Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖
Messages
33
Reaction score
4
Points
8
இதழ் மழை💋🌧️32


சடசடவென... மெல்ல ஆரம்பித்த மழை... அரக்கன் வேகத்தை போல மாரி வேகம் ஏற்ற..

நிறுத்தி நிதானித்து இதழினி மூச்சுக்கு ஏங்கி அவள் தந்து இவன் ஏங்கி இவள் தந்தி.. பழகி..காதலில் முதல் மென்மையை பகிர்ந்திட...

அய்யோ வலிக்குதே என நான்கு இதழ்களும் கதறிய பிறகுதான் விட்டிருந்தான்..அரக்கன்

மூச்சுகளை புயலாக இழுத்து விட்டனர்..

"ஏண்டி என் சட்டைய போட்டு இருக்க? "..

"அது.. அதான்...பெல்டுல அடிச்சி கிழிச்சி புட்டீங்களே அதான் சட்டைய தைக்கிற வரைக்கும் போட்டுக்கணுமில்ல..

"ஆமா ஏன்? எப்பவும் மேல சட்டைய போட்டு திரியுற...

'அது ஜாக்கெட் ரொம்ப லூசா இருக்குது அங்க இங்கனும் தெரியுமில்ல அதான் மேலே போட்டுக்கிட்டேன்..

'சொல்ல வேண்டியது தானா.. அதற்கு சின்னாக பதில் புன்னகை தந்தாள்..

அந்த புன்முறுவலில் ஒளிந்திருக்கும் வலி அன்றைய நாட்களில் அவளுக்கு கூட மதிப்பு தந்ததில்லையே! இதில் எங்கனம் அவள் போட்டிருக்கும் உடையை கவனித்திருப்பான்..

"இதை எதுக்குடி தைச்சிட்டு இருக்க?... பேச்சை திசை திருப்பும் கலை இவனிடம் தான் கற்றுக்கொள்ளவேண்டும்..

"வேற எதுக்கு போட்டுக்கதான்...

:அய்ய இதையா?!...

"ஏன்? இந்த சட்டைக்கு என்ன அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி பொங்கலுக்கு அப்பாக்கு கட்டாயப்படுத்தி சந்தையில 150க்கு எடுத்துக்கொடுத்தது... இதுல என்ன சோகம்னா... எங்க அப்பா விவசாயி இல்ல அதான் மேல் சட்டையே போட மாட்டாரு பாத்துக்கோங்க!... பார்க்க புதுசு போல இருக்கு இல்ல.. கண்களின் வழியும் நேசம்.. சாயம் போனா அந்த சட்டையை மென்மையாக வருடினாள்....

தான் போட்டிருக்கும் அரக்கனின் சட்டை விலை பலாயிரம் தாண்டும் என்பதை அவள் அறிந்திருக்க வாய்பில்லையே!!

வேரோடு பிடுங்கிய செடியை வேறு இடத்தில் நட்டாலும் முளைத்த இடத்தில் உயிரில் கலந்த ஊட்டம் அவ்வப்போது தாய் தகப்பன் பாசத்தை கிளறி விட்டு அழகு பார்க்க.. தன்னை மறந்து அவள் பாட்டுக்கு பேச எதிரே ஒருவன் தாபம் பொங்கிய கண்ணில் எரிமலை வெடிக்க தயாராக... உஷ்ண மூச்சுக் காற்று பலமாக வரவே..

"என்ன திடீர்னு அனலடிக்குது!!...


"ஆத்தாடி செத்தேன்..அ... து.. அது.. சாரி மாமு...

"ஏய்ய்ய்... நகரு டி என் மூடே போச்சி...நகராமல் மடியில் நடுங்கியவளை இழுத்து தள்ளி விட்டு போனில் எதையோ நோண்டி அவள் மடியில் போட்டுவிட்டு... போய் கொட்டும் மழையில் மல்லாக்க படுக்க...

"வேணுமுனு பேசல மாமு சாரி அது தானா வருது... பேசிக்கொண்டே எழுந்து வர முயல..இதை எதுக்கு மேலே போட்டாரு....

ஆமா என்னது இது!! .... போனில் ஓடும் வீயோடுவை கண்டு இமைக்குடைகள் அகல விரிய விசும்பல் அழுகையாக வெடிக்க திரையை தொட்டு தொட்டு பார்த்து... வீடியோ முடிந்து போனது.... போனை வைத்து விட்டு எழுந்தோடி வந்தவள்..

"மாமு.. மாமு....!!அம்மா அப்பாவை அதுல பார்த்தே நல்லா டிரஸ் போட்டு இருக்காங்க சந்தோசமா சிரிக்கிறாங்க நா நான் பார்த்தேன்.. அவள் அகமகிழ்ந்து அழுகையும் சிரிப்புமாக சொல்ல...

மின்னல் வெட்டிப்போகும் வானை வெறித்தவனை உலுக்க...

"உனக்கு என்னை விட அவங்க தானே முக்கியம்?...

நொடியில் அவள் உற்சாகமெல்லாம் வடிந்து போக...

"மாமு நீயும் முக்கியம் தான்... அவங்க இல்லாம நா நா... எப்படி உங்க முன்னாடி இருப்பேன்.. கொஞ்சம் யோசிச்சு பாருங்க..

சடரென எழுந்து அவள் கழுத்தை நெறித்தவன்...இதழினி பயத்தில் மிரள

"எனக்கு எனக்கு மட்டும் தான் நீ.. மைண்ட் இட் உனக்கு எல்லாமும் நான் மட்டும் தான்.. இந்த வட்டத்துக்குள்ள யாரும் வரக்கூடாது மீறி வந்தாங்க சாம்பலாக்கிடுவேன் ஜாக்கிரதை!... உலோக மாஸ்க்குள் ஆரஞ்சு விழிகள் அனலை கக்க...பற்களை நரநரத்து கடித்தவன் முகம் மின்னல் ஓளியில் கண்டவள் வலியும் பயமும் அடிவயிற்றில் உருண்ட பய பந்துகள் தொண்டையை அவன் இறுக்கியதில் மேலேற விடாது நெஞ்சக் கூடு ஏறி இறங்க...

அருவியாக இருவரையும் தழுவியோடும் மழை ஒரு பக்கம்... பயத்தில் உடல் கிடுகிடுவென நடுக்கி மூச்சுக்கு ஏங்கி கழுத்தை பிடிதிருந்த கையை... தள்ள முயன்றவள் அவன் வலிய கரம் அசைக்க கூட முடியவில்லை மெல்லியள் கண்கள் சொருக...

அவளை உதறிவிட்டவன் மீண்டும் பழையபடி படுக்க..

லொக் லொக் என திரும்பியவள்...

திரும்பி அவனை முறைக்க..

"உன்னோட இரக்கம் பாசம் எனக்கு தேவையில்லை நீ போகலாம்... எனக்கு நீ..

வந்ததே இவளுக்கு கோவம் வீறு கொண்டு எழுந்தவள்...

நாலடி பின்னால் போனாள்... எங்கே மீண்டும் மாடியில் இருந்து குதித்து விடுவளோ என இவன் தலை தூக்கி சைடியில் திரும்ப.. நாலடி பின்னால் போனவள் தொபுதொபுவென கொட்டும் மழையில் ஓற்றை காலை... காளை மாடு மண்ணை கிளறி சீறுவருவது போல் மழைநீரை பின்னுக்கு தள்ளி ஓடி வந்து விட்டாளே ஒரு உதை அவன் அடிவயிற்றிலே...

"ஏய்ய்ய்...

படிகட்டு வயிற்றைப் பிடித்து அவன் கத்த இந்த தாக்குதலை அவன் எதிர்பாக்கவில்லை போல... இதோடு விட்டாளா? இல்லையே!!.. அவன் சுருண்ட நேரம் நேக்கா அவனை புரட்டிப் போட்டு... முதுகில் ஏறியமர்ந்து அரக்கனின் பிடரி முடியை பிடித்து இழுக்க..

"ஆஆஆ... ஏஏஏய்ய்ய்..."

"ஏன்டா இதையெல்லாம் வாயால சொன்னா ஆகாதா... கழுத்தை நெறுச்சி தான் சொல்லனுமா..

"ஏய்ய்ய்...என அரக்கன் சீற..

"பொண்டாட்டி பொண்டாட்டி... ஏய்... இல்ல... எப்டி எப்டி சாருக்கு பிடிச்சா வரனும் பிடிக்கலான போகணுமா... அவன் முடியை அழுத்தி இழுக்க..


"ஏய் விடுடி வலிக்குது...

"வலிக்குதா?! வலிக்கட்டும் இப்படித்தான் எனக்கும் வலிச்சது கொஞ்சம் விட்டு இருந்தா செத்திருப்பேன்டா... அப்போ என்னடா பண்ணிருப்பா.. எங்க இருந்து வருது இந்த கோவம்...ஓழுங்கா சாரி சொல்லு விடுறேன்..

ஆஆஆ.. ஏஏய்...வலியை பொறுக்க முடியாது மேலே கிடந்த பஞ்சு மூட்டையை எளிதாக தள்ள.. கிணற்றில் போட்ட கல்லாக தொப்பென்று கவுந்து விழுந்தவள்... மேல் அவன் ஏறி அமர அவனின் ராட்சச தேகம்... பளீரென...வெட்டிய மின்னலில் கண்டு எச்சில் கூட்டி விழுங்கினாள் இதழினி..

அடர் இருளில் கூட பளீச்சென்று தெரியும் அவன் வீனஸ் சிற்ப உடலை பன்னீர் அபிஷேகம் போல மழைநீர் தழுவி ஓடுவதில்.. இவளுக்கு ஒரு பக்கம் மழை மீது பொறாமை எட்டிப்பார்த்தது...

"ப்ச்... இங்க பாருங்க நீங்க தான் ஆரம்பிச்சிங்க நீங்க குணமா வாயால சொல்லி இருந்தா.. நான் ஏன் உதைக்க போறேன்...நீங்க கழுத்தை பிடிச்சிங்க நா உதைச்சேன் கணக்கு சரியா போச்சி நகருங்க..

சிங்கம் தலையை உதறிவது போல் அரக்கன் தலையை உதற மாஸ்க்கு போய் தூர விழுந்தது முகத்தில் வழியும் நீரை வழித்து கையை உதறி...

"எவ்ளோ தைரியமிருந்தா என் மேல கை வைப்பா?...

இவளுக்கிருந்த குருட்டு தைரியம் வந்து விட்டு போன மின்னல் இடியோடு எங்கே ஓடி மறைந்ததோ... என்ன ஆனாலும் சரி பல்லுக்கு பல்

"ஆமாடா என்னடா பண்ணுவா..நீ அரக்கன்னா நா அரக்கிடா!! ...

அவன் பேசிய அதே தேணியில்.. இவளும் வாய்ஸ் ரைஸ் பண்ண... இதழினி பீதி ஆகாமல் இல்லை... என்ன பண்ணிட போறான் ஏற்கனவே அம்புட்டு வாங்கியாச்சே!!...

அவள் முகத்தை தலை சாய்த்து பார்த்தவன்... கொஞ்ச கொஞ்சமாக முகத்தை அருகில் கொண்டுவர... மழை கூட பயந்து நின்று விட்டது.... தேங்கி நின்ற தண்ணீரில் மிதக்கும் தாமரையாக கிடந்தவள் முகத்தருகே அவன் கூர் மூக்கின் நுனியில் நீர் துளி அவள் இதழில் விழ...பனி துளிகள் தெளித்த இளம் ரோஜா மலராக... விரித்த கொன்றை மலர்விழிகள் அவனின் காந்த கண்களை விட்டு அசையவில்லை...

அரக்கன் பதம் பார்த்து சிவப்பேறிய ரேகையில்ல இதழினி இதழிகள் பயத்திலோ.. குளிர் நடுக்கத்திலோ நடுங்க....

இரை புசிக்க துடிக்கும் அவன் பட்டை உதடு... அனல் கக்கும் பார்வையும்...

மழை நின்றும் தூவும் தூரல் வானமாய் விடாது அவன் தலைமுடியிலிருந்து ... சொடக் சொடக்கென.. விழும் நீர்துளி சத்தத்தை தவிர வேறு சத்தம் இல்லை.... மயான இருள் பூமிக்குள் இருவர் மட்டுமே... மங்கிய வெளிச்சத்தில் இருள் ஓவியம் போல இருவர்...

அடிச்சா திருப்பி அடிக்கலாம்.. இப்படி முகத்துக்கிட்ட வந்து வெறிக்க வெறிக்க அடிச்சி திங்கிற மாறியே பாக்கறனே!!...

விடாத இதழு அப்படியே முறைச்சிக்கிட்டே இரு.. ஆளு நம்மள வசியம் பண்ண பாக்குது மயங்கிடாத...

பார்க்க சொன்னா நைட்டு முழுக்க பார்த்து வைப்பான் போல இது வேலைக்கு ஆகாது..இதழு நாமதான் வாயை கொடுத்து வாங்கி கட்டனு...

"டேய் எந்திரி..டா....

இதற்கு தான்
காத்திருந்தேன்..என்பது போல் மொத்தமாக சொல்லி முடிக்கும் முன்னே அசைந்த இதழை தும்சம் செய்ய....


கரும்பு மிஷினில் சிக்கியவள் போல இதழினி அலற கூட முடியாது துடித்து அவன் பாறை தோள்களில் அடிக்க... தூசியை தட்டுவது போலதான் அவனுக்கு இருந்தது போல..

துடித்து துள்ளி அடங்கி... அவன் வசியத்திற்குள் இதழ்கள் சொக்க அவள் பலவீனம்.. அரக்கன் கண்கள் நகைக்க... சுகத்தில் சொக்கும் விழிகள் மயக்கத்தை விரட்டி...

இவ்ளோ தான் உன் வீரமா ஹாஹா...அரக்கனின் விழிமொழி நக்கல் நகைத்திட... உடல் பலத்தால் இந்த அரக்க மலையை நகர்த்த கூட முடியாது...

இப்போ பாருடா என் வீரத்தை... விழிகள் பேசிக்கொண்டாளும்..இதழ்கள் நான்கும் கலவியலில் காதல் பயில... இதழை ஆயுதமாக்கினாள் இதழினி... இசை மீட்டும் அவன் இதழை பற்களில் கடித்து இழுத்து அவன் வதைத்ததை விட நான்கு மடங்கு சவ்வு மிட்டாயாக இவள் கடித்து இழுக்க...ராஜா போதையில் அரக்கன் குஷியாக...இதழ் பற்களை ஆழம் இறக்க...

ஸ்ஆஆஆஆ...

ஏய்ய்ய்...விடு டி...

அரக்கன் அலறி தலையை பின்னுக்கு இழுக்கபோன கேப்பில் அவனை இழுத்து கீழே தள்ளி.. அரக்கன் வயிற்றில் ஜம்மென்று ஏறி அமர்ந்தாள் ..

"கை மட்டும் இல்ல இப்போ என் மொத்த ஒடம்பும் உன் மேல தான் இருக்கு இப்போ என்னடா பண்ணுவ..இடுப்பில் கைவைத்து வெற்றி களிப்பில் அவள் சொல்ல..

அருவியில் முழுகி எழுந்து வந்த பதுமையாக அங்கம் ஒட்டிய ஆடை பேசும் போது உடலோடு குலுங்கும் அழகு நீர் நழுவி செல்லும் நைல் நதி வளைவாக குறுகிய இடை அதில் ஒட்டிய சட்டையை ஏதற்கு?! அதையும் தாண்டி தெரியும் மேடு பள்ளங்கள் ...

வயிற்றின் மீது அமர்ந்தவளின்.. அசைவிற்கு... வேற சண்டை போட்டால் என்ன.. என்று ஆண் உடல் ஏங்க..

அவனை போலவே வில்லத்தனமாய் முகத்தை வைக்க முயன்று.. இவள் வேறு சீரியஸாக காமெடி செய்ய..

"எவ்ளோ தைரியம் இருந்தா என் கழுத்தை பிடிப்ப கடிப்ப!!...இதுதான் ஒனக்கு லாஸ்ட் வார்னிங் மிஸ்டர் வருண பகவான் இதழினி.. இனி எதுவா இருத்தாலும் வாய்மொழியா தான் சொல்லனும் நோ ஆக்ஷன்.. கண்ணை உருட்டி கைநீட்டி மிரட்டியவள்..

அவன் பார்வை போகும் திசையில் குனிந்து தன்னை பார்த்தவள்..

"அய்யோஓ..கைகொண்டு உடலை மறைக்க...

உருண்டு புரண்டதில் முதல் மூன்று பட்டன்கள் கழன்று.. அவள் தேக அழகை உடையவன் ரசிக்க...

"யோவ் ஒரு வார்த்தை சொல்ல கூடாது...

"நீ யாருடி எனக்கு?

"இந்தா ஆரம்பிச்சுட்டான்... இதழினி எழும்ப போக இழுத்து கீழே சரித்தான்..

ஆ...

படீரென இடித்த இடியில் அரக்கன் பார்முக்கு வந்து விட்டான்...அவள் சட்டையை கிழித்தெறிந்தவன்...

மழை மீண்டும் தூவ ஆரம்பிக்க .. இதழை நனைக்காத வாரு இதழினி மேல் படர்ந்தான் அரக்கன்..தூரல்மழை.. அரக்கனை நனைத்தது..

இதழ் மழையில் நனைந்திடுமா❣️
 

Author: vinnarasi novels
Article Title: இதழ் மழை💋🌧️32
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top