Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖
New member
Messages
22
Reaction score
4
Points
3
இதழ் மழை💋🌧️17

எத்தனை பெரியவீரனாக இருந்தாலும் ஆர்ப்பரித்து சீறிவரும் சுனாமியை அடக்கவா முடியும்...

அலறி ஓடவும் இங்கு வழியில்லையே எலும்பை நொறுங்கும் அரக்கன் பிடி... இதழ் மென்று தின்னும் அவனை அடித்து... அடித்து கைகள் தான் வலுவிழந்து போனது.. கண்ணீர் எது...
மழைநீர் எது... என தெரியாது இரண்டும் கலந்து கொட்டி தீர்க்க.. அவள் இதழுக்குள் உயிரை ஒளித்து வைத்தவன் போல ஆவேச தேடுதலில் இருந்தான் அரக்கன்.. எப்போது விடுனோ..

கத்தவும் வழியில்லை மேல் உதடு கீழ் உதடு அரக்கன் பல்பட்டு தும்சமானது நாவில் அவன் வித்தை தொடரா.. மதிமயங்கி போனாள் மங்கை..

எப்போது தரையில் சரிந்தாள்...எப்போது மிச்சம் சொச்ச உடைகள் கிழிக்கப்பட்டு காணாமல் போனது...எப்போது இருவருக்கும் மழைநீர் போர்வையானது... தன் மீது அசைந்தாடும் அரக்கனை தள்ளிவிட தோணாது அவன் வதனத்தில் வந்து போகும் உணர்வுகளில் தன்னை மறந்தாள்.. அரக்கன் பசிக்கு தன் உடலை விருந்தாக்கினாள்..

இத்தனை வருடம் உள்ளுக்குள் அடக்கி வைத்த வெறி வலி வேதனை அத்தனையும் உறைந்து கிடந்த பனிகடல் உடைபெடுத்து பாய கண்மண்தெரியாது கொடூர மிருகமாக அவளை வேட்டையாடினான் நக கீறில்கள் பல் தடங்கள் படாத இடமில்லை... அவ்வளவு வலியிலும் கத்தத புள்ளிமான் அவன் முகத்தை தான் பார்த்து கிடந்தாள்..உச்சம் ஏகி அவன் கத்திய கத்து வானம் இடிந்து விழும் பிரளயம் போல இடியொசை வானை பிளந்தது...

விடிய விடிய ஆவேசம் ஆட்டம் அடங்காது அவளை மிச்சமில்லாது பிச்சி தின்று அவள் மீதே விழுந்தவன் அவள் உயிரோடு இருக்கின்றாளா என்பதை கவனிக்க மறந்தான்..

ஏனோ இந்த மென் பஞ்சு தேகம் பிடித்துவிட்டது போல முகத்தை அங்கு புரட்டினான்..பிடித்த பொம்மையை யாரும் பிடுங்கி விட கூடாது என்று இறுக்கிக்கொள்ளும் சிறுவனின் இறுக்கம் அவன் பிடியில்..இதயத்தில் ஆழ குத்தி இருந்த ஈட்டியை பிடுங்கி எறிந்தது போல பெருபாரம் கரைந்து மழைநீரோடு போனது... புதிதாக பிறந்தவன் போல அத்தனை புத்துணர்ச்சி தலைதூக்கி பார்த்தான் அசையாது வானை வெறித்து நிலை குத்திய பார்வையோடு கிடந்தாள் இதழினி...

தூறல் தூவிய வானத்தில்.. கருமேகங்கள் மெல்ல கலைந்து வைகரை பொழுது நெருங்கியது..

உற்று பார்த்துக்கொண்டு இருந்த முகம் தூறல் அன்றி சிறு உணர்ச்சி கூட தென்படவில்லை இதழினி முகத்தில்..

அள்ளிக்கொண்டு போய் மெத்தையில் படுக்க வைத்து பக்கத்தில் படுத்து உறங்கி போனான்...

காலையில் போன் அடிக்க கண்விழித்தவன்... அரைகுறை உறக்கத்தில் எழுந்து போன் போட்டவனை ஆங்கிலம் அசிங்கமான நாலு கெட்ட வார்த்தையில் திட்டிவிட்டு திரும்ப... பக்கத்தில் கிடந்த இதழினியை கண்டவன்.. எவ்ளோ தைரியமிருந்தா என் பக்கத்துல படுப்ப அதான் எல்லா முடிஞ்சது இல்ல எழும்பி போக வேண்டியது தானா...

ஏய்ய்....

எந்திரிடி... அவளை உலுக்கினான் கண்மூடி கிடந்தவள் அவன் உலுக்களுக்கு அசைந்தாலே தவிர கண்ணை திறக்கவில்லை ஓங்கி ஓங்கி கன்னத்தில் தட்டி அடித்து எழுப்பினான்... எத்தனை கொலை செய்தான் கணக்கில்லை முதல் முறை எல்லாவற்றையும் உணர்த்தியவளை கொன்றுவிட்டான் அதுவும் வன்கொடுமை... அன்று தெரிந்தே பெற்றவளை கொன்றான்.. இன்று தெரிந்தே உற்றவளை?!...

அன்று ஓரு முறை நடுங்கிய கை இதோ இன்று தான் மீண்டும் நடுங்கிறது... கையை மெல்ல மூக்கிடம் வைத்தான் சுவாசம் நின்று பலமணிநேரமாகி விட்டது என்றது... ஏசி அறையில் முகம் வேர்த்தது ஓயாது பேசும் அவள் இதழ்கள் ஓராயிர காயங்களுடன்..அசையாமல் கிடந்தது..

இதயத்தில் காது வைத்து கேட்டான்.. "உன்னை மட்டும் தான் நேசிச்சேன் அதுக்கு பரிசா வேதனை தந்து கொன்னுட்டீயே.. எல்லாரும் உன்னை அரக்கனு சொன்னாங்க நான் அப்படி நினைக்கலையே உன்னை மனிஷான தானே பார்த்தேன்... உங்களை காதலிச்சது தப்பா?!.... கடைசியாக மூச்சை நின்றுத்திய போது அவள் இதயத்தில் விம்மி துடித்த வார்த்தைகள் இவை அரக்கன் செவியை அடைந்தது ஆனால் இப்போது..

துடிக்கவில்லை...

அவள் செய்த குற்றம் என்ன? காதலா!ஆம் காதல் தான் அப்போ மரண தண்டனை தானா!..

"உன்னை நல்லா பாத்துப்பேன் மாமு"

யாரோ சுத்தியல் கொண்டு இதயத்தில் ஓங்கி அடித்தது போல வலியெடுக்க..

"செத்துட்டா டா ஹாஹாஹா செத்துட்டா சந்தோசப்படு... இனி இந்த மாதிரி கன்றாவி பீலிங்ஸ் உனக்கு வரவே வராது இனி நீ ஹாப்பியா இருக்கலாம்... நாள் முழுக்க இவளை நினைக்கவே தேவையில்ல அந்த பாரின் டாக்டர் சரியான பைத்தியகாரன் இந்த உலகத்துலயே இவதான் உனக்கானவளாம்... ஆனா நீ வீரன் டா காதலிச்சவளையே கொன்ன பாத்தியா இந்த உலகத்துல உன்னை வெல்ல எவன்டா இருக்கான் இந்த சின்ன முயல் குட்டிகிட்ட அடங்கி போய்டுவீயா கொன்னுட்ட இல்ல...பிச்சி தின்னு கொடூரமா கொன்னுட்ட இல்ல...

மனசாட்சியின் ஒவ்வொரு வார்த்தையும் கற்பாறை இதயத்தில் விரிசல் விட...

ஸ்டாப்பிட்.... அறை அதிர கத்துக்கொண்டு எழுந்தான்... புடைத்த பளிங்கு மார்பு ஏறி இறங்க மூச்சை வேகமாக இழுத்து விட்டவன்..

நா நா... கொ... ல்..லலா. இதழ்.. இதழ்..

"நானும் சாகலா...மாமு"

ஈனஸ்வரத்தில் குரல் வந்த பக்கம் திரும்பினான் அவன் படுக்க வைத்தது போல அப்படியே தான் இருந்தாள் இவனைப் பார்த்தபடி ... பொட்டு உறக்கமில்லாத கண்கள் ரத்தமென சிவந்து அரைமயக்க விழிகளில் அவனை பார்த்து மென்புன்னகை புரிய..

அந்த மென்புன்னகை அரக்கன் இதயத்தை கூர்வாளால் குத்தி கிழித்தது ...

ஒரு கணம் தடுமாறி மறுகணம்.. அவள் முகத்தை பார்க்காமல் வேகமா இறங்கி ரெஸ்ட் ரூமுக்குள் புகுந்தான்...

குளித்து மேல் சட்டை அணியாமல் ஒயிட் பேண்ட் அணிந்து போன வேகத்தில் திரும்பி வந்தான்...

கலைந்த ஓவியமாக கிடந்தவள் அந்த மென்புன்னகை மாறாது இவனை தான் பார்த்தாள்..

"அந்த புன்னகை ஏதோ செய்ய பல்லைக்கடித்து ஏய்.. என்னடி சொகுசா படுத்திருக்க எந்திரிடி"...

நானும் அதுக்கு தான் அப்போதிலிருந்து முயற்சி பண்றேன் என்னால அசை கூட முடியல...

எப்போதும் ஈரத்துடன் மினுமினுக்கும் இதழ்கள் வறண்டு இதழெல்லாம் வரிவரியாக ரத்தம் கசிந்து அசைக்க கூட முடியாது திணறி மரண படுக்கையில் கடைசி வார்த்தையை பேசுபவள் போல மூச்சு இழுக்க பேச...

இரக்கமே இல்லாது கேட்டனே அடுத்த வார்த்தை...

"என்ன நடிக்கிறீயா"...கேக்கும் போது உள்ளுக்கு ஒரு நடுக்கம்..

கண்ணை மூடி... அதற்கும் புன்னகை தந்தழள் இதழை தான் அசைக்க முடியவில்லை ஆனால் சிரிக்கிறாள் என்பது தெரிந்தது... மரண வலியிலும் சிரிக்க சிலரால் மட்டும் தான் முடியும்..

விடாகொண்டான் விடாது... "எந்திரி" என்றான் ஏனோ இதழினியை இப்படி பார்க்க அவனுக்கு பிடிக்கவேவில்லை அதற்கு காரணமும் தான் தன் என்பதை அவன் மூளை ஏற்க மறுத்தது...

மு..டியல

வேகமாக நடந்துவந்தவன் கழுத்து வரை போர்த்தி இருந்த போர்வை விலகினான் கை போர்வையோடு அந்தரத்தில் நின்றது...

மனித மிருகம் மென் இதழை பிராண்டி வைத்திருந்தது... கைநடுங்க மீண்டும் போர்வையை கழுத்து வரை போர்த்தி விட்டான்...

அவளை பார்க்காமல் போனை எடுத்துக்கொண்டு பால்கனிக்கு போனவன் அடுத்த ரெண்டு நிமிடத்தில் ஒரு பெண் டாக்டர் வந்திருந்தார்...

சோபாவின் அமர்ந்திருந்த அரக்கன் முன் மருத்துவர் நிக்க..

ம்...என்றான்..

"கவனிக்காம விட்டா இன்னைக்கு நைட்டிக்குள் அந்த பொண்ணு செத்துடும் சார்... முன் இருந்த டீப்பாய் சுக்கு நூறாக உடைந்து சிதறியது.. அவன் பார்வையில்... ஏற்கனவே பத்தடி தூரத்தில் நின்றவர் இன்னும் இருவது அடி தூரத்தில் போய் நின்றார்...

கட்டிலில் படுத்திருந்தவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு "மேலே சொல்லு..என அமைதியாக நின்றான்...

அவங்களுக்கு அல்சர் இருக்கு சார் தூக்காம உடம்பு கெடுத்து வெச்சிருக்காங்க... அப்புறம் இது... தயங்கிய பின்.. மருந்து போட்டா சரியாகிடும் சார்.. உடம்புல சுத்தமா எனர்ஜி வத்திப்போய் இருக்கு.. அவன் தான் நேற்றிரவே கண்டு விட்டனே ஓட்டிய வயிறு சதையில்லாத தேகம்.. தன் வலி வேதனையை போக்க உயிரோடு ஒருத்தியின் உணர்வுகளை கொன்று விட்டேனே..

கண்ணைமூடி திறந்தவன்...

அவுட்...

ஓடாத குறையாக அந்த டாக்டரம்மா வெளியே ஓடியது..

நேராக போய் அவள் அருகே பாண்ட் பாக்கெட்டில் கை வைத்து நின்றான்

"என்கிட்ட ஏதாவது சொல்லணுமா இல்ல திட்டனுமா'...

சொல்லணும்..

ம்.. என்றான்..

நா செத்துப்போய்ட்டா என் அப்பாஅம்மா கிட்ட சொல்லிடாதீங்க நா எங்கேயோ ஓடி போய்ட்டேனு சொல்லிடுங்க..அவங்க மகளா அப்பாஅம்மாவுக்கு நான் எதுவும் செஞ்சது இல்ல..

உங்களுக்கும் நான் கொடுத்த வாக்கை காப்பாத்த முடியல அதுக்கு ஈடா என் உயிரை வெச்சிக்கோங்க

ப்ளீஸ் சார் என் அப்பாஅம்மாவை விட்ருங்க.. விழிரோம் வழிந்த கண்ணீர் காதில் இறங்கியது...

"ஓ கே"...

என்னை திட்டுனுமா?

"இல்லை சார்"..

ஏன் உனக்கு என் மேல கோவம் வரலையா...மரண வலி கொடுத்திருக்கேனே....

"நா உங்களுக்கு குப்பை தானே சார் ஆனா நீங்க எனக்கு கிடைச்ச வைரம் சார் ரொம்பவே காதலிக்கிறேன் அதான் இந்த வலி பெருசா தெரில போல.. யாருக்கும் உதவாத இந்த ஒடம்பு உங்க தாகம் தணிச்சதே அது போதும் சார் நா சந்தோசமா சாக...

நா ஆசைப்பட்டது போல அனாதையா சாகல எனக்கு அப்பாஅம்மா இருங்காங்க.. என் அண்ணன் நந்தன் வேடன் இருக்கான்.. இதுதான் உயிர் காதல்னு காட்டின என் புருஷன் இருக்காரு.. இந்த ஒலகத்துல நான் தான் சந்தோசமான பணக்காரியா சாக போறானே... கண்ணீர் நிக்காமல் வழிய கண்ணில் பழைய குறும்பு மின்ன சிரித்தாள்..

என்ன ஒரு குறை தாலி இல்லாம போறேன்...

பேசிக்கொண்டு இருந்தவள் ஆங் என விழி விரிக்க..

வறண்ட இதழ்கள்...
வருணபகவானி மென் முத்ததில் நனைந்தது..

இதழ் மழையில் நனைந்திடுமா❣️...
 

Author: vinnarasi novels
Article Title: இதழ் மழை💋🌧️17
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top