Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖
Member
Messages
64
Reaction score
8
Points
8
முரடனின் மகிழம் பூ அவள் 🌼

எபி 14

இன்று மதியம் ராவணனை அணைத்து கொண்ட அந்த பெண்ணோ இப்போது சிவராமனின் வீட்டில் நின்று இருவரும் ஜோடியாக வீட்டில் நுழைவதை கண்ணில் பொறாமை போங்க பார்த்து கொண்டு இருந்தாள்.. அப்போது அவள் பின்னால் இருந்து " இன்னும் தூங்காம என்ன பண்ற கல்யாண பொண்ணே... " என்ற சிவராமனின் குரலுக்கு

" சும்மா காத்து வாங்கலாம்னு வந்தேன் மாமா... " என்றாள் அவள்... அவள் தான் செண்பகத்தின் மகள் பூங்குழலி..

அவரோ " சரி, நேரத்தோட தூங்கு.. பொம்பள புள்ள இப்படி ராத்திரி நேரத்துல வெளிய நிக்க கூடாது... " என அவளை வீட்டிற்குள் விரட்டி விட

அவளோ " ஆமா, பொம்பள புள்ள மட்டும் வெளிய போக கூடாது ஆனா ஆம்பள புள்ள இருக்கலாம்... " என புலம்பிய படியே உள்ளே சென்று விட்டாள்..

---

மறுநாள்...

ராவணன் கொள்ளைபுரத்தில் தலையில் எண்ணெய் வைத்து கண்களை மூடி அமர்ந்து இருக்க... அங்கு வந்த பூங்குழலியோ ஆடவனின் தலையில் மீண்டும் எண்ணெய் தேய்த்து விட.. எதோ வித்தியாசம் உணர்ந்த ராவணனோ " ஏய்! இப்பதானடி உள்ளே போன அதுக்குள்ள வந்துட்டியா??... " என்றான் கண்களை திறக்க முடியாத நிலையில்

அதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட குழலியோ " அட!! என்ன மாமா நீங்க தானே என்ன வர சொன்னிங்க.. இப்ப அதுக்குள்ள வந்துட்டியான்னு கேக்குறீங்க.. ஏன் உங்க பொண்டாட்டி வந்துடுவான்னு பயப்படுறீங்களா... " என அவனை நெருங்கி அவள் உடல் அங்கங்கள் உரசும் படி கூற..

அதில் சட்டென அவளை தள்ளி விட்டு கட்டின பட்டு கண்களை திறந்து அவளை மொறைத்து கொண்டே உள்ளே செல்ல போக அங்கோ மகிழினி கண்ணில் நீர் கோர்க்க ராவணனை தான் பார்த்து கொண்டு இருந்தாள்...

அப்போதும் அடங்காத குழலியோ " என்ன மாமா இது உங்க பொண்டாட்டி வந்துட்டான்னு தான் என்ன பிடிக்காத மாதிரி நடிக்குறிங்களா??.. என்ன இருந்தாலும் உங்க கூட முத வாழ்ந்தவ நான் தான்.. சரி நேரமாச்சு நான் நாளைக்கி தோப்பு வீட்டுக்கு வரேன்... இப்ப உங்க பொண்ட..." என அவள் முடிக்கவில்லை அதற்குள் அவள் கன்னம் எரியும் அளவு ஓங்கி அடித்து இருந்தாள் மகிழினி..

அவளோ " ஏய்!!... யார் மேல கை வைக்குற.. நான் எண்ணமோ இல்லாததை எல்லாம் சொல்லலையே இப்ப தான் அவர் உனக்கு புருஷன் இதுக்கு முன்ன எத்தன பேருக்கு புருஷனா இருந்துட்டு வந்தானோ... " என நக்கலாக கூற

மீண்டும் அடித்த மகிழினியோ " ஏய்!!.. அவர் எத்தன பெரு வீட்டுக்கு போனாருன்னு நீ போய் விளக்கு பிடிச்சு பார்த்தியா டி.. நான் நேத்தே என்ன சொன்னேன் என் புருஷன் பின்னால வந்த மவளே அப்பறம் உனக்கு கால் இருக்காது... ஜாக்கிரதை இந்த கேவலமான நடிப்பை போய் வேற யாரு கிட்டயாவது காட்டு போ... " என விரட்டி விட..

அவளோ " பாக்குறேண்டி இன்னும் எத்தன நாளைக்கு இந்த ஆட்டம் ஆடுறன்னு.. " என புலம்பிய படியே சென்று விட்டாள்..

ராவணனோ அவன் மனையளின் புதிய அவதாரத்தில் அதிர்ந்து நிற்க... இப்போது அவனின் புறம் பார்வை திருப்பிய மகிழினியோ " கண்ணு எரியுதுன்னு சொன்னிங்க.. குளிக்கலையா??... " என்றாள்

அவனோ தாவி சென்று அவளை அணைத்து கொண்டு " உனக்கு என்கிட்ட எதுவும் கேக்கணும்னு தோணலையா??... " என்றான் கேள்வியாக

அவளோ " என்ன கேக்கணும்?? நான் முக்கியமான ஆளா இருந்தா நீங்களே சொல்லி இருப்பிங்களே... " என்றாள்

அப்பறம் எதுக்கு டி அவ கிட்ட சண்டைக்கு போன... என்றான்

" மன்னிச்சிக்கோங்க.. அவ உங்க மாமா பொண்ண... அத்த பொண்ண தெரியல இனிமே அவ வந்தா திட்டல... அடிக்கல.... ஆனா என் கண்ணு முன்னாடி அவ உங்கள ஒட்டி ஒரசிட்டு இருந்த கண்டிப்பா அவள கொலை கூட பண்ணுவேன்... சொல்லிட்டேன் எவளுக்கும் உங்கள பங்கு போட்டு தர மாட்டேன்... " என நுனி மூக்கு சிவக்க அவள் கத்த

அதில் பலமாக சிரித்த ஆடவனோ அவள் மூக்கில் முத்தமிட்டு " தலைக்கு தேய்ச்சி விடுடி கண்ணு எரியுது... " என்றான் அவளை பிரிந்து சென்று கல்லில் அமர்ந்து கொண்டு

மகிழினியோ " எப்ப பார்த்தாலும் இப்படி சம்மந்தமே இல்லாம தான் பேசுவீங்களா " என்றாள் சீக்காய்யை அவன் தலையில் தேய்த்து கொண்டே...

அவனோ " முதல தேய்ச்சி விடு... அப்பறம் சொல்றேன்... " என அவள் இடையை கட்டி கொள்ள

" பச்! இப்படி பிடிச்சிக்கிட்டா நான் எப்படி தேக்குறது... கொஞ்ச நேரம் நேரா உக்காருங்க... " என்றாள் அவன் தலையை நுரைக்க தேய்த்து கொண்டே

அவனோ " முடியாது.. எனக்கு இது தான் வசதியா இருக்கு.. நீ தேய்ச்சி விடு.. " என கூற

இனி பேசினால் வேலைக்கு ஆகாது என நன்றாக எண்ணெய் போகும் அளவு அந்த அடர்ந்த கூந்தலை தேய்த்து விட்டு " இப்பாவது நேரா உக்காருங்க.. " என அவனை அவளிடம் இருந்து பிரித்து விட்டு வெந்நீரில் அவன் கூந்தலை அலசி அவன் செய்யும் அலப்பறை எல்லாம் பொறுத்து கொண்டு அவனை குளிக்க வைப்பதற்குள் ஒரு வழி ஆகி விட்டாள் மகிழினியால்...

அப்பாடா!! என அவள் சமையல் அறையில் சமைத்த உணவை எல்லாம் எடுத்து வந்து கூடத்தில் வைக்க " ஏய்.... " என்ற கர்ஜனை குரலில் மறுபடியுமா என எண்ணிய படி அவன் அறைக்குள் சென்றாள்..

அங்கோ ஈரம் சொட்டும் தலையோடு இடையில் வேட்டியை மட்டும் கட்டி கொண்டு நின்று இருந்தான் ராவணன்.. அவளோ " எதுக்கு கூப்பிட்டீங்க... " என்றாள் இவ்வளவு நேரம் இருந்த தைரியம் சென்று எச்சில் விழுங்கிய படி அவன் சிவந்த கண்களையும் இறுகிய முகத்தையும் கண்டு..

எதுக்குன்னு சொன்னதான் மஹாராணி வருவீங்களா... என்றான் காட்டு குரல் அதிர

அவளோ " இல்ல.. திடிர்னு கத்துனீங்களா... அதான் கேட்டேன்.. " என்றாள் தலையை குனிந்து கொண்டே

அவனோ அவள் சேலையை பிடித்து இழுக்க.. அதில் பதறி அவள் சேலையை பிடித்து கொள்ள...

அவனோ இடையோடு பெண் அவளை தூக்கி மடியில் அமர்த்தி கொண்டு " தலையை துவட்டி விடுடி... " என்றான்

அவளும் அமைதியாக அவன் தலையை சேலை முந்தியால் துவட்டி விட... அவள் இடையை கட்டி கொண்ட ஆடவனோ " ஒய்.. வெளிய இருக்கும் போது என்ன சொன்ன... " என்றான் கடுமையான குரலில்

அவளோ நெறய சொன்னோம் எத கேக்குறாரு... என எண்ணிய படி " என்ன சொன்னேங்க... " என்றாள் விட்டாள் அழுது விடும் நிலையில்

அவனோ " ம்ம்... முக்கியமான ஆளா இருந்தா நானே எல்லாத்தையும் சொல்லி இருக்கணுமா... " என்றான்

அவளோ " அது இல்ல இதுவரை எனக்கு உங்கள பத்தி எதுவும் தெரியாது உங்க பெரு ராவணன் மட்டும் தான் தெரியும்.. ஒரு வேல உங்களுக்கு நான் முக்கியமாவள இருந்தா என்கிட்ட எல்லாமே சொல்லி இருப்பிங்களா?? உங்க அம்மா அப்பா குடும்பம் பத்தி எல்லாம் " எங்கே அடித்து விடுவானோ என்ற பயத்தில் கன்னத்தை முடிய படி...

அவனோ " ஏன் நீ கேக்க வேண்டியது தான... அப்ப உனக்கு நான் அந்த அளவுக்கு நம்பிக்கை இல்லாதவனா டி.. சொல்லு நீ கேட்டு நான் பதில் சொல்ல மாட்டேன்னு சொல்லி இருக்கேனா... " என்றான்

அதில் அப்போது தான் தானும் அவனிடம் எதுவும் கேக்கவில்லை என்பதை உணர்ந்து " மன்னிச்சிடுங்க... அது எதோ உங்க மேல இருக்க பயத்துல கேக்கல... சரி இப்ப கேக்குறேன் உங்க பொண்டாட்டி என்ன நம்பி சொல்றிங்களா எதுக்கு அவ உங்கள அப்படி பேசிட்டு போன... உங்க கடந்த காலம் என்ன?? எதுக்கு இப்படி தனியா இருக்கீங்க?? " என்றாள்

அவனோ " இதே நம்பிக்கை நான் உண்மையா சொன்னதும் இருக்குமாடி... " என்றான் கலக்கமான குரலில்

கண்டிப்பா.. உங்கள நான் நம்பாம வேற யாரு நம்புவா என்விட உங்க மேல எனக்கு நம்பிக்கை ஜாஸ்தி... என்றாள்

அதில் அவளை இருக்கி அணைத்து கொண்டு " சொல்றேன் டி... " என பழைய நினைவுகளை கூற ஆரம்பித்தான்..


10 வருடங்களுக்கு முன்...


எங்க தாத்தா விஜயரங்கன் அப்பத்தா பார்வதி ரெண்டு பெரும் அப்படி ஒரு அன்னோனியமான தம்பத்திங்க... ஊர்ல எல்லாரும் புருஷன் பொண்டாட்டினா அது இவங்கள மாதிரி தான் வாழணும்னு சொல்லுவாங்க அப்படி ஒரு ஒற்றுமை...

அவங்களுக்கு ரெண்டு பசங்க மூத்தவர் சிவராமன் அடுத்து செண்பகம்... எங்க தாத்தா குணத்துக்கு கொஞ்சம் கூட சம்மந்தமே இல்லாத குணம் சிவராமன் பொண்ணுங்கனா அடிமைன்னு நினைக்குற அளவு மோசமான ஆள்... இவருக்கு மேல செண்பகம் சரியான பண பேய்... சொந்த குடும்பமே நல்லா இருக்க கூடாதுன்னு நினைக்குற ராட்சசி...


வருஷம் ஓட ரெண்டு பசங்களுக்கும் கல்யாணம் பண்ணி வச்சாரு எங்க தாத்தா.. மருமகள் தேவகி, மருமகன் சிவசாமி... கொஞ்ச நாள்ல பேரன் பேத்தி எல்லாம் பொறந்தாங்க...

தேவகிக்கு எல்லாத்தையுமே இப்படி ஊருக்கு செய்றது பிடிக்கல.. அதனால செண்பகத்தோட கூட்டு சேர்ந்து தேவை இல்லாத வேலை எல்லாம் பார்த்தா...


இந்த வீட்ல என் மாமா சிவசாமி மட்டும் கொஞ்ச நல்லவர்... ஆனா அவருக்கு போய் இப்படி ஒரு பொண்டாட்டியும் புள்ளைங்களும்...

தொடரும்...
 

Author: Nithya
Article Title: முரடன் 🌼 14
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top