Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖
Member
Messages
37
Reaction score
8
Points
8
அத்தியாயம் 20


ஒரு வாரம் வீரராகவனின் வீட்டில் இருந்த ராகவன்- பல்லவி மற்றும் தேவ் - ரதி நால்வரும் சென்னை திரும்பினர். நாட்களும் எந்த பிரச்சனையும் இல்லாமல் வசந்த காலம் போலவே சென்றது அனைவருக்கும். காதல் ஜோடிகள் இரண்டும் தங்கள் துணைகளோடு காதல் வானில் சிறகு விரிந்து பறந்து கொண்டு இருந்தனர். ரதி வழக்கம் போல வீரோடு அலுவலகம் செல்ல தேவ் அவன் மனைவிக்கு பி. ஏ வாக வேலை செய்தான்.


பகலில் அலுவலக வேலை மட்டும் என இருக்கும் தேவ் இரவில் காதல் தேவனாய் மாறி அவன் ரதி யை காதல் வெள்ளத்தில் மூழ்கி சூறாவளியாய் சுழட்டி எடுப்பான். அவளும் விரும்பியே இவனிடம் தோற்று போவாள்.


ஒரு வருடம் கழித்து........


ஆர். எம். பேலஸ் முழுவதும் வண்ண மலர்களால் அலங்காரிக்க பட்டு இருந்தது. பார்க்கும் இடம் எல்லாம் சொந்தங்களும், நண்பர்களும் கூடி நிற்க அவர்களின் பேசு சத்தமும், சின்ன சின்ன மலர்களை போன்ற குழந்தைகளின் சிரிப்பொலியும் வீட்டையே நிறைவு செய்து இருந்தது. ஒவொருவரும் ஒவொரு வேலையை இழுத்து போட்டு கொண்டு செய்ய வீடே கோலகலமாக காட்சி அளித்தது.


டேய்! அந்த வாழை மரத்த சரியா கட்டு என குரல் குடுத்தார் வீரராகவன்.

பாட்டிமா! தாம்பலம் எல்லாம் ரெடி. என கூறிக்கொண்டே வந்தாள் ரதி.

' சாப்பாடு எல்லாம் ரெடியா இருக்கு அம்மு ' என ரதியின் அருகில் நின்றான் தேவ்.

என்ன விசேஷம் எல்லாம் இப்படி வேலை செய்றங்கனு கேக்குறீங்களா.😂 இன்னக்கி நம்ம பல்லவிக்கு வளைகாப்பு அதான் எல்லாம் ஒரே பிஸி. வாங்க நாம போய் பல்லவிய பாப்போம். 😂


இங்கே ராகவனின் அறையிலோ பல்லவியின் புடவையோடு மல்லுகட்டி கொண்டு இருந்தான் ராகவன். பல்லவியோ " டேய்! அத்து மூச்சு வாங்குது கொஞ்ச நேரம் உக்கார வா " என அவள் மெடிட்ட ஒன்பது மாத வயிற்றை பிடித்து கொண்டு கேக்க அவனோ " ஒரு ரெண்டு நிமிஷம் பேபி, இந்த பிலீட்ஸ் மட்டும் சரி பண்ணிட்டு ரெஸ்ட் எடுத்துக்கோ கொஞ்சம் நெளியாம நில்லு " என கூறி அழகாக அந்த அடர் பச்சை நிற பட்டு புடவையை கட்டி விட்டான்.

பின் அவளை அமர வைத்து சிறிதாக ஒப்பனை செய்து அவள் கருங்குழல் கூந்தலில் மல்லிகை சூட்டி, உச்சியில் குங்குமம் வைத்து, கனமில்லாத நகைகளை அணிவித்து விட்டான். கண்ணாடியில் அவளை கண்ட பல்லவியோ' நல்ல இருக்கு அத்து ' என அவனை வயிரோடு கட்டி கொண்டாள். அவனும் மென்மையாக அவளை அணைத்து "இன்னக்கி ரொம்ப அழகா இருக்க பேபி, பாட்டிமா கிட்ட சொல்லி உனக்கு சுத்தி போட சொல்லணும் என கூறி அவள் நெற்றியில் முத்தமிட்டான்.


பின் கீழே சென்று அவளை அலங்காரிக்கப்பட்டு இருந்த நாற்காலியில் அமர வைத்தான். முதலில் மீனாட்சி நலங்கு வைத்து ஆரம்பிக்க விழா இனிதே ஆரம்பம் ஆனது. அடுத்து விழாவிற்கு வந்த பெண்கள் ஒரு ஒருவராக நலங்கு வைத்து வளையல் போட


கடைசியாக ரதியும் தேவ்வும் நலங்கு வைத்து விட்டு " என் பாப்பாவுக்கு இந்த அண்ணனோட சின்ன கிபிட் " என அவன் வாங்கிய தங்க வளையல்களை அணிவித்து விட்டான் தேவ். பல்லவியோ கண்களில் நீரோடு ' தேங்க்ஸ் அண்ணா ' என கூற அவனோ " அண்ணாக்கு யாராவது தேங்க்ஸ் சொல்லுவாங்களா " என சின்ன மொறைப்போடு கேக்க அவளோ ' இல்லை ' என தலை அசைத்தால்


அப்ப அழக்கூடாது எப்பவும் சந்தோஷம சிரிச்சிட்டே இருக்கனும் சரியா என அவள் கண்ணீரை துடைத்து விட்டு கேக்க ரதியோ " கொஞ்சம் உங்க பாசமழையை நிறுத்தினான் என் பையன் வந்து சந்தனம் பூசுவான் " என்ன வீரை காண்பித்து கிண்டலாக கூற தேவ் சிரித்து கொண்டே 😂😂 கொஞ்சம் தள்ளி நிற்க குட்டி வீரும் பல்லவியின் கன்னங்களில் சந்தனம் பூசி அவள் வயிற்றில் முத்தமிட அவை அனைத்தும் அழகான புகைப்படமாக சேமிக்க பட்டது.

ராகவன் வந்து ஒன்பது வகை சாதத்தையும் ஊட்டி விட விழா மூடி வடைந்தது. இருவரையும் நிற்க வைத்து மீனாட்சி திருஷ்டி சுற்றி போட அவளை அழைத்து கொண்டு அறைக்கு சென்றான் ராகவன். வந்த விருந்தினர்களை எல்லாம் உபசாரித்து தாம்புலம் கொடுத்து வழி அனுப்பி வைத்தனர் தேவ்வும் ரதியும்.


பல்லவியை அறைக்கு கூட்டி வந்த ராகவன் அவளை அமர வைத்து அவன் அலமாரியில் இருந்து ஒரு நகை பெட்டியை எடுத்து வந்தான். அதை திறந்து அதில் இருந்த வைர வளையல்களை அவள் கையில் அணிவித்து விட்டு, தாய்மையின் பூரிப்பில் ஊப்பி இயற்கையாகவே சிவந்து இருந்த அவள் இரு கன்னங்களிலும் முத்தமிட்டான். அவளிடம் வளையலை காண்பித்து " பிடிச்சிருக்கா பேபி " என கேக்க அவளோ " நல்லா இருக்கு அத்து " என கூறி அவன் இதழில் இதழ் பதித்தாள்.


பின் அவள் நகைகளை எல்லாம் கழட்ட உதவி செய்து அவள் அலங்காரங்களை எல்லாம் கலைத்து விட்டு, வேறு இலகுவனா ஆடையை மாற்றி விட்டான். ' நீ கொஞ்சம் நேரம் தூங்கு பேபி, நான் கீழ போய்ட்டு வரேன் ' என அவளை நன்றாக படுக்க வைத்து விட்டு கீழே சென்றான். அங்கே அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேசி கொண்டு இருக்க அவனும் சென்று அவர்களோடு கலந்து கொண்டான்.


இரவு வானில் வெண்ணிலா அவள் காதலனை தேடி ஊர்வலம் போக ராகவனின் வீட்டில் அனைவரும் அவரவர் அறைக்கு உறங்க சென்றனர். உறங்கும் வீரை தோளில் தூக்கி கொண்டு அவன் முதுகை தட்டியவாரு அறையில் நடந்து கொண்டு இருந்தான் தேவ். ரதியோ மெத்தையில் அமர்ந்து தந்தை உறங்கும் மகனை கொஞ்சும் அழகை தான் ரசித்து கொண்டு இருந்தாள். தேவ் அவனவளின் விழுங்கும் பார்வையில் ஒற்றை புருவத்தை உயர்த்தி எனவேன்று கேக்க பெண்ணவளோ அந்த அழகில் சொக்கி உதடு கூவித்து பறக்கும் முத்தம் ஒன்றை அனுப்பி வைத்தாள்.

ஆணவனோ வெக்கம் கொண்டு அவன் முகத்தை திருப்பி கொண்டான். பின் உறங்கும் மகனை தொட்டிலில் போட்டு விட்டு அவன் நெற்றியில் மென்மையாக முத்தம் வைத்தான். அப்போது பின் இருந்து இரண்டு மென் கரங்கள் அவனை அணைத்து கொள்ள அவனோ " வர வர ரொம்ப கெட்டு போய்ட்ட அம்மு நீ " என கூறி அவள் கரங்களை பற்றி முன்புறம் இழுத்து சென்று அவளோடு கட்டிலில் சரிந்தான். அவளோ " எல்லாம் உன்னால தான், தினமும் காலையில எல்லாம் பன்னிட்டு, இப்ப நான் கெட்ட பொண்ண நீ தான் கெட்ட பையன் அதனால நீ தனியா தூங்கு நான் சோபால படுத்துக்குறேன் " என கூறி அவள் எழுந்து செல்ல முயற்சிக்க

அவனோ அவள் சேலை மறைக்காத இடையை பற்றி கொண்டு " பரவாயில்ல நீ இங்கயே இரு " கூறி அவள் இதழை சிறை செய்ய போக அவளோ முகத்தை திருப்பி கொண்டாள். " ஹேய்! அம்மு என்னாச்சு " என கேக்க அவளோ
" உன்கிட்ட ஒன்னு சொல்லணும் தேவ் இனிமே இப்படி எல்லாம் இறுக்கமா கட்டி பிடிக்க கூடாது " என அவள் எதோ கூற வர அவனோ " ஏன்? அப்படி தான் பிடிப்பேன் என்னை யார் கேப்பா " என இடையே கேள்வி கேக்க அவளோ அவன் மார்பில் நன்றாக படுத்து கொண்டு ' என் பையன் கேப்பான் ' என கூற அவனோ " வீர் குட்டி அதெல்லாம் கேக்க மாட்டான். அவன் என் செல்லக்குட்டி அதான் தினமும் அழுகாம இப்படி சீக்கிரம் தூங்கிடுறான் அதனால தான நீ இப்படி குரங்கு குட்டி மாறி என் மேல ஏறி படுத்து இருக்க " என மகனின் பெருமை பாட


அவளோ " பச்! என சலித்து கொண்டு வீர் இல்ல என் மக்கு தேவ் " என அவன் மார்பில் கடித்து வைக்க ஆணவனோ ' ஏண்டி! இப்படி நாய் குட்டி மாறி கடிச்சு வைக்குற , இரு இதுக்காகவே நான் ஒரு பொண்ணு பெத்துக்க போறேன், சரி அதுக்கான வேலைய பாக்கலாம் ' என கேக்க அவளோ ' அதான் ஏற்கனவே பாத்த வேலைக்கே இங்க ஒன்னு இருக்கே ' என அவள் வயிரை காண்பித்து கூற அவனோ அவள் வயிற்றில் கைவைத்து அவள் கண்ணோடு கண்களை கலந்து ' பாப்பாவ அம்மு ' என கேக்க அவளோ ' இல்ல வீர் மாறி குட்டி தேவ் ' தான் என கூற


அவனோ " அதெல்லாம் இல்ல அது குட்டி ரதி தான் " என கூறி அவள் இடுப்பு சேலையை விலகி மீசை மூடி கூச முத்தம் வைத்தான்.


தொடரும்.....


நாளை அடுத்த பாகம் வரும் நண்பர்களே. வாசிக்கும் அணைத்து நண்பர்களும் தங்கள் கருத்தை தெரிவிக்கவும். ஏனெனில் தங்கள் கருத்தே என்னை மேலும் எழுத துண்டுகோளாக உள்ளது. அப்பறம் இன்னும் 8 எபி ல story முடிக்கலாம்னு இருக்கேன். உங்கள் கருத்தை கூறுங்கள் கதையை தொடர்வோமா இல்லை முடித்து விடலாமா?..
 
Top