Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖

முரடனின் மகிழம் பூ 🌼 டீஸர்....

Member
Messages
53
Reaction score
8
Points
8
🎶🎶அழகென்ற சொல்லுக்கு முருகா
உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா

அழகென்ற சொல்லுக்கு முருகா
உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா

அழகென்ற சொல்லுக்கு முருகா🎶🎶 என்ற அங்கே இருந்த ரேடியோ பாட்டு இசைக்க...

அந்த கடை உரிமையாளர் மணி டீ போட்டு கொண்டு இருந்தார்... அப்போது 30 வயதில் ஒரு வாலிபனும் அவர் உடன் 50 வயது பெரியவர் ஒருவரும் வர " அண்ணா ரெண்டு டீ... " என்றான் அந்த வாலிபன்..

கடைக்காரரோ டீ எடுத்து கொடுக்க...

அந்த வாலிபனோ டீயை குடித்த படி " அண்ணா இங்க பார்வதி அம்மா வீடு எங்க இருக்கு ??... " என்றான் கேள்வியாக

கடைக்காரன் மணியோ " என்ன விசியம் பா எதுக்கு அவங்க வீட்ட தேடி வந்து இருக்கீங்க ??.. பார்த்த வெளியூர் மாதிரி இருக்கு... " என கேக்க

அவனோ " நாங்க அந்தியூர்ங்க, இங்க நாங்க என் தங்கச்சிக்கு அவங்க பேரனை மாப்பிளை பாக்க வந்தோம்... " என கூற

யாரு?? அந்த முரடனுக்கா... சரியா போச்சு போங்க... 24 மணி நேரமும் குடியும் கூதியலுமா இருக்கவனுக்கு யாரவது பொண்ணு கொடுப்பாங்களா ??... என சிரித்த படி கேக்க

அந்த வாலிபனோ " அது எல்லாம் ஏற்கனவே தெரியும் நீங்க வீட்டை மட்டும் காமிங்க... " என்றான் விடுகென...

மணியோ " அதோ அங்க இருக்கே ரெண்டு வீடு ஒரு வாசல் அதுல இடது பக்கம் இருக்க வீடு தான்... " என கூற

அவர்களும் பணத்தை கொடுத்து விட்டு அங்கு சென்றனர்...

---

திருமணம் என்றால் சொர்க்கத்தில் நிச்சயிக்க படுமாம்...

ஆனால் இங்கோ மாவட்ட ரெஜிஸ்டர் ஆபீஸ்யில் வெறும் நால்வர் சாட்சிக்காக நிற்க.. சாதாரணமான டிசைன்ர் புடவையில் முகத்தில் கிலோ கணக்கில் சோகமும் கவலையும் போட்டி போட நின்று இருந்தாள் பெண் அவள்...

அதற்கும் ஒரு படி மேல் ராவணன்... இரும்பை முழுங்கியது போல ஒரு முக பாவனையோடு ரோபோ போல பெண் அவள் கழுத்தில் அந்த மஞ்சள் தாலியை கட்டி அவன் சரி பாதியாக மாற்றி கொண்டான்...

---

கணவன் இல்லாமல் தனியே கழுத்தில் புது மஞ்சள் தாலியோடு நிற்கும் பெண் அவளிற்கு ஆரத்தி எடுத்து கொண்டு இருந்தார் பார்வதி அம்மாள்...


அதை பக்கத்து வீட்டில் இருந்து கண்ட செண்பகமோ சிரித்த படி " என்னடி இது புதுசா இருக்கு புருஷன் இல்லாம பொண்டாட்டிய மட்டும் தனியா நிக்க வச்சி ஆரத்தி எடுக்குறாங்க... " என கூற

தேவகியோ " அந்த முரடனுக்கு வாகப்பட்டா இப்படி தான் கடைசி வர ஒத்தையில நிக்கணும்... இன்னேரம் அவ எந்த ஆட்டக்காரி வீட்ல கெடக்குறானோ... " என பரிகாசம் செய்து சிரிக்க

அதை கேட்ட பெண் அவளோ அந்த வார்த்தைகளை எல்லாம் கேக்க முடியாமல் தலை குனிந்த படி உள்ளே செல்ல...

யார் இவள்?? எதற்கு இப்படி ஒரு முரடனை திருமணம் செய்து கொள்ள வேண்டும்... குடும்பமே வெறுத்து ஒதுக்கும் அளவு அவன் செய்த குற்றம் என்ன??

முரடனின் அதிரடி காதல் கதையை அறிய வாசியுங்கள் முரடனின் மகிழம் பூ அவள் 🌼...
 

Author: Nithya
Article Title: முரடனின் மகிழம் பூ 🌼 டீஸர்....
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top