Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖
Member
Messages
70
Reaction score
8
Points
8
முரடனின் மகிழம் பூ அவள் 🌼

எபி 21

இருவரும் ஜோடியாக சென்று சாமி கும்பிட... பூசாரியே அவன் கொடுத்த தட்சணையில் சற்று மிரண்டு தான் போனார்.. அவனோ பூஜை தட்டோடு ஐம்பது ஆயிரதை தட்சணையாக அளவா வைத்து இருந்தான்..

அதற்குள் சும்மா இருக்க மாட்டோம் என அங்கு வந்த சிவராமனோ " ஏன்யா பூசாரி காசு கொடுத்தா யாருவேணும்னாலும் கோவில்குள்ள வரலாமா??... அதுவும் சிறப்பு பூஜை வேற.. " என நக்கல் குரலில் கேக்க..

ராவணன் அமைதியா பூசரியை பேசு என்பது போல பார்க்க... அவரோ " ஐயா கொஞ்சம் அமைதியா இருக்கனும்.. இந்த திருவிழா நடக்கும்னு அம்பி தான் மொத்த செலவும் பண்ணி இருக்காரு.. நியாமா பார்த்த அவருக்கு தான் முதல் மரியாதையும் பூரண கும்பமும் கொடுக்கணும்.. ஆனா அதுஎல்லாம் அம்பி வேணாம்னு சொல்லிட்டாதால... அவருக்காக சிறப்பு பூஜை நடக்குது.. " என்றார் பொறுமையாக

அதற்குள் அவர்களை சுற்றி ஒரு கூட்டமே கூடி நிற்க...

அதில் கடுப்பான சிவராமனோ " அதுக்கு இந்த மாதிரி ஒருத்தன் கொடுக்குற காசுக்காக பல்லை இளிச்சிட்டு நிக்க சொல்லுறேலோ.. சொல்லுய்யா... அவன் முகத்தை பார்த்தாலே பாவம் இதுல அவன் கொடுத்த காசுல திருவிழா பண்ண மழை தான் வருமா?? இல்ல ஊர் தான் செழிக்குமா??.. " என ஆவேசமாக பேச

கூட்டத்திலும் ஆமா.. ஆமா.. அவன் நல்லா வழியில சம்பாதிச்ச பணமா வா இருக்கும்.. இதனால ஊருக்கு என்ன கேடு வருமோ தெரியலையே??.... என ஆள் ஆளுக்கு ஒரு கதை பேச... சிலரோ நல்ல மனசோட செய்றான் அவனுக்கு என்ன ராசா மாதிரி இருப்பான்.. அப்படியே அவங்க ஐயா குணம்.. என புகழ்ந்து பேச...

இதைஎல்லாம் கேட்ட ராவணனோ " இது என் செலவுல நடக்குற திருவிழா.. விருப்பம் இருக்கவங்க இருங்க.. இல்லாதங்க கிளம்பிப்போட்டே இருங்க.. நான் கொடுத்த காசை பத்தி பேச யாருக்கும் உரிமை இல்லை.. " என அவன் கர்ஜனை குரலில் பேசியவனோ மனைவியோடு வெளியே செல்ல..

தீடீரென வெள்ளை மேகங்கள் இருண்டு மெல்லிய சாரல் போல மழை அவனை நினைக்க.. ஊரில் உள்ள வயசான கிழவிகளோ " எவளோ போசகெட்டவன் சொன்னானே என் பேரன் கைவெச்ச விளங்குமான்னு இப்ப பாரு... அவன் பூசையா ஏத்துகிட்டு அந்த ஆத்தாவே மழையா வந்து இருக்கா.. இனி இந்த ஊருக்கு நல்ல காலம் தான்.. " கூற

மற்றோரு கிழவியோ " ஆமா லோலாயி.. இது வரை யாரு பூசைக்கும் வராத மழை இவனோட பூசைக்கு வந்து இருக்குன்னா என்ன அர்த்தம் எல்லாம் இவனோட நல்ல குணத்துக்கு அந்த ஆத்தா கொடுத்த பரிசு தான்... " என ராவணனுக்கு வாழ்த்து மடல் வாசிக்க..

இதற்கு எல்லாம் காரணமாவனோ எப்போதோ அவன் மனையோடு கிளம்பி இருந்தான்.. வண்டியை நேராக தோப்பு வீட்டில் நிறுத்தியவனோ தூறல் மழையை கண்ட படி அங்கே இருந்த திண்ணையில் அமர்ந்து கொண்டான்..

பூஜை தட்டை ஓரமாக வைத்து விட்டு அவன் அருகே அமர்ந்த மகிழினியோ " ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க??.. " என்றாள்

கேட்ட கேள்விக்கு பதில் கூறினான் அவன் ராவணனே இல்லையே.. அவனோ " உனக்கு பாப்பா வேணுமா??.. " என்றான் எங்கோ வெறித்த படி

" நீங்க என்ன சொல்ல வரீங்க எனக்கு புரியலா... " என்றாள்

அவனோ " உன் வயித்துல பாப்பா இருக்கு.. அது வேணும்னான்னு கேட்டேன்... " என்றான் அழுத்தமாக..

அதில் தன் வயிற்றை வருடி சந்தோசம் பட்டவளோ அதற்கு ஒரு நிமிடம்தான் ஆயுள் என அறியாமல் போனது தான் பாவம்..

அடுத்தநொடியே அவன் " இந்த பாப்பா வேணாம் டி.. நாம வேற பாப்பா பெத்துக்கலாம்.. " என்றான்

அதில் அதிர்ந்தவளோ " நீங்க பொய் தானே சொல்றிங்க??... " என்றாள்

" இல்லை.. உண்மையாவே நமக்கு இந்த பாப்பா வேணாம்டி... " என்றான் எழுந்து நின்ற படி..

அவளோ கோபமாக அவன் சட்டையை பற்றி கொண்டு " இல்ல.. என்னால முடியாது.. " என அவன் மார்பில் சாய்ந்து கதறி அழ...

" உனக்கு நான் வேணுமா இல்ல.. அந்த குழந்தை வேணுமான்னு முடிவு பண்ணிக்கோ.. ஒரு வாரம் நேரம் எடுத்துக்கோ.. நான் ஊருக்கு போய்ட்டு வந்ததும் ஹாஸ்பிடல் போறோம்... " என்றான்

ஆடவனின் வார்த்தைகளில் உடைந்து போனவளோ " உங்க முடிவ மாத்திக்கவே மாட்டிங்களா??... " என்றாள்

" இல்ல.. எனக்கு நீ மட்டும் போதும் இந்த புள்ளை குட்டி எல்லாம் என்னால பெத்துக்க முடியாது.. " என கூற

" அப்ப நான் உங்களுக்கு வெறும் படுக்கைக்கு மட்டும் தான் தேவையா?? என் உணர்வுக்கு மதிப்பு இல்லையா??... " என்றாள் கோவமாக

முதல் முறையாக அவள் கோபத்தை காண்கிறான் இருந்தும் " ஆமா.. " என்ற பதிளோடு சென்று விட்டான்.. ஆடவனின் வார்த்தையில் சுக்குநூறாக உடைந்து போன பாவையவளோ... எத்தனை நேரம் கதறி அழுதாளோ காலை இருந்த சந்தோசம் மறையும் அளவு அழுதாவளோ ஒரு முடிவுடன் அழுது வீங்கிய முகதோடு வீட்டிற்கு செல்ல..

அங்கே பாவையின் கோலத்தை கண்ட அப்பத்தாவோ " என்னாச்சி தாயீ.. ஏன்டா ஒரு மாதிரி இருக்க.. ஆமா அவன் எங்க??.. " என்றார் பரிதாவிப்பாக

அவளோ " அவங்க வேலைக்காக போயிருக்காங்க.. " என்பதோடு அறைக்குள் சென்று அடைந்து கொண்டாள்...

அவரும் பேரன் பார்த்து கொள்வான் என அமைதியாக சென்று விட...

நாட்கள் சென்றதே தவிர ஒரு மாற்றமும் இல்லை.. இந்த ரெண்டு வாரத்தில் எதோ சித்தம் கலங்கியவள் போல சுற்றி திறந்தவளோ அப்பத்தாவிற்காக பேருக்கு எதோ உணவை உண்டு செல்வாள்.. இத்தனை நாட்கள் வரை ராவணன் வீடு வராது வேற இருவரையும் கலக்கம் அடைய செய்ய எதோ எண்ணங்களில் சுழன்று கொண்டு இருந்தனர்...

அன்றும் அப்படி தான் காலை உணவை பெயருக்கு அப்பத்தாவோடு உண்டவளோ சாப்பிட்ட பாத்திரங்களை எல்லாம் கழுவி கொண்டு இருக்க... அவள் அருகே வந்த அப்பத்தாவோ " ஏன் தாயீ வீட்டுக்குள்ளயே அடைஞ்சி கிடக்குற சத்த தோப்பு வர போய்ட்டு வரலாம் தாயீ... " என்றார்

அவளும் மறுக்க முடியாமல் அவரோடு தோப்பிற்கு செல்ல.. தோப்பு வீட்டை கண்டதும் அன்று நடந்த வாக்குவாதம் நினைவிற்கு வர... அழுகையை அடக்க முடியாமல் வீட்டிற்குள் அடைந்து கொண்டாள்...

அப்பத்தாவோ தேங்காய்களை பார்வை செய்துவிட்டு அடுத்ததாக வரப்பு அருகே செல்ல.. காலில் எதோ வளவழப்பு தன்மையில் கால் இடரி ஆஆ...... என அலறிய படி கீழே சரிந்து விழுந்தார்.. அவரின் சத்தத்தில் சுற்றி இருந்தவர்கள் அவரை தூக்கி கொண்டு மருத்துவமனை நோக்கி ஓட.. அந்த சத்தத்தில் மகிழினியும் அவர்களோடு மருத்துவமனைக்கு சென்றாள்...

---

மருத்துவமனை வளாகம்...

சுற்றி இருந்த சில ஊர் மக்களோடு மகிழினியும் பதட்டமாக நிற்க... அதற்குள் விசியம் அறிந்து சிவராமனின் குடும்பமும் செண்பகத்தின் குடும்பமும் அங்கு வர... மகிழினியின் தலை முடியை கொத்தாக பற்றிய செண்பகமோ " அடியே! விளங்காதவளே.. உன்னால தாண்டி என் அம்மா இன்னக்கி உள்ள சாக கிடக்குறாங்க.. என்னடி பண்ண அவங்கள... " என கேவலமான வார்த்தைகளால் திட்டி கன்னம் கன்னமாக அறைய..

அவரின் கையை பற்றி கொண்ட பாவையோ " உண்மையாவே நான் ஒன்னும் பண்ணலைங்க.. எனக்கு எதுவும் தெரியாது... " என கூற

" அதை நம்ப நான் ஒன்னும் கேனை இல்ல.. அன்னைக்கே தெரியும்டி நீ அந்த விளங்காதவன் கூட மினிக்கிட்டு சுத்தும் போதே.. காசுக்காக கடைசியில என் அம்மாவை கொலை பண்ண பாத்தியேடி பாவி.. நீ எல்லாம் உறுபடுவியா... " என கத்த

அதற்குள் அங்கு வந்த வாணியின் அம்மா ஆண்டளோ எதோ நல்லவள் போல " இதோ பாருமா எதோ நீங்க சொன்னிங்கன்னு தான் இவள உங்கவீட்டுக்கு கல்யாணம் பண்ணி அனுப்புனோம்.. ஆனா எப்ப நீங்க இவ்வளவு பேசுனீங்களோ இனிமே அவ இங்க இருக்க மாட்டா... டேய் இவள இழுத்துட்டு போங்க.. " என கூற

மகிழினியோ நான் வரல... நான் வரல... என கத்திக்கொண்டே செல்ல.. பாவையின் கதறல்களை எல்லாம் ஒரு பொருட்டாக கூட எண்ணாமல் அவர் வீட்டிற்கு இழுத்து சென்று விட்டார்...

கண்இமைக்கும் நொடியில் எல்லாம் நிகழ்ந்து விட... மீண்டும் அந்த பழைய குடிசையில் மயக்கத்தில் கிடந்தாள் மகிழினி... முன்பை விட சற்று அழகு கூடி இருக்கும் பாவையை குரூரமாக கண்ட ஆண்டளோ குளிர்ந்த நீரை அவளின் மேல் உற்ற.. அதில் அடித்து பிடித்து பதறி எழுந்தாள் மகிழினி..

" ஏய்... என்னடி தூக்கம் வேண்டி கிடக்கு உனக்கு.. இதுயென்ன அந்த குடிகார பையன் வீடுன்னு நினைச்சியா??.. இனிமே அவங்க எங்க உன்ன தேடி வர போறான்.. இந்நேரம் எந்த பொண்ணு முந்தானையில கிடைக்குறானோ... " என எள்ளாக கூற

அதில் கோபமானவளோ " இங்க பாருங்க.. என்ன எப்படி வேணும்னாலும் பேசுங்க.. ஏன்னா நீங்க என்ன வளத்திங்க.. ஆனா என் புருஷன் பத்தி பேச உங்களுக்கு உரிமை இல்ல... " என கூற

பாவையின் கன்னத்தில் ஓங்கி அடித்தவரோ " இங்க பாருடி இனிமே இந்த புருஷன்.. குடும்பம் எல்லாம் இல்ல.. இங்க தான் கிடைக்கணும்.. அடுத்த வாரம் உனக்கும் பக்கத்து ஒரு மிட்டாமிராசுக்கும் கல்யாணம் ஒழுங்கா இரு.. இல்ல அந்த கிழவி உசுரு இருக்காது... ஜாக்கிரதை.. " என கத்திவிட்டு செல்ல..

காதில் விழுந்த வார்த்தைகளை ஜிராணிக்க முடியாமல் தப்பிக்க வழிகிடைக்குமா?? என தேட ஆரம்பித்தாள்.. ஆனால் வீட்டை சுற்றி மூன்று நான்கு வேட்டை நாய்கள் நிற்க.. அதில் தன் இயலாமையை எண்ணி அழுகையோடு அவள் குடிசைக்குள் அடைந்து கொண்டாள்...


ராவணன் வருவானா??...

தொடரும்...
 

Author: Nithya
Article Title: முரடன் 🌼 21
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top