Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖
Member
Messages
37
Reaction score
8
Points
8
அத்தியாயம் 28

மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் குழப்பம் ஏற்பட்டது.
ரதி வயிற்றை கசக்கிப் பிடித்துக்கொண்டு வலி தாங்காமல் அலறியபடி தேவின் கையை இறுகப் பிடித்திருந்தாள். அவளது முகம் வியர்வையில் நனைந்து, மூச்சு வேகம் அதிகரித்தது.

“டாக்டர்! சீக்கிரம் பாருங்க… ரதிக்கு வலி வந்துடுச்சு…” என்று தேவ் அதிர்ச்சியுடன் கூவினான். அவனின் குரலில் ஒரு பக்கம் அச்சமும், இன்னொரு பக்கம் உற்சாகமும் கலந்திருந்தது.

செவிலியர்கள் விரைந்து வந்து ரதியை படுக்கையில் ஏற்றி பிரசவ அறைக்குள் கொண்டு சென்றனர். தேவ்வும் ரதியுடன் பிரசவ அறைக்குள் சென்றான்.

அவனது கண்கள் ஈரமாக, கைகள் நடுங்கி கொண்டே ரதியின் கையை பற்றிய படி " ஒன்னும் இல்ல அம்மு, கொஞ்சம் நேரம் தான் " என ஆறுதல் கூறி கொண்டு இருந்தான்.


விட்டு விட்டு வலி எடுக்க ரதி வலி தாங்க முடியாமல் துடித்தாள்.
டாக்டர் அவளை உற்சாகப்படுத்தி, “ரதி! கொஞ்சம் தைரியமா இரு. குழந்தை வரப்போகுது. இன்னும் கொஞ்சம் நேரம் தான் அப்பறம் உன் பாப்பாவை பாக்க போற ! ” என்றார்.

அந்த வார்த்தைகள் ரதிக்கு வலிமை தந்தது. அவள் மூச்சை சீராக்க முயன்று, வலியில் தேவ்வின் கையை பிடித்து கொண்டு வயிற்றை கடின பட்டு அமுக்கி குழந்தையை வெளியே தள்ளினாள்.

---

வெளியே வீரா, ராகவன், மீனாட்சி, ராகபல்லவி அனைவரும் வந்து சேர்ந்தனர். அனைவரும் அச்சத்துடன் கதவை நோக்கிக் கொண்டிருந்தனர்.

---

அந்த நேரத்தில் அறைக்குள் இருந்து குழந்தையின் கூச்சல் முழங்கியது.
அந்த சத்தம் தேவின் நெஞ்சை அதிர வைத்தது. அவன் அந்த ஒலியிலேயே கண்களை மூடி அழுதான்.
“ நம்ம பாப்பா ” என்று அவன் ரதியின் கையை இருக்கி கொண்டான்.

சிறிது நேரத்தில், செவிலியர் ஒருத்தி கைகளில் சின்ன தேவதை போல ஒரு குழந்தையை தேவ்விடம் காட்டினாள்.

“வாழ்த்துகள்! ரதி அழகான பெண் குழந்தை பிறந்திருக்கிறது.” என்றாள்.

அந்தச் சொல்லைக் கேட்டதும், தேவ்வின் முகத்தில் நீண்ட நாட்களாக காணாத ஒளி விரிந்தது.
அவன் கைகளை நீட்டி அந்தச் சிறு உயிரை கவனமாகத் தூக்கிக்கொண்டான்.
குழந்தை அவனது மார்பில் அசைந்து, சிறிய விரல்களால் அவனது சட்டையைப் பற்றிக்கொண்டது.

தேவின் இதயம் துள்ளியது.
“அம்மு… பாரு… உன் நிலா வந்து விட்டாங்க!” என்று அவன் கண்களில் கண்ணீரோடு கிசுகிசுத்தான்.

பின் ரதியின் நெற்றியில் முத்தமிட்டு குழந்தையோடு வெளியே சென்றான். அங்கே இருந்த வீரா, ராகவன் என அனைவரும் அதிசயத்துடன் அந்தச் சிறிய தேவதை முகத்தை பார்த்தனர். மீனாட்சியோ குழந்தையை பார்த்து " அப்படியே நிலா மாதிரி இருக்க " என்றார்.
வீரா கண்ணீரோடு சிரித்து, “என் மகளே எனக்கு கொள்ளு பேத்தியா வந்து பொறந்து இருக்கா. உன் பாப்பாவோட முகம் பார், உன்ன மாதிரி பிடிவாதம் தெரிகுது!” என்றார்.


---

சில மணி நேரங்களுக்குப் பிறகு, ரதி அறையிலிருந்து வெளியே கொண்டு வரப்பட்டாள். அவள் சோர்வாக இருந்தாலும் முகத்தில் ஒரு சாந்தம் காணப்பட்டது.
தேவ் அவளருகே வந்து அவளது கையைப் பிடித்தான்.
“அம்மு இப்ப வலி எதும் இருக்க " என கேக்க

அவளோ " இப்ப ஓகே ஆனா முதுகு தான் கொஞ்சம் வலிக்குது " என்றாள்


---

அடுத்த நாள் காலை, தேவ் தனது மகன் ருத்ரவீரையும், புதிதாகப் பிறந்த மகளையும் பக்கத்தில் வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தான்.
வீரோ “பா… குட்டி… பாப்பா …” என்று தங்கையைத் தொட முயன்றான்.
தேவ் சிரித்து, “அது உன் தங்கச்சி வீர். அவளை கவனமா நீதான் பார்த்துக்கணும்.” என்று கூறினான்.

வீரோ எதோ புரிந்தது போல , “ஆமாம் பா !” என்று குழந்தையின் நெற்றியில் முத்தமிட்டான்.

ரதியோ அந்தக் காட்சியை பார்த்து கண்களில் சந்தோஷக் கண்ணீர் வழிந்தாள்.
அவள் உள்ளம் நிறைந்து, “தேவ்… இப்போ தான் உண்மையில நம்ம குடும்பம் முழுமை ஆனது.” என்றாள்.


---

சில நாட்களில் தேவின் உடல்நலம் மேலும் மேம்பட்டது.
அவன் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய நாள், ஆர். எம். பேலஸ் முழுவதும் கொண்டாட்டமாக இருந்தது.
மீனாட்சி, ராகபல்லவி, வீடு முழுவதையும் அலங்கரித்து குழந்தையை வரவேற்றனர்.

அந்த இரவு குழந்தைகள் உறங்கியதும் , தேவ் ரதி அருகில் அமர்ந்து, அவளை நோக்கி,
“அம்மு, இன்னும் நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லல " என கேக்க

அவளோ ' என்ன கேள்வி ' என்றாள்

அவனோ " அதான் அந்த அச்சிடேன்ட் பண்ணவன அண்ணனும் தங்கச்சியும் சேர்ந்து என்ன பண்ணீங்க? "

அவளோ ' நாங்க ஒன்னும் பண்ணல அவனே ஒரு லாரி மேல காரை கொண்டு போய் விட்டு இறந்து போய்ட்டான், இன்னோருத்தன் எந்த தண்ணியில மேதைக்குறானு தெரியல ' என்று கூலாக கூற

அவனோ அவளை நம்பாத பார்வை பார்க்க மீண்டும் ரதியே " என் அப்படி பாக்குற " என கேக்க

அவனோ " நீ சொல்றத கேக்க நம்புற மாதிரியே இல்லையே, சரி எதோ சொல்ற நானும் நம்புறேன். அப்பறம் காலையில ரெடியா இருங்க மூணு பேரும் வெளிய போலாம் " என கூறி அவள் மடியில் தலை வைத்து படுத்து கொண்டான்.

அவளும் அவன் தலையை வருடிய படியே உறங்கி விட்டாள். நள்ளிரவு குழந்தையின் அழு குரல் கேட்டு தேவ் எழுந்து சென்று குழந்தையை தூக்கி வந்து " அம்மு, எழுந்திரி " என அவளை எழுப்பி அவளின் மடியில் குழந்தையை படுக்க வைத்தான்.

ரதியும் குழந்தைக்கு பால் கொடுத்து விட்டு தேவ் விடம் கொடுக்க அவனோ மகளை தோளில் போட்டு தட்டி கொடுத்து உறங்க வைத்தான். குழந்தை உறங்கியதும் வீர் அருகில் அவளை படுக்க வைத்து அவனும் படுத்து கொண்டான். ரதியும் அவன் மார்பில் தலை சாய்த்து அவனை கட்டி கொண்டு விட்ட உறக்கத்தை தொடர்ந்தாள்.

இங்கே ராகவனின் அறையில்...

கூடல் முடிந்து ராகவனின் மார்பில் படுத்து கொண்டு இருந்தாள் பல்லவி. ராகவனோ " பேபி, நீ நம்ம ஹாஸ்பிடல் பொறுப்பை எடுத்துக்கோ, ரதியும் நானும் பிசினஸ் பத்துக்குறோம் " என கூற

அவளோ " இல்ல நானா நான் எப்படி " என தயங்கி கொண்டே கேக்க

" அப்பறம், இப்படி வீட்டுக்குள்ள இருந்து உன் பையன் பின்னாடியே சுத்த போறியா சொல்லு, நான் முடிவு பண்ணிட்டேன் நாளைக்கி மார்னிங் ரெடியா இரு,ஓகே. " என அவளின் முகம் பார்க்க

அவளோ இன்னும் குழப்பதோடு " சரி, ஆனா நீ என் கூடவே இருக்கனும் அத்து " என கூற

" கண்டிப்பா பேபி, உன் கூட நான் எப்பவும் இருப்பேன் " என அவளை அணைத்து கொண்டு உறங்கினான்.

தொடரும்....
 
Top