபளக்க, ஃபோன் பேசிக் கொண்டு இருந்தவனின் அழகில் சொக்கி.

"ஓய்.. என்ன டி புதுசா பாக்குற மாதிரி அப்டி பாக்குற.." சிறு மேடாக வெளி தெரிந்த வயிற்றின் மீது வைத்திருந்த அவள் கரத்தை பிடித்து தன்னோடு நிறுத்திக் கொள்ள,

"புதுசா தெரிஞ்சா புதுசா தான் பாப்பாங்க.." விட்டால் அவனை விழுங்கி விடுவாள் போலும்.

"ஓஹோ.. நீ கூட தான் இன்னைக்கு புதுசா இருக்க, நானும் பாக்கட்டுமா.." திருட்டுக் கள்ளன் அவளை மேலோட்டமாகவா பார்க்க கேட்டான்.

அர்த்தம் புரிந்த பாவையோ ச்சீ.. என அவன் நெஞ்சில் அடித்து, "கோவிலுக்கு போகும் போது என்ன வார்த்தை பேசுறீங்க, பிறந்தநாள் அதுவுமா வாங்கிக் கட்டிக்காம சீக்கிரம் வாங்க சுவாமிக்கு அர்ச்சனை பண்ணனும்.." என்றாள் முறைப்பாக.

"கண்டிப்பா போயாகனுமா பேபிஇ.." என்றான் கிறங்க வைக்கும் குரலில்.

"பின்னே போக வேண்டாமா.."

"ம்ஹ்ம்.. பேசாம இப்டி பண்ணா என்ன.."

"எப்டி.."

"ஃபர்ஸ்ட் பிறந்தநாள் பரிச திகட்ட திகட்ட எடுத்துகிட்டு, பிரெஷா கிளம்பி ஈவினிங் கோவில் போனா என்ன.." என்றவன் கரம் அவள் இடையை தேடி அலைபாய்ந்திட, ஒற்றை பிலீட் வைத்து கட்டிய சேலையை நன்றாக இறுக்கிக் கொண்டாள் கணவன் கைக்கு இடை சிக்காத வாறு.

"அதெல்லாம் நேத்து ராத்திரில இருந்து நிறைய பரிசு கொடுத்தாச்சு, இப்ப ஈவினிங் போலாம்னு சொல்லுவீங்க, அப்புறம் நைட் போலாம்னு சொல்லுவீங்க, அதுவும் போச்சுன்னா நாளைக்கு காலைல போலாம்னு பிட்ட போட்டு என்ன பண்ணுவீங்கனு எனக்கு நல்லா தெரியும்..

ஒழுங்கா கைய கால அடக்கி வச்சிக்கிட்டு கூட வரல, கண்ட இடத்துல மேயிற கண்ண நோண்டிடுவேன், வாங்க.." கண்களை உருட்டி மிரட்டி விட்டு அவன் அசந்த நேரம் அங்கிருந்து ஓடியவள் பின்னால்,

"எல்லாம் என் நேரம், தவிச்ச வாய்க்கு தண்ணி தர மாட்டேன்னு சொல்றாளே, இவ எல்லாம் ஒரு நல்ல பொண்டாட்டியா.." வாய்விட்டே புலம்பியபடி சென்றான் ஆத்வி.

அனைத்து உறவுகளும் ஆத்வியை வாழ்த்தி ஆசீர்வதித்து, கணவன் மனைவி இருவரையும் ஒன்றாக வழி அனுப்பி வைத்தனர் கோவிலுக்கு.

சுவாமியை இருவருமாக தரிசித்து விட்டு, ஷாப்பிங், பீச், பார்க், ஹோட்டல் என்று தங்களின் இனிய நாளை இனிமையாக கொண்டாடிவிட்டு இரவு வீட்டிற்கு வருகையில், மனைவிக்கு தெரியாமல் வாங்கிய அவளுக்கு பிடித்த டைரிமில்க் சில்க்கை மறைத்து வைத்துக் கொண்டவனின் எண்ணமெல்லாம், இனிப்பை ருசிக்கும் எறும்பின் சிந்தனை தான்.

இருவரும் மகிழ்ச்சியில் திளைத்து கரங்கள் கோர்த்து அதில் மாறி மாறி முத்தமிட்டு, அடிக்கடி கலைத்துப் போகும் இடமெங்கும் காரை நிறுத்தி, இதழ் கவ்வி எச்சிலை ருசித்து, கரங்கள் அவள் மென்மையில் மோட்சம் பெற்று வீடு வருவதற்குள், பெண்ணிதழை பஞ்சி மிட்டாயாய் பிச்சி தின்று விட்டான் கள்வன்.
 

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 71
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top