- Messages
- 300
- Reaction score
- 215
- Points
- 63
அத்தியாயம் - 75
கூடி இருந்த குடும்பத்தினர் முகம் அனைத்தும் அழுது அழுது வீங்கிய நிலையில், கண்கள் எல்லாம் பூத்து ஆறுதல் சொல்லிக்கொள்ளும் கட்டத்தை எல்லாம் தாண்டி விரக்தியின் விளிம்பில் துக்கம் தாலாது இருந்தனர் என்றால், ஸ்வாதியை பற்றி சொல்லவே வேண்டாம்.
மசக்கையாக இருந்தவள் அழுது அழுது மயக்கம் போட்டு விழுந்து, அவளை ஒரு வார்டில் வைத்து வைத்தியம் பார்க்க வேண்டிய நிலை வந்து விட்டது.
ஆத்வியின் நிலையோ உயிர் இருந்தும் வெறும் கூடாக ஜடமே தோற்கும் அளவிற்கு, மிகவும் மோசமான நிலையில் வெறும் தரையில் சுவற்றில் சாய்ந்து அமர்ந்திருந்தவனின் மூடிய இமையில் இருந்து, வழியும் கண்ணீர் நிற்கவே இல்லை.
இனி அவள் இல்லை என்ற ஒன்றை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லையே, எப்படி காலம் முழுக்க அவள் இல்லாமல் வாழ்வது!
"இல்லஆஆ.. அப்படி ஒரு வாழ்க்கையை என்னால கனவுல கூட நினைச்சி பார்க்க முடியலையே..
கவிஇ.. என்ன தவிக்க விட்டியே டி.. ஐயோ இதெல்லாம் கனவா இருக்கக் கூடாதா.. என்னால முடியல கவிஇ.. நீ இல்லாம இருக்க முடியல டி..
நம்ம பாப்பா.. பாப்பா.. என்மேல தான் டி தப்பு, நான் கொஞ்சம் விட்டுக் கொடுத்து போயிருந்தாலும் இந்நேரம் நீங்க ரெண்டு பேரும் நல்லா இருந்திருப்பீங்களே.. எல்லாம் என்னால, எனக்கு நீ வேணும் கவி.. கண்டிப்பா வேணும்..
அப்படி நீ மட்டும் வரல, நீ எங்கிருந்தாலும் தேடி வந்து கொன்னுடுவேன் டி உன்ன, என்கையாலே கொல்லுவேன்.. ப்ளீஸ் வந்துடு கண்ணம்மா அழுகை வருது டி, நீ இல்லாம மூச்சி முட்டுது.. செத்துடுவேன் டி நான்...
என் பிள்ளைய என்கிட்ட கொடு கவிஇஇ, அதென்ன என் புள்ளைய என்கண்ணுல காட்டாம அவனையும் நீயே வச்சிருக்க.. என்புள்ள எனக்கு வேணும் டி, ஒழுங்கா உனன் கையாள அவனை என்கிட்ட நீ கொடுக்கணும்.. கொடுப்பியா டி.."
என்னவள் என்னுடையவள் எனக்கானவள் மீண்டும் எனக்கே எனக்காக திரும்பவும் வருவாளா?
தனக்கு தானே ஏதேதோ புலம்பிய ஆத்வி, "கவிஇஇ.. இருக்கியா டி.. என்கூடவே இருக்கியா.. இதெல்லாம் கனவு தானே நல்லா தானே இருக்க பேபிஇ.." பரிதாபத்தின் உச்சத்தில் பிதற்றிக்கொண்டு தரையில் காலைக் குறுக்கி படுத்துக் கிடந்தான்.
"பக்கத்தில் நீயும் இல்லை..
பார்வையில் ஈரம் இல்லை..
சொந்தத்தில் பாஷை இல்லை..
சுவாசிக்க ஆசை இல்லை..
கண்டு வந்து சொல்வதற்கு,
காற்றுக்கு ஞானம் இல்லை..
நீலத்தை பிரித்துவிட்டால்,
வானத்தில் ஏதுமில்லை..
தள்ளி தள்ளி நீ இருந்தால்,
சொல்லிக்கொள்ள வாழ்க்கை இல்லை..
வண்ணம் கொண்ட வெண்ணிலவே..
வானம் விட்டு வாராயோ..
வண்ணம் கொண்ட வெண்ணிலவே.."
"அருகில் உள்ள போதெல்லாம் அலட்சியம் செய்து பெருந்தவறு செய்து விட்டேனே.. என் ஆசைக்கு முக்கியத்துவம் கொடுத்து என் காதல் கண்மணியின் மனதை புரிந்துக் கொள்ளாமல், அவளை காயப் படுத்தி கையில் கிடைத்த பொக்கிஷத்தை மீண்டும் இழந்து விட்டேனே.. என்னவள் இல்லாத வாழ்க்கையை தான் மட்டும் தனியாக வாழ்வதா? இதற்கு பிணமாகி விடுவேன்.."
"நங்கை உந்தன் கூந்தலுக்கு,
நட்ச்சத்திர பூ பறித்தேன்..
நங்கை வந்து சேரவில்லை,
நட்சத்திரம் வாடுதடி..
கன்னி உன்னை பார்த்திருப்பேன்,
கால் கடுக்க காத்திருப்பேன்..
ஜீவன் வந்து சேரும்வரை,
தேகம் போல் நான் கிடப்பேன்..
தேவி வந்து சேர்ந்துவிட்டால்,
ஆவி கொண்டு நான் நடப்பேன்.."
மொத்த குடும்பமும் சோகத்தில் மூழ்கி இருந்த சமையம் மருத்துவர் வருவதை கண்டு, அனைவரும் பதட்டமும் கவலையுமாக பதைபதைப்போடு அவரையே பார்த்திருக்க, ஆண்கள் கூட மிகவும் உடைந்து போய் தான் இருந்தனர்.
"சாரி mr. ஆதி, நாங்க எங்களால முடிஞ்ச அளவுக்கு எவ்வளவோ முயற்சி பண்ணி பாத்துட்டோம்.." என்றவர் அனைவரின் சோக முகம் கண்டு, "நர்ஸ்.." என தனக்கு பின்னால் திரும்பி அழைக்கவும், ஒரு தாதி தனது கையில் துணியில் சுருட்டி அசைவின்றி வைத்திருந்த பச்சிளம் ஆண் குழந்தையை நீட்ட, கரம் நடுங்க குழந்தையை கையில் வாங்கிய மித்ரா, அதன் பிஞ்சி கை எடுத்து முத்தமிட்டவளுக்கு அழுகை ஓயவில்லை.
அனைவரின் நெஞ்சும் பதறி மூச்சி விட மறந்து நின்ற சமையம், அதுவரை எந்த ஒரு அசைவுமின்றி கண்ணீர் விட்டு படுத்திருந்த ஆத்வி, சட்டென எழுந்து பாய்ந்து வந்து அன்னையின் கையில் இருந்த அந்த பிஞ்சி முகத்தை கண்டு இதழ் கடித்து கண்ணீரை கட்டுக்குள்க் கொண்டு வந்தவன்,
"உள்ளே என் வைஃப்.." என்றவன் பார்வை ஆப்ரேஷன் தியேட்டர் கதவை வெறித்தது.
"சார் அவங்க.." என்று அவர் இழுக்கும் போதே ஆத்வியின் இதயத்தை சுளீர் என்று ஏதோ குத்தி உடல் நடுங்கி விட்டது.
"டாக்டர் எதுவா இருந்தாலும் கொஞ்சம் தெளிவா சொல்லுங்க, எங்க பொண்ணு இப்ப எப்டி இருக்கா.." ஆதி தான் ஆத்திரம் தாலாமல் பெருங்குரல் எடுத்து உரக்கக் கத்தியது.
"அவங்க இன்னும் அபாயக்கட்டத்தை விட்டு தாண்டல, குழந்தையவே ரொம்ப கஷ்டப்பட்டு போராடி தான் ஆப்ரேசன் செஞ்சி வெளிய எடுத்தோம்.." என்றார் மருத்துவர்.
மித்ராவின் கையில் கண்ணை திறவாத சின்னஞ்சிட்டு நன்றாக உறங்கிக்கொண்டிருப்பதை அனைவரும் கண்டு, குழந்தை நல்லபடியாக பிறந்த மகிழ்ச்சியைக் கூட கொண்டாட முடியாத நிலையில், 'இந்த குழந்தைக்காகவாது கவி உயிர் பிழைத்து வந்தால் போதும்' என்ற நிலையில் கண்ணீர் விட்டு கரைந்தனர்.
மருத்துவர் சொன்னதை கேட்டு ஜீவன் துடித்துப் போன ஆத்வியோ, அடுத்த நொடியே யார் சொல்லியும் கேளாமல் தன்னவளின் தரிசனம் காண, icu வார்டுக்குள் நுழைந்து இருந்தான்.
வீட்டில் ஆத்வி பேசியதை எல்லாம் கேட்டு மனமுடைந்து போன கவி, அதற்கு மேலும் அங்கு இருக்க முடியாமல் அழுகையோடு ஓடியவளுக்கு படிகளில் அவசரமாக இறங்கும் போது அடிவயிறு சுள்லென்று குத்தவும், ஹாக்க்.. சட்டென வயிற்றை பிடித்துக் கொண்டு நிற்க முயற்சி செய்ய நினைத்தவளின் கால்கள் சதி செய்து, நுனி படியில் சறுக்கிப் பிரட்டி விட்டது.
ஆஆ.. என அலறி படியில் உருண்டு விழுந்தவளுக்கு வயிற்றில் பலமாக அடிப்பட்டு, பணிக்குடம் உடைந்து விட்ட நிலையில் ரத்தம் பீச்சி அடிக்க, தலையிலும் பலமாக அடிப்பட்டு கத்த கூட திராணியற்று மூச்சிக்கு போராடி ரத்தவெல்லத்தில் கால்கள் துடிக்க கிடந்தவளை, அழுது கொண்டிருந்த குழந்தையை சமாதானம் செய்தபடி ஹாலில் அமர்ந்து பால் கொடுக்கலாம் என்று வந்த ஆரு கண்டு, கத்திக் கூச்சலிட்ட பின் தான், குடும்பமே வந்து அவளை மடியில் அள்ளிப் போட்டு கண்ணீர் விட்டு கதறியது.
கால்கள் துடிப்பது நிறுத்தி நிலைக்குத்திய பார்வையை கணவனிடம் நிறுத்தி விட்டு, மூச்சடங்கி தலை தொங்கிப் போனவளை கண்டு ஆத்வியின் நிலை என்னவாகி இருக்கும்!
ஆணவனின் உயிர்கள் அல்லவா வெறும் கூடாக அசைவின்றி கிடப்பது. அனைவருமே கவி இறந்து விட்டாள் என்றே நினைத்து நெஞ்சில் அடித்துக் கொண்டு கதறி அழ,
"கவிஇஇ.." என பெருங்குரலெடுத்து தன்னவளை நெஞ்சில் போட்டுக் கொண்டு, எச்சில் ஒழுக அழுத ஆத்வியின் பரிதாப நிலையைக் கண்டு மொத்த குடும்பமும் கதறி அழுத சமையம், மனைவியின் நெஞ்சில் தலைவைத்து குலுங்கி அழுத்தவன் அழுகை சட்டென மட்டுப்பட்டது.
சிறிதாக துடித்த அந்த இதய ஓசையை கேட்டு ஒரு நொடி அவன் முகம் பிரகாசித்து, நொடியும் தாமதிக்காமல் அவளை கையில் அள்ளிக் கொண்டு ஓடி வந்திருந்தான் மருத்துவமனைக்கு.
இங்கு வந்தால், அவளை பரிசோதித்த மருத்துவர், "வயிற்றில் பலமாக அடிப்பட்டு இருப்பதால், தாய் சேய் இரண்டுமே பிழைப்பது கஷ்டம், முடிந்த வரை முயற்சி செய்கிறோம்.. எதற்கும் மனதை திடப்படுத்திக் கொண்டு தயாராக இருங்கள்" என்று கையை விரித்து விட்ட நிலையில், மொத்தமாக உடைந்து போன ஆத்விக்கு, தனது பிஞ்சி மொட்டின் முகத்தை கண்டபின் பெற்ற தெளிவும், மீண்டும் மருத்துவர் சொன்ன செய்தியில் காணாமல் போனதே!
ஒரு குடும்பத்தையே அவளுக்காக கதற விட்டு, கணவனை துடிக்க விட்டு சுவாசக்குழாயின் மூலம் கண்மூடி படுத்திருந்தவளின் அருகில் உடலைக் குறுக்கி குழந்தையாக படுத்துக் கொண்ட ஆத்வி, மென்மையாக அவளது வாடிய கன்னம் வருடி,
"பேபி.. ப்ளீஸ் திரும்ப வந்திடு டி, இந்த ஆறுமணி நேரமே நீ இல்லாம செத்து போயிட்டேன் பேபிஇ.. நெஞ்செல்லாம் வலிக்குது என்ன தவிக்க விட்றாதடி, நீ இல்லாம என்னால மூச்சி விட கூட முடியல, பாரு என் இதயம் கூட விட்டு விட்டு துடிக்குது, உன்ன இப்டி பாக்க பாக்க பயமா இருக்கு பேபிஇ.. இதயம் வீங்கி சிதறி வெடிக்கிற மாதிரி அதிகமா வலிக்குது..
இன்னும் கொஞ்ச நேரம் நீ கண் விழிக்காம இருந்தாலும் உனக்கு முன்னாடி நான் மேல போயி சேந்துடுவேன்.. அப்புறம் ஏன் டா என்னையும் என் பிள்ளையும் அனாதையா ஆக்கிட்டு போனேன்னு நீதான் உக்காந்து கண்ணீர் வடிக்கனும்..
ஒழுங்கா கண்ண தொற டி, இனிமே நான் ரேஸ் பக்கம் தலை வச்சிக் கூட படுக்க மாட்டேன் உனக்காக.. உன்மேல உள்ள காதலால மட்டும் தான் டி, என் ஆசைய மொத்தமா விட்டுக் கொடுக்குறேன்.. இப்போ புரியிது பேபி உன் கஷ்டம், நீயும் இப்டி தானே எனக்கு ஒன்னும் ஆகிடக் கூடாதுனு தனியா உக்காந்து துடிச்சி இருப்ப..
இப்ப நானும் உன் இடத்துல ஆறுதல் சொல்லக் கூட ஆளில்லாம தனியா தவிக்கிறேன் டி, ப்ளீஸ் என்ன ஏம்மாத்திட்டு மட்டும் போகலாம்னு நினைக்காத பேபிஇ.. நீ தனியா அம்மா அப்பா இல்லாம வளந்த அதே கஷ்டத்தை என் பிள்ளைக்கும் கொடுக்க நினைக்காதே, அய்யோஓ.... வெறி ஏறுது என்ன சோதிக்காம கண்ணத் தொற டி.. நீ வந்து உன் கையாள குழந்தைய என்கிட்ட கொடுக்காம, நம்ம குழந்தை மேல என் மூச்சிக்காத்துக் கூட படாது நியாபகம் வச்சிக்கோ.."
அழுகையும் கோவமும் இயலாமையும் போட்டி போட்டு கண்ணீர் விட்டு அழுத அழுகையில் கடவுளும் கண் கலங்கி இருப்பான். அவன் மனைவி அவனுக்காக உருகி கலங்க மாட்டாளா என்ன? தன்னவனை மரண பீதியில் தவிக்க விட்டு எமனை எதிர்த்து கண் விழித்தாள் கண்ணீரோடு.
வார்த்தைகளின்றி மகிழ்ச்சியில் கண்ணீர் முட்டியது அவனுக்கு. அவளுக்கும் அதேநிலை தான். கோவத்தில் விட்ட வார்த்தைகளை பிடித்துக் கொண்டு வீம்பு பிடிப்பதில் என்ன பயன் உள்ளது! கோவம் இருக்கும் இடத்தில் தான் குணம் இருக்கும் காதலும் இருக்கும்.
ஆழமான அன்பான காதல், தான் என்ற கர்வத்தை தோற்கடிக்கும். போட்டி என்று வந்து விட்டால் யாருக்கும் விட்டுக் கொடுக்காமல் வெறியாக வெற்றி பெருபவன், இப்போது மனைவியிடம் தெரிந்தே தோற்றுப் போனான் மகிழ்ச்சியாக மனநிறைவாக.
கள்வனின் கர்வமும் அவளே! காதலும் அவளே! புயலின் மனதை வருடிய அழகிய தென்றல் பெண்.
இறுதி அத்தியாயம் உள்ளது.

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 75
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.