- Messages
- 310
- Reaction score
- 217
- Points
- 63
அத்தியாயம் - 10
யமுனா இதுநாள் வரை என்ன நினைத்து பயந்து பலவிதமான கற்பனைகள் செய்து உள்ளுக்குள் செத்து செத்து மடிந்துக் கொண்டிருந்தாளோ! அந்தநாள் இனிய நாளாக மனித உருவை கொண்ட ராட்சசன் தனி விமானம் மூலம் இந்தியா வந்திறங்கினான்.
அவனது நீல விழிகளுக்கு ஏற்றார் போல் நேவிப்ளூ நிற கோர்ட் சூட்டில் ஆண்மையின் கம்பீரம் மிளிர ஷூ சத்தம் அதிர நடந்து வந்தவன், வெயிலின் தாக்கத்தில் கண்கள் கூச கருப்பு நிற கூலிங் க்ளாசை எடுத்து ஸ்டைலாக கண்ணில் மாட்டியபடி சென்றவனை கடந்து போவோர் பாலிவுட் அக்ட்ரஸ் ரேஞ்சிக்கு ஆவென வாய் பிளந்து பார்ப்பதை எல்லாம் வினோதமாக பார்த்தபடி பின்னால் ஓடி கார் கதவை திறந்து விட்டான் ஸ்டீஃபன்.
"முதல்ல எந்தெந்த பிராஞ்சஸ் எல்லாம் போகணுமோ அங்கேயெல்லாம் லிஸ்ட் வைஸ் போ. வித் இன் த்ரீ டேஸ்ல ஃபுல் பிராஞ் விசிட் முடிச்சிட்டு ஃபோர்த் டே ஹைதராபாத் மெயின் பிராஞ் திறப்பு விழாவை முடிச்சிட்டு அதை தொடர்ந்து மத்த ஊர்ல இருக்க பிராஞ்ஸை ஓபன் செய்துக்கலாம்"
கார் சீட்டில் வாகாக சாய்ந்து அமர்ந்த யுகன் வேலைகளைப் பற்றி சொல்லிக்கொண்டே வர, அனைத்திற்கும் "ஓகே சார், எஸ் சார்" என்று வேகவேகமாக பதிலளித்தபடி வந்தான் ஸ்டீஃபன்.
"சரியா 5த் டே லாஸ்ட் டைம் ஸ்டே பண்ண மூணார் டிரான்ஸ்பரென்ட் ஹட் ரெசார்ட்ல புக்கிங் செஞ்சிடு" வேறு ஏதோ நினைவாக கண்களில் வர்ணிக்க முடியாத உணர்வுகளை கூட்டி அவன் சொன்னதும்,
அதற்கும் மறுப்பின்றி சரி என்றவன் முன்க்கூட்டியே போகும் இடத்தில் உள்ள லக்ஸரி ரெசார்ட்களில் எல்லாம் அந்தந்த பொழுதுகள் ஓய்வுக்கு தங்கிக்கொள்ள, புக்கிங்க் செய்யும் வேலைகளை சேர்த்து மற்ற வேலைகளிலும் மும்முரமாக இருந்தான்.
குழந்தை பிறந்து மூன்று தினங்கள் நிறைவடைந்த நிலையில், ரெசார்டில் யமுனாவை காணாமல் தேடிய மேனேஜ்மென்ட் குழு, சரித்ராவை அழைத்து விசாரித்ததில் அவளும் தனக்கு தெரியாது என பதறிய நிலையில் முதலில் அங்குள்ள அனைவரையும் விசாரித்துப் பார்த்தபின், சிசிடிவியை ஆராய்ந்து பார்த்து அவள் சென்ற திசையெல்லாம் ஆங்காங்கே பொருத்தி இருந்த சிசிடிவி மூலம் அறிந்து கொண்டனர்.
கடைசியாக ரெசார்டின் மிக அருகாமையில் உள்ள அரசு மருத்துவமனையருகில் அவள் வலியால் துடித்தபடி சென்றதை அறிந்துகொண்டு, விரைவாக அங்கே சென்று அவள் நிலையை விசாரித்து, குழந்தை பிறந்து நன்றாக இருக்கிறாள் என்றதும் மேனேஜ்மென்ட் குழு தங்களுக்கும் தங்களது ரெசார்டிகும் ஏதும் பிரச்சனை இல்லை என்ற பெருமூச்சு விட்டு சென்றிட, சரித்ரா தான் தோழிக்கு என்னானதோ குழந்தை எப்படி இருக்கிறதோ என்ற பதட்டத்தோடு அவளை பார்க்க ஓடினாள்.
"இதழ் எப்படி இருக்க டி" தோழியின் குரலில் பிரகாசமான யமுனா, "நல்லா இருக்கேன் சரித் ஆமா நான் இங்க தான் இருக்கேன்னு எப்படி கண்டு பிடிச்ச"
குழந்தை அருகில் அமுது பருகிக்கொண்டே அழகாக உறங்க,
சட்டென எழ முடியாமல் வலியில் முகம் சுருங்கியவளை, "பாத்து இதழ் நீ படு" என தவிப்பாக வந்து படுக்க வைத்தாள்.
"எல்லாம் சிசிடிவி புண்ணியம்தா, காலைல வந்ததும் வராதுமா உன்னை காணோம்னு ரெசார்ட் முழுக்க பரபரப்பு, நானும் பயந்து போய்ட்டேன் தெரியுமா. எல்லாம் உன்னால தான், உங்கூடவே இருக்கேன்னு சொன்னவளை போய் அம்மாவ பாத்துட்டு வா ஆட்டுக்குட்டிய பாத்துட்டு வான்னு கம்பல் பண்ணி அனுப்பி வச்சு இப்ப பாரு எந்த நிலைமைல கொண்டு வந்து விட்டிருக்குனு."
குழந்தையைப் பற்றிய நினைவே இல்லாமல் தோழியைப் பற்றிய கவலை மட்டுமே மண்டையில் ஓட வந்ததும் வராததும் அவளையே சாடிக் கொண்டிருக்க, "சரித் கோச்சிக்காத டி. இன்னும் குழந்தை பிறக்க ரெண்டு வாரம் டேட் இருக்கேன்னு நினைச்சி தான் உன்னை வீட்டுக்கு போய்ட்டு வர சொன்னேன். ஆனா திடீர்னு வலி வரும்னு தெரியல டி. அதான் யாருக்கும் சொல்ல முடியாம போச்சி. ப்ளீஸ் கொஞ்சம் சிரியேன்"
அவள் தாடை பிடித்து ஆட்டும் போது தான் கண்டாள் யமுனா அருகில் கண்ணனை மூடி உதட்டை பிதுக்கியடி கனவுலகில் தாயமுதுடன் சஞ்சரித்து ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த குட்டிநீலக் கண்ணனை.
யம்மாடியோ.. பார்த்ததும் வியப்பில் விரிந்த விழிகளுடன் வாயில் கை வைத்துக் கொண்டவளை பார்த்து மெலிதாக சிரித்தாள் யமுனா.
"இதழ் நிஜமாவே இதுதான் உன் குழந்தையா! இல்ல யாரும் கூட இல்லனு வேற குழந்தைய மாத்திகீத்தி வச்சிட்டாங்களா டி" நம்பமுடியாமல் கேட்டவளை பொய்யாக முறைத்து "ஏய் என் குழந்தை தான்டி அழகா இருக்கான்ல" ஆசையோடு மகனைப் பார்த்தாள்.
"இதழ் உண்மையாவா நிஜமா என்னால நம்ப முடியல டி. குழந்தைய பாக்க உன் ஜாடை கொஞ்சம் கூட இல்ல ஆனா இவனை நாள் முழுக்க பாத்துட்டே இருக்கலாம் அவ்வளோ அழகு"
இத்தனை மாதமும் உடன் இருந்து யமுனாவை ஒரு சகோதரி போல் கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டவளுக்கு குழந்தையை கண்டதும் ஆனந்தக் கண்ணீர் தானாக பெருகிட, உறங்கும் குழந்தையின் குட்டிக் கரத்தினை மென்மையாக கையில் பற்றி ஆசையாக முத்தமிட்டாள்.
"மயக்கம் தெளிஞ்சி கண் விழிச்சதும் நானும் உன்னை போல தான் நம்பாம விழிச்சேன் டி. ஆனா இவன் தான் என் குழந்தைனு உணர்வுபூர்வமா எனக்கு அவனோட குட்டி குட்டி செய்கைல உணர்த்திட்டான்" என்று புன்னகைத்து "சரி
சரித் நீ சாப்டியா, ஊர்ல இருந்து வந்தும் ரெஸ்ட் இல்லாம அலைய வேண்டியதா போச்சி" வருத்தமாக சொல்லிட,
"ஆமா டி இப்ப நான் சாப்பிடாதது தான் குறை பாரு. வலியோட தனியா ஹாஸ்பிடல் வந்து சிசேரியன் பண்ணி பிள்ளைய பெத்துக்கிட்டு கூட இருந்து கவனிக்க கூட யாரும் இல்லாம மூணு நாளா கை குழந்தைய வச்சிகிட்டு அவ்வளோ கஷ்டத்தை பட்டுட்டு, இந்த எழுந்திருக்க முடியாத நிலைலயும் எனக்காக வேற வருத்தப்படுற" அலுப்பாக அலுத்துக் கொண்டவளை கண்டு மெலிதாக புன்னகை பூத்தாள்.
"முதல்நாள் ரொம்பவே கஷ்டமா இருந்துச்சி சரித், அப்புறம் என் பக்கத்துல பெட்ல குழந்தை வச்சிருக்க பொண்ண பாத்துக்க வர அவ அம்மாதான் நான் தனியா இருக்குறதை பாத்து எனக்கு உதவியா இருந்தாங்க, அவங்க வரும் போது எனக்கும் மாத்திக்க நைட்டி குழந்தைக்கும் ட்ரெஸ் கொடுத்து இவன் அழும் போது என்னால சமாளிக்க முடியாம போனா தூக்கி வச்சி தட்டி கொடுப்பாங்க"
சிநேகமாக பார்த்து சிரித்த அந்த பெண்ணை கைக்காட்டி சொன்னதும் நூறுமுறை அந்த பெண்ணின் அன்னைக்கு நன்றி சொல்லி விட்டாள் சரித்ரா.
அதன் பிறகு வந்த நாட்களில் சரித்ராவே உடன் இருந்து குழந்தையையும் யமுனாவையும் பார்த்துக் கொண்டவள், மருத்துவமனையில் இருந்து நேராக ரெசார்டில் தங்கி இருக்கும் அவர்களின் அறைக்கு அழைத்து சென்றாள்.
இருவருக்குமே குழந்தைகளை தூக்கி கையாண்டு பழக்கம் இல்லாமல் முதலில் திணறி திண்டாடி அச்சத்திலே அவனை தூக்கக் கற்றுக் கொண்டு போகப்போக பக்குவமாக கையாள கற்றுக்கொண்டனர்.
ரூமில் இருக்கும் மற்ற பெண்களுக்கும் யமுனாவின் குழந்தையின் வரவில் மகிழ்ச்சி என்றாலும், குழந்தை வீரிட்டு அழும் சமயங்களில் எரிச்சலை மறைத்துக் கொண்டனர்.
"இதழ் குழந்தைக்கு பால் கொடுத்தியா.."
"ம்ம்.. கொடுத்துட்டே இருக்கேன் சரித் ஆனாலும் குடிக்கல" சோர்வாக சொன்னவளை பாவமாக பார்த்தாள் அவள்.
"என்ன டி இவன் இப்படி பண்றான் ஹாஸ்பிடல்ல இருந்த வரைக்கும் இருந்த இடம் தெரியாம அமைதியா இருந்துட்டு ரூம்க்கு வந்ததுல இருந்து சரியா பால் குடிக்காம வயிற்றை இழுத்து பிடிச்சிட்டு அழுதுட்டே இருக்கானே! என்னாச்சி இவனுக்கு"
அவள் மடியில் படுத்துக் கொண்டு பால்சுரபியை முகத்தால் முட்டி நாடுவதும் பின் விடுவதும் என கை காலை தம்கொடுத்து மடக்கியபடி அழுவதும் பின் சாதுவாவதும் என வேதாளம் பட அஜித் ரியாக்சன் போல் மாறி மாறிக் கொடுத்தவனை இருவரும் புரியாமல் பார்த்தனர்.
"இதழ் இப்ப இவனுக்கு பசிக்கிதா இல்லையா" அவன் சேட்டைகள் ரசிக்கும்படியாக இருந்தாலும் அந்த அழுகை தான் பயத்தை கொடுத்தது இருவருக்கும்.
"தெரியலயே டி ஆனா வயிரை பாக்கவும் ஃபுல்லா இருக்க மாதிரி தான் இருக்கு" தோளில் போட்டு தட்டிக் கொடுத்தவள் அதற்குமேலும் முடியாமல் சரித்ராவிடம் குழந்தையை கொடுத்து படுத்து விட்டாள்.
"சரி சரி நீ கொஞ்ச நேரம் தூங்கு நான் அப்படியே வெளிய இவனை தூக்கிட்டு போய் நடந்துட்டு வரேன்" என்ற சரித்ரா, யமுனாவின் வயிற்று காயம் ஆறாமல் இருக்கவே முடிந்த அளவுக்கு அவளே குழந்தையைப் பார்த்துக் கொள்ள முயன்றாள் ஆனாலும் ராட்சசனின் உதிரம் விடவேண்டுமே யமுனாவை.
குழந்தை வீரிட்டு கத்த கத்த இங்கோ யுகனின் மனமெல்லாம் ஒரே படபடப்பு உண்டான உணர்வு. காரணமே இன்றி இதுவரை தோன்றாத புதியதோர் உணர்வாக எந்த வேலையிலும் நாட்டம் இல்லாமல் கடமைக்கே என அவன் பல கனவுகளோடு உருவாக்கிய புதிய வங்கிக் கட்டடங்களை எல்லாம் மேற்பார்வை இட்டபடி இருந்த யுகனின் மாற்றத்தை ஸ்டீஃபன் தாமதமாகவே கவனித்தான்.
"சார் எனி ப்ராப்லம். வர்க்ஸ் எதாவது குறையா?" பவ்வியமாக கேட்டிட, "ம்ஹும்.. நத்திங் நான் கொஞ்சம் வெளிய போறேன் நீ மத்த பிராஞ்சஸ்க்கு விசிட் போய்ட்டு வா" ஒரே வரியில் முடித்துக் கொண்டு
விருவிருவென அங்கிருந்து சென்றதும்,
"ஐயோ தெரியாத ஊர்ல தனியா போறாரே" அவனை தடுக்க முடியாமல் புலம்பிய ஸ்டீஃபன், அவசரமாக காட்ஸை யுகனுக்கு துணையாக அவன் பின்னால் அனுப்பி விட்டு யாருக்கோ குறுஞ்செய்தி அனுப்பினான்.
டேபை எடுத்து ஏற்கனவே வரைந்து வைத்த ஓவியப்பெண்ணின் முகத்தினை ஆழ்ந்து பார்த்து மூச்சை வெளியிட்டவன், "வேர் ஆர் யூ பேபி. உனக்கு ஏதாவது ப்ராப்ளமா? இங்க வந்ததுல இருந்தே உன்னை பாக்கணும் போல மனசு உந்தி தள்ளுது, சீக்கிரம் நீ எங்க இருந்தாலும் தேடி வருவேன். என்னோட தூக்கிட்டு போக"
ஓவியத்தை பார்த்து தானாக பேசியபடி இலக்கின்றி காரை ஓட்டிய யுகன், யாருமற்ற மலை பகுதியில் அருவி கொட்டும் சலசலப்பை கேட்டதும் அவ்விடத்தில் காரை நிறுத்தி சிகரெட்டை எடுத்து பற்ற வைத்து ஆழப் புகைத்து கண்மூடி சீட்டில் சாய்ந்தான்.
"சரித் எதுக்கும் குழந்தைய ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய்ட்டு வரலாமா, ஏன்னே தெரியாம நிறுத்தாம அழறானே பயமா இருக்கு" குழந்தையின் காரணமற்ற அழுகையில் தாயுள்ளம் தவித்து போனது.
"நானும் அதைத்தான் நினச்சேன் இதழ். ஆனா உன்னால சரியா நடக்கக்கூட முடியலயே எப்படி வருவ" குழந்தை பிறந்து பதினைந்து நாட்கள் மட்டுமே ஆகிய நிலையில் இருவரையும் எப்படி அழைத்து செல்வது என்ற கவலை அவளுக்கு.
"பரவால்ல சரித், என் குழந்தைக்காக தானே நான் மேனேஜ் பண்ணிக்கிறேன், இவன் இப்படியே அழுதுட்டு இருந்தா என்னால நிம்மதியா இருக்க முடியல டி" என்றதும் இருவருமாக கிளம்பி ஒரு டாக்சி பிடித்து மெதுவாக அதில் பயணிக்கத் துவங்கியதில் குழந்தையின் அழுகை சத்தம் அப்படியே நின்றதும் இருவருக்கும் ஆச்சரியம்.
(பயபுள்ள இப்பவே ஊரை சுத்திப்பாக்க ஆசை படுது போல)
தொடரும்.

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 10
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.