New member
- Messages
- 24
- Reaction score
- 1
- Points
- 3
அத்தியாயம் 10
குழலி ரிஷி தன்னை விரும்புகிறான் என்பதை சிறு நுனி அளவில் நம்பி கொண்டிருந்தாள். தாலி கட்டியதால் அவனிடம் காதலை எதிர்பார்க்கிறாளா? இல்லை அவனிடமிருந்து அன்பை எதிர்பார்க்கிறாளா... என்ன எதிர்பார்த்து என்ன செய்ய போகிறாய் வந்த வேலையை மட்டும் பார் என உள்ளுக்குள் இருக்கும் பட்சி உரைத்து கொண்டே இருந்தாலும் அவளால் ரிஷியை பற்றி நினைக்காமல் இருக்க முடியவில்லை. அவனையே நினைத்து மனம் வெம்புகிறாள். சில நேரங்களில் இப்படியே அவருடன் வாழ்ந்து விடுவோமா? என்னும் எண்ணம் வரும். ஆனால் வந்த அடுத்த நிமிடமே கொலை எண்ணம் மனதில் முளைத்தும் விடும். அவளால் வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல் நிற்கதியாய் தவித்து கொண்டிருந்தாள். இத்தனை எண்ணங்களும் மனதை போட்டு அழுத்த... விதுரனின் அறைக்குள் போனாள். நல்ல வேலையாக அவள் நேரம் அங்கு எந்த வேலைக்கார்களும் இல்லை.
மெல்லமாக கதவை திறந்து சாத்தி கொண்டாள். விதுரா என்றாள். அவனிடம் எந்த அசைவும் இல்லை. முகத்தை தொங்க போட்டு கொண்டாள். விதுரா என மீண்டும் அழைக்க... அவனின் விரல்கள் அசைந்தது. அதை கவனித்து விட்டாள் குழலி.
விதுரா இப்போ உன் கை அசைந்தது. நான் பார்த்தேன். விதுரா... விதுரா என அவனின் கரம் தொட்டாள். அவளின் கரத்தை கண் மூடிய நிலையிலேயே இறுக்க பிடித்து கொண்டான். அவனின் இறுக்கமான பிடி பெண்ணவளின் இதயத்தை ஒரு நிமிடம் அசைத்து பார்த்து விட்டது. விதுரா... விதுரா... அடுத்த வார்த்தைகள் ஒன்றும் வரவில்லை. அவளுக்கு... அழுகை மட்டுமே வர... விதுரனின் கண்கள் அலைபாய்ந்தப்படி அங்கும் இங்கும் அசைந்தாடியபடியே விழிகளை திறந்தான்.
பேச நான் எழவில்லை. முயற்சி செய்தான். அவனுக்கும் கண்ணில் கண்ணீர் வர.. குழலியை பார்த்து வெறித்தான். அழுதான். கு... கு... குழலி... என்றான்.
நான் குழலிடா உன் குழலி. என்னை தெரியுதா? என்று பரபரப்புடன் கேட்டாள்.
ம்... தெரியுது. நான் எங்க இருக்கேன்.. எந்த இடம் இது? என்றான்.
பயப்படதடா நீ ரொம்ப சேபாதான் இருக்க... இது உன் வீடுதான் என்றாள்.
என்னோட வீடா? இங்க எதுக்கு வந்தேன். நான் எங்க வர கூடாதுன்னு நினைச்சு வந்தேனோ அங்கேயே வந்துருக்கேன். என்னை இங்கருந்து முதல்ல. கூட்டிட்டு போ குழலி. என் வினோ எங்க? நான் அவளை பார்க்கணும். நான் இல்லாமல் அவள் எப்படி இருப்பாளோ? வினோ என கத்தினான்.
டேய் கத்தாதடா கொஞ்சம் பொறுமையா இரு இப்பதான் நீ கண் முழிச்சுருக்க... ஒரு வருஷமா நீ கோமால இருந்த. கொஞ்சம் அமைதியா இரு நான் உன்னை வினோகிட்ட கூட்டி போறேன். ஆனால் அது உடனே முடியாது. கொஞ்சம் நாள் ஆகும்.
ஏன்? என்றான்.
எப்படி சொல்றது. உன் அண்ணனை நான் கொலை பண்ணனும். கொடுத்த வாக்கை காப்பாத்தணும். உன் அண்ணனை நான் கொல்ல போறேன்னு எப்படி சொல்வேன். உன் அண்ணாதான் வினோவின் மரணத்திற்கு காரணம்.. வினோ இப்போ உயிரோட இல்லை என்பதை எப்படி சொல்வேன் விதுரா. கடவுளே எதுக்காக இப்படி ஒரு சோதனையை தர என சிலையாக அப்படியே நின்றாள்.
சொல்லு குழலி ஏன் நாம இங்கருந்து போக முடியாது?
போக முடியாதுன்னு இல்ல விது. நீ இப்பதான கண் முழிச்சுருக்க. உன் கால்களுக்கு பலம் வேணும். கொஞ்சம் சத்தான ஆகாரமா தரணும். நீயே ஒரு டாக்டர்தான நான் சொல்லி புரிய வைக்கணுமா என்ன? என்று அவனிடமே எதிர் கேள்வி கேட்டு பதிலை திருப்பி விட்டாள்.
ம்... நீ சொல்றதும் சரிதான் குழலி. ஒரு வருஷம்ன்னு சொல்ற. என் வினோ என்ன பண்றாளோ... பாவம் அவள். எங்க இருக்கா அவள் முதல்ல சொல்லு?
அவளா அவள் டெல்லில இருக்கா? உனக்காகத்தான் காத்துட்டு இருக்கா? நீ கொஞ்சம் ரெக்கவர் ஆகு போலாம்.
சரி குழலி. கண்டிப்பா போவோம். எனக்கு இங்க இருக்கவே பிடிக்கல. நான் ஒரு பத்து நாள்ள ரெடி ஆகிடுவேன். நான் சொல்ற மாதிரி எனக்கு சாப்பாடு கொடு ஓகே என்றான். சரி என இவளும் சொல்ல...
இங்க யாரெல்லாம் இருக்கா என கேட்டான்.
இங்க உங்க அம்மா, அப்பா ரெண்டு பேர் மட்டும்தான் இருக்காங்க? என பதட்டத்துடன் வார்த்தைகள் வந்தன.
ம்... ஆமாம் என் அண்ணன் இல்லையா?
அண்ணனா...
ஏய் என் அண்ணண்டி ரிஷிவேந்தன்.
ஓ... இல்லையே அவர் யூஸ் ல இருக்காராம்.
சரி சரி ஆமா நீ எப்படி இங்க? நான் இங்கதான் இருக்கேன்னு உனக்கு யாரு சொன்னா? ஆமாம் நான் எப்படி கோமாக்கு போனேன். நான் இப்போ வினோ கூடதான இருக்கனும். நான் கோமாக்கு எப்படி போனேன். எனக்கு ஒண்ணுமே புரியல ஒரே தலையை வலிக்குது குழலி.
டேய்... டேய்... என அவனின் அருகே வந்தவள் ப்ளீஸ்டா கொஞ்சம் தொண தொணன்னு கேள்வி கேக்காம அமைதியா இரு? ஒரு ரெண்டு நாள் போகட்டும் உன் எல்லா கேள்விக்கும் பதில் சொல்றேன். இப்போ நீ ரெஸ்ட் எடு. நான் ரொம்ப நேரம் இங்க இருந்து பேச முடியாது. நான் போறேன். அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம் நீ கோமால இருந்து கண் முழிச்ச விஷயம் இங்க இருக்குறவங்க யாருக்கும் தெரியாம பார்த்துக்க. உன்னை பார்க்க தினமும் டாக்டர் வருவாங்க. நீ கண்ணை மூடி ஆக்ட் பண்ணு சரியா?
ஏன் குழலி. நான் கோமால இருந்து கண் முழிச்சது தெரிஞ்சா என்ன? என் பேரண்ட்ஸ் சந்தோஷப்படுவாங்க என் அண்ணன் என்னை பார்க்க வருவான் என்றான்.
கிழிஞ்சது. உன் நிலைமைக்கு காரணமே அவன்தான் சொன்னால் அவ்ளோதான். இங்க பாருடா கொஞ்ச நாளைக்கு நான் சொல்றதை மட்டும் செய் ஏன் எதற்குன்னு கேள்வி கேக்காத என்றாள்.
ம்... சரி.
சரிடா நீ ரெஸ்ட் எடு நான் கொஞ்ச நேரம் கழித்து வரேன் என சொல்லிவிட்டு சென்றுவிட்டாள் குழலி.
அப்பாடி நல்ல வேலை என் கழுத்தில் உள்ள தாலியை அவன் பார்க்கவில்லை. பார்த்திருந்தால் என்ன ஆகி இருக்குமோ... கிருஷ்ணா என்னை காப்பாத்திட்ட. முதல்ல இந்த தாலியை மறைச்சு வைக்கணும். ஆனால் அவன் அண்ணனை எப்படி மறைத்து வைப்பது. யோசனையுடன் அவளது அறைக்குள் சென்றாள். மனதில் நிறைய திட்டங்களை வகுத்து கொண்டாள். அதன்படி நடைமுறை படுத்த முடிவெடுத்தாள். முதலில் விதுரனின் உடல்நலம் தேறி வரட்டும் பிறகு எதுவானாலும் பார்த்து கொள்ளலாம் என முடிவெடுத்தாள். அதற்கான வேலைகளை பார்க்கலானாள்.
ஒரு வாரம் சென்றது. விதுரனின் உடல் நலனில் நல்ல முன்னேற்றம் வந்தது. ஆனால் இந்த ஒரு வாரத்தில் நெருப்பின் மேல் நின்று வேலை பார்ப்பதை போல வேலை செய்தாள். யாருக்கெல்லாம் பயப்படுவது சாப்பாட்டை மேலே எடுத்து போய் சாப்பிட்டாள். பத்திய சாப்பாடு செய்தாள். வேலைக்காரர்கள் எந்த கேள்வியையும் கேட்கவில்லைதான். ஆனாலும் அவர்களின் பார்வை அவளுக்கு சிறிது அச்சத்தை கூட்டியது. அவனுக்கு உணவு கொடுத்துவிட்டோம் இனி அவள் சாப்பிட வேண்டுமே... என்ன செய்ய? அவனுக்கு உணவு எடுத்து போகும் போது அவளுக்கும் மறைத்து வைத்து சேர்த்தே உணவை எடுத்து போனாள். நிறைய நாடகம் ஆட வேண்டி இருந்தது. நிறைய பொய் சொல்ல வேண்டி இருந்தது ரிஷியிடம். ஆமாம் அவனின் ஒவ்வொரு கேள்விக்கும் அவளாள் எந்த பதிலும் சொல்ல முடியவில்லை.
ஏன் நீ ஒரு மாதிரி நடந்துக்குற? ஒரே படபடப்பா இருக்க? என்னாச்சு? உடம்பு சரி இல்லையா? வீட்டு ஞாபகம் வந்துருச்சா? ஆஸ்பத்திரி போயிட்டு வரலாமா? எதுனாலும் சொல்லு குழலி என அடிக்கடுக்கான கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் தவித்தாள். இவன் இப்படி கேள்வி கேட்டு குடைந்தான் என்றால் அங்கே அவனது தம்பி விதுரன் அதைவிட அவனின் பல சந்தேகளுக்கும் கேள்விகளுக்கும் பதில் சொல்ல முடியாமல் தவித்தால் குழலி. ஒரே வார்த்தையோடு முடித்து கொண்டாள்.
இங்க பாரு விது... இப்போதைக்கு நீ கேட்கும் எந்த கேள்விக்கும் என்னால பதில் சொல்ல முடியாது. என்னை மன்னிச்சுரு. இங்க இருந்து நாம போனதுக்கு அப்புறமா நீ கேக்குற எல்லா கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும். ப்ளீஸ் என்னை புருஞ்சுக்கோ என அவனிடம் காலில் விழுகாத குறையாக சொன்னாள்.
சரி குழலி நான் எதுவும் கேட்கல. ஆனால் நான் கேட்ட எல்லா கேள்விக்கும் எனக்கு பதில் இங்கருந்து வெளியே போனதும் சொல்லணும்.
சரிடா...
இப்ப ஒன்னே ஒன்னு மட்டும் கேட்டுக்குறேன் கேக்கவா?
ஐயோ என்ன கேட்க போறானோ. வினோவை பற்றி கேட்டால் நான் என்ன சொல்வேன். கிருஷ்ணா என்னை காப்பாத்து. என்னடா கேட்கணும் என்றாள்.
நீ எப்படி என் வீட்டுக்கு வந்த? கைகளை மார்பின் குறுக்கே கட்டி கம்பீரமாக கேட்டான். ஒரு நிமிடம் அவனின் தன்னவனை பார்த்தாள். அண்ணனுக்கும், தம்பிக்கும் பொதுவாக எந்த வித்தியாசமும் இல்லை. ரிஷி முரடன், கோபக்காரன், திடகாத்திரமாக இருப்பான். ஆனால் விதுரன் அவனுக்கு அப்படியே எதிர் உருவ ஒற்றுமை ஒன்று போல் இருக்கும். ஆனால் அவனின் கனீர் பேச்சு, பிடிவாதம், கோபம், அவனிடம் அறவே இருக்காது. சாந்தமான முகம். எப்பொழுதும் காமெடி செய்து கொண்டு தன்னை சுற்றி இருப்பவர்களை கலகலப்பாக வைத்து கொண்டு இருப்பான்.
அது... நான் இங்க அக்கௌன்ட்டாக இருக்கேன். உங்க அப்பாதான் என்னை வேலைக்கு எடுத்தாரு. உங்க தோப்பு, தொறவு கணக்கு வழக்கு பார்க்க ஆள் வேணும்னு சொன்னாங்க அதான்...
இல்லையே நீ என்னமோ என்கிட்ட இருந்து மறைக்கிற குழலி. உண்மையை சொல்லுடி என்றான்.
சத்தியமாடா.... எனக்கே இங்க வந்ததுக்கு அப்புறமாதான் தெரியும். நீ இங்கதான் இருக்கேன்னு. நீ ஒரு விஷயத்தை மறந்துட்ட விதுரா... என்றாள்.
என்ன?
இது எங்க தாத்தாவோட சொந்த ஊர். நான் உனக்கு ஏற்கனவே சொல்லி இருக்கேன்ல. நான் இந்த ஊர்காரிதான்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் நீ என்கிட்ட நல்லா பழக ஆரம்பச்சதான மறந்துட்டியாடா?
அட ஆமா மறந்துட்டேன்.
சரி விது இன்னைக்கு நைட்டு ரெடியா இரு. நாம இங்கருந்து யாருக்கும் தெரியாம போயாகனும்.
ஓகே குழலி. என் வினோவை பார்க்க போறேன். எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு என சந்தோஷத்துடன் சொன்னான்.
அவனின் இந்த புன்னகை முழுதும் இன்னும் சில தினங்களில் காணாமல் போக போகிறதே என மனதில் கலக்கத்துடனே அவ்விடம் விட்டு வெளியேறினாள்.
நடு இரவு அனைவரும் உறங்கிவிட..
குழலியும், விதுரனும் அந்த அரண்மனை போன்ற வீட்டை விட்டு வெகுதூரம் சென்றிருந்தனர்.
ஐயா... ஐயா... என அவ்வீட்டில் வேலை செய்யும் ஒரு வேலைக்காரன் ஓடி வந்தான்.
அப்போதுதான் மனோகரன் அன்று போடப்பட்ட செய்தாளை படித்து கொண்டிருந்தார். அவனின் சத்தத்தை கேட்டு என்ன என்று கேட்டார்.
ஐயா... மேல பெரியய்யா மூச்சு பேச்சு இல்லாமல் படுத்த படுக்கையா இருக்காரு. கொஞ்சம் வாங்க ஐயா...
சார்.... சார்.... ஒரு நர்ஸ் வந்தாள்.
ம்மா... கொஞ்சம் இரு நான் இப்ப வந்தறேன்.
இல்ல சார் அங்க உங்க பையன் விதுரனை காணோம்.
என்ன சொல்ற?
ஐயா... அந்த பொண்ணு குழலியையும் காணோமையா..
கள்வன் தொடர்வான்...

Author: shakthinadhi
Article Title: புரியும் முன் பிரிந்து விடு என் கள்வனே
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.