முரடனின் மகிழம் பூ அவள் 🌼
எபி 23
மெத்தையில் உடலை கூட அசைக்க முடியாத படி படுத்து இருந்த மகிழினியோ கணவனோடு வரும் பெண்ணை குழப்பமாக பார்க்க.. " இவ இசை எனக்கு தங்கச்சி மாதிரி.. இனிமே உன்ன பார்த்துக்க போற டாக்டர்.. " என்றான்
இசையோ " இப்ப எப்படி இருக்கு அண்ணி.. " என அவளை பரிசோதனை செய்த வண்ணம் கேக்க..
" இப்ப பரவலை ம்மா.. ஆனா உடம்ப தான் அசைக்க முடியல.. ரொம்ப வலியா இருக்கு.. " என்றாள் சோர்வான குரலில்..
இசையோ " சீக்கிரம் சரியாயாகிடும் அண்ணி.. இன்னக்கி மட்டும் ஜூஸ்.. கஞ்சி கூடிங்க அண்ட் இனிமே நீங்க எந்த வேலையும் செய்யாம இருக்கனும் முக்கியமா நான் சொல்ற வர மாடி படி கூட இறக்கூடாது.. " என்றாள்
ராவணனோ " போதும்.. அவளை பயம்புறுத்தினது வெளிய உன் புருஷன் இருப்பான் அவன் கூட போய் கடலை போடு.. " என கூற
அவளோ வாயை சுழித்த படி வெளியே சென்று விட்டாள்..
இதழுக்கே தெரியாமல் சிரித்தவனோ மென்மையாக மகிழினியை அமர வைத்து ஜூஸ்யை புகட்ட.. இருந்த பசிக்கு வேகமாக அதை முழுதும் குடித்து முடித்தவளோ " இது யாரு வீடு??... " என்றாள்
" நம்ப வீடு தான்.. இனிமே இங்க தான் இருக்க போறோம்.. " என்றான்
அவளும் மறுப்பு கூறாமல் சரியென தலை அசைக்க... மெதுவாக அவளை கையில் ஏந்தி கொண்டவனோ அவன் அறைக்கு அழைத்து சென்றான்.. நல்ல விசாலமான அறையில் கிங் சைஸ் பெட்.. முளையில் இரண்டு மரவேலை செய்யப்பட்ட அலமாரியும் ட்ரெஸ்ஸிங் டேபிளும்.. அதோடு சிறிய பால்கனி மற்றும் ஒரு குட்டி அறையும் இருந்தது..
மகிழினியும் அறையை வித்தியாசமாக பார்க்க.. மெதுவாக அவளை மெத்தையில் படுக்க வைத்தவனோ அவள் அருகே படுத்து கொண்டு " கோபம் போய்டுச்சாடி... " என்றான்
எதோ யோசனையில் இருந்தவள் அவன் வார்த்தையில் தெளிந்து " உங்க மேல கோவம் இல்ல.. வருத்தம் தான்.. " என அவன் கையை இருக்கி கொண்டு " உண்மையாவே உங்களுக்கு பாப்பா வேணாமா??... " என்றாள்
" உனக்கு எந்த பிரச்சனையும் இல்லாம குழந்தை பொறக்கும்னா நான் ஏண்டி வேணாம்னு சொல்ல போறேன்.. ஆனா இப்ப கூட எனக்கு பயமா தான் இருக்கு.. ஒழுங்கா சொல்றத கேட்டு உன்ன பார்த்துக்கோடி.. சத்தியமா நீ இல்லாம என்னால இருக்க முடியாது.. " என அவளின் கருப்பை பிரச்சனையை பற்றி கூற
" அப்ப உண்மையாவே என்னோட பிரச்சனைக்கு தான் அன்னக்கி வேணாம்னு சொன்னிங்களா??... " என்றாள் தவிப்பாக..
" ஆமா.. அதுக்குன்னு உடனே வாட்டர் பால்ஸ் ஓபன் பண்ணிடாதடி.. இந்த மாதிரி நேரம் தான் ரொம்ப தைரியமா இருக்கனும்.. நீயும் பயந்து என் பொண்ணையும் உன்ன மாதிரி ஆகிடாத.. உனக்காக நான் இருக்கேன் இனிமே இந்தமாதிரி எல்லாம் தனியா விட்டுட்டு போக மாட்டேன்... சரியா.. " என கூற
" எப்பவும் இருப்பிங்களா... "
" கண்டிப்பா இருப்பேண்டி.. கொஞ்ச மாசம் இங்கேயே இரு.. வெளியே எங்கேயும் போக வேணாம்.. முக்கியமா ஸ்வீட் கிடையவே கிடையாது.. நாளையில இருந்து சாப்பாடு இசை கொடுப்பா அதை ஒழுங்கா சாப்பிடு.. அப்பதான் உள்ள இருக்க பாப்பா ஆரோக்கியமா இருக்கும்.. " என்றான் அழுத்தமாக
அவளோ " எல்லாமே பண்றேன் ஆனா குலாப் ஜாமுன் வேணும்.. ப்ளீஸ்.. " என்றாள் கண்களை சுருக்கி..
" முடியாதுடி.. என் செல்ல பூனைக்குட்டி தானே வெறும் 280 நாள் தானம்மா... " என கொஞ்சிய படி பேச..
அவளோ " சரி, உங்களுக்காக இருக்கேன்.. " என்றாள் முகத்தை சுருக்கியா படி..
---
ஒரு வாரம் கழித்து...
மதியம் போல அறைக்குள் நுழைந்த ராவணன் கண்டதோ மெத்தையில் அமர்ந்த படி ஜன்னலை வெறித்து பார்க்கும் அவன் பூனைக்குட்டியை தான்.. சென்று அவளை அணைத்த படி அமர்ந்து கொண்டவனோ மென்மையாக அவள் பட்டு கன்னத்தில் முத்தமிட்டு " என்னடி இன்னும் அன்னக்கி நடந்ததையே நினைச்சிட்டு இருக்கியா??... " என்றான்
" இல்ல.. எனக்கு வெளியே போகணும்னு தோணுது.. இந்த அறைக்குள்ளயே இருக்க ஒருமாதிரி இருக்கு மாமூ.. " என அவன் தோளில் சாய்ந்து கொள்ள..
" சாயங்காலமா வெளியே போலாம்டி.. இப்ப படம் எதாவது பாக்குறியா?? இல்லை படிக்க கத்துக்குறியா?? நான் சொல்லித்தரவா??... " என்றான் அவள் மனநிலையை மாற்றும் பொருட்டு..
" உண்மையாவே உங்களுக்கு இங்கிலிஷ் எழுத படிக்க தெரியுமா??.. எனக்கு சொல்லி தரீங்களா??... " என்றாள் ஆர்வமாக
" உனக்கு இல்லாமையா??... இரு நான் நோட் எடுத்துட்டு வரேன் முதல எழுத பழகு.. அப்பறம் வாசிச்சு பாரு நேரம் போறதே தெரியாது.. " என முன்பை போல காட்டு குரல் இல்லை என்றாலும் சற்று மென்மையான குரலில் தான் பேசுகிறான்..
முதலில் அவள் கைபிடித்து ஏ. பி. சி. டி. எழுத கற்று கொடுத்தவனோ அடுத்தாக புத்தகத்தை பார்த்து வாசிக்க சொல்லி கொடுத்தான்.. எதோ ஒன்று புதிதாக கற்று கொள்வது சற்று தனிமையை போக்க உதவி செய்ய.. உற்சாகமாக அவன் எழுத கற்று கொடுத்ததை எழுதி பார்க்க ஆரம்பித்தாள்..
---
இங்கே மருத்துவனையில் அன்று என் அம்மா.. என் அம்மா.. என உரிமை கொண்டாடியவர்களோ இன்று அனாதை போல அவரை தனியே விட்டு..விட்டு.. சென்று விட்டனர்.. ராவணன் தான் அப்பத்தாவிற்காக சிறப்பு மருத்துவ வசதியோடு பார்த்துக்கொள்ள ஒரு ஸ்பெஷல் நர்ஸ்யும் ஏற்பாடு செய்து உள்ளான்..
ஜீவநதி கிராமம் முழுதும் நாளை யாழினி குரூப்ஸ்.. கம்பெனியின் திறப்பு விழா என அறிவிக்க பட்டு.. அங்கே வேலை செய்ய ஆட்களையும் தேர்வு செய்ய போவதாக தகவல் ஊர் முழுதும் தண்டோற போடப்பட்டது..
அதை கேட்ட செண்பகமோ சேது.. ஆகாஷ்.. இருவரிடமும் இதை பற்றி கூற சேதுவோ விருப்பம் இல்லை என சென்று விட... ஆகாஷோ " அது ரொம்ப பெரிய கம்பனி அத்த.. தமிழ்நாட்டில மட்டும் வருசத்துக்கு 10 கோடி வர அவங்க யாழினி இல்லத்துக்கும் ஏழைகளுக்கும் செலவு பன்றாங்க.. கண்டிப்பா எனக்கு அங்க வேலை கிடைச்சா நாமலும் கொஞ்ச பெரிய நிலைமைக்கு போகலாம்.. " என்றான்
பணம் என்றதும் பொணம் கூட வாயை பிளாக்குமாம் அதுபோல தான் செண்பகமும்.. எப்படியாவது ஆகாஷ் மூலம் தன் மகனுக்கோ மகளுக்கோ அங்கே ஒரு வேலை வாங்கி விட வேண்டும் என அதற்கான வேலைகளை பார்க்க ஆரம்பித்தாள்..
மூன்று வயது குழந்தையோடு அறைக்குள் வரும் கணவனை அதிர்ச்சியாக பார்க்கும் மகிழினி.. காரணம் அவன் ராவணனின் சிறுவயது பிரதிபலிப்பு போலவே இருந்தான்.. யார் அவன்??...
தொடரும்...

Author: Nithya
Article Title: முரடன் 🌼 23
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.