Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
Administrator
Staff member
Messages
276
Reaction score
297
Points
63
அத்தியாயம் - 17

ரகுவின் சிம்ம குரலை கேட்டதும் "ஹை வந்துட்டானா" உள்மனம் தென்றலாக குளுமை கொண்டாலும், படபடப்பு என்னவோ தானாக ஒட்டிக்கொண்டது.

மௌனமாக தலை குனிந்து நின்ற மனைவியை அழுத்தமாக பார்த்த ரகு,

"என்னவாம் உன் மருமவளுக்கு, இப்ப ந்நா படிச்சிருந்தா எனக்கு கோயில் கட்டி செல வைக்க போறாளாமா.." நக்கல் தொனியில் தாயிடம் கேட்க, மிது பல்லை கடித்தாள்.

"எனக்கு வர்ற போற லைஃப் பாட்டனர் அட்லீஸ்ட் ஒரு டிகிரியாவது கம்ப்லீட் பண்ணி இருக்கணும்னு எதிர்பாத்தேன், கடைசில இப்டி ஒரு காட்டான் என் வாழ்க்கைல வருவான்னு நான் என்ன கனவா கண்டேன்..

இதுல கோவில் கட்டி சிலை வைக்கலைனு வேற குறையாக்கும்.." உள்ளுக்குள் புழுங்கிய மிது, அவசரப்பட்டு வார்த்தையை விடாமல் விறுவிறுவென அறைக்குள் சென்று விட்டாள்.

"வந்ததும் வராததுமா பாவம் அந்த புள்ளைகிட்ட எதுக்கு வம்புக்கு போற ரகு.."

"அதெல்லாம் ஒரு பொழுதுபோக்கு ம்மா, ஒனக்கு சொன்னா புரியாது.." தாயின் கன்னத்தை கிள்ளி வாயில் போட்டவன்,
"நீ எதுக்கு என் வாய பாத்துட்டு நிக்கிற, புள்ளைங்கள எங்க காணல" அக்கா குழந்தைகளை தேடி அலைபாய்ந்தன விழிகள்.

"மாமாஆஆ.. நாங்க இங்க இருக்கோம்.." இரு குட்டிகளும் ஒரே சைசில் உள்ளிருந்து ஓடி வந்து ஆளுக்கு ஒரு கையில் ஏறிக்கொள்ள, முரட்டு அதரங்கள் மென்மையாக மலர்ந்து இரு பிஞ்சி கன்னத்திலும் மாறி மாறி முத்தம் பதித்தன.

"மாமா.. நாங்க வந்ததும் பீச்சிக்கு கூத்து போதன்னு சொன்ன" மழலைகளின் கொஞ்சல் மொழி இரும்பை கூட கரைக்கும் ரகுவை கரைக்காதா!

"வெல்லக்கட்டிங்க.. தாராளமா போலாமே.. மாமா குளிச்சிட்டு சாப்ட்டு வந்து கூட்டிட்டு போவா, இல்ல இப்டியே ஒங்கள தூக்கிட்டு போய்டுவா.." இரண்டு பொடிசையும் சமமாக மேல் கீழ் தூக்கி ஊஞ்சலாக ஆட்டினான்.

"குச்சிட்டு வா மாமா, நானும் அண்ணாவும் புது ட்ரெச் போத்து வதோம்.." முந்திக்கொண்டு சொன்ன ஆதிரையின் வயிற்றில் கிச்சிகிச்சி மூட்டி கீழே விட்டவன், தன் மீசையை இழுத்து ஆராய்ச்சி செய்த ஆதவனை கடிப்பது போல பாய, கெக்க பெக்க சிரிப்போடு அவன் தலை முடியை பிடித்து பேலன்ஸ் செய்து மாமன் கையில் துள்ளி விளையாண்டான் குட்டி பையன்.

"இந்த வீட்டுக்கு வந்து எத்தனை நாளாகுது, இதுவரைக்கும் எனக்கு என்ன வேணும்னு கேட்டு ஒரு கடைத்தெரு பக்கம் கூட கூட்டிட்டு போனது இல்ல.. ஆனா அக்கா பிள்ளைங்களை பாத்ததும் தூக்கி கொஞ்சுறது என்ன.. அதிசயமா சிரிக்கிறது என்ன..

ச்ச.. மூஞ்சயும் முகரையும் பாரு முரட்டு ராஸ்கல், என்ன தான் ஹார்ஷா ஹாண்டில் பண்றான் போல.."

அறைக்குள் இருந்தபடியே ஹாலில் நடப்பதை நோட்டமிட்ட மிது, அவன் வீட்டை விட்டு போகும் முன், சிவக்க சிவக்க தன்னை சேதமாக்கிய ஒவ்வொரு இடத்தையும் கண்ணாடி முன் நின்று பார்த்தவளாக, கழுத்து வளைவில் கருமையாக நிறம் மாறி இருந்த பற்தடத்தை விரலால் தடவி கொண்டவளின் முகத்தில் ஒருவித வெட்க சாயல்.

"காட்டான் என்னவோ பண்றான்" இரண்டு நாட்கள் கழித்து கணவனை கண்ட பூரிப்பில் தேகமெல்லாம் சிலிர்க்கும் உணர்வில், கண்மூடி நின்றிருந்தவளின் நெஞ்சிக்கூடு திக்கென தூக்கிவாரி போட்டது.

"ந்நா இல்லாம ரெண்டு நாளா நிம்மதியா இருந்திருக்க போல.." சூடாக செவியை உரசிய சுவாசக்காற்றும், ஆடவனின் பின்னிருந்து இறுகிய அணைப்பும் பெண் நெஞ்சில் பிரலயம் உண்டாக்கியது.

"சார் தான் யார் நினைப்பும் இல்லாம, எங்கேயோ போய் ஜாலியா இருந்துட்டு வரீங்க.." சொல்லாமல் சென்றதில் வந்த கோவமோ!

"ம்ஹும்.. அப்போ ந்நா இல்லாத இந்த ரெண்டு நாளா, நீ என் நெனப்புலதேன் இருந்திருக்க அப்டிதானே.." மனைவியின் கோவத்தை கண்ணாடி வழியே ரசித்தபடி அவளையே மடக்கிட,

"ந்.நான் எ.எப்போ அப்படி சொன்னேன்.." நொடியில் தடுமாறினாள் கோதை.

"இதெல்லாம் சொல்லிதேன் தெரியனுமா என்ன..? சில விசயங்கள சொல்லாமலே புரிஞ்சிக்கலாம் டி.." பெண் கழுத்தில் மீசை முடியால் குறுகுறுக்க வைத்தான் ரகு.

"ம்க்கும்.. அப்டியே புரிஞ்சிகிட்டாலும்.. ஆமா எங்கே போனீங்க ரெண்டு நாளா.." உதட்டை சுழித்து கழுத்தை அவனுக்கு வாகாக வளைத்து வைத்த மிது, நார்மல் மனைவி மோடுக்கு தன்னை அறியாமல் மாறி இருக்க, அவளின் ஒவ்வொரு அசைவையும் நன்கு உணர்ந்த ரகு தனக்குள் நகைத்துக்கொண்டான்.

"மதுரை வரைக்கும் ஒரு முக்கியமான வேலையா போயிருந்தேன்.."

"ம்ம்.. நம்பிட்டேன்.. பாக்குறது வெட்டி வேலை, இதுல முக்கியமான வேலையா வேற போனாறாம்.." பின்னிருப்பவன் முகம் போன போக்கை கவனிக்காமல் இவள் பாட்டுக்கு புலம்ப, ஆடவனின் இரும்பை ஒத்த கைகள், பெண்ணின் இடை இறுக்கியதில் தெளிவு பெற்ற மிது இமைகள் படபடக்க நின்றான்.

"எனக்கு வேலைக்கு போறதெல்லாம் புடிக்காத ஒன்னு.. ஏன் புருசன் மட்டுந்தே கஸ்டப்பட்டு சம்பாதிச்சி பொண்டாட்டிக்கு சோறு போடணுமா என்ன..? நீ எதுக்கு இம்புட்டு தூரம் பெரிய படிப்பெல்லாம் படிக்கிற.. படிச்சி முடிச்சிட்டு நல்ல வேலைக்கா போயி புருசனுக்கு சோறு போடு..

இதுவரைக்கும் எங்க அப்பா காசுல சோறு, இனிமே பொண்டாட்டி காசுல சோறு.. என்ன சொல்ற.." சட்டென முக இறுக்கம் தளர்ந்து ஒற்றை புருவத்தை ஏற்றி முறுக்கலாக சிரித்தவனை விழிகள் சுருக்கி பார்த்த மிது,

"எல்லாம் சரிதான் ஆனா வீட்ல உக்காந்து சார் என்ன பண்றதா உத்தேசம்.. உத்தியோகம் புருஷ லட்சணம்னு சொல்லுவாங்களே அதெல்லாம் உங்களுக்கு தெரியாதா.." வெடுக்கென கேட்டவளுக்கு "இவனுக்கு சோறு போடவா நான் கஷ்டப்பட்டு படிச்சிட்டு இருக்கேன்.." என நினைக்கும் போதே உள்ளுக்குள் புகைந்தது.

"ஓ.. ஏன் தெரியாது.. புருச லட்சணமா வேலை பாக்க தான் டி இம்புட்டு நேரம் பேசிட்டு இருக்கேன்.. பாதாம் பிஸ்தா முந்திரினு வாங்கி தின்னு, ஒடம்புல நல்லா பலம் ஏத்தினா தானே ராவும் பகலும் உங்கூட சோர்வில்லாம கடுமையா உழைக்க முடியும்.." குதற்காமாக பேசுபவனை மிது புரியாமல் நோக்கவும்,

"அதான் டி அஜால் குஜால் பண்றது.." அவன் கண்ணடிக்க "ச்சீ.. என முகத்தை திருப்பிக்கொண்டவளுக்கு, கணவனின் இத்யாயி பேச்சி மெய் சிலிர்க்க வைத்தது.

"இதுக்கே ச்சீன்னா இன்னும் வேலைய தொடங்கும் போது என்ன டி பண்ணுவ.. இது.. இது.. இது.. ஸ்ஸ்ஸ்.. எல்லாமே பச்சையா கேப்பேன் கடிப்பேன் சமாளிப்பியா கடுகுஊ.." வேண்டிய அவையங்களை உள்ளங்கையால் சிறை பற்றி காட்டிட, மேனி நடுங்க சிவந்து நின்ற பாவை கணவனை தடுக்காமல் இருந்தது தான் அதிசயமே!

"பதில் சொல்லு டி.." அதுவரையில் அவள் உயரத்திற்கு குனிந்து நின்று பெண்ணை நெளிய வைத்தவன், எப்போது தன் புறம் திருப்பி பின்னழகில் கைகொடுத்து தன் உயரத்திற்கு தூக்கிக்கொண்டானோ!

ரகு நெற்றியோடு மிது நெற்றி முட்டி இருமுகமும் சுவாசம் மோதும் நெருக்கத்தில் இருக்க, விழிகள் நான்கும் கோலியாக உருண்டு இருவரின் உணர்வுகளையும் பிரதிபலிக்க வைத்ததோ! சிவந்த அதரம் துடித்து கன்னங்கள் சிவக்க தன் கழுத்தில் கைகோர்த்துகொண்ட மனைவியின் ஸ்பரிசத்தில் மின்சாரம் தாக்கியது ஆணின் முரட்டு தேகத்தில்.

"உன் வாசம் என்னைய பித்தாக்குது டி கடுகுஊ.. இந்த அரையடி கூந்தல நீ விரிச்சு போட்டிருக்கும் போது, உன் கூந்தல்ல மூழ்கி மூச்சி என் திணறனும் டி.." கணவனின் கிறங்கிய பிதற்றலில் நாணினாள் பாவை.

"க்.கூச்சமா இருக்கு இறக்கி விடுங்களேன்.." அவஸ்தையில் அவன் முகம் பார்க்க மறுத்த மனைவியின் மொட்டு மலரில் முரட்டு முகத்தால் புரட்டி முட்ட, தேகம் கிடுகிடுக்க அவன் அகண்ட தோளை இறுக பற்றிக்கொண்டாள்.

"மிதுஊஊ.."

"ம்ம்.."

"தப்பு பண்ணலாமா டி" மனைவி தேன் கிண்ணத்தில் அதரம் ஊர்ந்து மீசையால் காயம் செய்ய, பஞ்சி வயிற்றில் தாளம் தட்டி துடித்த விலாங்கு மீன் அவன் ஆசையை அப்பட்டமாக உணர்த்தியதில், பயந்த விழிகளில் சிறு வெட்கம் தேக்கி படபடப்பாக அவள் பார்த்த விதத்தில் லபக்கென கவ்விக்கொண்டான் பட்டு இதழை.

மிதுவின் மனம் போகும் போக்கை எண்ணி அவளுக்கே வியப்பு தான். தன் விருப்பம் இல்லாமல் தொட்ட ஒரு கொடூரன் மீது எப்படி தனக்கு ஆசை மலரும்? யோசித்து யோசித்து மூளை சூடானது தான் மிச்சம்.

ஏதோ ஒரு விருப்ப விசையில் அவன் பக்கம் மெல்ல மெல்ல சாயும் மனதோடு, இதோ கணவனின் இதழ் முத்தத்திற்கு வாகாக இதழை பிரித்து காட்டி அவன் தரும் எச்சில் தீர்த்தத்தை தொண்டைகுழி ஏறி இறங்க பருகி, முற்றிலுமாக கொண்டவன் வசதிற்கு கண் சொக்க மயங்கி இருப்பதை உணர்ந்தும் விலக முடியாது தவிக்கும் மனதை என்ன செய்வது?

ஆணின் தேக சூடு பெண்ணையும் சுட்டெரிக்க, அதற்கு மேலும் இன்பவதையினை பொறுத்துக்கொள்ள முடியாது திண்டாடி, சட்டென அவன் கையில் இருந்து குதித்திறங்கி குளியலைறைக்குள் ஓடி ஒளிந்துகொண்டாள்.

மனைவியின் திடீர் விலகளில் மோக விழிகள் ஏமாற்றத்தில் சிவந்தாலும், முன்பு போல் தன் தொடுகைக்கு துள்ளித் திமிரி முரண்டு பிடிக்காமல், நாணத்தோடு அவள் ஒத்தொழைத்த விதமே ஆண் மனதில் தீ மூட்டி, ஆண்மையில் வெண்தேன் சொட்டி ஜீவன் துடிக்க வைத்தது.

குளியலறை கதவை அடைத்து அதன் மீது சாய்ந்து நின்றவளின் இதயம் எக்குத்தப்பாக அடித்துக்கொள்ள, கணவன் தீண்டிய இடமெங்கும் சுக வலியில் குறுகுறுக்க செய்ய, அடி வயிற்றை இறுக்கமாக பிடித்துக்கொண்டவளுக்கு முகம் மாறி விட்டது.

"அச்சோ இது வேறையா.. இப்ப எப்டி அவங்கிட்ட அதை வாங்கிட்டு வர்ற சொல்லி கேக்குறது" கீழ் உதட்டை கடித்தபடி யோசனையில் நிற்க,

"எம்புட்டு நேரம் டி உள்ள இருப்ப, மனுசன் அவஸ்த புரியாம.." வெளியிருந்து கேட்ட சத்தத்தில் தயங்கி தயங்கி கதவை திறந்தவளை ஒரு மார்க்கமாக பார்த்தான் ரகு.

"என்ன டி தள்ளு, வழில நின்னுகிட்டா ந்நா எப்டி போறது.." அவன் அவஸ்தை அவனுக்கு அதில் எரிந்து விழ, உதட்டை சுளித்து நகர்ந்து நின்றவளை பார்த்தபடியே உள் புகுந்தான்.

"அப்பா.. எப்டி கத்துறான் காட்டான்.. இவ்வளவு நேரம் என்ன தூக்கி வச்சி தக்காளியா நசுக்கும் போது எங்க போச்சி இந்த முறைப்பும் கத்தலும்.." மிது உதட்டசைவில் கணவனை கடிந்துகொள்ள, முகத்தை துடைத்தபடியே வெளியே வந்த ரகு, முன்பு பளிச்சிட்டு இருந்த மனைவியின் முகம் இப்போது சோர்ந்து இருப்பதை உணர்ந்து உற்று நோக்கினான் அவளை.

"திட்டி முடிச்சாசா.. இல்ல நேரமாகுமா.." ரகுவின் உரத்த குரலில் திடுக்கிட்ட மிது,

"கொஞ்சி பேச கூட வேண்டாம், ஆனா தயவுசெய்து கத்த மட்டும் செய்யாதீங்க.. ஏற்கனவே காது வலி வந்துடுச்சி, இனிமே நெஞ்சி வலியும் வந்து பொட்டுனு போய்டுவேன் போல.." அவனை முறைத்தபடியே கடுகடுத்தவள், அடியெடுத்து வைக்க முடியாது அவஸ்தையாக நெளிவதை கண்டு இமைகள் சுருக்கினான்.

"என்னாச்சி டி.. எதுக்கு இப்டி நெளிஞ்சிட்டு நிக்கிறவ.." அப்போதும் காட்டு குரல் எதிரொலிக்கவும், அவனை முறைத்தவளாக,

"ஒண்னுமில்ல ஆண்டி இல்ல உங்க அக்காவ கூப்பிடுங்க, அவங்ககிட்ட பேசிக்கிறேன்" என்ற மிது அவனை பாராது முகத்தை திருப்பினாள்.

"ஏன் நீ நல்லா தானே இருக்க, அப்ப நீயே போயி கூப்டுக்கோ.. பேசிக்கோ.. என்னைய எதுக்கு கூப்பிட சொல்ற, ந்நா என்ன நீ வச்ச வேலைக்காரனா" குரலை உசத்திய ரகு வேண்டுமென்றே அவளை வம்பு செய்ய, மிதுக்கு கெதுக் கெதுக்கென்று இருந்தது.

"ப்ளீஸ் கொஞ்சம் கூப்ட்டு விடுங்களேன்.." கிட்டத்தட்ட கெஞ்சும் அளவுக்கு வந்துவிட்டதும், அதற்கு மேலும் அவளிடம் வம்பு செய்ய நினைக்காத ரகு,

"என்னாச்சி பீரியட்ஸா" வெளிப்படையாக கேட்ட கணவனை சங்கட்டமாக பார்த்தவளாக, ம்ம்.. என்றாள் தலை குனிந்து.

"அதுக்கு எதுக்கு இம்புட்டு தயக்கம்.. சொன்னா வாங்கியாந்து தர போறேன்" என்ற ரகு, அவசரமாக கடைக்கு ஓடினான். ஓடிய வேகத்தில் வியர்க்க விறுவிறுக்க திரும்ப வந்த கணவனை இமை வெட்டாது பார்த்தபடி, அவன் தந்த நேப்கினை வாங்கிக்கொண்டு உள்ளே சென்றவளுக்கு இதமான மென் புன்னகை தோன்றி மறைந்தது.

குதூகலமாக தயாராகி இருந்த குழந்தைகளையும் ஏமாற்றாமல் பீச்சிக்கு அழைத்து சென்ற ரகு, பிள்ளைகள் கேட்ட அனைத்தையும் வாங்கி தந்து கவனமாக விளையாட வைத்தவனாக, மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்து மனைவியை காண செல்ல, நன்கு உறக்கத்தில் இருந்தாள் போலும்.

அரையடி கூந்தல் தலையணை முழுக்க பரவிக்கிடக்க, இலகுவான மெல்லிய நைட்டி அணிந்து, உறக்கத்திலும் வலி உணர்ந்து குட்டி முகம் சுணங்கி படுத்திருந்த மனைவி அருகில் சத்தமில்லாமல் படுத்துக்கொண்ட ரகு, இதமாக அவள் வயிற்றை தடவி கொடுத்தான்.

சற்று நேரத்தில் எல்லாம் தானாக அவன் மஞ்சம் தேடி தலை வைத்து படுத்து சுகமாக துயில் கொண்ட மிது முகத்தில் மெல்லிய புன்னகை தவழ்ந்தபடியே இருக்க, குனிந்து அவள் நெற்றியில் முத்தம் வைத்த ரகுவின் கரமோ, பெண்ணவளின் பஞ்சி வயிற்றில் தான் நிறுத்தாமல் சேவகம் புரிந்தது.

அடுத்து வந்த மூன்று நாட்களும் தன்னை ஒரு தேவதை பெண்ணாக உணர்ந்தாள் மிது. சத்தியமாக நினைக்கவில்லை ரகுவிடமிருந்து இத்தனை கரிசனையை. முரட்டுத்தனமான அன்பிலும் மென்மையை காட்ட தன் கணவனால் தான் முடியும் என நினைக்கும் அளவிற்கு அவளை வியக்க வைத்தான் ரகு.

முரடன் மீது காதல் பூக்க தொடங்கியதோ முல்லை பூவுக்கு!

அடுத்த நாள் காலை தலை தெறிக்க ஓடி வந்த பெண் ஒருத்தி, ரகுவின் வீட்டிற்குள் புகுந்து அழுது கதறியதை கண்ட அனைவரும் புரியாமல் பார்த்தனர் என்றால், மிதுவின் உள்ளம் மட்டும் அதிர்ச்சியில் அடித்துக்கொண்டது.

தொடரும்.
 

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 17
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top