- Messages
- 277
- Reaction score
- 298
- Points
- 63
அத்தியாயம் - 5
"கவி மெதுவா டி.." அவளை கை தாங்களாக அழைத்து வந்த ஸ்வாதி ஒற்றை ஆள் படுக்கக் கூடிய இரும்புக்கட்டில் மெத்தையில் மெதுவாக படுக்க வைத்தாள்.
ஸ்ஸ்.. ஹா.. என்ற வலியின் முனகல் மட்டும் தீரவில்லை அவளிடம்.
"இப்ப எப்டி இருக்கு கவி இன்னும் வலி இருக்கா" ஸ்வாதி அக்கறையாக வினவ.
"கால் சுளுக்கு பிடிச்சி இருக்கு போல நடந்தா வலி இருக்கு ஸ்வாதி" பாவமாக சொல்லி கண்ணாடியை கழட்டி வைத்து கண் மூடிக்கொண்டாள்.
"சரி நீ கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு நான் போய் இன்னைக்கு ஹாஸ்டல்ல என்ன சாப்பாடுனு பாத்து எடுத்துட்டு வரேன்" என்றவள் நேரம் வேறு ஆகி விட்டு இருந்ததால் சாப்பாடு இருக்குமோ என்னவோ என நினைத்தபடியே தட்டை எடுத்துக் கொண்டு ஓடி சென்று பார்க்க, பாத்திரங்கங்கள் சுத்தமாக வழிக்கப் பட்டு இருந்தது.
வயிற்றை தடவிக் கொண்டவளுக்கு நல்ல பசி போலும். இங்கு இப்படி தான் கம்மி விலையில் ஹாஸ்டல் கிடைப்பதே பெரிய விடயம் இதில் "சாப்பாடு ஏன் தீர்ந்து போனது கூடுதலாக செய்து எடுத்து வைக்கக் கூடாதா" என்றால், "நீ குடுக்குற காசுக்கு மூணு வேலையும் சோறு போடறதே பெருசு இதுல கூடுதலா செஞ்சி வீணா போனா யார் பொறுப்ப ஏத்துக்குறது, வேணும்னா கூட ரெண்டோ மூனோ குடு" என எகத்தாலம் செய்து கேலியாக தங்களுக்குள் சிரித்துக் கொள்வர்.
இதனாலே எங்கிருந்தாலும் என்ன வேலையாக இருந்தாலும் ஓடோடி வந்து விடுவர். இத்தனைக்கும் உணவு ஒன்றும் ஆஹா.. ஓஹோ..என்று ரசித்து சாப்பிடும் வகையில் எல்லாம் இருக்காது. ரசம் சாம்பார் என்று பச்சை தண்ணீரும், காரக்குழம்பு என்று வடி கட்டிய நீரும் உப்பு சப்பு இல்லாமல் இருக்கும். அதுக்கே இந்த பீத்தல்.
இரவு உணவுக்கு என்ன செய்வது என்ற கவலை அவளை மிகவும் வாட்டியது. கையில் பைசா இருந்தாளாவது வெளியே கடைக்கு சென்று ஏதாவது வாங்கி வரலாம், இப்போது கவிக்கு வேறு மருந்துக் கொடுக்க வேண்டும் அவளும் காலையில் உணவுண்டது. சோகமாக நடந்து வந்தவளை யாரோ அழைத்தாக ஒரு பெண் சொல்லி செல்ல, இந்த நேரத்தில் யாராக இருக்கும் என்ற யோசனையோடே வெளியே சென்றாள்.
அங்கு நின்றதோ ஆதியின் டிரைவர்.
"என்ன அண்ணா இன்னும் நீங்க வீட்டுக்கு போகலையா" என்றாள்.
"இல்லமா சார் தான் உங்களுக்கு சாப்பாடு வாங்கி கொடுத்துட்டு அப்டியே கொஞ்சம் கை செலவுக்கு பணம் கொடுத்துட்டு வர சொன்னாரு" என்று வாங்கி வந்த உணவை அவள் கையில் கொடுத்து, பணமும் கொடுத்து விட்டு அங்கிருந்து சென்றார்.
ஸ்வாதிக்கு தான் ஆதியை நினைத்து மிகவும் பெருமையாகவும் மகிழ்ச்சியாவும் அதேசமயம் மிகவும் வியப்பாகவும் இருந்தது. இந்த காலத்தில் இப்படி ஒரு மனிதனா என்று உள்ளம் பூரித்து உணவை எடுத்துக் கொண்டு மகிழ்ச்சியாக ஓடினாள் தோழியிடம்.
மித்ரா பின்னால் வந்த ஆதியின் எண்ணுக்கு அழைத்த டிரைவர், "சார் அந்த பொண்ணுங்களுக்கு சாப்பாடு வாங்கி கொடுத்து பணமும் கொடுத்துட்டேன் சார், நான் போலாமா" என்றார் பணிவாக.
ம்ம்.. கொட்டி அழைப்பை துண்டிந்து மேஜையில் அமர்ந்தான் ஆதி.
மாமா என்று ஆசையாக ஓடி வந்த அக்கா மகளை கையில் அள்ளிக் கொண்ட ஆத்வி, "ஹே.. தன்யா.. எப்டி இருக்க" என்றான் அதன் மூக்கொடு மூக்குரசி.
"பைன் மாமா.. நீங்க எப்டி இருக்கீங்க" தெளிவான வாக்கியத்தில் வினவியது குழந்தை.
"ஐ அம் சோ குட் பேபி.." என்று குழந்தையோடு தந்தைக்கு நேர் எதிரில் அமர்ந்தான்.
அவனை தொடர்ந்து மற்றவர்களும் அமர்ந்ததும், மித்ரா முதலில் மகனுக்கு பரிமாறப் போக, "மித்து முதல்ல எனக்கு சாப்பாடு போடு" ஆதியின் குரல் அதிகாரமாக ஒலிக்கவும், மிரண்டவளாக கணவனுக்கு பரிமாற செல்ல,
"மாம் முதல்ல எனக்கு சாப்பாடு போடுங்க" எதிர் புறம் ஆத்வியின் குரல் தந்தைக்கு இணையாக ஒலித்தது.
"ஹான் சரிப்பா" என்று மகனிடம் ஓடப் போனவளின் கை பிடித்து தடுத்த ஆதி. "மித்து எனக்கு சாப்பாடு போடுன்னு சொன்னேன்" பற்களை கடித்தான்.
"மாம் எனக்கு மட்டும் நீங்க பர்ஸ்ட் சாப்பாடு வைக்கல, அப்டியே எழுந்து போயிடுவேன்" என்றதும் ஆதியின் கையை உதறி விட்டு மகனிடம் ஓடி விட்டாள் மித்ரா.
அதுவரை அங்கு நடந்த கூத்தை கன்னத்தில் கை வைத்து பாவமாக பார்த்துக் கொண்டிருந்தனர், எப்படா உங்க சின்ன புள்ள பிரச்சன முடியும் என்று. ஆரு அஜய் அசோக் தன்யா அனைவரும்.
ஆத்விக்கு சாப்பாடு பறிமாறியதும் இல்லாமல் மித்ராவே உணவை ஊட்டுவதையும் வெறியாக பார்த்த ஆதியை, ஆத்வி புருவம் உயர்த்தி நக்கலாக கண்டு மித்ரா தோளில் கை போட்டவனாக உணவை மெல்ல, விறுவிறுவென எழுந்து அறைக்கு சென்று விட்டான் ஆதி.
அவன் சென்ற திசையை கண்டு கலக்கமாக பார்த்த மித்ரா, "ஏன்டா எப்பபாரு உங்க அப்பாட்ட வம்பு வளத்துட்டு இருக்க.. ரெண்டு பேரும் அப்பா புள்ள மாதிரியா இருக்கீங்க எலியும் பூனையுமா இப்டி அடிச்சிக்கிட்டா என்ன டா அர்த்தம்" கணவனிடம் கேட்க முடியாத கேள்வியை மகனிடம் கேட்டு மித்ரா கடிந்துக் கொண்டாள்.
"மச்.. மாம்.. இதெல்லாம் ஒரு என்டெர்டைன்மெண்ட் மாம்.. உங்களுக்கு சொன்னா புரியாது அப்டிதானே தன்யா" தன் மடியில் அமர்ந்து அப்பளத்தை நொறுக்கி வாயில் திணித்துக் கொண்டிருக்கும் அதன்யாவிடம் கேட்க,
"ரைட் மாமா, பாட்டிக்கு எதுவும் தெரியாது.. தாத்தா வச்சி செம்ம ஃபன் பண்றீங்க" என்று வாய் குவித்து சிரிக்க, மகனையும் பேத்தியையும் ஒருசேர முறைத்த மித்ராக்கு தானே தெரியும், ஆதியை பற்றி.
அங்கு நடந்ததை எல்லாம் சுவாரிசியமாக கண்டுகொண்டே அனைவரும் உண்டு முடிக்க, "சரி ஆன்ட்டி நான் அப்ப வீட்டுக்கு கெளம்பட்டுமா" அசோக் தான் கேட்டது.
"அதுக்குள்ள என்ன அவசரம் அசோக் இருந்துட்டு போயேன் நான் உன் அப்பாகிட்ட பேசிக்கிறேன்"
"இல்ல ஆன்ட்டி அம்மாவ பாக்கனும்.. ஏதோ முக்கியமான விஷயம் பேசணும்னு ரொம்ப நாளாவே சொல்லிட்டு இருக்காங்க" என்றிட.
"சரிப்பா பாத்து போயிட்டு வா" என்ற மித்ரா கையோடு பல பதார்த்தங்களை கொடுத்து அனுப்பினாள்.
அசோக், ஆதியின் மேனேஜர் ராகுலின் மகன் தான். ராகுல் ஆரம்பம் முதல் ஆதிக்கு நல்ல விசுவாசமான நபர். அவன் மகனும் ஆத்வியும் இப்போது நெருங்கிய நண்பர்கள்.
"தன்யா.. நேரம் ஆச்சி தூங்க வேணாமா" அழைத்துக் கொண்டே ஆத்வியின் அறை கதவை திறந்த ஆரு காதை அழுத்தமாக பொத்திக் கொண்டாள்.
ஹோம் தியேட்டர் அதிர, டச் டிவியில்
"ஹேய் ரஞ்சிதமே.. ஹே ரஞ்சிதமே…
ஹேய் ரஞ்சிதமே.. ரஞ்சிதமே…
மனச கலைக்கும் மந்திரமே…
ரஞ்சிதமே ரஞ்சிதமே…
உன்ன உதடு வலிக்க கொஞ்சணுமே"…
என்ற பாடலை அலற விட்டு இடுப்பில் லுங்கியை கட்டிக் கொண்டு கண்ணில் கூலிங் கிளாஸ் மாட்டியபடி, பெரிய கிங் சைஸ் மெத்தையில் அதன்யாயும் ஆத்வியும் குத்தாட்டம் போட்டுக் கொண்டு இருப்பதை கண்டு தலையில் அடித்துக் கொண்ட ஆரு,
சத்தம் காதை பிளந்து இதயத்தை அதிர வைக்கவே, ஓடி வந்து மியூசிக் சிஸ்டத்தை அவள் ஆஃப் செய்யவும், "எவ்வஅவ" இருவரும் ஒருசேர கண்ணாடியைக் கழட்டியபடி திரும்ப, ஆரு கை கட்டி நின்று முறைப்பதை கண்டவர்களாக, பாவமாக முகத்தை வைத்து இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
** ** **
"என்னங்க ப்ளீஸ் இந்த ஒருமுறை மட்டும் மன்னிக்கக் கூடாதா.. சின்ன பிள்ளைங்க முன்னாடி எப்டி நான் உங்க பக்கத்துலே உக்காந்து பரிமாறி ஊட்டிவிட முடியும்" தட்டில் உணவை வைத்துக் கொண்டு ஆதியின் பின்னால் குட்டிப் போட்ட பூனை போல மித்ரா அலைந்துக் கொண்டிருக்க, ஆதியின் கோவம் கொஞ்சமும் அடங்க மறுத்தது.
"அவன் என்ன எப்டி பாத்தான் தெரியுமா டி.. அவன் கண்ணுல அப்டி ஒரு நக்கல் நீ அவன் பக்கம் போயிட்டேன்னு.. எனக்கு எப்டி இருந்துச்சி தெரியுமா இதுக்கெல்லாம் நீதான் டி காரணம்.. அவனை பாத்ததும் என்ன மறந்துட்ட" மூச்சி வாங்க வேக நடையுடன் மித்ராவை கத்திக் கொண்டு இருக்க, அவளுக்கோ இது போன்ற அக்கிரமம் வேறு எங்காவது நடக்குமா என்று தான் தோன்றியது.
இவனிடம் இப்படி கெஞ்சினால் வேலைக்கு ஆகாது என்று நினைத்தவளாக, "சரிங்க நீங்க இவ்ளோ கோவமா இருக்கும் போது நான் இங்க இருந்தா உங்களுக்கு இன்னும் இன்னும் கோவம் அதிகமாகும் அதனால நான் போய் ஆத்வி..." அவள் முடிக்கவில்லை, ஆதி வெறித்தனமாக முறைக்கும் முறைப்பில் பயத்திற்கு பதில் சிரிப்பு தான் வந்தது.
இந்த வயதிலும் மகனுக்கு கூட தன்னை விட்டுக் கொடுக்காமல் அவன் செய்யும் குழந்தைதனமான காதலில் உருகிப் போனவள், மெல்ல கணவனை கெஞ்சி கொஞ்சி முத்த பரிமாற்றம் நடத்தி பின் உணவு ஊட்டி உறங்க வைப்பதற்குள் அப்பாடா என்று ஆகி விட்டது.
கணவன் நன்றாக உறங்கி விட்டான் என்று உறுதி படுத்திக்கொண்டு மெல்ல எழுந்து மகனிடம் ஓடினாள் மித்ரா. அவள் சென்ற மறு நொடி கண் திறந்த ஆதிக்கு தான் தெரியுமே, மகனை காணாமல் அவனிடம் பேசாமல், அவன் தலையை அவள் மடியில் தாங்காமல் அவள் கண் மூட மாட்டாள் என்று. விழித்து இருக்கும் போது தன் கெத்தை விட்டுக் கொடுக்காமல் மனைவியையும் மகனிடம் விட்டுக் கொடுக்காமல் கோவமுகம் போட்டு சுற்றுபவன், உறங்குவதை போல் பாசாங்கு செய்து தாய் மகனுக்காக சற்று நேரம் செலவிட பெரிய மனதுடன் விட்டுக் கொடுத்து விட்டான் பெரியமனிதன்.
அங்கோ மகன் பேத்தி இருவரும் பாவமுகம் போட்டு நின்றிருக்க, ஆரு அவர்களை முறைத்துக் கொண்டு இருப்பதை பார்த்தபடி வந்த மித்ரா, "இங்க என்ன நடக்குது ரெண்டு பேரும் என்ன அட்டகாசம் பண்ணிட்டு இப்டி நிக்கிறீங்க" என்றாள் சரியாக.
"பாட்டி நாங்க ஒன்னும் பண்ணல" என்று தன்யாவும்,
"மாம்.. நாங்க ஒன்னும் பண்ணல" என்று ஆத்வியும் ஒருசேர கோரஸ் பாட,
"அப்டியா நீங்க ஒண்ணுமே பண்ணாம தான் ரூம் இப்டி அளங்கோலமா இருக்கா.. ம்மா.. ரெண்டு பேரும் காது கிழிய பாட்டு போட்டு டான்ஸ் ஆட்றேன்ற பேர்ல கொஞ்சம் இந்த ரூமை எப்டி ஆக்கி வச்சிருக்காங்கனு நீயே பாரு.." ஆரு அவ்விடத்தை காட்டி கோவமாக சொல்ல, அந்த அறையை சுற்றிலும் பார்த்த மித்ராக்கு மயக்கம் வராதக் குறை தான்.
மகன் வருவான் என்று பார்த்து பார்த்து தாயும் மகளும் அவன் அறையை இடுப்பு உடைய அலங்கரித்து வைத்திருந்த அறையில், தலையணை பஞ்சி அறை எங்கும் பறந்தது. லுங்கி தேடுகிறேன் என்ற பேரில் கபோர்டில் இருந்த மொத்த துணிகளையும் அங்கொன்றும் இங்கொன்றுமாக அறை முழுக்க வீசி எறிந்து கட்டில் முழுக்க கலைந்து, பார்க்கவே மலைப்பாக இருந்தது.
"ஆத்வி என்னடா இதெல்லாம்.. வெளிய உங்க அப்பாகிட்ட வம்பு இழுத்து வச்சிட்டு வந்துட்டு, உள்ள என்ன டா ரெண்டு பேருமா சேந்து அட்டகாசம் பண்ணி வச்சிருக்கீங்க" இடுப்பில் கை வைத்து முறைப்பாக கேட்டாள் மித்ரா.
"என்ன பாட்டி டான்ஸ் ஆடினது ஒரு குத்தமா" பெரிய மனுஷி தாடையில் கை வைத்து முகத்தை திருப்பிக் கொள்ள, "அதானே" என்ற மகனை முறைக்க முயன்று தோற்றவளாக சிரிப்போடு பார்த்தவளாக, ஆரு ஆஃப் செய்த சிஸ்டத்தை ஆன் செய்து இடுப்பில் சேலை தலைப்பை சொருகி,
"நீ வந்ததும் வந்ததும் வந்ததும்
மனசு சத்திரமே சத்திரமே…
நீ நித்திர நித்திர நித்திர
கெடுக்கும் சித்திரமே சித்திரமே…
ஹே ரஞ்சிதமே…
ஹே ரஞ்சிதமே…
ஹே ரஞ்சிதமே…
ஹே ரஞ்சிதமே".. என்று கைகளை தட்டி அவள் ஆட தொடங்க,
"ஐய்.. சூப்பர் பாட்டி" என கத்தி குதித்து, பாட்டி பேத்தி மகன் மூவரும் ஒன்று சேர்ந்து ஆட, வாய் பிளந்து பார்த்த ஆருவும் அதில் ஐக்கியமாகி விட்டாள்.
இவர்கள் செய்யும் அலப்பறை காதை கிழிக்க வந்து பார்த்த ஆதியும் அஜய்யும், "என்ன குடும்பம் டா இது" என்று மனதில் நினைத்தாலும், அவரவர் இணைகளை ரசிக்கவும் தவறவில்லை.
** ** **
கூட்டமான நெரிசல் உள்ள பஸ் ஒன்றில் இன்டெர்வியூக்கு செல்ல வேண்டுமே என்ற கட்டாயத்தில், வேறு வழி இல்லாமல் நெரிசலாக இருந்தும் அதில் பயணம் செய்துக் கொண்டிருந்தாள் கவி.
அதே நேரம் அவள் இருக்கும் பஸில் நண்பர்களுகிடையில் பந்தயம் கட்டி ஏறிய ஆத்வியின் கன்னத்தில், கோவம் கொப்பளிக்க ஓங்கி அறைந்திருந்தாள் அவள்.
புயல் வீசும்.

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 5
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.