Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖
Member
Messages
37
Reaction score
8
Points
8
அத்தியாயம் 23


எட்டு மாதங்களுக்கு பிறகு.....


காலை சூரியனின் கதிர்களில் மெல்ல அவள் கண்களை திறந்தாள் ரதி. மெதுவாக எழுந்து அமர்ந்து அவள் மெடிட்ட வயிரை பிடித்து கொண்டு " குட் மார்னிங் பாப்பா, வாங்க நாம ரெண்டு பெரும் யோகா பண்ணலாம் " என கூறி மெதுவாக கீழே அமர்ந்து கர்ப கால யோகா சணங்களையும் சிறிது நேரம் மூச்சு பயிற்சியும் செய்தாள். பின் குளித்து விட்டு அன்றைய நாளுக்கான அட்டவணை படி எளிமையான சமையலை மூடி விட்டு உளுத்தம் பருப்பு பால் செய்து கொண்டு வந்து உறங்கும் அவள் இரண்டு வயது மகன் ருத்ரவீரை எழுப்பினாள்.


அந்த சுட்டி பையனோ தாய்க்கு சிரமம் தராமல் எழுந்து அமர்ந்து அவன் அன்னை குடுத்த பாலை குடித்து விட்டு அவன் வேலைகளை எல்லாம் அவனே செய்து கொண்டு கிளம்பி வந்தான். பின் ரதியும் வீரும் காலை உணவை உண்டு விட்டு வீட்டை பூட்டி கொண்டு வெளியே வர அங்கே ராகவன் மகிழுந்தில் காத்து கொண்டு இருந்தான்.

குட்டி வீரோ மாமா! என ராகவனை அணைத்து கொள்ள அவனோ வீர் குட்டி என மருமகனை பதிலுக்கு அணைத்து கொண்டு அவன் பிஞ்சு கன்னத்தில் இதழ் பதித்தான். ரதி பின் பக்கம் கதவை திறந்து கொண்டு அமர ராகவன் வீரை முன் இருக்கையில் அமர வைத்து விட்டு சீட் பெல்ட் மாட்டி விட்டு காரினை உயிர் பித்து ஆர். எம். குரூப்ஸ் நோக்கி சென்றான்.


இன்று முக்கியமான மீட்டிங் இருப்பதால் ரதி அலுவலகத்திற்கு நேரில் சென்றாள். ராகவனும் வீரும் ரதியின் அறையில் இருக்க அவள் சென்று மீட்டிங் யில் கலந்து கொண்டாள். சுமார் ஒரு மணி நேரம் கழிந்த நிலையில் அதை வெற்றிகரமாக முடித்த ரதி, அவள் அறைக்கு வந்தாள். ராகவானோ அவளிடம் ஜூஸ் டம்ளரை கொடுத்து விட்டு அவள் குடித்து முடிக்கும் வரை அமைதியாக நின்றான். அவள் குடித்ததும் டம்ளரை வாங்கி மேசை மீது வைத்து விட்டு

" பாட்டிமா நீ எப்ப வீட்டுக்கு வரேன்னு கேட்டாங்க ரதி, இன்னும் ஒரு மாசத்துல பாப்பா பொறந்திடும் அதனால கொஞ்ச நாள் அங்க வந்து இரு " என கூற

அவளோ " முடியாது ராகவ், என் தேவ் இல்லாம எனக்கு அங்க வர விருப்பம் இல்ல அன்னக்கி சொன்னது தான் இன்னைக்கும் சொல்றேன் நாங்க மூணு பெரும் தேவ்வோட நினைவுல எங்க வீட்லயே தங்கிறோம் " என கூற

அவனோ பெரிய மூச்சை இழுத்து விட்டு " சரி நாளைக்கி ஹாஸ்பிடல் அப்பொய்ன்மெண்ட் இருக்கு மார்னிங் ரெடியா இரு நானே வந்து கூட்டிட்டு போறேன். அப்பறம் வீர் குட்டிய பார்த்துக்க நாளைக்கி கவி பேபி வர " என கூற

அவளோ " சரி, தம்பி எப்படி இருக்கான். கூட்டிட்டு வா நாளைக்கி வரும் போது " என கூற

அவனோ " சரி" என்றான்.

பின் மாலை போல "வா வீட்டுக்கு போலாம் " என அவளை அழைத்து சென்று தேவ் வீட்டில் இறக்கி விட்டு சென்றான்.


ரதியோ பூட்டிய வீட்டை திறந்து கொண்டு உள்ளே சென்றாள். எதோ பெயருக்கு உண்டு விட்டு வீருக்கும் ஊட்டி விட்டாள். உண்ட களைப்பில் அவன் உறங்கி விட அவளின் விழிகளோ அங்கே சுவற்றில் அழகாய் சிரித்து கொண்டு இருந்த ருத்ரதேவனின் புகைப்படத்தில் பதிந்தது.
கலங்கிய விழிகளோடு " உனக்கு இப்படி எல்லாம் நடக்கும்னு முன்னாடியே தெரியுமாடா, அதான் இவங்க ரெண்டு பெரையும் எப்படி இருக்கணும்னு சொல்லி கொடுத்துட்டு போனியா, பாரு இவன் அப்படியே உன்ன மாதிரி எல்லாம் வேலையும் அவனே முடிச்சிடுறான், எனக்கு எந்த வேலையும் கொடுக்குறது இல்ல, உன் பொண்ணுக்கு ரொம்ப அழுத்தம் அதான் உதைச்சா கூட எனக்கு வலிக்கும்னு இன்னும் அசையாவே மாட்டிக்கிற.

நீ! ரொம்ப செலிபிஸ் டா, அதான் உன் பசங்களுக்கு மட்டும் எல்லாத்தையும் சொல்லி கொடுத்து வைச்சிட்டு என்ன மட்டும் தனியா தவிக்க விட்டு போய்ட்டா, ஏன்டா! எப்படி பண்ண ஏன்டா? எங்கள வீட்டுட்டு போன நீ சொன்ன எல்லாத்தையும் தினமும் செய்றேன் ஆனா நீ மட்டும் இல்லையே அன்னக்கி பாப்பா இருக்குனு சொன்ன அப்ப தினமும் நைட் நடக்க வச்சி கூட்டிட்டு போன, ஆனா இப்ப எங்கடா போன " அவள் கண்ணீர் விட்டு அழுக அதற்கு காரணமானவனோ அங்கே படத்தில் அழகாக சிரித்து கொண்டு இருந்தான்.


இது இந்த ஏழு எட்டு மாதங்களாக தினமும் நடக்கும் நிகழ்வு என்பதால் பெண் அவளும் அழுது அழுது அப்படியே உறங்கி போய்விட்டாள். மறுநாள் காலை கடினப்பட்டு கண்களை திறந்தவளோ வழக்கம் போல யோகா, பால், உணவு என அனைத்தையும் முடித்து விட்டு ராகவனுக்காக காத்து இருந்தாள். அவள் செய்வது எல்லாம் தேவ் பழக்க படுத்தியது தான் காலை யோகா, உடற்பயிற்சி முதல் தினமும் உண்ண உணவு பட்டியல் வரை எல்லாம் செய்து அவன் அம்முவிற்கு கற்றும் கொடுத்தான். ஆனால் இன்று அவன் கூட இருந்து அவன் பிள்ளையின் வளர்ச்சியை காண முடியவில்லை என்ற வருத்தம் தான் ரதிமலருக்கு.


மலர் போல எப்போதும் சிரித்து கொண்டு இருந்தவள் இன்று சிரிப்பையே மறந்து விட்டாள். இரண்டு வருடம் முன் அவளவனை அவள் பிரிந்து இருந்த போதும் அவள் மனம் கவர்ந்த தேவனை துர இருந்தாவது பார்த்து கொண்டு இருந்தாள். ஆனால் இன்று அதற்கும் வழி இல்லாமல் போக அவளோ உள்ளே முழுவதும் உடைந்து போய் போனாள், வெளியே இரு பிள்ளைகளுக்காக கடமையே என பெயருக்காக வாழ்கிறாள், இல்லையேல் என்றோ அவள் காதல் தேவனிடமே சென்று இருப்பாள் பெண் அவள்.


பழைய நினைவுகளில் உழன்று கொண்டு இருந்தவள் வெளியே கேட்ட அழைப்பு மணி ஓசையில் தான் சுயம் வந்தாள். பின் ராகவனை அழைத்து கொண்டு மருத்துவமனை நோக்கி சென்றாள். முதலில் சென்று பல்லவியை சந்தித்து பேசியவள் பின் குழந்தை கவிசூரியனையும் தூக்கி விளையாடி கொண்டு இருந்தாள். பல்லவியோ " ரதி உன் கவிமா சொன்ன கேப்ப தான டெலிவரி தேதி வேற கிட்ட வருது டா நீயும் வீட்டுக்கு வர மாட்டிங்கிற அதனால நாங்களாவது உன்கூட வந்து தங்கிக்கிறோமே " என கேக்க

அவளோ " எனக்கு ஒன்னும் ஆகாது கவிமா, நீங்க எப்ப வேணாலும் வரலாம் எத்தன நாள் வேணாலும் தங்கிக்கோங்க ஆனா என் தேவ் வாழ்ந்த வீட்ட விட்டு எங்கையும் நானும் என் குழந்தைகளும் வர மாட்டோம்" என ஒரு முடிவுடன் கூற

பல்லவியோ " சரி நாங்க வந்து தங்க ஒத்துகிட்டியே அதுவே போதும் வா போய் செக் அப் பண்ணலாம் " என கூறி அவளை அழைத்து சென்றாள். அவளை சில பல பரிசோதனை செய்த மகப்பேறு மருத்துவரோ " சீ ரதி நாம லாஸ்ட் டைம் ஸ்கேன் பண்ண வர குழந்தை அசையவே இல்ல ஆனா இப்ப ஹார்ட் பீட் வேற கம்மியா இருக்கு, உனக்கு பிரஷர் கூட ஜாஸ்தியா இருக்கு, அண்ட் கடைசியா உன்கிட்ட சொன்னது தான். உன் நிலைமை எனக்கு புரியாம இல்ல ஆனா நீ வாய் விட்டு அழுது முடிச்சிட்டினா உன் மனசுல இருக்க பாரம் குறையும், இப்படி அழுத்தமா இருந்த, ஐ ஆம் சாரி டு செ கண்டிப்பா நார்மல் டெலிவரி ஆக வாய்ப்பே இல்ல, ஆனா இப்ப பிரச்சனை அது இல்ல வயித்துல இருக்க குழந்தை ஹார்ட் பீட் வேற சரியா கேக்க முடியல அண்ட் மொவேமென்ட் கூட இல்ல இப்படியே போன குழந்தையை காப்பாத்த முடியாது அண்ட் பாப்பாவ காப்பாத்தணும்னா உனக்கு ஆபரேஷன் பண்ணி பேபிய வெளிய எடுக்கணும் அண்ட் அதுல பேபியா காப்பாத்த சான்ஸ் கூட ரொம்ப கம்மி தான் " என கூற

ரதியோ " டாக்டர் இதுக்கு வேற வழி இல்லையா, இவ பொறக்கணும் அப்படிக்கறது என் தேவ்வோட கடைசி ஆசை,எப்படியாவது என் பாப்பா எனக்கு வேணும்" என கேக்க


ரதியின் வயிற்றில் உள்ள குழந்தை பிழைக்குமா. அடுத்த பாகத்தில்....


தொடரும்....
 
Top