Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖
Member
Messages
67
Reaction score
8
Points
8
முரடனின் மகிழம் பூ அவள் 🌼

எபி 17

இங்கு தோப்பு வீட்டில் தனியாக அமர்ந்து இருட்டி கொண்டு மாப்பும் மந்தாராமுமாக இருந்த வானை வெறித்து கொண்டு இருந்தாள் மகிழினியால்.. அவள் மன்னவனோ மதியம் உணவு கொண்டு வந்தவளை இங்கேயே இரு அரை மணி நேரத்தில் வந்து விடுகிறேன் என வெளியே சென்றான்.. இன்னும் திரும்பி வந்த பாடுத்தான் இல்லை...

ஆதவனும் அவன் ஆட்சியை முடித்து கொண்டு வானில் நிலவு மகள் தோன்றி இருக்க... இப்போது மேகங்கள் கூட திரண்டு வானே கரிய இருளை பூசி கொண்டது... தனிமை ஒன்றும் புதிதல்லவே அதனால் அவள் மனம் கவர்ந்த முரடனின் வரவிற்காக காத்து இருந்தாள் முரடனின் பூனை குட்டி🌼...

இரவு 11 மணி இருக்கும் சிலேன்ற காற்று மேனியை வருட... கண்கள் மூடி அதை ஆனந்தமாக அனுபவித்து கொண்டு இருந்தாள் மகிழினி.. அப்போது டூப்.. டூப்... என புல்லட் வண்டியின் சத்தம் கேக்க கண்களை திருப்பி பார்த்தாள் பெண் அவள்... அவள் முரடன் தான் கையில் எதோ பையுடன் வீட்டிற்குள் நுழைய...

அவளோ சென்று கோபமாக அங்கே இருந்த கயிற்று காட்டிலில் அமர்ந்து கொண்டாள்... போன வேகத்தில் வெளியே வந்த ராவணனோ " ஒய்!!.. பூனை குட்டி அங்க என்ன பண்ற டி... " என அவள் அருகே இடித்து கொண்டு அமர...

அவளோ முகத்தை திருப்பி கொண்டாள்.. மனைவியின் செல்ல கோபத்தை ரசித்த ஆடவனோ இடையோடு அவளை தூக்கி மடியில் அமர்த்தி கொண்டவனோ " ஒய்!.. பூனை என்ன பாக்க மாட்டியா... " என்றான் ஒவ்வொரு வார்த்தைக்கும் இடையில் கன்னத்தில் முத்தம் வைத்த படி...

அவளோ " எங்க போனீங்க இவ்வளவு நேரம்.. என் வீட்ல பொண்டாட்டி காத்து கிட்டு இருப்பான்னு நியாபகம் இல்லையா... அவ சாப்டால இல்லையானு கூட பாக்காம எங்க போனீங்க... உங்களுக்கு தான் என் நியாபகமே இல்லையே... " என அவளின் கீச்.. கீச்.. குரலில் கத்த

அவனோ " ஏய்.. கொஞ்சம் மூச்சு விட்டு பேசுடி... வர வர புருஷன்ற பயமே இல்ல.. எப்ப பார்த்தாலும் கத்திகிட்டே இருக்க.. நான் உன்ன மறந்தா எப்படிடி கரெக்ட்டா உன்ன தேடி இங்க வருவேன்.. உள்ள சாப்பாடு வாங்கிட்டு வந்து இருக்கேன் வா சாப்பிடலாம்... " என அவளை கையில் ஏந்தி கொண்டு செல்ல..

அவளோ அவன் கழுத்தை கட்டி கொண்டே " ஏன் இவ்வளவு நேரம்.. உங்கள ரொம்ப மிஸ் பண்ணேன் தெரியுமா.. வர நேரமாகும் சொன்ன நான் வீட்டுக்காவது போய்ட்டு வந்து இருப்பேன்ல... " என்றாள்

" ஏன் என்கூட இருக்க பிடிக்கலைன்னா சொல்லு நான் கொண்டு போய் வீட்ல இறக்கி விட்டுட்டு வரேன்... " என்றான் முகத்தை உர்ரென வைத்து கொண்டு அவளை கீழே இறக்கி விட

அவளோ மீண்டும் அவனை தாவி அணைத்து கொண்டு " நான் அப்படியா சொன்னேன்.. ரொம்ப நேரம் தனியா இருந்தேன் அதனால வீட்டுக்கு போன அப்பத்தா கூட பேசிகிட்டு இருந்து இருப்பேன் அத தான் சொன்னேன்.. உடனே மூஞ்சிய திருப்பிக்குறிங்க... " என அவன் கன்னத்தில் முத்தம் வைத்து சமையல் அறைக்கு சென்று விட்டாள்..

இருவரும் தரையில் அமர்ந்து இருக்க சூடான வாழை இலையில் மடித்து இருந்த பரோட்டாவை பிரித்து சால்னா ஊற்றி கொடுக்க... மகிழினியோ " புதுசா இருக்கு இது என்ன சாப்பாடு... " என்றாள் அவனை கண்டு

அவனோ " ம்ம்.. பரோட்டா டி.. இதுக்கு முன்ன சாப்பிட்டது இல்லையா... " என்றான் அவள் முக பாவனைகளை கண்டு

அவளோ " இல்ல... " என்பதோடு முடித்து கொள்ள...

அவனோ " அதுக்கென்ன நான் ஊட்டி விடுறேன் நீ சாப்பிடு.. இனிமே அடிக்கடி வாங்கிட்டு வரேன்... " என பொறுமையாக அவளுக்கு ஊட்டி விட அவளும் உண்ண ஆரம்பித்தாள்...

---

வெளியே மழை லேசாக பெய்து கொண்டு இருக்க மகிழினியோ வாசலில் நின்று அதை ஏக்கமாக பார்த்து கொண்டு இருந்தாள்.. முன்பு இப்படி ஏதேனும் மழையில் நனைந்து சளி, ஜுரம் வந்து விட்டாள் போதும் சின்ன பெண் என்று கூட பார்க்காமல் தீட்டி தீர்த்து விடுவாள் ஆண்டாள்.. கேட்டாள் வேலை செய்ய காரணம் கூறி இப்படி உடல் நிலையை கெடுத்து கொள்கிறாளாம்... இன்று அனைத்தும் கண் முன்னே நிழல் படமாக தோன்ற...

எதோ ஒரு நினைவில் சுழன்று கொண்டு இருந்தவளோ அவள் முரடனின் அணைப்பில் தான் நிகழ் உலகம் வந்தாள்... பெண் அவளை அட்டை போல ஒட்டி கொண்டு இருந்த ஆடவனோ சூடான மூச்சை அவள் கழுத்தில் வெளியிட்ட படி " என்ன பொண்டாட்டி ரொம்ப பலமா யோசிக்குற போல... " என்றான்

அவளோ " எனக்கு மழையில நனையானும் போல இருக்கு போகவா... " என்றாள் ஏக்கமாக...

" ம்ம்.. ஆசையா இருந்தா கொஞ்ச நேரம் போய்ட்டு வா.. அதுக்குன்னு ரொம்ப நேரம் ஈரத்துல இருக்காதா அப்பறம் உடம்பு முடியாம போய்டும் போ... " என கூற

அடுத்த நிமிடம் அவனையும் இழுத்து கொண்டு வெளியே சென்றாள்...

வெட்ட வெளியில் கொட்டும் மழையில் நீர் பூக்கள் ஊசியாக மேனியை தொட ஆனந்தமாக கைகளை நீட்டி மழையை வரவேற்றாள் மகிழினி...

ராவணனோ கைகளை கட்டி கொண்டு அவள் முகம் காட்டும் அத்தனை உணர்வையும் தான் உன்னிப்பாக ரசித்து கொண்டு இருக்க.. விழிகளோ உச்சி முதல் பாதம் வரை மழை தழுவி கொண்ட இடங்களை பொறாமையுடன் வருடியது..

மழை நீரில் நனைந்து உடுத்தி இருந்த சேலை உடலோடு ஒட்டி கொண்டு கண்ணாடி போல பெண் மயில் அவளின் அங்க வானப்புகளை காட்சி படுத்த... கொஞ்சம் கூட தன்னை கண்டு கொள்ளாது கொட்டும் மழையில் குழந்தையாக மாறி துள்ளி குதித்து விளையாடும் அவன் மனையாளை கண்டு கண்ணில் தாபமும் மோகமும் பொங்கி வழிய அழுந்த சிகையை கொதி கொண்ட ராவணன்..

உடலின் ஹோர்மோன்கள் எக்கு தப்பாக சுரக்க... உள்ளே இருக்கும் அவன் உடன்பிறப்போ என்னையும் கொஞ்சம் கவனி என்பது போல அடிவயிற்றை மூட்டி கொண்டு வெளி வர துடிக்க...

இதற்கு மேல் முடியாது என பாதங்கள் பெண் மயில் அவளை நோக்கி செல்ல... சிலிட்ட தேகம்.. போர்வையாக துணை தேடியதோ என்னவோ?? சூழல் போல சுழன்று ஆடவனின் இரும்பு காரங்களுக்குள் தஞ்சம் அடைந்து கொண்டாள்...

கள்வெறி போதையில் நாயகனின் வேல்விழிகள் சிவந்து போய் இருக்க.. இப்படி ஒரு மோக சிவப்பை காணாத பேதை அவள் நெஞ்சமோ சிறு அச்சம் கொண்டு அவன் முகத்தை காண... மழையில் ஊறிய அவள் செவ்விதழ் இரண்டும் தேன் உரிய கள் போல ஆடவனை போதை ஏற்ற...

குளிரில் துடிக்கும் அவள் செவ்விதழை கவ்வி கொண்ட ஆடவனோ நிறுத்தி நிதானமாக அவள் இதழ் ரேகையில் புதிய கவிதை ஒன்றை தீட்டி கொண்டு இருந்தான்... ஆண் அவனின் மென்மையான இதழ் அணைப்பில் ராஜ போதை கண்ட பெண் அவளோ மயங்கி அவன் சட்டையை இருக்கி கொள்ள அவனோ இடையோடு அவளை தூக்கி சென்று முத்தம் தடைப்படாமல் அந்த கயிற்று கட்டிலில் பெண் அவளோடு சரிந்தான்..

என்னோ ஏகாந்த நிலையில் அடுத்த கட்டத்திற்கு செல்லாமல் முத்தத்தை முடித்து கொண்டு அவள் கழுத்தில் முகம் புதைத்து கொண்டவனோ " மகி... " என்றான் மோகத்தில் கிறங்கிய படி

அவளோ அவன் முரடன் தந்த முத்த மயக்கத்தில் இருந்து இன்னும் தெளியாமல் " ம்ம்... " என்றாள்

அவனோ " இப்பவே எல்லாம் நடக்கணுமாடி... " என்றான் எதோ தடுமாற்றதோடு..

அதில் கண்களை திறந்து அவன் முகத்தை நிமிர்த்தி பார்த்தவளோ " என்னாச்சு உங்களுக்கு... " என்றாள்

அவனோ " உன்ன பாக்கும் போது என் உணர்ச்சி எல்லாம் அடங்காம ஆர்ப்பரிக்குதுடி.. இப்ப கூட உன்ன முழுசா எடுத்துக்கணும்னு மனசு துடிக்குது.. ஆனா நீ தாங்குவிய டி.. உனக்கு இன்னும் இது எல்லாம் தங்குற அளவுக்கு மன பக்குவம் இருக்கா...

என் உடம்பு எல்லாம் காய்ச்சல் அடிக்குதுடி.. என் ஒவ்வொரு செல்லும் உன்ன தான் கேக்குது.. என்ன என்னடி பண்ண ராட்சசி... " என அவன் உணர்வை அடக்க முடியாமல் பெண் அவள் இடையில் முத்தம் வைக்க..

பெண் அவளின் நிலையோ லட்சம் பூக்கள் ஒன்றாக மலருவதை தாங்க முடியாத சிறிய பூக்காம்பாக..

அவனே மேலும் தொடர்ந்தான் " நமக்குள்ள நடக்குற முதல் கூடல் எப்ப நினைச்சாலும் மறக்கமுடியாத சந்தோஷத்தையும் வெக்கத்தையும் தர கூடிய லவ் மேக்கிங் ஹா தான் இருக்கணும்னு ஆசை படுறேன்.. எந்த நிலையிலோ அது கசப்பான சம்பவமா இருக்க கூடாது... ஆனா அத எங்க ஆரம்பிச்சு எங்க முடிக்குறதுன்னு சாத்தியமா எனக்கு தெரியல டி...

கணவன் மனைவி உறவு இயல்பா எல்லாம் நடக்கணும்.. அதுவும் இந்த முரடனோட முரட்டு குணத்தை எத்துக்கிட்ட என் பூனை குட்டிய அவ்வளவு பிடிக்குது.. உன்ன இருக்கி அணைக்க கூட பயமா இருக்கு பூனை குட்டி... " என சில்லு கருப்பட்டியாக வார்த்தைகள் அவள் காதில் கேக்க...

தொடரும்...

இந்த எபிக்கு வரும் கமெண்ட்ஸ் பார்த்து தான் அடுத்த எபி சீக்கிரம் வரும் மக்களே.. நிறையோ குறையோ உங்க கருத்துகளை பதிவு செய்யுங்கள் தங்கங்களே...
 

Author: Nithya
Article Title: முரடன் 🌼 17
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top