New member
- Messages
- 16
- Reaction score
- 1
- Points
- 3
அசுரன் 8
"அடப்பாவி எனக்குன்னு இருந்த டச் போன இது ஒன்னு மட்டும் தான் ஆறு மாச சம்பளத்துல கொஞ்சம் கொஞ்சமா சேர்த்து வச்சு எனக்கு ஒரு ஆண்ட்ராய்டு மொபைல் வாங்குன அது பொறுக்கலையா இவனுக்கு? இப்படி போட்டு போன உடைச்சுட்டானே!" அவளால் அப்படியாக நினைக்க மட்டும்தான் தோன்றியது.
இந்த விஷயத்தில் தான் உருகி உருகி காதலித்த காதலன் என்றெல்லாம் அவன் யோசிக்கவே இல்லை.
"வொர்க் டைம்ல போன் பேசறது எனக்கு பிடிக்காது உன்கிட்ட நான் சொல்லிட்டு போன விஷயத்தை செஞ்சியா இல்லையா?" என அவன் கேட்கவும்,
"அ... எதுவுமே சொல்லாம அவர் பாட்டுக்கு தானே போறாரு. என்ன சொல்லிட்டு போனாரு?" மீண்டும் அவள் ஒன்று புரியாமல் பார்க்க,
"சார் நீங்க எதுவும் சொல்லிட்டு போகலையே?" கைகளை பிசைந்தபடி அதில் சொல்ல,
"இடியட் எதுவும் சொல்லலையா? உனக்கு என்ன வேலைங்கிறத நீ குமார் கிட்ட கேட்டு எதுவும் தெரிஞ்சுக்க வேண்டாமா? இப்படியே உட்கார்ந்துகிட்டு இருப்பியா? அவள் மேற்கொண்டு பாவமாகத்தான் பார்க்க முடிந்தது. அட பாவி இதெல்லாம் எனக்கு எதுவும் தெரியாது. ஆரம்பத்திலேயே சொன்னேன் டா அது ஏன் உனக்கு புரியவே மாட்டேங்குது."
"குமாரா வர சொல்றேன் அவன் கிட்ட எல்லா டீடைல்ஸும் கேட்டு தெரிஞ்சுக்கோ அண்ட் ஒன் மோர் திங் வொர்க் டைம்ல இந்த மாதிரி போன் பேசிட்டு இருக்கிறது எனக்கு சுத்தமா பிடிக்கவே பிடிக்காத ஒன்னு. அது முக்கியமான போன் காலாக இருந்தாலுமே அட்டென்ட் பண்ணி பேசக் கூடாது" பேண்ட் பாக்கெட்டுக்குள் கை நுழைத்தபடியே அவன் இருக்கையில் போய் உட்கார்ந்தவுடன் மேற்கொண்டு அவள் எதுவுமே பேசவில்லை.
சிறிது நேரத்தில் குமாரும் வந்து சேர்ந்தான். அவளுக்கு என்னென்ன வேலைகள் செய்ய வேண்டும் என்பதனை தெள்ளத் தெளிவாக எடுத்துரைத்தான் அவளும் ஒவ்வொன்றையும் குறிப்பெடுத்துக் கொண்டிருந்தாள்.
"அவ்வளவுதா இதுதான் டியூட்டி இதை நீ கரெக்ட்டா செஞ்சினாவே போதும் ஓகே" என அவன் கேட்க அவளும் சரி என தலையாட்டினாள்.
"சார் கொஞ்ச நாளைக்கு டிரைனிங் கொடுக்க முடியுமா?" என்றாள் சுடரிகா.
குமாரும் அவள் சொன்னதை கேட்டு பின்னே அவனுக்கு இதனால் உக்ரனிடமிருந்து நன்றாக வாங்கி கட்டிக்கொள்ள போகிறோன் என எதைப் பற்றியும் யோசிக்காமல் சரி மா என்றான்.
"என்னை நீ அண்ணன்னு சொல்லி கூப்பிடு" என்றான் குமார்.
"சார் உங்களை நான் எப்படி அண்ணான்னு சொல்லி கூப்பிட முடியும். நீங்க இந்த கம்பெனியோட மேனேஜர். நோ என்னால முடியாது" படபடப்பாக பேசினாள் சூடாறீங்க.
"அதெல்லாம் இல்ல நீ என்னை அண்ணானு சொல்லி கூப்பிடலாம் தப்பில்ல." என்றான் கொஞ்சம் வார்த்தைகளிலும் இதழ்களிலும் புன்னகை கூட்டி,
"என் பிரண்டு சாரி உன் ஹஸ்பண்ட்" என அவன் சொல்லவும் அவளோ சங்கடமாக நெளிய,
"சரி சரி என்னோட பிரண்டு இப்ப வரைக்கும் நான் வாடா போடான்னு சொல்லி கூப்பிடுவதில்லை. அவங்க தனிமையில் இருக்கும்போது மட்டும் தான் அந்த மாதிரி, மற்றபடி ஆபீஸ் டைம்ல எல்லார் முன்னாடியும் அவனை சார்னு சொல்லிக் கூப்பிட்டு தான் எனக்கு பழக்கம். சோ நீயும் அதையே ஃபாலோ பண்ணு மா." என அவன் தன் கை கட்டை விரலை காண்பித்து கேட்க அவளிடம் சரி என சொன்னாள்.
அன்றைக்கு நாள் முழுவதுமே என்ன வேலை எப்படி செய்ய வேண்டும் எந்த மாதிரியான அணுகுமுறையை அணுக வேண்டும் என அனைத்தையும் குறிப்பெடுத்துக் கொண்டாள் சுடரிகா. மேலும் ஆபிசில் நடக்கும் அனைத்து விஷயங்களையும் தெளிவாக பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு சிறு சிறு வேலைகள் மட்டும் கொடுக்கப்பட்டது அதை சரியாக அவள் முடிக்கவும் அவளை உடனே தனது கேபினுக்கு கூப்பிட்டான் உக்ரன்.
"பெருசா சொன்ன அக்கௌன்ட் வேலை மட்டும்தான் எனக்கு செய்ய தெரியும்னு இப்ப நல்லா தானே பண்ற கத்துக்கணும்னு எண்ணம் இருந்தா போதும் எதை வேணும்னாலும் கத்துக்கலாம் புரியுதா? ஓகே நல்லா பண்ண கீப் இட் அப் பட் என்னோட ஃபாஸ்ட்க்கு இது பத்தாது. இன்னும் பாஸ்ட்டா ஃபாலோ பண்ணி வரணும்" என்றான் உக்ரன்.
அவளும் சரி என தலையாட்டினாள். ஏதாவது திட்ட தான் கூப்பிடுவானோ என பயந்து ஓட பார்க்க ஆனால் அவன் விடணுமே, நடுக்கத்துடன் அவனைப் பார்க்க அவன் இவ்வாறு தனக்கு புகழாரம் சூட்டுவதை நினைத்து அவளுக்கு கண்கள் அகல விரிந்தது.
******
பேருந்து நிலையத்தில் பஸ் எப்பொழுது வரும் என கை கடிகாரத்தையும் வரும் போகும் மக்களையும் பார்த்தபடியே நின்று கொண்டிருந்தாள் சுடரிகா.
கிட்டதட்ட அவளுக்கு ஒரு சில வினாடிகள் கழித்து தான் உக்ரானந்தும் கிளம்பி இருந்தான். அந்த பேருந்து நிலையத்தை தாண்டித்தான் அவனும் செல்ல வேண்டிய கட்டாய நிலை. அப்படி கடந்து போகும் அவ்வேளையில் திடீரென அவள் அவன் கண்ணில் பட்டுவிட, வண்டியை மெல்லமாக ஸ்லோ செய்தான். வேகத்தை குறைத்தான். அவளின் பக்கத்தில் வந்து வண்டியை நிப்பாட்ட அவளோ எதையோ வேடிக்கை பார்த்தபடி நின்று கொண்டிருந்தாள்.
காரின் கண்ணாடி கதவைத் திறந்து "உள்ள வா" என்றான். அவளும் சத்தம் வந்த திசையை பார்த்து எதிரே தனக்கு பக்கத்திலேயே நின்று கொண்டிருந்த காரை பார்த்ததும் உள்ளே உக்கரானந்த்தை கண்டதும் அவள் மனம் பட்டாம்பூச்சியாய் பரந்து விரிந்தது. அதிலும் தன்னை உள்ளே வா என கூப்பிட்டதில் சந்தோஷ பட்டு போனால் சுடரி.
"உள்ளயா எதுக்கு சார்?" என்றாள். உள்ளுக்குள் இருக்கும் சந்தோஷத்தை மறைத்து வைத்து கொண்டாள். வெளிப்படையாக இந்நேரம் தன் மனதில் இருக்கும் காதலை காமிக்க இது தகுந்த சமயமும் இல்லை. அப்படியே சொன்னாலும் அவள் காதலை அவன் ஏற்றுக்கொள்ள போவதுமில்லையே...
"எதுக்கு கூப்பிடுவாங்க வீட்ல டிராப் பண்றதுக்கு தான். எப்படியும் நீ என் வீட்ல தானே இருக்க போற வா" என்றான் கடுமையான குரலில்.
அவள் தயக்கத்துடன் அவனையே பார்த்துக் கொண்டிருக்க, இப்ப நீ வந்து உள்ள ஏறல கைய புடிச்சு தரதரன்னு இழுத்துட்டு போக வேண்டியதாய் இருக்கும் எப்படி வசதி." என்ன இவள் நான் சொன்னா கேக்கவே மாட்டாளா? எல்லாத்துக்கும் முரண்டு பிடிக்கிறா திமிரு பிடிச்சவ, பணம் இல்லனாலும், இந்த வெட்டி வீரா பந்தாவுக்கு குறைச்சல் இல்ல மனதில் அவளை சாடியவன் வெளியே திட்ட மனமில்லையா இல்லை இது ரோடு நிறைய மக்கா நடமாட்டம் உள்ளதே அவளை திட்டினால் அவள் அழுது தொலைச்சு பின் நான் என்னாவோ பெரிய குற்றவாளியை போல ஆக்கி விடுவார்களோ என நினைதானோ என்னவோ பின் சொன்ன வார்த்தைகள் யாவும் உள்ளுக்குள் முனகி கொண்டான்.
ஸ்டியரிங்கை மிகவும் அழுத்தமாக பிடித்தபடி அவளையே கூர் விழிகளால் பார்க்க, வேகமாக வந்து காரின் கதவை திறந்து உட்கார்ந்து கொண்டாள் சுடரிகா. அவன் இன்னுமே வண்டியை எடுக்காமல் அவளை முறைத்தப்படி பார்க்க,
"முன்னாடி வந்து உனக்கு உட்கார தெரியாதா?"
"சார் முன்னாடி நான் எப்படி?" தயக்கத்துடன் சொல்ல,
"ரொம்ப ஆசைப் படாத. உன்கிட்ட பேசணும் பிசினஸ் விஷயமா உன்கிட்ட சில விஷயங்கள் சொல்லணும் வா வந்து முன்னாடி உக்காரு" உக்ரன் சொல்லவும் சுடரி மறுபடியும் பேசாமல் கதவை திறந்து முன்னே வந்து உட்கார்ந்து கொண்டாள். சிறிது நேரம் வரையிலும் எதுவுமே பேசாமல் போய்க் கொண்டிருந்தது.
"இங்க பாரு வேலை நேரத்தில் எந்த சலுகையும் உனக்கு நான் கொடுக்க மாட்டேன். இன்னிக்கு போன் உடைஞ்சது போல நாளைக்கு ஏதாவது உடைய வேண்டியதா இருக்கும் புரியுதா?" என அவன் சொல்லவும், அவள் சரி என தலையாட்டினாள்.
"குமார் கிட்ட எல்லாம் வேலையும் எப்படி செய்யணும்னு கேட்டு தெரிஞ்சுக்கிட்டியா?"
"ம்ம்.."
"கேள்வி கேட்டா எனக்கு பதில் வரணும் காலையில சொன்னது ஞாபகம் இல்லையா? இந்த உம்முன்னு போடுறதெல்லாம் எனக்கு சுத்தமா பிடிக்காது."
"ம்ம்.. சாரி சார் புரிஞ்சது புரிஞ்சது குமார் சார் கிட்ட எல்லா டீடைலும் கேட்டு தெரிஞ்சுக்கிட்டேன். வெரி சாரி" மீண்டும் அவள் ஒரு சாரி போட்டுவிட்டு பதட்டமாக அவனை பார்க்க,
"இங்க பாரு இந்த மாதிரி பதட்ட பாக்குறது பயப்படறது சுத்தமா இருக்கவே கூடாது. இன்னும் சொல்ல போனா நீ இப்படி இருந்தா உன்னை எப்படி நான் என்னோட பிஏவா வச்சிக்க முடியும். எதையும் போல்டா பேஸ் பண்ணனும் அண்டர்ஸ்டாண்ட்"
"ஓகே சார் இனி நான் பயப்பட மாட்டேன்"
"ஓகே" சொன்னவன், அதற்கு மேல் எதுவும் பேசாமல் வண்டி மெல்லமாக போய்க் கொண்டே இருக்க அவனுக்கு ஒரு போன் கால் வந்தது.
"ஹை பேபி" உருகி வழிந்த அந்த குரலில் ஒரு நிமிடம் ஆடித்தான் போனான் உக்ரன்.
காரில் அவனது போன் ஸ்பீகரில் போட்டு இருக்க அங்கு பேசிக் கொண்டிருந்த மேனகாவின் குரல் ஒரு மாதிரி கிறக்கத்துடன் இருக்க உக்ரனின் கண்கள் சிவந்து விரிந்தது.
"பேபி இன்னைக்கு எங்க வீட்டுல யாருமே இல்ல நான் மட்டும் தனியாதான் இருக்கேன் வரிங்களா? இப்பதான் ஜஸ்ட் இப்பதான் பிரெஷா குளிச்சுட்டு வந்த" குளறிக் கொண்டு பேசினாள் மங்கையவள்.
"ஏய் மேனா இஸ் இட் அப்போ உன்னை மிஸ் பண்ணவே கூடாது. நான் இப்பவே வரேன் நீ அப்டியே இரு" தன் பக்கத்தில் தாலி கட்டிய மனைவி இருக்கிறாள் எனக் கொஞ்சம் கூட கூச்சம், நாச்சம் இல்லாமல் இப்படி பேசுபவனை நிமிர்ந்து பார்த்த சுடரிகா நொந்து போனாள்.
என்னவோ தெரியவில்லை இதற்கு மேலும் இனி இந்த காரில் இருப்பதா நோ இருக்க கூடாது சுடரி இப்படியே ஓடிட்டு இருக்கிற கார்ல இருந்து இறங்கி குதிச்சுருடி யோசிக்காத. இந்த அசிங்கமான பேச்சை கேட்கத்தான் நீ இங்க வந்தியா கடவுளே! நானும் பொண்ணுதான், எனக்கும் உணர்ச்சிகள் இருக்கு என கணவனிடம் அவள் இப்படியெல்லாம் பேசுவதா? வருத்தம் போய் உரிமையுடன் கூடிய கோபம் எட்டி பார்க்க, உள்ளுக்குள் ஏற்பட்ட மாற்றம் கண்டு பெண்ணவள் துடித்து போய் இதயம் நொறுங்க அவனை நிமிர்ந்து பார்க்க, அதே நேரம் உக்ரனும் பார்த்து வைக்க,
"ஹேய் மேனா ஐ வில் கால் யூ பேக்" வேகமாக அவளிடம் உரைத்து விட்டு காலை கட் செய்தவன்,
"ஹேய் யூ எல்லாத்தையும் கேட்டுட்டியா?" என்றான் அவளை பார்த்து நக்கலாக,
"ஸ்பீக்கிரல போட்டு பேசுனா கேக்காம போகுமா கேக்குறான் பாரு கேள்விய,"
"இல்ல சார் கேக்கல" அனாவசியமான பொய் சொல்ல வேண்டிய நிலை.
"ஹும் இட்ஸ் ஓகே கேட்டாலும் ஒன்னும் பிரச்னை இல்ல" தோல்களை குலுக்கி ஆகாயசமாக சொன்னவனை விழி கூர்மையுடன் பார்த்த சுடரிகா,
"சார் கொஞ்சம் வண்டியை நிறுத்துங்க" என்றாள்.
"வாட் எதுக்கு?"
"நிறுத்துங்க ப்ளீஸ்" என்றாள்.
அவனும் வண்டியை நிறுத்த, அவள் காரின் கதவை திறந்து அவனை திரும்பி கூட பார்க்காமல் நடந்து போனாள்.
"ஏய் ஏய் அயோ இவள் பேரு என்ன சுடரி சுடரிகா ஆ ரீகா.. ஏய் ரீகா... ஸ்டாப்... ஸ்டாப் இட் ஐ ஸே... இடியட் ஸ்டுபிட் கூப்பிட கூப்பிட எப்படி போறா பாரு திமிரு புடிச்சவ..." திட்டிக் கொண்டே அவளை அழைத்தவன், அவள் கேட்டும் கேட்காமல் அந்த ரோட்டில் நடந்து போக,
"ஓ காட்..." இவளை எரிச்சலுற்றவன் அவனும் காரை விட்டு கீழே இறங்கினான்.
"ஏய் நில்லு..."
அவளோ அவன் பேசுவது காதில் விழுந்தாலும், அவள் பாட்டுக்கு நடந்து கொண்டே போனாள். அவன் எவ்வளவு கூப்பிட்டும் அவள் கேட்காமல் நடந்து கொண்டே போக பொறுமை இழந்தவன் அவளின் முன்னே போய் நின்று அவள் அடுத்த அடி எடுத்து வைக்க முடியாதபடி வழிமறித்தான்.
" ஏய் கூப்பிட்டே இருக்கேன் நீ பாட்டுக்கு போயிட்டே இருக்க?" கோபத்துடன் பொங்கி எழ தயாராக இருந்தான். கண்களில் இருக்கும் கோபம் அவனின் வார்த்தைகளில் நன்றாகவே தெரிந்தது.
அவனை மேலிருந்து கீழாக முழுவதுமாக பார்த்த சுடரிகா பின்பு எதுமே பேசாமல் அவனைத் தாண்டி நடந்து போக, மீண்டும் மீண்டும் எரிச்சல் அடைய செய்யும் அவளை பார்க்க பார்க்க அதிக அளவுக்கு கோபம் வந்து பின்னாடியே போனவன் அவளின் நீண்ட கூந்தலை ஒரே இழுவையாக இழுக்க அந்த இழுவையில் அவள் அவனின் நெஞ்சோடு தலைமுட்டி நின்றாள்.
அசுரன் வருவான்...

Author: shakthinadhi
Article Title: அசுரன் 8
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.