Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖
New member
Messages
22
Reaction score
4
Points
3
இதழ் மழை💋🌧️19


விடியலில் மழை நின்றும் கூரையில் மிச்சம் சொச்ச நீரும் சொட்டு சொட்டாக விழுந்து ரிங்க்டோன் இசைக்க..

கதகதப்பான பாறைக்குள் அடைக்கலம் புகுந்த சிட்டி குருவி இன்னும் இன்னும் சொகுசாக புதைந்துக்கொள்ள ...

இதுவரை காணாத இதம்.. மெல்ல மெல்ல விலகி.. ஏதோ தன்னந்தனியே தன்னை விட்டு போவது போல இருக்கவும்.. உறக்கம் கண்ணை இழுத்தாலும் பஞ்சு மெத்தை முள்படுக்கையாக குத்த... முழிப்பு தட்டி எழுந்தாள் இதழினி..

குட்டி கண்ணை திறக்காது தனக்கு இன்பம் தந்த பாறையெங்கே என கைகள் துலாவ...


ஓய்... இதழ்.. எழுந்துட்டியாடி.. பட்டென கண்ணை திறந்தவள்.. முகத்துக்கு மிக அருகே... குப்பென்று வீசுப் பாரின் சோப் வாசம் ஆளை மயக்க...

முகத்தை பின்னுக்கு இழுத்து... மூக்கை பொத்திக்கொண்டாள்...

பன்னீரில் குளித்துவிட்டு வந்த ஒயிட் ரோஸ் போல எவ்வளவு அழகு... உலகிலே இவன்தான் ஆணழகனோ... பெண்ணின் அழகை சொல்லித்தானே உலகம் வர்ணித்து பழக்கம் இவன் அழகை என்னவென்று சொல்ல...அதுவும் அந்த நீலகண்கள்..

ஒய் என்னடி...இவ்ளோ பச்சையா சைட் அடிக்கிற..


சார் ஒன்னு சட்டைய போடுங்க இல்ல தள்ளி நின்னு பேசுங்க..

அடிங்கு இது என்னோட ரூமு...

நா மட்டும் என் ரூமுனுனா சொன்னேன்.. வயசு பொண்ணு முன்னாடி இப்படியா நிப்பிங்க மனசு தடுமாறுது இல்ல... நீங்க அழகுதான் அதை எப்பவும் காட்டிக்கிட்டே சுத்தணுமா...

என் ரூல இந்த டவல் கூட இல்லாம இருப்பேன் உனக்கென்னடி ஹான்.. மனசு தடுமாறினா என்ன தொட்டு கூட பாரு.. எனக்கொரு பிரச்சனையும் இல்ல.. அப்புறம் வயசு பொண்ணா இவன் நக்கலாக அவளை மேலிருந்து கீழ் வரை பார்க்க..

இவளுக்கு குட்டி கோவம் முளைத்தது.. காதலிக்கிறேனு சொன்ன பொண்ணை கதற கதற எடுத்துக்கிட்டீங்க..நா இன்னும் வயசு பொண்ணுதான்.. அன்னைக்கு என்ன நடத்துச்சினு இப்போ கூட என்னால உணர முடியல தெரியுமா....

தவளை தன் வாயால கெடுமாம்... எதிரே இருப்பவன் கோணல் புன்னகை அறியாது வேறு பக்கம் முகத்தை திருப்பி பேசிட்டு இருந்தவள்.. என்ன பதிலே காணும் இவள் திரும்ப இச்சென்று இதழை சிறையெடுத்தான் அரக்கன்...

தப்பாச்சே.... உணரலையா... உணர வைக்கவா...அந்த ஆரஞ்சு விழி நீலமாக மாற....

அய்யய்யோ என் வாயே எனக்கு கொல்லி வைக்க பாக்குதே... ஆண்டவா.. சார் சார்... ப்ரஷ் பண்ணல சார்...

சரிவா பண்ணிவிடுறேன்..

கை நல்லா தான் இருக்கு.. நா நானே...

அரை மணி நேரம் கழித்து நேத்து போலவே தூக்கிவந்தவன் கையில் செவ்வானமாய் சிவந்து.. அவன் முகம் பார்க்க முடியாமல் முகத்தை மூடிக்கொண்டாள்...

மருந்து போடனும்..

எழும்பி ஓடப்போனவளை கொத்தாக பிடித்து அமுக்கி மருந்தை போட்டு விட்டான்...மருந்து காயாட்டும் டிரஸ் போடாத..

உலகத்திலே அடிச்சு அடிச்சு காயம் கொடுத்து மருந்துப் போட்டு அது ஆற வரைக்கும் காத்திருந்து திரும்ப அடிச்சி திரும்ப காயப்படுத்துற ஒரே சைக்கோ புருஷன் இவனா தான்யா இருப்பான்..

ப்ரேக்பாஸ்ட் நந்தன் செய்திருக்க..அதை எடுத்துக்கொண்டு மேலே வந்தான்..திட்டினாது போதும் எழும்பு..நா நானே... என ஆரம்பிக்கும் போதே கையால் வாயை மூடிக்கொண்டாள்..

ம்.. குட்.. வாயை திற...

நீங்க சாப்பிடலையா..

இல்ல...

அதான் இவ்வளவு இருக்கே கொடுங்க.. பிடுங்கி அவனுக்கும் ஊட்டி விட்டாள் இதழினி ...

மெல்ல மெல்ல அறைக்குள்ளே நடக்க.. லேப்டாப் தூக்கி மடியில் வைத்து மெத்தையிலமர்ந்து வேலை செய்துக்கொண்டு இருந்தவன் அவள் போகுமிடமெல்லாம் ஒரு கண்ணை வைத்திருந்தான்....

ஏன்டி வலிக்குதுனு சொல்லிட்டு எதுக்குடி நடக்கற...

சும்மா படுத்திருந்தா சொகுசுக்கு பழகிடும் சார்.. எப்படியும் உடம்பு சரியானதும் குப்பையா தூக்கி காடசி வெளியப்போட போறீங்க அதான்.. எதாவது முகத்தில் உணர்வு வருமா என.. உத்துப்பார்க்க..

அதுவும் சரிதான் என்றான்..நிமிர்ந்து பார்க்காமல்..

கால்கள் கொஞ்சம் வலிக்க...

சாத்திருந்த கதவு பக்கத்தில் கையை ஊன்றி யப்பாஆ..வலி முணாங்களோடு சுவற்றில் சாய்ந்து தரையிலமர்ந்தாள்.. எவ்ளோ நேரம்தான் சுத்தி சுத்தி பார்ப்பது பேசாமலும் இருக்க முடியலையே...

வேடனா இருந்தா.. இஷ்டத்துக்கும் திட்டலாம் கடுப்பேத்தி குஷியா இருக்கலாம்.. அவனுக்கு கோவம் வந்தாலும் பய புள்ள சங்கிலி இருக்கு கிட்ட கூட வரமாட்டான். இந்த காட்டான் அப்படி பேசுற வாய்லயே மிதிப்பானே..

ப்ச் இப்போதான் ஒண்ணு மண்ணா ஆகிட்டோமே.. பேசுவோமா... வேணா இதழு குறுக்கு ஏற்கனவே டேமேஜ்.. நீ வேற வாயை குடுத்து கூறுகட்ட வெச்சிடாத.. மனசாட்சி கெஞ்சிட..

என்னிக்கி நா உன்னோட பேச்சைக் கேட்டு இருக்கேன்..

சார்..

ம்??..கண்ணு ரெண்டு லேப்டாப் உள்ளே இருக்க..

வேலைக்கி போகலையா?..

ஓஹோ என்னை வேலையாக்கி அனுப்பிட்டு மேடம் ஜாலியா இருக்க போறிங்களா..

ஜாலியா இருந்ததை நீங்க பாத்தீங்கஆ??!

இல்லையா பின்னா...

அங்கன எம்ஜிஆர் பாடமா ஓடுது அங்குட்டே பாத்துட்டு பேசுறீங்க..

என்னடி.. உனக்கு..

இல்ல நேத்து வேலைக்கு போகலானு பத்து கோடி லாஸ்னு சொன்னிங்களே அதான் கேட்டேன்.. பக்கத்து வூட்டு அக்காகிட்ட கதையளப்பது போல குத்தவைத்து உக்காந்து இவள் வம்பு வளக்க எப்படியும் மனசும் ஒடம்பும் புண்ணாக போவது உறுதி..

இன்னைக்கு லாஸ் ஆகுற 10 கோடியும் சேர்த்து 20 கோடியா உன் கணக்குல எழுதிடுறேன்.. அவன் சீரியஸாக கீபோர்ட் தட்டியபடி சொல்ல..

ஆக இந்த ஜென்மத்துல என்னை வெளிய விட்ட மாட்டீங்க..

புரிஞ்சா சரி...

சார்ர்...

ம்...

ரொம்ப நாள் ஒரு சந்தேகம்.... கோடி கோடினு சொல்றீங்களே... அந்த கோடிக்கு எத்தனை ஜீரோ வரும்னு சொல்லுங்களேன்..தன் பெரிய சந்தேகத்தை கேட்டுவிட்டு பதிலுக்கு அவன் முகத்தை பார்க்க...

அவளை நிமிர்ந்து பார்த்தவன்... மாஸ்க்கு இல்லாத அவன் முகம் பேரழகுதான் அதிலும் அழகாய் சிரிக்கிறானே.. இது இது அரிதாக தோண்றும் வால் நட்சத்திரம் போல .. பிறந்த குழந்தை முதல் முதலாக சிரிக்குமே அந்த குட்டி பாலகனின் சிரிப்பு .. காண கோடி கண்கள் வேண்டும்

தன்னை மறந்து இதழினி ஆழ்ந்து பார்ப்பது தெரிந்ததும்.. சிரிப்பை மறைத்து..

செவன் என்றான்....

என்ன??..

ஏழுடி ஏழு ஜீரோ...காட்டாமாக வந்தது அவன் குரல்..

ஓஓ.. நன்றிங்க ஆனா அந்த ஸ்மைல் ரொம்ப அழகா இருக்குங்க உங்களுக்கு சிரிக்கும் போது இடதுபக்கம் கன்னத்துல குழி விழுது... தொட்டுப் பார்க்க ஆசைப்பட்டியே அதையும் சேர்த்து சொல்லு என்றது மனசாட்சி...

அவன் அமைதியா வேலை பார்க்க..

சார்... பாரி போனிங்களே எனக்கு என்ன வாங்கிட்டு வந்தீங்க..

உனக்கு எதுக்கு நா வாங்கிட்டு வரனும்..

நல்ல பதில் ஆனா மூச்சுக்கு மூணாயிரம் தடவை பொண்டாட்டி பொண்டாட்டினு கூவி கூவி கோழி விக்கிறீங்களே அந்த பொண்டாட்டிக்காகவாது வாங்கிட்டு வந்திருக்கலாம்.. இவள் பார்மல் பொண்டாட்டியாக முகவாயை தோளில் இடிக்க...

எனக்கு யாருக்கும் பிச்சை போட்டு பழக்கமில்லை ...

ம்க்கும்.. முதல்ல பிச்சை எடுக்கிறவன் தட்டை புடுங்காம இருங்க சார் ..

சீப்பா புடுங்கி எல்லாம் பழக்கம் கிடையாது துப்பாக்கி மாதிரி கையை நீட்டியவன் டுமில் என்றான் சுடுவது போல்..

இதழை நாவால் ஈரபடுத்தி எச்சில் விழுங்கினாள் இதழினி..

திரும்பவும் வெறுமை.. ப்ச்...

ஏன் சார் பாரின்ல தான் எல்லா வசதியும் இருக்காமே.. முக காயத்துக்கு மருந்து வாங்கி போடலாம் இல்ல...

ஒருமுறை அவளை கூர்ந்து பார்த்து விட்டு தன் வேலையை தொடர்ந்தான்..

என்னாச்சி சார்...மருந்து இங்க இருந்தா சொல்லுங்க நான் போய் கொண்டு வந்து போட்டு விடுறேன்..

உனக்கு ஏன் எப்பவும் என் இடது பக்க கன்னது மேல ஒரு கண்ணு... ஆமா உனக்கு ஏன் இவ்ளோ அக்கறை..

புருவம் உயர்த்தியவன் வார்த்தை சுளீரென என வர...

அக்கறை எல்லாம் ஒன்னுகிடையாது சும்மாதான் கேட்டேன் அப்புறம் ஒரு கண்ணு இல்ல ரெண்டு கண்ணுமே அங்கன தான் இருக்கு எனக்கு அந்த பக்கம் பிடிச்சிருக்கு..இந்த பக்கம் அழகா இருந்தாலும் ஆவணம் அதிகமா இருக்கு...

பாக்கவே பயமா இருக்கு.. ஆனா இந்த பக்கம் காயமிருந்தாலும்.. அதுக்குள்ள ஏதோ சாந்தமிருக்கு...கன்னம் கிள்ளி முத்தம் கொடுக்க தோணுது... தன்னை மீறி மனதில் இருந்ததை உளறிட்டு இருவந்தவள்..

டைப்படிக்கிற விரல்கள் அப்படியே நிக்க அவள் பக்கம் முகத்தை திருப்பாமல் கேட்டுக் கொண்டிருந்தான்...

இதழினியை நிமிர்ந்து பார்த்து...

இந்த காயமும் அருவருப்பும் உனக்கு பிடிச்சிருக்கா...ஏன் முகத்தை சரி பண்ண நினைக்கிறீயா...அரக்கன் முகத்தில் கடுமை கூடியது..

எப்படி இருந்தாலும் நீங்க அழகு தான் சார்..அரக்கன் பெயரும் அதுபோல நடந்துகிறதும் தான் பிடிக்கல.. எனக்கு என்னமோ இது உங்க குணமில்லையோனு தோணுது...

அவளை கொடூரமாக முறைத்தவனை பார்க்காமல்...

வெளியே தெளிந்த வானில் கருப்பு புகையாக மழை மேகங்கள் சூழ பெரும்புயலுக்கு அறிகுறியாக அமைதி நிலவியது ....அதை ரசித்தவள் சொன்னாள்..

எல்லா குழந்தையும் நல்ல குழந்தை தான்.. அதோட மனச நஞ்சையும் கலக்கலாம் அமுதாத்தையும் சுரக்க வைக்கலாம்.... பக்கத்தில் ஏதோ பொருள் ஒடைய பதறி திரும்பிவள்.. அவன் கோவம் கண்டு..

சாரி சார் கோவப்படாதீங்க... நாலு எடம் போறீங்க வரீங்களே யாராவது ஏதாவது பேசுவாங்களே அதுக்கு தான் .. உங்களுக்கு மனசும் கஷ்டப்படுமில்ல..

எனக்கு அப்படி ஓன்னு இல்ல..

அதுவும் சரிதான்... இதுக்கு மேல வாயை திறந்த குமட்டலையே குத்து வாங்குவ அமைதியா இரு இதழு..

அரைமணி நேரம் கூட ஆக வில்லை இந்தா ஆரம்பிசசுட்டா... அடுத்த இன்னிங்ஸ் இவ வாய் தான் இவளுக்கு சூனியம்...

சார்..

சார்ர்...

என்னடி.. பல்லைக்கடித்தான் இவன்..

என்னை உங்களுக்கு பிடிக்குமா ஏதோ மனதில் முளைத்த ஒரு குட்டி ஏக்கம் ஆசையை கேட்டு விட்டாள்..

எகத்தாளமாக இதழை கோணியவன் என்னால உன்னை மட்டுதான் தொட முடியுது இதுக்கு நிறையா இங்லிஷ்ல விளக்கமிருக்கு சொன்ன புரியுமா உனக்கு..

தெளிவா சொல்லணும்னா எனக்கு உன் உடம்புதான் தேவை நீ இல்ல..

வலிய புன்னகை தந்தவள்.. இதுல கூட கடவுள் எனக்கு ஒரவஞ்சனை செஞ்சிட்டாரு இல்ல சார் பணத்துக்காக ஆசைப்பட்டு நிறையா பொண்ணுங்க வந்திருப்பாங்க உங்களை திருப்தி படுத்த ஆனால் பாருங்க.. என்னை கோத்து விட்டுட்டாரு..

ம்ம்.. நிமிஷத்துக்கு ஒருத்தி கூட இருப்பேன் இடியட் காட்...

ஏன் சார் இதுக்கு ட்ரீட்மெண்ட் எடுத்துக்க வேண்டுயது தானே உங்ககிட்ட இல்லாத பணமா..

டைம் இல்லையே...இதழ்

சரிதான் கொலை பண்ணவே நேரம் பாத்தாதே..

ம் கரெக்ட்..

சார் நா வெளிய போய் வேலைய பாக்கவா உள்ளே ஓரே அழுத்தமா இருக்கு...இவனோடு வலிக்காதது போல பேசினாலும் எங்கே உள்ளே குமுறும் எரிமலை வெடித்து விடுமோ என்ற பயம் தான்..

வேணா இங்கேயே பேசிட்டு இரு...

சார் ஒரு வேளை நான் போரடிச்சிட்டேனா என்ன பண்ணுவீங்க...

எதுக்கு யூஸ் இல்லாதா நீ எதுக்குனு போட்டு தள்ளிட்டு போய்ட்டே இருப்பேன்...


ஒரு வேளை நமக்கு பாப்பா வந்துட்டா.. கண்களில் ஆசை மின்னியது..இதழினி கைகள் வயிற்றை வருடுவதை ஒரகண்ணால் கவனித்தவன்..

வராது...நிமிர்ந்து அழுத்தமாக சொன்னான்..

ஏ ஏன் வராது... இவள் புருவங்கள் இடுக்கி குழப்பமாக கேட்டிட

உனக்கு கொடுத்த டேப்லெட் அதுக்கும் சேர்த்துதான்.. உன் வயித்துல என் பிள்ளையா.. நோ நெவர்.. என்ன சத்ததையே காணும்.. புயலாக பால்கனி கதவை திறந்து ஓடி மாடி தடுப்பு சுவர் மீது ஏறி... விழுந்தாள் இதழினி அவளை மழை தழுவி நனைத்தது ..

இதழ் மழையில் நனைந்திடுமா❣️...
 

Author: vinnarasi novels
Article Title: இதழ் மழை💋🌧️19
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top