New member
- Messages
- 11
- Reaction score
- 1
- Points
- 3
அசுரன் 7
"அவளே அக்கவுண்ட் படிச்ச பொண்ணு அவ எப்படி பிஏ ஆக முடியும்? ஆமா முதல்ல சுடரிகா எதுக்கு பிஏவா செலக்ட் பண்ணனும்? ஓரளவு தாலிக்கயிறு மேஜிக் பண்ணுதோ இருக்கலாம் இருக்கலாம் யார் கண்டது மனதிற்குள் இவ்வாறு நினைத்தவாரே குமார் சுடரிகா இருக்கும் இடத்திற்கு வந்தான்.
சிஸ்டம் முன் உட்க்கார்ந்து அவளுக்கு என்று கொடுக்கப்பட்ட அனைத்து வேலைகளையும் அவள் மும்முரமாக பார்த்துக் கொண்டிருக்க,
"சுடரிகா" என்றான் குமார்.
அவளை தவிர அனைவருமே அவனை திரும்பி பார்த்தனர்.
மீண்டும் அவன் சுடரிகா என்க,
போட்டிருக்கும் ஹெட்போனை கழட்டிவிட்டு,
"சார் என்னையா கூப்பிட்டீங்க?" என்றாள். "சாரி சார் நான் வேற ஒரு மைண்ட்ல இருந்தேன்.
அவன் மெல்லமாக அவளை பார்த்து புன்னகைத்து விட்டு,
"சரிமா கொஞ்சம் இப்படி வரியா?" என அவளை அழைத்துக் கொண்டு அந்த அறையின் வெளியே வந்து நின்றான்.
"சொல்லுங்க சார் என்ன வேணும்?"
"எனக்கு எதுவும் வேணாமா உன்னுடைய ஹஸ்பண்டுக்கு தான் உன்னை வேண்டுமாம்" அவன் பேச்சு வாக்கில் அடித்து விட, சுடரி பதறி போய்,
"சார்!" என்றாள் அதிர்ந்து,
"சாரி சாரி ஏதோ சொல்ல வந்து ஏதோ சொல்லிட்டேன் ஐ அம் சோ சாரிமா நீ இன்னிலிருந்து சாருக்கு பர்சனல் செகரட்டரியா இருக்க போற" என சொன்னதும், அவள் ஒரு நிமிடம் ஆடித்தான் போனாள்.
"என்ன சொல்றீங்க நான் அவருக்கு பர்சனல் செகரட்டரியா? யூ மீன்"
"ஆமாமா இதுக்கு வேற தனியா அப்ரிவேஷன் போட்டு விளக்கிக் கொண்டே இருக்கணுமா?" என அவன் சொல்லவும்,
"சாரி எனக்கு இந்த வேலை எல்லாம் செஞ்சு பழகவில்லை. ப்ளீஸ் சார் எனக்கு வேண்டாமே" குமாரிடம் கெஞ்சி பார்த்தாள்.
"சுடரி என்றான் இயல்பாக ஒவ்வொரு முறையும் சுடசிகான்னு சொல்லி கூப்பிட முடியல" குமார் சொல்ல,
"ம் கூப்பிடுங்க என் பிரண்ட் என்னை அப்படித்தான் கூப்பிடுவா"
"அப்ப ஓகே சுடரி இப்ப மட்டும் நீ 5 மினிட்ஸ்ல என்கூட வரல அங்க அவன் காட்டு கத்து கத்துவான். உனக்கு புண்ணியமா போகும் வாம்மா" என்றான்.
அவனின் பாவமான முகத்தை பார்த்ததும் இல்லாமல் அவனின் பேச்சு சுடரிக்கு சிரிப்பை ஏற்படுத்த, அவன் பின்னாடியே நடக்க இவளும் எதுவுமே பேசவில்லை. படபடப்புடன் இதயம் ஒரு பக்கம் சத்தம் போட்டுக் கொண்டிருக்க அதை உள்வாங்கிக் கொண்டவளாக வேகமாக அவன் நடைக்கு ஈடு கொடுத்து அறைக்குள் நுழைந்தாள்.
"இதுவரைக்கும் தான் நான் வருவேன்மா இனி நீ ஆச்சு உன் பிரச்சனை ஆச்சு" அவள் காதில் மெல்லமாக கிசுகிசுத்து விட்டு அவனது கேபின் நோக்கி சென்றுவிட, அறைக்குள் தனியாக மாட்டிக் கொண்டாள் சுடரி.
சிங்கத்தின் குகைக்குள் சிக்கி கொண்ட மானை போல மிரண்டு அவனை பார்த்திருக்க, அவள் பார்வை தம்மில் பதிகிறது என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும். தெரிந்திருந்தும் அவன் கணினியில் பார்வை எடுக்காமலையே ஒரு ஃபார்மை ரெடி பண்ணி அவளின் கைகளில் கொடுத்தான் உக்ரன். அவள் அதை பார்த்துவிட்டு,
"சார் எனக்கு இந்த ஜாப் வேண்டாம்" என்றாள் நாசுக்காக,
"எதுக்கு வேணாம்னு சொல்ற?" அவன் மிரட்டும் குரலில் அவள் உள்ளம் படபடப்புக்கு உள்ளானாலும், வெளியே காமித்து கொள்ளாமல்,
"எனக்கு இந்த வேலை செஞ்சு பழக்கமில்லை நான் அக்கவுண்ட்ஸ் தான் படிச்சிருக்கேன் அக்கவுண்ட்ஸ் செக்ஷன் மட்டும் தான் என்னால பார்க்க முடியும். பர்சனல் செகரர்ட்டியா இருக்கிறது ரொம்ப பெரிய பொறுப்பு அதை கண்ணும் கருத்துமா கவனிப்பா செய்யணும் என்னால செய்ய முடியுமான்னு எனக்கு கான்ஃபிடன்ஸ் இல்ல. அப்படி இருக்கும் போது நான் எப்படி சார், சாரி வேண்டாமே" எவ்வளவு தன்மையாக பொறுமையாக சொல்ல முடியுமோ அவள் அந்த அளவுக்கு பொறுமையாகவே சொன்னாள்.
அது எல்லாம் அந்த செவிடன் காதில் சங்கூதிய கதைதான்.
"உனக்கு ஜாப் ரெடி பண்ணியாச்சு இன்னைலருந்து எனக்கு நீ பர்சனல் செகரர்ட்டரி அவ்வளவுதான். உனக்கு அந்த பக்கம் டேபிள் சிஸ்டம் எல்லாமே போட்டு வச்சாச்சு இனிமே நீ என்கிட்ட தான் வேலை பார்க்க போற அண்டர்ஸ்டாண்ட்" சொன்னவன் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை.
சாருக்கு பின் பக்கமாக போட்டு வைத்திருந்த கோட்டை தனக்கு தர வேண்டும் என்பதை கண்ணசைவால் அழைத்தான். அவனின் பார்வையின் அர்த்தத்தை புரியாதவளோ மிரண்டு திரண்டு பார்த்துக் கொண்டிருக்க,
"ஏய் லூசு இங்க வா" என்றான்.
இது என்ன லூசு லூசுன்னு சொல்றாரு. லூசா இருக்குறவங்கள எதுக்கு பிஏவா வைக்கணும் வேற நல்ல அறிவாளியான ஒருத்திய பிஏவா வச்சுருக்கலாம்ல இவருக்கு நான்னா கில்லு கீரை போல எப்போ பார்த்தாலும் திட்டுறாரு." கோபம் பற்றி கொண்டு வந்தது அவளுக்கு. இருந்தாலும் அடக்கிக் கொண்டாள்.
"என்ன சார்?" என்றாள்.
"புரியல கோட் மாட்டி விடு"
அவளுக்கு ஒரு சிரிப்பு வந்துவிட்டது. 'சின்ன குழந்தையா இவனுக்கு கோட் கூடாது நாமதான் மாட்டி விடணுமா? இப்பதான் ஸ்கூல் போறான் பாரு' என உள்ளுக்குள் அவளுக்கு சிரிப்பு வர,
"நா மாட்டி விடணுமா?" என்றாள் மெல்லிய குரலில்,
"ஆமா நீ தான் மாட்டி விடணும் வேற யாரு மாட்டி விடுவாங்க. என்னுடைய பர்சனல் செகரட்டரிங்கறது வெறும் வேலை மட்டும் கிடையாது என்னைய முழுசா கவனிச்சுக்கறதுலயும் உன்னுடைய பொறுப்பு இருக்கு. அண்டர்ஸ்டாண்ட் என அவன் சொன்னதும் அவளுக்கு நினைவுகள் எங்கெங்கோ தாறுமாறாக ஓடியது.
"ஏய் என்ன நெனச்சிட்டு இருக்க?" என அவளின் உயரத்திற்கு கீழே தலையை குனிந்து அவன் கேட்க,
"நான் ஒன்னுமே நினைக்கவே இல்லையே சார்." பயந்தபடியே படபடப்புடன் பேசியவள் கோட்டை எடுத்து அவனுக்கு வாகாக மாட்டிவிட அவனும், மிடுக்கான நடையுடன் கதவை திறந்து வெளியே சென்று விட்டான். அவளுக்கு அந்த அறையை சுற்றி சுற்றி வந்து பார்க்க மட்டுமே முடிந்தது. திடீரென அவளது போன் அலறியது எடுத்து காதிற்கு கொடுத்தாள்.
"சொல்லுடி நல்லா இருக்கியா?" சொன்னவளின் குரலில் சுரத்தை இல்லை.
"ஏண்டி ஒரு மாதிரியா பேசுறேன் என்னாச்சு எனி ப்ராப்ளம்.?"
"நத்திங் சரி சொல்லு என்ன வ விஷத்தை சொல்லு அது போதும் என்பது போன்று நிலையில் தொடரினால் இப்போது இருக்கும் மனநிலையில் யாரிடமும் பேசவும் பிடிக்கவில்லை தன் மனதில் இருக்கும் அனைத்தையும் வெளிப்படுத்தவும் முடியவில்லை.
ஏதோ தனிமை தேவைப்பட்டது போலும் எது நடந்தாலும் தன் தோழியான வள்ளியிடம் சொல்லித்தான் அவளுக்கு பழக்கம் தனக்கு திருமணம் ஆன விஷயமும் வள்ளிக்கு நன்றாகவே தெரியும். இருந்தாலும் சுடரி மேற்கொண்டு நடந்த விஷயங்கள் பற்றி பேசாமல் இருந்தால் நல்லது என்றாள் சுடரியின் தொழில்.
சுடரி காலையில் நடந்த விஷயத்தை வள்ளியிடம் சொல்ல வேண்டும்" என இப்பொழுது வரையிலும் நினைத்ததை வைத்திருந்தாள். ஆனால் சொன்னால் நிச்சயமாக திட்டு தான் விழும் ஏற்கனவே இந்த சுடரிக்கும், உக்ரானந்த்துக்கு திருமணம் நடந்தது. வள்ளிக்கு சுத்தமாகவே பிடிக்கவில்லை தாம் தூம் என கத்து தொடங்கி விட்டாள்? இப்பொழுது கேட்கவா வேண்டும் நடந்ததை நினைவாக அவளுக்கு வந்து போனது.
''அந்த அம்மா என்ன வச்சு மிரட்டுன உடனே கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டு வந்திருவியா? உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்காடி நான் இங்கஇந்த பாழாப்போன காண்ட்ராக்ட் ப்ராஜெக்ட்ல மாட்டிக்கிட்டேன் இல்லைனா நிச்சயமா நான் வந்து சேர்ந்திருப்பேன் அக்ரிமென்ட்ல வேற சைன் பண்ணிட்டேன் இல்லனா கண்டிப்பா வந்துருப்பேண்டி அந்த லேடிய உண்டு இல்லைன்னு பண்ணியிருப்பேன். நீ ஒரு புள்ள பூச்சு அதனாலதான் உன்னை வச்சு காரியத்தை சாதிக்க பார்த்துருக்காங்க ஏன் வேற எந்த பொண்ணு கிடைக்கலையா? அவன் ஆயுசு நல்லா இருக்கணும்னு, உன்னை பலி ஆடா மாத்திட்டாங்களா? ரொம்ப ஓவரா தான் அந்த அம்மா போகுது. இங்க பாரு நீ என்னைய காரணமாக காமிச்சு தேவையில்லாம நீயாவே உன் வாழ்க்கையை கெடுத்துக்கிட்டடி " கோபத்துடனும், ஆங்கராத்துடனும் தன் தோழி தன்னுடைய நலனுக்காக பேசியவை அனைத்தும் அவள் காதை சென்று மனதை அடைந்தது தான் ஆனால் அவளால் இந்த திருமணத்தை தடுத்து நிறுத்த முடியவில்லை.
யாரை காதலிக்க வேண்டும் என நினைத்தாளோ காதலித்து விட்டாள். ஆனாலும் ஒருதலையாக மட்டுமே, அந்த காதல் இன்று வரையிலும் இந்த நொடி வரையிலும் அவள் வெளியே சொல்லவில்லை தன் தோழி தவிர, அவளுக்கு இந்த கல்யாணம் அதிர்ஷ்டவசமா? இல்லை விதி வசமா? அல்லது விதி செய்யும் சதியா? என அவளுக்குமே தெரியவில்லை.
வெறும் ஒரு வருட காலம் மட்டுமே அவனுடன் வாழ்வதற்கான கிடைத்த வாய்ப்பாக மட்டுமே எண்ணிக் கொண்டிருக்கிறாள் சுடரிகா. காதல் அந்த அளவுக்கு அவளை புரட்டி போட்டு இருக்கிறது.
தான் செய்வது சரியா தவறா என்றெல்லாம் அவளுக்கு முடிவெடுக்க முடியவில்லை. ஆனால் இறுதியாக மித்ராதேவி தன்னுடைய தோழியை பணயமாக வைத்து இப்படி ஒரு காரியத்தை செய்ய வைத்து விட்டார் என நினைக்கும் போது தான் சுடரிகாவின் மனதிற்குள் பெறும் எரிச்சல் வருகிறது.
"வள்ளி போதும் பேசுனதெல்லாம் பேசி முடிச்சிட்டியா? இந்த கல்யாண விஷயம் உன்கிட்ட சொல்ல கூடாதுன்னு நினைச்சேன் ஆனாலும் சொல்ல வேண்டிய சூழ்நிலை சொல்லிட்டேன் இங்க பாரு நான் யார கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைச்சேனோ அவரத்தான் கல்யாணம் பண்ணி இருக்கேன் என்ன ஒரு வருஷம் காலம் மட்டும்தான் அவரோட வாழனும்னு விதி அமைச்சு கொடுத்திருக்கு. பரவால்ல டி இதுவே போதும் எனக்கு. இந்த ஒரு வருஷம் என்னை பொருத்தவரைக்கும் அதிகபட்சம் தான் " அவள் சொன்னதும் அவளுக்கு சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை வள்ளி மிகவும் துவண்டு போனாள்.
தன் தோழியை எதை சொல்லிதான் சரி கட்டி இழுத்து வர முடியும் பாவம் காதலில் பித்து பிடித்து அலைகிறாளே? இவளை வைத்துக்கொண்டு என்னதான் செய்வது? தலையில் அடித்துக் கொண்டாள்.
"அப்போ கல்யாணம் பண்ணிக்க போற ரைட்?"
"ம்..."
"அவனோட ஒரு வருஷம் வாழ போற ரைட்?"
"ம்..."
"இதுல நீ எந்த ஒரு நல்ல விஷயத்தையும் பாக்க முடியாது உனக்கு நிறைய அவமானமும் கேவலமான பேச்சுக்களும் மட்டும்தான் கிடைக்கும் உனக்கு ஓகேவா?"
"ம்..."
"அப்போ எல்லாத்துக்கும் தயார் தான்...''
"ம்..."
"போடி உன்கிட்ட மனுஷன் பேச முடியுமா விவரம் தெரிஞ்ச நாள்ல இருந்தே அவனையே மனசுக்குள்ள நெனச்சுக்கிட்டு இருக்க இது உனக்கு கண்ணா லட்டு தின்ன ஆசையா என்கிற மாதிரி தான் அமைஞ்சு போச்சு கேட்கவா வேணும் இதுக்கு மேலயும் உன்னை என்னால இழுத்துட்டு வர முடியுமான்னு தெரியல. எனிவே உன்னுடைய திருமண வாழ்க்கை நல்லா அமையனும்னு அந்த ஆண்டவன பிரார்த்திக்கிறேன். உன்கிட்ட நிறைய பேசணும் ஆனா போன்ல எதுவும் டீடைலா பேச முடியல எனக்கு ப்ராஜெக்ட் இன்னும் ஒன் மந்த்ல முடிஞ்சிடும் முடிஞ்சதும் நான் நேர்ல உன்கிட்ட வந்து பேசுறேன்" சொன்னவள் அதற்கு பின்பு போனை வைத்து விட்டாள்.
வள்ளியுடன் பேசிய நினைவுகளில் இருந்து மீண்டு வந்தவளாக ஒரு பக்கம் வலி அந்தப் பக்கமாக இருந்து "ஹலோ" என சொல்லிக்கொண்டே இருக்க, அவள் "சொல்லுடி" என்றாள்.
"இன்னும் த்ரீ டேஸ் ல நான் சென்னைக்கு வந்துடுவேண்டி" என்றால் சிரித்த முகத்துடன் மனம் முழுக்க சந்தோஷத்துடன்... சொன்னதும் சுடரியின் சந்தோஷத்திற்கு அளவே இல்லமால் போனது.
"என்னடி இன்னும் ஒரு மாசம் ஆகும்னு சொன்ன ஆனா இப்பவே வர?" இருந்தாலும் சந்தகத்தை கேட்காமல் இருக்க முடியவில்லை சுடரிகாவால்,
"நானும் அப்படித்தான் நினைச்சேன் கடைசில பாத்தா எங்க ப்ராஜெக்ட் தான் ஃபர்ஸ்ட் செலக்ட் ஆயிடுச்சு சீக்கிரமா முடிச்சு கொடுக்க வேண்டிய சூழ்நிலை அதனால நாங்க எல்லாரும் டீம் ஒர்க்கா செயல்பட்டு சீக்கிரம் முடிச்சு கொடுத்துட்டோம் சோ சென்னைக்கு வந்துருவேன். நம்ம ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்னு ஜாலியா போக போகுது" என அவள் சொல்ல,
"ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமா அடி போடி என்னடி பெருசா ஆட்டம் ஆட போறோம் கோவிலுக்கு போக போறோம் சாமிய கும்பிடுவோம் பீச்சுக்கு போவோம் கடலை வாங்கி சாப்பிடுவோம் இதுதான் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம். இதை தவிர நமக்கு என்னடி இருக்கு"
"அடிப்பாவி நான் ஒரு ஜாலியா பேசுனா நீ பொசுக்குன்னு இப்படி பேசிட்டியே" என வள்ளி ஒரு பக்கம் நின்று அவளை முறைப்படி சொல்ல,
"சரி சரி விடு நீ முதல்ல ஊரு வந்து சேரு பின்னாடி எல்லாத்தையும் பேசிக்கலாம்" என அவளும் சொல்லிவிட்டு போனை எடுக்க கதவை திறந்து உள்ளே நுழைந்த உக்ரானந்த் அவளையே உக்கிரமாக பார்த்துக் கொண்டிருந்தான்.
அவள் கையில் இருந்த போனை வெடுக்கென்று வாங்கி கீழே தரையில் போட்டு உடைத்து விட்டான். அவளோ பயந்து போய் போனையும் அவனையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தாள்.
அசுரன் தொடர்வான்...

Author: shakthinadhi
Article Title: அசுரன் 7
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.