- Messages
- 270
- Reaction score
- 234
- Points
- 43
இதழ் - 22
புதிதாக ஒரு பெண் அவள் பெற்றோருடன் பெரிய ட்ராலியுடன் உள் நுழைய. அவர்களை கண்ட குடும்பத்தினர் மரியாதை நிமித்தமாக வரவேற்றனர்.
அவர்களும் தலை அசைத்து கொண்டே வந்து, ஹாலில் போடப்பட்டுள்ள பெரிய சைஸ் சோபாவில் ஒய்யாரமாக அமர்ந்து கொண்டு, வீட்டை சுற்றி முற்றி பார்த்து கண்களை சுழல விட,
“கஜா இந்தா டீ எடுத்துக்கோ" வானதி அந்த பெண்ணின் அம்மாவிடம் டீயை நீட்ட, பேருக்கு சிரித்து விட்டு கஜலஷ்மி எனும் கஜா டீயை எடுத்துக் கொள்ள, அடுத்து கஜாவின் கணவர் சுந்தரத்திடம் “அண்ணே டீ எடுத்துக்கோங்க" என்றதும் அவரும் புன்சிரிப்புடன்,
“என்னமா வீட்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா..?”என நலம் விசாரித்தபடி எடுத்துக் கொள்ள, வானதியும் சிரித்த முகமாக “எல்லாரும் ரொம்ப நல்லா இருக்கோம் அண்ணே...” என்றபடி அந்த பெண்ணிடம் நீட்டினாள்.
“ஹாய்! பெரியம்மா. எப்படி இருக்கீங்க" என்றவளும் டீயை எடுத்துக்கொண்டாள்.
“எனக்கென்ன கண்ணு நான் நல்லாதே இருக்கேன். நீயி எப்படி இருக்க பாத்து ரொம்ப வருசம் ஆச்சி" வானதி கேட்க,
“ஐ அம் பைன் பெரியம்மா. ஆமா எங்க யாரையும் காணோம்” வீட்டை சுற்றி கண்களை சுழல விட்டாள்.
“எல்லாரும் இங்காதே இருக்கோம், நீயி ஆர தேடற பைரவி..” என குரு கேட்க, அவனை பார்த்த பைரவி “ஹாய் அண்ணா எப்படி இருக்கீங்க?” என்றதும்
“நல்லா இருக்கேன்மா...” என்றான்.
“பெரியப்பா நீங்க எப்படி இருக்கீங்க" ரவியை பார்த்து கேட்க,
“ம் ரொம்ப நல்லா இருக்கேன் பைரவி. உன் வேலை எல்லாம் எப்படி போகுது"
“சூப்பர் பெரியப்பா. நல்லா போகுது...” என பேசிக்கொண்டிருக்க, மகி வந்திருக்கும் யாரையும் கண்டு கொள்ளாமல் அவள் அறையில் தஞ்சம் புகுந்து இருந்தாள், அர்ஜூனின் நினைவில் வாடியவளாக.
பூஜா ரதி ராதா பேருக்கு நலம் விசாரித்து விட்டு கிளம்பிட, கார்த்தி குரு மட்டும் அவர்களுடன் அமர்ந்து இருக்க, கதிர் ஒரு முக்கியமான கேஸ் விஷயமாக எங்கோ சென்றிருந்தான்.
“அப்புறம் கற்பகம் கல்யாண வேலை எல்லாம் எப்படி போது" கஜா தான் முதலில் பேச்சை இழுத்தது.
“அதெல்லாம் நல்லாதே போகுது அண்ணி. எல்லாம் நம்ம ஆளுவ இருக்கும் போது நமக்கென்ன கவலை சொல்லுங்க" கற்பகம் பெருமையாக சொல்ல,
“ஹ்ம்! சரிதே. ஒரு போலீஸ்க்கார பயலுக்கு போய் ஒரு பயந்தங்கோலி பொண்ண கட்ட போறீய பாரு, அத நெனச்சிதே எனக்கு கவலையா இருக்கு. இப்ப கூட ஒன்னும் கெட்டு போகல. என் மக படிச்சி டௌன்ல பெரிய உத்தியோகத்துல இருக்கா. நீ ஊன்னு ஒரு வார்த்தை சொன்னா கூட அந்த பயந்தங்கோலிய விரட்டி விட்டு நம்ம பைரவிய கதிருக்கு கட்டி வச்சிப்புடலாம்" கஜா வந்ததும் தன் கோட்டான் வேலையை காட்டினாள்.
அவள் சொன்னதில் அனைவருக்கும் கோவமாக வந்தாலும் உறவை மதித்து பொறுமையாக “அண்ணி இங்க பாருங்க. எனக்கு பைரவிய என் மயனுக்கு கட்டி வைக்கறதுல எந்த பிரச்சனையும் இல்ல. ஆனா என் விருப்பம் மத்தவங்க விருப்பத்தை எல்லாம் தாண்டி, என் மயன் விருப்பம்தே எனக்கு முக்கியம். அவன் என் மருமக காயு புள்ளயதே விரும்புறான்" மருமக என்றதை அழுத்தி சொல்லி “அவளும் என் மயனதே உயிரா விரும்பறா. அப்படி இருக்கச்ச நம்ம கைல என்ன இருக்கு சொல்லுங்க" வாழைப்பழத்தில் ஊசியை நைசாக இறக்குவது போல, கேட்டு விட்டு அவர் வேலையை தொடர்ந்தார்.
அதில் கஜாக்கு மட்டுமின்றி பைரவிக்கும் முகம் கறுத்து போனது. அப்போது பக்கத்து வீட்டு பங்கஜம் பாட்டியும் கையில் பையுடன், “அப்பப்பா என்னா வெயிலு. இப்படி வெய்ய காஞ்சா எப்படி இந்த வயசான காலத்துல நாள ஓட்றது...?” என புலம்பி கொண்டே உள்ளே வந்தார்.
அவரயும் வரவேற்று அமர வைத்து டீ கொடுக்க “கொண்டா கொண்டா...” என வாங்கி மாடு கழனி தண்ணீரை குடிப்பதை போல சத்தமிட்டு உறிஞ்சி குடிக்க,
“என்ன பாட்டி நீ இப்ப தான் வர" பைரவி பங்கஜம் பாட்டியிடம் உரிமையாக கேட்டாள்.
“அதை ஏன் டி கேக்குறவ. பக்கத்து வீட்டுலருந்து துணி மணி எல்லாத்தையும் எடுத்துட்டு வர எம்புட்டு நேரமாகும் தெரியுமா...” என்று அலுத்து கொண்டார்.
“பாட்டிக்கு குசும்ப பாத்தியா மாப்ள...” குரு கார்த்தி காதை கடிக்க,
“ஒரு நாள் இருக்கு மாமா இந்த கிழவிக்கு. எம்ட்டி ஊசிய போட்டு, போட்டு தள்ள போறேன் பாரேன். இது தெரு வாசல்ல உக்காந்துகிட்டு என்னென்ன வேலை எல்லாம் பாக்குது தெரியுமா...” பாட்டி செய்யும் அலம்பல் தாங்காது கார்த்தி மூக்கில் புகை விட்டான்.
“டேய், அப்படி எதுவும் செஞ்சி புட்டு ஜெயிலுக்கு எதனா போயிடாதடே அப்புறம் என் தங்கச்சி கோவப்பட்டு வேற எங்கயாவது சூடு வச்சிக்க போறா" குரு நாக்கலடிக்க,
“ஆமா உன் தொங்கச்சி அப்படிதே கண்டிப்பா கிறுக்குத் தனமா செய்வா. பேசாம ஒன்னு பண்ணேன் மாமா. நீயே இந்த கெழவிய போட்டு தள்ளிடு...” என்று கார்த்தி கொலை செய்வதை ஏதோ கடைக்கு போய் மிட்டாய் வாங்கி வா என்பதை போல் சாதாரணமாக சொன்னதை கேட்டு அதிர்ந்த குரு,
“ஏன்டா நல்லவனே நான் என் பொண்டாட்டியோட நிம்மதியா இருக்குறது ஒனக்கு பொறுக்கலையாடே. அன்னைக்கு உன்னை திட்டினேன்னு என்னை இந்த கெழவிக்கிட்ட கோத்து விட்டு பழி வாங்க பாக்குறியாலே” குரு சந்தேகமாக கேட்டான்.
“ஐயோ மாமா என்ன நீயி என்னைய போயி இப்படிலா சந்தேகப்படர. நீயி எனக்கு யாரு மாமா..?”
“யாரு...?” குரு புருவம் உயர்த்த,
“மாமா...” என மொட்டையாக கார்த்தி சொல்ல, அதில் பதறி “ஏலேய், என்னடே இப்படி மொட்டையா மாமான்னு சொல்ற. அதுவும் ஒருமார்க்கமா ராகம் இழுத்து"
“ஐயோ மாமா நான் அந்த மாமாவ சொல்லல. நீயி என் மாமா மயன் அப்ப நீயி எனக்கு மாமா தானே அதத்தே சொன்னன்...” என்ற கார்த்தி மௌனமாக சிரித்தான்.
“ம்ம் வர வர குசும்பு ரொம்ப அதிகமாகிடுச்சு மாப்ள. அத யாருகிட்ட சொல்லி அடக்கணும்னு எனக்கு நல்லா தெரியுமுடி” குரு காலரை இழுத்து விட்டபடி சொல்ல,
வாயில் கை வைத்துக் கொண்டு “இனிமே நான் வாய தொறந்தா, வெளிய கிடக்குற செருப்பக் கொண்டு என்னைய அடி" என்றவன் அதோடு வாயவே திறக்கவில்லையே!
“ஏம்மா, நம்ம வீட்லயே இருக்கலாம்ல இங்கனவே நிறைய சொந்தக்காரவ வந்துருக்காவ, இதுல பக்கத்துலே நம்ம வீட்டை வச்சிக்கிட்டு இப்படி பண்ணா நல்லவா இருக்கும்" சுந்தரம் பங்கஜத்திடம் கேட்க,
“டேய் சும்மா இரு டா உனக்கு எதுவும் தெரியாது. கல்யாண வேலை எல்லாம் எம்புட்டு கெடக்கு. இது யாரு வீட்டு விஷேசம் எங்க அண்ணன் வீட்டு விஷேசம். நாம தானடா உங்க தாய் மாமா வீட்டு விஷேஷத்த கூடவே இருந்து சிறப்பா செஞ்சி முடிக்கணும். இதுல நாம பக்கத்து வீட்ல இருந்தா, எப்படி எல்லாரும் கலந்து கட்டி வேலையப் பாக்க முடியும்" ஏதோ பக்கத்து ஊரில் வீடு இருப்பதை போல பாட்டி சிலாகித்து சொல்லி,
“என்ன அண்ணி நான் சொல்றது சரி தானே" பங்கஜம் பாட்டி, வள்ளி பாட்டியிடம் கேட்டதுக்கு,
“ஆமா இது வந்து இங்க கலந்து கட்டி வேலை பாக்கலன்னு இங்க யாரு அழுதுட்டு கெடக்குறது" கார்த்தி முணுமுணுக்க,
“மாப்ள, வெளிய மொத்தம் எத்தன ஜோடி செருப்பு கெடக்குன்னு எனக்கு கணக்கு சரியா தெர்ல... கொஞ்சம் வெளிய வாயேன்...” குரு நக்கலாக கூப்பிடவும்,
“அடப் பாவி மாமா ஒரு பேச்சிக்கு செருப்பக் கொண்டு அடின்னா, இவன் என்ன நெசமாலுமே அடிக்கக் கூப்பிடறான்...” நினைத்த கார்த்தி,
“மாமா எனக்கு ஒரு முக்கியமான போன் வருது நான் பேசிட்டு வர்றேன்" குரு பதிலுக்கு கூட எதிர்பாராமல் வராத போனை காதில் வைத்து இடத்தை விட்டே காலி செய்து இருந்தான்.
“ஆமா பங்கஜம் இதுவும் உன் வீடு மாதிரி தான. என்ன என் வீட்டுக்காரருக்குதே அவரு பேரன் பேத்தி கல்யாணத்தை எல்லாம் பாக்க குடுத்து வைக்காம போயிட்டாரு.
நீயி அவரு கூட பொறந்தவ. அப்ப அவரு சார்பா நீயி தானே முன்ன நின்னு எல்லாம் செய்யணும்" வள்ளி பாட்டி சொல்ல,
கேட்டுக்கிட்டியா என்பது போல் பங்கஜம் சுந்தரத்தை பார்க்க, அவரோ குடும்பத்தோட சேந்து எந்த கலவரமும் பண்ணாத வரைக்கும் சந்தோசம் என நினைத்துக் கொண்டார். மூன்று பெண் பேய்களிடம் சிக்கித் தவிக்கும் அப்பாவி மனிதர்.
மகி வெளியே எங்கும் வராமல், அவள் அறைலேயே முடங்கிக் கிடக்க, அப்போது பூஜா மகியை தேடி வந்தவள் “என்ன புள்ள இப்பலாம் வெளியவே வரமாட்டிங்கிற. முன்ன மாறி யாரோடவும் பேச மாட்டிங்கிற என்னாச்சு உனக்கு..?” என்றாள்.
“ம்ச் ஒன்னு இல்ல பூஜா. ஏதோ மனசுக்கு கஷ்டமா இருக்கு" மகி கவலையாக சொல்ல,
“என்ன புள்ள சொல்ற, எதுவா இருந்தாலும் மொத நீயி தெளிவா சொல்லு" என்றிட, அப்போது தான், தான் பூஜாவிடம் உளறியது தெரிய,
"அது ஒன்னும் இல்ல புள்ள இன்னைக்கு வெள்ளிக் கிழமைல. கோவிலுக்கு போகாம மனசுக்கு ஒரு மாறி இருக்கு டி. அததே சொன்னன்" மகி எப்படியோ சமாளித்தாள்.
“அட அவளோ தானா, நான் கூட என்னவோ ஏதோன்னு செத்த நேரத்துல பயந்தே போயிட்ட புள்ள. சரி கெளம்பு நான் கூட இன்னைக்கு கோவிலுக்கு போகதே உன்னைய தேடி வந்தேன்.. வா நாம ரெண்டு பேருமே போயிட்டு வருவோம்" என்றிட, மகிக்கும் அதுவே சரியாகப் பட்டது.
வீட்டில் அர்ஜூனை நினைத்து தனியாக வருந்தி கொண்டு இருப்பதை விட, கோவிலுக்காவது போய்ட்டு வரலாம் நினைத்து “சரி புள்ள நீயி பூஜைக்கு தேவையான எல்லாத்தையும் எடுத்து வை. நான் ஒரு பத்து நிமிசத்துல கெளம்பி வந்துடறன்" என்ற மகி குளிக்கச் செல்ல, பூஜா சென்று அதற்குள் எல்லாம் எடுத்து வைத்து இருந்தாள்.
பூஜா மகி இருவரும் மஞ்சள் வண்ண பட்டுடுத்தி அழகு பதுமைகளாக கீழிறங்கி வர, அதை கண்ட பைரவி முகத்தை வெடுகென்று திருப்பிக்கொள்ள, கஜா வயித்தெரிச்சளோடு பார்த்தார்.
அவர்களை துளியும் கண்டு கொள்ளாத மகி சுந்தரத்தை பார்த்து “சித்தப்பா எப்படி இருக்கீய" என்று புன்னகை மாறாமல் கேட்க,
“எனக்கென்ன மா நல்லா இருக்கேன். ஆமா என்ன கோவிலுக்கு கெளம்பிட்டியலா?”
“ஆமா சித்தப்பா இன்னைக்கு கோவில்ல விஷேசம் அதான் கிளம்பிட்டேன்” என்றிட,
“என்னம்மா மகி உங்க சித்தப்பா மட்டுந்தே உன் கண்ணுக்கு தெரிவாரா...?” ராகம் இழுத்தாள் கஜா.
“அப்படிலாம் ஒன்னு இல்ல சித்தி. நீங்க எப்படி இருக்கீய?” மகி பொறுமையாக கேட்க, புடவை முந்தானையை பிடித்து ஆட்டிக் கொண்டே “ம்ம் ஏதோ நல்லாத்தே இருக்கோம்...” என்றாள் அதையும் ராகம் பாடிக் கொண்டே.
மகி, பைரவி முகத்தை திரும்பியும் பாராமல் “சரி சித்தி நான் கோவிலுக்கு கிளம்பரேன் நேரமாச்சு" என்றபடி இருவரும் கோவில் நோக்கி புறப்பட்டனர்.
முருக பெருமாளின் முன் நின்று மனம் உருகி கண்ணீரோடு பூஜா எதை நினைத்தோ வேண்டிக் கொண்டு இருக்க. மகி அர்ஜூனை நினைத்து மனக் குமுறலுடன் வேண்டினாள்.
“பூஜாமா நீங்கோ வேண்டுதல் செய்யணும்னு சொன்னேளே எல்லாம் தயாரா இருக்கு" என்ற அர்ச்சகரிடம்,
“சரி சாமி...” என்று பூஜா சொல்ல,
“என்ன வேண்டுதல் பூஜா செய்ய போற? அதுவும் திடீர்னு யாருகிட்டயும் எதுவும் சொல்லாம" என்று மகி குழப்பமாக கேட்டாள்.
“அது அங்கப்ரதக்க்ஷணம் செய்ய தான் முன்னாடியே பூஜாம்மா சொல்லிட்டு போனாங்க" என்ற அர்ச்சகர் சொல்லிச் சென்றதும்,
பூஜாவை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்த மகி, அவள் எதற்காக இந்த வேண்டுதலை செய்ய போகிறாள் என ஓரளவுக்கு மகிக்கு புரிய, அதற்கு தடங்கல் ஏதும் சொல்லாமல், பூஜாக்கு உறுதுணையாக இருந்தாள்.
வேறு ஒரு காட்டன் மஞ்சள் வண்ணப் புடவையை அணிந்து வந்தவள், தலையில் தண்ணீர் ஊற்றி வேண்டுதல் செய்ய தயாராக, மகி குடத்தில் தண்ணீர் பிடித்து வந்து ஊற்ற, கோவிலில் இருந்த பெண்மணி பூஜா உருள உருள அவளுக்கு உதவி செய்து கொண்டு இருந்தார்.
இப்படியே பூஜாவின் வேண்டுதல் முடிவுக்கு வரப்போக, கடைசி குடம் தண்ணீர் பிடிக்க வந்த மகியின் வாயை பொத்தி மயக்கமடைய செய்து, யாருக்கும் தெரியாமல் கடத்தி கொண்டு சென்றனர், முகத்தை மறைத்த இரு தடியர்கள்.
பூஜா மகி வருவதற்குள் முழுதாக வேண்டுதல் முடித்து, கட்டி வந்த புடவையை மாத்தி வந்து மகியை தேட, எங்கும் காணாமல் போகவே, தண்ணீர் பிடிக்கும் இடம் வந்து பார்க்க அங்கு மகியின் கண்ணாடி வளையல்கள் உடைந்து சிதறி கிடப்பதை பார்த்ததும் பயந்து அழுது கொண்டே வீட்டிற்கு வந்து நடந்ததை சொன்னாள்
மகியை காணவில்லை என்றதும் குடும்பத்தினர் அனைவரும் அழுது ஆர்ப்பாட்டம் செய்ய, ஆண்கள் தவித்து போய் நிற்க, அதில் கஜா பைரவி பங்கஜம் மனதுக்குள் குதூகலித்துக் கொண்டனர்.
கதிருக்கும் விடயம் தெரிய வர அவனும் அவளை கண்டு பிடிக்கும் முயற்சியில் இறங்கி இருக்க,
இவர்கள் போடும் சத்தத்தில், மகியை காணவில்லை என்ற செய்தியை அறையில் உள்ள அர்ஜூனும் கேட்டு கொண்டு இருந்தவன், கர்வ சிரிப்பு ஒன்று உதிர்த்து, எங்கோ வீட்டை விட்டு வெளியேறி இருந்தான்.
தொடரும்.