- Messages
- 278
- Reaction score
- 298
- Points
- 63
அத்தியாயம் - 24
"சோ ஸ்வீட் அண்ணி நீங்க.. நான் கூட அண்ணனை மாதிரி நீங்களும் எங்களோட பேச மாட்டீங்களோனு நினைச்சி பயந்துட்டே வந்தேன்.. ஆனா நீங்க எங்கிட்ட ஜாலியா பேசுறீங்க, சிரிக்கிறீங்க, கியூட்டா இருக்கீங்க உங்கள எனக்கு ரொம்ப பிடிச்சி போச்சி.." காவ்யாவை கட்டிக்கொண்டு முத்த மழை பொழிய, அங்கு ஒருவனுக்கு வயிறு காந்தியது.
"நீயும் ரொம்ப கியூட்டா அழகா இருக்க யாதுகுட்டி.. உனக்கு ஒன்னு தெரியுமா உன்ன போலவே எனக்கும் தம்பி தங்கச்சி இருக்காங்க.. அவங்களுக்கு நான்னா ரொம்ப பிடிக்கும்.. அதிலும் என் தம்பி அக்கா அக்கானு நான் எங்கே போனாலும் வாள் மாதிரி பிடிச்சிட்டு சுத்துவான்..
அவனை பாத்தே வருஷம் ஆச்சி யாது.." சோகமாக சொன்ன அண்ணிகாரியை யாதவி பாவமாக பார்க்க, கட்டியவனுக்கு புஸுபுஸு மூச்சி வந்தது.
"கவலை படாதீங்க அண்ணி, அண்ணா கண்டிப்பா உங்கள உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போவாரு.. நானும் இங்க அடிக்கடி உங்கள பாக்க வரேன்.. முடிஞ்சா நீங்களும் அண்ணனை கூட்டிட்டு நம்ம வீட்டுக்கு வாங்க அண்ணி, எங்க அம்மா அப்பா தங்கச்சி எல்லாருக்கும் உங்கள ரொம்ப பிடிச்சி போய்டும்..
இன்னும் கேட்டா உங்கள அண்ணாகிட்ட கூட விடாம அவங்களே வச்சிப்பாங்க" யாதவி விளையாட்டு பிள்ளையாக அப்போது சொன்ன வார்த்தை, பச்சை குத்தியது போல ஆண் மனதில் பச்சக்கென பதிந்து, முகம் இருண்டு போயின.
"என் பொண்டாட்டியோட காதல் அன்பு பாசம் அக்கறை எல்லாமே எனக்கே எனக்கு மட்டும் தான் சொந்தம்.. அவ பாசத்தை பங்கு போட யாருக்கும் உரிமை இல்ல" தாயன்புக்கு ஏங்கும் சிறுவனாக, மனைவி அன்பில் தான் ஒருவன் மட்டுமே உரிமை கொண்டாடி உறவாட வேண்டும் என்ற எண்ணம் ஒன்றே அவன் மனதில் மேலோங்கி நின்றது.
"யாரு உங்க அண்ணனா கூட்டிட்டு போவாரு.." மனதில் நினைத்தவளாக, "சரி சாப்பிட உனக்கு என்ன பிடிக்கும்னு சொல்லு யாது, அண்ணி உனக்கு செஞ்சி தரேன்.." புன்னகை முகமாக நாத்தியை கேட்டவளுக்கு, தன் குடும்பத்தை பார்க்க வேண்டுமென கணவனிடம் கேட்டு கேட்டு சலித்து போனது தான் மிச்சம்.
"இல்ல அண்ணி நாளைக்கு வீட்ல சொல்லிட்டு வரேன் எனக்கு பாலக் பன்னீர் நான் செஞ்சி கொடுங்க.. அண்ணன பாத்ததும் அப்டியே இங்க வந்துட்டேன், அம்மா வேற தேடுவாங்க.." புத்தக பையை எடுத்து மாட்டியபடி தங்கள் வீட்டிற்கு செல்ல தயாராக,
"சரி நாளைக்கு கண்டிப்பா வா என்ன.." அவள் தலை வருடிய காவ்யா, "என்னங்க யாதுவ பத்திரமா வீட்ல விட்டு வாங்க.." கணவனுக்கு கட்டளையிட்டபடி மூவரும் உள்ளிருந்து வெளிவர, அப்போது தான் உள்ளே வந்தான் ஷரத்.
"வாவ்வ்வ்.. இது யாரு டா புதுசா, உன் மூத்த தங்கச்சி யாதவிகுட்டியா.." சிறு வயதில் எப்போதோ அவன் குடும்பத்தில் உள்ள அனைவரையும் பார்த்தது, அதன் பிறகு யாதவியை பருவ பெண்ணாக இப்போது பார்ப்பவன் எண்ணத்தில் என்ன அழுக்கு உள்ளதோ!
ஷரத்தின் பார்வை போன போக்கில் எரிச்சல் கொண்ட நிரஞ்சன், "காவ்யா, அவளை கூட்டிட்டு கொஞ்ச நேரம் உள்ள இரு.." மனைவிக்கு கட்டளையிட, கணவன் சொல்லுக்கு இணங்க மறுபேச்சி பேசாது யாதவியோடு உள்ளே சென்றாள்.
"என்ன மச்சான், எதுக்கு இப்ப அவங்கள உள்ள அனுப்பின.. யாதவிகுட்டி கூட கொஞ்ச நேரம் பேசிட்டு இருந்திருப்பேன்ல.." அசடு வழிய பேசியவனை அழுத்தமாக பார்த்தவனாக,
"எதுக்கு வந்த ஷரத், அதை சொல்லிட்டு சீக்கிரம் கிளம்பு.." பட்டு தெறித்தார் போல் கடுகடுத்த நண்பன் புதிதாக தெரிந்தான் அவன் கண்ணுக்கு.
"என்னடா ஏதாவது விஷயம் இருந்தா தான் இங்க வரணுமா, உன் வீடு என் வீடு மாதிரி இல்லையா மச்சான்.." செண்டிமெண்ட் நாடகம் நிரஞ்சனிடம் செல்லுபடியாகுமா!
"இங்க பாரு ஷரத் நான் நேரடியாவே சொல்லிடறேன், பிரண்ட் எல்லாம் வீட்டுக்கு வெளியோட முடிச்சிக்கோ.. உன் இஷ்டத்துக்கு நினச்ச நேரத்துக்கு எல்லாம் வந்து போக இது ஒன்னும் உன் சொந்த வீடு இல்ல என் வீடு.. இப்ப என்ன விஷயமா வந்தியோ அதை மட்டும் சொல்லிட்டு கிளம்பு.." என்னவோ தெரியவில்லை ஷரத் பார்வை போகும் போக்கை கண்டாலே ஆத்திரம் ஆத்திரமாக வருகிறது.
வீட்டு பெண்களின் பாதுகாப்புக்கு முன்னால் நண்பன் எல்லாம் கூந்தலுக்கு சமானம் என நினைத்து விட்டானோ! நிரஞ்சன் பேசிய பேச்சில் ஷரத் பிபி எகிற நின்றான்.
"பொண்டாட்டி வர்றதுக்கு முன்னாடி வரைக்கும் நம்ம நட்பு எந்த ஒரு விரிசலும் இல்லாம இருந்துது.. ஆனா இப்ப ரொம்ப மாறிட்ட நிரஞ்சா" என்றவன் 'இந்த அளவுக்கு உன்ன மாத்தி வச்சிருக்காளே உன் பொண்டாட்டி சரியான சதிகாரி தான்டா..' என்றதை மட்டும் பற்களில் கடித்துக்கொண்டான்.
"நான் மாறுறது இருக்கட்டும் நீ சொல்லு" ஒவ்வொரு பேச்சும் முகத்தில் அடித்தது போல் பேசி, அவன் சப்பிட்டு போன காரணத்தை கடுப்பாக கேட்டுவிட்டு அடித்து விரட்டாத குறையாக அனுப்பி விட்டு, யாதவியை அழைத்து சென்றான்.
நிரஞ்சனை பொறுத்தமாட்டில் ஷரத் ஒரு நல்ல தோழன் தான். அவன் தனிமையில் தவிக்கும் போது ஆறுதலாக வந்தவன் என்றே ஷரத்துக்கு சகலவித சுதந்திரத்தையும் தன்னிடம் வழங்கி இருந்தான்.
ஆனால் ஷரத்தின் தனிப்பட்ட வாழ்க்கை முறையில் எப்போதும் அவனுக்கு அதிருப்தியை தான் ஏற்படுத்தும்.
ஒரு ஆணின் பார்வையில் என்ன உள்ளது என்று மற்றொரு ஆணால் எளிதில் உணர முடியுமே! அப்படித்தான் ஷரத் பார்வையில் ஏதோ ஒரு திருட்டுத்தனம் இருப்பதை வந்த முதல் நாளே உணர்ந்துகொண்ட நிரஞ்சன், அவனை விட்டு விலக தொடங்கியது. முடிந்த அளவிற்கு மரியாதையாக ஒதுங்கி விட நினைக்கிறான், ஆனால் மீண்டும் மீண்டும் அவன் வருகை அடக்க முடியாத கோபத்தை அளிக்கிறது.
வயது வித்தியாசமின்றி பெண் சகவாசம். உறவு முறையை கொச்சை படுத்தும் ரோல் ப்லே அருவருப்பின் உச்சம். நிரஞ்சனை விட தான் சிறந்தவனாக இருக்க வேண்டும் என்ற பொறாமை புத்தி. கூடா நண்பர்களோடு கேடான சகவாசம் என நிரஞ்சன் அறியாமலே அவனுக்கு எதிராக மாறிப்போக, எப்படியாவது நிரஞ்சனை ஒன்றுமில்லாமல் ஆக்கி விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு திரிகிறான் ஷரத்.
யாதவி போனதுமே காவ்யாவை பற்றி தன் பெற்றோரிடம் சொல்லி விட வேண்டும் என ஆர்வமாக இருக்க, அதற்கும் முட்டுக்கட்டை போட்டான் நிரஞ்சன்.
"ஸீ யாது, காவ்யா பத்தி வீட்ல எதுவும் சொல்லிக்காத, நானே ஒருநாள் சர்ப்ரைஸா அவள வீட்டுக்கு கூட்டிட்டு வரேன்.. அதுவரைக்கும் அப்பா அம்மாக்கு விஷயம் தெரிய வேணாம்.." என்றதும் உற்சாகம் வடிந்தது அவள் முகத்தில்.
"சும்மாவே நீங்க வீட்டுக்கு வர மாட்டீங்க அண்ணா, அண்ணி வந்தும் ஏதேதோ காரணம் சொல்லி எங்கள அவாய்ட் பண்றீங்க.. நீங்க தான் எங்கள எல்லாரையும் விட்டு விலகி போறீங்களே தவிர, நாங்க எல்லாரும் உங்க அருகாமைக்கும் அன்புக்கும் ஏங்கிட்டு தான் இருக்கோம்.. அதை எப்பவும் மறந்துடாதீங்க அண்ணா.."
நா தழுதழுக்க சொன்ன யாதவி சட்டென அவன் கழுத்தை எக்கி கட்டிக்கொள்ள, முதல் முறையாக தங்கை பாசத்தை அனுபவிக்கும் நிரஞ்சனுக்கு ஒருமாதிரி மூச்சை அடைக்கும் உணர்வு ஏற்பட்டது.
அதன் பிறகான நாட்களில் காவ்யா கர்ப்பம் தரிக்க, மனைவியை கண்ணும் கருத்துமாக பூரிப்புடன் பார்த்துக்கொண்டான் நிரஞ்சன். இரட்டை குழந்தைகள் ஆண் ஒன்று பெண் ஒன்று பிறந்திருக்க, அலுவல் விட்டு வந்தால் மனைவியின் அக்கறையிலும் குழந்தைகளின் மழலை பேச்சிலும் தன்னை மறந்து போவான்.
யாதவி அடிக்கடி நிரஞ்சன் வீட்டிற்கு வருவதால் காவ்யாவின் விஷயம் மோகனுக்கும் அவர் மனைவிக்கும் தெரியவர, பெருமளவு வேதனை கொண்டனர். மகன் மொத்தமாக தங்களை விட்டு விலகி சென்றதில்.
எப்படியாவது பேரக்குழந்தைகளை பார்த்து விட வேண்டும் என்ற ஆவலில் குடும்பத்தோடு மகன் வீட்டிற்கு வந்துவிட, குடும்பத்தின் அன்பில் திணறி விட்டான் நிரஞ்சன். அண்ணா அண்ணா என சுற்றி வரும் குட்டி தங்கைகளை தான் பெற்ற மழலை செல்வங்களோடு ஒப்பிட்டு பார்த்தான். தகப்பன் ஆன பிறகு தான் பாசத்தின் உன்னதம் அறிந்தானோ!
மிது அப்போது மிகவும் சிறுபெண் என்பதால் குடும்ப நிலவரம் புரியாமல் குழந்தைகளோடு குழந்தையாக விளையாடுவது தான் அவளின் முழுநேர வேலை.
காவ்யாவை குடும்பமே தாங்கி பிடிக்க, அவ்வபோது பொஸபொஸப்பு வந்துவிடும் கலாப காதலனுக்கு. பெங்களூரில் தொடங்கிய புதிய கிளையை பராமரிக்க நிரஞ்சன் குடும்பமாக அங்கே சென்றிட, யாதவியும் பள்ளி முடித்த கையோடு அண்ணன் வீட்டில் தங்கி குழந்தைகளை பார்த்தபடியே கல்லூரியில் சேர்ந்து விட்டாள்.
மிகவும் அழகாக சென்றுகொண்டிருந்த குடும்பத்தில் யார் கண் பட்டதோ! துரதிஷ்டவசமாக நடந்த சாலை விபத்தோ, அல்லது சதிதிட்டத்தின் படி நடந்த விபத்தோ, காரில் அலுவல் சென்ற நிரஞ்சனுக்கு பெருமளவு அடிப்பட்டு பெங்களூரு மருத்துவமனையில் அனுமதித்து இருப்பதை கேள்விப்பட்டு அதிர்ச்சியில் துடித்து விட்டாள் காவ்யா.
அடித்து பதறி மருத்துவமனை செல்லும் நேரத்தில், நல்லவன் வேகத்தில் வந்து சேர்ந்தான் ஷரத்.
"கவலை படாத காவ்யா, நிரஞ்சனுக்கு ஒன்னும் ஆகாது.. வா நானே உன்ன ஹாஸ்பிடல் கூட்டிட்டு போறேன்" நயவஞ்சகன் ஆறுதல் சொல்வதை நம்பி, கண்ணோரோடு சென்றாள் குழந்தைகளோடு.
நிரஞ்சனின் சுகபோக வாழ்வை கண்டும், அவன் முன்னேற்றத்தை கண்டும் வயிற்று எரிச்சலில் இருந்தவன், என்னவோ நண்பன் கம்பெனி தன் கம்பெனி என்ற மிதப்பில் வேண்டுமென்றே கவனமில்லாமல் பல வேண்டாத ஆடர்களை எடுத்து, தொழிலில் நஷ்டத்தை ஏற்படுத்தியவனை டென்ஷன் தலைக்கேறி அனைவரின் முன்னும் கண்டபடி கத்தி விட்டான் நிரஞ்சன்.
பணியாளர்களின் கேலி சிரிப்பில் அவமானம் பிடுங்கிய நிலையில் தான், காத்திருந்து காத்திருந்து இப்படி ஒரு கோர சம்பவத்தை நிகழ்த்த துணிந்து, குடும்பத்தையே சிதைக்க வந்துவிட்டான்.
"அண்ணி அழாதீங்க அண்ணா குணமாகி வந்திடுவாரு.. நான் உடனே அம்மா அப்பாக்கு போன் போட்டு சொல்றேன்.. அவங்க வந்துட்டா நமக்கு கொஞ்சம் தைரியமா இருக்கும்.." யாதவி அழுதபடியே பெற்றோருக்கு அழைப்பு விடுக்க போக, சகுனி நடுவில் வந்து விழுந்தது.
"அவசரப்படாத யாதுகுட்டி, முதல்ல நிரஞ்சன் கண்ணு முழிக்கட்டும்.. அதுக்குள்ள அம்மா அப்பாக்கு சொல்லி அவங்கள வருத்தப்பட வைக்காத.. பாவம் வயசு வேற ஆகுது திடீர்னு ஏதாவது அவங்களுக்கு ஒண்ணு ஆகிட்டா என்ன பண்றது..
கொஞ்சம் பொறு நான் தான் கூட இருக்கேன்ல, எல்லாத்தையும் சமாளிச்சுக்கிறேன் பயப்படாத.." லாவகமாக பேசி, இவன் சொல்வதும் சரிதான் எனும் அளவிற்கு அவர்களையே குழப்பி விட்டான் நச்சுபாம்பு.
வலது கால் மூட்டு என்பில் மாவுகட்டு, தலையில் பலமாக கொண்ட காயத்தால் குறுகிய கால கோமாவில் இருந்தான் நிரஞ்சன். எப்போதும் சுறுசுறுப்பாக செயல்படும் கணவன் சுயநினைவு இழந்து படுக்கையில் கிடைப்பதை கண்டு வெம்பி வரும் அழுகையோடு கவனமாக பார்த்துக்கொண்டாள் காவ்யா.
இரண்டு வாரம் கடந்துவிட்ட நிலையில் ஷரத் ஒட்டுண்ணி போல் இரு பெண்களையும் சுற்றி வந்து, இருவரது நடவடிக்கைகளையும் கூர்ந்து கவனித்தவனாக, நிரஞ்சன் கண் விழிப்பதற்குள் இரண்டு மானையும் வேட்டையாடி தீர்த்து கறி விருந்து சாப்பிட முடிவு கட்டிவிட்டான்.
வயது பெண் யாதவியை தனியே விட விரும்பாது ஸ்பெஷல் வார்டு என்பதால் தன்னோடே வைத்துக்கொண்டாள் காவ்யா. எவ்வித அவசர தேவைக்கும் ஷரத் ஓடி ஓடி உதவி பண்ண, காவ்யாக்கு பெரிதாக சிரமம் தெரியவில்லை.
கணவனின் லேசான விரல் அசைவுக்கே கண்ணீர் பெருக்கெடுத்து ஓடிட, அன்று காலையே மருத்துவர் வந்து நிரஞ்சனை பரிசோதனை செய்தவராக, "உடலில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும், எப்போது வேண்டுமானாலும் கண் விழித்து விடலாம்" என கூறி செல்லவும், மகிழ்ச்சி தாளவில்லை.
"யாது, நான் தம்பிய தூக்கிட்டு வீட்டுக்கு போய் சாப்பாடு செஞ்சி கொண்டு வரேன், நீ பாப்பாவையும் அண்ணனையும் பாத்துக்கோ.." என்றபடி மகனை மட்டும் தூக்கிக்கொண்டு வீடு நோக்கி புறப்பட்டாள்.
இதற்குத்தானே காத்திருந்தான் வேடன். எப்போதும் அவளை வீட்டின் முன்னே இறக்கி விட்டு ஜென்டில்மேனாக வெளியே இருந்து கொள்பவன், இன்று அவள் பின்னோடு பாய்ந்த நொடியே தன் கேவல வேலையை தொடங்கி விட்டான்.
நொடியில் நடந்த நிகழ்வில் அதிர்ந்து போன காவ்யா, "ச்சீ.. உன்ன போயி நல்லவன்னு நம்பினேன் பாரு என்ன சொல்லணும்.. வெளிய போடா ராஸ்கல்.." கையில் மூன்று வயது குழந்தையோடு அவள் பரிதிவித்த தவிப்பு அவள் நினைவை இழந்து கிடந்த நிரஞ்சனின் இதயத்தை அதி தீவிரமாக துடிக்க வைத்ததோ! அவன் உடலில் மெல்ல அசைவு ஏற்பட்டது.
"வெளிய போக தான் டி போறேன், அதுக்கு முன்னாடி உன்ன ருசி பாத்துட்டு போறேன்.. வருஷக்கணக்குல பிளான் போட்டது வீண் போக கூடாது பாரு.." அரக்க சிரிப்புடன் அவன் முகத்திரையை கிழித்துக்காட்ட,
"பச்சை துரோகி.." காவ்யாவின் உதடு நடுங்கி கண்ணீரோடு உறைந்தவளாக, ஷரத்தின் உண்மை கண்டு அருவருத்து போனாள்.
"ஹா.. ஹா.. ஹா.. எவ்வளவு சீக்கிரம் கண்டு பிடிச்சிட்ட.. இன்னைக்கு உன்ன முடிச்சி கட்டிட்டு இன்னொரு நாள் யாதவிகுட்டிய பாத்துக்குறேன்.. ஆனா சும்மா சொல்ல கூடாது டி, ரெண்டு புள்ள பெத்தாலும் சும்மா நச்சின்னு தான் இருக்க.." நாவை குதப்பி அவன் பேசிய விதத்தில், தேகம் கூசியது.
விபரீதம் நடக்கும் முன்னவே தப்பிக்க முயற்சித்தவளின் பின் பக்க ரவிக்கை துணியை கிழித்து விட்டான் கிராதகன். கத்தி கூப்பாடு போட்டும், அப்பெரிய வீட்டை தாண்டி சத்தம் வெளியே கேட்காமல் பெண்ணின் சாபத்தை பெற்றான் அரக்கன்.
குழந்தை பையன் வீரிட்டு அழ, தனக்கு நடக்கவிருக்கும் கொடுமை எண்ணி நெஞ்சி நடுங்கிய நிலையிலும், "ஏதாவது ஒரு அதிசயம் நடந்து கணவன் கண் விழித்து தன்னை காப்பாற்ற வர மாட்டானா.." என்று தான் பெண்ணின் மனம் அடித்துக்கொண்டது.
"தயவுசெய்து விட்டுடு.." கை கூப்பி கெஞ்சிய அபலையை சூறையாட முன்னேறியவனை கையில் கிடைத்த பொருளை எல்லாம் தூக்கி அடித்து, அங்குமிங்கும் ஓடி தப்பிக்க அலைமோதினாள் காவ்யா.
அதே நேரம் மருத்துவமனையில் கண் விழித்து எழுந்து அமர்ந்த அண்ணனை கண்டு சந்தோஷத்தில் துள்ளி குதித்த யாதவி, உடனே காவ்யாக்கு அழைத்து சொல்ல நினைக்க, அழப்பு மணி சத்தம் அவளுக்கே கேட்டது.
"அச்சோ அண்ணி போனை மறந்து வச்சிட்டு போய்ட்டாங்களா.." தலையில் தட்டிக்கொண்டவளாக, "அண்ணா அண்ணி இன்னும் கொஞ்ச நேரத்துல வந்திடுவாங்க, நான் அதுக்குள்ள போயி உங்களுக்கு குடிக்க ஜூஸ் வாங்கிட்டு வரட்டுமா.."
ஆர்வமாக கேட்ட தங்கைக்கு பதில் சொல்லும் நிலையில் இல்லை அவன். மனம் முழுக்க வரையறுக்க முடியாத படபடப்பு, ஏதோ தவறாக நடப்பதை போலவே உள்ளுணர்வு சொல்ல, படபடவென தன் கையில் மாட்டி இருந்த வையர்களை எல்லாம் பிய்த்து எறிந்துவிட்டு, யாதவி தடுக்க தடுக்க வார்டைவிட்டு வெளியேறியவனை தானும் பின் தொடர்ந்து ஓடினாள், பிள்ளையோடு.
"உனக்கெல்லாம் நல்ல சாவே வராது விடுடா நாயே.." ஷர்த் கையில் சிக்கிக்கொண்டு நெஞ்சம் நடுங்க பதறினாள்.
"அது வரும் போது பாத்துக்கலாம், உனக்கு ஒரு உண்மை சொல்லட்டா.. உன்ன இப்டி எங்கிட்ட சிக்க வச்சதே உன் புருஷன் தான்.." என்றதும் காவ்யாவின் இதயத்துடிப்பு நின்று துடித்தது.
"பொய்.. ஏற்கனவே அவரை பத்தி தப்பா சொல்லி எங்கள பிரிக்க நினச்ச பாவி நீ.. நீ சொல்றதை நம்ப மாட்டேன்.." தீர்க்கமாக சொன்னவளின் முன்னே ஒரு கேட்பொலியை ஒலிக்க விட்டான்.
"ஷரத் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் என் பொண்டாட்டி மனச மாத்தி வேலைய முடி.. சொந்த பொண்டாட்டிய அடுத்தவனுக்கு கூட்டி குடுக்குற சுகமே தனி சுகம்.. அது போதை பொருள்ல கூட கிடைக்காது, அந்த சுகம் எனக்கு வேணும்.. நீ அவளை அனுபவிக்கிறத என் கண்ணால பாத்து ரசிச்சி நானும் ராஜசுகத்துல இணைஞ்சி சந்தோஷத்தை அனுபவிக்கனும்"
மிக வக்கிரமாக பேசிய நிரஞ்சனின் குரலை கேட்பொலியில் கேட்ட பின் காவ்யாவின் மனநிலை எப்படியெல்லாம் மரிந்து துடித்ததோ! காதல் கரிந்ததோ!அருகில் இருந்த பீங்கான் தொட்டியை ஆவேசமாக ஷரத் மண்டையில் தூக்கி போட்டு உடைக்க, ரத்தம் பீரிட்ட நிலையிலும் ஆத்திரமாக அவள் மீது பாய்ந்தான்.
கிட்டத்தட்ட இருவருக்கும் இடையில் தள்ளுமுள்ளு போர்க்களம் நடந்ததில், இருவருக்குமே பலத்த காயங்கள் ஆன நிலையில், ஷரத் உக்கிரமாகி காவ்யாவின் கழுத்தை நெறிக்க, கண்கள் மேல் நோக்கி சொருகினாலும் "இந்த அயோக்கியன் தன்னை கலங்கப்படுத்தி விடக்கூடாது" என்ற தீர்க்கம் அவள் மனதில் நிலையாக இருந்தது.
"உன் புருஷனே உன்ன கூட்டிக்கொடுக்க நினைக்கும் போது, இன்னும் ஏன் டி ஒன்னுதுக்கும் உதவாத கர்ப்புக்கு ஓவரா துள்ளிட்டு இருக்க.." பற்களை கடித்து நரநரத்தவன், தாய்க்கு நடக்கும் அநியாயத்தை கண்டு பிஞ்சி கண்கள் கலங்க, காதை பிளக்கும் சத்தத்தோடு கத்திய குழந்தை பையனின் காலை தூக்கி ஒரே அடியாக சுவற்றில் தூக்கி ஆக்ரோஷமாக விட்டெறிந்தது தான் பிள்ளையிடம் மூச்சி பேச்சி ஏதுமில்லை.
"ஐய்யோஓஓ.. என் பிள்ளஆஆஆ.." தாய் மனம் அரண்டு குழந்தையை நோக்கி ஓட போனவளின் காலை, அவன் காலால் இடரி விட்டு குப்புற விழ வைக்க, உடைந்த பீங்கான் துண்டில் கழுத்து குத்திக் கிழிக்கப்பட்டு குருதி வெள்ளத்தில் தத்தளித்து கிடந்தவளை ஈரக்குலை நடுங்க கண்டாள் யாதவி.
அருகில் நிரஞ்சன் உயிரோடு செத்தே போனான் மனைவி மகனின் நிலையை கண்டு.
"அட வா மச்சான், சொன்ன மாதிரியே உன் தங்கச்சியையும் கூட்டிட்டு வந்துட்ட.. பாருடா உன் பொண்டாட்டி சரியான திமிர்க்காரியா இருக்கா, நீ சொன்ன மாதிரி ஒன்னுதுக்கும் வலைஞ்சி தரல டா.. சுத்த வேஸ்ட்.." யாதவியும் நிரஞ்சனும் ஒரே சமையத்தில் வந்ததும், என்ன செய்வதென புரியாமல் பழி மொத்தமும் நிரஞ்சன் பக்கம் திருப்பிட, யாதவிக்கு மேலும் அதிர்ச்சி.
"என்ன அண்ணனா ஒரு கேவல செயல செய்ய நினைச்சாரு.." அவனோடு உடன் பிறந்ததையே அருவருத்து திகிலாக நிற்க, நிரஞ்சனுக்கு எதையும் சிந்திக்க நேரம் இல்லை, தனது காவியக்காதலியின் துடிப்பு மெல்ல அடங்குவதை கண்டு.
"அயோக்கிய நாயேஏஏஏ.." ரத்தம் உறைய கத்தி நொண்டி காலால் ஓங்கி அவன் நெஞ்சில் உதை விட தடுமாறி விழுந்தும் விடவில்லை. எமனை நேரில் சந்தித்து வந்தவனை போல வெறிபிடித்து அடித்து போட, அதற்குள் "அண்ணிஇஇ.." என கண்ணீரோடு ஓடி வந்த யாதவியின் கரத்தை, விரல் நடுங்க பிடித்தாள் காவ்யா.
"என்ன அண்ணி இதெல்லாம்.." சூழ்நிலையை சமாளிக்க தெரியாமல் சிறு பெண் வெம்பி அழுதாள்.
"ய். யாரும்.. ந்.நல்லவங்க இல்ல யாது.. ந்..நீ ப்.போய்.டு.. இங்க இருக்காத க்.கண் காணாத இடமா க்.குழந்.தைய தூக்கிட்டு போய்டு யாது.. உ.உனக்கு ஆ.ஆ..பத்து.. இவன் இ.ல்லனாலும் இவனோட சதிகார கும்பல் உன்ன விடாது.. ப்.போய்டுமா.." என்றவள் மேலும் பல திடுக்கிடும் உண்மைகளை கூறி ஜீவன் துடிதுடிக்க காவ்யா பேசிய கடைசி வார்த்தைகள் அது.
யாதவி தன் குடும்பத்தில் உள்ள ஒருவரையும் தற்போது இருக்கும் சூழ்நிலையில் நம்ப முடியாதவளாக, தன் கர்ப்பையும் காப்பாற்றியாக வேண்டுமே என்ற காட்டாயத்தில் கையில் உயிரோடு இருந்த குழந்தையை மட்டும் தூக்கிக்கொண்டு வீட்டை விட்டு ஓடிய சிறிது நேரத்தில் வீடே வெடித்து பற்றி எரிந்தது.
இனி
"கடைசியா என் அண்ணி இருந்த வீடு என் கண்ணு முன்னாடியே எரிஞ்சதை மட்டும் தான் திரும்பி பாத்தேன்.. ரெண்டு நாள் என் பிரண்ட் வீட்ல தங்கி இருந்து, அவ உதவியோட குழந்தைய தூக்கிட்டு போய் லண்டன் போனேன்..
அங்க போய் பாப்பாவ பாத்துகிட்டே விட்ட படிப்பை தொடர்ந்தேன்.. ஆனாலும் கண்ணால பாத்த அந்த பாதிப்புல இருந்து என்னால வெளிய வர்ற முடியல..
என் அண்ணனே என் அண்ணிய.." அதற்கு மேலும் சொல்ல முடியாமல் யாதவி கதறி அழ, மது உடல் பொத்தென தரையில் சாய்ந்தது.
தொடரும்.

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 24
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.