முரடனின் மகிழம் பூ அவள் 🌼
எபி 15
செண்பகம் - சிவசாமிக்கு ரெண்டு பசங்க சேது, பூங்குழலி.. அதே மாதிரி சிவராமன் - தேவகி அவங்களுக்கு மூணு பசங்க ராவணன், ஆகாஷ்... என இடை நிறுத்த
மகிழினியோ " என்னாச்சு யாரு அந்த மூணாவது குழந்தை??... " என்றாள் கேள்வியாக
அவனோ என் தங்கச்சி... அவ பொறந்து அஞ்சு நாள் இருக்கும் இறந்து போய்ட்டதா சொன்னாங்க.. ஆன அந்த சிவராமன் தான் பொண்ணு இருந்தா சொத்து எல்லாம் கைவிட்டு போயிடும்னு ஒரு ஜோசியன் சொன்னாருன்னு என் தங்கச்சிய எங்கேயோ கொண்டு போய் வித்துட்டான்... எனக்கு அப்ப இந்த விசியம் தெரியாது தாத்தா கடைசியா சாகுறதுக்கு முன்னாடி ஒரு நாள் என்கிட்ட இத சொன்னாரு...
முதல ஊருக்கு எல்லாம் தானம் தர்மம்னு இருந்த எங்க தாத்தா எப்ப வீட்ல அந்த சிவராமன் கைக்கு அந்த பொறுப்பு போச்சோ அப்பவே எல்லாம் குறைஞ்சு போச்சு.. எதோ பொங்கல் திருவிழான்னு வந்தா மட்டும் பேருக்குனு எதாவது கோவிலுக்கு கொடுப்பாங்க...
இந்த நிலைமையில தான் தாத்தா என் பேருல சொத்து எழுதி வச்சாரு... எப்படியாவது இந்த சொத்தை அடையானும்னு நினைச்ச செண்பகமோ அவ பொண்ண எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு நினைச்சா...
அப்ப எனக்கு 17 வயசு இருக்கும் ஒரு நாள் வீட்ல தனியா என் அறையில இருக்கும் போது உள்ள வந்த குழலியோ என்னை கட்டி பிடிச்சிகிட்டு " என்ன கல்யாணம் பண்ணிக்கோ மாமா... நீ இல்லனா நான் செத்துடுவேன்.. அப்படி இப்படி எது எதோ சொன்னா... "
ஆனா நான் அவ கிட்ட தெளிவா சொன்னேன் " உனக்கு 16 வயசு தான் ஆகுது இந்த வயசுல இந்த மாதிரி தோன்றது எல்லாம் சாதாரணம் தான் அதனால மனச போட்டு கொழப்பிக்காம போய் படின்னு ஆனா அவ கேக்கவே இல்ல.. " அப்ப திடிர்னுன்னு வெளிய எதோ சத்தம் கேக்க நான் கதவ திறந்து கிட்டு போய் பார்த்தேன்...
அங்கே எல்லாரும் என்ன கோபமா பார்த்து கிட்டு இருந்தாங்க... அப்போ உள்ள இருந்த குழலியோ அவ தலை எல்லாம் கலைஞ்சு.. துணி எல்லாம் கிழிச்சிகிட்டு வெளியே ஓடி போய் செண்பகத்தை கட்டி கிட்டு " அம்மா, மாமா என்ன கெடுத்துட்டாங்க... நான் வேணாம்னு கெஞ்சி பார்த்தேன் அவர் கேக்கவே இல்லைனு ஒரே... " அழுது ஆர்பாட்டம் பண்ணா
எல்லாரும் நான் தான் தப்பு பண்ணிட்டேன்னு நம்பிட்டாங்க... தாத்தா கூட கோவத்துல யோசிக்காம என்ன அடி பின்னிட்டாரு... அப்பத்தா கூட தடுக்க வந்தாங்க ஆனா அந்த தேவகி அவங்கள ஒரு அறையில போட்டு அடைச்சு வச்சிட்டா... என்றான் வேதனை நிறைந்த குரலில்
அம்மா??.. என்றவளை வெற்று பார்வை பார்த்த ராவணனோ
சொல்றேன் " அந்த சம்பவம் நடக்கறதுக்கு முத்தின நாள் டிவில ஒரு நாப்கின் விளம்பரம் போச்சு அத பார்த்து நான் அவங்க கிட்ட அத பத்தி எனக்கு தெரிஞ்சத சொன்னேன்.. ஆனா அதுக்கான அர்த்தம் கூட அப்ப எனக்கு தெரியாது டி.. ஆனா அவங்களோ எதோ சின்ன பையன் கேக்குறான்னு நினைக்காம இந்த வயசுல உனக்கு எதுக்கு இந்த தேவை இல்லாத விசியம் எல்லாம்ன்னு திட்டி அடி வேலாசிட்டாங்க..
அந்த விசயமும் இந்த விசயமும் ஒன்னு சேர்த்து கண்டிப்பா நான் தான் பண்ணி இருப்பேன்னு முடிவு பண்ணிட்டாங்க... என் கிட்ட ஒரு வார்த்தை கூட யாரும் கேக்கல... இது போன்ற விளம்பரங்களை பார்த்தாள் குழந்தைகள் கேள்வி கேக்க தானே செய்யும் அவங்களுக்கு புரியற மாதிரி சொல்லி கொடுத்து விளக்க வேண்டியது பெத்தவங்க கடமை தானே?? இது கூட அவங்களுக்கு புரியல...
ஒரு பக்கம் செண்பகம் எங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்க சொல்லி கத்திகிட்டு இருந்தா... ஆனா மாமாவோ நான் இதுக்கு ஒதுக்க மாட்டேன் நான் போலீஸ்க்கு சொல்லிட்டேன் அவங்க வந்து இந்த பொறுக்கிய இழுத்துட்டு போவாங்க அடிப்பின்னு கத்தி பேசுனாரு..
தம்பி, மாமா, அப்பா, யாருமே என்ன நம்பல.. சிறுவர் சிர்திருத்த பள்ளியில இருந்து ஆளுங்க வந்து என்னைய அழைச்சிட்டு போங்க... இந்த தெருவே நின்னு வேடிக்கை பார்த்துச்சு... யாருமே ஒரு வார்த்தை அந்த பையன் இப்படி பண்ணி இருக்க மாட்டேன்னு சொல்லவே இல்ல...
என்ன 17 வருசமா வளர்த்த என் சொந்தக்காரங்களே என்ன நம்பல... தாத்தா கால பிடிச்சு கெஞ்சுனேன்.. என் அப்பத்தா கூட என் நம்பாம அழுதுகிட்டு நின்னாங்க... அங்க இருந்த எல்லாரோட காலுலையும் விழுந்து கெஞ்சி கதறுனேன்.. யாருமே என்ன புரிஞ்சிக்கவே இல்லடி... வீட்டோட முத்த புள்ளை வழி தவறி போய்ட்டானே மட்டும் தான் குறைபாட்டாங்களே தவிர என் மனச யாரும் புரிஞ்சிக்கல...
கதற... கதற... என்ன கூட்டிட்டு போய் அந்த நரகத்துல சேர்த்து விட்டுட்டாங்க...ஒரு மாசம் கழிச்சு தாத்தா அப்பத்தா மாமா மட்டும் என்ன பாக்க வந்தாங்க...
மாமா " என்ன மன்னிச்சிரு ராவண அந்த ராட்சசிங்க கிட்ட இருந்து உன்ன காப்பாத்த எனக்கு வேற வழி தெரியல... நீ அங்க இருந்தா கண்டிப்பா உன்ன கொன்னு இருப்பாங்கன்னு சொன்னாரு... "
தாத்தாவோ " இனிமே நீ அங்க வராத ராசா எங்கயாவது போய் உன் தங்கச்சி மாதிரி பிழைச்சுக்கோன்னு சொன்னாரு... "
அப்பத்தாவோ " என்ன பாக்குற.. உனக்கு ஒரு தங்கச்சி இருக்கா ஊட்டில எங்க பாதுகாப்புல தான் இத்தன வருஷமா இருக்கா... இங்க இருந்த உன்ன குடும்ப கவுரவம், சொத்து அப்படி இப்படி எதாவது சொல்லி அந்த குழலிக்கு கல்யாணம் பண்ணி வச்சிடுவாங்க... நீ எங்கயாவது போய்ட்டு ராசா அப்படினு சொன்னாங்க... "
ஆனா நான் யாரு கிட்டவும் பேசவே இல்ல... அவங்க எல்லாரும் சொல்ல வேண்டியதை பேசிட்டு கிளம்பிட்டாங்க...
அதுக்கு அப்பறம் யாரும் என்ன பாக்க வரல... விடுதலை ஆகி நான் மறுபடியும் இங்க வந்தேன்.. வந்ததும் எனக்கு முதல் அதிர்ச்சி தாத்தா இறந்து போனது... மாமா மனநலம் சரி இல்லாம காப்பகத்துல இருந்தாரு... அப்பத்தாவோ வீட்ட பிரிச்சிகிட்டு தனியா இருந்தாங்க... என முடிக்க
மகிழினியோ " அப்பறம் எதுக்கு அவ அப்படி சொன்ன உங்களுக்கு ஊர் எல்லாம் பொண்டாட்டின்னு.. " என்றாள்
அவனோ " மறுபடியும் அவ என்ன தேடி இங்க வந்தா அப்ப தான் அப்பத்தா அவள திட்டி தொரத்தி விட்டுட்டாங்க.. ஆனா நான் தான் அவ கிட்ட போய் உடம்பு சுகத்துக்காக கெஞ்சுனா மாதிரி அந்த வீட்ல சொல்லி இருக்கா...
குடும்பமே ஒன்னா பேசி சிரிச்சு சந்தோசமா இருப்பாங்க.. ஆன நான் மட்டும் தனியா இருந்தேன்... அதுக்கு மேல இங்க இருக்க விருப்பம் இல்லாம வெளியூர் போய்ட்டேன்... மாச மாசம் அப்பத்தாவுக்கு மட்டும் காசு அனுப்பிடுவேன்.. அத கூட அவங்க எதோ நான் கடன் வாங்குறேன், தப்பான வழியில வந்த காசுன்னு தான் பேசிக்கிட்டாங்க...
தனிமை ரொம்ப கொடுமை பொண்டாட்டி.. அதுவும் சொந்தங்களோட இருந்துட்டு தனியா வாழ ஆரம்பிக்குறது கொடுமையிலும் கொடுமை.. அப்ப தான் குடிக்க ஆரம்பிச்சேன்.. என்னால கண்ட்ரோல் பண்ண முடியல டி..
நான் எதையும் கண்டுக்கல இப்படியே 10 வருஷம் போய்டுச்சு.. மறுபடியும் இங்கயே வந்து தங்க ஆரம்பிச்சேன்.. அப்ப தான் அந்த சேது ஒரு பொண்ணு கிட்ட கூடிச்சிட்டு தப்பா நடந்துக்க பாக்குறத பார்த்துட்டு அவன அடிச்சி அந்த பொண்ண காப்பாத்துனேன்..
அப்ப தான் தெரிஞ்சது அவ ஒரு தாசி அதுவும் அந்த சேது அடிக்கடி அவளை தொந்தரவு பண்ணிக்கிட்டு இருக்கான்னு.. அதனால அவள பத்திரமா அவ வீட்ல விடும் போது தான் நான் தாசி வீட்டுக்கு போறேன்னு ஊர் எல்லாம் பேச ஆரம்பிச்சாங்க... இப்படியே அடிக்கடி அந்த பெண்ணுக்காக அந்த வீட்ல நைட் நான் தங்குவேன் அன்னக்கி மட்டும் அந்த பொண்ணு நிம்மதியா தூங்குவா...
இதுல ஊர் இருக்கவங்க எல்லாம் பார்த்துட்டு நான் பொம்பள பொறுக்கி, குடிகாரன்னு முடிவு பண்ணிட்டாங்க.. இந்த நிலைமையில தான் என் சொத்தை விக்கனும்னு சொல்லி உன் கூட கல்யாணம் பண்ணி வச்சாங்க... அதுக்கு அப்பறம் தான் உனக்கே தெரியுமே... " என்றான்
அவளோ அவன் மடியில் இருந்து எழுந்து அமைதியாக வெளியே செல்ல...
அதில் மனதளவில் அடிபட்டு போன ஆடவனோ கடைசியில உனக்கு கூட என் மேல நம்பிக்கை வரலையாடி என நினைக்க...
மீண்டும் உள்ளே வந்த மகிழினியோ கையில் இருந்த தண்ணீரை அவனிடம் கொடுத்து விட்டு " இத குடிச்சிட்டு கொஞ்சம் தெம்பா பேச ஆரம்பிங்க... " என்றாள்
அவனோ " ஏய்!!.. நான் என்ன பேய் கதைய சொல்றேன்.. " என கத்திய படி நீரை அருந்த
மீண்டும் அவன் மடியில் வாகாக அமர்ந்து கொண்ட பெண் அவளோ " ஆமா, அந்த ஆட்டக்காரி வீட்ல இருந்த பொண்ணு எங்க... " என்றாள்
இப்போது பெண் அவளின் கேள்வி புரியாமல் ராவணன் முழிக்க... அவளோ " நீங்க காப்பாத்துனீங்களா அந்த பொண்ணு இப்படி எப்படி இருக்கா??... " என்றாள்
அவனோ " இப்ப அங்க இல்ல... உன்ன கல்யாணம் பண்ண அன்னைக்கே அவள வேற ஊருக்கு அனுப்பி வச்சிட்டேன்.. இனிமே அவ அந்த கேவலமா தொழில்க்கு போக மாட்டா... " என்றான்
அவளோ " சரி, பசிக்குது சாப்பிட போலாமா??.. " என்றாள்
அவனோ " என்னடி விளையாடுறியா கொஞ்ச நேரம் முன்னாடி தான் உங்க பழைய வாழ்க்கைய பத்தி சொல்லுங்கன்னு தொந்தரவு பண்ண.. இப்ப என்ன ஒண்ணுமே நடக்காத மாதிரி சாப்பிட சொல்ற...
சரி நான் கேக்குற கேள்விக்கு பதில் சொல்லு உனக்கு என் மேல சந்தேகம் இருக்கா இல்ல... " என அதற்கு மேல் வார்த்தை வராமல் பெண் அவள் முகத்தை காண....
மகிழினி பதில் என்ன??
தொடரும்...

Author: Nithya
Article Title: முரடன் 🌼 15
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.