Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
Administrator
Staff member
Messages
275
Reaction score
297
Points
63
அத்தியாயம் - 18

படபடவென கதவு தட்டும் சத்தம் கேட்டதும்,
"யாரது" என்றபடியே மது கதவை திறந்தது தான் தாமதம், துப்பாக்கியில் இருந்து வெளிவரும் தோட்டா போல மதுவை இடித்து மோதி தள்ளி பொத்தென ஒரு பெண் உள்ளே விழவும் திடுக்கிட்டது நெஞ்சம்.

"யாரு ம்மா நீ, எதுக்கு சம்மந்தமே இல்லாம என் வீட்டுக்கு வந்து அழுதுட்டு இருக்க.. கேட்டுட்டே இருக்கேன்ல பதில் சொல்லு.." யார் என்று தெரியாத இளம்பெண் ஒருத்தி திடீரென தன் வீட்டில் நுழைந்து அழுதுகொண்டே இருக்கவும், பதற்றத்தில் ஒன்றும் புரியாமல் மது பயந்து போனாள்.

மதுவின் உரத்த சத்தம் கேட்டு வீட்டினர் அனைவரும் வெளி வந்து, புதிய பெண்ணை புரியாமல் நோக்கினர் என்றால், அந்த பெண்ணை பார்த்த மாத்திரத்தில்

"அ.அக்காஆஆ.." என்ற மிது அதிர்ச்சியில் திகைத்தவளாக நிற்க,

"மிதுஉஉஉ.." என கதறியபடியே பாய்ந்து வந்து அவளை அணைத்த பெண்ணின் அழுகை மேலும் அதிகமானது.

"அக்காஆ.. ந்..நீ.. நீ.." அவளை பார்த்த விடயத்தை நம்ப முடியாமல், வார்த்தை வராமல் தடுமாறிய மிது கண்கள் தானாக கலங்கியது.

"ம்ம்.. நான் தான் மிது, யாதவி" என்றவளை மிது என்ன மாதிரியான உணர்வில் பார்த்தாளோ!

"இத்தனை வருஷமா எங்க போயிருந்த நீ, திடீர்னு எப்டி இங்க..? நீ திரும்ப வந்திருக்குறது அப்பா அம்மாக்கு தெரியுமா..?" தமக்கையை பார்த்த மகிழ்ச்சியை தாண்டி பல குழப்பங்கள் கேள்விகள் மனதை அரிக்க, கரத்தில் வலுவின்றி அவள் தோள் பற்றிக்கொண்டாள் மிது.

"நான் வீட்ட போகும் போதே உன்னையும் கையோட கூட்டிட்டு போயிருந்தா, உனக்கு இப்டி ஒரு கலங்கம் வந்திருக்குமா.. எல்லாம் என்னால தான், என் பயம் தான் காரணம் ப்ளீஸ் என்ன மன்னிச்சிடு மிது.." சம்மந்தம் இல்லாமல் யாதவி ஏதேதோ சொல்லி அழ, ஒன்றுமே புரியவில்லை மிதுக்கு.

"என்ன க்கா பேசுற நீ.. நீ வீட்ட விட்டு போனதே பெரிய தப்பு.. இதுல என்ன வேற கூட்டிட்டு போயிருக்கணும்னு சொல்ற.. உனக்கு என்னதான் ஆச்சி, முதல்ல அழறத நிறுத்திட்டு பதில் சொல்லு.."

மிது அவளை உளுக்கி எடுக்க, வீர் மது நிலா அனைவரும் "இது என்ன புது கதை" என்பது போல புரியாது பார்த்து நின்றனர் என்றால் ரகுபதி மனதில் பெருங்குழப்பம் உண்டாகியது.

"இவளுக்கு அக்கா இருக்காளா..?" யோசனையான ரகு, இருவரது சம்பாஷனைகளையும் குழப்பதுடனே பார்க்கலானான்.

"மிது ந்..நான்.. எப்டி இந்த விஷயத்தை உங்கிட்ட சொல்றதுனு தெரியல.. ஆனா நான் ஒன்னும் சும்மா வீட்ட விட்டு போகல, அதுக்கு முக்கியமான காரணம் இருக்கு.. இப்ப திரும்பி வந்தது கூட உனக்காக மட்டும் தான், நீ ஒரு இக்கட்டுல மாட்டி கலங்கி நிக்கிறது தெரிஞ்சதும் என்னால அங்க நிம்மதியா இருக்க முடியல டி.."

வேதனையாக சொன்ன பெண்ணோ, அடிக்கடி பின்னால் திரும்பி பார்த்து படபடத்து போவதை அங்குள்ள அனைவருமே கவனிக்க செய்தனர்.

"நான் இப்ப நல்லா இருக்கேன் க்கா, என்ன பத்தி கவலை படாதே.. வந்தது தான் வந்துட்ட இனிமே எங்கள விட்டு போக மாட்ட தானே.. உன்ன அப்பா அம்மா பாத்தா ரொம்ப சந்தோஷபடுவாங்க.."

எங்கே மீண்டும் அவள் சென்று விடுவாளோ என்ற தவிப்பில் கேட்டுக்கொண்டிருக்கும் போதே அனைவரும் திகைக்கும் படியாக, யாதவியின் கொத்து முடி இழுப்பட்டு வலிய கரம் ஒன்று அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்ததில், ஆஆஆ.. என அலறியபடியே தரையில் கிடந்தாள் கண்ணீரோடு.

"அக்காஆஆ.." மிது அவளை நோக்கி ஓட போக,

"அங்கேயே நில்லு மிதுஉஉ.." பழக்கப்பட்ட கம்பீரக் குரல் கடினமாக ஒலித்ததில், அவசரமாக திரும்பி பார்த்தவளாக எதிரில் இருந்தவன் கோபம் கண்டு அதிர்ந்து நின்றாள் மிது.

சுருண்டு கிடந்த யாதவி பக்கம் பதறி ஓடி அவளை தூக்கி நிறுத்திய மது,
"மிது என்னமா நடக்குது இங்க, இவ உன் அக்காவா? இந்த தம்பி யாரு திடீர்னு வீட்டுக்குள்ள வந்து இந்த பொண்ண கை நீட்டி அடிக்கிறார்.." புரியாமல் கேட்ட மது, தன் கணவனையும் மகனையும் ஒருசேர பார்க்க, இருவரும் அமைதியாக இருக்குபடி கண்மூடி திறந்தனர்.

"மாமாஆ.. நீங்களா.." மிது வாய் தந்தியடித்தது, தாடை இறுகி நின்ற சிவகுருவை கண்டதும்.

"அலோ பாஸ், ரொம்ப நேரமாவே இங்க புரியாத பாஷைலை ரீல் ஓடுது.. நீயாவது என்ன நடந்துச்சின்ற விசயத்த தெளிவா சொல்லிட்டு பொறவு உன் ஆக்சன தொடங்கு.." ரகு பின்னால் கைகட்டியபடி தெனாவட்டாக சொல்லவும், குரு பார்வை அழுத்தமாக அவன் மீது பதிந்து மீண்டது.

"ஏய்.. பொறப்படு எங்கூட.." யாதவியை முறைத்த குரு, கடுங்கோபத்தில் பற்களை கடித்தான்.

"ம்ஹும்.." அவசரமாக தலையாட்டி அழுது சிவந்த விழிகளில் அப்பட்டமான பயத்தை தேக்கி, மது பின்னால் ஒளிந்தவளை குரு பார்வை பஸ்பமாக்காத குறை தான்.

"உன்ன ஒன்னும் விருப்பப்பட்டு வரியானு கேக்கல, வாடின்னு சொன்னேன்.. இப்ப வர போறியா இல்ல இழுத்துட்டு போகவா.." காரணமே இல்லாமல் தமக்கை மீது கோபம் கொள்ளும் மாமனை புரியாமல் நோக்கிய மிது,

"மாமா இப்ப எதுக்கு என் அக்கா மேல கோபப்படுறீங்க.. அவளே இத்தனை வருஷத்துக்கு பிறகு இப்பதான் திரும்ப வந்திருக்கா.. வந்ததும் வராததுமா இப்டி கோவப்பட்டா எப்டி..? நிதானமா அவகிட்ட பேசலாமே மாமா.." யாதவிக்காக பரிந்து பேசியவளை புருவம் இடுங்க பார்த்தான் குரு.

ரகுவை அவள் மனமே தேடுகிறது என்றால் பிடித்தம் இல்லாமலா! மனதில் கள்ளன் புகுந்ததும், தானாக விருப்பப்பட்டு வைத்த உச்சி வகுட்டு குங்குமம் மினுங்க, கழுத்தில் உறவாடிய தாலி கயிறு விகிதம் புதிய பெண்ணுக்கே உரிதான பொலிவுடன் அழகு பதுமையாக கண்களில் நிறைத்தாள் மிதுஷா.

"நிதானமா பேசுற அளவுக்கு எனக்கு பொறுமையும் இல்ல, அவ சொல்ல போற சப்பக்கட்டுகள கேக்க எனக்கு விருப்பமும் இல்ல.. ஒழுங்கா அவளை என்னோட வந்திட சொல்லு, இல்ல எனக்கு இருக்க வெறிக்கு இங்கேயே அவளை கொன்னு புதச்சிட்டு போயிட்டே இருப்பேன்.."

சிவகுரு என்றால் பொறுமைக்கு எடுத்துக்காட்டு என்று தான் அனைவரும் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறாள், பார்த்தும் இருக்கிறாள். ஆனால் இப்போது அவன் நிற்கும் தாண்டவ கோலம் புதிதாயிற்றே! விழிகள் மிரள குருவை பார்த்த மிது, மது பின்னிருந்தபடியே அவனை அச்சத்துடன் நோக்கிக்கொண்டிருந்த யாதவியை யை பார்த்தாள்.

"வயதுக்கு வந்த பெண் சொல்லாமல் கொள்ளாமல் வீட்டை விட்டு ஓடியது தவறு தான், அதற்காக தனது தாய் தந்தை கோபம் கொண்டால் ஒரு நியாயம் உண்டு.. சம்மந்தமே இல்லாமல் சிவகுரு எதற்காக இத்தனை கோவம் கொள்ள வேண்டும்" என்ற யோசனையோடே மிது நிற்க, பொறுமை இழந்த குரு மீண்டும் அவள் முடிக்கற்றை பற்றி வெறித்தனமாக தன்புறம் இழுத்திருக்க, அலறி விட்டாள் யாதவி.

"தம்பி என்னபா பண்ற, ஆயிரம் கோவம் இருக்கட்டும் அதுக்காக பொம்பள புள்ளைய இப்டியா அடிச்சி பயமுறுத்துவ.. மனசு மாறி வந்த பிள்ள திரும்பவும் பயந்து ஊரை விட்டு ஓடிட்டா என்ன பண்ணுவ.." யாதவியின் பயம் நிறைந்த முகத்தை கண்டு மனம் கேளாமல் பேசிய மதுவை பெருமூச்சு விட்டு பார்த்த சிவகுரு,

"இப்ப உனக்கு திருப்தியா டி.. பாக்குறவங்க கண்ணுக்கு என்னைய ஒரு கொடுமைக்காரனா ப்ரொஜெக்ட் பண்ணியாச்சு.. இப்போவாது அம்மணி வரீங்களா இல்ல இப்டியே அழுது அழுது மேலும் என்ன வெறுப்பேத்த போறியா.."

அடிக்குரலில் சீறியவனை கண்ணீரோடு ஏறிட்டு பார்த்த யாதவி, என்ன நினைத்தாளோ! சடாரென குருவை இறுகி கட்டிக்கொண்டு தேம்பி அழ தொடங்கிட, அங்கிருந்த அனைவருக்கும் தலை சுற்றாத குறை தான்.

"சத்தியமா வேணும்னு நான் எதுவுமே பண்ணல மாமா, அந்த சூழ்நிலைல எனக்கு யாரையும் நம்ப தோணல.. பயம் என் கண்ணை மறைச்சி வீட்ட விட்டே போக வேண்டிய கட்டாயத்துக்கு போய்ட்டேன்.. இப்ப வந்தது கூட என் தங்கச்சி வாழ்க்கைய நினைச்சி பயந்து தான்" பாவமாக சொல்லி அழ, இறுகிய பாறையாக நின்றான் குரு.

"ஹ்ம்.. ரொம்ப ஈஸியா ஒத்த வார்த்தைல முடிச்சிட்ட பயத்துல போனேன்னு.. இதுக்கு மேல உங்கிட்ட என்னத்த பேச.." அத்தனை விரக்தி அவன் குரலில் வெளிக்கொணர வேதனையில் துடித்து போனாள் யாதவி.

"ம்.மாமா.. ப்ளீஸ் கோவப்படாம என் நிலைமைய கொஞ்சம் புரிஞ்சிக்கோங்களேன்" தன்னை பிரிந்து நின்று தவிப்பாக கேட்டவளை கண்டு வெற்றுப் புன்னகை உதட்டில் தோன்றி மறைந்தது.

பிறந்ததில் இருந்து தன்னை நெருங்கி முதல் முறையாக தொட்டு கட்டியணைத்து, அவள் மாமா விளிப்பதை எண்ணி மகிழ்ச்சி அடைவதா! அல்லது தன் காதலை சொல்லும் முன்னவே கானல் நீரானதை எண்ணி வேதனை கொள்வதா!

"எப்டி எப்டி உன் நிலைமைய நான் புரிஞ்சிக்கணுமா..! நீ யாரு டி எனக்கு, நான் உன்ன புரிஞ்சிக்க..

ஏழு வருசத்துக்கு முன்னாடி வீட்ட விட்டு ஓடி போன என் மாமன் மக திரும்ப வந்ததா கேள்வி பட்டேன், பத்திரமா அவளை கூட்டிட்டு போயி என் மாமங்கிட்ட ஒப்படைக்க இம்புட்டு தூரம் வந்திருக்கேன், அம்புட்டு தான்.. அதை தாண்டி நமக்குள்ள பெருசா என்ன உறவு இருக்கு.. ஹ்ம்.." அவன் புருவம் ஏற்றி இறக்க, குருவை பார்க்க முடியாது பரிதவித்து நின்றாள் யாதவி.

"எம் எல் ஏ சார் ரொம்ப நேரமா புரியாத படமாவே ஓடி மண்டை குழம்புது.. இப்டியே போனா படிக்கிற பூரா பேத்தும் டென்சன் ஆகிபுடுவாய்ங்க வெரசா மெயின் மேட்ருக்கு வா.." ரகு காதை குடைந்தபடியே மிதுவை இழுத்து தன் கை வளைவில் நிறுத்தி தன்னோடு அணைத்தார் போல வைத்துக்கொள்ளவும்,

"ரணகளத்திலும் உனக்கு தான் டா குதூகலம் கேக்குது.." மிது மைண்ட் வாய்ஸில் ஓட்டியபடி கணவனை முறைத்தவளாக அமைதியாக நின்றாள்.

"ரகு சார், எப்பவும் நீங்க தான் எல்லார் மண்டையும் குழப்பி விடுவீங்க, இன்னைக்கு நீங்க குழம்பி நிக்கிறத பாத்தா அப்டியே மனசுக்கு குளுகுளுன்னு இருக்கு.." அந்நிலையிலும் குரு ரகுவை நக்கலடிக்க, அலட்சியமாக உதடு கோணினான் ரகு.

"தம்பி கோவப்படாம கொஞ்சம் நிதானமா யோசிங்க, ஒரு வயசு பொண்ணு பெத்தவங்க இருந்தும் வீட்ட விட்டு போறான்னா அவளுக்கு ஏதோ வெளி சொல்ல முடியாத பிரச்சனை இருந்திருந்தா தானே, அப்படி ஒரு இக்கட்டான முடிவை எடுத்திருப்பா..

கொஞ்சம் அந்த புள்ள என்ன சொல்ல வரான்னு மனசு விட்டு கேளுப்பா.. அதுக்கு பொறவு, அவ தப்ப எடுத்து சொல்லி புரியவைச்சு, அவளுக்கு என்ன பிரச்சனையோ அதை சரி செய்ய முயற்சி பண்ணு.. அதைவிட்டு கோவப்பட்டா எல்லாம் சரியாகிடுமா சொல்லு.."

மது பொறுப்பான நிலையில் இருந்து அவனுக்கு புரியும்படி நிதானமாக எடுத்து சொல்ல, குரு மனம் அப்போதும் கனியவில்லை தான். ஆனாலும் யாதவியை அப்படியே விட்டுவிட முடியாதே! கண் மூடித்திறந்து மனதை ஒருநிலை படுத்திக்கொண்ட குரு அழுத்தமாக யாதவியை பார்த்தான்.

"நீ என்ன டி நினச்ச.. நீ இத்தனை வருஷமா லண்டன்ல தலைமறைவா இருந்தது எனக்கு தெரியாதுன்னா..? ஒரே வருஷத்துல நீ எங்கே போன எதுக்காக போனேன்னு ஓரளவு உண்மைய கண்டு பிடிச்சிட்டேன்..

மீதிய நீதான் உன் வாய திறந்து சொல்லி தெளிவுபடுத்தனும்.. அதுக்காக தான் நீயா எப்ப வருவேன்னு இல்லாத பொறுமைய இழுத்து பிடிச்சி இத்தனை வருஷமா காத்திருந்தேன்.." குரு சொல்ல சொல்ல கேட்டு யாதவி அதிர்ந்த விழிகளை அகல விரிக்க, மிதுவுக்கும் ஒன்றும் புரியாமல் விழித்தாள்.

"அந்த புள்ள ரொம்ப பயப்படுது போல எம் எல் ஏ தம்பி, எதுவா இருந்தாலும் பொறவு பேசிக்கலாம்.. அதுக்குள்ள சூடா எதுவும் காப்பி டீ குடிக்கிறீங்களா.." அதுவரை அமைதியாக நின்று நடப்பவற்றை வேடிக்கை பார்த்த வீர், ஏதோ ஒன்று மனதிற்குள் தவறாக படவே சட்டென இடை புகுந்து குருவை உபசரிக்க மாற்றிய பேச்சில் கொண்ட சிறு பதற்றத்தை குரு உணரவே செய்தான்.

"இன்னும் எத்தனை நாளைக்கு உண்மைய மூடி மறைச்சி உங்கள நீங்களே ஏமாத்திக்க போறீங்க.." குருவின் உரத்த குரலில் அடுத்தடுத்து சொன்ன விஷயத்தை கேட்டு, தகப்பன் மகன் இருவரது பார்வையும் ஒருவித மெல்லிய அதிர்வலையோடு மதுவை பார்த்து மீண்டது.

தொடரும்.
 

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 18
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Member
Messages
31
Reaction score
30
Points
18
Pulla atho periya vesaiyam solla pora pola 😳😳 ragu va paiyam paduthiya perumai yaathavi ya tha seerum😅😅 guru ku jodi kedachirichi polya 🫣🫣adiya patha appadi tha eruku🥴🥴.
 
Administrator
Staff member
Messages
275
Reaction score
297
Points
63
Pulla atho periya vesaiyam solla pora pola 😳😳 ragu va paiyam paduthiya perumai yaathavi ya tha seerum😅😅 guru ku jodi kedachirichi polya 🫣🫣adiya patha appadi tha eruku🥴🥴.
😂😂😂😂😂
 
Top