Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖
Member
Messages
37
Reaction score
8
Points
8
அத்தியாயம் 24

ரதியோ " டாக்டர் இதுக்கு வேற வழி இல்லையா, இவ பொறக்கணும் அப்படிக்கறது என் தேவ்வோட கடைசி ஆசை,எப்படியாவது என் பாப்பா எனக்கு நல்லபடியா திரும்ப வேணும்" என கேக்க

மருத்துவரோ பலத்த யோசனைக்கு பிறகு " சீ ரதி இப்ப ஒன்பது மாசம் ஆரம்பம் என்பதால ஆபரேஷன் பண்றதுக்கு பதிலா பெயின் வர இன்ஜெக்ஷன் போடுறேன் அதுல பேபி வெளியே வந்துட்டா நெஸ்ட் நாம அடுத்த கட்ட ட்ரீட்மெண்ட் பாக்கலாம் இல்ல அப்படினா 12 மணி நேரம் காத்து இருப்போம், பேபி கிட்ட முன்னேற்றம் இருந்த வேற மாதிரி யோசிக்கலாம் " என கூற


ஓகே டாக்டர் அண்ட் தேங்க்ஸ் என கூறி பல்லவியோடு வெளியே சென்றாள் ரதி மலர். பல்லவியோ ரதி மற்றும் பிள்ளைகளை அழைத்து கொண்டு ஆர். எம். பேலஸ் நோக்கி சென்றாள். அங்கே உள்ளே நுழையும் வரை தான் போகும் வழி கூட கவனிக்காமல் எதோ தீவிர யோசனையில் இருந்தாள் ரதி. கார் நின்ற பின் தான் அவள் இருக்கும் இடத்தையும் பல்லவியையும் மாறி... மாறி பார்த்து " கவிமா இங்க எதுக்கு வந்து இருக்கோம் " என கேக்க

பல்லவியோ " சொல்றேன் வா " என மூவரையும் அழைத்து கொண்டு வீட்டின்னுள் சென்றாள். ரதியை கண்ட மீனாட்சியோ " எப்படி இருக்க கண்ணு இப்ப தான் இந்த பாட்டிமா வந்து பாக்கணும்னு தோணுச்சா " என சோகமான குரலில் கேக்க

அவளோ " அப்படி எல்லாம் இல்ல பாட்டிமா " என அவரை அணைத்து கொண்டாள். குட்டி வீரோ " தாத்தா " என்ற கூவளோடு வீரராகவனின் அருகில் சென்று அவர் காலை கட்டி கொண்டான்.
வீரவோ " வாடா ! என் செல்லக்குட்டி " என வீரை தூக்கி அவன் கன்னத்தில் முத்தமிட்டு அவனை அழைத்து கொண்டு உள்ளே சென்று விட்டார்.

பல்லவியோ " பாட்டிமா, இவள சாப்பிட வைங்க நான் போய் ரெப்பிரேஷ் ஆகிட்டு வரேன் " என அவளின் அறையை நோக்கி குழந்தை கவிசூரியனோடு சென்றாள். மீனாட்சியோ வா ரதி சாப்பிடலாம் என பெண் அவளை அழைத்து கொண்டு உணவு மேசைக்கு அருகில் சென்று அவளை அமர வைத்து உணவை பரிமாறி ஊட்டி விட்டார். ரதியோ பல நாட்கள் கழித்து அவள் பாட்டிமாவின் கையால் வயிறு நிறைய உண்டாள்.

பின் கொஞ்ச நேரம் தோட்டத்தில் நடந்து விட்டு அவள் அறைக்கு சென்றாள். அந்த அறைக்குள் சென்று கதவை சாத்தி விட்டு திரும்பியவளின் கண்களோ அங்கே சுவற்றில் இருந்த படத்தில் தான் நிலை குத்தி நின்றது. பெண் அவள் கண்ணின் ஓரம் ஈரம் கசிய அந்த படத்தை பார்த்தாள். ராகபல்லவியின் வளைகாப்பு நிகழ்ச்சியில் எடுத்த புகைப்படம் அது அதில் இருவரும் நெருக்கமாக நின்று கண்களில் காதல் வழிய குட்டி வீரின் இரு கன்னகளிலும் முத்தம் வைப்பது போல அழகான படம். அன்று இரவு தான் அவள் இரண்டாவது முறை கர்பமாக இருப்பதாக அவள் தேவ்விடம் கூறினாள்.


ஆனால் இன்றோ அவள் மன்னவன் கொடுத்த முத்தம் அதன் ஈரம் காயும் மூன் பெண் அவளை தனியே தவிக்க விட்டு சென்றதை எண்ணி அழுது கொண்டு இருந்தாள். அந்த அறையில் இருவரும் தனிமையில் கழித்த நினைவுகள் வாட்டி வதைக்க எங்கோ வெளியில் கேட்ட இசை அவளின் நிலையை சொல்லாமல் சொல்லியது.


🎶💔நினைத்து
நினைத்து பார்த்தேன்
நெருங்கி விலகி நடந்தேன்
உன்னால் தானே நானே
வாழ்கிறேன் ஓஹோ
உன்னில் இன்று என்னை
பார்க்கிறேன்

🎶 எடுத்து படித்து
முடிக்கும் முன்னே
எரியும் கடிதம் எதற்கு
பெண்ணே💔

🎶 உன்னால் தானே
நானே வாழ்கிறேன் ஓஹோ
உன்னில் இன்று என்னை
பார்க்கிறேன்💔

🎶ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்


🎶💔அமர்ந்து பேசும்
மரங்களின் நிழலும்
உன்னை கேட்கும் எப்படி
சொல்வேன் உதிர்ந்து
போன மலரின் மௌனமா
ஆ🎶

💔 🎶தூது பேசும்
கொலுசின் ஒளியை
அறைகள் கேட்கும்
எப்படி சொல்வேன்
உடைந்து போன
வளையல் பேசுமா ஆ

🎶உள்ளங்கையில்
வெப்பம் சேர்க்கும் விரல்கள்
இன்று எங்கே தோளில்
சாய்ந்து கதைகள் பேச
முகமும் இல்லை இங்கே

🎶முதல் கனவு
முடிந்திடும் முன்னமே
தூக்கம் கலைந்ததே

🎶நினைத்து
நினைத்து பார்த்தேன்
நெருங்கி விலகி நடந்தேன்
உன்னால் தானே நானே
வாழ்கிறேன் ஓஹோ
உன்னில் இன்று என்னை
பார்க்கிறேன்

🎶🎶பேசி போன
வார்த்தைகள் எல்லாம்
காலம் தோறும் காதினில்
கேட்கும் சாம்பல் கரையும்
வார்த்தை கரையுமா

🎶🎶பார்த்து போன
பார்வைகள் எல்லாம்
பகலும் இரவும் கேள்விகள்
கேட்கும் உயிரும் போகும்
உருவம் போகுமா

🎶💔 தொடர்ந்து வந்த
நிழலும் இங்கே தீயில்
சேர்ந்து போகும் திருட்டு
போன தடயம் பார்த்தும்
நம்பவில்லை நானும் ஒரு
தருணம் எதிரினில்
தோன்றுவாய் என்றே
வாழ்கிறேன்🎶🎶💔....


மாலை போல அவளின் அறையை விட்டு வெளியே சென்றாள் ரதி. நேராக பல்லவியின் அறைக்கு சென்று " கவிமா, வீரை பார்த்துக்கோ நான் கொஞ்சம் வெளியே போய்ட்டு வரேன் " என கூறி அவளின் பதிலையும் எதிர் பார்க்காமல் வீட்டை விட்டு வெளியே சென்று விட்டாள். காரில் மெதுவாக அந்த கூட்ட நேரசலான சாலையில் நகர்ந்து கொண்டே சென்றவள் ஆர். எம். ஹாஸ்பிடல் என்ற அந்த 15 மாடி கட்டிடத்தின் மூன் வண்டியை நிறுத்தி விட்டு உள்ளே சென்றாள். நேராக மின் தூக்கியில் ஏறி அதில் 15 என்ற தள எண்ணை அழுத்தி விட்டு தளம் வந்ததும் இறங்கி அங்கே இருந்த அறைக்குள் சென்றாள். அவள் உள்ளே நுழைந்ததும் அந்த தளத்தில் இருந்த சி சி டி வி கேமரா நிறுத்த பட்டு அங்கே இருந்த ஆண் செவிலியும் வெளியே சென்றார்.

அந்த அறையில் அப்படி இருந்தது என்ன?..
அடுத்த பாகத்தில்....

தொடரும்...
 
Top