• வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
Administrator
Staff member
Messages
170
Reaction score
146
Points
43
அத்தியாயம் - 2

சிதிலமடைந்த பேதையாய் ஆனந்தன் கசக்கி போட்ட குப்பை உடலை கண்டு மௌனமாய் கண்ணீர் வடித்தாள் பூங்கோதை. அந்த வீட்டில் வேலை பார்த்த செல்வியின் மகள்.

உதவாக்கரை கணவர் ஊரை சுற்றிலும் கடன் வாங்கி சீட்டு பீடி குடி என குடும்பத்தை அழித்த மாமன்னராகி போக, வயது முப்பதை எட்டிய பெண்ணான கோதைக்கு திருமண செலவுக்கு கூட பணத்தை சேர்க்க முடியாமல் வறுமை வறுமை என்றே ஒத்த மனுஷியாக திண்டாடி போனாள் செல்வி.

கோதைக்கு அடுத்து இன்னும் இரண்டு பிள்ளைகள், 11 படிக்கும் தங்கையும், ஒன்பது வயதே ஆன சிறிய கடைக்குட்டி தம்பியும். எல்லாம் காலம் கடந்தும் மாமன்னர் அயராது பார்த்த வேலை தான்.

பூங்கோதை குடும்ப சூழ்நிலையால் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்துவிட்டு சிறிது நாள் வீட்டில் இருந்தவள் பிறகு தாய் மட்டும் தனியாகபடும் கஷ்டத்தை பார்த்து, தானும் வேலைக்கு செல்லத் துணிந்தவளை தடுத்து கட்டாயமாக வீட்டில் அமர்த்திக் கொண்டாள் செல்வி.

கோதை கபடமற்று இரக்கம் பார்க்கும் குணம் சற்றே ஊதிய உடல்வாகு தான் என்றாலும் அழகில் சிறந்தவள். அப்படி இருக்க நாட்டு நடப்புகளை எல்லாம் கேள்விபட்டு விளங்காத கணவரை வைத்துக்கொண்டு எப்படி அவளை வேலைக்கு அனுப்புவது பெண் பிள்ளையை பெற்ற வயிறு கலங்க, பயந்து பயந்தே உலகம் தெரியாமல், தைரியம் கற்காமல் பூச்சி பூச்சென்று வாய் செத்த பூச்சியாகவே வளர்த்து விட்டாள்.

இப்படி பல இக்கட்டுகளிலும் மனதை தளர விடாத செல்வி, எப்படியாவது மூத்த மகள் கோதைக்கு திருமணத்தை நடத்தி விட வேண்டும் என்று அல்லும் பகலும் மாடாக உழைத்து வீட்டு வேலை செய்தபடியே ஆங்காங்கே சொல்லி வைத்து பல வரன்களை பார்த்தாள்.

வரும் வரன் எல்லாம் பெண்ணை பிடித்து இருக்கிறது என்று சொன்னாலும் ஜாதகப் பிரச்சனை பூதகரமாக முன் நிற்கும். சர்ப தோஷம் உள்ள பெண் என்று பார்க்க வரும் வரன்கள் எல்லாம் தட்டிக் கழிக்க, அந்த கவலையிலேயே கடும்காய்ச்சலில் உடல்நிலை சரி இல்லாமல் போன செல்விக்கு பதிலாக வீட்டு வேலைக்கு செல்ல வேண்டிய சூழலில் சிக்கினாள் கோதை.

கையில் இருந்து பணமெல்லாம் மருத்துவ செலவுக்கே தீர்ந்து போன நிலையில், மேலும் பணப் பற்றாக்குறையால் கண்ணாய்தபாணியிடம் பணத்தை வாங்கிவிட்டு மானத்தை பறிகொடுத்து யாரிடமும் தன்நிலையை சொல்ல முடியாத அவமானத்தில் ஒவ்வொரு நாளும் செத்துத் துடிக்கிறது மனம்.

தேகத்தில் ஆங்காங்கே பற்த்தடம் பதிந்து சிவந்து கன்றி இருப்பதை கண்ணீரோடு பார்த்து அருவருத்துப் போன கோதை, ஆள் வரும் அரவம் கேட்டு உள்ளம் நடுங்கிப் போனாள்.

"அச்சோ இந்த கோலத்துல யாராவது என்னைய பாத்துப்புட்டா அம்புட்டுத்தே. இப்ப ந்நா என்ன பண்றது" கண்ணீரை துடைத்துக்கொண்டு உன்னிப்பாக யார் வருவது என கவனிக்க, ஜல்ஜல் கொலுசொலி வேறு யாராக இருக்கும் கோவிலுக்கு சென்று வந்த வேதநாயகி தான் பூஜை கூடையை சுவாமி அறையில் வைத்து விட்டு அடுப்படி நோக்கி நடந்து வந்தாள்.

"ஓஹ்.. இந்த அக்காவா. ஆனா என்னைய இப்டி பாத்துப்புட்டா என்ன நெனப்பாக. கடவுளே எனக்கு ஏன் இப்டி ஒரு கலங்கத்தை ஏற்படுத்தின. மானம் மரியாதையோட நானும் நாலு பேர் மாதிரி கல்யாணம் குடும்பம் குழந்தைனு சந்தோசமா வாழ ஆசைப்பட்டது தப்பா.

கல்யாண வரத்தைதா எனக்கு சாபமா மாத்திப்புட்ட, மிச்சம் மீதி இருக்க இந்த கற்பை கூட பணத்துக்கு விலை போவ வச்சிட்டியே. எனக்கு ஏன் இன்னும் சாவை குடுக்காம சித்ரவதைய கொடுக்குற"

சத்தம் போட்டு கத்தி அழ முடியாமல் மௌனமாக உள்ளுக்குள் கதறி துடித்தாள் கோதை.

"இன்னும் எம்புட்டு நாளைக்கு அந்த முரட்டுப்பயலுக்கு திருட்டுத்தனமா ந்நா பணிஞ்சி போவணும். அவன் மூஞ்சில விட்டெரிய போதிய பணமும் கைல இல்ல, இனிமே இருந்தாலும் பரிப்போன கற்பு எனக்கு திரும்ப கிடைச்சிடுமா"

கடவுளிடம் மானசீகமாக கோபம் கொண்டு வாக்குவாதம் நடத்தினாள்.

"உன்னையே நம்பி வாழற ஒரு பொண்ணுக்கு தொடர்ந்து கஸ்டத்தை மட்டுமே குடுக்குற கடவுள இனிமே மனசுல நினைச்சி பூஜை புனஸ்காரமெல்லாம் என்னத்துக்கு பண்ணிக்கிட்டு. கல்லாவே நின்னு எனக்கு நடக்குற கொடுமையெல்லாம் மௌனமா வேடிக்கைப் பாரு, ஒருநாளில்ல ஒருநாள் என் கண்ணீருக்கெல்லாம் மொத்தமா சேத்து பதில் சொல்ல வேண்டி இருக்கும்"

ஆற்றாமையில் மனதுக்குள் புழுங்கி தவித்தவள், காலுக்கிடையே அவன் ஏற்படுத்திய ரணங்களை பொறுத்துக்கொண்டு சத்தமில்லாமல் வேகவேகமாக உடலில் சேலையை சுற்றிக் கொண்டு கொல்லைப்பக்கம் இருந்த சிறிய கழிப்பறையில் புகுந்து முகத்தை அடித்துக் கழுவிக்கொண்டவள், அவசரமாக வெளியே அவள் முன்பு நின்ற நாயகியை கண்டு நெஞ்சம் திடுக்கிட்டு விழித்தாள்.

"அ.அ.க்.கா.. ந்.நீ.ய.. ய்.இங்கன என்ன பண்றீய" தவறு செய்த பயத்தின் வெளிப்பாட்டில் பேச முடியாமல் நா தந்தியடித்தன.

"ஏன் இது என் புகுந்த வீடு ந்நா இங்கன வரக்கூடாதா" கோதையை அளந்தபடியே நாயகி கேட்டிட,

"அச்சோ.. அப்டி இல்ல. கோயிலுக்கு போறேன்னு சொன்னீயலே அதுக்குள்ளவா வந்துடீயன்னு கேக்க வந்து மாத்தி கேட்டுப்புட்டேன்" பொய் பேசி பழக்கம் இல்லாதவளுக்கு சமீபகாலமாக வெறும் பொய்யிலே ஊரி வாழ வேண்டிய நிலை வந்து போன கொடுமையை எங்கனம் சொல்லி கதறுவது.

"ம்ம்.. நம்பிட்டேன். இந்தா புடி" என அவளின் கரத்தை இழுத்து எதையோ புதைக்க.

"அக்காஆஆ.. என்ன இது.." அதிர்ச்சியில் கண்முழி பிதுங்கினாள் கையில் உள்ள பொருளை கண்டு.

"உன் அம்மாக்கு கொண்டு போய் மருத்துவம் பாரு. மிச்சம் மீதியை யார்கிட்ட கடன் வாங்கினியோ கொண்டு போய் குடுத்து மொதல்ல அவளையல தலைய முழுகிட்டு நிம்மதியா இங்கன வேலைக்கு வா" என்றாள் அழுத்தம் திருத்தமாக.

அதில் நாயகிக்கு உண்மை தெரிந்து பேசுகிறாளோ என நெஞ்சி குறுகுறுத்து பதட்டம் அடைந்த கோதை, வெளியே அந்த அசிங்கத்தைப் பற்றி கேட்க முடியாமல் அவமானத்துடன் எச்சிலை விழுங்கினாள்.

"ஆனா அக்கா இந்த தோட்ட (கம்மல்) வச்சி எப்டி ந்நா பணத்த புரட்ட முடியும். யாராவது பாத்து பெரியய்யாகிட்டக்க சொல்லிப்புட்டா ஒங்களுக்குதே பிரச்சனையாகு. இல்ல வேண்டாக்கா. இதை புடிங்க என்னால நீய சிக்கல்ல மாட்ட வேணா"

மீண்டும் நாயகியின் கையில் தோட்டை திணிக்கப் பார்க்க, லாவகமாக அவள் கையிலேயே அழுத்தி வைத்தாள்.

"பணமா கைல என்னைக்கு இருந்திருக்கு, அதே என் தோட்ட குடுத்து இருக்கேன். போட்டு இருக்க இம்புட்டு பவுனு நகைல என் வூட்டுக்காரர்க்கு கணக்கு தெரியாதுனு நானே என் மனச தேத்திக்கிறேன். அப்டியே கண்டு புடிச்சி கேட்டாலும் அது என் கவலை ந்நா பாத்துக்குறேன். நீயி எடுத்துட்டு போ"

தீர்க்கமாக சொல்லவும் தட்ட முடியாமல் கையில் தோட்டை வைத்துக்கொண்டு கலக்கமாக தலையாட்டிய கோதையை விரக்தியாக பார்த்தாள் நாயகி.

கிட்டதட்ட அவள் நிலைமையும் கோதையின் நிலையை போல தான். என்ன ஒன்று ஊருக்கு மதிப்பாக கழுத்தில் தாலியும் பொட்டும் பட்டும் நகையும் ஆடம்பரமாக சுமந்துகொண்டு, பிறந்தவீட்டிற்கு கலங்கம் சேரக்கூடாதென அமரதேவனின் ஆணவத்திற்கு அடிபணிந்து வாய் செத்த பூச்சியாக தான் வாழ்ந்துகொண்டிருக்கிறாள் வேதநாயகி.

அவளுள் புதைந்து கிடக்கும் வேதனைகளை ஒற்றை அத்தியாத்தில் முடித்துவிட முடியாதே!

"ஒன்னும் கவலை படாதே கோத. உங்க அம்மாக்கு சீக்கிரமே உடம்பு குணமாகி, அவைய ஆசைப்படி உன் வாழ்க்கை நல்லபடியா அமையும், பயப்படாம போய்ட்டு வா"

மங்கள முகத்துடன் சொன்ன நாயகியின் முகம் பார்த்த கோதை, தயக்கமாகவே அங்கிருந்து சென்றவளின் கண்கள் கலங்கிப் போயின.

"உயிரை விட மேலான கற்பே என்னை விட்டு போன பிறகு. எனக்கு இன்னொரு நல்ல வாழ்க்கையா?.. என் தலைவிதிப்படி என்ன நடக்குமோ அதன்படியே நடந்துட்டு போவட்டும்" வேதனையாக நினைத்தவள், இந்த தோடை எப்படி அடமானம் வைப்பது என்ற யோசனையுடன் அவள் வீட்டை அடைந்தாள் கோதை.

இங்கே கோதை சென்ற பின்பு பெருமூச்சு விட்ட நாயகிக்கு, தன் கொழுந்தனின் லீலைகள் எதுவும் தெரியாமல் இல்லை. ஆனால் அவனுக்கு பலியாக கோதை தான் மாறப்போகிறாள் என்று ஒரு இரண்டு நாட்களுக்கு முன்பு, இதே சமையல்கட்டின் பின்னே நின்று கோதையை ஆனந்தன் மிரட்டிக் கொண்டிருந்த போது தான் தெரியவந்தது.

இந்த இரண்டு நாட்களில் எப்படியாவது கோதையிடம் பணத்தை பிரட்டிக்கொடுத்து அவள் மானம் காத்து விடலாம் என்று தவியாய் தவித்தவளுக்கு, அடுத்தடுத்த பரபரப்பான வேலைகளை தேவன் வழங்கி விட்டான்.

அதற்குள் கோதையின் நிலைமையும் இன்று கவலைகிடமாகி போனதை அவளின் கசங்கிய சேலையும், அந்த மறைவின் பின்னே தரையில் தெறித்துக்கிடந்த ஆண்மையின் திரவத்தையும் கண்டே நொந்து கொண்டாள்.

உள்ளம் நொந்து என்ன பயன், இந்த அபலையால் மட்டும் ஏன் இப்படி செய்தாய் என ஆனந்தபாலனின் சட்டையை பற்றி கேட்டு விட முடியுமா? அப்படி கேட்டால் முதலில் கழுத்தை பிடித்து வீட்டை விட்டே அடுத்துத் துரத்தப்படுவது அவள் தான்.

அதையெல்லாம் நினைத்தபடி மீண்டும் அடுபடிக்கு வந்த நாயகி அந்த வீட்டின் பட்டுடுத்திய வசதியான வேலைக்காரியாகிப் போனாள்.

தங்கராசுவிடம் பேசிவிட்டு உள்ளே வந்த தேவன், தோளில் கசங்காமல் இருந்த வெள்ளை துண்டை எடுத்து உணவு மேஜையில் வீசிவிட்டு, சட்டையும் உள் பனியனையும் கழட்டி அதனோடே போட்டவன், திமிறிப் புடைத்த கட்டுடல் தேகத்தை வளைத்து சோம்பல் முறித்தபடி சாய்நாற்காலியில் சாய்வாக அமர்ந்தான்.

"ஏட்டிஇ.. இன்னுமு காப்பி தண்ணி கொண்டு வராம உள்ள என்னத்த டி புடிங்கிட்டு இருக்கவ"

அடுப்படியின் வாயிலை பார்த்தபடுயே உள்ளிருந்தவளின் செவித்திரையை கிழித்தான் அமரதேவன்.

"இந்தா வந்துட்டேங்க" கைகால்கள் நடுக்கமுற அவசரமாக காப்பி கலந்து எடுத்து வந்து நீட்டியவளை, உச்சி முதல் பாதம் வரை அளந்தன அவனது கூரிய விழிகள்.

"இன்னமட்டும் உள்ள என்னத்த பண்ணிட்டு இருந்த. வூட்டுக்கு வந்து எம்புட்டு நேரோ ஆவுது" அவளை அதட்டியவ தேவன், காலையில் கோவிலுக்கு செல்லும் முன் அணிந்திருந்த அதே புடவை, நகைகள் ஆனாலும் ஏதோ ஒன்று மட்டும் மிஸ்ஸிங். இப்படியாக தான் அவன் கெஸ்ஸிங் ஓடிக்கொண்டிருந்தது காப்பியை பருகியபடியே.

"வந்துங்க.. ராத்திரிக்கு போட்டு போன பாத்திர பண்டமெல்லா அ.அப்டப்படியே கெடந்தது, அதைத்தே சுத்தம் பண்ணி வச்சிட்டு வந்தேன்" திணறலாக சொன்னாள் அவனது பார்வை வீரியம் தாங்காது.

"ஏன் அந்த கோத வீட்டுவேலைக்கு வரலையா?" பதுங்கி பதுங்கி வெளிறிய முகத்துடன் வீட்டை விட்டு வெளியேறிய கோதையை பார்த்தான் தான் ஆனாலும் இந்த கேள்வி அவன் மனைவியை சோதிக்க.

"வந்தாங்க. ஆனா என்னனு தெரியல அவளுக்கு ரொம்ப காய்ச்சல் அடிக்குது போல. சோர்ந்து போய் இருந்தா அதே அவள வீட்டுக்கு போவ சொல்லிட்டேன்" என்று சொன்னது தான் தாமதம் உணவு மேஜையில் அடுக்கி வைத்த தட்டுகள் எல்லாம் பெரும் சத்தத்துடன் சிதறி விழுந்து நாயகியின் இதயத் துடிப்பை அதிகரித்து இருந்தது.

"நாயே.. யாருடி இந்த வீட்ல ஒனக்கு முடிவெடுக்குற உரிமைய தந்தது. சின்ன விசயனாலும் என்னையோ அப்பாவயோ தம்பியோ கேட்டு செய்யணும்னு எத்தனை தரம் சொல்லி இருக்கேன். காதுல வாங்க முடியாத அளவுக்கு திமிரு கூடி போச்சா"

காட்டுக்கத்து கத்திட, தலைகுனிந்தபடி மூலையில் ஒடுங்கினாள் நாயகி. திருமணமாகி 15 வருடங்களாக பார்க்கிறாள் தேவனின் கோபத்தை, ஒருபக்கம் அவன் கோபம் பழகிப் போனாலும் மற்றொரு பக்கம் மிகுந்த அச்சத்தைக் கொடுப்பதென்னவோ உண்மை.

"பொட்டச்சினா வீட்டு ஆம்பளைங்ககிட்ட கலந்து பேசாம சிறு துரும்ப கூட அசைக்க கூடாது. இனிமே இப்டி நடந்துச்சு உன் அப்பன் ஊட்டுக்கு போயி சோத்துக்கு சிங்கி அடிக்க வேண்டியதா போவும்"

கடுமையாக விழிகளை உருட்டி எச்சரித்து விட்டு மீண்டும் இருக்கையில் அமர, கன்னம் தாண்டிய கண்ணீரை அவரசமாக துடைத்துக் கொண்டாள் நாயகி.

"ஏய்.. என்ன அப்டியே மசமசன்னு நின்னுப்புட்ட, எங்க அப்பாவுக்கு இன்னைக்கு பொறந்தநாளு மதியத்துக்கு கோயில்ல அன்னதானத்துக்கு ஏற்பாடு பண்ணி இருக்குறது தெரியும் தானே, இன்னும் கொஞ்ச நேரத்துல சாப்பாடு செய்ய ஆளுங்க வந்துடுவாய்ங்க, போயி கொல்லைய சுத்தந்செஞ்சி அடுப்ப மூட்டி வையி, நானு கொஞ்ச நேரம் போயி ஓய்வு எடுக்குறேன்"

சிடுசிடுத்து விட்டு அவன் அறைக்கு செல்ல, அடுத்த நிமிடமே வேதநாயகி கொல்லைக்கு சென்று மும்புறமாக வேலையில் கவனமானாள்.

தொடரும்.
 
Last edited:
Top