New member
- Messages
- 16
- Reaction score
- 1
- Points
- 3
அசுரன் 6
ஆட்டோவில் ஏறி அலுவலகம் வந்து சேர்ந்தவளுக்கு மனம் முழுக்க கெய்யானந்த் பேசியதில் மட்டுமே சிந்தனை ஓடிக்கொண்டே இருந்தது.
'அவருக்கு எப்படி தெரியும் தான் அவரை நேசிக்கிறோம் என்று ஆனாலும் இது எப்படி சாத்தியம் பலவித குழப்பம் கேள்விகள் ஆயிரம் ஆயிரம் மனதிற்கு சென்று பின்னி பிணைந்து மூளைக்கும் சென்று தலைவலி எடுக்கவே ஆரம்பித்துவிட்டது. எவ்வளவு முயற்சி செய்தாலும் வரும் கேள்விகளையும் சிந்தனைகளையும் அடக்க படாத பாடுபட்டிருப்பாள் சுடரிகா.
அலுவலகம் நோக்கி வேகமாக அடி எடுத்து வைத்தவளுக்கு அங்கு அவளுக்கு பலத்த வரவேற்பு காத்திருந்ததோ என்னவோ அவள் வந்ததுமே,
"உங்கள சார் கூப்பிடுறாரு" என ரிஷப்ஷனில் இருக்கும் பெண் சொன்னதும் அவ்வளவுதான் பியூஸ் போன பல்பு போல ஆகிவிட்டது அவளது முகம். என்ன சொல்ல போகிறாரோ? ஏது சொல்லப் போகிறர என்னை நிச்சயம் திட்ட தான் போகிறார். வந்துவிட்டாள் கதவு வரையிலும் வந்துவிட்டாள். உள்ளே செல்வதற்கு பயமும், நடுக்கமும் ஒன்று சேர குமார் அவளின் பக்கத்தில் வந்து நின்றான்.
தனக்கு பக்கத்தில் உக்ரானந்த்தின் நண்பன் குமார் வந்து நிற்பான் என நினைத்து பார்க்காதவள் அவனை சைட் வாக்கில் பார்த்துவிட்டு,
"சார் குட் மார்னிங்" என்றாள் மரியாதை நிமித்தத்தின் காரணமாக,
"குட் மார்னிங் மேடம் என்ன உள்ள போகாம அப்படியே நிக்கிறீங்க உங்களை அப்பவே சார் கூப்பிட்டாரே என்னம்மா நீங்க உள்ள போகாம இங்கேயே நின்னுட்டு இருக்கீங்க?" என்று கேட்டான் குமார்.
"போலாம் தான் ஆனா பயமா இருக்கு" என்றாள் சுடரி.
"அட என்னம்மா நீ அவன் உன் ஹஸ்பண்ட் சோ உனக்கு அனுமதி எல்லாம் தேவையே இல்லாத ஒன்னு தாராளமா போலாம்"
'இவன் என்ன எல்லாம் தெரிந்து பேசுகிறானா தெரியாமல் பேசுகிறானா? இந்த கல்யாணம் எதற்காக நடந்தது எப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் நடத்தி வைக்கப்பட்டது என்பது அனைத்துமே தெரியும் தெரிந்திருந்தும் இவர் என்ன இப்படி பேசுகிறார் " என நினைக்காத்தான் முடிந்தது அவளால்.
அவனுக்கு எல்லாமே தெரியும் தெரிந்திருந்தாலும் அவளை கலாய்காரானாம் பெரிய கலாய் தான் போ. உள்ளே போனதும் அவனை பார்த்ததும் உள்ளுக்குள் நடுக்கம் தானாகவே ஊற்றுவது என்பது உறுதி. உள்ளேயும் வந்து விட்டாள் சுடரிகா.
"ஏன் உன்னால ஆபீஸ்க்கு கரெக்ட் டைம்க்கு வர முடியாதா? எடுத்த உடனே கேள்வி கேட்டதில் பதில் சொல்ல முடியாமல் திணறி போனாள் சுடர்.
குமாரை பார்த்தால் குமாரோ சொல்லு என்பது போல வாயாலயே செய் கை காண்பிக்க,
"சார் அது வந்து... இல்ல நான்... காலையில லேட்... அது எப்படி நான்..." வார்த்தைகள் ஒவ்வொன்றும் தடம் புரள ஆரம்பிக்க,
"இப்பதான் தமிழ் கத்துக்கிட்டு இருக்கியா? எதுக்கு லேட் ஆச்சுன்னு கேட்டா என்னென்னமோ பிணாத்துர?" கோபமாக பேசினான் உக்ரன்.
இதுநாள் வரை அவள் பல நாட்கள் அலுவலகத்திற்கு தாமதமாகவே வந்திருக்கிறாள். அப்பொழுதெல்லாம் இப்படி தனியாக அழைத்து ஏன் லேட்டா வந்தன்னு கேள்வி எல்லாம் கேட்டதே இல்லையே?
அவள் வேறொருவரின் கீழ் வேலை செய்பவள் அவர்கள் என்ன சொல்கிறார்களோ அதுபடி கேட்டு நடக்க வேண்டும் எனும் நிபந்தனையில் உள்ளவள் ஆனால் இன்றைக்கு இவன் இப்படி தானாகவே முன்வந்து ஏன் லேட் என்று கேட்டதும் அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.
"சாரி சார் இனிமே லேட்டா வரமாட்டேன்" இதற்கு மேல் வழவழவென பேசியோ அல்லது திக்கி திணறியோ அவனிடத்தில் க பேசி தன்னைத்தானே வேடிக்கை பொம்மையாக அங்கு காமிக்க வேண்டாம் என நினைத்தாளோ என்னவோ அடுத்து தடாலடியான பதிலை கொடுத்து விடவும் அவனும் அவளை கோபமாக பார்த்தான்.
"கேள்வி கேட்டா அதுக்கு பதில் சொல்லாம வேற என்னவோ சொல்றா லூசு" அவளை திட்டியவன் அவளை தன் பக்கத்தில் வரும் படி சொன்னான். அவளும் அவனின் எதிரே வந்து நின்றாள்.
"இங்க பாரு வீட்டிலயும் நான் உனக்கு பாஸ்தான் இங்கேயும் நான் உனக்கு பாஸ்தான் சோ எல்லாமே டைம் படி நடக்கணும். ஆபிஸ்க்கு கரெக்ட் டைமுக்கு வரனும். ஆபீஸ் முடிஞ்சு வீட்டுக்கு போயிட்டேனா அங்க நான் என்ன சொல்றனோ அதுபடி தான் நடக்கணும் உன் இஷ்டப்படியெல்லாம் இருக்கக்கூடாது ரைட்.
"கிறுக்காடா புடிச்சிருக்கு உனக்கு பாவம் அந்த பொண்ணு அது வீட்டுல கூடவா சுதந்திரமா இருக்க கூடாது" எதுவும் சொல்ல முடியவில்லை நண்பன் குமாரனால்.
"ஓகே சார்" என சொல்லிவிட்டு நெற்றியில் வழிந்த வியர்வையை அவளின் முந்தானை கொண்டே துடைத்துவிட்டு அவள் நகர போக அவள் இவ்வளவு நேரமும் தன் எதிரே நின்று பேசிக்கொண்டிருந்ததும் அவளின் நெற்றியில் முத்து முத்தாக வியர்வைத் துளி பூத்து கிடந்ததும் மூக்கின் நுனி சிவப்பானதும் காது மடல் இரண்டும் சிவப்பாக மாறி தகதகவென இருந்தது. அதை உக்ரன் நன்றாக பார்த்தும் கொண்டிருந்தான். அந்த இதழ்களுக்கு கீழே இருக்கும் சிறு மச்சம் அவளை இன்னும் பேரழகியாக காண்பித்துக் கொடுக்க, அந்த இதழிலிருந்து கண்ணு எடுக்காமல் ஒரு நிமிடம் அவளையயே பார்த்துக் கொண்டே தான் இருந்தான் உக்ரானந்த்.
"என்ன இங்கேயே நின்னுட்டு இருக்க கெளம்பு" இதுவரையும் ரசித்த முகத்திடம் சிடுசிடுப்பாக பேச இவன் ஒருவனால் மட்டுமே முடியும். பார்த்ததும் ஒரு பெண்ணை பிடித்து விட்டால் அந்த பெண்ணிடம் எவ்வளவு பக்குவமாக எவ்வளவு பிடித்தமாக பேச முடியுமோ அந்த அளவுக்கு பேசும் ஆண்கள் மத்தியில் இவன் பிடித்தாலும் ரசனையாக அந்த பெண்ணை பார்த்தாலும் கொஞ்சம் கூடவார்த்தைகளில் தன்மையே இல்லை. கடுகடுவென பேசியது அந்த கடுவன் பூனை. அவன் பேசிய பேச்சுக்கு அவள் நிமிர்ந்து ஒரு நிமிடம் பார்த்துவிட்டு பயந்தவளாக அறையின் கதவை திறந்து வேகமாக வெளியேறி விட்டாள் சுடரிகா.
அவள் வெளியே சென்றதும் குமார் அவனின் முன்னே வந்து நின்றான்.
"டேய் மச்சான் இதெல்லாம் ரொம்ப ஓவர்டா அந்த பொண்ணு நீ வீட்ல இருக்கும் போதும் நீ சொல்றதுபடி தான் கேட்கணும்னு சொல்றியே இதெல்லாம் எந்த வகையில நியாயம் இதெல்லாம் ரொம் ஜாஸ்தி டா வேணாம்டா இந்த மாதிரியான தப்பெல்லாம் பண்ணாத" என்றான் குமார்.
"டேய் நீ பேசாம அமைதியா இருக்கியா? எனக்கு என்ன பண்ணனும்னு எனக்கு தெரியும் தேவை இல்லாம நீ இதுல இன்டர்ஃபயர் ஆகாத. நான் பாத்துக்குறேன் அவங்க அவங்கள வைக்க வேண்டிய இடத்தில் வச்சாதான் அதுக்கு மதிப்பு, மரியாதை எல்லாமே. இவளும் அப்படித்தான். நீ தேவையில்லாததெல்லாம் பேசி உன் டைமை வேஸ்ட் பண்ணாத இன்னிக்கு என்ன ஷெடியூல்ங்கிற டீடைல்ஸ் எடுத்து வச்சிட்டியா?" என்று அவன் கேட்க,
"எல்லாமே எடுத்து வச்சாச்சு" முகம் தொங்கி போனது குமாருக்கு. பின்ன இவன் பேசுவதை சகிக்க முடியவில்லை. ஆனாலும் அதை தன் நண்பனிடம் காமிக்க முடியுமா காமித்தால் அவன் அன்றைய நாள் முழுக்க தன்னிடம் ஏதாவது சீண்டி கொண்டே இருப்பான். எதுக்குப்பா வம்பு. அடுத்த கட்ட வேலைகளை பார்க்க ஆரம்பித்து விட்டான் குமார்.
அவன் இன்றைக்கு யாரை பார்க்க வேண்டும் யாரை சந்திக்க வேண்டும் இன்றைக்கு என்னென்ன ஷெட்யூல்ஸ் எல்லாம் இருக்கிறது என்பதை அனைத்தையும் தெள்ள தெளிவாக எடுத்துரைத்தவன் அவன் அடுத்த வேலைக்கு சென்று விட,
"குமார் ஒன் மினிட்" என்றான்.
"வாட் டா?"
"இல்ல ரொம்ப நாளா எனக்கு ஒரு பர்சனல் செகரட்டரி வேணும்னு நினைச்சிட்டே இருந்தேன் நீயும் எத்தனை நாளைக்கு தான் எனக்கு கூடவே இருந்து எல்லாத்தையும் பாப்ப உன்னால ஓரளவுக்கு தானே வேலைய மெயின்டைன் பண்ண முடியும். எனக்கு ஒரு பர்சனல் செகரட்டரி இருந்தா தான் என்னோட ஷெட்யுல்ஸ் என்னங்கிறதை சொல்லி நீட்டா அரேஞ்ச் பண்ணியே ஆகணும். இது ஏற்கனவே உன்கிட்ட நான் பேசி இருக்கேன் நேத்து கூட நம்ம டிஸ்கஸ் பண்ணோமே உனக்கு ஞாபகம் இருக்கா?" என்றான் உக்ரானந்த்.
"ஞாபகம் இருக்குடா அதுக்கு நான் காலையிலேயே அனௌன்ஸ்மெண்ட் கொடுத்தாச்சு நாளைக்கு இன்டர்வியூ இருக்கு நீ செலக்ட் பண்ணி எடுத்துக்கோ" மேற்கொண்டு அவன் வெளியே செல்ல போக ,
"நோ நோ அந்த அனௌன்ஸ்மென்ட் கேன்சல் பண்ணிடு" அவனும்ஆ வென விழித்து பார்த்தான்.
"என்ன சொன்ன கேன்சல் பண்ணனுமா? டேய் எப்படிடா நாளைக்கு நியூஸ் பேப்பர் எல்லாம் வரப்போகுது" பதட்டமாக குமார் சொல்ல,
"இட்ஸ் ஓகே கூள் இப்ப எதுக்குடா டென்ஷன் ஆகுற நாளைக்கு தானே வரப்போகுது அவங்ககிட்ட இன்னிக்கே சொல்லி அதை கேன்சல் பண்ண சொல்லிடு நானே இரு ஆள செலக்ட் பாத்துட்டேன்"
"என்னது ஆள செலக்ட் பண்ணிட்டியா யாரு?" ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் கேட்டான் குமார்.
"இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஒருத்தி வந்துட்டு போனாளே அவதான் இனிமே என்னுடைய பிஏ இனி அவகிட்ட எல்லா பொறுப்பையும் ஒப்படைச்சுரு அவளுக்கு எப்படி வேலை செய்யணுங்கிறதையும் நீயே ட்ரைனிங் பண்ணிடு ஓகே" என்றான். அதற்கு மேல் எந்த பேச்சுமில்லை என நினைத்தவனாக அவன் இருக்கையில் போய் உட்கார்ந்து கொள்ள இதை கேட்ட குமாருக்கு கண்முழி எல்லாம் பிதுங்கிப் போய் நின்றது.
"என்னது கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வந்துட்டு போன பொண்ணா இவன் யாரை சொல்றான் ஓ இவன் பொண்டாட்டிய தான் சொல்றானோ?" என யோசித்தவன் உடனே வேண்டுமென்றே அவனின் பக்கம் வந்து நின்று,
"மச்சான் நீ இப்ப யார சொன்ன இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வந்துட்டு போனதா? யாரு எனக்கு ஞாபகம் இல்லையே மறந்து போச்சே" என்றான்.
"மச்சி இங்க வாவே"
"இல்லடா நீ அங்கிருந்தே சொல்லு எனக்கு நல்லாவே காது கேட்கும்" என்றான் குமார். அவனுக்கு தெரியாதா அவன் அடுத்து என்ன பண்ண போகிறான் என்று.
"இல்லடா பயப்படாத வா ரகசியம் பக்கத்துல வந்து சொன்னாதான் ரகசியம் காக்கப்படும் வாவேன்" என மேற்க்கொண்டு அவன் தன்னுடைய இடது கை ஒற்றை விரலால் நீட்டி அவனை அழைக்க,
"என்னடா கன்னத்துல கைய வைச்சுட்டா நான் அடிக்க மாட்டேன்னு நினைக்கிறியா தல சும்மா தானே இருக்கு" வாயுக்குள் முனகியவன் தலையிலே டங்கு டங்கு என்று கொட்டு வைத்துவிட்டு,
"கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வந்துட்டு போனாளே ஒருத்தி அவதான் அவளேதான் கூப்பிடு அவளை இப்ப நான் பாக்கணும்" என்றான்.
"என்னது பாக்கணுமா?"
"ஆமாடா சொன்னது காதுல விழுகல அவளை நான் பாக்கணும் நீ வெளிய போயிட்டு அவளை கூப்பிடு நீ போய் உன் வேலைய பாரு மத்தத நான் டீல் பண்ணிக்கிறேன்" சொன்னவன் அடுத்த கட்டமாக அவன் வேலைகளை பார்க்க இவனோ தளர்ந்து போய் வெளியே வந்தான்.
"ஆஹா தலை என்ன வலி வலிக்குது முதல்ல ஒரு டோப்பா வாங்கி தான் வைக்கணும் இவன் அடிக்கிற அடிக்கு என் தலை தாங்காது சாமி மம்மி இவனை எதுக்கு எனக்கு நண்பன் ஆக்கின"
அசுரன் தொடர்வான்.

Author: shakthinadhi
Article Title: அசுரன் 6
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.