Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖
New member
Messages
22
Reaction score
4
Points
3
இதழ் மழை💋🌧️20

புயலும் மழையும் சேர்ந்து அடி வெளுக்க..மழை நீரெல்லாம் பூமியில் விழுந்து மரித்து உயிர்க்க...

இடியும் மின்னலும் வெட்டி போக

ஆகாயத்திலிருந்து விழும் மழை நீர் எல்லாம் பூமியை தழுவி இருக்க இங்கே விழுந்தவள் மட்டும் அந்தரத்தில் தொங்கினாள் ...

இன்னும் விழாததில் நிமிர்ந்து பார்த்தவள் மழை நீர் கண்ணை மறைக்க.. அவள் கையை இறுக்கி பிடித்திருந்தான்.. அரக்கன்..

ஒற்றை விசையில் புயலாக அவளை சுருட்டி மேலே இழுத்து வந்து உதறி தள்ளினான் ..

தரையில் விழுந்தவள் வெகுண்டெழுந்தாள்...மீண்டும் விழப் போனவளை இழுத்து பிடித்தான்..

"என்னை விடுங்க நா சாகணும்.. உங்களுக்கு தான் எல்லா டெக்னாலஜியும் தெரியுமே...நா செத்த பிறகு.. அதை வெச்சி பிணமான என் ஒடம்பை அனுபவிச்சிக்கோங்க உங்களுக்கு என் ஒடம்பு தானே வேணும்"..

'சுளீரென அவள் கன்னம் தீ சுட்டு சுருண்டு மீண்டும் கொட்டும் மழையில் விழுந்தாள் இதழினி..

அவள் முடியை கொத்தாக பிடித்தவன் வதனம் ரத்தமென சிவந்தது ...

"இந்த உடம்பு தான் வேணும்.. ஆனா நீ உயிரோட இருக்கணும்".. ராட்சசனாக உறும்பினான் அரக்கன்..

'ஓவ்வொரு முறையும் குழந்தை வராமல் இருக்க என் குழந்தைய அழிப்பிங்களா'.. கோவம் வராத முகத்திலே கோவம் வர வைத்துவிட்டான்..ரௌத்திரம் பொங்க கத்தினாள் மங்கை..

"தேவைப்பட்டா அதையும் செய்வேன்"..

'உன்னோட அற்ப சந்தோஷத்துக்காக உருவமில்லாத என் குழந்தைய கொள்ளுவீயா.. இப்போ தான் நீ அரக்கனா தெரியுற.. என்ன என்னை சாக விட மாட்டா அப்படி தானே..

நீ என்னை கட்டி வெச்சி காப்பாத்தினாலும் சரி.. என் மூச்சை என்னால நிறுத்திக்க முடியாதா என்ன'...

ம்... அகங்காரமாய் அவள் கேட்டதில் ஆறடி உருவம் தடுமாறியது...

"உன்னை போல அதுவும் ஒரு குழந்தைதானேடா.. உன்னோட சந்தோஷம் முடிச்சுப் போனா என்னை குப்பை மாறி தூக்கி வீசிடுவ.. ஆனா.. என் பிள்ளைய அப்டி செய்ய மாட்டேன்டா ஏன்னா நா அரக்கி கிடையாது"..

"உனக்கு நா உடம்பு சுகம் தர வேசியாவே இருந்துட்டு போறேன்.. ஆனா நீ எனக்கு புருஷன்...நா பத்தினி டா... இன்னொரு முறை இப்படி நடந்தது மறு நிமிஷம் என் பிணம் தான் உன் முன்னால இருக்கும்..

என்ன என் அப்பாஅம்மாவை கொல்லுவேனு மிரட்ட போறியா ? கொன்னுக்கோ அவங்க பொண்ணு இப்படி ஒரு பாவமான செய்யலை செய்யாம செத்து போனானு தெரிஞ்சா சந்தோஷம் தான் படுவாங்க.. என்ன நான் முன்னாடி சாகுறேன் அவங்க என் பின்னாடி வந்துடுவாங்க..

மூச்சு பிடித்து அவன் முகத்தருகே கத்திப் போசினாள் இதழினி ...

மழையின் வேகம் இன்னும் அதிகரிக்க..

இழுத்து அணைத்தான்...

ஏய் ச்சீ... விடுடா பாவி...

அவள் அடித்த அடியை வாங்கிக்கொண்டு தாடை இறுக்க... உள்ளே தூக்கி வந்தவன்.. விடுடா ஓற்றை அரையில் துள்ளியவள் அடங்கி நின்றாள்...

தொப்பையாக நனைந்திருந்தவள் உடைகளை களைத்து வேறு டிரஸை போட்டு விட்டு தலைதுவட்டி விட..அனுமதியாக போய் படுத்துவிட்டாள் இதழினி..

மனம் ஆராவில்லை....

அவள் இடையை சுற்றிய வலிய கரம் இரும்பு பிடியாக இறுக்குவது போல இருந்தது.. உங்க பிள்ளையை நான் சுமக்க கூடாதுனா எது என்கிட்ட வரீங்க புனிதமான வேற ஒருத்தியை தேடி கண்டுபிடிக்க வேண்டியது தானா.... நெருப்பாக எரிந்து விழுந்தாள்...

"எவளும் கிடைக்கல".. அவள் முதுகில் முகம் புதைத்திருந்தவன் சொன்னான்..

அதுக்கு வேற பொம்மை எதாவது செஞ்சு வெச்சிக்க வேண்டியது தானா.. எதுக்கு உயிர் உள்ள என்னை கொல்லுறீங்க...

முதுகில் நறுக்குன்னு கடித்து வைத்தான்...


ஸ்ஆஆ....இதழினி கத்தலோடு அவன் போனும் கத்தியது...

"அதை எடுடி"...

நீங்க எடுக்க வேண்டியது தானா..

"என் கை பிஸியா இருக்கு.. கைகள் ரெண்டும் அவள் வயிற்றை சுற்றி ஆராய்ச்சியில் இருக்க"..

பல்லைகடித்தாள்... ஆழ மூச்சை இழுத்து வெளியே விட்டவள். எட்டி விடிவெள்ளி விலகின் அருகே இருந்த போனை எடுத்தாள்... தூக்கிப் போட்டு ஒடைச்சா என்ன..

ப்ச்... இதை உடைத்து தான் நான் கோவமா இருக்கணு காட்டணுமா...

இந்தா ... என பின்னால் திரும்பாமல் தந்தவள்.. கையோடு பிடித்து காதில் வைத்தான்..

யா...

"சார் அந்த ரெண்டு பேர் நேத்துல இருந்து கேட் வெளியவே நிக்குறாங்க துரத்தினாலும் போக மாட்றாங்க சார்"...

இதழினி பட்டென எழுந்தமர்ந்தாள்...

என்னை தேடி அப்பாஅம்மா வந்துட்டாங்களா.. ஒரு கணம் சந்தோசப்பட்டவள் ஐயோ நேத்துல இருந்தா வெளிய நிக்கிறாங்க... மனம் பதைபதைக்க..துடித்தவளை..

இழுத்து மேலே போட்டவன் ப்ச் அவனை கண்டுகொள்ளது அவன் காதருக்கே காதை வைக்க அரக்கன் சலுகையாக அவள் மேல் காலை தூக்கிப்போட்டான்...

"போட்டு தள்ளுடா"... பாய்ந்து அவன் வாயை பொத்தி இருந்தாள் இதழினி...

ஐயோ ஜாக் அண்ணா அப்படி பண்ணிடாதீங்க நா உங்க பாஸ் பேசுறேன் என் அப்பாஅம்மா பாவம் அவங்களை ஒன்னும் பண்ணிடாதீங்க பாவம் பிள்ளை பயத்தில் உளறி வைத்தது.. அவள் பொத்திய கைக்குள் அரக்கன் சிரித்தான்..

அந்த பக்கம் ஜாக்.. "சார் என்ன பண்ணட்டும்'..என்றான் கடமைவீரனாக

இதழினி கண்ணை சுருக்கி கெஞ்சிட..

"அங்கேயே இருகட்டும் விடு"...

ஓகே..சார்..

இவள் எழும்ப போக.. கையை இறுக்கி பிடித்தான்...

ஐயோ விடுங்க வெளிய மழை பெய்யுது ப்ளீஸ் கையெடுத்து கும்பிட்டு கெஞ்சிட...

"ஓகே என எழுந்தவன்...போனை எடுத்து உள்ளே அனுப்பு "என்றுவிட்டு வைத்தான்


இதழினியை இழுத்து இதழை மீட்டியவன்.. ஆழ்ந்த முத்ததில் முழுகி.. மெல்ல விலகினான் இதழ் பிரிய மறுக்க.. என்னடி பேசு அதான் உதடு துடிக்குதே..

"நெருங்கி வந்தா உதச்சி தள்ளுறீங்க விலகி போகவும் விடமாட்டுறீங்க நான் வாழனுமா சாகனுமா"...

'எனக்காக மட்டும் வாழனும் எனக்காக மட்டும் சாகனும் ஓகே பேபி..செக்க சிவந்த இதழை விடாமல் இம்சைக்க இவள் தான் கடுப்பாகி போனாள்' ...

"உனக்கு ஒரு சர்ப்ரைஸ் பொண்டாட்டி"...

நீ பொண்டாட்டின்னு சொன்னாலே ஏதோ ஆப்பு கன்ஃபார்ம்...இவளுக்கு இப்பவே உதறியது.. சிவந்த விழிகள் அரக்கனை பாவமாக ஏறிட்டு இதுக்குமேல தாங்க சக்தி இல்ல ராசா..

"ப்ச் புலம்பாத டி"...

வந்திருக்கிறது உன்னோட பேரன்ட்ஸ் இல்ல ரெண்டு லேடி பிசாசு..இனி புல் டைம் உனக்கு செம என்டர்டைன்மெண்ட் இருக்க போகுது...

"ஏதே...லேடி பிசாசா யாரு".. இவள் வாய் பிளக்க...

"என்ன பேபி...ரெண்டு பேர் கம்மி இல்ல அப்போ மூனா மாத்திடுவோமா"...

ஐயோ... யாரு பெத்த புள்ளைங்கனு தெரியலையே ஆண்டவா என் நிலமையே பேய் பாடா இருக்கு... அதுங்களை அப்படியே திரும்பி ஓட வெச்சுடு.... இவள் வாயை விட்டே வேண்ட.

"பாரு பேபி நானு ரெண்டு டைம் வார்னிங் கொடுத்து அனுப்ப பார்த்தேன் ஆனா அவங்க போகலையே நா யாரையும் கட்டாயப்படுத்தி கூப்பிடவே மாட்டேன் ஏன்னா நா ரொம்ப நல்லவன்"...

யோவ் செருப்பால கூட அடிய்யா வாங்கிறேன்..நல்லவனு மட்டும் சொல்லாத மாமு.. ச்சீ இவனை மாமுங்கிறோமே மனங்கெட்ட மனசு இவன் கிட்டையே ஓடுது..

ஐயோ மாமு சொன்னா இவனுக்கு வெறி பிடிச்சிடுமே ஏற்கனவே ஆடின ஆட்டமே இன்னும் வலி போகல... அரக்கனின் அனல் மூச்சு காற்று நாசியை மோத ...

ஆஆ..ஐயோ மாமு இல்ல மாமு இல்... ல.. சா..இதழினி இழுத்து போட்டவன்... மேலே ரெண்டு பக்கமும் கால் போட்டு அமர்ந்தவன் குனிந்து இதழை பல்லால் கடித்து இழுக்க...

ஸ்ஆஆ அன்றைய இரவு நினைவுக்கு வர உடல் கிடுகிடுவென நடுங்கியது... தாபத்தில் வழிந்த கண்கள்..இப்படி பயந்தால் பிக்ஸ் வந்து விடுமென அனுப்பவம் மிக்க அவன் விழிகள் கண்டுகொண்டது..

அவள் பயத்தை குறைக்க நெற்றியில் மென் முத்தம் வைத்தான்... இன்னும் கீழ் இறக்கி நெஞ்சில் தலை வைத்து படுக்க.. இதழினிக்கு நடுக்கம் மெல்ல குறைய.... இறுக்கி பிடித்துவைத்த சுவாசம் மெல்ல இயல்பாக...

மார்பில் தலை வைத்திருந்தவன் அவள் இதய துடிப்பு சீரானதை கணித்து அங்கே முகத்தை புரட்டினான்...

"நாளையில இருந்து உனக்கு விடுதலை கீழே போகலாம் வேலை செய்யலாம்"... பதில் வராது அப்படியே நிமிர்ந்தவன்

கண்கள் நிலை குத்தி கண்ணில் கோடாக கண்ணீர் வழிய...அரக்கன் அவள் முகத்தை வெறிக்க அவளாகவே வாய் திறந்தாள்

"பயமா இருக்கு மாமு.. என் அப்பாஅம்மா உயிரோட தானே இருக்காங்க"...

'ம்... என் கஸ்டடில ஹாப்பியா இருக்காங்க '..

"பார்க்க அனுமதி தரீங்களா"..

'ம்..ஆனா அதுதான் அவங்களுக்கு கடைசி சந்திப்பா இருக்கும் பாக்க போறீயா'...

அவசரமாக வேண்டாமென தலையை ஆட்டினாள்...

இன்னொரு முறை இதை கேட்டு வாய் திறந்த..

இல்லை இல்ல எதுவும் சொல்லிடாதிங்க..அப்பப்போ ஞாபகம் வருது அவங்க நல்லா இருந்தா போதும்...சார்..நா நா கேக்கல...

ஒடம்பு சூடு அதிகமாகுது ரொம்ப குளிருது காய்ச்சல்னு நினைக்கிறேன் தள்ளி படுத்துக்கோங்க இல்ல உங்களுக்கும் காய்ச்சல் வந்துடும்..


நகர்ந்தானா பாரு இன்னும் வசதியாக அவள் மீது படுத்து இருவரையும் சேர்த்து போர்வையால் மூடிக்கொண்டான்...

வன்மம் கக்கும் விழிகள் நான்கும் அரக்கன் கோட்டையை வெறிப்பார்த்துக்கொண்டு கேட் வாசலில் நின்று கொட்டும் மழையில் நனைந்தது...


இதழ் மழையில் நனைந்திடுமா❣️...
 

Author: vinnarasi novels
Article Title: இதழ் மழை💋🌧️20
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top