Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖
Member
Messages
37
Reaction score
8
Points
8
அத்தியாயம் 21 ❤️


ரதி மீண்டும் வீரை போல ஒரு குட்டி தேவ் வரப்போவதாக தேவ்விடம் கூற
அவனோ " அதெல்லாம் இல்ல அது குட்டி ரதி தான் " என கூறி அவள் இடுப்பு சேலையை விலகி மீசை மூடி கூச முத்தம் வைத்தான். பெண்ணவளோ அவனின் மூடியை பிடித்து இழுத்து " இப்பவே உன் பொண்ணுக்கு மட்டும் தான் முத்தமா, எனக்கு இல்லையா " என கேட்டு செல்லமா உரிமை சண்டை போட அவனோ " ஏண்டி! ஓரே ஒரு முத்தம் தான குடுத்தேன். எப்பவும் எனக்கு நீ மட்டும் தான் எல்லாமே. உனக்கு அப்பறம் தான் நம்ம பசங்க கூட இப்படி பொஸ்ஸஸ்சிவ் ஆகாத. அப்பறம் நீ கேட்டு இல்லாமைய உனக்கு ஒன்னு இல்ல நான் இப்ப இருக்க சந்தோஷத்துக்கு நூறு முத்தம் கூட வாங்கிக்கோ " என கூறி அவள் கன்னத்தில் இதழ் பதித்து " எப்ப அம்மு கான்போர்ம் பண்ண " என கேக்க


அவளோ " அது காலையில தான் செக் பண்ணேன் நாளைக்கி ஹாஸ்பிடல் போகலாம் " என கூற அவனோ " சரி, இப்ப தூங்கு " என கூறி அவளை அணைத்து கொண்டு உறங்கினான். மறுநாள் காலை இருவரும் சென்று மருத்துவமனையில் பரிசோதனை செய்தனர். மருத்துவரோ இருவரையும் பார்த்து " காங்கிரஸ்! மிஸ்டர் அண்ட் மிஸ்ட்ரெஸ் ருத்ரதேவன். பேபி போம் ஆகி டூ வீக்ஸ் தான் ஆகுது. இனிமே மூணாவது மாசம் செக் அப்க்கு வந்தா போதும் அன்ட் ஹெல்த்தியா சாப்பிடுங்க, யோகா பண்ணுங்க " என ரதியின் கர்பத்தை உறுதி செய்து சில அறிவுரைகளையும் கூறி அனுப்பி வைத்தார்.




ஒரு வாரம் கழித்து....


அந்த பிரசவ அறையின் முன் நின்று இருந்தனர் ரதியின் குடும்பம். உள்ளே பல்லவியோ வலியில் ஆஆஆஆ.... அம்... ம்ம்ம்மா என அலற அவள் கைகளை பற்றி கொண்டு நின்ற ராகவனோ ' கொஞ்சம் நேரம் தான் பேபி பாப்பா வெளியே வந்துட்டா பெயின் கொறஞ்சிடும்டா கொஞ்சம் புஷ் பண்ணு ' என அவளுக்கு தைரியம் சொல்ல அரை மணி நேர போராட்டங்களுக்கு பிறகு ஆஆஆஆ... ம்ம்மமமா.. என பெருங்குரளோடு அவள் கத்த வில்...ல்ல்... என்ற அழுகை சத்ததோடு இந்த பூமியில் ஜனித்தான் தேவராகவன் மற்றும் ராகபல்லவியின் அருமை மைந்தன் அவன்.


குழந்தையை நெஞ்சோடு அனைத்தவாரு பல்லவி மயங்கி விட செவிலியரோ குழந்தையை சுத்தம் செய்ய கொண்டு சென்றார். பின் ராகவன் குழந்தையை தூக்கி சென்று ரதியிடம் காண்பிக்க அவளோ " அப்படியே அப்பா மாறி இருக்கான் ராகவ் " என்றாள் அவனும் ஆம் என தலை அசைத்து மென்மையாக அவன் மகனின் நெற்றியில் முத்தமிட்டான். பின் வீரராகவன், மீனாட்சி, தேவ், குட்டி வீர் என அனைவரும் குழந்தையை பார்த்து கொஞ்சி விட்டு சென்றனர். சுக பிரசவம் என்பதால் மூன்று நாட்கள் கழித்து வீட்டுக்கு சென்றாள் ராகபல்லவி.


பதினோரு நாட்கள் கழித்து தீட்டு கழித்து பெயர் சூட்டும் விழா நடைபெற்றது. குழந்தைக்கு யார் பெயர் வைப்பது என மீனாட்சி கேக்க ராகவனோ ' என் மச்சான் தேவ் எங்க பையனுக்கு பெயர் வைப்பான் ' என கூற தேவ்வோ குழந்தையின் காது அருகில் குனிந்து கவிசூரியன்.. கவிசூரியன்.. கவிசூரியன் என மூன்று முறை கூறி பெயரை வைத்தான். பின் அழகான தங்க சங்கிலியை அணிவித்து விட்டு நெற்றியில் முத்தம் வைத்தான். ரதியும் வந்து பெயரை கூறி கைகளில் தங்க காப்பினை அணிவித்து விட்டாள். பின் வீரராகவனும் மீனாட்சியும் வந்து குழந்தையை ஆசீர்வாதம் செய்து இடுப்புக்கு அரைனான் கயிறும் காலில் தண்டையும் அணிவித்து விட்டனர்.



நாட்கள் அழகாக நகர்ந்தது இரண்டு காதல் ஜோடிகளுக்கும். காலையில் சீக்கிரமே எழுந்த தேவ் ரதியை எழுப்பி காலையில் சிறிது நேரம் அவளோடு சேர்ந்து யோகா செய்வான். பின் அவள் குளித்து முடித்ததும் உளுத்தம் பருப்பு கஞ்சி, காலை உணவாக சிறுதானிய இட்லி அல்லது உப்புமா பகல் பதினோரு மணி போல மாதுளை ஜூஸ் மதியம் எண்ணெய், உப்பு, காரம் அதிகம் இல்லா உணவுகள் மாலை போல வேக வைத்த பயிறு வகைகள், இரவு ஏழு மணி போல எளிதில் சீரணிக்க கூடிய உணவை கொடுத்து, இரவு எட்டு மணி போல தோட்டத்தில் அரை மணி நேரம் நடைப்பயிற்சி அழைத்து செல்வான், பின் ஒன்பது மணிக்கெல்லாம் அவளை உறங்க வைத்து விட்டுவான். இது போலவே அவன் குழந்தை உருவான நாள் முதல் பெண்ணவளை அவன் உள்ளங்கையில் வைத்து பார்த்து கொள்கிறான்.


என்ன தான் அவன் அம்முவை அவன் பார்த்து கொண்டாலும் மறுபுறம் குட்டி வீரையும் அவன் வேலைகளை அவனே செய்ய பழக்க படுத்தி விட்டு, அலுவலக பொறுப்பையும் அவனே ஏற்று கொண்டு ரதிக்கு முழு நேர ஓய்வு கொடுத்து வந்தான். இந்த நிலையில் அடிக்கடி கம்பெனி எண்ணிருக்கு மிரட்டல் அழைப்புகளும், கடிதங்களும் வந்து கொண்டே இருந்தன.


அப்போது தான் அரசு அந்த வருடம் நடக்கும் டெண்டர் அறிவிப்புகளை வெளியிட்டது. அந்த ஏலத்தில் ஆர். எம். குரூப்ஸ் க்கு எதிராக ஒரு புதிய கம்பெனி போடி போடா கடைசி நொடியில் ஏலத்தை வென்றது ஆர். எம். குரூப்ஸ். தோற்று போன சி. ஆர். குரூப்ஸ் முதலாளி சங்கீதாரசனோ ஆர். எம். குரூப்ஸ் வெற்றிக்கு காரணமான தேவ்வை அழிக்க திட்டம் தீட்டி நேரம் பார்த்து காத்து கொண்டு இருந்தான்.

இத்தனை அறியாத தேவ்வோ அவன் காதல் மனைவியுடனும் குட்டி வீரோடு பிறக்க போகும் பிள்ளை எண்ணி மகிழ்ச்சியில் சுற்றி கொண்டு இருந்தான்.


ஒரு புறம் சி. ஆர். குரூப்ஸ் காத்து இருக்க மறு புறமோ ஆர். ஆர். கான்ஸ்டருக்ஷன்ஸ் புதிய எம். டி. ராஜாராம் தன் தந்தையை கொன்ற தேவ்வை யும் அதற்கு காரணமான ரதியின் குடும்பத்தை பழிவாங்க காத்து கொண்டு இருந்தான். இரண்டு நரி கூட்டமும் ஒன்று சேர்ந்து தேவ்வை கொலை செய்ய திட்டம் திட்டினர். அதன் படி முதல் முறை அவனின் கார் பிரேக் வயரை பிடிங்கி விட்டு கொலை செய்ய முயற்சி செய்தனர் ஆனால் அதில் இருந்து எப்படியோ தப்பித்து விட்டான்.


ஆனால் தேவ் வோ அதனை எதோ சாதாரண வண்டி பழுது என நினைத்து விட்டு விட்டான். அவன் ஒரு வேலை வேறு கோணத்தில் யோசித்து இருந்தால் பின்னாளில் வரும் உயிர் இழப்பை தடுத்து நிறுத்தி இருக்கலாமோ? என்னவோ? விதி அவன் மதியை இழக்க வைத்தது.


அன்று ஞாயிறு கிழமை என்பதால் அனைவரும் ஆர். எம். பேலஸ்யில் கூடி இருந்தனர். தேவ், ராகவனின் இருவரும் குட்டி வீர் மற்றும் கவியோடு விளையாடி கொண்டு இருந்தனர். ரதியும் பல்லவியும் சமையலை முடித்து விட்டு வந்து அவர்களோடு கலந்து கொள்ள மீனாட்சி பாட்டியோ அவரே அவர் பேர பிள்ளைகளுக்கு ஊட்டி விட்டார். கவி குட்டியை வீரராகவன் வைத்து இருக்க குட்டி வீருக்கும் சேர்த்தே உணவு ஊட்டி விட்டார் அவர். மாலை போல அனைவரும் அமர்ந்து கதைகள் பேசி கொண்டு இருக்க தேவ், ரதியை மட்டும் அவன் இரு சக்கர வாகனத்தில் அழைத்து கொண்டு வெளியே சென்றான். குட்டி வீரோ அவன் மாமா ராகவனோடு ஒட்டி கொள்ள இருவரும் காதல் கிளிகள் போல ஒரு சின்ன பைக் ரைடு சென்றனர்.


தொடரும்.....
 
Top