ரதி 27
மருத்துவமனை அறையின் சாளரங்களில் வெள்ளை ஒளி ஊடுருவியபோது, அந்த அறையின் குளிர் சூழலில் ஒரு புதிதாகப் பிறந்த நம்பிக்கை பரவியது.
படுக்கையின் மேல் மெலிந்து கிடந்த தேவின் கண்கள் மெதுவாக திறந்தன. நீண்ட நாட்கள் மௌனமாக கிடந்த அந்தக் கண்கள், இனி உயிரின் ஒளியை தேடிக் கொண்டிருந்தது.
ரதி, அவனருகில் விழி அசையாமல் எப்போது தேவ் கண் விழிப்பான் என காத்திருந்தவள், அவனது கண்களின் சிறிய அசைவையும் கண்டவுடன் மார்பில் கையை வைத்துக்கொண்டு,
“தேவ்… நீ கேக்குறியா? நீ என்னை பார்க்குறியா?” என்று கண்ணீர் கலந்த குரலில் கேட்டாள்.
தேவின் உதடுகள் நடுங்கின. சற்று சிரமத்துடன்,
“அ. அம்மு... ” என்ற மென்மையான ஓசை வெளியேறியது.
அந்த ஒரு வார்த்தை, அவள் பல மாதங்களாகக் கேட்டுக்கொண்டிருந்த பிரார்த்தனையின் பதிலாய் இருந்தது. ரதி உடனே அவனது கையைப் பிடித்து,
“தேவ்! நீ திரும்பி வந்துட்டே! என்னை விட்டுப் போகல. உன் பசங்கள விட்டுப் போகல…” என்று அழுதபடி அவனை நெருங்கினாள்.
தேவ் தன் வலிமையற்ற கையை அவள் கன்னத்தில் வைத்தான்.
“ சாரி ரதி. உன்ன ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன் சாரி அம்மு ” என கூற
ரதி அவன் கையை கண்களில் வலியோடு பற்றிக்கொண்டு,
“நான் சொன்னேனே தேவ்… நீ என்னை விட்டு எங்கயும் போக முடியாது " என கூறி அவனின் கையை எடுத்து அவள் நிறைமாத வயிற்றின் மீது வைத்து " உன் பொண்ணு . அவ இப்போவே உன் கையைத் தேடிக்கிட்டே என் வயிற்றுக்குள் அசைந்தா.” என்று அவள் சிரிப்போடு அழுதாள்.
தேவின் கண்களில் மகிழ்ச்சி கண்ணீர் பொங்கியது.
“அப்போ நம்ம பாப்பா… அவளும் உன்னை மாதிரி பிடிவாதமா இருக்கா?” என்று மெலிந்த குரலில் கேட்டான்.
“ஆமாம் தேவ்… உன்னை மாதிரி பிடிவாதம், என்னை மாதிரி சிரிப்பு. நீ அவளை பார்க்கணும். அவள உன்னைத் தவிர வேற யாராலயும் சமளிக்க முடியாது,” என்று ரதி உறுதியோடு சொன்னாள்.
தேவ் மெதுவாகக் கண்களை மூடி, “நான் நம்ம பாப்பா உதைக்குறத உணறேன் அம்மு ” என்று குரல் கொடுத்தான்.
---
அந்தக் காட்சியை பார்த்திருந்த மருத்துவர் மற்றும் செவிலியர்கள் அனைவரும் மெல்லிய புன்னகையுடன் ஒருவர் மற்றொருவரை நோக்கிக் கொண்டனர்.
முதன்மை மருத்துவர் மெதுவாகச் சொன்னார்:
“இதேதான் அதிசயம். காதலின் வலிமை மருத்துவத்துக்கும் அப்பாற்பட்டது.”
அதற்கு அனைவரும் ஏற்று கொள்வதாக தலை அசைத்தனர்.
---
கொஞ்சம் நேரம் கழித்து வீட்டில் இருந்து அனைவரும் தேவ் வை பார்க்க வந்தனர். தேவ் வை கண்ட வீரவோ ' எப்படி டா இருக்க, இனிமே என் பேத்தி கண்ணுன்னுல இருந்து ஒரு சொட்டு தண்ணி வந்தாலும் உன்ன சும்மா விட மாட்டேன் ' என போய் கோபதோடு மிரட்ட
அவனோ சிரித்து கொண்டே மெல்லிய குரலில் ' என் பொண்டாட்டிய உங்கள விட நான் நல்லாவே பத்துக்குவேன் வீரா ' என்றான்
ராகபல்லவியும், மீனாட்சியும் அவனிடம் உடல் நலனை பற்றி கேட்டு விட்டு வெளியே சென்று விட , ராகவன் குட்டி வீரோடு உள்ளே நுழைந்தான். தந்தையை கண்டதும் " ப்பா.. பா " அழைத்து கொண்டே தேவ் விடம் செல்ல தவினான் ருத்ரவீர்.
ராகவனோ வீரை தேவ் அருகில் விட்டு அவர்களுக்கு தனிமை தர எண்ணி வெளியே சென்று விட்டான். வீரோ " பா.. பா.. " என தேவ்வின் முகத்தில் எச்சில் வழிய ஈர முத்தம் வைக்க தேவ்வோ பல மாதங்கள் கழித்து அவன் செல்ல புதல்வனின் முத்தத்தில் இன்பம் போங்க தன்னை அவன் தேடி உள்ளான் என்பதில் வருத்தம் கொண்டு அவனும் திருப்பி அவனுக்கு முகம் முழுவதும் முத்த மழை பொழிந்தான்.
ரதியோ தந்தை மகன் இருவரையும் தான் வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டு இருந்தாள். தேவ் மகனை ஒரு கையால் பிடித்து கொண்டு மறு கையை ரதியின் மூன் நீட்டினான். அவளோ அவன் கையை பிடித்து கொண்டு " என்னாச்சு தேவ் " என கேக்க
அவனோ ' ரொம்ப என்ன தேடுனீங்களா மூணு பேரும் ' என கேக்க
அவளோ கண்களில் நீரோடு ' ஆமா, என அவன் நெஞ்சின் மீது சாய்ந்து கொண்டாள்.
அவனோ " அழாத அம்மு, அதான் நான் திரும்ப வந்துட்டேன்ல இனிமே உங்க மூணு பேரையும் நான் பத்திரமா பாத்துக்குறேன் " என அவள் நெற்றியில் இதழ் பதித்தான்.
வீரோ தேவ் வின் முகத்தை திருப்ப அவனோ மகனை கண்டு ' என் செல்ல குட்டி, என்ன வேணும் ' என கேக்க
அவனோ ரதியை காட்டி ' பா.. ம்மா ' என்றான்
தேவ்வோ " ஆமா, டா வீர் , அம்மா தான் உனக்கு என்ன வேணும், வீர் குட்டி சாப்டியா " என கேக்க
அவனோ ' ம்ம் சாப்டேன், பாத்தி ஊட்டி விட்டங்க ' என அவன் மழலை மொழியில் கூற
தேவ்வோ மகனின் மழலை குரலில் மயங்கி மீண்டும் அவன் கன்னத்தில் முத்தம் வைக்க ரதியோ " சரியான செலிபிஸ் டா நீ, உன் பையனுக்கு மட்டும் முத்தம் குடுக்குற " என போய் கோபம் கொள்ள
தேவ்வோ ' இன்னும் நீ மாறவே இல்லையாடி அவன் குழந்தை, உனக்கு தான் நான் மொத்தமா என்னையவே குடுத்துட்டேனே, இப்படி ஒரு முத்தம் வேணும்னா சண்டை போடுவா ' என கேட்டு அவளை இழுத்து அவள் கன்னத்திலும் முத்தம் வைக்க
அவளோ " ஆமா, நீ எனக்கு தான் முதல் உரிமை தரணும் " என உரிமை போராட்டம் நடத்திய மனைவியை காதல் போங்க பார்த்து கொண்டு இருந்தான் ருத்ரதேவன். ❤️
அடுத்து வந்த இரண்டு நாளில் தேவின் உடல்நலம் மெதுவாக சீராகத் தொடங்கியது. ஊசி, மருந்து, சிகிச்சை அனைத்தையும் அவன் நிதானமாக ஏற்றுக்கொண்டான். ரதியோ அவனின் பக்கத்தில் எப்போதும் இருந்து, அவனுக்கு உற்சாகம் கொடுத்தாள். தேவ்வோ அவன் அம்மு கூட இருக்கும் தேம்பில் பழைய படி நடக்க ஆரம்பித்து இருந்தான். ரதியோ அவள் தேவ் உடன் இருக்கும் மகிழ்ச்சியில் குழந்தை பற்றி கூறியதை மறந்து விட்டாள்.
அன்று மாலை மருத்துவமனை மாடியில் ஓரமாக இருந்த நீள் இருக்கையில் தேவ் கையை பிடித்து கொண்டு அவன் தோளில் தலை சாய்த்து அமர்ந்து இருந்தாள் ரதி. சூரியன் மறையும்போது வானம் சிவப்பு நிறத்தில் மாறியது. இரவு வானம் கருமை பூச ஆரம்பிக்க தேவ் தான் பேச்சை ஆரம்பித்தான் " ஏன் அம்மு, என்கிட்ட சொல்ல அன்னக்கி டாக்டர் சொன்னத " என கேக்க
அவளோ ' தேவ் அது நான் ' என்று எதோ கூற வரும் மூன் அவள் வயிற்றில் சூரிர் என்ற வலி தோன்ற ஆஆ.. அம்மம்மமா.. என்ற அலறளோடு தேவ் கையை இருக்கி பிடித்து கொண்டாள்.
அவனோ அவளின் கையை பிடித்து கொண்டு அவசர சிகிச்சை பிரிவுக்கு மெல்லமாக அழைத்து சென்றான்.
தொடரும்....