Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖
New member
Messages
22
Reaction score
1
Points
3
அசுரன் 10

நெஞ்சம் கணத்து போய் அறைக்குள் செல்ல போனவளை கெய்யானந்தின் குரல் தடுத்து நிறுத்தியது.

"ஏமா நான் கோவிலுக்கு போறேன் நீயும் என் கூட வரியா?" என்றார் கெய்யானந்த்.

"சார் நானா?"

"ஆமா உன்னைத்தான் வாமா சும்மா அப்டியே போயிட்டு வரலாம் உனக்கும் கொஞ்சம் மனசுக்கு நிம்மதியா இருக்கும்ல" என்றார்.

தன் மாமனார் ஆயிற்றே அதனால் அவர் சொன்னதும் போய்த்தான் ஆக வேண்டும் வேறு வழியுமில்லை என்றெல்லாம் சுடரிகா நினைக்கவில்லை. மாறாக அவளுக்கும் மன அமைதி வேண்டும் போல இருந்தது. தன் கணவன் உக்ரன் பேசிவிட்டு போன வார்த்தைகளால்.

''ஒரு நிமிஷம் சார் இப்ப வந்துடுறேன்" சொன்னவள் மேல் ஏறி போனவள் தன்னை தயார் படுத்திக் கொண்டு வேகமாக கீழே இறங்கி வந்தாள்.

கோவிலுக்குள் காலடி எடுத்து வைத்ததும் ஏதோ மனதிற்கே நிம்மதி பரவுவதைப் போல உணர்ந்தாள் சுடரிகா. அதே உணர்வும் தான் கெய்யானந்தக்கும் வீட்டில் எவ்வளவு நேரம் தான் அந்த தோட்டத்தையும் வீட்டில் உள்ள அறைகளையும் நான்கு சுவரையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருக்க முடியும். அவருக்கும் அவருடைய வாழ்க்கையில் சில பல ஆசைகள் இருக்கத்தானே செய்யும். ஆசைகள் என்பதைவிட நிம்மதி என்று எடுத்துக் கொள்ளலாம். மனநிம்மதிக்காக கோவிலுக்கு வருவதும் உண்டு. இப்படித்தான் அவருடைய மன நிம்மதியை கழித்துக் கொள்கிறார். அதை விட்டால் வேறு, ஏதேனும் ஆசிரமங்களுக்கு செல்வார். அங்கு ஏழை குழந்தைகளுக்கு தம்மாலான உதவியை செய்வார். இது மட்டுமே அவருடைய வாழ்க்கையின் பிரதான வேலையாகவே வைத்திருக்கிறார்.

அலுவலகம் விட்டு வெளியே வந்து இத்தோடு நான்கு ஐந்து வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. அனைத்து பொறுப்புகளையும் தன்னுடைய மகனே பார்த்துக் கொள்கிறான். இருந்தாலுமே மேற்கொண்டு தன்னுடைய மகனுக்கு சில தொழில் ரீதியாக பல நுணுக்கங்களை சொல்லிக் கொடுக்கலாம் என நினைத்து அவரும் அவ்வப்போது அலுவலகத்துக்கு வரத்தான் செய்வான். ஆனால் மித்ராவோ,

"அவனுக்கு எல்லாம் தெரியும் நீங்க போய் உங்க உடம்பை கெடுத்துக்கதீங்க கெய்... ஏற்கனவே உங்களுக்கு ஹார்ட் அட்டாக் வந்து இப்பதான் ஆஞ்சியோ பண்ணி முழுசா ஒரு வருஷம் கூட முடியல அதுக்குள்ளேயும் நீங்க போகணுமா அப்டியே அவனுக்கு சந்தேகம் வந்தாலும் நான் சொல்லி கொடுக்க மாட்டேனா? விடுங்க கெய்" என வார்த்தைகளால் அவரை கொன்று தடுத்து விடுவார்.

மித்ரா ஒவ்வொரு முறையும் தன்னை உதாசீனப்படுத்துவதும் அல்லது அவமான பேச்சுக்களால் தன்னை பழிப்பதும் அவரால் தாங்கிக் கொள்ள முடியாத ஒன்றாகவே இன்று வரையிலும் இருக்கிறது. படார் என சரிதான் போடி என்று சொல்லிவிட்டு போக முடியும் ஆனாலும் அது சொல்ல முடியாத நிலையில் தான் அவரும் உள்ளார். அதற்கு காரணம் பெரிதாக என்ன இருக்கும் காதல் என்ற ஒன்று மட்டும் தவிர அவருக்கு வேறு பதில் சொல்ல முடியவில்லை.

அம்மனை தரிசித்துவிட்டு பிரகாரம் முழுவதும் சுத்தி சாமி கும்பிட்டு முடித்துவிட்டு தூணில் பக்கத்தில் மெல்லமாக தலை சாய்த்து உட்கார்ந்து கொண்டாள் சுடரிகா. அவளுக்கு சற்றே இரண்டடி தள்ளி உட்காருந்தார் கெய்யானந்த்.

"நானும் கேட்டேன் வீட்ல என் பையன் பேசிட்டு போனதும் நீ அதை கேட்டு தவிச்சு போனதும், சரி ஆயிடுமா கவலைப்படாத." அவளின் புறங்கையை மெல்லமாக அழுத்தியபடி அவர் சொல்லவும் அந்த தொடுதலின் உணர்வில் கண்களில் சொட்டு சொட்டாய் கண்ணீர் வந்தது.

"அடடா! என் தங்கமே! இப்படி கோவில்ல வந்து அழுக கூடாது. நீ வேண்டுன வேண்டுதல் எல்லாம் பழிக்காம போயிடும்னு சொல்லுவாங்க" என்று அவர் சொல்லவும்,

"என்ன சார் இப்படி சொல்றீங்க அப்ப நான் வேண்டின வேண்டுதல் பழிக்காதா? அப்போ நா அழுக கூடாதா?" என்றாள். சிறுபிள்ளைத்தனமாக கேட்க,

"ஆமா இப்படி அழுதா வேண்டுதல் எல்லாம் பழிக்காமல் போயிடும்" என மீண்டும் அவர் அதையே சொல்லவும், வேகமாக வரும் கண்ணீரை உள் இழுத்துக் கொண்டவள்,

"சரி அழுகல" மூக்கை உறிஞ்சி, சொன்னவளை தனக்கு பேன் இருந்தால் இப்படித்தான் இருப்பாளோ என்னை போல யோசித்தார் கெய்யானந்த்.

"அது என்ன பொண்ணா இருந்திருக்கலாமோன்னு இவளையே உன் பொண்ணா ஏத்துக்க வேண்டியதுதான?" மனசாட்சி கேட்க,

"அட ஆமால்ல"

"கெய்யா ஆமாவா இல்லையா?"

"போலாமா வீட்டுக்கு" என்றாள் சுடரிகா.

அவளின் பேச்சை கேட்டவவுடன் மனசாட்சியிடம் பேசி கொண்டிருந்தவர்

"போலாம்டா இப்பவே என்ன அவசரம் இன்னும் கொஞ்ச நேரம் பொறுமையா இருந்துட்டே போவோம் உனக்கு வீட்ல ஏதேனும் வேலை இருக்கா இல்ல யார் கிட்டயாவது பேசணுமா?" என்றார்.

"சார் பாத்தீங்களா எல்லாமே தெரிஞ்சும் வேணும்னே என்கிட்ட இந்த மாதிரி கேக்குறீங்களே?" அவள் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டாள் என தெரிந்ததும் தன்னுடைய பேச்சை ஆரம்பித்தார்.

"சுடரிகா உன்கிட்ட ஒரு விஷயத்தை சொல்லணும் இதை நீ எப்படி எடுத்துக்குவேன்னு எனக்கு தெரியாது. ஆனால் இதை நீ பண்ணா எனக்கு ரொம்ப நல்லா இருக்கும்னு மனசுக்கு தோணுது நீ யாரோ எவரோ பொண்ணு உன் கிட்ட நான் இவ்வளவு டிமாண்ட் வைக்கிறது தப்புதான் ஆனாலும் என்னால சொல்லாமல் இருக்க முடியலையே?" அவர் இழுத்துக் கொண்டே பேச,

"சார் நீங்க என்ன விஷயம்னே சொல்லல அதுக்குள்ளயும் டிமாண்ட் அது இதுன்னு என்னென்னமோ பேசுறீங்களே?" கண்கள் பட படக்க சொன்னவளை ஒரு நிமிடம் நிமிர்ந்து பார்த்தவர் மீண்டும் தலையை தரையில் பதித்துக் கொண்டார்.

"எனக்கு இந்த கோவில்ல இருக்குற சாமி சாட்சியா ஒரு சத்தியம் பண்ணி கொடுக்கணும்" என்றார்.

"சத்தியமா என்ன சத்தியம் சார் என்ன என்னமோ சொல்றீங்க? எனக்கு புரியலையே கொஞ்சம் புரியும்படி சொல்லுங்க?" என்றாள் சுடரி.

"ஆமாமா ரொம்ப பெரிய சத்தியம் தான். அது உன்கிட்ட நான் கேட்கவும் கூடாதுதான் ஆனாலும் கேட்க வேண்டிய சூழ்நிலைல நான் இருக்கேன் சுத்தி வளைச்சு பேச விரும்பல நேரடியா விஷயத்துக்கே வந்துடுற என்னுடைய பையனை நீ எக்காலத்திலையும் பிரியவே கூடாது. உன் பக்கத்திலேயே இருக்கணும் அதாவது அவன் கூட தான் உன்னுடைய வாழ்நாள் முழுவதும் வாழனும். இது உனக்கு சம்மதம் தானே?" என அவர் சொல்லி நிறுத்த அவனால் அடுத்து பேச முடியாமல் திணறி போனாள்.

"சார் நீங்க சொல்றது ஏத்துக்க கூடிய ஒன்னு தான். ஆனா அவர் கட்டின தாலி கழுத்துல இருக்கிற வரைக்கும் நான் அவருடைய பொண்டாட்டி. சோ எல்லாத்தையும் வச்சு பார்க்கும் போது நீங்க சொன்னது ஒரு வகையில ஏத்துக்கக் கூடிய ஒண்ணா தான் இருக்கு. ஆனாலும் இது நடைமுறைக்கு சாத்தியப்படாதே சார். அவருடைய மனசுல வேறொரு பொண்ணு இருக்காங்க. அது மட்டும் இல்லாம அவளுக்கும் இவருக்கும் தான் கல்யாணம் ஆக வேண்டியது நடுவுல அவருடைய ஜாதகத்தின் காரணமா என்னைய கல்யாணம் பண்ணிக்கிட்டாரு. சோ நான் இந்த ஒரு வருஷம் மட்டும் தானே அவர் கூட இருக்க முடியும். நானா நினைச்சு அவர் கூட இருக்கணும் வாழனும்னு நினைச்சாலுமே அது என்னால முடியாது. நான் காதலிச்சேன்தான் இல்லன்னு சொல்லல. உங்க மகன் சொன்னது போல பாசிங் க்லவ்ஸ் மாதிரி வச்சுக்கலாம். அவருக்கு வேணா அவருடைய லைஃப்ல வந்த நான் ஒரு சாதாரண பாசிங் க்லவ்சா இருக்கலாம். ஆனா எனக்கு அப்படி இல்ல" அதற்கு மேல் அவரிடம் விளக்கம் சொல்ல முடியாமல் கண்களில் துடித்துக் கொண்டிருக்கும் மீணாய் தத்தளித்துக் கொண்டிருந்தாள் சுடரிகா.

அவளின் தவிப்பும், அவளின் காதலும் புரிந்தது கெய்யானத்துக்கு. அதனால் தானே சத்தியம் வாங்கினார். ஆனால் சத்தியத்திற்கான பதில் இப்படியாக மாறி போனதும் அவர் முகத்தை மேலும் தொங்க போட்டுக் கொண்டார் மகனுடைய வாழ்க்கை இப்படியே ஆகி விடுமோ என பயந்து போய் கொண்டிருந்தவருக்கு நல்ல அருமையான ஒரு பெண் தன் மகனுக்கு கிடைத்தது அவரின் மனதிற்கு பரிபூரண திருப்தியை கொடுத்தது.

அது மட்டுமல்லாது சுடரிகாவின் தோழியின் மூலமாக இவன் ஏற்கனவே தன் மகனை தெரியும் என்றும் இதற்கு முன்னால் அவள் ஒருதலையாக காதலித்துக் கொண்டிருக்கிறாள் என்றும் நன்றாகவே தெரிந்தும் விட்டது.

ஒரு பெண்ணை பார்த்தோம் கவிழ்த்தோம் என்று தன்னுடைய மகனுக்கு கட்டி வைக்க முடியாதே அனாதை ஆசிரமத்தில் இருந்து வளர்ந்த பெண் தான் இருந்தாலும் அவளுடைய பண்பு குணநலன் இதெல்லாம் எப்படி இருக்கும் என்று கெய்யானந்த்தின் ஆராய்ச்சியின் முடிவில் ஒரு வழியாக நல்ல பெண் என்ற சர்டிபிகேட் அவளுக்கு கிடைத்துவிட இதைவிட தெரிவதற்கு பெரிதாக வேறு என்ன சர்டிபிகேட் அவருக்கு கிடைத்துவிடும்.

"உக்ரனுக்கு எது உண்மை எது பொய்னு தெரியல. உண்மையான அன்பை தேடி போகாம பொய்யான அன்பை தேடி போறான். அவன் காதலிக்கிற பொண்ணு மேல எனக்கு நல்லதொரு அபிப்பிராயம் இல்லமா. அதனாலதான் நான் உன்கிட்டயும் சொன்னேன்." மேலும் அவர் பேச வருவதற்குள் அதை தடுக்கும் விதமாக பேசினாள் சுடரிகா.

"சாரி சார் இடையிலே உங்க பேச்சை தடுத்து நிறுத்துறேன்னு என் மேல தப்பா எதுவும் எடுத்துக்க வேண்டாம். சார் நான் இப்பவும் எப்பவும் சொல்ற ஒரே விஷயம் இது ஒன்று மட்டும்தான். இந்த ஒரு வருஷ காலம் மட்டும்தான் நான் அவரோட இருக்க போறேன். மேடம பார்த்தீங்களா? எப்படி பேசுறாங்கன்னு அப்படி இருந்துமே எப்படி சார் வேணாம் சார் தேவை இல்லாத ஆசைகளை உங்க மனசுக்குள்ள வகுத்துக் கொள்ளாதீங்க, எனக்கும் அப்படி எந்த ஆசையும் கிடையாது. நான் முன்னாடி வீட்டுக்கு போறேன். சார் நீங்க வேணும்னா கொஞ்ச நேரம் இருந்துட்டு வரீங்களா?" என அவள் கேட்டதும்,

"இல்லமா வேணாம் நம்ம உடனே வீட்டுக்கு போகலாம்" என சொன்னவர் வெளியே வந்து காரின் கதவை திறந்து உள்ளே செல்லும் போது மேலும் அவளை தீர்க்கமாக பார்த்து,

"உன் முடிவிலிருந்து நீ பின்வாங்கறதா இல்லையா?" என்றார். சற்றே ஏக்கமான குரலில்,

"சார் நான் பின்வாங்கிறது ஒரு பிரச்சினையே இல்ல. ஆனா என்னால அது முடியாதே அவருடைய மனசுல வேறொரு பெண்ணும் அவங்க அம்மா என்ன சொன்னாலும் அது கேட்டு நடக்கிற குணமும் கொண்ட இவரிடம் நான் என்ன சார் பெருசா எதிர்பார்க்க முடியும்? அது மட்டும் இல்லாம என் காதல் அப்படியே மண்ணுக்குள்ள புதைஞ்சு போனதாவே இருக்கட்டும் சார். என்னைக்கும் அது அவருக்கு தெரியவும் வேண்டாம். நான் காதலிச்ச இந்த காதலுக்கு ஒரு சின்ன பரிசா அவரோட வாழ்ற இந்த ஒரு வருஷம் காலம் ஒரு பொக்கிஷமான நினைவா இருந்துட்டு போட்டுமே. இப்படியே விட்டுடுங்க நான் இப்படியே இருந்துட்டு போயிடுறேன் ப்ளீஸ்... எதுவும் பேசி தேவையில்லாம என் மனசுலையும் ஆசை விதைகளை விதைச்சிடாதீங்க சார், நிறைய ஆசைகளும் கனவுகளோடையும் உங்க மகனுடைய ஆபீஸ் குள்ள காலடி எடுத்து வச்ச அதுக்கு அப்புறமா தான் அவருடைய குணநலன் எல்லாத்தையும் புரிஞ்சுகிட்ட. இதுக்கு மேலயும் என்னால முடியாது சார் சாரி என்ன மன்னிச்சிடுங்க." மீண்டும் ஒரு வசனமாக பேசி முடித்தவளின் பின்னால் மேற்கொண்டு ஏதேனும் பேச அவருக்கு மனம் வருமா? கோவில் கோபுரத்தின் கலசத்தை பார்த்து பெரிய கும்பிடு ஒன்று போட்டுவிட்டு காருக்குள் ஏறி வீட்டை அடைந்தனர் இருவரும்.

*******

உறக்கம் வராமல் தத்தளித்துக் கொண்டிருந்தான் உக்ரானந்த் புரண்டு புரண்டு படுத்தாலும் உறக்கம் வருவேனா என்று அவனிடம் தம்பட்டம் அடித்துக் கொண்டிருந்தது. எப்பொழுதும் படுத்ததும் அரை மணி நேரத்திலேயே கண்ணை மூடி தூங்குபவனுக்கு இன்று ஏனோ உறக்கம் வரவில்லை.

இன்றைக்கு அலுவலகத்தில் இரண்டு பேர் பேசிக் கொண்டிருந்தது மட்டுமே அவன் காதுகளை குடைந்து கொண்டே இருந்தது. அதிலிருந்து மீள முடியாததனால் மட்டுமே அவனுடைய உறக்கம் வரவே இல்லை.

தனக்கு கீழே பெட்சீட்டை விரித்து தலையணையை போட்டு படுத்துக் கொண்டிருக்கும் மனைவியை பார்த்தான். அவள் ஒரு பக்கமாக ஒருகழித்து அவனுக்கு முதுகு காட்டு படுத்துக் கொண்டிருந்த அழகு வதன சிலையை பார்த்தபடி இருந்தவனுக்கு ஏனோ மனம் குறுகுறுக்கத்தான் செய்தது. ஆனாலும் மனதில் வரும் இந்த உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொள்ள முடியாத அளவுக்கு ஒன்னும் அவன் மனக்கட்டுப்பாடு இல்லாதவன் ஒன்றும் இல்லை. பார்த்தான் ரசித்தான் ஆனாலும் கோபம் உள்ளுக்குள் எட்டி பார்த்தது.

'அவனுங்க அப்படி பேசிட்டு போறாங்க ஆனாலும் கொஞ்சம் கூட எதுத்து ஒரு வார்த்தை கூட பேசாம அவ பாட்டுக்கு போறா. என்ன பொண்ணு இவ?

யார் அந்த அவனுங்க அப்படி என்னதான் பேசினார்கள்.

அசுரன் தொடர்வான்...
 

Author: shakthinadhi
Article Title: அசுரன் 10
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top