Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖
Administrator
Staff member
Messages
268
Reaction score
215
Points
63
அத்தியாயம் - 61

பகலவனின் செங்கதிரோன், பூமியெங்கும் அதன் வெளிச்சக் கதிர்களை பரவவிடும் அழகிய காலை நேரம்.

ஒரு போர்வையில் கணவன் மனைவி இருவரும் இல்லறதில் முத்தெடுத்த களைப்பில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருக்க, ஆத்வியின் அலைபேசி அதிரும் சத்தத்தில் கண்ணை திறவாமலே கையை மட்டும் துழாவ விடவும், அலைபேசிக்கு பதில் அவன் மனைவியின் தலைமுடிகள் தான் கையில் சிக்கியது.

அதில் மெல்ல கண்களை சுருக்கி திறந்து பார்த்தவனது விழிகள் உறக்கம் மறைந்து பிரகாசித்து மின்னியது. ஆடையில்லா தேகம் இரண்டும் வஞ்சனையின்றி பின்னி இணைந்திருக்க, அசந்து துயில் கொள்ளும் அவள் நெஞ்சில் வாகாகப் படுத்திருந்தவன் விழித்துப் பார்க்கயில், கண்ணில் பட்டதென்னவோ பாவையின் அழகிய செழுமைகள்.

புதுவித அனுபவம் ராஜசுகம் கிட்டிய உற்சாகம். விலை உயர்ந்த பஞ்சி மெத்தையில் படுத்துறங்கி கிடைக்கபடாத புது தெம்பு, தத்தையின் வெண்பனி நெஞ்சில் கிடைக்கப்பட்ட அபூர்வ ரகசியம் என்னவோ!

அவள் வளமையில் அவன் மயங்கி கிடக்க, மீண்டும் அலைபேசி நின்று அதிரவும் தான் நினைவுலகம் வந்தான்.

"இவ முகத்தை பாத்தாலே தடுமாறி போய்டுவேன், இப்போ சொல்லவா வேணும்.." நமட்டு புன்னகை சிந்தி, சட்டென திருட்டு பூனையாக மாறி திருட்டு வேலை பார்த்து விட்ட பின்னே, சலிப்பாக ஃபோனை எக்கி எடுத்து எண்ணை பாராமல் அன்டன் செய்து காதில் வைத்தவன், "ஆத்வி ஹியர்" என்க.

"எங்கே இருக்க ஆத்வி.. நேத்து ஈவினிங் வீட்ட விட்டு வெளிய போன, அந்த ஊ..." என வாயெடுத்து, "அவளை கூட்டிட்டு.. இப்போ விடிஞ்சே போச்சி இன்னும் என்ன பண்ணிட்டு இருக்க அவகூட, வீட்டுக்கு கூட வராம.." அந்த பக்கம் அவசரக் கொடுக்காக பேசிய ஹரிதாக்கு உண்மையில் நேரம் சரியில்லை.

ஆத்வி, கவியோடு தனியாக சென்றது மனம் பொருக்கவில்லை அவளுக்கு. அதிலும் இரண்டு நாளாக கணவன் மனைவியர் இருவரும் கண்களால் காதல் வளர்த்து, அத்து மீறிய சில்மிஷங்கள் செய்து, சிரித்து பேசி அடித்த லூட்டி எல்லாம் கண்டு, பொறாமையில் வெந்த வெங்காயம் ஆனவளுக்குள், ஆத்வியை கண்ட சிறு தினங்களில் இருந்தே அவன் மீது காதல் வந்து விட்டது. ஆனால் அந்த காதலை தான், பாவம் மூன்று பேரோடு வாழ்ந்து விட்டு தாமதமாக உணர்ந்துக் கொண்டாள்.

அவள் படபடப்பு நிறைந்த திமிர் பேச்சில் கோவம் எல்லை மீறிய ஆத்வி, சட்டென கவி அருகில் இருந்து எழுந்து சாளரம் அருகே சென்றவனாக,
"ஹௌ டேர் யூ.. ப்ளடி டாக்.. நீ யாரு என்ன கேள்வி கேக்க.. நான் எங்கே வேணாலும் என் மனைவிய கூட்டிட்டு போவேன், வருவேன்.. அதை உன்கிட்ட சொல்ல வேண்டிய ஒரு அவசியமும் எனக்கில்ல..

அதுவும் என் வைஃப் அவளை மரியாதை இல்லாம பேச உனக்கு எவ்ளோ தைரியம்.." நரநரவென கோவத்தில் பற்களை கடிக்கும் சத்தம், ஹரிதாவை மிரள வைத்தது.

"போனா போகட்டும் பொண்ணா போய்ட்டியேன்னு பாவம் பாத்து உன்ன விட்டு வச்சிருக்கேன், தேவை இல்லாத வேலைய பாத்து உன் உயிர்க்கு நீயே உலை வச்சிக்காத.. ஏற்கனவே என் வீட்ல என் மனைவிய வெறுப்பேத்த நிறைய வேலை பாத்து வச்சிருக்க, திரும்பவும் இதுவே தொடருச்சி உன் வையித்துல உள்ள பிள்ளை அது இதுன்னுலாம் பாவம் பாக்க மாட்டேன், உரு தெரியாம அழிச்சிடுவேன்.."

சற்றும் சீற்றம் குறையாமல் அடிக்குரலில் கர்ஜனை செய்தவன், அழைப்பை துண்டித்து பலமாக மூச்சி வாங்க நின்ற நேரம்,
"மாமா.. " என்ற மென்மையாக கீதம் ஒலிக்கும் குரலில் திரும்பியவன் ஸ்தம்பித்து போனவனாக,
"எழுந்திட்டியா பேபிஇ.." என்றபடி அவளிடம் வந்தான்.

அத்தனை நேரமும் கணவனின் அணைப்பில் எப்படி துயில் கொள்கிறோம் என தெரியாமல் உறங்கி விட்டு, ஆடவனின் கதகதப்பு இல்லாமல் போகவே, ஆடை தொலைத்த தேகம் குளிரவும் கழுத்து வரை மூடிய போர்வையை இறுகப் பற்றியவளாக,

"என் கண்ணாடி எங்கே மாமா.. நீங்க எங்கே இருக்கீங்க.. ஐயோ.. என்னால எழ கூட முடியலையே.." கண் திறவாமல் உதடு பிதுக்கி சொன்னவளுக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது, உடல் அசதி தாங்காமல். இரவெல்லாம் கனவோடு ஒன்றிணைந்து கூடி மகிழ்ந்தவள் உறங்கி எழுந்ததும் குழந்தையாகிப் போனாள்.

சிறு பிள்ளையாக அவள் தேம்பி அழ தொடங்கவும், ஒரு நொடி புரியாமல் விழித்து பின் தெளிவு பெற்றவனாக,
"ஹேய்.. கவி.. என்னாச்சி டி.. எதுக்கு இப்ப திடீர்னு அழற, நல்லா தானே இருந்த.." பதட்டமாக அவளை நெஞ்சில் போட்டு முதுகை வருடிக் கொடுக்க,

"என் கண்ணாடிய காணல, எங்கே இருக்கு.. என் க்.கண்ணாடி வேணும்.. என்னால எழ முடியலையே.." சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்வதை வைத்தே, செவிக்கருவி இல்லாதது உணர்ந்தவனாக, இரவு கூடலின் போது கழட்டி வைத்த அவனே எடுத்து அவள் காதிலும் கண்ணிலும் மாட்டி விட்டவன்,

"கவி என்னாச்சு, எதுக்கு அழற.." சற்று கடினமாகவே அவன் கேட்கவும், விம்பளுடன் பாவமாக அவனை ஏறிட்டவள்,

"எழுந்திருக்க முடியல மாமா.. உடம்பு வலிக்குது, என்ன என்னவோ பண்ணிட்டீங்க நீங்க.." என்று கேவியவளை விட்டால் நாள் முழுக்க திகட்டாமல் பார்த்துக் கொண்டு இருப்பான் ஆத்வி.

உறக்க கலகத்தில் கலைந்த கேசமும், லேசாக உப்பி இருந்த சிவந்த செந்நிற முகமும், கழுத்து வரை இருந்த வெள்ளை போர்வை, அதற்கு மேல் அவன் கட்டிய பொன்தாலி கயிறு என பார்க்க பார்க்க திகட்டாத கலைந்த ஓவியமாக இருந்தாலும், இப்போது பாப்பாவாக மாறி குற்றம் சாட்டி அழ தொடங்கி விட்டாளே!

"நான் என்ன டி பண்ணேன் உன்ன, உன் பஞ்சி உடம்பு தாங்காதுனு விலக போனவன உசுப்பேத்தி, உன்மேல போட்டு விட்ட ஆட்டத்தை தொடங்கி வச்சது நீ.. இப்போ வந்து நான் தான் காரணம்னா நான் என்ன பண்றது..

சரி எங்கெங்க வலிக்குது, காட்டு நான் பாக்குறேன்.." அவன் கேலியாக சொன்னாலும், மனைவியின் வலி நிறைந்த முகத்தை கண்டு, உண்மையில் தன்னவளை முரட்டுத்தனமாக தன்னையும் அறியாமல் காயப்படுத்தி விட்டோமோ என்ற பரிதவிப்பில், அவள் போர்வை விளக்கப் போக, சட்டென அவன் நெஞ்சில் சுருண்டுகொண்ட கவி,

"இப்டியே என் முதுகை தடவிக் கொடுங்க, கொஞ்ச நேரத்துல வலியெல்லாம் சரியா போய்டும்.." என்றவளின் மூக்கை அவன் ரோமம் நிறைந்த நெஞ்சில் துடைக்க,

"ஏய்.. என்னத்த டி அங்கே துடைக்கிற.." என்றவனுக்கு தன்னவளின் சிறுபிள்ளை தனத்தில், தானாக புன்னகை அரும்பியது அவனது தடித்த இதழினில்.

"ஹ்ம்.. நீங்க நினைக்கிறது தான் துடைச்சேன், இன்னும் துடைப்பேன்.." மீண்டும் அவன் நெஞ்சில் மூக்கால் முட்ட,

"அய்ய.. ச்சீ.. அசிங்கம் டி நீஇ.." பொய்யாக முகம் சுளித்தவனை தலை தூக்கி முறைத்த கவி,

"ஆமா நான் அசிங்கம், சார் மட்டும் சுத்தசிகாமணி பாரு.." என்றவள் நருக்கென அவன் அடிவையிற்றில் கிள்ளி விட்டதில், உஃப்.. என காலை குறுக்கி வாயை உப்பியவன்,

"ஏய் ராட்சசி அதுவும் இதுவும் ஒண்ணா டி, உயிர் நாடில கை வைக்கிற பாவி.." பொய்யாக கடிந்தவனை முறைக்க முயன்று சிரித்த மனைவியை, மொத்தமாக தன் கொஞ்சல் அணைப்பில் அடக்கி விட்டிருந்தான்.

இனிமையான நாட்களாக ஒவ்வொருவருக்கும் பொழுதுகள் கழிய, ஸ்வாதிக்கு தற்போது நன்றாகவே உடல் தேறி இருந்ததில், யாதவ் ஸ்வாதியின் திருமணம் கூடிய விரைவில் வைத்திருந்தனர் பெரியவர்கள்.

புதுமண காதல் ஜோடிக்கு சொல்லவா வேண்டும்! தனிமையின் பொழுதுகலில் எல்லை மீராத காதல் பாடங்கள் பயின்று, ஒருவர் மேல் மற்றொருவருக்கு அன்பு கூடி, இன்னும் அதிகமாக தங்களின் காதலை வளர்த்து, ஒருமத்த தம்பதிகளாக வாழ வேண்டும் என்று, தங்களை தயார்ப் படுத்திக் கொண்டிருந்தனர்.

இப்போதெல்லாம் விக்ரமை பொறுப்பாக கவனித்துக் கொள்ளும் பொறுப்பை ஸ்வாதியே கையில் எடுத்துக் கொண்டாள். கவி செல்லும் போதே அனைத்தையும் புரியும்படி சொல்லிக் கொடுத்து சென்றிருந்ததில், விக்ரமை பார்த்துக் கொள்வது ஒன்றும் சிரமமாக தோன்றவில்லை. கூடவே சமையல் பொறுப்புகளையும் அவ்வபோது எடுத்துக் கொண்டு மித்ராவை அடக்கி வைக்க, பொய்யாக முகம் வாடி போவதை கண்டு, மொத்த குடும்பமும் நமட்டுப் புன்னகை பூத்துக் கொள்ளும்.

ஆரு அஜய் தன்யா என குடும்பமாக யாதவின் திருமண வேலைகளை பார்க்க வந்து விட்டனர். புது மாப்பிளை வெளியே செல்ல வேண்டாம் என்று ஆதி மித்ரா இருவரும் ஸ்ட்ரிட்டாக சொல்லி விட, அலுவலக வேலையும் காதல் லீலையும் வீட்டில் இருந்தே செய்துக் கொண்டு குஜாலமாக இருந்தான் யாதவ்.

அன்றும் அவன் அறையில் அமர்ந்து வேலை செய்யாமல், தன் வருங்கால மனைவியின் அறைக்குள் திருட்டுத்தனமாக புகுந்து, இரண்டு வேலையை ஒரே நேரத்தில் செய்யப் பார்த்த திருடனின் கைபேசி அலறிட, அவள் திணற திணற முத்தமிட்டுக் கொண்டிருந்திவனை பிரிக்க முடியாமல் தள்ளி விட்டவளாக, வெட்கம் கொண்டு அங்கிருந்து ஓடிய மங்கையைப் பார்த்துக் கொண்டே போனை எடுத்து காதில் வைக்க,
"சார் நான் வெங்கட் பேசுறேன்" என்றார் மேனேஜர்.

"ம்ம்.. என்ன விஷயம் வெங்கட்"

"சார் உங்கள அந்த பழைய டீலர் பாக்காம போக மாட்டேன்னு, ரெண்டு நாளா நம்ம ஆபிஸ் கேட்கிட்டவே நின்னு கெஞ்சி அழுதுட்டு இருக்கான் சார்.. நானும் நீங்க இல்ல பாக்க முடியாதுனு பலமுறை சொல்லிட்டேன், அவன் கேக்குற மாதிரி இல்ல, அதான் வேற என்ன பண்ணலாம்னு கேக்க உங்களுக்கு கூப்ட்டேன்" என்றார் அவர்.

சிறிது நேர யோசனையாக நெற்றியை நீவியவன், "வாங்கின அடி பத்தல போல, பேசாம அவன் கை கால பதம் பாத்து அனுப்புங்க வெங்கட், இனிமே அவன் கம்பனி பக்கம் வரவே கூடாது.." என்றவன் முகத்தினில் தான் எத்தனை க்ரூதம்.

ஆருவிடம் எடக்கு மடக்காக எகுறிய அந்த டீலர் தான் அவன்.

ஆரு அவரின் பொருட்களை தரமற்றது என அத்தனை பேர் முன்னிலையில் சொல்லி, விளம்பரம் தர மாட்டேன் என்றது அவனுக்கு அவமானமாய் போக, அவளை பழி வாங்கும் நோக்கத்தோடு நேரம் பார்த்துக் காத்திருந்தான்.

ஆருவின் நன்பெயரை கெடுக்கும் விதமாக, அவளை நோட்டம் விட்டுக் கொண்டே இருந்து, அவளின் அலுவலக கிளை ஒன்றில் பொழுது சாய்ந்த நேரம் ரவுன்ஸ் சென்ற இடத்தில், ஆள் வைத்து போதை பொருள் கலந்த குளிர்பானம் கொடுத்து, இரண்டு தடியர்கள் அவளை கட்டாயப்படுத்திக் கொண்டிருந்த நேரம், மனைவிக்கு வெகு நேரமா போன் செய்தும் எடுக்காமல் இருக்கவே, மனம் பிசைந்து அவள் எண்ணை ட்ராக் செய்து வந்து பார்த்த அஜய், ரத்தம் கொதித்துப் போனான்.

சுயநினைவு சிறிது சிறிதாக தன்னை விட்டு பிரிந்து செல்லும் நிலையிலும், கையில் கிடைக்கும் பொருட்களை எல்லாம் எடுத்து, தன்னை நெருங்க வரும் பாவிகளை சராமாறியாக தாக்கி தள்ளாடிக் கொண்டு இருக்கும் வேளையில், ஒருவன் அவளை மடக்கிப் பிடித்து கீழே தள்ளி அவளருகில் படுத்து, ஆரு தடுக்கத் தடுக்க விதவிதமான கோணத்தில் தவறாக ஃபோட்டோக்கு போஸ் கொடுக்க முனைகையில், மற்றொருவன் தனது போனில் படபடவென புகைப்படத்தை கிளிக் செய்துக் கொண்டு இருந்தான்.

அங்கு நடப்பதை கண்டு மிருகமாய் உருமாறிய அஜய், "டேய்ய்.. என்ற உரிமலோடு இருவர் மீதும் புலியாக பாய்ந்து அடி பிரட்டி எடுத்து, உயிர் போகும் அளவுக்கு அடித்துக் கொண்டிருந்த போது முக்கிய வேலையாக அங்கு வந்த யாதவ், ஆருக்கு நடக்கவிருந்த அநியாயம் அறிந்து அவனும் தன் பங்குக்கு அவர்களை பிரித்து மேய்ந்து விட்டான்.

அந்த டீலரை கொல்லத் துடித்து எகிறிய அஜயை சமாதானம் பேசி ஆருவுடன் அனுப்பி வைத்தக் கையோடு, நின்ற இடத்தில் இருந்தே அந்த டீலரின் மொத்த சொத்துகள், வீடுகள், கெஸ்ட் ஹவுஸ் என அனைத்தையும் பறிமுதல் செய்த யாதவ், பிச்சை எடுக்கும் அளவிற்கு என்ன, கட்டாயம் பிச்சை தான் எடுக்க வேண்டும் என்ற நிலைக்குக் கொண்டு வந்து, நடுத் தெருவில் நிறுத்தி விட்டான்.

அப்போதையில் இருந்தே, செய்த தவறுக்கு மன்னிப்புக் கோரி, இழந்த சொத்துக்கள் மட்டும் திருப்பிக் கொடுத்தால் போதும் என அவனும் நொந்து போய் அலைந்துக் கொண்டு இருக்கிறான். ஆனால் அப்படி நடப்பது தான் சாத்தியமற்ற ஒன்றாயிற்றே!

"என்னங்க யார்கிட்ட பேசிட்டு இருக்கீங்க.." காபி கொண்டு வந்த ஸ்வாதி, யாதவை சந்தேகமாக பார்த்தபடி அவன் எதிரில் நிற்கவும்,

"ஐயோ இவ எப்போ வந்தா.." என்ற யோசனையில்,
"ஆபிஸ் கால்மா, ஆமா கைல என்ன ஸ்வாதிமா காஃபியா குடு குடு சூடு ஆறிட போகுது.." என்றபடி அவளிடமிருந்து காபியை வாங்கிப் பருகியவன் பார்வை, அவளையும் சேர்த்தே பருகியது.

பிச்சி தின்னும் பார்வையில் கூச்சமாக நெளிந்தவள், "ஆமா உங்க ரூம்ல இல்லாம இங்கே என்ன பண்றீங்க, இப்டி அடிக்கடி இங்கே ஓடி வந்துடீங்கன்னா அத்தை மாமாலாம் பாத்தா என்ன நினைப்பாங்க..

நீங்க பாட்டுக்கு ஒன்னும் தெரியாத மாறி போயிட்றீங்க, ஆனா என்னக்கு தான் சங்கடமா இருக்கு அவங்களை எல்லாம் பாக்க.. கல்யாணம் வரைக்கும் கொஞ்சம் அமைதியா இருந்தா என்னவாம்.." எங்கோ பார்த்து அவள் உரைத்திருக்கும் போதே இடைமறித்து அவளிடம் நெருங்கிய யாதவ்,

"கல்யாணத்துக்கு அப்புறம் அமைதியா இருக்க வேண்டாமா ஸ்வாதிமா.." ஒரு மார்க்கமாக கேட்டவனை கண்டு வெட்கம் கொண்ட பாவையின் மனமோ, உள்ளுக்குள் வாடியே இருந்தது.

என்னதான் வெளியே தன்னை அவள் மகிழ்ச்சியாக காட்டி, பழைய ஸ்வாதியாக தன்னை மாற்றிக் கொள்ள முயற்சி செய்துக் கொண்டிருந்தாளும், செந்திலின் முன் அவள்ப்பட்ட அவமாங்கள் அடிக்கடி தோன்றி மறைந்து, மன நிம்மதியை குலைத்து விடுகின்றது.

நடந்த சம்பவத்தை முற்றிலுமாக மறக்க தான் நினைக்கிறாள். ஆனால் ஏதாவது ஒரு வடிவில் தோன்றி, மானம் காக்க ஓடிய அந்த நிர்வாணக் கோலம், உயிருடன் மாய்த்துக் கொள்ளும் வேதனையை அளிக்கின்றதே!

சட்டென அவள் முகம் மாறியதை உன்னிப்பாக கண்டு கொண்ட யாதவ், "நடந்தத மறக்க முடியாம ரொம்ப கஷ்டப்படுறேல்ல ஸ்வாதி.." இறுகிய குரல் ஒளிக்கவும் உடனே முகத்தை மாற்றி சிரிக்க முயன்றவள்,

"ந்.நான் எ.என்ன கஷ்டப்படுறேன், அதெல்லாம் ஒ.ஒன்னும் இல்லையே.." தடுமாற்றமாக கையை பிசைந்தவளைக் கண்டு இடவலமாக தலையாட்டி சிரித்தவன், ம்ம்.. என கீழ் அதரம் கடித்து,

"நம்பிட்டேன் டி.." என்று நக்கலாக மொழிய, புரியாமல் விழித்தவளின் உள்ளமோ, தன்னை கண்டுகொண்டானோ என்ற பதைபதைப்பில் இருந்தது.

"கேவலம் துணி இல்லாத வெறும் சதைய ஒரு வெறி நாய், வக்கிர எண்ணத்துல பாத்துட்டான்னு இன்னும் உக்காந்து ஃபீல் பண்ணிட்டு இருக்கியே, உன்ன என்ன டி பண்றது.." சாதாரணமாக தான் பேசுவதை போல் இருந்தது, ஆனால் அதில் அடங்கி இருந்த ஆத்திரத்தை நன்றாக உணர்ந்துக் கொள்ள முடிந்தது அவளால்.

கண்கள் கலங்கிப் போக தலை குனிந்து நின்றவளை கண்டு நிதானமாக மூச்சை வெளியேற்றிய யாதவ், "ஒரு பொண்ண உண்மையா நேசிக்கிற ஆண்களால மட்டும் தான், அவ உடலோட மனதோட மென்மையான புனிதத்தை உணர முடியும்.. விருப்பம் இல்லாத நேரத்துல மனசலவுல விரும்புறவனே ஆசையா பாத்தாலும், அருவருப்பா எரிச்சலா தான் இருக்கும்..

அதெல்லாம் அவனை மாதிரி காமப்பிசாசுக்கு தெரிய வாய்ப்பே இல்ல.. உன் சுயநினைவ பறிச்சி உனக்கே தெரியாம அவன் கேவலமா நடந்துக்கிட்டதுக்கு நீ என்ன டி பண்ணுவ..

ஜஸ்ட் நீ துணி மாத்தும் போது, உயிரும் உணர்வும் இல்லாத இந்த சுவரு பாத்ததா நினைச்சி எல்லாத்தையும் மறந்திடு ஸ்வாதி, இவ்ளோ தான் என்னால சொல்ல முடியும்.. இதுக்கு மேலையும் வர்த்தே இல்லாத விஷயத்தை பிடிச்சிட்டு ஃபீல் பண்ணிட்டு இருப்பேன்னா, அந்த ஃபீலிங்க்ஸ் எல்லாம் சுத்த வேஸ்ட்டுனு தான் நான் சொல்லுவேன்..

ஏன்னா எவன் பாத்துட்டான்னு நெனச்சி நீ ஒவ்வொரு நாளும் கவலைப்பாடுறியோ, அப்டி ஒருத்தன் இப்போ உயிரோடவே இல்ல.." ஒவ்வொரு வார்த்தையும் அழுத்தமாக கூறி விட்டு, அவள் அதிர்ந்த விழிகளை பார்த்தபடியே வேகமாக அங்கிருந்து சென்று விட்டான் யாதவ்.

வெங்கட்டிடம் ஸ்வாதியை பற்றிய விபரங்களை கேட்டு ஓரளவு தெரிந்துக் கொண்டவனுக்கு, ஏகபோக கோவத்தில் செந்திலை வெறித்தனமாக கொல்லும் அளவிற்கு ஆத்திரம் சீறியது.

அவன் எங்கே என்று விசாரித்த வரையில், ஸ்வாதி கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்ததும் அவள் இறந்து விட்டாள் என நினைத்து, அந்த பயத்தில் சிறிது நாட்கள் தலைமறைவாக இருந்தவன், பின் அவள் உயிருடன் இருக்கிறாள் என்றதோடு, அவளால் எந்த ஒரு சிக்கலும் தனக்கு ஏற்படவில்லை என அறிந்துக் கொண்டு, ஒன்றும் தெரியாதவன் போல் மீண்டும் அலுவலகம் செல்லத் தொடங்கி இருந்தான்.

ஸ்வாதியை இந்த நிலைமைக்கு கொண்டு வந்தவனை கண்டறிந்து, வெறித் தீர அடித்தே கொல்ல வேண்டும் என்ற எண்ணங்கள் யாவும், கவி மீதிருந்த கோவத்தில் சற்று காணாமல் போனது ஆத்விக்கு.

தோழி மீது உயிராக இருப்பதுவெல்லாம் சரிதான், அதற்காக துணிந்து அவள் உயிரையே தியாகம் செய்ய போனது, அவன் உயிர் வரை ஆறாத ரணம் கண்டு, கோவம் தீரும் வரை கவியை பார்ப்பதையே தவிர்த்தவனது நேரங்களை, வேலைகளே சுருட்டிக் கொண்டது.

அதன் பிறகு கவி அவனிடம் மூன்றாவது நபர் போல் பணம் கொடுத்ததற்கு நன்றிக் கூறி, அந்த பணத்தையும் திரும்பி தருகிறேன் என்றது எல்லாம் இன்னும் அவன் கோவத்தை அதிகப்படுத்தி இருக்க, பாதி கோவத்தை அவளிடம் வார்த்தைகள் மூலம் கொட்டி விட்டு, யாதவின் அலுவலகம் சென்று ஸ்வாதியின் நிலைக்கு காரணம் யார் என்று அவன் கண்டறியும் போது தான் தெரிந்தது, யாதவ் ஸ்வாதி இருவரும் விரும்புவது.

சந்தேகம் இருந்தது தான். அன்று ரெஸ்டாரன்ட்டில் யாதவ் அவளை பார்த்த விதமும், கேப் கிடைக்கும் போதெல்லாம் அவளிடம் சீண்டி வாம்பிழுத்த அனைத்தையும் பார்த்தவனுக்கு, அப்போது பெரிதாக எதுவும் தோன்றவில்லை.

ஆனால் அலைபேசியில், அவள் எங்கே என்று யாதவின் பேச்சில் இருந்த படபடப்பே, அவன் காதலை திரைவிளக்கிக் காட்டிட, அவனிடம் எதையும் கூறி பயம் கொள்ள வைக்க விரும்பாமல், அப்போதும் சிடுசிடுவென விழுந்து விட்டு போனை வைத்த ஆத்வி, செந்திலை அல்லேக்காக தூக்கி இருந்தான்.

மயக்கம் தெளிந்து பேந்த பேந்த விழித்துப் பார்த்த செந்தில், அவன் எதிரே ராஜ தோரணையில் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்த ஆத்வியை கண்டு மிரண்டு விழித்தவன்,

"ஸ்.சார்.. நான் எப்டி இங்கே வந்தேன், வெளிய தானே இருந்தேன்.. சரி பரவால்ல எப்டியோ வந்துட்டேன், சார் என் வேலைய பாராட்டி ப்ரமோஷன் கொடுக்க போறதா நீங்க வர சொல்லி இருந்தீங்களாம், அதான் தாமதிக்காம உடனே ஓடி வந்துட்டேன்.." வாயெங்கும் பல்லாக அவன் மொழிய, ஆத்வியின் முகமோ கோவத்தில் ஜொலித்தது.

வெகு நேரம் பதில் வராமல் உள்ளுக்குள் அடக்கப்பட்டக் கோபத்துடன், அமைதியாக தாடையில் விரல் வைத்தபடி கூர்மையாக பார்த்து அமர்ந்திருந்த ஆத்வியின் கத்திப் பார்வை, மெதுமெதுவாக அவன் நெஞ்சில் பாய்ந்து பயத்தைக் கிளப்பிக் கொண்டிருந்தது.

"ஸ்.சார்.. ப்ரமோஷன் லெட்டர் கொடுத்தீங்கன்னா நான் போய்டுவேன்.." என வாயெடுக்கும் போதே, அதற்கு மேலும் கோவத்தை கட்டுப்படுத்த முடியாமல் அவன் மார்பில் எட்டி ஒரு உதை விட்டதில், சுவற்றில் பந்தாக மோதி கீழே விழுந்தவனால் எழுந்து நிற்க கூட தெம்பில்லை. ஆனால் கோவம் மட்டும் புசுபுசுவென ஏறியது.

"டேய்.. இப்ப எதுக்கு என்ன கூப்ட்டு வச்சி அடிக்கிற, நான் உனக்கு என்ன டா பண்ணேன்.." இருமலோடு நெஞ்சைப் பிடித்துக் கொண்டு செந்தில் கத்த,

இடுப்பில் இருந்த பெல்ட்டை கழட்டியபடியே கண்ணில் அனல் பறக்க அவனை நெருங்கிய ஆத்வி, எதற்கு அடிக்கிறோம் என்று சொல்லாமலே அடி வெளுத்து வாங்கிவிட்டான்.

வலியில் "ஆஆ.. அம்மா... வலிக்குதே.. ப்ளீஸ் விட்று.. என தரையில் உருண்டு பிரண்டவனுக்கு, ஆத்வி ஏன் அடிக்கிறான் எதற்கு அடிக்கிறான் என்று தெரியாமலே மண்டை காய்ந்தது.

அதுதானே ஆத்விக்கும் வேண்டும். என்ன தவறு செய்தோம் என்றே தெரியாமல் தண்டனை அனுபவிப்பது தான் இருப்பதிலேயே கொடுமையான தண்டனை. அதை தான் தினம் அவனுக்கு யோசிக்கக் கூட நேரம் தராமல் இருட்டுஅறையில் அடைத்து வைத்து, யாதவ் வரும் வரை தண்டனை வழங்கினான். தினம் ஒருமணி நேரம் மட்டும் வெளிச்சத்தை காட்டுவான், இல்லையேல் மூன்று தினங்கள் கூட அவனால் உயிர் பிழைத்திருக்க முடிந்திருக்காது.

ஒரு பெண்ணின் சம்மதமின்றி எல்லை மீற நினைக்கும் ஒவ்வொரு மிருகங்களுக்கும் கொடுமையான தண்டனையை வழங்கினாலே, மிருகமாக மாற நினைக்கும் சிலர், பயத்திலே அந்த தவறை இழைக்க பயந்து ஓடி ஒதுங்கி விடுவர்.

ஒவ்வொரு நாளும் ஸ்வாதி படும் துயத்தை கண்டு காரணம் அறியாமல் முதலில் வெம்பித் தவித்த யாதவ், பின் இதுதான் பிரச்சனை என்று தெரிந்ததும் கொதித்து போய் ஆத்விக்கு அழைத்து, "அண்ணாஆ.." என்றழைத்தது தான் தாமதம்.

"நீ ஃபோன் பண்ணுவேன்னு தெரியும், உனக்காக தான் அந்த நாய கொல்லாம விட்டு வச்சிருக்கேன், நம்ம சரக்கு குடவுன்ல அந்த நாய் இருக்கான்.." என்றதோடு அழைப்பை துண்டித்தவனுக்கு நன்றாக தெரியும், செந்திலின் உயிர் அன்றோடு உலகை விட்டு பிரிந்து விடும் என்று.

யாதவோ அவனை வெறி தீரும் வரை கையாலே அடித்துக் கொன்றவனுக்கு, ரத்தம்கக்கி செத்தவனை சாம்பலாக்கி விட்டபின் தான் கோவம் தனிந்தது.

சாதாரணமாக பார்க்கும் கண்களுக்கு என்னவோ, 'அப்படி என்ன அந்த பெண்ணை கெடுத்தா விட்டான் இத்தனை பெரிய தண்டனை' என்று தோன்றும்.

ஆனால் அவன் செய்த பெரும்தவறினால், காலத்திற்க்கும் மறவாத முத்திரையாக அவள் நெஞ்சில் படிந்திருக்கும் வேதனை கரை, பாதிக்கப்பட்ட பெண்ணும் அவளை சுற்றி உள்ள குடும்பமும் மட்டும் தான் தீராத ரணத்தை சாகும் வரை அனுபவித்துக் கொண்டிருப்பர். காயப்பட்டு அவமானத்தில் புழுங்கும் மனம், உயிருடன் வெந்து துடிக்கும் வேதனையை, அவன் என்ன தான் கொடூரமாக செத்தாலும் அதற்கு ஈடுஇணை ஆகி விடுமா என்ன!

அலட்சியம் செய்து கேலி பேசும் ஒவ்வொருரின் வீட்டிலும், இப்படி ஒரு சூழ்நிலையில் பாதிக்கப்ட்டவர்கள் இருந்தால் தான், அதன் வேதனையை உணர்வு பூர்வமாக உணர்ந்துக் கொள்ள முடியும்.

அறம்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறம்கூறான் என்றல் இனிது.
 

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 61
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top