- Messages
- 300
- Reaction score
- 215
- Points
- 63
அத்தியாயம் - 73
அனைவரும் கோவிலுக்கு புறப்பட தயாராகி, பெரிய கார் ஒன்றில் குடும்பமாக பயணம் மேற்கொண்ட சமையம் அது.
பாதி தூரம் சென்றாயிற்று திடீரென ஆருக்கு வயிற்றைப் பிறட்டிக் கொண்டு வரவும், வறண்ட செம்மண் பகுதியில் சென்று கொண்டு இருந்த காரை நிறுத்திய அஜய், அவளை கைதாங்கலாக அழைத்து செல்வதை தொடர்ந்து, மித்ரா ஸ்வாதி தன்யா ஆதி விக்ரம் யாதவ் என்று அனைவரும் இறங்கி சென்று விட்டனர்.
ஆத்வியோ தன் போனில் தெரிந்த மனைவியின் படத்தை வருடியபடி அமர்ந்திருக்க, காரில் பெருத்த அமைதி நிலவவும், டிக் டிக் என்ற சத்தம் மிக மிக மெல்லியதாக கேட்டதில், கண்கள் சுருக்கி கையில் கட்டி இருந்த கடிகாரத்தை யோசனையாக கண்ட ஆத்வி, காரை சுற்றிலும் பார்த்தவன் மனதில் ஏதோ ஒன்று தவறாக தோன்றிட,
தனக்கு அருகில் உள்ள பூக்கூடையில் இருந்து அந்த சத்தம் வருவதை கண்டவனது இதயமும், திக் திக் என்று அடித்துக் கொண்டது.
காருக்கு பத்தடி தூரத்தில் இருந்த சொந்தங்களையும் பூக்கூடையையும் மாறி மாறி பீதியோடு கண்டவன் உள்ளமோ பதைபதைத்துப் போக, உடல் வியர்த்து கரம் நடுங்க அந்த கூடையில் கை விட்டவனுக்கு நன்றாக புரிந்துப் போனது உள்ளிருப்பது பாம் என்று.
அலுங்காமல் குலுங்காமல் பூக்களை தகர்த்தி பாமை கண்ட ஆத்வி, அதில் வேகமாக டைம் ஓடிக் கொண்டு இருப்பதை கண்டு அதிர்ந்து போனான்.
வெறும் மூன்றே நிமிடங்களில் பாம் வெடித்து சிதறப் போவதை உணர்ந்து, பின்சீட்டில் இருந்தவன் ஒரே தாவாக முன் சீட்டிற்கு தாவி, காற்றைக் கிழித்துக் கொண்டு புழுதி பறக்க புயல் வேகத்தில் அவன் காரை கிளப்பியதும், மொத்த குடும்பமும் அந்த சத்தத்தில் திரும்பிப் பார்த்து புரியாமல் விழித்தவர்களாக,
"ஆத்வி.. நில்லு.. ஆத்வி எங்கே போறே.." என பதற்றமாக கத்தியது எல்லாம் வீண் தான்.
அதற்குள் அவன் முழு வேகத்தில் அவர்கள் கண்ணை விட்டு மறைந்து போக, யாருமற்ற வறண்ட நிலத்திற்க்கு காரை ஓட்டி வந்து, வெறும் பத்தே நொடிகளே பாம் வெடிக்க எஞ்சி இருக்க, சர்ரென வழுக்கி சென்று 8..7..6..5..4..3..2.. என ஓடிய இறுதி ஷணத்தில், அவன் காரை விட்டு குதிக்கவும், டமால் என்ற பெரும் சத்தத்தோடு கார் வெடித்து சிதறியது.
ஜக ஜோதியாக எரிந்துக் கொண்டிருந்த காரை வெறித்த ஆத்விக்கு, கொஞ்சம் கவனக்குறைவாக விட்டு இருந்தாலும் இந்நேரம் தன்னையும் சேர்த்து, தன் குடும்பத்தின் சாம்பல் கூட எஞ்சி இருக்காதே என நினைத்து தலையை பிடித்துக் கொண்டவன், இதற்கு காரணமானவன் மீது அடக்க முடியாத கோவம் கொண்டு ஆஆஆ.. என இடி முழங்க கத்தி, வதம் செய்ய துடிக்கும் ருத்ரனாக புறப்பட்டு இருந்தான் தீபக்கை தேடி.
கிட்ட தட்ட கண்ணுகெட்டும் தூரம் வரை வறண்ட நிலப்பரப்புகளே இருக்க, மூன்று நான்கு கிலோமீட்டர்க்கு அப்பால் நடந்த விபத்தை பார்க்க முடியவில்லை என்றாலும், பலமான பாம் வெடித்த சத்தமும் கார் கொலுந்து விட்டு எரியும் புகையும், இங்கு நின்றிருந்த குடும்பத்தினருக்கு நன்றாக கேட்டு பார்க்க முடிந்தது.
அதில் நடக்கவிருந்த அசம்பாவிதம் என்னவென உணர்ந்துக் கொண்டவர்களும் நெஞ்சை பிடித்து அதிர்ந்து போக,
"ஐயோஓ.. என் பிள்ளைக்கு என்னாச்சின்னு ஒன்னும் தெரியலயே..." என்று அழுது துடித்த மனைவியை சமாளிப்பதா! அல்லது மகனுக்கு என்னானது என்று பதறுவதா!
ஆத்வியின் கவலையிலே எந்நேரமும் இருப்பதாலோ என்னவோ, பாம் வெடித்த அதிர்ச்சியில் பிரஷர் கூடி பார்க்கும் இடமெங்கும் இரண்டு இரண்டாக தெரிய, தலை சுற்றி மயக்கம் போட்ட ஆதியை கண்டு மொத்த குடும்பமும் அலறி துடித்தது.
"என்னங்கஆஆ..." என்ற மித்ராவின் குரலே பரிதாபமாக ஒளித்து,
"பெரியப்பாஆ.." நொடியும் தாமதிக்காமல் ஆதியை கையில் தூக்கிய யாதவ் வேகமாக ஓட, அவன் பின்னே மொத்த குடும்பமும் ஓடியது.
******
"என்னடா இந்நேரம் என் எதிரியும், அவன் குடும்பமும் தீயில குளிச்சி கருகி பரலோகம் போயி சேந்து இருப்பாங்கல்ல.."
"அதெல்லாம் ஜக ஜோதியா ஜோலி முடிஞ்சிருக்கும் தல.. பவர்ஃபுல்லான டைம்பாம் அது, அது வெடிச்சி சிதறினா எலும்பு கூட தேறுறது கஷ்டம்.."
"ம்ம்.. ரொம்ப சந்தோசம், நானும் முதல்ல அந்த சுண்டக்காய் பயல போட்டுட்டு, பிறகு அவன் குடும்பத்தை போடலாம்னு பாத்தேன், ஆனா அவன் நான் நெனச்ச மாதிரி சுண்டக்காய் பய கிடையாதுனு ஒவ்வொரு முறையும் நிரூபிச்சி, என் கால இழக்க வச்சி என்ன முண்டமா அலைய வச்சிட்டான்..
இப்போ அவனும் அவன் குடும்பமும் மேல போகட்டும், பின்னாடியே அவன் செவிட்டுப் பொண்டாட்டிய கண்டுபிடிச்சி அவளையும் மேல அனுப்பி ஜோடி சேத்து வைப்போம்.. என்ன நான் சொல்றது.." காலரை கெத்தாக தூக்கி விட்டு அடியாளிடம் இருமாப்பாக பேசிக் கொண்டிருந்த தீபக், வீல் சேரோடு பறந்து சென்று கவுந்தடித்து விழுந்தான், ஆத்வி அவன் நெஞ்சில் எட்டி விட்ட உதையில்.
அதிர்ச்சியில் அங்கிருந்த அனைவரும் ஆத்வியின் புறம் திரும்ப, விழுந்த வேகத்தில் பின் மண்டை தரையில் பட்ட வலியோடு நிமிர்ந்து பார்த்த தீபக்,
"டேய்ய்.. நீ இன்னும் சாகலையா டா பாடு.." ஆத்திரத்தில் பற்களை கடித்தவன், "ஒவ்வொரு முறைவும் என் திட்டத்துல இருந்து தப்பிச்சி எனக்கே தண்ணிக் காட்டுறேல்ல.." வெறி குறையாமல் அவன் கத்துவதை, கோவம் குறையாமல் வெறிகொண்ட சிறுத்தையாக அவனை கண்ட ஆத்வி,
"அடுத்தவனை அழிச்சி சந்தோசப்படுற உன்ன மாதிரி ஈத்தரையே உயிரோட இருக்கும் போது, யாருக்கும் தொல்லைக் கொடுக்காம நான் உண்டு என் வேலை உண்டுனு வாழுற நான் உயிரோட இருக்கக் கூடாதாடா பொறம்போக்கு..
ஒவ்வொரு முறையும் எனக்கு நீ தொல்லை கொடுத்த பொறுத்துக்கிட்டேன்.. பலமுறை என்னைக் கொல்லப் பாத்த அதுல இருந்தும் தப்பிச்சேனே தவிர, பதிலுக்கு உன்ன கொல்லனும்னு இதுவரைக்கும் நினைச்சது இல்ல..
இந்த காலை உடைச்சி விட்டும் திருந்தாம என் பொண்டாட்டிய வழி மறிச்சி, அவகிட்ட என்னென்னவோ சொல்லி பயம்புறுத்தி அனுப்பினப்போ கூட, ஏதோ பைத்தியம் முத்தி என்ன ஜெயிக்க முடியாத கோவத்த இப்டி தனிச்சிகிட்டேன்னு நினைச்சி அமைதியா இருந்தேன்..
ஆனா எப்போ என் குடும்பத்தையே வெடி வச்சி கொல்லப் பாத்தியோ, இதுக்கு மேல உன்ன உயிரோட விட்டு வைக்க நான் ஒன்னும் பைத்தியக்காரன் இல்ல டா.." ஆவேசமாக மொழிந்தவன் அவனை ஓங்கி மிதிக்கப் போக,
"டேய்ய்.. என்னங்கடா அவனை வசனம் பேச விட்டு அவன் வாயப் பாத்துட்டு இருக்கீங்க, அவனை பிடிச்சி கொல்லுங்க டா.." அப்போதும் அடங்காமல் தீபக் கத்தியதில், அங்கிருந்த அடியாட்கள் பலரும் படையெடுத்து தாக்க ஓடி வர்ற, இருந்த கோபத்தில் ஒவ்வொருவனையும் தாறுமாறாக பந்தாடி விட்டான் ஆத்வி.
கடைசியாக தீபக்கிடம் பார்வை செலுத்தி, வெறியாக அவனை நெருங்க, கொஞ்சம் கூட சாகப் போகிறோம் என்ற பயமோ பதட்டமோ எதுவுமின்றி, நேருக்கு நேராக ஆத்வியை கண்ட தீபக்,
"என்ன நீ ஈசியா கொன்னுடுவேன்னு எனக்கு நல்லா தெரியும் ஆத்வி, என்னதான் நீ என்ன கொன்னாலும் என்ன சுத்தி உள்ள ஆளுங்க உன்னையும், உன் குடும்பத்தையும் கருவருக்காம ஓயமாட்டாங்க.. உன் அப்பன் என் அப்பன கொன்னான், அதுல நூறு சதவிகிதம் நியாயமே இருந்திருந்தாலும், எனக்கும் என் அம்மாக்கும் அவன் பண்ணது முழுக்க முழுக்க அநியாயம் தான்..
நாங்க செத்தாலும், உங்கள பழி வாங்குற வெறி மட்டும் எப்பவும் அடங்காது டா.." கொஞ்சமும் திருந்தாத ஜென்மமாக தீபக் கத்துவதை கேட்ட பின்னும், அவனை உயிரோடு விட்டு சென்றால் அவன் ஆதியின் மகன் அல்லவே
வேட்டையாடும் சிங்கமாக உருவெடுத்த ஆத்வி, எப்படியும் இந்த நாய் திருந்தமாட்டான் பழி வாங்கவே திரும்ப திரும்ப வெவ்வேறு ரூபத்தில் படையெடுத்து வருவான் என்று நன்றாக உணர்ந்துக் கொண்டவன், தீபக் தன் குடும்பத்தை எப்படி அழிக்க நினைத்தானோ, அதே போன்று அவன் இருந்த குடவுனோடு சேர்த்து உயிரோடு கொளுத்தி விட்டு சென்று விட்டான்.
ஆத்வியை பார்த்தபின்பு தான் அனைவருக்கும் போன உயிர் திரும்ப வந்தது. எந்த நிலையிலும் கம்பீரம் குறையாமல் இருந்த ஆதியையே சற்று நேரத்தில் பயத்தை காட்டி படுக்கையில் கிடத்திவிட்டானே!
மகனை பார்த்த பிறகு தான் போன உயிர் திரும்பப் பெற்றது போல, "ஆத்விஇஇ.. வந்துட்டியா.." என இறுக்கமாக அணைத்துக் கொண்ட விதமே, தந்தையின் பயத்தை அப்பட்டமாக உணர்த்தியது.
"டாட்.. உங்களுக்கு ஒன்னும் இல்லையே.." ஆத்வியும் தவிப்பாக தந்தையை இறுக்கமாக கொள்ள, மௌனமாக தங்களின் பாசத்தை பரிமாறிக் கொண்டனர்.
தற்போது..
"உன் சொக்கா மவன் என் குடும்பத்தையே கொல்ல வருவான், நான் அவனை சும்மா விடணுமா டா.." புது வில்லனின் கழுத்தை பிடித்து ஆத்வி உரும,
"நீ என்ன சொன்னாலும் சரி, அநியாயமா என் அக்கா மகன கொன்ன உன்ன கொல்லாம விட மாட்டேன் டா.. 15 வருஷத்துக்கு முன்னாடி நீயும் இப்ப எஞ்சி இருக்க குடும்பமும் தனிதனியா வராம, அந்த ஒரே வேன்லே வந்திருந்தீங்கன்னா இந்நேரம் நான் வீசின வெடிகுண்டுல, நீங்க எல்லாருமே எரிஞ்சி நெருப்போட நெருப்பா கருகி இருந்திருப்பீங்க டா..
அப்டி நீங்க செத்து போயி இருந்திருந்தா இந்நேரம் என் அக்கா மவன் நல்லா இருந்திருப்பான்.." என்று அவன் சொல்லிய அணைத்தும் கேட்ட ஆத்விக்கு புது தகவலாக இருந்தாலும், தன் குடும்பத்தை கொன்று தன் மனைவியின் தற்போதைய நிலையும், விக்ரம் இத்தனை வருடங்களாக நடைபிணமாக வாழ்ந்த வாழ்க்கையும், குடும்பத்தை இழந்து அவன் தாய் மித்ரா ஒவ்வொரு முறையும் படும் கஷ்டங்களும் கண்முன் தோன்றி, ரத்தம் கொதித்துப் போனான் ஆத்வி.
அவன் கழுத்தில் லேசாக பிடித்து இருந்த பிடி மேலும் இறுக்கியவனின் கண்கள் சிவந்து அக்னியை கக்கி, நாடி நரம்பெல்லாம் அவனை கொல்லும் வெறியில் முறுக்கி நின்றது.
மூச்சிக்கு திண்டாடிப் போனவன் ஆத்வியின் கரத்தை எடுக்கப் போராடுவதை கண்ணில் க்ரூதம் மின்ன கண்டு ரசித்த ஆத்வியின் பின்னந்தலையில், பின்னிருந்து யாரோ கட்டையால் அடிக்கவும் பிடியை தளர்த்தி தலையை பிடித்துக் கொண்டு பின்னால் திரும்பிப் பார்க்க, ஹரிதாவின் தந்தை லிங்கம் கையில் கட்டையோடு பல அடியாட்களுடன் நின்று இருந்தனர் முரட்டுப் பீசாக.
"சாதாரண பொடிப்பய நீ, என் பொண்ண கட்டிகிறேன்னு சொல்லி ஊரக் கூட்டி எங்கள அவமானப் படுத்தி என் கையிலயும் சுட்டு, அவளையும் ஜெயிலுக்கு அனுப்பி வச்சிட்டியே டா..
உன்ன வச்சி நாங்க பணம் காசோட நல்லா வசதியா வாழலாம்னு பாத்தா, அதுல நீயும் உன் அப்பனும் தீய வச்சிட்டு, கேவலம் ஒரு செவிடிய கல்யாணம் பண்ணி, எங்கள அசிங்கப் படுத்திட்டு நீங்க மட்டும் சந்தோசமா வாழுறீங்களா.." நியாயமே இல்லாத ஒரு விஷயத்திற்காக அவர்கள் மீது தவறை வைத்துக் கொண்டு, தங்களை கொல்லத் துடிக்கும் இவர்கள் மீது இரக்கம் வருமா என்ன!
வெளிநாட்டில் இருக்கும் போது ஹரிதா ஆத்வியை பலமுறை பார்த்து இருக்கிறாள், அவள் காதலனோடு இருக்கும் போதே. அந்த நேரத்தில் அவன் அவளை மொத்தமாக ஏமாற்றி விட்டு சென்று விட, அதுவரை சும்மா பார்த்து ஆத்வியை சைட் அடித்துக் கொண்டிருந்த ஹரிதா, தீபக் கொடுத்த ஐடியாவால் அவனை பின் தொடர்ந்து வந்து, ஆத்வி தங்கி இருந்த ஹோட்டலில் புகுந்து அவன் உறங்கும் போது நெருக்கமாக படுத்து, பலவித கோணங்களில் புகைப்படம் எடுத்து வைத்துக் கொண்டு, கொஞ்ச நஞ்ச ஆட்டமா போட்டாள்.
ஏற்கனவே தன் குடும்பத்தை கொன்றவன் மீது கொலைகாண்டில் இருப்பவன், லிங்கத்தின் அர்த்தமற்ற பேச்சில் அதீத வெறி கூடி போனது.
"உழைச்சி சம்பாதிச்சி வாழ துப்பு இல்லாம, அடுத்தவனை ஏமாத்தி பிழைக்க நினைக்கிற அதுவும் பெத்த பொண்ண வச்சி.. உன்னோட கேவலமான அதே புத்தி தான் உப்பொண்ணுக்கும் இருக்கு, நீயெல்லாம் உயிரோட வாழ்ந்து யாருக்கு என்ன பலன்.."
ஆத்வியின் இடி முழங்கும் குரல் அவ்விடமெங்கும் எதிரொலிக்க, அதில் ஆத்திரம் கொண்ட லிங்கம், "டேய் விட்டா ரொம்ப ஓவரா பேசுவான், இவனை மொத்தமா முடிச்சி விடுங்க டா.." ஆட்களுக்கு கட்டளை இட, மொத்த ஆட்களும் ஒட்டுமொத்தமாக தாக்குதல் வேட்டையில் இறங்கி இருந்தனர்.
ஒற்றை ஆளாக அனைவரையும் சமாளிப்பது ஆத்விக்கு மிகவும் சிரமமாக இருந்தபின்னும், கோவம் அவன் சோர்வை மறைத்து சண்டையிட்டுக் கொண்டிருந்த சமையம், ஆத்வியின் இன்னொரு உயிராக அவனுக்க உறுதுணையாக வந்து நின்ற யாதவோ, களத்தில் இறங்கி சராமாறியாக அடித்து விலாசுவதை கண்டு, அந்த களேபரத்திலும் ஆத்வியின் இதழில் மென்னகை மலர்ந்தது.
ஆதியின் கவலை தோய்ந்த முகத்தை பார்க்க முடியாமல், யாதவ் என்னவென விசாரிக்க, ஆத்வியின் சிறுவயது ஆசை முதல், தன் பேச்சை கேளாமல் ரேஸில் கலந்துக் கொள்வது, எதிரிகள் இருப்பது, இப்போது கவியை தவிக்க விட்டு சென்றது என அனைத்தையும் கூறியதை கேட்ட யாதவ்க்கு, அனைத்தும் புது தகவலாக இருந்தபின்னும், அண்ணனுக்கு துணையாக தானும் உடன் செல்கிறேன் என்று தைரியம் வழங்கி விட்டு, ஆத்வியை பின்தொடர்ந்து வந்து விட்டான் யாதவ்.
"டேய் பலியாடுங்க தானா வந்து மாட்டிக்கிட்டானுங்க, இவனுங்க ரெண்டு பேத்தையும் சீக்கிரம் முடிங்க டா.." அடிக்கடி தலைவர்கள் உத்தரவு வழங்கிக் கொண்டே இருக்க,
அனைவரையும் தூசிப் போல் தட்டி தூக்கி விட்டு, லிங்கத்தை யாதவ் நெருங்க, புது வில்லனிடம் ஆத்வி நெருங்க என்று சிங்கம் புலியாக உருவெடுத்து வந்தவர்களை கண்டு பயத்தில் பின்னால் செல்ல, அண்ணன் தப்பி இருவரும் நக்கலாக பார்த்து,
"என்னங்கடா அடிக்கவே இல்ல அதுக்குள்ள இப்டி தொடை நடுங்கி போய்ட்டீங்க.." என்ற யாதவ் குப்பென சிரித்து,
"கோவமா இருக்கும் போது காமெடி பண்ணி சிரிக்க வைக்கிறீங்களே டா.." இடையில் கை வைத்து நக்கலடிவனை கண்டு சற்று நேரத்தில் தவறாக தப்புக் கணக்கு போட்ட லிங்கம், கையில் வைத்திருந்த கட்டையல் பாய்ந்து சென்று யாதவை அடிக்கப் போக,
சட்டென குனிந்தவன் லிங்கத்தின் பின்னால் சென்று அவன் முதுகில் ஒரு உதை விட்டதில், முதுகு உள்வாங்கி தள்ளாடி தரையில் விழுந்த லிங்கத்தை ஆசைதீர நாலு மிதி விட்டதில், உள்ளுறுப்புகள் எல்லாம் இடம் மாறி வெளியே வந்துவிட்டது.
"எவ்ளோ தைரியம் இருந்திருந்தா என் குடும்பத்தை கூண்டோட கொன்னுட்டு இத்தனை நாளா உயிரோட சுத்திட்டு இருந்திருப்ப.. இதுக்கு மேலையும் உயிரோட வாழ்றதுக்கு உனக்கு தகுதியே இல்ல டா.." ஆத்வியின் நெருப்பு விழிகள், தீபகின் மாமாவை சுட்டெரிக்க, தாவி அவன் கழுத்தை தன் புஜத்தால் இறுக பற்றி நசுக்கியதில்,
கால்கள் தரையில் பிரள நாக்கு வெளியே தள்ள துடித்துடித்தவனை க்ரூரமாக கண்ட ஆத்வி, உயிரை போக விடாமல் சட்டென விடவும், கழுத்தை பிடித்து இருமியபடி கிடந்தவனை பார்த்து விட்டு யாதவை பார்க்க, அவனும் ஆத்வியின் பார்வைக்காக காத்திருந்தவன் போல் கண்ணசைவோடு தலையாட்ட, தானும் தலையாட்டிய ஆத்வி, தன் பின்னால் இருந்து துப்பாக்கியை எடுக்க, யாதவும் எடுத்து, இருவருமே ஒருசேர கீழே கிடந்த இருவரையும் குறி வைத்தனர்.
"டேய்.. எங்கள கொன்னுட்டா மட்டும் உங்க குடும்பத்தை காப்பாத்திடலாம்னு நினைக்காதீங்க, என் அக்கா உங்கள எல்லாம் சும்மா விட மாட்டா டா.. பெண் சிங்கமா மாறி உங்கள துடிக்க துடிக்க கொல்லுவா.." தீபக் மாமா கத்தும் போதே, அவன் காலில் ஒரு குண்டு பாந்ததில் ஆஆ.. என காலை பிடித்துக் கொண்டு அலறித் துடிக்க, இந்த பக்கம் தப்பித்து ஓட போன லிங்கம் காலிலும் புல்லட் பாய்ந்தது.
அப்போதும் அடங்காமல் இருவரும் துள்ளி, "உங்கள சும்மா விட மாட்டேன் டா.. மறு ஜென்மம் எடுத்து வந்தாவது கொல்லுவேன் ஆஆ..ஊஊ.." என வீர வசனம் பேசியவர்கள் கை, தொடை, தோள் என்று மெது மெதுவாக அவர்கள் உடலில் புல்லட்டை இறக்கி, அவர்கள் துடிப்பதை கண்டு நிதானமாக ரசித்து, ஒரே நேரத்தில் தொடர்ந்து புல்லட்டை பாய்ச்சி இருவரது மூளையும் சிதறவிட்டனர்.
அந்நேரம் ரேஸ் வேறு நடந்துக் கொண்டிருக்க, இன்னும் 15 நிமிடங்களே எஞ்சிய நிலையில் சரிந்து கிடந்த பைக்கை நிமிர்த்தி உயிர்பித்த ஆத்வி, உடலில் ஆங்காங்கே அடிப்பட்டு ரத்தம் வழிவதை எல்லாம் சிறிதும் கண்டுக் கொள்ளாமல்,
"அண்ணே.. அதுக்குள்ள எங்கே கிளம்பிட்ட அடிபட்டு ரத்தம் வருது..ரேஸ அப்புறம் பாத்துக்கலாம்ண்ணே.." யாதவ் கத்த கத்த எதையும் காதில் வாங்காமல், பீஸ்ட்டாக மாறி புயல் வேகத்தில் சீறிப் பாய்ந்து போட்டியில் வெற்றி பெற்ற பின்தான், அவனுள் இருந்த ஆத்திரம் கோவம் எல்லாம் சற்று மட்டுப்பட்டதை போலிருந்தது.
தமயனின் பிடிவாதக் கோவத்தை கண்டு அவனிடம் அதற்கு மேலும் வாய் கொடுக்காமல், அமைதியாக அவன் பின்னே அமர்ந்திருந்த யாதவ்,
"எப்பா என்ன வேகமா போறான், பிளைட்க்கே டஃப் கொடுப்பான் போலயே.." மனதில் நினைத்து அவன் வயிற்றைக் கட்டிக் கொள்ள,
"டேய் நான் என்ன உன் பொண்டாட்டியா இப்டி கட்டிப்பிடிச்சிட்டு வர்ற, ஒழுங்கா தள்ளிப் போடா.." ஆத்வி எரிந்து விழ, மேலும் அவனை இறுக்கி அணைத்துக் கொண்டவன்,
"கட்டிப் பிடிக்க பொண்டாட்டியா இருந்தா மட்டும் போதாதுண்ணே, நமக்கு பிடிச்ச யாரா வேணுனாலும் இருக்கலாம்.. அதோட நீ போற ஸ்பீடுக்கு தள்ளிலாம் உக்கார முடியாது, இன்னும் வேணும்னா உன்ன கட்டிப் பிடிச்சிக்கிறேன் ஓகேவா.." என்று மேலும் அவனை இறுக்கிக் கொள்ள,
தம்பியின் பேச்சில் தன்னை மீறி சிரிப்பு வந்தாலும், "அடேய்.. மாங்கா.. அங்க கூசுது டா கைய எடு.." என்றவன் பைக்கை படுக்கப் போட்டு ஓட்ட,
"ஓஹோ அப்போ இதுதான் உனக்கு வீக்கான இடமா, மவனே இன்னைக்கு நீ மாட்ன டி.." என வில்லங்கமாக மனதில் நினைத்தவன்,
"சரிண்ணே.. சரிண்ணே.. அப்போ இடம் மாத்தி வச்சிக்கிறேன் இப்ப ஓகேவா.. இல்ல இப்டி வச்சா போதுமா.. அதுவும் இல்லனா இந்த பக்கம் வச்சிக்கிட்டா.." ஆத்வியின் இடையில் கிச்சிகிச்சி மூட்ட,
"டேய்.. பக்கிப்பயலே இப்ப மட்டும் நீ கைய கால வச்சிக்கிட்டு அமைதியா வரல, வண்டில இருந்து கீழ தள்ளி விட்டுடுவேன் டா.." கூச்சம் தாலாமல் பைக்கை தாறுமாறாக ஓட்டியபடி வளைத்து நெளிந்து போனது.
"முடியாது முடியாது எனக்கு கிரிப்புக்கு உன் இடுப்ப பிடிச்சே ஆகனும்.." என்றவனும் இதுதான் சான்ஸ் என்று மேலும் கிச்சிக்கிச்சி மூட்ட,
"உன்னையெல்லாம் வண்டில ஏத்தினேன் பாத்தியா என்ன சொல்லனும் டா.." அதிக கூச்சத்தில் சாலையை கவனிக்க முடியாமல், கீழே கிடந்த கல்லின் மீது பைக் ஏறி, வண்டியோடு சேர்ந்து அங்கிருந்த ஏரியில் கவிழ்ந்து விழுந்தும் இருவரும் அடங்கவில்லை.
என்னவோ இப்போது தான் இருவருமே சிறுவர்கள் போன்ற மனநிலையில், இருவரும் மாற்றி மாற்றி தங்களை கிச்சிகிச்சி மூட்டி, கோவமும் சிரிப்புமாக வந்து நின்ற இடமோ அன்னத்தின் வீடு தான்.
டெரர் வில்லி bgm அழுத்தமான ஹம்மிங்கோடு, அந்த பெரிய வீடு ஆடி ஆடி ஜூம் செய்து காட்சியளித்தது.
ஆண்களின் இருவரின் முகமும் கனியாமல் பார்வையாலே கேட்டை திறந்து, புழுதி பறக்க இருவரும் ஒருசேர இடது காலை எடுத்து வைத்து உள்ளே செல்ல, அடியாட்களுக்கு தான் பஞ்சம் இல்லாமல் போனது. மொத்த பேரையும் வரிசையாக பொளந்துக்கட்டியபடி வந்தவர்களை கண்டு, வில்லி சிம்பரன் வழிந்த புடவை முந்தானையை தூக்கி தோளில் போட்டபடி, மாசாக திரும்பியது கூட தனி அழகு தான்.
"அண்ணே இந்த பியூட்டிஃபுல் ஆண்டி தான் வில்லியா..?" வாய் பிளந்த யாதவ் மண்டையில் ஓங்கி ஒன்னு போட்ட ஆத்வி,
"ஏன் டா என்ன படுத்துற, போயும் போயும் ஆண்டியவா சைட் அடிப்ப.." நொந்து போனவனை முறைத்த யாதவ்,
"அண்ணே இந்த ஆண்டிய பாத்தா யாருக்கா இருந்தாலும் தன்னால சைட் அடிக்க தோணும்ண்ணே.. அங்கப்பாரு இவ்ளோ அழகான பியூட்டிய வில்லியாக்கி, என் ஹார்ட்ட ரெண்டா உடைச்சிட்டாங்கண்ணே.." நெஞ்சில் குத்தி தள்ளாடி பெர்ஃபார்மன்ஸ் செய்தவனை கண்டு தலையில் அடித்துக் கொண்டான் ஆத்வி.
இருவரையும் கூர்ந்து பார்த்த அன்னம் "டேய்.. அங்கே என்ன டா கிசுகிசுப்பு.." சொடகிட்டு எகத்தாலம் செய்ய, இருவரும் அவளை அசராமல் கண்டனர். அன்னத்தின் பின்னால் பெரிய சைசில் மாட்டியிருந்த ரோஹித் மற்றும் தீபக்கின் படங்களுக்கு மாலை போட்டு, ஊதுபத்தி ஏற்றி வைத்திருப்பதை பார்த்து முகம் சுளிப்பதை கண்டு ஆத்திரமுற்ற அன்னம்,
"என்ன டா நான் பாட்டுக்கு பேசிட்டு இருக்கேன், என்னவோ ரெண்டு பேரும் உங்களுகுள்ள பேசி சிரிச்சிகிறது என்ன, வாடகைக்கு வீடு பாக்க வந்தவங்க போல வீட்ட சுத்திப் பாக்குறது என்ன.. என்னங்கடா என்ன பாத்தா எப்டி தெரியிது உங்களுக்கு.." அன்னம் கத்த,
'ஐயோ ஆண்டி.. அதை பத்தி தான் எங்கண்ணன்கிட்ட சீரியஸா டிஸ்கஷன் செஞ்சிட்டு இருந்தேன், சும்மா சொல்லக் கூடாது இந்த வயசிலயும் நீங்க டக்கர் பிகரா இருக்கீங்க.." சுண்டு விரல் நகம் கடித்து வெட்கமாக கண்ணடித்து யாதவ் சொன்ன விதத்தில், ஆத்விக்கும் சிரிப்பு வந்து விட்டது.
யாதவை முறைத்த அன்னம், "டாய்.. எங்க வந்து நின்னு என்ன பேசிட்டு இருக்க, நான் யாருனு தெரியுமா.." ஆவேசமாக மீண்டும் கத்த,
"அச்சோ ஆண்டி, சீக்கிரம் உங்க டீடைல்ஸ் எல்லாத்தையும் ஒன்னு விடாம சொல்லுங்க, ஏன்னா கடைசி நேரத்துல தான் நீங்க வில்லினே நான் தெரிஞ்சிகிட்டேன்.. இல்லைனா முன்னாடியே உங்க டீடைல்ஸ் எல்லாம் தெரிஞ்சி வச்சிட்டு வந்துருப்பேன்.." சோகமாக சொன்னவனை பைத்தியம் பிடிக்காத குறையாக, அதீத கோபத்தில் தாடை இறுக பார்த்தாள் அன்னம்.
"டேய்..டேய்..ரொம்ப ஓவரா போற டா நீ.. உங்க குடும்பத்தை கொன்னும் உங்க திமிர் அடங்கலைல்ல.. என் புள்ளையையும் கொன்னுட்டு கொஞ்சம் கூட பயம் இல்லாம என் முன்னாடியே வந்து நிக்கிறீங்க, ஆமா நீ எப்டி உயிரோட வந்த.. இந்நேரம் என் தம்பி உன்ன போட்டு தள்ளிருப்பான்னுல்ல பாத்தேன்.." நக்கலாக மொழிந்தவள் கண்ணில் தான் எத்தனை பழி வெறி.
"சும்மா சும்மா நான் ஏன் உயிரோட இருக்கேன்னு பதில் சொல்லி வாய் வலிக்குது, வேணும்னா மேல சொல்லி இருப்பேன் படிச்சி தெரிஞ்சோங்க ஆண்டி.. அப்புறம் உங்க தம்பி இந்நேரம் பரலோகம் போயி, எண்ணெய் சட்டில வறுத்து எடுக்க லைன்ல நின்னுட்டு இருப்பான்.." அதே நக்கல் குறையாமல் ஆத்வி சொன்னதை கேட்டு, கண்கள் வெடித்து விடும் அளவுக்கு அதிர்ச்சியானது.
மூச்சி வாங்க அவனை முறைத்த அன்னம், சுவற்றில் மாட்டி இருந்த வாலை ஆவேசமாக எடுத்து, "என் காதலனை கொன்னு என் வாழ்க்கைய நாசம் பண்ணி, ஒரே பிள்ளையா பாசம் கொட்டி வளத்த என் புள்ளையும் கொன்னு, என் வாழ்க்கைய அர்த்தம் இல்லாம ஆக்கி, இப்ப என் தம்பியையும் கொன்னு என்ன தனிமரமா நிக்க வச்ச உங்கள கொல்லாம விடமாட்டேன் டா.."
வழிந்த முந்தானையை சரோஜாவாக தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டு ஆத்வியின் கழுத்தை குறி வைத்து ஓடி வர்ற, அருகில் இருந்த உருட்டுக் கட்டையை எடுத்த ஆத்வி, அவள் காலில் வீசவும் பொத்தென விழுந்தவளை கண்டு, "ஐயோ ஆண்டி..." என பதறி ஓடப் பார்த்த யாதவ் முதுகில் ஒன்று போட்டு, முறைத்த முறைப்பில் ஓரமாக ஒதுங்கி விட்டான்.
"உன் காதலனை நீ மட்டும் தான் உண்மையா நேசிச்சி இருந்திருக்க, ஆனா அவன் அப்டி இல்ல.. உன்ன ஒரு கீப்பா கூட இல்ல, ஜஸ்ட் ப்ராஸ்டிட்டுட்டா தான் டீல் பண்ணி இருக்கான்.. அப்டி இருந்துமே அவனுக்காக இப்டி ஆடுறியே, இன்னும் உன்ன அவன் உண்மையா விரும்பி கழுத்துல தாலி கட்டி, சகல மரியாதையோடு வச்சிருந்தா இன்னும் எப்டி எல்லாம் ஆடி இருப்பியோ..
அந்த கேடுகெட்டவனால தான் இன்னைக்கு நீ, உனக்கு கிடைக்க வேண்டிய நல்ல நல்ல வாழ்க்கையெல்லாம் இழந்து புத்தி மழுங்கி, உன் புள்ளையும் இழந்து இப்டி பழி வெறி பிடிச்ச மிருகமா உயிர் பலிக்கு அலைஞ்சிட்டு நிக்கிற..
இப்பவும் ஒன்னும் கெட்டு போகல ஒரு வார்த்தை ஒரே வார்த்தை மட்டும் சொல்லு, இனிமே இருக்க வாழ்க்கைய திருந்தி வாழுறேன்னு, உன்ன அப்டியே உயிரோட விட்டு போறேன்.."
கிளிபிள்ளைக்கு சொல்வது போல மிகவும் பொறுமையாக எடுத்துக் கூற, அதை எல்லாம் கேட்கும் நிலையில் தான் அன்னம் இல்லையே!
"டேய்.. நீ யாரு டா எனக்கு உயிர் பிச்சை போட.. நான் செத்தாலும் சரி என் வாழ்க்கைய அழிச்ச உன் குடும்பத்தை இன்னும் எப்டிலாம் பழி வாங்கலாம்னு தான் நினைப்பேனே தவிர, என்னைக்கும் உங்களுக்கு நல்லது நினைக்க மாட்டேன்.." என்ற திருந்தாத ஜென்மத்தை என்ன செய்வது.
"ஆண்டி ப்ளீஸ் எனக்காக திருந்தி வாழுறேன்னு ஒரு வார்த்தை சொல்லுங்க, இவ்ளோ யங் ஏஜ்லே நீங்க செத்து போறத என்னால பாக்க முடியாது ஆண்டி.." உடலைக் குலுக்கி கண்ணைக் கசக்கிய யாதவை கேவலமாக ஒரு லுக் விட்ட ஆத்வி,
"டேய்.. போதும் உன் ட்ராமாவ கொஞ்சம் ஸ்டாப் பண்ணு பாக்க சகிக்கல.. உன் ஆண்டி திருந்துற மாதிரி தெரியல போட்டுடவா என்ன.." என்றதும் நெஞ்சி வலி வராத குறை தான்.
"அண்ணே என்ன இருந்தாலும் அவங்க என் ரீசென்ட் க்ரஷ் ஆகிட்டாங்க, பாத்து பக்குவமா பண்ணுண்ணே.." இருவரும் தங்களுக்குள் பேசிக் கொண்டு இருக்கும் போதே துப்பாக்கியை இடுப்பில் இருந்து உருவிய அன்னம், ஆத்வியை குறிவைத்து சுடப் பார்க்க, ஏதார்த்தமாக இருவரும் திரும்பிய நொடி பாய்ந்து வந்த புல்லட் யாதவ் பக்கம் இடம் மாறி சென்றதை கண்டு, சட்டென அவனை பிடித்து தள்ளிய ஆத்வி தன் தோளில் குண்டை வாங்கிக் கொண்டான்.
"அண்ணாஆஆ.." என கத்திய யாதவ், "க்ரஷாவது மண்ணாவது, என்னதான் பாசத்தை கொட்டினாலும் பாம்பு என்றைக்குமே அதன் விஷத்தை தான் கக்கும் என நன்றாக உணர்ந்துக் கொண்டவன், ஆத்வியை சுட்ட ஆத்திரத்தில் தன் பிஸ்ட்டலை எடுத்து சரசரவென அன்னத்தின் மீது இறக்கி, அவன் ஆண்டியின் உயிருக்கு அவனே எமனாகிப் போனான்.
ரத்தப் போக்கு அதிகமாக இருக்கவே, பதறியடித்து ஆத்வியை மருத்துவமனை கூட்டி வந்த யாதவ், பாய்ந்த குண்டை பக்குவமாக எடுத்து கட்டிட்டு, ரத்தம் ஏற்றுவது என்று நான்கு நாட்கள் வரை மருத்துவரின் பரிந்துரைப்படி, ஆத்வியை அசைய விடாமல் உடன் இருந்து பார்த்துக் கொண்டான்.
தம்பியின் பாசத்தில் பூரித்துப் போனாலும் அதை வெளியே காட்டிக் கொண்டால் அவன் ஆத்வி இல்லையே! ஐந்தாம் நாள் எல்லாம் யார் பேச்சையும் கேளாமல் வீட்டுக்கு செல்லத் தயாராகி விட்டவனை கண்டு பெருமூச்சு விட்டு, அண்ணனோடு தானும் கிளம்பினான் யாதவ்.
வீட்டில் அவனுக்கு கவி வைத்திருக்கும் ஆப்பு தெரியாமல், மனைவியைக் காணப் போகும் மகிழ்ச்சியில் திளைத்திருந்தான் ஆத்வி.

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 73
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.