முரடனின் மகிழம் பூ அவள் 🌼
எபி 11
ராவணன் அடித்த அடியில் உடல் எல்லாம் வலி எடுக்க.... தரையில் சுருண்டு படுத்து இருந்தாள் மகிழினி... மதியம் சென்ற ஆடவனோ மணி 11 ஆகியும் வர வில்லை என கதவை சாற்றி விட்டு அப்பத்தாவும் உறங்கி போனார்..
மார்கழி மாத குளிர் மேனியை வருட காலை ஐந்து மணிக்கே எழுந்த அப்பத்தா வாசலை கூட்டி கோலம் போட்டு கொண்டு இருந்தார்.. கோலத்தை போட்டு முடித்து அவர் வீட்டிற்குள் செல்லலாம் என போக அங்கோ வாசலை மரித்த படி நின்று இருந்தான் ராவணன்...
அவரோ அவனை கண்டும் காணாத படி இடித்து தள்ளி விட்டு உள்ளே சென்று விட்டார்.. உள்ளே நுழைந்த ராவணனோ நேராக அவன் அறைக்குள் நுழைய போக... அதை கண்ட அப்பத்தாவோ " டேய்!!... நீ எங்க அங்க போற... ஏன் நேத்து சரியா அடிச்சியா இல்லையான்னு பாக்க போறியா... " என கோபமாக கத்த
அவனோ " என் பொண்டாட்டிய பார்த்துக்க எனக்கு தெரியும்... " என கூறி உள்ளே சென்று கதவை சாற்றி கொண்டான்..
அறைக்குள் நுழைந்த ஆடவன் கண்டதோ அங்கே முளையில் உடலை குறுக்கி கொண்டு படுத்து கிடக்கும் மகிழினியை தான்.. அவள் அருகே சென்று பெண் அவளின் தலையை வருட ராவணனோ ஒரு நிமிடம் ஆடி தான் போனான்.. பெண் அவளின் உடலோ நெருப்பாக கொதிக்க... வெற்று தரையில் போர்வை கூட இல்லாமல் படுத்து கிடப்பவளை கண்டு மனம் பதற தான் செய்தது.. பூ போல அவளை கையில் ஏந்தி கொண்டு மெத்தையில் படுக்க வைத்தவனோ வேகமாக வெளியே சென்று ஒரு கிண்ணத்தில் குளிர்ந்த நீரோடு மீண்டும் உள்ளே நுழைந்தான்..
மெதுவாக பெண் அவளின் உடைகளை கலைந்து குளிர்ந்த நீரில் துடைத்து விட்டு காயங்களுக்கு பொறுமையாக களிம்பை பூசி விட்டு கொண்டு இருந்தான் ராவணன்... காயமும் அவனே மருந்தும் அவனே என்பது போல இருந்தது ஆண் அவனின் செயல்கள்..
மெல்லிய பெட் ஷீட்டை அவள் மீது போர்த்தி விட்டு அணைத்த படி படுத்து கொண்டான் ராவணன்..
---
அப்பத்தாவோ இருவரும் உணவை சமைத்து வைத்து விட்டு தோப்பு வேலைகளை கவனிக்க சென்று விட்டார்..
மதியம் போல காய்ச்சல் குறைந்து மெதுவாக கண்களை திறந்த மகிழினி கண்டதோ தன்னை பொம்மை போல இருக்கி கொண்டு உறங்கும் அவள் முரடனை தான்... அவளை அவன் கையை விலக்கி விட்டு எழுந்திரிக்க முயற்சி செய்ய ஏற்கனவே உடலில் இருந்த காயங்களும் காய்ச்சலும் சேர்ந்து மொத்தமாக சோர்ந்து போய் இருந்த பெண் அவளோ பொத்!!... என மீண்டும் மெத்தையில் விழ...
அதில் உறக்கம் கலைந்த ராவணனோ " அதான் முடியலையே அப்பறம் எதுக்கு டி எழுந்த... " என்றான் நக்கல் குரலில்
அதில் திரும்பி ஆடவனை கண்ட அவளோ முகத்தை திருப்பி கொண்டு மீண்டும் போர்வையை சுற்றி கொண்டு எழுந்திரிக்க பார்க்க... ராவணனோ அவளை இழுத்து அணைத்து கொண்டு காதில் மீசை மூடி உரச " என்னடி கோபமா... " என்றான்
அவளோ அவன் பிடியில் இருந்து திமிறி கொண்டு விலக பார்க்க...
அவனோ " இன்னும் நான் கேட்ட கேள்விக்கு பதில் வரல... ஏன் வாய தொறந்து பேசுனா உள்ள இருக்க முத்து கொட்டிடுமாடி... " என கத்த
அவளோ எங்கு மீண்டும் அடிக்க போகிறானோ என பயந்து " வலிக்குது விடுங்க.... " என்றாள் மெல்லிய குரலில்
அவனோ " ஏய்... உன்ன ஒன்னும் பண்ண மாட்டேன்.. " என கூற
" அப்ப மறுபடியும் அடிக்க மாட்டிங்க தானே.. ரொம்ப வலிக்குது நகர கூட முடியல... " என்றாள் குழந்தை போல உதடு பிதுக்கி...
ஆனால் ராவணன் முகமோ எந்த உணர்வும் இல்லாது " இனிமே அப்படி பண்ணாத... எனக்கு தூக்கம் வருது படுடி... " என பெண் அவளின் மென் பஞ்சு தேகத்தை மஞ்சமாக்கி தலை சாய்த்து கொள்ள... ஆடவனின் கரமோ பெண் அவளின் ஆடையற்ற இடையில் ஊர்வலம் போக...
அவளோ இப்போது அவனின் செயலில் அதிர்ந்து " எனக்கு பசிக்குது நான் போய் சமைக்க வா... " என்றாள் திருட்டு பூனையின் திருட்டு வேளைகளில் நெளிந்த படி..
" பச்! இப்ப என்னடி உன் பிரச்சனை... " என்றான் சிடு சிடுவென...
அவளோ தொண்டையில் எச்சிலை விழுங்கிய படி... " உங்களுக்கு பசிக்கலையா.. மணி 2 ஆக போகுது... நான் போய் உங்களுக்கு சமைக்க வா... " என்றாள் அவனிடம் இருந்து தப்பித்தாள் போதும் என்று
அவனோ எழுந்து அவளையும் தூக்கி விட உடலில் இருந்த சோர்வில் மீண்டும் அவன் மார்பின் மீதே சாய்ந்து கொண்டாள்... ராவணனோ " உக்காரவே முடியல இதுல நீ போய் சமைக்க போறியா... " என்றான் நக்கல் குரலில்
அவளோ " எல்லாம் உங்களால தான்... பாருங்க என்னால எழுந்துக்க கூட முடியல... " என குழந்தை போல அடித்த அவனிடமே புகார் கூற..
அவனோ இதழுக்குள் புன்னகைத்த படி.. பெண் அவளை கட்டிலில் சாய்ந்த படி அமர வைத்து அவன் மர அலமாரியை திறந்து ஒரு முட்டி வரை இருந்த கவுன்னை எடுத்து அவளுக்கு அணிவித்து விட... பெண் அவளோ கண்கள் வெளியே தெறித்து விழும் அளவிற்கு ஆடவனையே பார்த்து கொண்டு இருந்தாள்...
அவனோ சாதாரணமாக உடையை மாட்டி விட்டு வேட்டியை மடித்து கட்டி கொண்டு அவளை வெளியே தூக்கி சென்றான்.. மகிழினியோ அவன் கையில் பொம்மை போல தவழ்ந்து கொண்டு இருக்க... அவனே குளியல் அறைக்கு தூக்கி சென்று பல் துளைக்கி விட்டு முகம் கழுவி அழைத்து வந்தான்..
பின் சமையல் மேடையில் அமர வைத்து விட்டு அப்பத்தா சமைத்து வைத்து சென்ற உணவை தட்டில் போட்டு பிசைந்து ஊட்டி விட...
அவளோ கண்ணில் வழியும் நீரை துடைத்த படி உணவை வாங்கி கொண்டாள்... அதை கண்ட ராவணனோ " இப்ப எதுக்கு வாட்டர் பால்ஸ் ஹா திறந்து விடுற... உன்ன நான் என்ன கொடுமையா டி பண்ணிக்கிட்டு இருக்கேன்.. " என கத்த
அவளோ அவசரமாக தலையை இட வலமாக ஆட்டியா படி... " உங்கள என்னால புரிஞ்சிக்கவே முடியல... நீங்களே காயமும் தரிங்க நீங்களே அதுக்கு மருந்தும் போடுறீங்க... ஏன் இப்படி எல்லாம் பண்றிங்க... " என்றாள் அவன் கண்களை பார்த்து கொண்டே
அவனோ " நான் ராவணன் டி... யாருக்கும் புரியாத புதிர்.. இன்னும் சில விசியம் எல்லாம் நேரம் வரும் போது உனக்கு தானவே புரியும் இப்ப அமைதியா சாப்பிடு... " என உணவை ஊட்டி விட ஆரம்பித்தான்..
---
இரவு நிலா மகள் வானில் ஊர்வலம் சென்று கொண்டு இருக்க இங்கு ராவணனின் மடியில் அமர்ந்து வேடிக்கை பார்த்து கொண்டு இருந்த மகிழினியோ குலாப் ஜாமுனை சுவைத்து கொண்டு இருந்தாள்...
ஆடவனோ பெண் அவளின் தேன் இதழில் ஊறி கொண்டு செல்லும் சக்கரை பாகை ஏக்கமாக பார்த்து கொண்டு இருந்தான்.. அப்போது தான் ஒருவன் தன்னை உத்து பார்ப்பதை கண்டு அவளோ " என்னாச்சி நீங்களும் சாப்புடுறீங்களா... " என ஒரு பீஸ் எடுத்து அவன் வாய் அருகே நீட்ட
முரடனோ ரொமான்ஸ் மோட்க்கு சென்று அவள் ஊட்டி விட்ட இனிப்போடு சேர்த்து அவள் தேன் இதழையும் கவ்வி கொண்டான்.. அவளோ முட்டை கண்கள் தெறித்து விழும் அளவிற்கு ஆடவனை அதிர்ந்து பார்க்க... அவனோ அவன் வாயில் இருந்த குலாப் ஜாமுனை பெண் அவள் தொண்டைக்கு பண்டமாற்றம் செய்து கொண்டு இருந்தான்..
இனிப்பு அவள் தொடைக்குள் வழுக்கி சென்றதை பார்த்து கொண்டே அவள் இதழை மனமே இல்லாமல் பிரிந்தவனோ " ம்ம்... உண்மையாவே செம ஸ்வீட் பூனை குட்டி இனிமே தினமும் வாங்கிட்டு வரேன்.. " என ஒரு மார்க்கமாக கூற
பெண் அவளோ வீங்கிய இதழை துடைத்து கொண்டே " எதுக்கு இப்படி கடிச்சி வைக்குறிங்க... வலிக்குது... " என்றாள் அவன் பல் பட்டு சற்று வீங்கிய இதழை காட்டி..
பெண் அவளின் அந்த குழந்தை தனமான செயலில் அவளை இருக்கி கொண்டு கழுத்தில் முத்தம் வைக்க... அவளோ " உங்க கிட்ட ஒன்னு கேக்கவா... " என்றாள் மீண்டும் கேள்வியாக
அவனோ " கேளு டி... " என கூற
" ஆமா, நீங்க எப்ப இந்த மாதிரி டிரஸ் எல்லாம் வாங்குனீங்க... "என்றாள் அவள் அணிந்து இருக்கும் நைட் டிரஸ்யை காட்டி..
அவனோ " ஏண்டி பிடிக்கலையா... பிடிக்கலைனாலும் இனிமே இந்த மாதிரி லூசான டிரஸ் தான் உனக்கு அடிக்கடி தேவை படும்... " என்றான் இரட்டை அர்த்தத்தில்
அதில் யோசனையான முகத்தோடு அவனை கண்டவளோ ' எங்கே நேத்து மாதிரி அடிக்கபோகிறானோ... ' என பயந்த படி " அப்ப மறுபடியும் அடிப்பீங்களா... " என்றாள் மெல்லிய குரலில்
பெண் அவளின் கேள்வியில் வந்த சிரிப்பை அடக்கி கொண்ட ஆடவனோ " ஆமா தோணும் போது எல்லாம் அடிக்க மாட்டேன் கடிக்க போறேன்... " என அவள் காதில் எதோ கூற
அதில் கன்னம் சிவக்க " ச்சீ!!... நீங்க ரொம்ப மோசம்... " என அவன் மார்பில் புதைந்து கொண்டாள் மகிழினி..
அவனோ அவளை இன்னும் சீண்டி பார்க்கவே " ஒய்!!.. இங்க பாருடி என்ன ஆரம்பிக்கலாமா ??... " என்றான் அவளை முகத்தை அவன் மார்பில் இருந்து பிரித்த படி
அவளோ இன்னும் அவனுள் புதைந்து கொண்டு " வர வர நீங்க ரொம்ப கேட்டு போயிட்டீங்க... " என்றாள்
அவனோ " சரி ஒன்னும் பண்ணல தூங்கு டி... காலையில சீக்கிரம் எழுந்துக்கணும்.. " என அவனின் அணைப்பிலேயே பெண் அவளை உறங்க வைத்தான்...
தோட்டத்தில் வேலை செய்யும் முரடனை மாமா.. மாமா... என ஓடி வந்து அணைத்து கொள்ளும் பெண்ணை கண்டு அதிர்ச்சியில் உறைந்து நிற்கும் மகிழினி??.. யார் அவள்??...
தொடரும்...

Author: Nithya
Article Title: முரடன் 🌼 11
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.