Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖
Member
Messages
74
Reaction score
8
Points
8
முரடனின் மகிழம் பூ அவள் 🌼

எபி 24

மாலை வெளியே அழைத்து செல்கிறேன் என கூறிய ராவணனை காணாமல் நகத்தை கடித்த படி அமர்ந்து இருந்தாள் மகிழினி.. அப்போது கதவு திறக்கும் ஓசையில் ஆர்வமாக வாயலை கண்டவளின் கண்களோ அதிர்ச்சியில் தெறித்து விடும் அளவிற்கு ஆடவனின் கையில் இருந்த அந்த குட்டி வாண்டை பார்த்தாள்..

கையில் இருந்த குழந்தையை பொறுமையாக மெத்தையில் அமர வைத்தவனோ தானும் அமர்ந்து கொண்டு " டேய்! இது தான் உங்க மகிம்மா... " என்றான்

பார்க்க மூன்று வயதில் இருக்கும் அவனோ அவன் மழலை மொழியில் " ஹாய்! மகிம்மா நா நிரல்... " என்றான் அவன் அரிசி பற்கள் தெரிய சிரித்த படி..

மென்மையாக அவனை அணைத்து கொண்டவளோ " நான் மகிழினி.. ஆமா இவர் கூட எப்படி வந்திங்க??.. " என்றாள்

ராவணனோ " என்ன பார்த்த உனக்கு என்ன பேய் பிசாசு மாதிரியா இருக்கு??.. " என்றான் கோபமான குரலில்

அவளோ " பேய் மாதிரி இல்ல சாமியார் மாதிரி இருக்கீங்க... " என்றாள் சிரிப்பை அடக்கிய படி

நிரலும் " ஆமா.. மாமா பாக்க அப்பதி தான் இருக்கீங்க.. " என்றான்

" உங்கள கூட்டு சேர்ந்து என்ன கலாய்குறிங்களா.. அப்பறமா உங்கள வச்சிக்குறேன்.. ஒய்! பூனைக்குட்டி இவன் நிரல் அகரயாழன்.. இசையோட பையன்... " என்றான்

" ரொம்ப அழகா இருக்க நிரு குட்டி.. " என அவன் கன்னத்தில் முத்தம் வைக்க..

இங்கே ஒருவனுக்கோ அடுப்பு இல்லாமல் எரிய ஆரம்பித்தது.. கணவனின் பொசசிவ் பார்வையை உணர்ந்து கொண்டவளோ ஆடவனை வெறுப்பேற்றவே இன்னொரு கன்னத்தில் முத்தம் வைக்க....

" போதும்.. போதும்.. நிரு நீங்க மாமா கிட்ட வாங்க.. மகிம்மா வயித்துல பாப்பா இருக்கு... " என அவன் மடிக்கு மாற்றி கொண்டவனோ கண்களை உருட்டி பாவையை முறைக்க..

அவளோ சிரித்த படி.. " அவன் குழந்தை மாமூ.. " என்றாள்

" இருந்தாலும் பரவாயில்லை... நீங்க பேசிக்கோங்க.. விளையாடுங்க.. ஆனா னோ கிஸ்.. " என்றான் அந்த பொசசிவ் கிங்..

" சரி என்கிட்ட கொடுங்க.. " என்றாள்

அவனோ " வயித்துல படாம உன் பக்கத்துல வச்சிக்கோ டி.. நான் நைட் வந்து கூட்டிட்டு போறேன்.. " என இருவரையும் தனியே விட்டு வெளியே சென்று விட்டான்..

மகிழினியின் வயிற்றில் மென்மையாக அவன் பிஞ்சு கைகளை வைத்த நிரலோ " மகிம்மா நா பாப்பா கித்த பேசவா.. " என்றான் ஆசையாக

" ம்ம்.. பேசு நிரு குட்டி... " என்றாள்

அவனோ " ஹாய்! பேபி நா நிரல்மாமா... நீ சீக்கிதாமா வெளிய வா நாம ஜாலியா விளையாதலாம்... நாம சைக்கிள் ஒத்தலம்.. மாமா கூத பைக்லா போலாம்.. அப்பதம் அப்பா சூப்பதா மேகி செய்வாங்க நாம சாப்புதலாம்... உனக்கு நா பெதியா கதடி பொம்மை வாங்கிததேன்... " என பேசிக்கொண்டே சென்றவன் கடைசியாக " பாய் பேபி... நாளைக்கி பேசலாம்.. " என மென்மையாக அவள் வயிற்றில் முத்தமிட்டு " மகிம்மா நா பேசித்தேன்.. " என்றான்

அவளோ சிரித்த படி " சரி.. நிரும்மா ஆமா, நீங்க இங்க தான் இருக்கீங்களா?? ஏன் இதனால என்ன பாக்க வரல??... " என்றாள்

நாடியில் கைவைத்து யோசிப்பது போல பாவணை செய்தவனோ " அது ம்மா உங்கக்கு உடம்பு சதி இல்லைன்னு சொன்னா.. அதான் வதல.. அப்பதம் மாமா தான் இப்ப உங்ககித்த கூத்தித்து வந்தாங்க.. " என கூற

" என் நிரு குட்டி சாப்பிட்டீங்களா??... " என்றாள்

" ம்ம்.. சாப்பித்தேன் மகிம்மா.. " என இருவரும் பேசிக்கொண்டு இருந்தனர்..

---

இங்கே ராவணனோ இசை முன்பு அமர்ந்து இருக்க.. அவளோ சில கோப்புகளை பார்த்து விட்டு " ண்ணா.. முன்ன விட இப்ப எடுத்த டெஸ்ட் ரிப்போர்ட் வச்சி பாக்கும் போது அண்ணியோட கருப்பை இப்ப ஓகே தான்.. ஆனா குழந்தை வளர ஆரம்பிக்கும் போது தான் நாம ரொம்ப கவனமா வாட்ச் பண்ணனும்.. ஒரு வேலை அவங்க கருப்பை விரியலைன்னா கண்டிப்பா நாம ஒபரேட் பண்ணி தான் ஆகணும்...

ஆனா அப்படி நடக்கலைன்னா அவங்க டெலிவரி அப்ப ஆபரேஷன் பண்ணி குழந்தைய வெளியே எடுக்கலாம்.. ஏன்னா முன்னவே நான் சொன்ன மாதிரி அவங்கள டெலிவரி பெயின் தாங்க முடியாது.. இது கண்டிப்பா ரெண்டு உயிரோட இழப்புல தான் முடியும்... " என்றாள்

அவனோ " இதுக்கு வேற வழி இல்லையா குட்டிம்மா??.. " என்றான்

" லாஸ்ட் சான்ஸ் இருக்கு குழந்தை வளரும் போது அவங்க கருப்பையும் விரிவு அடையனும்.. பட் நடக்கும் அப்படியே யோசிப்போம்.. அதுவும் இல்லாம ஆரம்பத்துல அவங்களுக்கு நல்ல டிரீட்மென்ட் இல்லாததும் இதுக்கு ஒரு காரணம்.. பிரியட்ஸ் அப்ப வழக்கத்த விட பெயின் அதிகமா இருக்கும் போதே செக் பண்றது ரொம்ப முக்கியம் ண்ணா..

இப்போதைக்கு டயட் அப்படியே இருக்கட்டும்.. நான் என்னோட சீனியர் கிட்ட பேசுனேன் அவங்க நாலு மாசம் கழிச்சு கூட்டிட்டு வர சொல்லிருக்காங்க.. " என்றாள்

அவனோ " அவளுக்கு தெரிய வேணாம் குட்டிம்மா.. தெரிஞ்சா தாங்க மாட்ட.. இப்ப வர அவளுக்கு வயித்துல கட்டி இருக்கு அதனால தான் பாப்பா வேண்டாம்னு சொல்லி இருக்கேன்.. ஆனா அதையே அவளால தாங்க முடியல.. இப்ப இதுவும் தெரியாம இருக்கட்டும்.. அப்பறம் நாளைக்கி வெளியே கூட்டிட்டு போலாம்னு இருக்கேன் இதுனால எந்த பிரச்சனையும் இல்லையே??... " என்றான்

அவளோ " இப்ப ஓகே பட்.. கவனமா கூட்டிட்டு போங்க.. நைட் ஒரு டெஸ்ட் பண்ணிக்கலாம்.. " என்றாள்

" சரி டா.. அப்பறம் நீயும் ஜாக்கிரதையா இரு.. தெரியாத யார்கிட்டயும் பேசாத.. யாராவது எதாவது கேட்ட கூட என் பேர சொல்லு.. " என கூற

" கண்டிப்பா ண்ணா.. இனிமே அவங்க என் பொறுப்பு அண்ட் அப்பத்தா கிட்ட கூட நல்ல முன்னேற்றம் இருக்கு.. இன்னும் கொஞ்ச நாள்ல நடக்க ஆரம்பிச்சிடுவங்க.. ஆனா இது எதோ அவங்கள வேணும்னே கொலை பண்ண பார்த்த ட்ராப் மாதிரி இருக்குண்ணா பார்த்துக்கோங்க... " என கூறி சென்று விட்டாள்..

---

இரவு சிவராமனை தனியாக சந்தித்த செண்பகமோ " அண்ணா அந்த குடிகார பையனையும் அவன் பொண்டாட்டிடையும் ஒரு மாசமா காணோம்.. ஒரு வேலை ஊரை விட்டு போய்ட்டாங்களா?? இல்லை??... " என கேள்வியாக பார்க்க

" கண்டிப்பா அவன் சும்மா இருக்க மாட்டான் செண்பகம்.. ஏன்னா நாம அவன் அப்பத்தா மேலயும் பொண்டாட்டி மேலயும் கைவச்சி இருக்கோம்.. எனக்கு என்னவோ புலி பதுங்குறது பாய தான்னு நினைக்குறேன்.. அதுக்குள்ள நமக்கு தேவையான பலத்தை சேர்த்துக்கணும்... " என்றார்

அவளோ " ஆமா, அண்ணா நம்ப ஊருக்கு புதுசா வர போற அந்த எம். டி. யா பிடிச்சோம்னா கண்டிப்பா அவரு நம்மளுக்கு உதவி பண்ணுவாரு... " என கற்பனை கோட்டை கட்ட ஆரம்பிக்க..

விதியோ இவர்களின் கஷ்ட காலத்தை எண்ணி கைகொட்டி சிரிக்க ஆரம்பித்தது...

---

விடிய மறுக்கும் இரவையும் சூரியனின் ஒளி பட்டு விடியல் தர... ராவணனோ மெதுவாக துயில் கலைந்து எழுந்தான்.. வழமை போல அவனை அணைத்து கொண்டு உறங்கும் பாவையின் நெற்றியில் முத்தமிட்டவனோ அடுத்து இதழோடு இதழ் சேர்க்க...

உதட்டை உரிஞ்சி எடுக்கும் உணர்வில் கண்களை திறந்த மகிழினி கண்டதோ மிக நெருக்கமாக அவளின் உதடுகளை மிட்டாய் போல இழுத்து சுவைக்கும் அவள் முரடனை தான்.. மெதுவாக அவன் புதர் தாடிக்குள் தன் வெண்டை பிஞ்சு விரல்களை நுழைத்தவளோ... ஆடவனின் முத்தத்திற்கு ஒத்துழைப்பு தர..

இச்! என்ற சத்ததோடு இதழ்களை பிரித்தவனோ அவளின் காந்த பார்வையில் கிறங்கி " என்னடி அப்படி பாக்குற??... " என்றான் காட்டு குரலில்..

அவளோ அவன் கன்னத்தில் முத்தமிட்டு " இப்பெல்லாம் நீங்க ரொம்ப மாறிட்டீங்க.. தெரியுமா??.. " என மகிழ்ச்சியாக கூறியவள் அடுத்த நொடி சோகமாக மாறிவிட...

அவனோ " இப்ப ஏண்டி மூஞ்ச மூஞ்சுரு மாதிரி வச்சிருக்க??.. " என்றான்

" ம்ம்.. இந்த மாற்றம் எல்லாம் உங்க பெண்ணுக்காக தானே??... " என்றாள் வாட்டமாக

அவனோ " சரி, வா போய் பிரெஷ் ஆகிட்டு வருவோம்... " என மெதுவாக கைகளில் தூக்கி கொள்ள...

" எப்பவும் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லவே மாட்டிங்களா??.. எப்ப பார்த்தாலும் சம்மந்தம் சம்மந்தமே இல்லாம நீங்க வேலை பண்றிங்க... " என குறை பட்டுக்கொள்ள...

" கண்டிப்பா ஒரு நாள் உனக்கே எல்லாம் புரியும்.. இப்ப அமைதியா இரு டி... " என குழந்தை போல அவளுக்கு பணிவிடைகள் செய்ய ஆரம்பித்தான்...

---

யாழினி குரூப்ஸ் சி. இ. ஒ. வந்துட்டார் என்ற குரலுக்கு காரில் இருந்து கம்பிரமாக இறங்கி வந்தான் அவன்??... யார் அவன்??...

தொடரும்...
 

Author: Nithya
Article Title: முரடன் 🌼 24
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top