- Messages
- 300
- Reaction score
- 215
- Points
- 63
அத்தியாயம் - 16
ஏம்மா மோகி அப்பாவ எங்க கூட்டிட்டு போற? கடைல வேலை பாக்குற புள்ள, பொண்ணுங்க போடற துணி எல்லாம் வலது கை பக்கமா தானே இருக்குனு சொல்லுச்சு. நீ என்ன இடது பக்கமா கூட்டிட்டு போறே. ஐயோ இது என்னமா படிக்கட்டு அதுப்பாட்டுக்கு தானா மேல போவுது கீழ எறங்குது, இதுல போனா கீழ உழுந்துட மாட்டோமா. சிறு கிராமத்தை தவிர்து அதிகம் வெளியுலகம் அறியாதவர், மகளை காண வந்தாலும் கல்லூரி வீடு அருகில் உள்ள மளிகைகடை பெட்டிக்கடை என்றே இருந்து பழக்கபட்டவர் இப்போது தான் இது போன்ற அடுக்குமாடி கொண்ட அணைத்து வசதிகளும் கூடிய பெரிய கடைக்கு வந்திருக்கிறார்.
டிவியில் பார்க்கும் சில விடயங்களை எல்லாம் பொம்மை படம் போல் கிராபிக்ஸ் என நினைத்த அனைத்தையும் நேரில் கண்டு வியந்தவராக சிறுவன் போல் விடாது ஒவொன்றிற்கும் மகளிடம் கேள்வி கேட்டுக் கொண்டே வந்த தந்தையை நடப்பதை நிறுத்தி விட்டு பார்த்தவளாக. அது எஸ்கலெட்டர் ப்பா. தமிழ்ல நகரும் படிக்கட்டுனு சொல்லுவாங்க, மூட்டு வலி உள்ளவங்க, அதிக தூரம் நடக்க முடியாதவங்க, பர்ச்சேஸ் முடிச்சிட்டு வெயிட் தூக்க முடியாம ரிலாக்ஸ் பண்ண நினைக்கிறவங்க எல்லாருக்கும் ஈசி மூவ் பண்றதுக்காக தான் இத வச்சிருக்காங்க. இங்கிருந்து நேரா அங்க தானா போறதுக்காக, மேல இருந்து தானா கீழ வரர்துக்காக கண்டு பிடிச்சது. அதோ அங்கே லிஃப்ட் இருக்கே அதுமாதிரி தான். பொறுமையாக அவருக்கு புரியும்படி சொல்லி மீண்டும் நடக்க, இதுல இம்புட்டு விசயம் இருக்குதா ஆனாலும் நம்ம படிலயே ஏறி எறங்கி போய்டலாம் இந்த மாதிரி மின்சாரப்படிகட்டு மின்தூக்கி எல்லாம் எனக்கு சரிப்பட்டு வராதுமா என்றவர் அதுசரி இந்த பக்கம் எதுக்கு கூட்டிட்டு போற அந்த பக்கம் தானே ஒனக்கான துணிங்க இருக்கு என்றார் குழப்பமாக.
இந்த பக்கம் போறது எனக்கு ட்ரெஸ் எடுக்க இல்ல ப்பா. உங்களுக்கு புது ட்ரெஸ் எடுக்க.
என்ன மோகி சொல்ற எனக்கு எதுக்கு இப்ப புது துணி எல்லாம். இருக்குறதே போதும் நீ வாம்மா ஒனக்கு மட்டும் எடுத்துகோ என்றவரை முறைத்தவளாக. என்கிட்ட என்ன ட்ரெஸ் இல்லாமலா இருக்கு அதெல்லாம் போதிய அளவுக்கு நீங்க வாங்கிக் கொடுத்ததே நிறைய இருக்கு, ஒருசில ட்ரெஸ் போடாம வேற வச்சிருக்கேன். ஆனா உங்களுக்கு தான் இந்த ரெண்டு வேஷ்டி சட்டைய விட்டா வேற நல்ல துணிங்களே இல்ல.
அதுக்கு என்னமா பண்றது, வயசான கிழவன யார் பாக்க போறா எனக்கு இதுவே போது கண்ணு. நீனா வெளிய நாலு எடம் போவ உனக்கு எடுதுக்கமா என்றார் தனக்கென்று யோசிக்காத புனித ஜீவனாக.
வயசானாலும் எனக்கு நீங்க அப்பாதான். உங்கள நான் பாப்பேன் ப்பா. நீங்க நல்ல துணி உடுத்தினா எனக்கு தானே பெருமையா இருக்கும். முதல்ல உங்களுக்கு நல்ல சட்டை வேஷ்டிய எடுத்துக்கிட்டு அப்புறம் எனக்கு பாக்கலாம் வாங்க என்றவளோ அவர் மறுக்க மறுக்க கை பிடித்து அழைத்து சென்று அவருக்கு தகந்தார் போன்ற உடையை நேர்த்தியாக தேர்ந்தெடுத்து வேண்டாம் என்று மறுத்தவரை ட்ரையல் பார்த்து வர சொல்லி அனுப்பி விட்டாள்.
சற்று நேரத்தில் எல்லாம், வெள்ளை வேஷ்டியில் கரும்பச்சை நிற பிளைன் கதர் சட்டையின் மீது வெள்ளை துண்டை ஒற்றை பக்கமாக மடித்துப் போட்டபடி வந்து நின்ற தந்தையைக் கண்டு சூப்பர் ப்பா.. என்றபடி புன்னகைத்தவள், அவரை தனியாக நிற்க வைத்து வளைத்து வளைத்து போட்டோ எடுத்தவளாக, தானும் அவரோடு இணைந்து தோளில் கை போட்டு, கன்னத்தில் முத்தமிட்டு என்று செல்ஃபீ எடுத்து மகிழ்ந்துக் கொண்டு இருந்தவளை தீவிழி பார்வையால் எரித்துக் கொண்டிருந்தான் விஷ்வரூபன்.
சார்.. ஸ்.சார்.. குரல் பம்பி வெகுநேரம் அழைத்து கொண்டிருந்த கண்ணனுக்கு நேரம் செல்ல செல்ல விஷ்வாவின் முகம் இறுகிக் கொண்டிருப்பதைக் கண்டு, இப்ப எந்த பேய் இவர பிடிச்சிதுனு தெரியலயே மனதில் நினைத்தபடியே எச்சில் விழுங்கிக் கொண்டு, கிளைண்ட் லைனில் காத்திருப்பதை சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தவித்துப் போனான் அவன்.
காலையில் இருந்து அலுவல் வேலையை முடித்து விட்டு மாலை நான்கு மணியளவில் அவனது பிரமாண்ட துணிக்கடையான விவி டெஸ்க்டைல்ஸ் கடலுக்கு வந்திருந்தான். சாதாரணமாகவே அவன் கடை பண்டிகை நாட்களைப் போல் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும். இப்போது பொங்கல் பண்டிகை வேறு நெருங்கி இருக்க எங்கிருக்கும் மக்கள் கூட்டமும் அங்கு தான் நிறைந்திருந்தது. வண்ண விளக்குகளால் தங்கம் போல் ஜொலிக்கும் கண்ணை கவரும் அழகு மாளிகைக்கு மேலும் அழகு சேர்த்து வாடிக்கையாளர்களை கவர வேறு என்னென்ன அலங்காரம் எல்லாம் எங்கெங்கு செய்வது என்றதை பணியாட்களுக்கு கட்டளை பிறப்பித்து விட்டு கிளம்ப தயாராக இருந்தவனுக்கு மாலை ஆறு மணியளவில் முக்கிய கிளைண்டான ஆஸ்திரேலிய நாட்டு ஆடை வடிவமைப்பாளர் மார்லி ஓலீவரை சந்திக்க வேண்டி இருந்தது.
புதிய ஆண்டில் நடக்கவிருக்கும் 'கூல் ஃபிட்டவுட் செக்மெண்ட்' என்ற உலக அளவிலான ஃபேஷன் ஷோவில் கலந்துக் கொள்ள விஷ்வாவுடன் கைகோர்த்து புதிய ஆடையை அறிமுகம் செய்யவிருப்பது மார்லி ஓலீவர் தான். அதை பற்றிய விடயமாக தான் அவரை பார்க்க கிளம்பிக் கொண்டு இருந்தது. அதற்க்காகவே பணியாட்களுக்கு சொல்ல வேண்டியதை விபரமாக சொல்லி விட்டு அவசரஅவசரமாக வந்துக் கொண்டிருந்தவன் அவன் அறையிலேயே போனை மறந்து வைத்து விட்டது நியாபகம் வரவே, கண்ணனை எடுத்து வர கூறிவிட்டு கீழ் தளத்தை சுற்றி பார்வையிட்டவனின் கூரிய கண்களில் தப்பாமல் விழுந்தது, மோகி அவள் தந்தையோடு சிரித்து பேசி குழந்தைக்கு கை நீட்டி ஒவொன்றையும் காட்டி அதற்கு புரியும்படி விளக்கி கூறுவது போல் ஒவ்வொன்றாக அவருக்கு காட்டி விளக்கம் சொல்லியபடி உடையெடுத்து அவரை அக்கறையோடு கவனித்துக் கொள்ளும் காட்சிகள்.
ரசிக்க வைத்து பொறாமை கொள்ள கூடும் தந்தை மகளின் அழகிய தருணங்கள். இதுவரை போட்டு பழக்கமில்லாத கூலிங் கிளாசை கண்ணில் போட்டு விட்டு கண்கள் இருண்டு நடக்க தெரியாமல் தடுமாறியவரை தாங்கி பிடித்து நடக்க வைத்து தந்தையின் தடுமாற்றத்தை ரசித்து சிரித்து, என்னப்பா நீங்க.. எனக்கே நீங்க தான் நடக்க கத்து கொடுத்தீங்க, இப்ப நான் உங்களுக்கு கண்ணாடி போட்டு விட்டு நடக்க கத்து கொடுக்க வேண்டியதா போச்சி பாருங்க. ஆனாலும் இந்த கண்ணாடி உங்களுக்கு சூப்பரா இருக்குப்பா எனக்காக இன்னும் கொஞ்ச நேரம் மட்டும் போட்டுட்டு இருக்க. குறும்பு புன்னகையோடு ஏதாவது ஒன்று அவருக்கு செய்து அழகு பார்த்து இடைவேளை இல்லாது அவரோடு எதையாவது பேசிக் கொண்டே இருந்தவளின் பால்சிரிப்பை கண்டு ரசிக்க முடியவில்லை அவனால்.
அவளின் சிரிப்பு அழுகை கோவம் தாபம் அணைத்தும் தனக்கே தனக்கென்ற எண்ணம் அவன் ஆழ்மனதை சூழ்ந்து விட்டதுவோ என்னவோ. அவளின் தந்தையை தானே பாசத்தோடு கவனித்துக் கொள்கிறாள் என்றெல்லாம் எண்ணமில்லை. அவரின் எண்ணெய் வழியும் சுருங்கிய மெலிந்த தேகம், நிறம் மாறிய பழுப்பு நிற கசங்கிய வெள்ளை வேட்டி சட்டை என்று அவனுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தி இருக்க, ஆண்கள் என்றாலே கம்பீரமாக தான் இருக்க வேண்டும் என்று நினைப்பவன் அவ்வளவு ஏன் இந்த வயதிலும் அவன் தாத்தா கூட நல்ல உயரத்தோடு புஷ்டியான உடல்வாகு கொண்டு தடி ஊன்றினாலும் கம்பீரம் குறையாது வளைய வருவாரே. அப்படி இருக்க மூட்டை தூக்கி மூட்டை தூக்கியே கூன் விழுந்து தன் உயரத்தை பாதி மறைத்து மகளை விடவும் சிறிது குள்ளமாக இருந்த அவரின் கருநிற எண்ணெய் வடியும் தோற்றம் அருவருக்க தக்கதாக அவன் பார்வைதனில்.
ஏழ்மையில் வாழும் மனிதர்களின் கொடுமையான வறுமையின் பக்கத்தை விக்னேஷ் ஒருவன் மட்டுமே அளவுக்கு அதிகமாக பாத்து அனுபவப் பட்டிருக்கிறானே தவிர்த்து, தமயனுக்கு அப்பக்கத்தை முற்றிலுமாக மறைத்து பணக்கார வாழ்க்கையை மட்டுமே வாழ கற்பித்து கொடுத்தமையால், மோகியின் தந்தை போல் உள்ள மாமனிதர்களை எல்லாம் மிகவும் கேவலமாக நினைக்க வைத்துவிட்டிருந்தது.
ஐந்து ரூபாய் கைக்குட்டையில் இருந்து லட்சம் தாண்டும் உடைகள் வரை அவன் பெயரில் பிரண்டாக பிரிண்ட் செய்து கணக்கின்றி ஆடைகளை வடிவமைப்பவனுக்கு ஏழைகளின் வாழ்வாதாரம் பற்றி எல்லாம் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை தான். கிழிந்த துணியோடு அழுக்கும் நாற்றமுமாக தலைகலைந்து தூசி படிந்து உடலெங்கும் அழுக்கோடு சிரங்கு நாற்றம் வீச தூர நின்று பேசவே அருவருக்கத்தக்கும் சிலரை பார்த்தால் சாதாரண மனிதர்களாகிய நம்மிடையே கூட சகித்துக் கொள்ள முடியாத அளவிற்கு ஒவ்வாமை தோன்றுவதை எப்படி தடுக்க முடியாதோ, அதே மைண்ட்செட்டில் தான் விஷ்வரூபனும். என்ன ஒரு வித்தியாசமென்றால் என்பும் தோலுமாக குடும்பத்திற்காக உழைத்து தோய்ந்து போன உழைப்பாளிகளை அருவருக்கிறான்.
வெற்றிலைப் பாக்கை வாயில் குதப்பிக் கொண்டு ஏழுமூலைக்கு வாய் சென்று நாளா பக்கமும் எச்சில் தெறிக்க பேசுகையில் எரிச்சலும் கோவமும் கொமட்டலும் ஏற்படுமே அது போன்ற அருவருப்பு அவன் எண்ணத்தில். அப்படி பட்டவரை தொட்டு பேசும் அவன் மோகிக்கு ஏதாவது நோய் வந்து விடுமோ என்ற அளவிற்கு அவன் எண்ணம் சென்று கோவத்தை கிளப்பி விட்டிருந்த நேரத்தில், சார்ர்.. மார்லி சார் ரொம்ப நேரமா லைன்ல இருக்காரு உங்ககிட்ட முக்கியமா பேசணுமாம். தயக்கமாக தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அலைபேசியை அவன் முன் நீட்டி. இருக்கவே, இருக்கும் ஆத்திரத்தில் இதுவேறையா என்ற எரிச்சலோடு போனை வாங்கியவன் சற்றே தன்னை நிதானித்தவனாக, யா.. மார்லி. வாட் ஹாப்பண்ட் என்றபடி சற்று தள்ளி சென்று சிறிது நிமிடங்கள் ஆங்கிலத்தில் பேசி விட்டு வந்தவன், கண்ணா மீட்டிங் கேன்சல் பண்ணியாச்சு இன்னொரு நாள் வச்சிக்கலாம் நீ கெளம்பு என கண்களை அலைபாய விட்டு அவரசமாக உரைத்து விட்டு எங்கோ வேகமாக ஓடியவனை வினோதமாக பார்த்தான் கண்ணன்.
அப்பா இந்த ட்ரெஸ் எனக்கு எப்டி இருக்கு ஊதா நிற டிசைனர் புடவையை தன் மீது வைத்து காட்டிட. ஒனக்கு எல்லா துணியும் கச்சிதமா எடுக்கும் கண்ணு உன் மனசுக்கு என்ன புடிக்கிதோ அதையே எடு என்றவரின் தோளில் கைப் போட்டு கன்னத்தில் முத்தம் பதித்தவளாக, அந்த புடவையோடு இரண்டு சுடிதார் செட்டுகளை சேர்த்து எடுத்தவள், இங்கேயே இதே இடத்துலே உக்காந்து இருக்கனும்ப்பா. வேற எங்கேயும் போய்ட கூடாது, நான் போயிட்டு கொஞ்ச நேரத்துல வந்திடுவேன் சரியா. அங்கிருந்த ஒரு இருக்கையில் அமர வைத்து சிறுபிள்ளைக்கு சொல்வதை போல் தந்தையிடம் சொல்லி விட்டு, அவளுக்கு பக்கவாட்டில் இருந்த ட்ரையல் ரூமுக்கு சென்றவளின் பின்னாலே தானும் அசுர வேகத்தில் நுழைந்திருந்தான் விஷ்வரூபன்.
தொடரும்.

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 16
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.