- Messages
- 270
- Reaction score
- 234
- Points
- 43
இதழ் - 17
மகி இப்படி அவன் கை பிடித்து இழுப்பாள் என்று அறியாத அர்ஜூன் அவள் இழுத்த வேகத்தில் அவள் மேலே விழுந்து, இருவருமாக மண்ணில் புரண்டு ஒரு கட்டத்தில் புரள்வது நின்று விட, அர்ஜூன் சட்டையை இறுக பற்றி கண்மூடி அவன் மேல் கிடந்த மகி கண்களை திறந்து அவன் முகத்தை பார்த்தவள் "அத்தான் அத்தான் உங்களுக்கு ஒன்னும் இல்லையே..." படபடப்பாக அதே சமயம் அவள் முகம் பயத்தில் வெளிரி போய் கேட்டாள்.
அவளின் ஒவ்வொரு அத்தான் என்ற அழைப்பும் அவன் மனதில் ஜில்லென்ற சாரல் வீசுவதை போல உணர்ந்தவன், இருந்தும் அவளின் இந்த பயத்தை கண்டவனுக்கும் ஏதோ சரி இல்லை என்றே தோன்றியது.
“ஏஞ்சல் எனக்கு ஒன்னும் இல்ல, ஏன் இப்படி பயந்து போய் கேக்குற?” அவன் சந்தேகத்தை கேட்க,
அவன் பேசுவது எதையும் காதில் வாங்காத மகி, திரும்பவும் அவள் காதில் முன்பு கேட்ட அதே சத்தம் கேக்கவே மேலும் பயத்தில் முகம் வெளிரி, அவள் உடல் நடுங்குவது அப்பட்டமாக அவளுக்கு கீழே படுத்து அவளை தன் மேல் தாங்கி கொண்டு இருந்த அர்ஜூனுக்கு தெளிவாக காட்டி கொடுத்தது.
ஆதூரமாக அவள் முதுகை வருடியவன் "ஏஞ்சல் என்னாச்சு உனக்கு? எதா இருந்தாலும் உன் அத்தான் கிட்ட சொல்லு ஏஞ்சல்" அவளுக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக சொல்ல,
“அத்... அத்தான், அ... அங்க..” அவர்கள் படுத்திருந்த இடத்துக்கு பக்கவாட்டில் கை நீட்டி காட்ட, அவள் கை காட்டிய திசையில் பார்த்த அர்ஜூனுக்கும் இப்போது முகம் வெளிரி போனது என்னமோ உண்மை தான்.
“ஐயய்யோ, இத பாத்து தான் என் கைய புடிச்சி இழுத்து கீழ தள்ளி என் மேல மெத்தைல படுத்து இருக்குறத போல படுத்து இருக்காளா... இவள...”என்று அவளை முறைத்து பார்த்தவன்,
“நான் கூட கொஞ்ச நேரத்துல என்னென்னவோ நெனச்சி கனவெல்லாம் கண்டேன் டி. கடைசில இப்படி பண்ணிட்டியே ஏஞ்சல்..” செல்லமாக மனதில் திட்டி, கண்ணசரும் நேரத்தில் அவன் மேல் இருந்த மகியை வேகமாக அவனின் மறுப் பக்கவாட்டில் புரட்டித் தள்ளிய அர்ஜுன்,
அவன் தலைக்கு நேராக இருந்த, அந்த ஐந்தரை அடி நீளம் உள்ள கருநாகம் ஒன்று, அதன் நாக்கை நீட்டி சத்தமிட்டு கொண்டே அவனை படமெடுத்து அவன் மேல் பாய தயாராக இருக்கும் நேரத்தில், அவன் பின் பாக்கெட்டில் எப்போதும் பாதுகாப்பிற்க்காக வைத்திருக்கும் துப்பாக்கியை எடுத்து அந்த பாம்பின் தலையிலேயே குறி பார்த்து சுட்டு விட்டான்.
அவன் சுட்ட வேகத்தில், பாம்பின் தலையோடு அதன் குருதியும் நிலத்தில் சிதறி அந்த பாம்பு அதன் உயிரை விட்டு இருந்தது.
இத்தனை நேரமும் அர்ஜூனுக்கு தெரியாமல் பின் தொடர்ந்து வந்த கருநாகம் உஸ் உஸ் என்று மெலிதாக சத்தம் எழுப்பிய வன்னம் பதுங்கி இருக்க, அர்ஜூன் மகியை ரசித்து கொண்டு இருந்ததில் அந்த சத்தமெல்லாம் அவன் காதில் விழாமல் போனது. ஆனால் சரியாக அங்கு வந்த மகி, அதன் சத்தம் கேட்டு அந்த திசையில் பார்த்த போது தான் அர்ஜூனையும் பாம்பையும் ஒரு சேர கண்டு பதறி அவனிடம் வரவேண்டாம் சொல்வதற்குள்,
அவனை அது சரியாக சீண்ட போன நேரம், எங்கே அவனுக்கு எதாவது ஆகி விடுமோ என்ற பயத்தில் அவனிடம் ஓடியது.
இது எல்லாம் நொடி நேரத்தில் நடந்து இருக்க, ஏற்கனவே பயந்து போய் இருந்த மகி துப்பாக்கி சத்தத்தில், மேலும் பயந்து உதறலுடன் கண்களை மூடி குறுகிய படி படுத்துக் கொண்டாள்.
பாம்பை சுட்ட அர்ஜூனுக்கும் சற்று இது ஒரு புது வித பயம் கலந்த அனுபவமாக தான் இருந்தது. இதுவரை இத்தனை கிட்டத்தில் இவ்வளவு நீட்டு நாகத்தை எல்லாம் பார்த்தது கிடையாது. நண்பர்களுடன் செல்லும்போது ஜூவில் தான் பாத்திருக்கிறான். அதுவும் கண்ணாடியில் அடைத்து வைக்க பட்டிருக்கும்.
சற்று அசுவாசம் அடைந்தவன் திரும்பி மகியை பார்க்க, அவள் நிலையை கண்டு இழுத்து அணைத்து கொண்டவன் "ஏஞ்சல் ஒன்னுமில்ல ஏஞ்சல், அது செத்து போயிடுச்சு" என்றான் தலை வருடி மென்மையாக.
கொஞ்சம் பயம் விலகி அவனை நிமிர்ந்து பார்த்து அவனுக்கு ஒன்றும் ஆகவில்லை என்று ஒரு நிம்மதி பெருமூச்சு விட்டவள் இறந்து போன பாம்பை பார்த்து "பாவம் அதை ஏன் சுட்டீய அத்தான் அதுக்கிட்ட பாத்து பக்குவமா பேசி அனுப்பி வச்சிருக்கலாம்ல. மச்.. இப்ப அது செத்து போச்சி" என்றாள் வருத்தமாக.
எது பாம்புகிட்ட பாத்து பக்குவமா பேசுறதா, அவள் பேசியதில் அதிர்ச்சியானவன் "என்ன ஏஞ்சல் என்னை பாத்தா மிருகங்கங்கக் கிட்ட பேசி சர்க்கஸ் வித்த காட்றவன் மாதிரி இருக்கா. பாம்பு கிட்ட போய் பேசி அனுப்ப சொல்ற, அதுவும் பக்குவமா வேற. கொஞ்சம் விட்டுருந்தா, உன் அத்தானோட பிளட்ட டேஸ்ட் பண்ணிட்டு வாயில நொறைய வர வச்சிட்டு வந்த வழிய பாத்து போய் இருக்கும்.
அதை சுட்டதனால தான் என் ஏஞ்சல் நீ இப்படி என் மேல படுத்து என்னை பத்தி கவலையெல்லாம்பட்டு ஜாலியா பேசிட்டு இருக்கா. செம்ம பீல்ல ஏஞ்சல்" ஆழ்ந்த குரலில் சொல்லி, அவன் அணைப்பை கூட்ட, தான் இருக்கும் நிலையை அப்போது தான் உணர்ந்த மகிக்கு , ஐயோ என்றாகி விட்டது.
கூச்சத்தில் நெளிந்தவல் "ஐயோ அத்தான் விடுங்க, என்ன பண்றீய? யாராவது பாத்தா என்ன நினைப்பாங்க" அவன் தொட்ட இடமெங்கும் ஒரு வித குறுகுறுப்பு மூட்டச் செய்ய, அவன் அணைப்பில் இருந்து விடுபட முயன்றாள் அவசரமாக.
"யாழு கொஞ்ச நேரம் இப்படியே இரு டி ப்ளீஸ்" என்று சொல்லி கொண்டே சட்டென அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்துக் கொள்ள, மகி தான் இவனின் திடீர் செயலில் சிலையாகி போனாள். ஏனோ அவளாலும் அவனின் இந்த அணைப்பில் இருந்து விடுபட எண்ணம் இல்லாமல் அவன் அணைப்பில் இருந்தவள் காதில் இப்போது வேறு ஒரு சத்தம் கேட்டது.
"அத்தான் விடுங்க..." வலுக்கட்டாயமாக அவளிடமிருந்து பிரிந்து பிடித்து தள்ளி மோட்டார் அறை நோக்கி ஓடிவிட, அவள் சென்ற திசையை பார்த்து ஒரு பெருமூச்சு விட்டு, தலை கோதி சிரித்து கொண்டவன் முன்புமூச்சு வாங்க நின்றிருந்தனர் மற்ற நான்கு ஜோடிகளும்.
ஆங்காங்கு நின்று ஜோடி ஜோடியாக கடலை போட்டு கொண்டிருந்தவர்கள் காதில் துப்பாக்கி சத்தம் விழவே, அந்த சத்தத்தில் என்னவோ ஏதோ என்று பயந்து போய் அனைவரும் அங்கு ஓடி வந்தது. அவர்கள் காலடி சத்தம் கேட்டு தான் அர்ஜூனை தன்னிடமிருந்து பிரித்து விட்டு மகி ஓடியது.
“என்னாச்சி மாப்ள, துப்பாக்கி சத்தம்லாம் கேட்டுச்சி...” குரு கேட்க,
“டேய் மச்சி என்னாச்சி டா. நாங்க கன் ஷூட் சத்தம் கேட்டு இங்க வந்து பாத்தா, நீ லூசு மாறி தனியா நின்னு சிரிச்சிட்டு இருக்க” ரிஷி பேச்சி வாக்கில் அப்படியே அர்ஜூனை லூசு என்று சொல்லிவிட்டு படபடப்பாக கேட்க, மகியின் நினைப்பில் இருந்தவனுக்கு, ரிஷி பேசியதை கண்டு கொள்ளவில்லை.
“அது மச்சி...” என மகியிடம் செய்த சில்மிஷத்தை தவிர நடந்ததை எல்லாம் சொல்ல, அதைக் கேட்டவர்களும் சற்று பயந்து தான் போயினர். அவன் சுட்டிருந்த பாம்பை பார்க்க, அதன் உடல் மட்டும் இன்னும் துடித்து கொண்டு தான் இருந்தது.
பெண்கள், நாளு ஆறுதலான வார்த்தைகளை அர்ஜூனுக்கு சொல்லி விட்டு மகியிடம் செல்ல “சரி இத இங்கேயே விட்ருங்க வீட்ல சொன்னா எல்லாரும் பயந்து போயிருவாங்க...” என்று கதிர் சொன்ன பின்பே சென்றனர். ஆண்கள், அங்கேயே ஒரு இடத்தில் பள்ளம் தோண்டி, இறந்த பாம்பை புதைத்தனர்.
மகியிடம் சென்றவர்கள், அவள் இருந்த கோலம் கண்டு மேலும் ஒரு குளியலை போட வைத்து உடை மாற்றிக் கொண்டு, அனைவருமாக வீடு வந்து சேரும்போது கூட அர்ஜூன் முகத்தை மகி தெரியாமல் கூட பார்க்கவில்லை.
அதை அவன் கவனிக்காமல் இருப்பானா என்ன? இருந்தும் தனக்காக அவள் பயந்து பதறியது எல்லாம் கண்முன் தோன்ற சிரித்துக்கொண்டவன் சரி பார்த்து கொள்ளலாம் என விட்டுவிட்டான்.
அழகிய இரவின் பிடியில், நன்றாக மகி உறங்கி கொண்டு இருக்க. அப்போது ஒரு உருவம் பூனை நடை இட்டு வந்து மகியின் கை வளைவில் தலை வைத்து கண் மூடி படுத்துக் கொண்டது. அந்த உருவத்தின் மேல் இருந்து வந்த அதிகப்படியான வெட்பம், உறங்கும் அவள் மேலும் அந்த வெப்பம் படிந்த காற்று படிய, ஒரு விதமான அசவுகரியத்தை உணர்ந்து கண் திறந்து மகி பார்த்தாள்.
அவளின் செல்ல தம்பி சூர்யா தான் மூன்று ஆண்டுகள் வெளிநாட்டில் தங்கி இருந்த விளைவால் இங்கத்திய சீதோஷன நிலை சற்று உடலுக்கு ஒத்து கொள்ளாமல் போகவே, இப்போது காய்ச்சல் வந்து விட்ட நிலையில், அதைத்தாங்கி கொள்ள முடியாதவன் தன்னை பெறாத அன்னை மடி தேடி நடுஜாமம் எனும் பாராமல் வந்துவிட்டான்.
அதில் பதறி எழுந்தவள் “சூர்யா என்னாச்சு டா ஏன் இப்படி உடம்பு அனலா கொதிக்கிது" அவன் நெற்றி கழுத்து கன்னம் என கை வைத்து கேட்க,
“அக்கா, ரொம்ப முடியலக்கா...” பேசமுடியாமல் மெலிதான குரலில் சொல்லி, அவள் மடியில் தாவி படுத்துத் தலை பாரம் தாங்காமல் அழுத்தம் கூட்ட, அதிலேயே அவன் வலியை உணர்ந்து கொண்டவள், சிறிது நேரம் அவன் தலை கோதி விட்டு, மெதுவாக மெத்தையில் கிடத்தி வேகமாக சமையல் அறை நோக்கி சென்றாள்.
அப்போது, மகியின் நினைவில் தூக்கம் தொலைத்த அர்ஜூன் எப்படியாவது அவள் தூங்குவதையாவது தூர நின்று பார்த்து விட்டு வரலாம் என்ற எண்ணத்தில், அவன் அறையை விட்டு வெளியே வர, இவள் கலவரமான முகபாவனையில் சமையல் கட்டுக்குள் நுழைவதை பார்த்தவன் யோசனையாக "இவ இந்த நேரத்துல தூங்காம இங்க என்ன பண்றா? ஒரு வேலை தண்ணி குடிக்க வந்திருப்பாளோ இல்லையே முகம் ஒரு மாதிரி கவலைல இருக்க மாறி இல்ல இருக்கு...” இவ்வாறு எல்லாம் நினைத்து கொண்டு மறைந்திருந்து அவள் என்ன செய்கிறாள் என பார்த்தான்.
அடுப்பை பத்தவைத்து ஒரு பாத்திரத்தை அதன் மேல் வைத்து இரண்டு கிளாஸ் விகிதம் தண்ணீர் சேர்த்து, நிலவேம்பு, சீந்தில், நன்னாரி, உலர் திராட்சை, நெல்லி வற்றல், அதிமதுரம் பொடி சேர்த்து, நன்கு சுண்ட விட்டு, சிறிது தேனை சேர்த்து கலக்கி அந்த கஷாயத்தை ஒரு தம்பளரில் வடி கட்டி எடுத்து கொண்டு வேகமாக அவள் அறை நோக்கி செல்ல,
அர்ஜூனும் அவளை பின் தொடர்ந்து சென்று, அவள் அறை ஜன்னல் வழியாக ‘இப்ப இந்த தண்ணிய வச்சி என்ன பண்ண போறா...’ என்பது போல் பார்த்தான்.
அவள் படுக்கையில் சூர்யாவை பார்த்தவன், இவன் இங்க என்ன பண்றான் என்று நினைத்துக் கொண்டு இருக்க, அவன் அருகில் அமர்ந்த மகி “சூர்யா எந்திரிச்சி இந்த கஷாயத்த குடி...” என்றிட,
கண் திறக்க முடியாத நிலைமையிலும் சரியாக அவள் மடியில் தாவி அவளை இறுகப் பிடித்துக் கொண்டு “அக்கா எனக்கு கஷாயம் வேணாக்கா. அது கசக்கும்" முகத்தை அவளிடம் காட்டாமல் புதைத்துக் கொண்டு, சிறுவன் போல அடம்பிடித்தான்.
“இன்னும் இந்த பழக்கத்த நீ மாத்திக்கலையாடா. சூர்யா பாரு உடம்பு எப்படி கொதிக்குதுன்னு. இப்படி இருந்தா உன்னால தூங்க கூட முடியாது டா. என் செல்ல தம்பில, இத மட்டும் குடிச்சிட்டு படுத்துக்க டா...”
“அக்கா ப்ளீஸ் அது கசக்கும் எனக்கு வேணாம். நான் இப்படியே உன் மடில படுத்து இருந்தாலே சரியாகிடும் க்கா...” என்றவனை இது சரிபட்டு வராது என நினைத்த மகி “சூர்யா இப்ப இத நீயா குடிச்சிட்டியின்னா நான் ஒன்னும் பண்ணமாட்டேன். ஆனா நான் போயி அண்ணனையும் கதிர் கார்த்தி மாமாவையும் கூட்டியாந்தேன்னு வையி, அப்புறம் எப்படி இந்த கஷாயத்த நீ குடிப்பேன்னு உனக்கே நல்லா தெரியும்" என்றவளை கண்கள் சுருக்கி முறைத்து பார்த்தான்.
இதுக்கு முன்பும் இதுபோல் அவனுக்கு காய்ச்சல் வந்திருக்க. மகி குடுத்த கஷாயத்தை குடிக்க மறுத்தவனை, கதிர் கால்களை அழுத்தி பிடித்து கொண்டும், குரு கைகளை அசைக்க முடியாதபடி பிடித்து இருக்க, கார்த்தி தலையை பிடித்துக்கொள்ள, மகி அவன் வாயில் அவள் கையில் வைத்திருந்த கஷாயத்தை மெது மெதுவாக புகட்டி இருந்தாள்
அதை நினைத்து பார்த்த சூர்யா
“சரி குடிக்கிறன். ஆனா அந்த பாடி பில்டர்ஸ மட்டும் கூப்பிட்டு வந்திடாதக்கா...” என்று கஷாயத்தை வாங்கி ஒரே மூச்சாக குடித்து விட்டு மீண்டும் சோர்ந்து படுத்துகொள்ள, அருகில் முன்னமே எடுத்து வைத்திருந்த குளிர்ந்த நீரில் துணியை நனைத்து, அவன் நெற்றியில் வைத்தாள்.
அது காயகாய ஈரம் தொய்த்து மீண்டும் நெற்றியில் வைத்து இரவு முழுவதும் தூக்கமின்றி காய்ச்சல் குறைந்ததா என தொட்டு தொட்டு பார்த்து கொண்டே இருந்தாள்.
வெகு நேரமாக அவள் அத்தனை கரிசனத்துடன் சூர்யாவை அன்போடு பார்த்து கொண்டு இருப்பது அர்ஜூனுக்கு பொறாமையாக இருந்தது. தன்னையும் அவள் மடியில் படுக்க வைத்து, இப்படியெல்லாம் பார்த்து கொள்ளமாட்டாளா என்று ஏக்கம் குடி கொள்ள, அவன் அறைக்கு சென்று அவள் நினைவிலேயே உறக்கத்தை தழுவினான்.
தொடரும்.