Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖
Member
Messages
75
Reaction score
8
Points
8
முரடனின் மகிழம் பூ அவள் 🌼

எபி 25

மொத்த ஜீவநதி கிராமமே அங்கே இன்று திறக்க போகும் யாழினி குரூப்ஸ் கம்பனி வாசலில் காத்து இருக்க.. வெள்ளை நிற பென்ஸ் காரில் வந்து இறங்கினான் அவன்.. அனைவரும் அவனை யாழினி குரூப்ஸ் உரிமையாளன் என நினைத்து தாரை தப்பட்டை.. சத்தம் காதை கிழிக்க.. மாலை அணிவித்து அவனை வரவேற்றனார் ஊர் தலைவரும்.. ஊரின் பெரிய குடும்ப வாரிசு என்ற முறையில் சிவராமனும்..

அமைதியாக அதை எல்லாம் ஏற்று கொண்டான் அவன் ராகவ்.. திராவிட நிறமும்.. காட்டுக்கோப்பான உடல் அமைப்பும் கொண்டவன்.. சுற்றி இருக்கும் மக்களையும் ஏற்படுகளையும் பார்வை யிட.. அவனின் கவனத்தை ஈர்த்த தலைவரோ " சார்.. நல்ல நேரம் முடிய போகுது ரிப்பன் கட் பண்ணிடுங்க.. " என்றார் பவ்வியமாக

ராகவோ " அதெல்லாம் என்னால முடியாது.. என்னோட பாஸ் வரட்டும்.. " என்றான்

சிவராமனோ " அப்ப நீங்க யாழினி குரூப்ஸ் சி. இ. ஒ. இல்லையா??.. " என கேக்க

அவனோ சிரித்த படி " ஐ அம் ராகவ் தினகரன்.. ஒன் ஒப் தி ஷேர் ஹோல்டர் ஒப் யாழினி குரூப்ஸ்.. அண்ட் யாழினி குரூப்ஸ் பௌண்டர்.. ஆர். வி. சார் இப்ப வந்துடுவாங்க.. " என கூற ஊரின் கன்னி பெண்களின் கண்கள் எல்லாம் ஆடவனை தான் வட்டமிட்டு கொண்டு இருந்தது..

தூரத்தில் கார் வருவதை கண்டு யாரோ யாழினி குரூப்ஸ் சி. இ. ஒ. வந்துட்டார் என கத்த.. சுற்றி இருக்கும் அனைவரும் ஆவலாக வாசலை பார்க்க.. அந்த கருப்பு நிற ஜாகுவாரில் இருந்து ஸ்டைலாக இறங்கினான் அவன் தி கிரேட் பிஸ்ஸின்ஸ் கிங் ஆர். வி. ராவணன் யாழ்வேந்தன்..

அசுரக்கோட்டை அரசன் அந்த இலங்கை அரசனின் மறுஉருவம் போல தன் எயிட் பேக் உடலும்.. பருந்து போன்ற அகன்ற மார்பும்.. ராஜாளியின் கூர்மையான பார்வையும்.. கொண்டு ராஜநடையில் காரின் மறுபக்கம் சென்றவனோ.. தன் கைகளால் காரின் கதவை திறந்து அவன் ராணி கீழே இறங்க உதவி செய்தான்.. மென்மையாக பாவையின் கரத்தோடு அவன் கரங்களை கோர்த்து கொண்டு அவன் நடந்து வருவதை காண... அப்படி ஒரு கம்பிரமும் நிமிர்வும் அவன் நடையில் தெரிந்தது..

" வெல்கம் பேக் பாஸ்... " என அவன் கையில் பூங்கொத்தை கொடுத்தான் ராகவ் தினகரன்..

சுற்றி இருந்த அனைவரும் அவர்களை வியப்பாக காண... ஒரு சிலரோ ஆச்சரியமாக பார்த்தனர்.. சிவராமனின் குடும்பமோ அதை பொறாமையும் வஞ்சகமுமாக காண...

சிறிய இதழ் விரிப்போடு சுற்றி இருந்தவர்களை கண்ட ராவணனோ ராகவ் நிட்டிய பூங்கொத்தை வாங்கி கொண்டு " மகி.. இது ராகவ் என் பி. ஏ... " என அறிமுகம் செய்து " ராகவ் இவ இந்த ராவணனோட ராணி.. " என்றான் கர்வமாக..

ராகவும் " வெல்கம் மேம்.. " என்றவனோ " சார், டைம் ஆச்சு ரிப்பன் கட் பண்ணிடலாமா??... " என்றான்

ராவணனோ " போலாம் ராகவ்.. " என பாவையையோடு முன்னே செல்ல..

ஏற்படுகளை எல்லாம் செய்த ஊர் தலைவரும்.. சிவராமனும்.. கூடவே ஆகாஷ் கையில் கத்திரி கோல் ஏந்திய தட்டோடு நிற்க.. ராகவோ அதை வாங்கி கத்திரி கோலை ராவணனின் புறம் நிட்டினான்..

ராவணனோ கத்தரி கோலை தன்னையே வியப்பாக காணும் பாவையின் கரத்தில் கொடுத்து " இந்த கம்பனியே உனக்காக தான்.. சோ நீயே ஆரம்பிச்சி வை.. " என கொடுக்க..

அவளோ ஆடவனின் விழி அசைவுக்கு கட்டு பட்டு மறு வார்த்தை கூறாமல் ரிப்பன் கட் செய்தாள்.. சுற்றி இருந்தவர்கள் கைகளை தட்ட.. மனைவியின் கரம் பிடித்து உள்ளே அழைத்து சென்றவனோ மைக்கை கையில் வாங்கி கொண்டு " இங்க கூடி இருக்க எல்லாருக்கும் இந்த ராவண யாழ்வேந்தனோட வணக்கங்கள்.. என்னடா நேத்து வர சும்மா வெட்டிய இருந்தவன் இன்னக்கி ஒரு கம்பனி சி. இ. ஒ. வான்னு நினைக்காதீங்க..

இந்த ராவணனோட அயராத உழைப்புல உருவானது தான் இந்த யாழினி குரூப்ஸ்.. என்னோட வெற்றிக்கு துணையா இருந்த என் குருவுக்கு என் முதல் நன்றி.. அண்ட் இந்த கம்பனி நம்ப ஊர்ல ஆரம்பிச்சதுகான நோக்கமே நான் பொறந்த ஊருக்கு ஏதாவது செய்யணுங்கிற யோசனையும்..
மற்ற ஊர்களுக்கும் நம்ப ஊர்ல விலையுற சுத்தமான அரிசி.. காய்கறி.. உணவு தானியம் போன்றவை கிடைக்கணும்னு தான்..

மேலும் இந்த கம்பனி இங்க இருக்க பெண்கள்.. மற்றும் இளைஞர்களோட முன்னேற்றத்துக்காக தான் ஆரம்பிச்சு இருக்கேன்.. அதுனால என்கூட சேர்ந்து வேலை செய்ய விருப்பம் இருக்கவங்க மட்டும் ராகவ் கிட்ட சொல்லி வேலையில சேர்ந்துக்கோங்க.. இனிமே உங்களுக்கு அவனும் ஒரு முதலாளி தான்.. நன்றி.. " என மனைவியின் கைகளை பற்றி கொண்டு ஆபீஸ் அறையில் அவளை அமர வைத்தவனோ " இங்கேயே இரு டா.. " என வெளியே சென்று கம்பெனியை சுற்றி பார்க்க ஆரம்பித்தான்.. ராகவும் அவனோடு இணைந்து கொள்ள இருவரும் பேசிய படி சுற்றி பார்க்க ஆரம்பித்தனர்..

---

ஆய்வு முடித்து தன் பர்சனல் அறைக்கு வந்த ராவணனோ அங்கே சோர்வாக அமர்ந்து இருக்கும் அவன் பூனைகுட்டியை கண்டு " ஹேய்! மகி... என்னமா பண்ணுது??... " என்றான் பரிவாக

மகிழினியோ " ஒன்னும் இல்லை மாமூ... " என்றாள்

அவனோ லேண்ட் லைன் மூலம் ஒரு ஜூஸ் ஆர்டர் செய்தவனோ அவள் அருகே அமர்ந்து கொண்டு " என்கிட்ட எதாவது கேக்கணுமா??... " என்றான்

அவள் பதில் கூறுவதற்குள் கதவை தட்டி விட்டு உள்ளே வந்த ராகவோ " சார் இதுல நம்ப புதுசா செலக்ட் பண்ற எம்பிளாய் டீடெயில்ஸ் இருக்கு அண்ட் இது நீங்க சொன்ன நாலு பேரோட தனி ரெசும்... " என சில பைலைகளை மேசை மேல் வைக்க..

ராவணனோ " ஓகே.. ராகவ் நான் பார்த்துக்குறேன்.. யூ மே லீவ்... " என்றான்..

அவனோ " சார் உங்க ஒர்க் டைம் முடிஞ்சிடுச்சுன்னா என் தங்கச்சி கிட்ட ஒரு சின்ன இன்றோ கொடுக்க முடியுமா??.. " என்றான் சிரித்த படி..

" ம்ம்.. கண்டிப்பா மச்சான்.. உக்காரு டா.. பேசுவோம்.. " என்றான் முன்னே இருந்த இருக்கையை காட்டி..

ராகவும் அமர்ந்து கொள்ள.. ராவணனோ " மகி இது ராகவ் தினகரன்.. என் ஆருயிர் நண்பன்.. என் மச்சான்.. இந்த பத்து வருசமா என் கூடவே இருக்க நிழல்.. " என்றான்

மகிழினியோ " வணக்கம் அண்ணா.. எப்படி இருக்கீங்க??.. இப்படி ஒரு பிரிஎண்ட் இருக்குறத என்கிட்ட அவர் சொன்னதே இல்லை... " என்றாள் புன்னகை முகமாக..

ராகவோ " நான் நல்லா இருக்கேன் தங்கச்சிமா.. அப்பறம் என் மச்சான் உன்ன நல்லா பார்த்துக்குறான??.. இல்லைனா சொல்லு இந்த அண்ணா அவனை ஒரு வழி பண்றேன்... " என பொய்யாக முறைத்த படி கூற..

அவளோ " அப்படி எல்லாம் ஒன்னும் இல்லைனா.. என்ன பெத்தவங்க இருந்தா கூட இவ்வளவு சந்தோசமா வாழ்க்கை கிடைச்சி இருக்குமான்னு தெரியல.. அந்த அளவுக்கு என்ன அவர் ரொம்ப நல்லாவே பார்த்துக்குறாரு.. " என்றாள் உண்மையான புரிப்பில்..

ராகவோ " சரி தங்கச்சிமா.. உனக்கு உடம்பு சரியில்லைன்னு கேள்வி பட்டேன்.. உடம்ப நல்லா பார்த்துக்கோ.. நம்ப நைட் பேசலாம்.. " என்றான்

அவளும் " சரி அண்ணா... " என புன்னகையோடு விடை கொடுத்தாள்..

---

வேலைக்கு சேர்ந்த ஆட்களுக்கு எல்லாம் தனி.. தனி.. பிரிவுகளை பிரித்து கொடுத்து கொண்டு இருந்தான் ராகவ்.. தூரத்தில் நின்ற பூங்குழலியோ அவனையே விழுங்கும் பார்வை பார்த்த படி அவள் அன்னை செண்பகம் அருகே சென்றவளோ " அம்மா ஒரு முக்கியமான விசியம் பேசணும்.. " என அருகே இருந்த தோப்பிற்கு அழைத்து சென்றாள்..

சுற்றி முற்றிலும் யாரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டவளோ " அம்மா நான் அந்த ராகவை கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு நினைக்குறேன் நீ என்ன சொல்ற??.. " என்றாள்

செண்பகமோ " அவன் பணக்காரன் எல்லாம் சரி தான்.. ஆனா அவன் எப்படி உன்ன கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்குவான்.. " என்றார்

" அதுக்கு தான் ஒரு திட்டம் இருக்கு.. " என ஒரு கேவலமான திட்டத்தை ஒரு கூற..

அவரோ வாய் எல்லாம் பல்லாக சரி என ஒத்து கொண்டார்..

---

ராவணனின் கம்பனியில் குக்கிங் டிபார்ட்மென்ட்யில் வேலைக்கு சேரும் குழலி.. பேக்கிங் மேனேஜ்மென்ட் டிபார்ட்மென்ட் செல்லும் ஆகாஷ்.. அக்கௌன்ட்ஸ் டிபார்ட்மென்ட்யில் வேலை செல்லும் வாணி.. இனி நடக்க போவது என்ன??...
 

Author: Nithya
Article Title: முரடன் 🌼 25
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top